Sunday, May 13, 2012

மொறுமொறு மிக்ஸர் - 7

Posted by பால கணேஷ் Sunday, May 13, 2012
ஹாய் ப்ரெண்ட்ஸ்! நல்ல சுகம்தானே..! சூப்பர் ஸ்டார் ரஜினியின் பழைய நினைவுகளை வெச்சு ஒரு மினி தொடர் நான் பதிவிட்டதைப் படிச்ச நிறையப் பேரு, ‘இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுச்சே’ன்னு சொல்‌லியிருந்தாங்க. அவங்களுக்காக ரஜினி பத்தி சுவாரஸ்யமா ஏதாவது மேட்டர் கிடைக்குமான்னு தேடினேன். அப்ப ஒரு அருமையான விஷயம் கிடைச்சுது. அது... இதுவரைக்கும் நீங்க பார்த்திருக்காத ரஜினியின் மறுபக்கம்! அதை இந்தப் பதிவின் கடைசியில வெளியிடறேன். இப்ப மிக்ஸரைக் கொறிக்கலாமா?

=====================================

ப்ப ரொம்ப சிம்பிளான சின்னக் கணக்கை நான் சொல்லச் சொல்ல நீங்க பண்ணுவீங்களாம்... நான் அதோட விடைய பதிவோட கடைசியில கரெக்டாச் சொல்லிடுவேனாம். ஓ.கேவா..? பத்துக்குள்ள ஒரு நம்பரை நினைச்சுக்கங்க. இப்ப அந்த நம்பரை அதே நம்பரோட கூட்டுங்க. (உதா: 2 + 2 = 4). கூட்டியாச்சா? வர்ற விடையோட 6 ஐக் கூட்டுங்க. கூட்டினா வர்ற தொகையை பாதியாக்கிக்குங்க. (உதாரணமா 10 வநதா 5ன்னு எழுதிக்கணும்). பாதியாக்கின இந்தத் தொகையிலருந்து நீங்க மனசில நினைச்ச தொகையக் கழிக்கணும். அவ்வளவு தாங்க கணக்கு... என்ன விடை வந்ததுன்னு பதிவோட கடைசில சரிபார்த்துக்கங்க.

=====================================

னக்குச் சில பண்பாடுகளைக் கற்றுக் கொடுத்தது சினிமாத் துறைதான். ஒரு நாள் நடிகர்திலகம் சிவாஜியிடம் சிரித்துக் கொண்டே கேட்டேன். ‘‘எம்.ஜி.ஆர். பாசமானவர், நீங்க கொஞ்சம் கர்வி என்கிறார்களே... உண்மையா?’’ அவரும் சிரித்தார். ‘‘அது வேறொண்ணுமில்ல ராசா... அவர் யார் வந்தாலும் சட்டுன்னு எழுந்து நின்னு வரவேற்பாரு. சுறுசுறுப்பாயிருப்பாரு. நான் கொஞ்சம் சுகவாசி. உட்கார்ந்துக்கிட்டே ‘வாங்க’ம்பேன். அதை அப்படியே மாத்திப் பரப்பிட்டானுங்க பல பேரு...’’

அன்று முதல் நான் அனைவரையும் எழுந்து நின்று வரவேற்க ஆரம்பித்தேன். என்னை எம்.ஜி.ஆர். ஆக்கினார் சிவாஜி!

-‘பாற்கடல்’ நூலில் வைரமுத்து

=====================================

மெளனம் கப்பும் மோகச் சக்கரத்தினுள் கூரிய வாள்களைப் பற்றிய மாயத் தோற்றத்தில் சிதறிடும் அந்திமத் தெரிப்புகளில் வாசனைகளும், நிறப் பிரிகைகளும் கை கோர்த்தபடி எதிர்ப்படுவது வாழ்வியல் தருணம். பூரண ஒழுங்குடன் கூர்தீட்டி வைக்கும் மைவிழிப் பார்வைகளின் ஆழத்தில் துவங்குகிறது உள் பயணம்..!  -என்ன பாக்கறீங்க... போன வாரம் பீச்சுக்குப் போயிருந்தப்ப சுண்டல் வாங்கின பொட்டலத்துல நான் படிச்ச சில வரிகள் இவை. என்ன இலக்கியப் பத்திரிகைலருந்து கிழிச்சானோ... எனக்கு இந்த வரிகள் என்ன சொல்ல வருதுன்னு ஒரு மண்ணும் புரியலை. உங்களுக்கு ஏதாவது புரியுதுங்களா..?

=====================================


=====================================

முஸ்லிம்களுக்குத் தனிநாடுதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து இந்தியாவிலிருந்து பிரித்து பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னா, சுதந்திரமடைந்த ஒரே வருடத்தில் (1948) காலமாகி விட்டார். (நமது தேசத்தந்தை காந்தியும் அதே வருடத்தில் காலமானது ஒரு வினோதம்தான்) ‘பாகிஸ்தானின் தந்தை’ என்று முதலில் கூறப்பட்ட போதே ஜின்னாவுக்கு ‘தாத்தா’ வயது. தமது மோசமான உடல்நிலையை அவர் ஒருபோதும் பொருட்படுத்தியதே இல்லை.

‘‘அவர் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருந்திருந்தால் பாகிஸ்தானின் சரித்திரமே மாறியிருக்கும். இந்தியாவைக் காட்டிலும் சிறந்த ஜனநாயக நாடாக அவர் பாகிஸ்தானை வடிவமைத்திருப்பார்’’ என்று பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் மவுண்ட் பேட்டனிடம் சொன்னார். அதற்கு மவுண்ட் பேட்டன் பதில்: ‘‘அவர் இத்தனை சீக்கிரம் இறந்து விடுவார் என்று தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் கவர்மெண்ட் பாகிஸ்தான் பிரிவினைக்கே சம்மதித்திருக்காது!’’

-‘பாக். ஒரு புதிரின் சரிதம்’ நூலில் பா.ராகவன்

=====================================

ன் சினேகிதர்கள் என்னைப் புதியவர்கள் யாருக்கேனும் அறிமுகம் செய்து வைக்கும்போது அவர்கள், ‘‘ஓ! நீங்கள்தான் ரா.கி.ரங்கராஜனா? உங்கள் ஸிட்னி ஷெல்டன் நாவல்களை நிறையப் படித்திருக்கிறேன்’’ என்பார்கள். இத்தனைக்கும் ‘ஜெனிபர்’, ‘லாரா’, ‘தாரகை’ என்று அவரது மூன்று நாவல்களைத்தான் மொழி பெயர்த்திருக்கிறேன்.

‘தாரகை’ கதையின் மூலம் ஸிட்னி ஷெல்டனின் 'If tomorrow comes’ என்பதாகும். இதில் குறிப்பிடத்தக்க ஒரு அனுபவம் நேர்ந்தது. டானியல் ஸ்டீல் என்ற நாவலாசிரியை எழுதிய 'Star' என்ற நாவலைத்தான் மொழி பெயர்த்து வெளியிடுவதாக தீர்மானித்து குமுதத்தில் ‘தாரகை’ அறிவிப்பும் வெளிவந்துவிட்டது. ஆனால் அந்த அம்மையார் அனுமதி தரவில்லை.

‘‘அதனாலென்ன... ஸிட்னி ஷெல்டனின் வேறொரு நாவலை மொழிபெயர்த்து எழுதுங்கள். அவருடைய கதாநாயகிகள் எப்படியும் நட்சத்திரம் போல் ஜொலிப்பார்கள். தாரகை என்ற தலைப்பு பொருத்தமாகவே இருக்கும்’’ என்றார் ஆசிரியர் எஸ்.ஏ.பி. (நல்லவேளையாக, ‘தாரகை’ அறிவிப்பில் டானியல் ஸ்டீலின் பெயரைப் போடாமலிருந்ததால் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை)

-‘எங்கிருந்து வருகுதுவோ’ நூலில் ரா.கி.ரங்கராஜன்.

=====================================

ரி... இப்ப கணக்கோட விடையச் சொல்றேன். உங்களுக்கு வந்திருக்கிற விடை : 3  எப்பூடி? சரியாச் சொல்லிட்டனா? 10க்குள்ள வேற ஏதாவது நம்பரை நினைச்சுட்டு ட்ரை பண்ணிப் பாருங்க. அப்பவும்‌ தனு‌ஷோட சமீபத்திய படம்தான் விடையா வரும்!

=====================================

மக்கா... நல்லாப் பாத்துக்கங்க... ரஜினியின் மறுபக்கத்தை:


82 comments:

  1. அனைத்தும் சுவாரஸ்யம்:)!

    எம்.ஜி.ஆரிடம் இருந்த பல நல்ல பண்புகளில் இதுவும் ஒன்று போலும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வியக்க வைக்கும் பல நற்பண்புகளை தனக்குச் சொந்தமாக்கி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். சுவாரஸ்யம் என்றுகூறி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  2. ரஜினியோட மறுபக்கம் எதிர்பார்த்த மாதிரியே...! :))
    -கணக்கோட என்னிக்குமே எனக்குப் பிணக்குதான்.... ஆனா எனக்கும் மூணுதான் வந்தது!!
    -ரா.கி.ர. புக்...ஆஹா.. சுவாரஸ்யமா இருக்குமே...
    -பாரா எழுதிய வரிகளின் பகிர்வு=சுவாரஸ்யம்.
    -பழைய ஜோக்.... :))
    -சிவாஜி எம்ஜிஆர் பற்றி வைரமுத்து சொன்னது வைரவரிகள்...
    மொத்தத்தில் மிக்சர் சுவை!

    ReplyDelete
    Replies
    1. ரஜினியின் மறுபக்கத்தை முன்பே எதிர்பார்த்தீர்கள் எனில் நீங்கள உஸ்தாத்! நான் மட்டும் கணக்குல புலியா என்ன? 10க்குள்ள ஒரு நம்பர்ங்கறதாலதான் இதை தொகுத்தேன். மிக்ஸர் சுவை என்று பாராட்டியதற்கு என் இதய நன்றி!

      Delete
  3. Replies
    1. அருமை என்று ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே!

      Delete
  4. மிக்சர் றொம்ப சூப்பர் அங்கிள்.
    எனக்கும் கணக்குக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது.
    ரஜியி சார் என்னா உங்களுக்கு றொம்ப பிரியமா? அவரின் குணங்களை ஊங்கள் எழுத்து மூலம் அறிந்து கொண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. ரஜினியை எல்லோருக்கும் பிடிக்கும்தானே எஸ்தர்! மிக்ஸர் சூப்பர் என்றதில் மகிழ்ந்து உனக்கு என் இதய நன்றிம்மா!

      Delete
  5. ஜின்னா சொன்னா.. என்னாவோ போங்க. நானும் ஒண்ணு சொல்லிடறேன். பாகிஸ்தானும் இந்தியாவும் ஒண்ணாகும் நாளை இன்னும் நூறு வருடங்களுக்குள் பார்க்கலாம்.
    ஜோக் அட்டகாசம்.

    ReplyDelete
    Replies
    1. நூறு வருஷமா... நான் எங்க பாக்கப் ‌போறேன்... ஜோக்கை ரசிச்ச உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
    2. பிரிஞ்சதையும் பார்க்கலே; சேரப்போறதையும் பார்க்க முடியாது.

      சைனா சீக்கிரமே உடைந்தது என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைவது ஒரு சாத்தியம். அனைத்து இஸ்லாம் நாடுகளும் இணையும் சாத்தியமும் உண்டு.

      Delete
  6. மொறு மொறு மிக்ஸரில் உங்கள் அருமையான ரசனை தெரிகிறது. கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. என் ரசனையைப் பாராட்டி மகிழ்வளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  7. மிக்ஸர் மொறுமொறுன்னு இருக்கு. ஜோக் நல்லாயிருந்தது. ரஜினியைப் பற்றி ஏதாச்சு புதுசா தெரிஞ்சுக்கலாம்னா இப்படி பண்ணிட்டிங்களே. :)

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சின்ன கிம்மிக்žஸ்தானே சுவாரஸ்யம்! ஏமாத்தாம அடுத்த மிக்ஸர்ல புதுசா ஏதாவது விஷயம் ரஜினியைப் பத்திக் குடுத்துடறேன் ஃப்ரெண்ட். ஓ.கே.வா? மிக்ஸர் மொறுமொறுன்னு இருந்துச்சுன்னு பாராட்டின உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  8. சிவாஜியை பற்றிய உண்மை வைரமுத்தவால் உடைக்கப்பட்டது!! நல்ல செய்தி!

    ReplyDelete
    Replies
    1. வைரமுத்து இதை உடைச்சு பல வருஷமாச்சு சுரேஷ். இப்ப நான் சொல்லியிருக்கேன். அவ்‌ளவ்தான்! உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி நண்பா!

      Delete
  9. ரஜினியின் மறுபக்கமும் இலக்கிய வாசிப்பும் சுவாரசியம் என்றால், துணுக்கு செம கடி, கவிதை அபாரம, கணக்கு புதுமை.

    //அவர் இத்தனை சீக்கிரம் இறந்து விடுவார் என்று தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் கவர்மெண்ட் பாகிஸ்தான் பிரிவினைக்கே சம்மதித்திருக்காது! //

    பா ராகவன் இந்தப் புத்தகத்தை அருமையாக எழுதியிருப்பார். ஆர் எஸ் எஸ் பற்றி எழுதிய மதம் மதம் மற்றும் மதம் புத்தகமும் அருமையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பா.ரா. எழுதின பிற அருமையான புத்தகங்கள் நிலமெல்லாம் ரத்தம் மற்றும் காஷ்மீர். எல்லாமே நல்லா இருக்கும். மிக்ஸரை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த ந்ன்றி!

      Delete
  10. மிக்சர் சுவையோ சுவை.
    கணக்கு சிம்பிள். நான் நினைத்துக் கொள்வது எக்ஸ். அதோடு அதைக் கூட்டினால், 2x. அதோடு ஆறு கூட்டினால், (2x+6) அதில் பாதி= 1x+3 இதிலிருந்து எக்சை கழித்துவிட்டால், x+3-x = 3.
    ரஜினியின் மறுபக்கத்தில் உங்கள் குறும்பு தெரிகிறது!

    ReplyDelete
  11. உங்களுக்கு இது சிம்பிளான கணக்குதான். ஆனால் என்னைப் போன்ற கணக்குப் பிணக்கிகளுக்கு புதுசாய்த் தெரிஞ்சது. அதனாலதான் போட்டேன். ரஜினி மேட்டரை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
  12. பிரபலங்களின் கடந்த கால நிகழ்வுகளை சுவாரஸ்யம் பட பகிர்ந்திருப்பது அருமை..

    குடும்பத்துடன் (?) பீச்சுக்கு போய் விட்டு இப்படி சுண்டல் பொட்டலம்,முறுக்கு சுற்றி வந்த பொட்டலத்தையெல்லாம் பொறுமையாக படிக்க விட்டு அதை மிகப்பொறுமையாக சகித்துக்கொண்ட சரிதா மன்னிக்கு ஒரு சல்யூட்.

    சரிதா மணாளருக்கும் வாசிப்பின் ஆர்வத்திற்காக ஒரு சல்யூட்.

    //மக்கா... நல்லாப் பாத்துக்கங்க... ரஜினியின் மறுபக்கத்தை:
    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......:)

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நீண்ட நாளாக என்னிடம் உள்ள இந்த கடலை, சுண்டல் பொட்டல பேப்பர்கள் படிக்கும் வழக்கத்தை என் அம்மா, மனைவி அனைவருமே சகித்துக் கொண்டிருப்பதற்காகப் பாராட்ட வேண்டும்தான். நான் செய்யத் தவறியதை செய்த ஸாதிகாவிற்கு இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  13. சுண்டல் கட்டிவரும் பேப்பரைக்கூட விடாம படிக்கும் ஆர்வம் உ ள்ளவர்தானா நீங்களும் நாம எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ?

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்களும் நம்ம டைப்புங்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. மிக்க நன்றிம்மா!

      Delete
  14. ஹா ஹா .., தல ரூம் போட்டு யோசிச்சீங்களோ "ரஜினியின் மறுபக்கத்திற்க்கு" ?

    ReplyDelete
    Replies
    1. அதுவா வருது நண்பா...! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  15. மொறு மொறு மிக்ஸர் வழக்கம்போல் கரகரப்பாய் இருந்தது. மிக்ஸரில் தந்த அனைத்து தகவல்களுமே அருமை.

    பீச்சுக்குப் போயிருந்தபோது சுண்டல் வாங்கின பொட்டலத்துல இருந்த சில வரிகளைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். கவிஞர் கண்ணதாசன் கூட ,இப்படித்தான் கடலை வாங்கியபோது தந்த தாளில் இருந்த ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? என்ற இராமசந்திர கவிராயர் எழுதிய வரிகளைப் படித்ததும் எழுதிய பாடல்தான்,’அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான்’ என்று படித்ததாக நினைவு.

    நல்ல தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அப்ப... கண்ணதாசன் கூட என்னை மாதிரியான ஆசாமிதானா? ரொம்ப சந்தோஷம் நண்பரே தகவலுக்கு! மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  16. மக்கா... நல்லாப் பாத்துக்கங்க... ரஜினியின் மறுபக்கத்தை:
    >>>
    ரஜினியின் மறுபக்கத்தை பார்க்க வச்சதுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... இதுவரைக்கும் நீ பாத்ததில்லை தானேம்மா?

      Delete
  17. மிக்சேர் நல்ல இருக்குங்க அண்ணா ...நிறைய புது விடயம் தெரிஞ்சிக் கிட்டேன் ..பாக்கிஸ்தான் சரித்திரம்ஆச்சரியம் கொல்லுது

    ReplyDelete
    Replies
    1. அந்தப் புத்தகத்தை முழுசாப் படிச்சா இன்னும் பல ஆச்சரியம் காத்திருக்கு கலைமா! மிக்ஸரை ரசிச்சுச் சாப்பிட்டதுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  18. இனிய அன்னையர் தின வாழ்த்துகளை என் சார்பா அம்மாக்கிட்ட சொல்லிடுங்கண்ணா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட தங்கையின் வாழ்த்துக்களை அம்மாகிட்ட சேர்த்துடறேன்.

      Delete
  19. ஃப்ரெண்ட்....ரஜனின்ர பின்பக்கத்தைக் காட்டி உங்கட மறுபக்கத்தையும் காட்டிப்போட்டீங்கள்.ஏன் ஞாயித்துக்கிழமையும் அதுவுமா இப்பிடிக் கொலவெறி.ஏமாத்திப்போட்டீங்கள்.சொக்லேட் இல்ல இண்டைக்கு !

    சிவாஜி,எம்.ஜி.ஆர் .... அந்தப் பெரியவர்களின் மரியாதையும் அந்தக் குணங்களும் இப்போ தேடித்தான் பிடிக்கவேணும் !

    கவிதை....காதல் ரசம்.ஆழத்தெரிந்தவர்கள் தெளிவு படுத்தினால் சந்தோஷப்படுவேன்.எனக்கு விளங்குது.சொல்லத் தெரியேல்ல !

    ReplyDelete
    Replies
    1. ரஜினியின் மறுபக்கம் சும்மா ஒரு குறும்புதானே... கோபிக்காதீ்கோ! கரெக்டாச் சொன்னீங்க ஃப்ரெண்ட்! அந்த மாதிரி பண்பாடு நிறைந்த பெரியவர்கள் இப்போல்லாம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு!

      Delete
  20. காலேலயே கணக்குப் போட வச்சிட்டீங்களே ஃப்ரெண்ட்.ஆனா கணக்குச் சரியா வந்திட்டுது.அதனால திட்டாம வேலைக்குப் போறேன் !

    ReplyDelete
    Replies
    1. கணக்குச் சரியா வரலைன்னாலும் என்னைத் திட்ட மனசு வராது உங்களுக்கு. அதனால எனக்கு பயமில்லே! மிக்க நன்றி ஃப்ரெண்ட்!

      Delete
  21. எல்லாமே நல்ல சிறப்பான சுவை..சுவைத்தேன்

    மற்றும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சுவைத்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மற்றும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

      Delete
  22. பாற்கடல் நூலில் சொல்லிய வைரமுத்துவின் பார்வை இப்போதைய சினிமாவில் பார்க்க முடியாது கலையை நேசித்தவர்கள் அவர்கள் ஆனால் காசு பார்க்கும் தொழிலாக் பார்க்க வில்லை அதனால் தான் அவர்கள் உயர்ந்து இருக்குறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கலையை நேசித்தவர்கள் என்பதைவிட மனித நேயம் மிக்கவர்களாக இருந்தார்கள் என்றால் மிகையில்லை. அதனால்தான் அவர்கள் உயர்ந்தவர்கள்.

      Delete
  23. அந்த நாய் ஜோக்ஸ் ரசித்தேன் இப்போது அப்படிப்படங்கள் சொல்லும் சேதி நாளிதலில் பார்க்க முடியாது தாயக்ததில் சிரித்திரன் வீரகேசரி என்பன ஆரம்பத்தில் இப்படி ஓவியம் பேசியது இப்போது......

    ReplyDelete
    Replies
    1. ஓ...! அந்த நினைவுகளை கிளப்பி விட்டுட்டுதா இது? இந்த மாதிரி இன்னும் ஏழெட்டு ஜோக்ஸ் கைவசம் இருக்கு. அதை ஒரு தனிப் பதிவா போட்ரலாம் போலருக்கே நேசன்..!

      Delete
  24. எனக்கு கணனியில் இருக்கும் நேரம் குறைவு அண்ணா நான் ஐபோன் மூலம் தான் பலரிடம் போகும் சாமானியன் அதனால் தான் உங்க பதிவுகள் படித்தாலும் பின்னூட்டம் போட முடியாதநிலை! நிரூ தங்கச்சிக்கும் அதே நிலைதான் கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா!

    ReplyDelete
    Replies
    1. தம்பீ நேசன்! மொபைல் மூலம் நண்பர் அ.குருவை பின்னூட்டமிடச் சொல்லிப் பார்த்தேன். சரியாய் வருகிறது என்கிறார். உங்களின் போனில் ஏன் வரவில்லை என்பதுதான் எனக்குப் புதிராக இருக்கிறது. இதை நான் தளத்தில் சரி பண்ணணுமா, இல்லை உங்கள் மொபைலில் செட்டிங்ஸ் சரி பண்ணணுமான்னு தெரியலை. நண்பர்கள்ட்ட கேட்டிருக்கேன். சீக்கிரம் சரி பண்ணிடறேன் சரியா. மிக்க நன்றி!

      Delete
  25. ரஜினியின் மறுபக்கத்தையும் பார்த்தேன் . சுக வாசியா இருந்தவரையும் பார்த்தேன் வழக்கம் போல அருமை .

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த தென்றலுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  26. அட இன்னாத்துக்கு கன்னாவியப் படிச்சினுகிறே.. சுண்டலத் துன்னு நைனானு அர்த்தம்.. பிரிதா?

    ReplyDelete
    Replies
    1. இப்ப கரீக்கட்டாப் பிரியிது நைனா!

      Delete
  27. மிக்‌ஸர் சுவைத்தது..கணக்கு போட்டுப்பார்த்தேன் விடை வந்தது.குறிப்புகள் சிறப்பு..ரஜினியின் மறுபக்கம் பிரமாதம்...

    ReplyDelete
    Replies
    1. அனைத்து அம்சங்களையும் ரசித்திருக்கிறீர்கள் கவிஞரே... உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி!

      Delete
  28. இனிய அன்னையர் தின வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுக்கு நிகராகச் சொல்ல அதைவிட உயர்ந்த எதுவும் அகிலத்தில் இல்லை. உங்களுக்கும் மகிழ்வுடன் கூடி என் அன்னையதின நல்வாழ்த்துக்கள்!

      Delete
  29. மிக்ஸர் மொறுமொறுன்னு இருக்கு. ஜோக் நல்லாயிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த நண்பருக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  30. Replies
    1. ஹி.... ஹி.... சும்மா ஜாலிக்குதேங்..!

      Delete
  31. இந்த மிக்ஸரில் குறும்பின் கலவை கொஞ்சம் அதிகம்தான். ரஜினியின் மறுபக்கம் யாருமே எதிர்பாராதது.

    சுண்டல் தாள் வாக்கியத்தைப் பிரிச்சிப் போட்டிருந்தால் புரிய வாய்ப்பிருக்கிறது, இப்படி.... (அட, கவிதைன்னு சொல்லலாம்ல!)

    மெளனம் கப்பும் மோகச் சக்கரத்தினுள்
    கூரிய வாள்களைப் பற்றிய மாயத் தோற்றத்தில்
    சிதறிடும் அந்திமத் தெரிப்புகளில்
    வாசனைகளும், நிறப் பிரிகைகளும்
    கை கோர்த்தபடி எதிர்ப்படுவது
    வாழ்வியல் தருணம்.
    பூரண ஒழுங்குடன் கூர்தீட்டி வைக்கும்
    மைவிழிப் பார்வைகளின்
    ஆழத்தில் துவங்குகிறது உள் பயணம்..!

    இது எப்படி இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. அட... இப்பப் படிக்கறதுக்கு கவிதை மாதிரித்தான் இருக்கு கீதா. புதுக் கோணத்துல காட்டி அசத்திட்டீங்க... மிக்ஸரின் குறும்பினை ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  32. வசந்தமே வருக வலைச்சரம்

    ReplyDelete
  33. நல்ல சுவையான மொறு மொறு மிக்சர்.
    //ரஜினியின் மறுபக்கம்

    ஏன் இந்த கொலவெறி?

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... உங்கள மாதிரி சீனியர்ஸ் கிட்டருந்து கத்துக்கிட்டதுதான் இந்தக் கொலவெறி ஐடியாக்கள் பாலா... சுவையான மிக்ஸர் என்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  34. எல்லா தகவலக்ளும் அருமை கணேஷ் அண்ணா! அந்த ஜோக் செம காமெடி! சிரிச்சுட்டேன்! அப்புறம் ரஜினியின் மறு பக்கம்........ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    ReplyDelete
    Replies
    1. சமீபத்துல உங்கள் தளத்தை படிச்சு ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன். முதல் வருகையா வந்து ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  35. The other side of Rajinikant - too much - will be very very cautious while reading your article especially if there is a build up in first few lines.

    ReplyDelete
    Replies
    1. அடாடா... உஷாராயிட்டீங்களே மோகன்.... இனிமே வேற ட்ரிக் தான் கண்டுபிடிக்கணும் போல...

      Delete
  36. மிக சுவையான மிக்சர். எல்லாரும் அருமையாகக் கருத்து கூறியுள்ளார்கள். வாழ்வியல் தருணங்கள் மிக அழகானது. கூர்மையாக அதை எதிர் கொள்ளணும்! நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சுவையான மிக்ஸர் என்று ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  37. Gentleman is the one who learns good habits and manners from different people who comes across him and vice versa.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்! மற்றவர்களிடமிருந்து நல்ல பழக்கங்களை தன்னிடம் ஸ்வீகரித்துக் கொள்பவர்கள் சிறந்தவர்கள்தான். நற்கருத்திட்ட உஙகளுக்கு உளம் கனிந்த நன்றி.

      Delete
  38. Replies
    1. சுருக்கமாக அழகாக மகிழ்வூட்டும் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  39. வரவர குறும்பு தாங்கல!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... குறும்பை ரசித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஐயா!

      Delete
  40. ம்ம்ம் அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்‌நத நன்றி!

      Delete
  41. Sir மிக்ச்சர் சூப்பர்!
    ரஜினியோட மறுக்கம் எதிர்பார்க்காத ஒன்னு!
    காமெடி செம சிரிச்சுட்டேன்!
    கீதமஞ்சரி அக்கா சொன்ன மாதிரி வரிகளை
    பிரிச்சு போட்டா கொஞ்சம் அர்த்தம் புரியுது!
    ரொம்ப enjoy பண்ணேன்!

    ReplyDelete
    Replies
    1. வாம்மா யுவராணி! ஒவ்வொரு பகுதியையும் பாராட்டி ரொம்ப என்ஜாய் பண்ணினேன்னு சொல்லி எனக்கு எனர்ஜியைக் கூட்டியிருக்கம்மா. என்னுடைய உளம்கனிந்த நன்றி!

      Delete
  42. இன்னொரு ஜின்னா பொறந்து வந்தாலும் பாக்கிஸ்தான் போக்கினை மாற்ற முடியாது. இரு நாடுகளும் அடித்துக்கொள்ளட்டும் என்றுதான் பிரித்துவிட்டு போனார்கள் ஆங்கிலேயர்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube