Friday, May 4, 2012

விறுவிறுப்பான போராட்டம்

Posted by பால கணேஷ் Friday, May 04, 2012

ரேந்திரன் கஞ்சி போட்ட காட்டன் துணி போல விறைப்பானான். மெதுவாக, மிக மெதுவாக பட்சி சிறகு காற்றில் மிதப்பது போல் தன்னிடத்திலிருந்து நகர்ந்தான். இடுப்பில் ரிவால்வரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

இரண்டு அறைகளையும் பிரிக்கும் தள்ளு கதவை உராய்ந்து கொண்டு சற்று நேரம் நின்றான். அப்புறம் ஷூ முனையால் கதவை மெல்ல மெல்ல நகர்த்தினான். இப்போது ரிப்பன் அளவு இடைவெளி விழ, தன கண்களை அங்கே பதித்து பக்கத்து அறையை நோட்டமிட்டான்.

நம்பிராஜன் இன்னமும் படுக்கையிலேயே இருந்தார். அவரது அருகில் ஒரு ஆசாமி நின்றிருந்தான். மிகக் குறைவான வாட் வெளிச்சத்தில் இரவு விளக்கு சதி செய்தது. நின்ற ஆளின் முகத்தை மூடி ஸ்கார்ஃப் போல ஏதோ கட்டப்பட்டிருக்க, சுலபத்தில் முக அடையாளம் புரியக் கூடாது என்ற கவனம் தெரிந்தது. உயரமாயிருந்தான். அகலமாயிருந்தான். நம்பிராஜனின் படுக்கையருகே குனிந்து-

அவரை ஏதாவது செய்துவிடப் போகிறான் என்று நரேந்திரன் தன் ரிவால்வரை கைக்கு கொண்டு வந்தான். இல்லை. அந்த ஆள் நம்பிராஜனைத் தொந்தரவு செய்யாமல், கால்களை வாத்து போல் எடுத்து வைத்து அங்கிருந்து நகர்ந்தான். சுவரில் தொங்கிய அலங்கார கடிகாரத்தை அண்டினான். அதை ஒற்றைக் கையால் கழற்றினான். இன்னொரு கையை சுவரில் செலுத்தினான். க்ளிக் என்று சிட்டிகை போடுவது போல் ஒரு ஒலி.

எதையோ எடுக்கிறான். அது இந்தக் கேஸிற்கு மிக முக்கியமானதாக இருக்கக் கூடும். அதை எடுத்துக் கொண்டு அவன் நழுவி விட்டால் ஆபத்து. நரேந்திரன் செயல்பட நிச்சயித்தான். ரிவால்வரின் ஸேஃப்டி காட்சை விடுவித்தான். க்ளக் என்ற அந்த ஒலியைக் கேட்டதும், கடிகாரத்தைக் கழற்றியவன் அப்படியே உறைந்து நின்றான்.

``அசையாதே'' என்றான் நரேந்திரன் குரலை ஏற்றாமல். ``அசைந்தால் என் துப்பாக்கி உன் முதுகை சல்லடையாக்கி விடும்.''

அந்த ஆள் கடிகாரத்தை அதன் ஆணியில் மாட்டிவிட்டு இரண்டு கைகளையும் உயரத் தூக்கி சுவரைப் பார்த்து நின்றான். அவன் இடது கையில் கசக்கப்பட்டு, சுருட்டப்பட்டு சில காகிதங்கள்.

``அதை என்னிடம் கொடு...''

நரேந்திரன் ஒவ்வொரு அடியாக முன்னேறினான். அந்தக் காகிதத்திற்காக தன் இடது கையை நீட்டினான். வலது கையில் ஸ்டெடியாக ரிவால்வர். நரேந்திரன் இன்றைக்கு நிறைய தவறுகள் செய்கிறான். பெட்ரூம் விளக்கின் ஒளி அவன் மீது படிந்து அவனுக்கு முன்னதாக அவனுடைய மசமசப்பான நிழலை சுவர் வரை கொண்டு போய் விட்டதை அவன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

கையைத் தூக்கி நின்றிருந்தவன் இந்த விஷயங்களில் தனியாக டிப்ளமா வாங்கியிருந்தான். நரேந்திரனின் நிழலை வைத்து நரேந்திரன் இரண்டடி தூரத்திற்குள் வந்ததை கணக்கிட்டதும் செயல்பட்டான்.

 அறுத்து விட்ட தேங்காய் போல சரேலென தரையில் விழுந்தான். விழுந்த அதே கணம் புரண்டு நிமிர்ந்தான். நிமிர்ந்த அதே கணம் உரம் பாய்ந்த அவனுடைய வலது கால் ஸ்ப்ரிங்கால் விடுவிக்கப்பட்டதைப் போல் உதறி நரேந்திரனின் வலது கையை உதைத்தது. சுடுவதா வேண்டாமா என்ற தயக்கமாய் இருந்த ரிவால்வர் காற்றில் டைவ் அடித்துப் பறந்தது.

இப்போது எதிரி கைகளை சுவரில் அடித்து ஊன்றி எம்பினான். நரேந்திரனின் தோளுக்கு அவன் கால் இறங்கியது. நரேந்திரன் உஷாராகி அந்தக் காலைப் பற்றி சரேலென முறுக்கி இழுத்தான். எதிரி அந்தத் தாக்குதலை எதிர்பார்த்தவன் போல் தனது வலது கையை மடக்கி, காற்றில் ஒளி வேகத்தில் பாய்ச்ச, நரேந்திரன் நகருமுன் முகவாயில் அந்த அடி இறங்கியது.

முப்படி உயரத்திலிருந்து கான்க்ரீட் தளத்தில் குப்புற விழுந்தது போல் இருந்தது நரேந்திரனுக்கு. யாரோ பல் டாக்டர் என்னால் பணக்காரர் ஆகப் போகிறார். எதிரியின் காலை விட்டுவிட்டு அவன் முகத்துக்குப் பாய்ந்தான் நரேந்திரன். முதல் ஆர்க்கில் எதிரியின் முக்காட்டுத் துணி கையோடு பிய்ந்து வந்தது. இரண்டாவது ஆர்க் போடுமுன் எதிரி தன் முழங்காலை மடித்து நரேந்திரன் மீது செலுத்தி, முதன் முறை பிசகி, இரண்டாவது முறை நெஞ்சில் கும்க் என்று பாய்ச்சினான்.

 நரேந்திரன் பக்கெட் ஆக்ஸிஜனை இழந்து கைகளை அகல விரித்தான். எதிரி இதற்காகவே தினமும் எண்ணெய் போட்டு மஸாஜ் செய்து தன் தசைகளை முறுக்கி வைத்திருந்தது போலிருந்தது. நரேந்திரன் தன் முஷ்டியை மடக்கி காற்றைக் கிழித்து எதிரியின் மூக்குக்கு குறி வைக்க, அது அவன் தாடையில் இறங்கியது. அவன் மல்லாந்து சுவரை மோதினான். உடன் நரேன் பாய்ந்து அவன் கண்களுக்குக் குறி வைத்து விரல்களைப் பாய்ச்சினான். ``நாஸர், இனி நீ தப்ப முடியாது...''

நாஸர் வெகு உன்னதமாகக் கணக்கிட்டு சரேலென தன் வாய் திறந்து நரேந்திரனின் விரல்களைக் கடித்தான். நெருப்புப் பற்ற வைத்ததுபோல் நரேந்திரன் கைகளை உதறிக் கொள்ள, நாஸர் விரித்த உள்ளங்களையை முறம் போல நரேந்திரனின் கழுத்தில் இறக்கினான். நரேந்திரன் உருண்டு புரண்டு எழுந்திருக்கும் முன், நாஸர் அந்த இடத்திலிருந்து எகிறினான். ஒரே ஜம்ப்பில் கதவை அணுகி, சரேலென வெளியே பாய்ந்து விட்டான்.

நரேந்திரன் அவனுக்குப் பின்னே பாய்ந்தான். ஆனால் அவன் ஹாலுக்குள் பிரவேசிப்பதற்குள் நாஸர் வாசல் கதவைத் தாண்டியிருந்தான். சட்டென அறைக் கதவைச் சார்த்தி அவன் வெளியில் தாளிட்டு விட, நரேந்திரன் அக்கம் பக்கம் பார்த்து, ஜன்னலைத் தேர்வு செய்து வெளியே குதித்தான். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விட்டது.

சிமெண்ட் பாதையில் காற்றைவிட வேகமாக ஓடி, திறந்த கேட் வழியே வெளியே அம்பு போல் பாய்ந்து இரண்டாவது நொடியில் சின்ன இருமலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் கிளம்ப, நரேந்திரன் இனி இந்த இரவில் அவனை எட்டிப் பிடிப்பது இயலாத காரியம் என்று உணர்ந்தான்.

============================================

ஃப்ரெண்ட்ஸ்! ‘சுபா’வின் துப்பறியும் நாவலில் இருந்து ஒரு விறுவிறு்ப்பான பகுதியை இங்கே படித்தீர்கள். இனி, இங்கே க்ளிக்கி வலைச்சரம் சென்று நரேந்திரன்-வைஜயந்தியை சந்தியுங்கள்!

40 comments:

  1. இவளோ விறுவிறுப்பான தொடரிலும் நகைச்சுவை " யாரோ பல் டாக்டர் என்னால் பணக்காரர் ஆகப் போகிறார்" அருமை.. லிங்க் கொடுத்தமைக்கு மிக்க நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. முதல் நபராக வந்து ரசித்துக் கருத்திட்டு மகிழ்வித்த ஸவிதாவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  2. Replies
    1. காலை வணக்கம் நண்பா! வைஜ் ‌வலைச்சரத்துல காத்திருககாங்க. ‌போய்ப் பாருங்கோ...! நன்றி!

      Delete
  3. சண்டைக் காட்சியை மிக அனுபவித்துக் கற்பனை செய்து எழுதியிருக்காங்க சுபா இரட்டையர்கள்... அங்கே வலைச்சரத்துக்கும் போயிட்டு வந்துட்டேனே!!

    ReplyDelete
    Replies
    1. சுபாவால் நான் ஈர்ககப்பட்ட முதல் விஷயம் இந்த சண்டைக் காட்சிகளின் வர்ணிப்புதான். அப்புறம் நிறைய விஷயங்கள்... வலைச்சரத்திலும் உங்கள் அருமையான கருத்தைப் படித்தேன். மிகக நன்றி!

      Delete
  4. விறுவிறுப்பான தொடர் ! நன்றி சார் !

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  5. கணிடிபாக சுபாவின் மர்ம நாவல்களைப் படித்தே ஆகா வேண்டும். அதற்க்கு இதுவொரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கிறன். தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த சின்ன வாத்தியாருக்கு மிக்க நன்றி.

    நேரம் இருந்தால் படியுங்கள்

    ஆனந்தா...ஆனந்தா...சிரிப்பானந்தா...

    ReplyDelete
    Replies
    1. சுபாவின் துடிப்பான எழுத்து நடை நிச்சயம் உங்களை மயக்கி விடும் சீனு. படியுங்கள். இன்று மாலை அவசியம் உங்கள் தளத்தைப் படித்துக் கருத்திடுவேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  6. சுற்றுலாப் பதிவுஅறிமுகங்கள் அருமை
    அந்த ஜாக்கெட் விஷயம் சொல்லிப் போனவிதம் அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    சுவாரஸ்யம் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்திலும் இங்கும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  7. நல்ல விறுவிறுப்பான பகுதியை அறிமுகம் செய்துள்ளீர்கள்
    நேரடியாக நிகழ்வுதனைப் பார்ப்பது போல இருந்தது
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸார். திரைப்படங்களில் மட்டுமே நாம் பார்த்திருந்த சண்டைக் காட்சிகளை வர்ணனையின் மூலம் நேரே காண்பது போல கொடுத்து ரசிக்க வைத்தவார்கள் சுபா. நீங்கள் ரசித்துக் கருத்திட்டதில் மிக மகிழ்வோடு உங்களுக்கு என் நன்றி!

      Delete
  8. சுபா அவர்களின் கைவண்ணத்தில் காட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. வலைச்சரத்தில் அறிமுகங்களையும் பார்த்துவிட்டே இங்கு வந்தேன்.

    அடியேனுடைய பதிவுகளையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. சுபாவின் கை வண்ணத்தை இங்கும் வலைச்சரத்திலும் ரசித்துக் கருத்திட்டு ஊக்கம் தந்த நண்பருககு என் உளம்கனிந்த நன்றி.

      Delete
  9. “யாரோ பல் டாக்டர் என்னால் பணக்காரர் ஆகப் போகிறார்’ என்பதைப் படித்ததும் எனக்கு பல் டாக்டர்கள் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது.

    ‘A Person who finds work for his own teeth by taking out those of others’.

    சுபா’வின் துப்பறியும் நாவலின் ஒரு பகுதியைக் கொடுத்து, முழு நாவலையும் படிக்கும் ஆசையைத் தூண்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சுபாவின் பல நாவல்களில் இது‌போன்ற விறுவிறுப்பான ஆக்ஷன் சீன்களும், முந்திரிப் பருப்பு தூவினாற் போல மெலிதான நகைச்சுவையும் இணைந்திருக்கும். படித்துப் பாருங்கள் ஸார். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  10. நேரில் காண்பது போல் நிகழ்சிகள் உள்ளன!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. சுபாவின் எழுத்து நடை அத்தகையது. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஐயா!

      Delete
  11. பதிவு விறு விறுப்பு ..படித்ததும் வருதே சுறு சுறுப்பு...அத்தனை உற்சாகமாக எழுதுகின்றீரகள்.

    ReplyDelete
    Replies
    1. சுபாவை ரசித்துக் கருத்திட்டு என்னை மகிழ்வித்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. துப்பறியும் நாவலையும் படிக்கத் தூண்டும் ஆவலை தூண்டுகிறது தங்கள் பதிவு அருமை .

    ReplyDelete
    Replies
    1. துப்பறியும் நாவல்கள் நமக்கு சற்று நேரம் கவலையை மறக்கச் செய்யும் மருந்துகள். படித்தால் தவறில்லை தென்றல் படியுங்கள். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  13. மிக் வித்யாசமான முறையில் வலைச்சர பணியினை தொடர்கிரீர்கள் கணேஷ்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பாணியை ரசித்து என்னை உற்சாகப்படுத்தும் கருத்தைத் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  14. As far as I know, in cinema fighting scene is the most difficult one to shoot where you have to bother about shot sequence, costumes, continuity and ultimately editing. But now I feel it is still more difficult to describe the same in print media which has been done by Subha in a superb manner which gives a movie effect while reading. Very Very Nice One.

    ReplyDelete
    Replies
    1. ஆம் மோகன். பல கதைகளில் வேறு வேறு விதமான சண்டைக் காட்சிகளை சுபா எழுதியதை வியந்து ரசித்தவன் நான். நீங்களும் ரசித்ததில் மகிழ்ந்து என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறென்.

      Delete
  15. எப்படித்தான் ..
    இரண்டு வலைப்பூவையும் சமாளிக்கிறீர்களோ..

    ஆனாலும் உங்களின் ஸ்திரத்தன்மையும்
    நம்பிக்கையும்.. உழைப்பும் எனக்குப் பாடமாக அமைகிறது நண்பரே..

    கொஞ்சம் கூட சுவை குன்றாமல் அழகாக கொடு செல்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனமிருந்தால் மார்க்கபந்து, ஸாரி... மார்க்கமுண்டு. கொஞ்சமும் சுவை குன்றாமல் கொண்டு செல்கிறேன் என்ற பாராட்டைக் கேட்க எத்தனை சிரமமும் படலாம் மகேன். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  16. மகேந்திரன் கேட்ட கேள்விதான் எனக்கும்.பாராட்டுகள் கணேஷ்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பாராட்டு எனக்கு எப்போதுமே எனர்ஜி டானிக். அதை வழங்கிய உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  17. கணேஷ் உங்க பக்கம் பதிவிலும்சரி, வலைச்சர பதிவிலும் சரி தூள் கிள்ப்புரீங்க. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைய நீங்கள் பாராட்டினதைப் படிச்சதும் மனசு மகிழ்ச்சியில லேசாயிடுச்சு. ரொம்ப ரொம்ப ந்ன்றிம்மா.

      Delete
  18. விறுவிறு்ப்பான பகுதி பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  19. ஃப்ரெண்ட் எப்பிடி....இப்பிடியெல்லாம்.அடிக்கடி சொக்லட் தரக்கூடாது !

    ReplyDelete
    Replies
    1. ஓ.கே. ஃப்ரெண்ட்! நாளைக்கு சொக்லெட்டுக்குப் பதிலா கேக் தந்துடறேன். சரிதானே...! நன்றி!

      Delete
  20. விறு விறுப்பாக் இருக்குது அண்ணா. ஊர் வேர சுற்றிக்காட்டி விட்டீங்க வாத்தியாராக இருந்து!

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்டு மகிழ்வு தந்ததற்கு என் இதய நன்றி நேசன்!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube