எல்லாருக்கும் வணக்கம்! நடை வண்டியத் தொடரலாம்னு எடுத்தா... ஒரே தூசா இருக்கு. சரி, துடைச்சுட்டு அப்புறம் ஓட்டலாம், வேற பதிவு எழுதலாம்னு யோசிச்சேன். ஆனா பாருங்க... நாளைக்கு நடக்கப் போற பதிவர் சந்திப்புக்காக என் பிஸி ஷெட்யூலை அட்ஜஸ்ட் பண்ணிக்க ப்ளான் பண்றதால (பார்ரா...) மேட்டர் எழுத டைம் இல்லை. அதனால... நான் கட் பண்ணி வெச்சிருக்கற பழைய ஆ.வி. ஜோக்ஸை இங்க தர்றேன். படிச்சுட்டு எதெல்லாம் சிரிக்க வெச்சதுன்னு சொன்னீங்கன்னா... அதே மாதிரி ஜோக்ஸ் கலெக்ட் பண்ணி இன்னொரு பதிவு பின்னால தருவேன். சரியா..!
|
|
Tweet | ||
முதல் வணக்கம்...அப்புறம் அனைத்து ஜோக்ஸ் ம் ....ஹி..ஹி ஹி ஹி
ReplyDeleteரசித்துச் சிரித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
DeleteAppavE tv naadagam jokaa?!! :-))
ReplyDeleteஆச்சரியமான விஷயம்தான் இல்லை..? நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteஜோக் போட்டு விட்டு தலைப்பை மட்டும் டெரர் ஆக போட்டு விட்டீர்கள்:)
ReplyDeleteஅடுத்த பதிவு பதிவர் சந்திப்புதானே?
ஆ.வி யின் பழமையான நகைச்சுவைகளை படத்துடன் பகிர்ந்திருப்ப்பது ரம்யமாக இருந்தது.
ச்சும்மா... தலைப்பு டெரரா இருந்தா புதுசா வர்றங்களை இழுக்குமேன்னுதான்மா... பழைய நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete1,2,5, மற்றும் கடைசி ஜோக்ஸ் சூப்பர். இன்னும் நிறைய பழைய ஜோக்ஸை பகிருங்கள் சார்.
ReplyDeleteஉங்களின் ரசனைக்கேற்றபடி இன்னும் தேடிப் பிடித்து மறுபடி ஒரு பதிவு அவசிய்ம் தருகிறேன் நண்பரே... மிக்க நன்றி.
Deleteகடைசி ஜோக் சூப்பர் .. ஆனாலும் அனைத்தும் அருமை
ReplyDeleteஅனைத்தையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஅனைத்து ஜோக்குகளும் அருமை. உங்கள் சேவை தொடரட்டும்...
ReplyDeleteஜோக்குகளை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteபழைய நகைச்சுவைத் துணுக்கள் ஆனாலும் Old is Gold என்பதை நினைவூட்டுகின்றன. நன்றி இவைகளைத் தந்தமைக்கு!
ReplyDeleteஆம் நண்பரே... பழமை என்றும் இனிமை என்பதுதான் நான் சொல்வது. அந்த இனிமையை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteபதிவர் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துகள் அய்யா
ReplyDeleteமிக்க நன்றி ராஜா. வர இயலாதவர்களுக்காக நாங்கள் நிகழ்வுகளை அவசியம் பதிவோம்.
Deleteபல்லைக் கடித்துக் கொண்டுதான் படித்தேன்
ReplyDeleteஆனாலும் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை
உங்களுக்கு ஒரு குண்டு மிச்சம
பதிவர் சந்திப்பு மகத்தான வெற்றி பெற எனது
மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
உங்களது கருத்தில் நகைச்சுவை இழையோடுகிறது, மிக ரசித்தேன். சந்திப்புக்கு வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
DeleteTha.ma 4
ReplyDeletehahahahahahaha நல்ல யோக்ஸ்......
ReplyDeleteரசித்துச் சிரித்த உனக்கு என் அன்பும் நன்றியும்.
Deleteநல்ல தொகுப்பு !
ReplyDeleteதொகுப்பை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅனைத்தும் அருமை:))! இப்படி தலைப்புப் போட்டு பயமுறுத்தலாமா:)?
ReplyDeleteஅச்சச்சோ... பயமுறுத்திடுச்சா... ச்சும்மமா கவர்ந்திழுக்கும்னு நினைச்சு வெச்சேன். ஆனாலும் வந்து நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteரைட்டோ.. நானும் அதுக்குப் பயந்து சிரிக்க ஆரம்பிச்சது இன்னும் நிறுத்தலீங்கோ..இருக்குற ஜெயிலு பத்தாதுனு இன்னும் புதுசா வேறேயா.. சிரிச்சு வச்சுருவோம்..
Deleteஅட பதிவு போட இப்படியெல்லாம் நல்லா ஐடியா வச்சிறீங்களே இப்படி போடாலாமுன்னு எனக்கு தெரிஞ்சு இருந்த இந்தியா வந்தப்ப நிறைய பழைய புக்ஸ் வாங்கி இருப்பேன்ல ஹும்.....வடை போயிடுச்சே....கலக்குங்க நண்பரே ...எனக்கு பிடித்ததென்னவோ முதலில் உள்ள ஜோக்குதான்.
ReplyDeleteஅதனாலென்ன கெட்டுப் போச்சு பிரதர். அடுத்த முறை வர்றப்ப உங்க பேக் ரொம்பி வழியற அளவுக்கு வாங்கிட்டுப் போனாப் போச்சு. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteaஆ வியில் வரும் ஒவ்வொரு ஜோக்குமே நல்லா சிரிக்க வைக்கிர ஜோக்காகத்தான் இருக்கும் அதிலும் உ. ராஜாஜி, வெ. சீதாராமன் , கிணத்துக்கடவு ரவி இவங்கல்லாம் நிறையவே சிரிக்க வைப்பாங்க.பதிவர் சந்திப்பு எங்க நடக்குது கணேஷ்?
ReplyDeleteபதிவர் சந்திப்பு நாளை (ஞாயிறு) மாலை சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸ்ல 4 மணிக்க நடக்க இருக்கிறதும்மா. ஜோக்குகளை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Delete//யாரங்கே... சிரிக்காதவரைச் சிறையிலடை//
ReplyDeleteஇதுவரைக்கும் நல்லாதானே போச்சி எங் இப்பூடீ எல்லாம் பயமுறுத்துறீங்க
ஹி... ஹி.... சும்ம டமாஸ்க்குதான் நண்பா... எல்லாரும் நம்ம நண்பர்கள்தானேங்கற உரிமைலதான்... படிச்சு ரசிச்ச உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteசிறைக்கு போனாலும் பரவாயிழல்லை சிரிக்கப் போறன்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்
நண்பா... சிரிச்சா சிறையில்லை. சிரிக்காதவரைத்தானே சிறையிடச் சொன்னேன். இருந்தாலும் ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteநல்ல ஜோக்குகள் எப்போது கேட்டாலும் சிரிப்பை வரவழைக்க செய்பவை. இந்த ஜோக்குகளை படிக்கும் யாரையும் சிறையிலடைக்க தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஉண்மைதான் பாலா. அனைவரும் ரசித்துச் சிரித்ததை பகிர்ந்துள்ளனர். உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஹி ஹி ஹி, நான் சிரிச்சுட்டேன் தல, அப்ப எனக்கு ஜெயில் கிடையாதுல்ல .?
ReplyDeleteநிச்சயம் இல்லை. என்னிடமிருந்து நிறைய நிறைய நன்றிகள்தான் உங்களுக்கு நண்பா.
DeleteLaughed out loudly; people around me smiled at me because they do not know the reason behind my laughing as they are not aware that I am watching net in office.
ReplyDeleteசத்தமாவே சிரிச்சுட்டிங்களா மோகன்... ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஹா ஹா மிக அருமை
ReplyDeleteநகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஹ .. ஹ.. ஹ..
ReplyDeleteசிரிப்பு தாங்க முடியல
சிறை போடா சொல்லாதிங்க ம்(:
இல்லை நண்பா. ரசித்துச் சிரித்த உங்களுக்கு விருந்துக்கே ஏற்பாடு செய்யச் சொல்கிறேன். மிக்க நன்றி.
Deleteகாலத்தை வென்ற நகைச்சுவை.கேட்கவாவேண்டும் சிரிப்பிற்கு.
ReplyDeleteஅதுவும் கோபுலு,சாரதியின் கோட்டோவியங்கள் ஜீவன் ததும்புவை!
முதல் துணுக்கில் உட்கார்ந்திருப்பவர் கையை கம்பியில் பிடித்திருக்கும் விதத்தையும் அந்த கண்டக்டரின் கிராப்பு தலையையும் காண கண்கோடி வேண்டும்.மிக நன்றி கணேஷ்.
இனிமேல் இம்மாதிரியான பதிவிற்கு,எந்த தேதியிட்ட விகடன் என்பதையும் சேர்த்து வெளியிட்டால் இன்னும் சுவை கூடும்.
காலத்தை வென்ற நகைச்சுவை.கேட்கவாவேண்டும் சிரிப்பிற்கு.
ReplyDeleteஅதுவும் கோபுலு,சாரதியின் கோட்டோவியங்கள் ஜீவன் ததும்புவை!
முதல் துணுக்கில் உட்கார்ந்திருப்பவர் கையை கம்பியில் பிடித்திருக்கும் விதத்தையும் அந்த கண்டக்டரின் கிராப்பு தலையையும் காண கண்கோடி வேண்டும்.மிக நன்றி கணேஷ்.
இனிமேல் இம்மாதிரியான பதிவிற்கு,எந்த தேதியிட்ட விகடன் என்பதையும் சேர்த்து வெளியிட்டால் இன்னும் சுவை கூடும்.
நகைச்சுவையுடன் சித்திரத்தையும் ரசித்த உங்கள் ரசனைத் தன்மைக்கு என் சல்யூட். விகடனில் இருந்து தொகுக்கப்பட்ட தொடர்கதைகள் பைண்ட் செய்ததிலிருந்து ஸ்கேன் செய்து தருவதால் தேதி குறிப்பிடுவது கடினம். முயற்சிக்கிறேன் நண்பரே. மிக்க நன்றி.
Deleteகண்டதும் அதை எடுத்து விண்டதும்
ReplyDeleteசுவையோ சுவை! நகைச் சுவை!
சா இராமாநுசம்
ஆஹா... நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்துச் சிரித்தீர்கள் என்பதில் மிகமிக மகிழ்வு எனக்கு, தங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஜோக்குகள் என்றால் விகடன் தான். பழைய ஆனந்த விகடன் ஜோக்குகளை எப்போது படித்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
ReplyDeleteஆமாம் இளங்கோ. நகைச்சுவை ரசனைக்கு நல்ல தீனி போட்டதில் விகடனுக்கே முதலிடம். இந்தத் துணுக்குகளை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஅண்ணா நான் சிரிச்சுட்டேன். என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க
ReplyDeleteநீ நல்ல ரசனை உள்ளவன்னு எனக்குத தெரியும். அதனால சிரிப்பேன்னும் தெரியும்மா. ஸோ... ஒண்ணும் பண்ணிட முடியாது...
Deleteஎனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்.
ReplyDeleteமீண்டு(ம்) வந்தேன்
உங்களின் அன்புக்குத் தலைவணங்கிய என் நன்றி சீனு.
Deleteநண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
ReplyDeleteநன்றி
"ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்
அட... இந்த டீல் புதுசா இருக்கே... ஆனா நல்லா இல்ல... அதனால உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிங்க..!
Delete"நல்ல நகைச்சுவை சார் !
ReplyDeleteரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபரி பாஷையும் பல்லவன் ட்ரைவரும் சூப்பர்..:)
ReplyDeleteநலம்தானேக்கா? நகைச்சுவையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteகணேஷ் அண்ணாவுக்கு வணக்கம்! எல்லா ஜோக்ஸும் சூப்ப்பர்! அதிலும் பரி பாஷை, ரயில் ஜோக், டெண்டல் மெண்டல், மொட்டந்தலை முழங்கால் இவையெல்லாம் சூப்பரோ சூப்பர் :-))
ReplyDeleteரசித்தவற்றைச் சொன்னதுக்கு நன்றி நண்பா. இவைபோல் மற்றுமொரு மகிழ்வு தரும் தொகுப்போடு சந்திக்கிறேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇணைத்திருக்கிறேனே... உங்கள் வடிவமைப்பு நன்றாகவே உள்ளது. நன்றி!
ReplyDeleteஎன்ன ஜெயிலு.. என்ன வசதியெல்லாம் உண்டு.. யார் பக்கத்து செல்லுல இருப்பாங்க.. புத்தகம் டிவி எல்லாம் உண்டா விவரமா கொஞ்சம் சொல்லிருங்க.
ReplyDeleteஎமது கெளரவ விருந்தினர்களின் சிறையில் ஏ.சி. செல்லும், படிக்க நகைச்சுவை புத்தகங்களும், தொலைக்காட்சியும், கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க அழகிய பெண்களும் உண்டு ஐயா! வருகிறீர்களா?
Deleteஆஜர்.. பெரிய சைஸ் போட்டோவோட கலர் போஸ்டர் ஓட்டுவாங்களா? கட் அவுட்டு எல்லாம் வேணாம்..
Deleteசிரித்தேன்.ரசித்தேன். நல்ல நகைச்சுவை தொகுப்பு
ReplyDeleteரசித்துச் சிரித்தீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. தங்களுக்கு என் இதய நன்றி!
Deleteசிரிக்க வச்சது நன்றி ஃப்ரெண்ட்.இதுதான் நட்பு.அழும்போது கை குடுத்து ஆற்றியெடுக்க சிரிக்க வைக்கிறது !
ReplyDeleteநானும் வேதனையோடதான் இருந்தேன் ஃப்ரெண்ட். அதான் சிரிச்சு என்னை ஆறுதல் பண்ணிட்டு, உங்க எல்லாரையும் சிரிக்க வைக்க முடிவு பண்ணினேன். பிடிச்சிருந்ததுல சந்தோஷம் எனக்கு. மிக்க நன்றி!
Deleteசிரிப்பு வெடி அதுவும் டைபிஸ்ட் விடும் தவறு!ஹீஈஈஈஈஈஈ! ம்ம்ம்ம்
ReplyDeleteரசித்துச் சிரித்த நேசனுக்கு நன்றிகள் பல!
Deleteபழசு தான், ஆனா தங்கம்ணே.
ReplyDeleteதங்கமான ஜோக்ஸை ரசித்த தம்பி சத்ரியனுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவிகடனின் அந்தக்கால ஜோக்ஸே தனி!
ReplyDeleteஆம். ரசனைக்குது் தீனியானவை விகடனின் ஜோககுகள்தானே. ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteமுதல் ஜோக் (டைபிஸ்ட் - மேனேஜர்) முடியவில்லை! அடுத்து.....
ReplyDeleteடைபிஸ்ட்: ரொம்ப சந்தோஷம் சார்... அப்போ நான் ஸீட்டுக்குப் போகட்டுமா?
மேனேஜர்: இரும்மா, இரண்டாவது வரியைப் பார்க்கிறேன்!
-ஜெ.
ஹா.... ஹா... ஜோக்கைக் கூட தொடர்ந்து இன்னும் சுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இப்போதுதான் அறிகிறேன். அருமை ஜெ! மிக்க நன்றி!
Deleteஎல்லா ஜோகஸ் ம் ஜூப்பர் அண்ணா
ReplyDeleteஇளவரசி ரசிச்சுச் சிரிச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்!
Deleteஎன்ன இது என் தங்கையோட ப்ளாக் மாறியே நீங்களும் வடிவமைசி இருக்கீன்கள்
ReplyDeleteஇதப்பார்ரா... உன் தங்கைக்கு ப்ளாக் வடிவமைச்சிக் கொடு்த்தது நான்தான்ம்மா. அதான் என் ஸ்டைல் அங்கயும் வந்திட்டுது போல. மாத்திரலாமா கலை?
Deleteசிரிச்சிட்டேன் கணேஷ் சார்...
ReplyDeleteரசிச்சேன்..
சிரித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!
Deleteஎல்லா யோக்குகளும் நன்று சிரித்திட்டேன். ஆகையால் சிறையிலடைக்க முடியாதே!...நல்வாழ்த்து. (3 நாளாக வலை திறக்க முடியவில்லை.)
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
3 நாளாக வலையில் மட்டுமில்ல... ரெண்டு நாளா என் கம்ப்யூட்டரும் ரிப்பேர் ஆயிட்டது. இன்னிக்கு காலைலதான் சரியாச்சு. எதோ நேரம் சரியில்லை போல எனக்கு. ரசித்துச சிரித்தேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது மிக்க மகிழ்வு தருகிறது எனக்கு. உங்களுக்கு என் இதய நன்றி!
Delete