‘எங்கள் ப்ளாக்’ நடத்திய சிறுகதைப் போட்டியில் பங்கேற்றிருந்த எனக்கு ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்டு கால்’ புத்தகத்தை பரிசளித்து ஆனந்தம் அளித்தார்கள். தலைப்புக்கேற்றாற் போல் ஆனந்தத்தை வழங்கிய புத்தகம், நீங்கள் அனைவரும் ‘மிஸ்’ பண்ணாமல் படிக்க வேண்டும் என்று சொல்ல என்னை எழுதவும் வைத்திருக்கிறது.
‘‘நமக்கு தாத்தா, பாட்டின்னாலே அட்வைஸ் பண்ணினா கசப்பா இருக்கும். அதே தாத்தாவோ பாட்டியோ ஒரு கதையச் சொல்லி, ‘இதுலருந்து என்ன புரிஞ்சுக்கிட்டே’ன்னு கேட்டா ஈஸியாச் சொல்லிடுவோம். இந்தப் புத்தகம் அப்படித்தான்... பல கட்டுரைகளா எழுதி புரிய வைக்க வேண்டிய விஷயங்களை அழகா ஒரு கதையில சொல்லியிருக்கு. -கசப்பு மருந்தை இனிப்பான காப்ஸ்யூல்ல வெச்சுத் தர்றது மாதிரி.’’ -இதுதான் படித்து முடித்ததும் என் மனதில் தோன்றிய எண்ணம்.

இந்த நூல் பெண்மையைப் போற்றி உயர்த்திப் பிடித்திருக்கிறது. அதைத் தவிர பண நிர்வாகம் என்கிற விஷயமும் அருமையாக உள்ளூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் துவக்கத்தில் கடவுளுக்கும், தேவதைக்கும் நிகழ்வதாக வரும் உரையாடலே மிக அற்புதமாக அமைந்து, நூலுக்குள் நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.
‘‘பெண்ணால் வாழ்க்கையின் சுமைகளைத் சுமக்கவும் திறம்படக் கையாளவும் முடியும்; ஏககாலத்தில் சிரிக்கவும், அழவும் தெரிந்தவள்; பாடவும், ஆடவும் கொண்டாடவும் தெரிந் தவள்; சந்தோஷத்தையும், பிரியத்தையும், அனுமானத்தையும் வெளிக்காட்டாது இருக்க வும் தெரிந்தவள்; தான் நம்பும் விஷயங்களுக்காகப் போராடுபவள்; தன் குடும்பத்தின் நன்மைக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயங்காதவள்; குழந்தைகளின் வெற்றியில் களித்துக் குரல் எழுப்புகிறவள்; பிரியமானவர்களை இழக்க நேர்ந்தால் வாழ்வு முழுவதும் அழுகிறவள்’’
‘‘இவ்வளவு உன்னதமாக இந்தப் படைப்பைச் செய்தால் முன்னர் செய்த படைப்புகளுக்கு அநீதி இழைத்து விட்டது போல் தோன்றுகிறதே... சரியா என் எண்ணம்?’’
‘‘இல்லை. அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் இவ்வளவு கவனமாகச் செய்த உன்னதங்களை மீறி இவளிடம் தவிர்க்க முடியாத ஒரு பிழை இருக்கும்... தன் உன்னதம், தன் மதிப்பு என்ன என்பதை மறந்து விடுகிற தன்மை’’
இப்படித் துவங்கி... தாங்கள் இருக்கிற நிலைக்குத் தாங்களே காரணம் என்பதை உணர்கிற பக்குவம் பெண்களுக்கு வேண்டும். சட்சட்டென்று எதிர்வினை செய்யும் உந்துதலைக் கைவிட்டு பெண்கள் அமைதியான மனதுடன் பிரச்சனைகளை அணுக வேண்டும். வெளிப்படுவதில் இருக்கும் துடிப்பைவிட விழிப்புடனும் பொறுமையுடனும் இருப்பது அவசியம். இல்லையென்றால் சந்தித்த பிரச்னைகளையுமே மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள்.
பெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மற்றவர்களை கவனிச்சுக்கவே செலவு பண்ணிட்டிருக்காங்க. பெண்களை தெய்வம்னு சொல்ற இந்த சமூகம் அந்தப் பெண்ணுக்கு மூப்பு வரும்போது, உடல்நலம் குன்றும்போது அவங்களைக் கவனிக்கிறதே இல்லை. ஏதோ மத்தவங்களுக்கு உழைக்கறது அவங்களுக்கு விதிக்கப்பட்டதுங்கற மாதிரி அந்த உழைப்பை உரிமையோட உபயோகம் பண்ணிக்கறாங்க.
மனிதர்கள் உணர்விலிருந்து தோன்றியவர்கள். அதனால உணர்வுகளை முழுசா விலக்கி வைக்க முடியாது. எல்லோருமே அறிவும் உணர்வும் கலந்த கலவைகள்தான். ஆண்கள் கிட்ட அறிவு டாமினண்ட்டா இருக்கு. பெண்களுக்கு உணர்வு டாமினண்ட்டா இருக்கு. ஆண்களோட போட்டி போடணும்னு பெண்களும் உணர்வுகளை அறவே விலக்கி வெச்சிட்டு ஆண்களாவே மாறிடக் கூடாது. பெண்ணாக இருக்கிறதோட பெனிஃபிட்ஸை இழந்துடுவாங்க அப்படிப் பண்ணா...
-இப்படியெல்லாம் பெண்கள் நிலையையும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் அலசி... முதுமையில் ஓய்வும் கவனிப்பும் பெண்களுக்கு அவசியம். அதை அவங்க தங்களோட இளமைக் காலத்திலேயே, தாங்கள் ஆரோக்கியமா இருக்கிற காலத்திலேயே திட்டமிட்டுக்க வேண்டியது அவசியம். -இப்படி்த் தொடர்கிற நூல், பணம் ஒருத்தரின் சமூக அடையாளத்தைத் தீர்மானிக்குது என்கிறதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. வாழ்வும் பணமும் இருவேறு விஷயங்கள் இல்லை. பணம் செருப்புக்குச் சமம்னு சொல்லலாம். அளவுல சின்னதா இருந்தா காலைப் புண்ணாக்கும், நடக்க முடியாது. அளவுக்கு பெரிசா இருந்தா கழண்டு போகும், அப்பவும் நடக்க முடியாது. -என்று பணத்தின் அவசியத்தைப் போதிக்கிறது. பண நிர்வாகத்தையும் பேசத் தவறவில்லை. ‘எங்க தாத்தா பெரிய பணக்காரர். ஆனாலும் ஒரு சின்ன நோட்புக் வெச்சி எழுதிகிட்டே இருப்பாரு. என்னன்னு கேட்டா கையிலிருந்து போற ஒரொரு பைசாவையும் டிராக் பண்ணனும்னு சொல்வார். அவர் பணக்காரரா இருந்ததில ஆச்சரியம் இல்லை!’
-இங்கே நான் சொல்லியிருப்பவை எல்லாம் உதாரணங்கள்தான். புத்தகக் கடலிலிருந்து அள்ளிய ஒரு துளி என்பதை அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். நூலில் நான் ரசித்த அத்தனை கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்றால் பல பதிவுகள் தேவைப்படும். புத்தகத்தின் 80 சதவீதத்தை பப்ளிஷ் செய்ய வேண்டி வரும். நூலாசிரியரும், பதிப்பாளர் திரு.பத்ரிசேஷாத்ரியும் என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பக் கூடும். ஆகவே, ஸிம்பிளாக ‘அனைவரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய நூல் இது’ என்பதை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன் உங்களுக்கு! முடிப்பதற்கு முன்னால் இரண்டு விஷயங்கள்:
1. இதன் ஆங்கில மூலம் எப்படியிருந்திருக்குமோ தெரியவில்லை.... ஆனால் தமிழில் உறுத்தல் இல்லாத சரளமான நடையில், படிக்கும் சுவாரஸ் யத்திற்கும் குந்தகம் இல்லாதவகையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் திரு.கே.ஜி.ஜவர்லால். அதற்காக அவருக்கு ஸ்பெஷல் பொக்கே!
2. எங்கள் பிளாக் ஆசிரியகளுக்கு...! வருஷத்துக்கு ஒரு தடவை இந்த மாதிரி சிறுகதைப் போட்டி வையுங்க ஸார். கலந்துக்கற சுவாரஸ்யம் தவிர, புத்தகத்தைப் படிச்ச இனிய அனுபவமும் அடிக்கடி கிடைக்கட்டும். (என் புக் ஷெல்ப்புலயும் ஒரு புத்தகம் கூடிடும். ஹி... ஹி...)
இந்த நூல் வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 177/103, முதல் மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை. 192 பக்கங்கள். நூலின் விலை: ரூ.150 மூல ஆசிரியர்கள்: சுரேஷ் பத்மநாபன். ஷான் சவான். தமிழாக்கம்: கே.ஜி.ஜவர்லால்.

|
|
Tweet | ||
அருமையான புத்தகத்தை
ReplyDeleteமிக அருமையாக அறிமுகம் செய்தமைக்கு நன்றி
கிடைக்கும் விலாசம் மற்றும் விலை விவரம் கொடுத்திருக்கலாமோ ?
நீங்கள் சொன்னது நியாயமே! இப்போது நூல் விவரம் மற்றும் கிடைக்குமிடம் விவரங்களை UPDATE-ட்டி விட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றி ஸார்!
Deleteபெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மற்றவர்களை கவனிச்சுக்கவே செலவு பண்ணிட்டிருக்காங்க. பெண்களை தெய்வம்னு சொல்ற இந்த சமூகம் அந்தப் பெண்ணுக்கு மூப்பு வரும்போது, உடல்நலம் குன்றும்போது அவங்களைக் கவனிக்கிறதே இல்லை. ஏதோ மத்தவங்களுக்கு உழைக்கறது அவங்களுக்கு விதிக்கப்பட்டதுங்கற மாதிரி அந்த உழைப்பை உரிமையோட உபயோகம் பண்ணிக்கறாங்க.
ReplyDeleteIt is true !
புத்தகம் முழுவதுமே இப்படி நல்ல விஷயங்கள் நிரம்பிக் கிடக்கு ரிஷபன் ஸார். தங்களின் வருகைக்கும் நற்கருத்துக்கும் மிக்க நன்றி!
Deleteவாத்தியாரே போட்டியின் முடிவை சொல்லாமல் விட்டுவிட்டீரே, கதை போட்டியில் வென்றது யாரோ?
ReplyDeleteபுத்தகத்தின் தலைப்பே அருமை. விமர்சனமும் அருமை. பிரிவோம் சந்திப்போம் வாத்தியாரின் எழுத்து நடையில் அருமையாக இருக்கும் என்று சொல்லி ஊக்கப்படுத்தினீர்கள், சும்மா சொல்லக்கூடாது புத்தகம் வாத்தியாரின் நடையில் அருமையாக செல்கிறது. பாதி முடித்துவிட்டேன். அதனால் நீங்கள் அறிமுகம் செய்யும் புத்தகத்தை நம்பி படிக்கலாம்.
படித்துப் பாருங்களேன்
சென்னையில் வாங்கலாம் வாங்க
என் மேல் வைத்த நம்பிக்கைக்கு தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி சீனு!!
Delete
ReplyDelete"நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சார் !"
ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநல்ல பயனுள்ள புத்தகத்தை அறிமுகம் செய்துல்லிர்கள் .. நன்றி சார்
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி ராஜா!
Deleteஇன்று
ReplyDeleteவிஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2
அறிமுகம் அருமை!
ReplyDeleteரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி டீச்சர்!
Deleteதாங்கள் இருக்கிற நிலைக்குத் தாங்களே காரணம் என்பதை உணர்கிற பக்குவம் பெண்களுக்கு வேண்டும்.
ReplyDelete>>>
சரியா சொன்னிங்க அண்ணா. பெண்கள் தங்கள் நன்னடத்தையால் நல்ல நிலமையும், துர் நடத்தையால் வாக்கையின் அதள பாதாளத்துக்கும் செல்கின்றனர்.
ஆமாம்மா. எவரையும் சார்ந்து நில்லாது பெண்கள் செயல்படணும்னு இந்தப் புத்தகம் சொல்லுது. அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
DeleteIt is good that you are introducing books worth reading, to your followers. Please keep it up because there are books which are very difficult to understand though it is written in tamil. Kindly avoid such books and advocate those which are written in simple tamil and reader-friendly.
ReplyDeleteவாசகனுக்குப் புரியாத வண்ணம், எழுத்தாளனின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு எழுதுவதை நான் படிப்பதில்லை. பரிந்துரைக்கவும் மாட்டேன். படிக்க எளிமையாக, சுவாரஸ்யமாக உள்ளவற்றையே சொல்கிறேன் மோகன். அந்த வரிசையில் எழுதப்பட வேண்டிய இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன. இனி அவ்வப்போது வரும். மிக்க நன்றி!
Deleteமிக நல்ல ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. இனிமேல்ான் படிச்சு பார்க்கனும்.
ReplyDeleteபடித்தவுடன் பிடித்து விடும் என்று சொல்வாங்கல்ல... அந்த ரகம் இந்தப் புத்தகம். அவசியம் படிச்சுப் பாருங்க! தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteகணேஷ் சாரி! கொஞ்சம் லேட்டாக வந்துவிட்டேன். இரண்டு நாட்களாக இணையம் அப்டேட் இன்ஸ்டால் பண்ணுகின்றேன் என்று சொல்லி கணினியின் நேரத்தை முழுவதுமாக முழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கின்றது! இப்போதான் நந்தி கொஞ்சம் விலகி இருக்கின்றது. சிறப்பான நூல் விமரிசனத்திற்கு நன்றி.
ReplyDeleteமனமகிழ்வு தந்த ஒரு நல்ல நூலை நான் படிக்கக் காரணமாக இருந்த உங்களுக்கல்லவோ நான் நன்றி சொல்ல வேண்டும்! மிக்க நன்றி!
Delete//பணம் செருப்புக்குச் சமம்னு சொல்லலாம். அளவுல சின்னதா இருந்தா காலைப் புண்ணாக்கும், நடக்க முடியாது. அளவுக்கு பெரிசா இருந்தா கழண்டு போகும், அப்பவும் நடக்க முடியாது//
ReplyDeleteஅருமை! உவமை அருமை!
அறிமுகம் சிறப்பே!
சா இராமாநுசம்
அருமையான உவமையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா!
Deleteஃப்ரெண்ட்....நீங்க சிறுகதை எழுதிப் பரிசுப்புத்தகமும் வாங்கிப் பதிவும் போட்டாச்சா.நான் ஒரு கதைக்குத் தலைப்பு எழுதினன்.பரிசுப்புத்தகம் தரேன்னு சொன்னாங்க.இன்னும் விலாசமே குடுக்கேல்ல !
ReplyDeleteபெண்களை போற்றி மேடையிலயும்,புத்த்கத்திலயும் எழுதினதை பாக்கச் சந்தோஷம்.வீட்டுக்குள்ள அதே அதே அதே மாதிரித்தான்.எப்பிடித்தான் கொஞ்சம் வாய் காட்டித் திக்கித் திணறி தலையைத் தூக்கினாலும் அடக்குதல் என்கிறது கொஞ்சம் லேட்டானாலும் அதே ஸ்டைல்தான் !
பார்றா... நாங்க மெனக்கெட்டு ஒரு சிறுகதை எழுதி பரிசு வாங்கறோம். நீஙக ஈஸியா தலைப்பக் குடுத்துட்டே பரிசு வாங்கிடறீங்க..! அடக்குதல் என்கிற விஷயத்தில் ஆண்களின் அணுகுமுறை இப்ப மாற்றமடைஞ்சிருக்குன்னுதான் தோணுது ஹேமா. ஆனா இது பத்தாது, இன்னும் மாறணும்கற கருத்தும் எனக்கு உண்டு ஃப்ரெண்ட்!
Deleteநல்ல அறிமுகம்.
ReplyDeleteநல்லறிமுகத்தை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஅருமையான புத்தகத்தை, சிறப்பாக அறிமுகம் செய்து இருக்கீங்க. நன்றி கணேஷ்.
ReplyDeleteஉற்சாகம் தந்த உங்களின் நற்கருத்துக்கு நன்றிகள் பல!
DeleteGanesh sir your blog mobile friendly . I read and easely giving feedback and no strugle for me if you have face any error i will mail to u sir.
ReplyDeleteMy computer hard disk fail so laterlly i will give another solution sorry for inconviniyance sir
நல்லது குரு. நண்பர் தனிமரம் மொபைலில் இருந்து கமெண்ட் இட முடியலை என்று குறிப்பிட்டிருந்தார். முடிகிறது என்று நீங்கள் சொல்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி!
Deleteஒரு அருமையான நூலை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteஆம் தங்கையே... அருமையான, அனைவரும் படிக்க வேண்டிய நூல்தான். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
DeleteThank you!Good review.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றி!
Deleteபுத்... அகம் அறிமுகம் அருமை...
ReplyDeleteஅட... புத் அகம் என்று பிரித்துச் சொன்னால் நல்லாத்தான் இருக்கில்ல..! அருமை என்று பாராட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி!
Deleteபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் மனம் நிறைந்த நன்றிகள் முரளிதரன் ஸார்!
Deleteஅருமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே!
Deleteஅறிமுகமே அருமை Sir!
ReplyDeleteரொம்ப நன்றி Sir!
முதல் வருகைன்னு நினைக்கிறேன். வெல்கம் யுவராணி! படித்துப் பாராட்டினதுக்கு என் இதயம்நிறை நன்றிம்மா!
Deleteம்ம்ம் நல்ல நுால் போல் தெரிகிறது
ReplyDeleteஎன் கையில் கிடைத்தால் சந்தோஷம்..
நல்ல நூல்தான் எஸ்தர். அவசியம் படிச்சுப் பாரும்மா. நன்றி!
Deleteபரிசு கிடைத்ததுக்கு என் வாழ்த்துக்கள் சார்..புத்தக அறிமுகமும் சிறப்பாக உள்ளது.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteமகிழ்வளித்த நற்கருத்துக்கு மனம் நிறைந்த நன்றி குமரன்!
Deleteபுத்தக அறிமுகம் அருமை! நல்வாழ்த்துக்களுடன்,
ReplyDeleteஆர்.ஆர்.ஆர்.
ரசித்து வாழ்த்திய நண்பருக்கு என் இதயம்நிறை நன்றி!
Delete