நண்பர் திரு பாலஹனுமான் அவர்களின் வேண்டுகோளின்படி அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளை கடுகு ஸாருக்கு நடத்திய பாராட்டு விழாவில் எழுத்தாளர் சிவசங்கரி நிகழ்த்திய சாவி நினைவுச் சொற்பொழிவு இங்கே:
நான் ஒண்ணு ரெண்டு சிறுகதைகள் எழுதியிருந்த காலம் அது. அப்ப ஒரு நாள் நான் வேலை பாக்கற பேங்க்குக்கு வந்திருந்தார் சாவி ஸார். பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்ங்கறதால பாங்க்ல நுழைஞ்சதும் முன்னாலயே என் சீட் இருக்கும். சாவி ஸாரைப் பாத்து, அறிமுகப்படுத்திக்கிட்டேன். ‘‘.........வோட மகள்தானே நீ, நீ எழுதின கதையெல்லாம் படிச்சேன்’’னாரு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுக்கப்புறம் வந்த தீபாவளிக்கு, தீபாவளி மலருக்கு ஒரு கதை எழுதியனுப்பச் சொல்லி லெட்டர் போட்டிருந்தார். தீபாவளி மலருககெல்லாம் அழைப்பிருந்தாத்தான் கதைகள் எழுத முடியு்ம், வெளியிடுவாங்க. அப்ப அதோட சீரியஸ்னஸ் தெரியாததனால நான் கதை எழுதி அனுப்பல.
அதுககப்புறம் நான் அமெரிக்காவுககுப் போயிட்டு வந்த அனுபவத்தை ஒரு பயணக் கட்டுரையா எழுதிட்டு அவரைப் பார்த்தப்போ... அதை அழகா விளம்பரம் பண்ணி கோபுலு ஸாரோட படங்களோட வெளியிட்டார். புதுசா எழுதற எனக்கு கோபுலு ஸாரோட படங்களோட தொடர் வெளிவர்றது எவ்வளவு பெரிய விஷயம். அதுவும் தினமணி கதிர் சைஸே பெரிசு. சாவி ஸார் அதுல ஃபுல் பேஜ் படம்லாம் வெச்சு, அவ்வளவு அழகா வெளியிட்டார். தொடர் முடிஞ்ச கையோட வானதி அதிபருக்கு போன் பண்ணி, ‘‘நல்ல தொடர் இது. இது புத்தகமா வரணும்’’னு சொல்லி, அந்தப் புத்தகம் அழகா வெளிவந்தது. அப்புறம்தான், ‘‘தீபாவளி மலருக்கு அழைப்பு அனுப்பினப்ப நான் எழுதாம விட்டது தப்பு’’ன்னு சுட்டிக் காட்டினார்.

இந்திரா காந்தியைப் பத்தி பல விஷயங்கள் பத்திரிகைகள்ல வர்றப்பல்லாம் அவங்க குழந்தைங்களுக்கு அம்மாவா, ஒரு மருமகளா வீட்ல எப்படி நடந்துப்பாங்கன்னு பாத்து கட்டுரையா எழுதினா என்னன்னு தோணிச்சு. சாவி ஸார் கிட்டச் சொன்னப்ப, ட்ரை பண்ணேன், நல்லா வரும்னார். நான் டில்லி போனப்ப இந்திரா காந்தி நாட்ல இல்ல... இப்ப மாதிரி அப்பல்லாம் செக்யூரிட்டி அடுத்த தெருவுல நிறுத்த மாட்டாஙக. ஒரு விஸிட்டர்ஸ் பாஸ் கொடுத்துட்டாங்க. நான் எப்ப வேணா பிரதமர் இல்லத்துக்குள்ள போவேன். அவங்க வீட்டு நாயோட விளையாடுவேன். ராஜீவும், சஞ்சயும் அப்ப சின்னப் பசங்க. அந்த வீட்ல எல்லாரோடையும் பேசி நிறைய விஷயங்கள் சேகரிச்சுக்கிட்டேன். இந்திரா காந்தி வந்ததும் விரிவான பேட்டி கொடுத்தாங்க. சாவி ஸார்கிட்ட வந்து சந்தோஷமா நிறைய விஷயம் கிடைச்சிருக்குன்னு சொன்னேன். தொடர் பேட்டியா எழுதச் சொல்லிட்டு, அதுல வெளியிட படங்கள் எடுக்கறதுக்காக மறுபடி என்னை டில்லிக்கு அனுப்பி வெச்சார். எட்டு வாரம் விளம்பரம் பண்ணி அழகா அந்தத் தொடரைக் கொண்டு வந்தார்.
பங்களா தேஷ் உருவான சமயம், சாவி ஸார் போன் பண்ணி, ‘‘சிவசங்கரி! பங்களா தேஷுக்குப் போய் பாத்துட்டு வந்து எழுத மூணு பேருககு அழைப்பு வந்திருக்கு. நான், நீ, இன்னொரு சப் எடிட்டர் போறோம்’’ன்னார். எனக்கு குஷி தாங்கல. குதிச்சுக் கூத்தாடினேன். என்னை கால்மணி நேரம் கூத்தாட விட்டுட்டு மெதுவா சந்திரா சொன்னார், ‘‘நீ போக வேண்டாம்னு நினைக்கிறேன்’’ன்னு. ‘ஏன்’’னு கேட்டேன். ‘‘அங்க இப்பத்தான் கலவரம் நடந்து இன்னும் முழுசா அமைதியாகலை. அவங்க ஆம்பளைங்க. எங்க வேணா தூங்கிப்பாங்க. எப்படி வேணா இயற்கை உபாதைகளை கழிச்சுப்பாங்க. நீ போனா உன்னைப் பாதுகாக்கறதே, வசதி பண்ணித் தர்றதே பெரிய வேலையாயிடும் அவங்களுக்கு. You will be a liability to them, not an asset’’ன்னார். நான் சாவி ஸாருக்கு ஃபோன் பண்ணி, சந்திரா இப்படிச் சொல்றார்ன்னேன். ஒரு நிமிஷம் மெளனமா இருந்துட்டு, ‘‘Chandra is a Gentleman. எனக்கு இது தோணவே இல்லையே. அவர் சொன்னது சரி’’ன்னாரு. எவ்வளவு பெரிய பத்திரிகை ஆசிரியர், கொஞ்சம் கூட ஈகோவே இல்லாம அப்படி எளிமையா இந்தக் கருத்தை ஏத்துககிட்டார்.
தொடர்கதை கேட்டு ஃபோன் பண்ணினா, ‘‘தலைப்பு என்ன சொல்லு’’ன்னு கேப்பார். தலைப்புக் கொடுத்துட்டா, என்ன கதை, எப்படி எழுதப் போறேன்னு எதுவும் கேக்க மாட்டார். அனுப்பற மேட்டரை அப்படியே கம்போஸிங் அனுப்பிடுவார்’’ ‘‘என்ன ஸார் இது, படிச்சுப் பாக்கலையா’’ன்னு கேட்டா, ‘‘உனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கேன். நல்லவிதமா எழுதி உன் பேரைக் காப்பாத்திக்கறது உன்னோட பொறுப்பு. நான் ஏன் படிச்சுப் பாக்கணும்?’’ம்பார்.
நான் ரெண்டாவது தடவையா அமெரிக்கா போயிட்டு வந்தப்ப, அந்த அனுபவங்களை தொடரா எழுதச் சொன்னார். ‘‘நான்தான் ஏற்கனவே போனப்ப, எழுதி, அது புத்தகமாவே வந்துடுச்சே ஸார்’’ன்னேன். ‘‘ஒரு எழுத்தாளனோட பார்வைங்கறது வேற. ஒவ்வொரு தடவை போறப்பவும் வேற வேற விஷயங்கள் கண்ணுல படும். நீ நிதானமா உக்காந்து யோசிச்சுப் பாரு... நிறைய விஷயங்கள் நினைவுககு வரும். எழுதுவே’’ன்னாரு. நான் யோசிச்சப்ப நிறைய சொல்றதுக்கு இருக்குன்னு தெரிஞ்சது. மறுபடி ஒரு பயணக்கட்டுரைத் தொடர் நான் எழுத, அவர் அழகா வெளியிட்டார். அப்படி எழுத்தாளர்களைத் தூண்டி, எழுத வெக்கறவர் அவர்.
நான் விழுப்புரத்துல இருந்த சமயம், அவர் எடிட்டோரியல் டீம்ல இருக்கறவங்களைக் கூட்டிட்டு பல முறை வீட்டுக்கு வந்திருக்கார். சாப்பிட்டுடடு, எடிட்டோரியல் மீட்டிங் கூட பல சமயம் எங்க வீட்லயே நடந்திருக்கு. அப்ப எங்க வீட்ல ஒரு சமையல் பாட்டி இருந்தாங்க. அருமையா சமைப்பாங்க. அப்பப்ப நானும் உதவுவேன். சாவி ஸார் ரசிச்சுச் சாபபிடுவார். ‘‘பாகல்காய் கறின்னா கசப்பா இருககும். உங்க வீட்ல மட்டும்தான் தேனா இனிக்குது சிவசங்கரி’’ன்னு ஸ்லாகிச்சுப் பேசுவார். நல்ல எழுத்து, நல்ல சாப்பாடுன்னு எல்லா விஷயங்கள்லயும் மிகச் சிறந்த ரசிகர் அவர்.
நான் கே.ஜே.சரஸா அவர்கள் கிட்ட முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டிருந்தேன். கல்யாணத்துக்கப்புறம்கூட விட்டிருந்தா தொடர்ந்து டான்ஸ் ஆடி நடனமணியாத்தான் வந்திருப்பேன். எழுத்தாளரா வந்திருக்க மாட்டேன். விடலை. அவங்க நாட்டியப் பள்ளிக்கு பொன் விழா வந்தப்ப, என்னைக கூப்பிட்டு, ‘‘டான்ஸ் பண்றியா’’ன்னு கேட்டாங்க. ‘‘சரி டீச்சர்’’ன்னு சொல்லிட்டேன். அப்ப எனக்கு வயசு 57. மறுபடி டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிட்டு அந்த விழாவுல ஆடினேன். சாவி ஸார் வந்திருந்தார். பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேரன், இன்னும் நிறைய வி.ஐ.பி.ககள் வந்திருந்தாங்க. டான்ஸ் முடிச்சதும் சாவி ஸார் பேசும்போது, ‘‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாட்டுக்கு பாலசரஸ்வதி அபிநயம் பிடிக்கறப்ப, மேடை ஓரத்துல கண்ணன் என் கண்ணுக்குத் தெரிவார். இப்ப சிவசங்கரி அந்தப் பாட்டுக்கு ஆடினப்ப, மேடையோட நாலு மூலைகள்லயும், நாலு கண்ணன் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க’’ன்னு பாராட்டினார். எவ்வளவு பெரிய பாராட்டு எனக்கு- அதுவும், பத்மா சுப்ரமணியம், சித்ரா விஸ்வேஸ்வரன் மாதிரியானவங்க இருககற மேடையில.
ராணிமைந்தன் ‘சாவி-85’ன்னு ஒரு புத்தகம் எழுதியிருந்தார். சாவி ஸாரோட சின்ன வயசுல இருந்து அப்ப வரையிலுமான முழுமையான தொகுப்பு அது. அருமையான புத்தகம். யாராவது தவற விட்டிருந்தா அவசியம் தேடிப் படிச்சுடுங்க. அந்தப் புத்தகத்துக்கு அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில வெளியீட்டு விழா நடந்தது. சாவி ஸார் என்கிட்ட அந்த ஃபங்ஷனை தொகுத்து வழங்கச் சொல்லியிருந்தார். ஃபங்ஷனுககு வந்தப்பவே உடம்பு சரியில்லாம ரொம்ப டயர்டாத்தான் இருந்தார். ‘‘விழாவுல நீங்க பேச வேண்டாம் ஸார். இப்பவே உங்களுக்கு உடம்புக்கு ரொம்ப முடியலை’’ன்னேன். ‘‘இல்ல... நான் பேசியே ஆகணும். நான் பேசறேன்னு என் பேரை அனவுன்ஸ் பண்ணிடு’’ன்னார். சரின்ன அனவுன்ஸ் பண்ணினேன். மேடைக்கு வந்து பேச ஆரம்பிச்சவர் உணர்ச்சிப் பிழம்பா இருந்தார். ‘‘கர்ணனுககு துரியோதனன், மானத்துக்குச் சோதனையான நேரத்துல அஙக தேசத்தைக் கொடுத்து ராஜாவாக்கின மாதிரி, ‘குங்குமம்’ கொடுத்து என்னை ஆசிரியராக்கினவர் கலைஞர்’’ன்னு பேசிட்டே இருந்தவர் மார்பைப் பிடிச்சுககிட்டு, பககத்தில நின்னுட்டிருந்த என் மேல சரிஞ்சுட்டார். வெள்ளை டிரஸ் போட்டுட்டு ஆஜானுபாகுவா இருப்பார் அவர். அவரைக் கடைசியாத் தாங்கிப் பிடிக்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சது. ஆம்புலன்ஸ்ல வெச்சு வேகமா... 20 நிமிஷத்துல ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாங்க. இருந்தாலும் நம்மையெல்லாம் விட்டுட்டு சாவி ஸார் போயிட்டார். இன்னும் பல வருஷம் வாழந்து பல சாதனை பண்ணியிருகக வேண்டியவர் சீககிரமே போயிட்டார்.
ஒரு குரு கிட்டப் படிச்ச ரெண்டு சிஷ்யர்கள் ஊருககுப் புறப்பட்டாங்க. மலை வழியாப் போகணும், இரவாயிட்டா மிருகங்கள் வருமேன்னு பயந்தவங்க கிட்ட ஆளுககொரு மூட்டையக் கொடுத்து போகச் சொன்னார் குரு. வடக்கே ஒருத்தனும் தெற்கே ஒருத்தனுமாப் போனாங்க. வடக்கே போனவன், இருட்டானதும், மிருங்களின் சத்தம் கேட்டதும், குரு ஒரு மூட்டையக் கொடுத்தாரே, அதுல ஆயுதம் இருககும்னு நினைச்சு பிரிச்சுப் பாககறான். பிரிக்கப் பிரிக்க துணியா வருது. ஒண்ணுமே இல்ல. குரு நம்மளை கை விட்டுட்டாரேன்னு பயத்துல மயக்கமாயிட்டான். தெற்கே போனவன் அதே மாதிரி நினைச்சு மூட்டையப் பிரிச்சான். அவனுககும் பிரிக்கப் பிரிக்க ஒண்ணுமேயில்லாம இருந்தது. சரி, குரு நமக்குத் தன்னம்பிக்கையை நிறையக் கொடுத்திருக்காரு. அதனாலதான் மூட்டையில எதுவும் வெக்கலைன்னு புரிஞ்சுககிட்டு, தைரியமா நடகக ஆரம்பிச்சான். ஊர் போய்ச் சேர்ந்துட்டான். சாவி ஸார் அந்த குரு மாதிரி தான். என்னைப் போல எத்தனையோ எழுத்தாளர்களுக்குத் தன்னம்பிக்கைங்கற சொத்தைக் கொடுத்து வளர்த்து விட்டவர். இன்னிக்கும் அதோடதான் நடை போடறோம் நாங்கல்லாம்...!

|
|
Tweet | ||
Tears roll down from my eyes. Became very emotional which could not be controlled. Those days are really good. Only we can read in print media and may not have the opportunity in such a world.
ReplyDeleteஆமாம். சாவி போன்ற ஒரு பத்திரிகையாளரை இனி காண்பது குதிரைக் கொம்புதான மோகன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteயாருக்கு நன்றி சொல்வேன் - உங்களுக்கா, உங்களை இந்த பதிவு செய்யச் சொன்ன பால ஹனுமானுக்கா அல்லது தன் அனுபவங்களை அழகாகச் சொன்ன சிவ சங்கரிக்கா! (இது என்ன கேள்வி, எல்லோருக்கும் தனித் தனியாகவும், சேர்ந்தும் தான்!). நன்றி! - ஜெ.
ReplyDeleteஜெ... நான் பேச்சை குறிப்பு எதுவு்ம் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. நினைவிலிந்து தான் டைப்பினேன். நீங்கள் படித்து, ரசித்ததே போதுமானது. எனக்கு மகிழ்வளிப்பது. அதைவிட நன்றி நவில்தலா பெரிது..?
Deleteஅன்புள்ள கணேஷ்,
Deleteஎனது வேண்டுகோளுக்கிணங்க மிக அழகான இந்தப் பதிவுக்காக எனது மனப்பூர்வமான நன்றி.
Please read as " may not have an opportunity in live in such a world"
ReplyDeleteசிவசங்கரி அவர்களுக்கும், பால ஹனுமான் அவர்களுக்கும், தங்களுக்கும் இந்தப் பதிவிற்காக மிக்க நன்றி! - ஜெ.
ReplyDeleteபடித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
Deleteஅன்புள்ள ஜெ,
Deleteஇந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
நாம் இருவரும் நன்றி கூற வேண்டியது நம் இனிய நண்பர் கணேஷுக்குத் தான்...
மிகவும் ஆழமாகவே சொல்லியிருக்கிறார்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்
ஆழமாக மட்டுமல்ல நண்பரே... மிக உணர்ச்சிகரமாகவும் பேசினார் சிவசங்கரி. எழுத்தில் அதை எங்ஙனம் கொண்டுவர இயலும்? படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteமிக்க நன்றி சார்
ReplyDeleteநேரடியாக வந்திருந்து கேட்க முடியாத
குறையைத் தீர்த்துவைத்தமைக்கு...
தொடர வாழ்த்துக்கள்
ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!
DeleteTha.ma 2
ReplyDeleteசாவி பற்றி சிவசங்கரி உரை ரொம்பவே சுவாரஸ்யம். சாவி படிக்காமல் கம்போசிங்குக்கு அனுப்புவார் என்று இவர் சொல்கிறார்.....சுஜாதா வேறு மாதிரி சொல்லியிருந்தார்...(நிர்வாண நகரம் பற்றிச் சொல்லும்போது என்று ஞாபகம்!)
ReplyDeleteசிவசங்கரி மேடம் சொன்ன இதே கருத்தை பி.கே.பி.யும் என்னிடம் சொல்லியிருக்கிறார் ஸ்ரீராம். சுஜாதா என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லையே... நினைவிருந்தால் டைப்புங்களேன் ப்ளீஸ்...!
Deleteஒரு வேளை சிவசங்கரி கதைன்றதால சாவி அப்படி செய்தாரோ என்னவோ.. கதை விவரம் தலைப்பு என்று எதையும் விடமாட்டார் சாவி என்று படித்திருக்கிறேன் (தெரிந்து கொண்டிருக்கிறேன் :). தன் பத்திரிகையில் வெளிவருவது தனக்குத் தெரியவேண்டும் என்று நினைத்தவர். ரா.கி.ரங்கராஜனும் அப்படித்தான். சாவி எஸ்ஏபி இருவரும் ரொம்ப இந்வால்வ் ஆவாங்க. என்னுடைய எளிய அனுபவம்.
Deleteஇந்த விஷயத்தில் தெளிவான கருத்துச் சொல்ல என்னால முடியலை அப்பா ஸார்! சாவிங்கற மாமனிதர் பற்றி நான் கேள்விப்பட்டதுதான் அதிகம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகக நன்றி!
Deleteகதைத் தலைப்பை மாற்றுவதெல்லாம் அவர் ஆசிரியராகச் செய்யும் கடமை அவ்வளவு தான் - அதில் குற்றம் கண்டால் கதையை சாவிக்கு அனுப்பியிருக்கக் கூடாது என்பதே என் வாதமாக இருக்கும். குமுதத்தில் என் பெயரை 'அப்பாத்துரை' என்று வெளியிட்டார்கள். 'என்ன சார் என் பேரை இப்படி அப்பளமா ஒடச்சிட்டீங்களே?'னு எஸ்ஏபிக்கு எழுதினேன். அதற்குப் பிறகு குமுதத்தில் என் கதை எதுவுமே வெளியாகவில்லை - ராகிராவின் உபதேசம் பெற்றபின் மறுபடி வரத்தொடங்கியது. அதற்குள் எழுத்தில் ஆர்வம் குறைந்து விட்டது. சொல்ல வருவது இதுதான்: பத்திரிகை ஆசிரியருக்கு எல்லா விதத்திலும் உரிமை இருக்கிறது. அதை அங்கீகரிக்க வேண்டும். சும்மா கோவிப்பதில் ஈகோ வளருமே தவிர ஞானம் வளராது (அகால போதி மரம்).
Deleteசாவி என்பவர் மாமனிதர் என்பதில் சந்தேகமே இல்லை கணேஷ். மிக நல்ல மனிதர் என்பதற்கு என்னிடம் இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன. (இல்லிங்க.. நான் எழுதின கதையை பெயர் மாத்தி வெளியிட்டதையோ பாராட்டினதையோ சொல்லலே.. அசல் மனித நேயத்தைக் காட்டிய இரண்டு உதாரணங்கள் :-)
வணக்கம்! எழுத்தாளர் சாவியின் கதை கட்டுரைகளை குங்குமம், சாவியில் தொடர்ந்து படித்து இருக்கிறேன்! அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் சிவசங்கரியின் சொற்பொழிவைத் தந்த தங்களுக்கு நன்றி!
ReplyDeleteரசித்துப் படித்து கருத்திட்ட தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஉள்ளத்தைத் தொட்ட சொற்பொழிவு ! கணேஸ்! சா இராமாநுசம்
ReplyDeleteமகிழ்வளித்த தங்களின் பாராட்டுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா!
Deleteமிகவும் அற்ப்புதம் தன்னம்பிக்கைப் பற்றி சொன்ன கதை பகிர்ந்தமைக்கு நன்றிங்க .
ReplyDeleteபடித்து ரசித்துக் கருத்திட்ட தென்றலுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteசாவி எளிமையான பல எழுத்தாளர்களைத் தோழமையுடன் தூண்டி மேற்செலுத்தும் ஒரு ஆசிரியராக இருந்தவர்.
ReplyDeleteஏற்கனவே இந்த பத்தியை படித்த நினைவு இருப்பினும்,மீள நினைவு படுத்தியதற்கு நன்றி.
சாவி அவர்களைப் பற்றி ஒவ்வொரு எழுத்தாளர் மூலம் கேள்விப்படும் போதெல்லாம் என் பிரமிப்பு கூடிக் கொண்டுதான் செல்கிறது. தாங்கள் இதைப் படித்து ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதய நன்றி!
Deleteஉண்மை தான்! திரு.சாவி அவர்களின் ஊக்குவித்தல் என்பது அசாதாரணமானது. அதை நானும் அனுபவித்திருக்கிறேன். இங்கே எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த போது, எனது ஓவியங்களைப் புகழ்ந்தவர், என் ஓவியங்களின் கை விரல்கள் பலரது ஓவியங்களில் தென்படுவதை விடவும் மிக நளினமாக இருக்கிறது என்று சொல்லி, இப்படிப்பட்ட திறமையை வீணக்காதீர்கள் என்று சொன்னார். நான் செய்திருந்த கீரைக்கூட்டையும் வற்றல் குழம்பையும் ரசித்து சாப்பிட்டு, ' என் அம்மா சமையல் போல இருக்கிறது. அனுபவித்து சாப்பிட்டேன்' என்று பாராட்டியது என் பாக்கியமாக இன்றும் கருதுகிறேன்.
ReplyDeleteசிவசங்கரியின் பேச்சு முழுவதும் அவரது எழுத்தைப்போலவே மிகவும் சுவாரஸ்யமக இருந்தது. அதை இங்கே பதிவிட்டு, எங்களையும் அதை ரசிக்க செய்த உங்களுக்கு இனிய நன்றி!!
சாவி ஸாரைப் பற்றி நான் கேள்விப்பட்டதுதான் நிறைய. அவருடன் பழகியவர்களுடன் நிறையப் பழகியிருககிறேன் நான். அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்த நீங்கள் பாக்கியசாலி! இந்தப் பதிவை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநன்றி என்று சொன்னால் அது மிகை ஆகாது.. ஆனாலும் திரு பாலஹனுமான் சார், உங்களுக்கும் மிக்க நன்றி.. சிவசங்கரி அம்மாவின் உரையை நேரில் கேட்டது போல் இருந்தது.
ReplyDeleteநேரில் கேட்டது போல இருந்தது என்ற சொல்லின் மூலம் எனக்கு எனர்ஜி டானிக் தந்த தோழி ஸவிதாவிற்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteநன்றி ஸவிதா...
Deleteஇது போன்ற இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்ல விருப்பம்
ReplyDeleteஇருந்தும் செல்ல வாய்ப்புக்கள் இல்லாத எங்களைப் போன்றவர்களுக்கு
உங்களது பல பதிவுகள் மூலமாக அந்த இடங்களுக்கே நேரடியாக
கூட்டிச் செல்லும் புண்ணியத்தைத் தேடிக் கொள்கிறீர்கள் நீங்கள்.
மிக்க நன்றி கணேஷ் சார்.
ஓ..! உங்களுக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது என்பது புரிகிறது. இயன்றபோதெல்லாம் இப்படிச் செய்ய நானு்ம் முயல்கிறேன். தஙகளுக்கு என் இதய நன்றி! (ஸார் வேண்டாம், கணேஷ்! போதும்)
Deleteசாவி அவர்களைப்பற்றியும் ஓவியர் கோபுலு அவர்களைப்பற்றியும் நன்கு சாவி கொடுத்து வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள், திருமது சிவசங்கரி அவர்கள்.
ReplyDeleteதிருமதி சிவசங்கரி அவர்களின் பேச்சினை நானும் திரு. ரிஷபன் அவர்களுக்கும் எங்கள் திருச்சி BHEL Conference Hall ஒன்றில் அமர்ந்து சுமார் 1 மணி நேரம் கேட்கும் வாய்ப்பு பெற்றோம். [ஒரு 7-8 ஆண்டுகள் முன்பு]
நல்லதொரு பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
சிவசங்கரி அவர்களின் பேச்சை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்!
Deleteசுவாரஸ்யமான பதிவு.உங்கள் இலக்கிய தாகம் தெரிகின்றது.இப்படிப்போன்ற நிகழ்வுகளுக்கு தவறாது போய் வந்து அதனை பகிர்ந்து புளங்காகிதப்படுகின்றீர்கள்.நன்றி.
ReplyDeleteபடித்து ரசித்த தங்கைக்கு மனம்கனிந்த நன்றி!
Deleteஇப்படி பல உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சியான பல தகவல்கள் நீங்கள் நிறைய கொடுக்கவேண்டும். நாங்கள் எல்லாம் மிஸ் பண்ணுகிற விஷயங்கள் இவை. நன்றி சார்.
ReplyDeleteஇயன்றவரை கொடுக்கிறேன் பாலா. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteமகிழ்வளித்த தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி!
Deleteசாவியைப் பத்தி ஏதாவது சொல்வாருன்னா தன்னைப் பத்திச் சொல்லிட்டு சாவி தன்னைப் பாராட்டினார்னு சொல்றாரே சிவசங்கரி?! இதுவா நினைவு? disappointing.
ReplyDeleteஎன்ன ஸார்... பி.கே.பி.யோட நான் பழகின அனுபவங்களைச் சொல்லித்தானே அவர் குணநலன்களில் உயர்ந்தவர்னு சொல்ல முடியும்? அதுபோலத்தான் சிவசங்கரியம்மாவு்ம் தன்னோட சாவி பழகின நினைவுகளை வெச்சு அவர் சிறப்புகளைச் சொல்லியிருக்காங்க...
Deleteம்ம்ம்.. எதுக்கும் இன்னொரு தடவை படிச்சுப் பார்க்கறேன்.. பாத்துட்டேன்.. வரிக்கு வரி நான் இதை செய்தேன் சாவி பாராட்டினார் நான் இதை செய்தேன் சாவி பாராட்டினார் - இப்படி தன்னைப் பத்தித்தானே சொல்லியிருக்காரு சங்கரி? சாவியைப் பத்தி என்ன சொல்லியிருக்காரு புரியலியே? (நீங்க சொன்ன மாதிரி பழக்கத்துல தெரியுற குணநலன் இது இல்லனு தோணுது... உங்க பிகேபில உங்க சாதனைகளை பிகேபி பாராட்டினாருனு மட்டுமே சொல்லியிருந்தீங்கனா.. ஆனா நீங்க பிகேபி என்பவரின் குணாதிசயங்கள் பத்தி நீங்க நிறைய சொல்லியிருக்கீனனு தோணுது..)
Deleteஇப்ப நான் மறுபடி ஒரு முறை படிச்சுப் பாத்தேன். உங்க கருத்தோட ஒத்துப் போகத்தான் தோணுது. அவங்க சாவி சார் ஆபீஸ்ல ஒர்க் பண்ற ஸ்டைல், மத்த மனுஷஙகளோட அவர் பழகற விதம் இப்படி சாவியோட பக்கங்களைத் தொடாம தன்னை முன்னிலைப்படுத்திப் பேசியிருக்கறதை உணர முடியுது. ஸோ... ஐ அக்ரி வித் யூ!
Deleteஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு ஆசிரியர்களை புரியவைக்கிரீங்க. ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க. நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteரசித்துப் படித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteதன்னம்பிக்கை ஊட்ட குரு சிஷ்யர்கள் கதை அருமை. அப்புறம் சிவசங்கரி அம்மாவின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா. தூயாவுக்கு முதன்முதலா வைத்த ஜாதகப்பெயர் சிவசங்கரிதான்.
ReplyDeleteதூயாவின் ஜாதகப் பெயர் சிவசங்கரி என்பது புதுத் தகவல் எனக்கு. சிவசங்கரியம்மா சொன்ன கதையை ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு என் இதய நன்றி!
Deleteஎனக்குப்பிடித்த எழுத்தாளர்களில் சாவியும் ஒருவர். அவரைப்பற்றி நமக்கு தெரியாத செய்திகளைத் தந்த எழுத்தாளர் சிவசங்கரி அவர்கட்கு நன்றி. பதிவைப் படிக்கும்போது இந்த விழாவில் கலந்துகொள்ளாமல் போனோமே என்று நினைத்தது உண்மை.
ReplyDeleteசிவசங்கரி அவர்களின் பேச்சை பதிவிட்ட உங்களுக்கும் நன்றி.
ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஒரு எழுத்தாளனோட பார்வைங்கறது வேற. ஒவ்வொரு தடவை போறப்பவும் வேற வேற விஷயங்கள் கண்ணுல படும். நீ நிதானமா உக்காந்து யோசிச்சுப் பாரு... நிறைய விஷயங்கள் நினைவுககு வரும். எழுதுவே’’ன்னாரு.
ReplyDeleteஅருமையான பார்வை.. பாராட்டுக்கள்.
ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஅருமையான பகிர்வு.
ReplyDeleteசிவசங்கரி அவர்களின் பேச்சை பதிவிட்ட உங்களுக்கு நன்றி.
மகிழ்வு தந்த உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றி!
Deleteமுடிவில் அருமையான கதையுடன் அருமையான பகிர்வு !
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநல்ல பகிர்வு. சாவி அவர்கள் பற்றி திரு ரவிபிரகாஷ் அவர்கள் நிறைய பதிவிட்டிருக்கிறார். இதுவரை படித்திராவிட்டால் நேரம் இருக்கும்போது படியுங்கள் கணேஷ்.
ReplyDeleteஅவர் இரண்டு வலைப்பூக்கள் வைத்திருக்கிறார். ஒன்று என் டயரி. மற்றொன்று உங்கள் ரசிகன்.
http://vikatandiary.blogspot.in/
http://ungalrasigan.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF
ரவிப்ரகாஷின் வலைப் பூவை நான் படித்திருக்கிறேன் வெங்கட். சிலவற்றில் கருத்துக்களும் பதிந்திருக்கிறேன். இதை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி!
Delete//நான் பேச்சை குறிப்பு எதுவு்ம் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. நினைவிலிந்து தான் டைப்பினேன்.//
ReplyDeleteஉங்களுக்கு மிக நல்ல ஞாபக சக்தி குறிப்பு ஏதும் எழுதாமல் காதில் கேட்டதை மனதில் நிறுத்தி மிக அற்புதமான படைப்பை வழங்கி இருக்கிறீர்கள். உங்களின் திறமையை மனம் திறந்து பாராட்டுகிறேன்.
சாவி,சிவசங்கரி,இந்துமதி,லஷ்மி,பாலகுமாரன் மற்றும் பலர் எனது மனம் கவர்ந்த எழுத்தாளர்கள். நான் அமெரிக்கா வந்த பின் இவர்கள் புத்தகங்களுடன் இருந்த என் உறவும் அறுந்துவிட்டது. இதில் பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. உங்கள் பதிவுகளின் மூலம் மறந்த பல விஷயங்கள் மீண்டும் புதையல் போல எனக்கு கிடைக்க ஆரம்பித்துள்ளன.
நல்ல தரமான தகவல்களை தர எந்த பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிக்கு நான் தலை வணங்கி எனது பாராட்டையும் & வாழ்த்தையும் தெரிவிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்
ரசித்துப் படித்து ஊக்கம் தரும் கருத்தையும் வழங்கிய நண்பனுக்கு இதயம் நிறை நன்றி!
Deleteazhakaana pathivu!
ReplyDeletemikka nantri!
ரசித்துப் படித்த சீனுவுக்கு மனமார்ந்த நன்றி!
Deleteபதிவு நல்லா இருந்துது. சிவசங்கரி என்னோட அபிமான எழுத்தாளர். அவங்களை பத்தின விஷயங்கள் படிக்க சுவாரசியமா இருந்துது.
ReplyDeleteநானும் அப்பாதுரை அவர்கள் சொன்னதை ஆமோதிக்கறேன். சாவி என்னும் மாமனிதரை பத்தி இவங்க பிரமாதமா ஒண்ணும் சொல்லலைன்னுதான் எனக்கும் தோணித்து.
ரொம்பவே சுவாரஸியமான பேச்சு! ரசிச்சுப்படிச்சேன் மூணுமுறை.
ReplyDeleteசிவசங்கரி என் அபிமான எழுத்தாளர். 'என் செல்லங்கள்' ' என்ற அவருடைய தொடர் எனக்கு செல்லங்கள் மேல் கடுகளவு இருந்த கொஞ்ச அன்பை மலை அளவா பெருக்குச்சு என்பதே உண்மை.
என் செல்ல செல்வங்கள் எழுத அவுங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
சென்னையில் நான் இருந்த சமயம் புத்தகம் வெளிவந்ததும் அவுங்களைச் சந்திச்சுச் சொல்லணுமுன்னு தீராத மோகம். அவுங்களுக்குத் தொலை பேசுனப்ப, வீடு மாறும் நிலையில் இருக்கேன். பேக்கர்ஸ் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இன்னும் சில வாரங்களில் தொலை பேசுங்க. சந்திக்கலாமுன்னு சொன்னாங்க.
அதுக்குள்ளே எனக்கு சென்னையை விடவேண்டியதாப்போயிருச்சு:9
எனக்கு அது ரொம்ப ஏமாற்றமே:(
காலம் கனிஞ்சு வரலைன்னுதான் நினைச்சுக்கணும்.
இந்தப்பதிவில் அவுங்க படம் பார்த்ததும் மனசு கரைஞ்சுபோச்சு. அவுங்களுக்கு(ம்) வயசாயிச்சுன்றது இப்போதான் எனக்கு உரைக்குது.
இடுகைக்கு நன்றி கணேஷ்.
நமக்கு இந்த துறை பத்தி எதுவுமே தெரியாது! ஆனா படிக்க ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்தது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete