Thursday, May 24, 2012

நடைவண்டிகள் - 17

Posted by பால கணேஷ் Thursday, May 24, 2012

பி.கே.பி.யும் நானும் - 9

ன் பெற்றோருக்கு என்னைவிட 10 வயது மூத்தவரான என் அண்ணனும் நானும் என இரண்டே பிள்ளைகள். எனக்கு ஏழு வயதாக இருக்கும் போது அப்பாவை இழந்து விட்டோம். அண்ணன் நல்ல வேலை கிடைத்து செட்டிலாகி, அவருக்குத் திருமணம் ஆகி. இரண்டு குழந்தைகள் பிறந்து... அனைவரும் ஒன்றாகவே இருந்தோம். பின்னர் எனது பணி நிமித்தம் பல ஊர்களில் பணி செய்ய வேண்டியிருந்ததால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியதாக இருந்தது. என் திருமணம் முடிந்து அம்மாவை என்னுடன் வைத்திருக்க விருப்பம் இருந்தாலும் இயலாத சூழல் இருந்தது.

எனக்கு பிரச்னைகள் ஏற்பட்டு. நான் அதிலிருந்து ஒரு வழியாக விடுபட்டு வந்து பி.கே.பி ஸாரிடம் உதவியாளராக இருந்த காலகட்டத்தில் அம்மா என்னுடன் வந்து இருக்க விரும்பியதால் ஊருக்குச சென்று அழைதது வந்தேன். தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, திரைப்பட ஊடகமாக இருந்தாலும் சரி.. அலுவலகப் பணி போல நேரம் பார்த்து வேலை செய்ய முடியாது. காலையில் போனால் பணி முடிந்து திரும்ப பல சமயங்களில் இரவாகி விடும். நான் இப்படி நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்ப்பதும் தன்னோடு நேரம் செலவிடாததும் அம்மாவுக்கு ஒரு குறையாக இருப்பதை அறிந்தேன். ஆகவே அவரிடமிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வந்தேன். அவரிடம் இதுபற்றிச் சொன்னபோது அவர் புரிந்து கொண்டு என்னைப் பணியிலிருந்து விடுவித்தார். கிழக்குப் பதிப்பகத்தில் பணிக்குச் சேர்ந்தேன் நான்.

அங்கே வேலை பார்த்து வந்த காலத்திலும் ஊஞ்சல் இதழின் உதவி ஆசிரியர் மற்றும் வடிவமைப்புப் பணியை மட்டும் விடாமல் செய்து வந்தேன். அதன் பொருட்டு மாதந்தோறும் சில நாட்கள் ச்ந்திப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கும். ஊஞ்சல் இதழ் குமுதம் சைஸ் ஆக மாறி வடிவமைப்பும். அச்சுத் தரமும் நன்கு வந்து கொண்டிருந்த வேளையில் சில நிர்வாகக் காரணங்களால் தொடர்ந்து வெளியிட முடியாத நிலையில் சென்ற ஆண்டு பப்ளிஷர் அதை நிறுத்தி விட்டார். பணிக் காரணங்களுக்காக இல்லாவிடடாலும் இன்றளவும் இயன்ற போதெல்லாம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நட்பிற்கு ஏது முடிவு?

நான் மட்டுமின்றி திரு.பி,கே,பி, அவர்களுடன் பழகிய அனைவருமே ஆவலுடன் எதிர்பார்ப்பது அவரிடமிருந்து வரும் புத்தாண்டு வாழ்த்தைத்தான். அவ்வளவு அழகாக, மிக ரசனையுடன் வடிவமைத்து அனுப்புவார் அவர். 2011ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் புகைப்படத்துடனும், நாட்காட்டியுடனும் அவர் வடிவமைத்து அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட ஒன்று. அதைப் பற்றி சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு.ரவிபிரகாஷ் அவர்கள் தனியாகப் பதிவே எழுதியிருக்கிறார். இங்கே க்ளிக்கி படிக்கலாம்,

அவருடைய இரண்டு புதல்விகளின் திருமண அழைப்பிதழும் புதுமையாகவே செய்திருந்தார், முதல் மகள் ஸ்வர்ணரம்யாவின் திருமண அழைப்பிதழ் ஒரு டிவிடி தான். சார்லி சாப்ளின். லாரல்ஹார்டி போன்ற நகைச்சுவைப்படங்கள் அடங்கிய சிடியும் அதன் கவரில் அழைப்பிதழுமாக அவர் வடிவமைத்திருந்தது இன்றும் என்னிடம் பாதுகாப்பாக.



இரண்டாவது மகள் ஸ்வர்ண ப்ரியாவின் திருமண அழைப்பிழை சினிமாவின் க்ளாப் போர்டு போல க்ளாம்ப் எல்லாம் அடித்து மிகுந்த ரசனை மற்றும் உழைப்புடன் தயாரித்திருந்தார், இதன் கவரிலும் பெறுபவர்களின் புகைப்படங்கள் அச்சிட்டு அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். இப்படி எதிலும் ஒரு அழகுணர்ச்சியும், புதுப்புது ஐடியாக்களை செயல்படுத்துவதில் ஆர்வமும் மிகுந்த அவருடன் பழகி வருவதை மிகப் பெருமையாக உணர்கிறேன் நான்.

-பி.கே.பி.யும் நானும் நிறைவு பெற,
இ.செள.ராஜனும் நானும் தொடங்குகிறது...

59 comments:

  1. Replies
    1. Yes sir, அவரிடம் கொப்பளிக்கும் யோசனைகளையும், ரசனைகளையும் கண்டு நான் வியந்து கொண்டுதான் இருக்கிறேன். மிக்க நன்றி!

      Delete
  2. எனக்கு உங்கள் நடைவண்டிகள் மிகவும் மிகவும் பிடித்து இருக்கிறது அது முடிவுற்றது என்றதும் சிறிது மன வருத்தம் ஆனால் அடுத்த தொடரும் இது போல மிக விருவிருப்பாக இருக்கும் என நினைக்கிறேன் தொடருங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு எபிஸோட் தானே முடிந்திருக்கிறது. அடுத்த எபிஸோடையும் சுவாரஸ்யமாகத் தர முயல்கிறேன் நண்பா. தொடர்ந்து வாருங்கள். உங்களு்க்கு என் இதய நன்றி!

      Delete
    2. பின்னூட்டுபவர்களுக்கு முக்கியம் கொடுத்து உடனுக்குடன் பதிலிட்டு அசத்தும் உங்கள் குணத்திற்கு ராயல் சல்யூட் அண்ணா.

      Delete
    3. கண்டிப்பாக தொடர்ந்து வருவேன்

      Delete
  3. இதுபோன்ற நட்புக்கு முடிவு இல்லைதான்.கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் மகிழ்வளித்த நற்கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிதல் என்பார்கள்
    யாரோடும் தங்கள் நட்பு அப்படிப் பட்டதே ஆகும்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் ஐயா. வளர்பிறை போல்தான் என் நட்புகள் அனைத்தும் உள்ளன. தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  5. மிக சுவாரஸ்யமாக நடைவணடி நடை போடுகின்றது.பி கே பி சார் மகளின் திருமண அழைப்பிதழ்,அவரது புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்தையும் பெரிது பண்ணிப்பார்த்து வியந்தேன்.வித்தியாசமாக யோசித்து செயல்படுத்தி இருகின்றார்.

    அடுத்து இந்திரா செளந்தராஜனுடனான நினைவுகளா?வெயிட்டிங் வெயிட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா. ததும்பிக் கொண்டிருக்கும் அவரது யோசனைகளை செயல்படுத்தினால் மிக ரசிக்கத் தககவையாகவே அமையும். ரசித்துப் படித்து, அடுத்த பகுதிக்குக காத்திருக்கும் தங்கைக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  6. நட்புக்கு முடிவே இராது அங்கிள்
    மற்றதையும் இது போல் எதிர் பார்க்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ரைட் எஸ்தர். உன்னுடைய எதிர்பார்ப்புக்குக் குறைவில்லாத அளவு தர முயற்சிககிறேன். மிக்க நன்றிம்மா.

      Delete
  7. பெற்ற தாய் தந்தையரை
    உடன் வைத்து பேணிக்காக்கும் பாக்கியம்
    எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை தான்...
    சிறிது காலமெனும் அவர்களின் அனுபவ நிழலில்
    இளைப்பாறினால் மனம் இலகுவாகிவிடும்...

    நட்புக்கு இலக்கணமாக தங்களுக்கு கிடைத்த
    அத்தனை நண்பர்களும் முத்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பெற்றவர்களின் அருமை தெரிந்த பிள்ளைகள் அரிதாகி விட்டனர் இன்று. உங்களின் கூற்று மிகமிகச் சரியானது மகேன். தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  8. நடைவண்டி :அருமை அழகு பணிவு நட்பு போராட்டம்
    அனைத்தும உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டிப் பயணத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா!

      Delete
  9. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

    நடைவண்டிகள் தொடர் அருமை.சில காலம் உங்கள் இந்த பதிவை படிக்காமல் விட்டுவிட்டேன் மீண்டும் தொடர்கின்றேன் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. பயணங்களும், அலைச்சலும், வாழ்க்கைப் போராட்டமும் உங்களைக் கட்டிப் போட்டு விட்டது இல்லை..? இப்போது உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி ராஜ். தொடரும் உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  10. பி கெ பி யை ஒரு நாவல் ஆசிரியராக மட்டுமே தெரிந்திருந்த எங்கள்க்கு அவரின் பல நல்ல குணங்களை அறியச்செய்தமைக்கு நன்றி.அடுத்து இந்திரா சௌந்திரராஜனின் உங்க அனுபவங்களையும் படிக்க ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கோம்,

    ReplyDelete
    Replies
    1. இந்திரா செளந்தர்ராஜன், அவருக்குப் பின் கடுகு ஸார் ஆகியோரின் நட்பில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு இருந்தாலும் சம்பவங்கள் குறைவு என்பதால் சீக்கிரமே முடிந்து விடும் அபாயம் உண்டு. ஆவலாக காத்திருக்கும் உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிம்மா!

      Delete
  11. அருமையான எழுத்தாளார் அவரை பற்றி நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி ராஜா!

      Delete
  12. நவில்தொறும் நூல்நயம் அல்லவா! நன்று.
    இ.சௌ.ராஜன்?!--ஓ,இந்திரா சௌந்திரராஜனா?!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நவில்தொறும் நூல்நயம் - நல்ல, அழகான வார்த்தை. உங்களின் வருகையும் கருத்தும் தந்த மனமகிழ்வுடன் என் இதய நன்றி உங்களுக்கு!

      Delete
  13. எதிலும் ஒரு அழகுணர்ச்சியும், புதுப்புது ஐடியாக்களை செயல்படுத்துவதில் ஆர்வமும் மிகுந்த அவருடன் பழகி வருவதை மிகப் பெருமையாக உணர்கிறேன் நான்.

    ரச்னையான படைப்புகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசனையான படைப்பு என்று ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  14. தோ... புறப்பட்டுட்டேன் நண்பா. எனக்கும் ஓர் இடம் தந்த தங்களின் அன்பிற்கு நெகிழ்வுடன் கூடிய என் நன்றி!

    ReplyDelete
  15. பி கே பி சாரைப் பற்றிய அருமையான தகவல்களைத் தந்திருக்கீங்க கணேஷ் அண்ணா! அவரது வாழ்த்து அட்டை பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு! உங்கள் அனுபவ பயணங்கள் தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மணி. அந்த அழகான வாழ்த்து அட்டையை ரசித்த உங்களுக்கு என்னுடைய இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  16. கணேஷ் சார்,
    பட்டுக்கோட்டை அவர்களின் ரசனையை கண்டு மிக வியப்புஅடைந்தேன். தொடருங்கள் நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் முஹம்மத் ஸலீம்! ரசித்துப் படித்து எனக்கு உற்சாகமளித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  17. பிகேபி அவர்களின் அன்பும் தனித்த அடையாளத்துடனான அழைப்புகளும் கண்டு ஆச்சர்யமடைந்தேன். இப்படிப்பட்ட பல நல்ல மனிதர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள். அனுபவங்களையும் அழகாய்ப் பதிவிடும் நேர்த்தி பாராட்டத்தக்கது. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பாராட்டி வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி தோழி!

      Delete
  18. அடடா ! முடிந்து விட்டதே என்று நினைத்தேன். அடுத்த பயணம் தொடரட்டும் சார் !

    ReplyDelete
    Replies
    1. தொடர்வோம் தனபாலன். தொடரும் உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!

      Delete
  19. ஃப்ரெண் உங்க கையோட பிடிச்சிட்டு நடந்த நடைவண்டிப் பிரயாணம் அலுக்கவோ கால் வலிக்கவோ இல்லை.இன்னும் உங்ககூட நடந்திட்டே இருக்கலாம்.வாழ்த்துகள்.உங்கள் அன்புக்கு இவர்களது நட்பும்தான் காரணமாயிருக்கலாம்.நட்புத் தொட இன்னும் இறுக உங்கள் கையை பிடிச்சுக்கொள்றன் ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. சக மனிதர்களை நேசிக்கவும், சிந்தனைகள் சற்றே பக்குவமடையவும் என் எழுத்தாள நண்பர்கள் அனைவரும் காரணம் ஃப்ரெண்ட்! நானும் இறுகப் பற்றிக்கிட்ட உங்களோட நட்புக் கரத்தை விடறதாயில்ல!

      Delete
  20. PKP over? So sad...Ganesh Sir..

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன ரெவெரி... இன்னும் இரண்டு நண்பர்களைப் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறதே. என்னுடன் வாருங்கள், தொடர்வோம் நாம்..! உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  21. 'சட்'டென முடித்து விட்டீர்களோ.... பி கே பி யின் புதுமை முயற்சிகள் 'அட' போட வைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே... அவரது யோசனைகள், செயல்பாடுகள் எப்போதும் ‘அட’ போடும்படிதான் இருந்து வந்திருக்கின்றன எனக்கு. மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

      Delete
  22. போராட்டமான வாழ்க்கையைக் கூட அழகாய் சுவாரசியமாய் சொல்லிப் போகும் உங்கள் எழுத்து.. தொடர்ந்து வருகிறேன் நானும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் உடன் வருவதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. பத்திரிக்கை அனுபவத்தின் ஊடே நல்ல பல விடயத்தைச் சொல்லியது பி.கே. பற்றிய தொடர் அடுத்த நண்பரோடு தொடர்வோம் பயணத்தை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நேசன், அடுத்த நண்பரோடும் சுவாரஸ்யமாய் பயணிக்க உடன் வர்றேன்னு சொன்னதுல மகிழ்ச்சி. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  24. பி.கே.பி. தொடர் அருமை...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி குமார்!

      Delete
  25. கணேஷ் அண்ணன் கதைச் சொல்லிக்கொண்டே வர, வாசித்த நாங்கள், அவர்(கணேஷ்) கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறோம்.

    பகிர்விற்கு நன்றிண்ணா.

    ReplyDelete
    Replies
    1. திரும்பிப் பார்க்கையில் நான்தானா அது என்று எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது தம்பி. உடன் வரும் உங்களுக்கு உளம் கனிந்த நன்றி.

      Delete
  26. நடைவண்டி பழக வந்தா என்ன இது முடிஞ்சிபோச்சி என்று சொல்கிறார்கள் . வித்தியாசமான அழைப்பிதழ் அன்போடு கலந்த நட்பைக் காட்டுகிறது .

    ReplyDelete
    Replies
    1. நடைவண்டிப் பயணம் இன்னும் முடியலை தென்றல். பி.கே.பியுடன் ஆன பகுதிதான் முடிச்சிருக்கேன். தொடர்ந்து வாங்க. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  27. பதிர்வர்களுடன் சந்திப்பு,அனுபவங்கள் என கலக்குறீங்க.உங்கள் எழுத்துக்களும் நட்பும் ரசனை மிகுந்தவையே.வாழ்த்துக்கள் மனம் கனிந்து.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜ நடராஜன்! ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  28. அன்புள்ள கணேஷ்,

    பி.கே.பி-யுடன் உங்கள் அனுபவங்களை short and sweet ஆக முடித்து விட்டீர்கள். நடை வண்டி பயணம் தொடரட்டும்...

    இந்தப் பதிவில் மற்றொரு சிறப்பு... உங்கள் முகவரியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகஸ்ட் மாதம் இந்தியா வரும்போது உங்களை நேரில் சந்திக்க முயற்சிக்கிறேன். ஒரு சிறு குறை. கடுகு சாரை இந்த முறை சந்திக்க முடியாது :-( அவர் ஜூன் மாதமே இங்கு நியூ ஜெர்சி வந்து விடுகிறார்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்க சொன்னப்புறம்தான் கவனிக்கிறேன் ஃப்ரெண்ட்! என் அட்ரஸ், ஃபோன் நம்பர் ரெண்டுமே இருக்கில்ல... ஹா... ஹா... நல்ல அப்ஸர்வேஷன் உங்களுக்கு! உங்களைப் போன்ற நண்பர்களைச் சந்திப்பதில் கொள்ளை மகிழ்வு எனக்கு. அவசியம் சந்திககலாம். நடைவண்டியின் இனிய பயணத்திற்கு வாழ்த்தியதற்கு என் இதயநன்றி!

      Delete
  29. இப்பொழுது மேடவாக்கதிற்கு மாறியுள்ளேன் அங்கே இன்டர்நெட் இணைப்பு கிடைக்க கால தாமதம் ஆகியதால் என்னால் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை. அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு வருந்துகிறேன்.

    நடைவண்டியில் மீண்டும் இணைந்து விட்டேன்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube