கிருத யுகத்தில் வீக்ஷாரண்யம் என்ற அடர்வனத்தில் ‘ஹிருத்தாபநாசினி’ என்ற தீர்த்தக்குளம் ஒன்று அமைந்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் கங்கை முதலான பல தீர்த்தங்கள் இந்தக் குளத்து நீரோடு கலப்பதாக ஐதீகம். இந்த உண்மையை அறிந்திருந்த முனிவர்களும் தேவர்களும தை அமாவாசையன்று இக்குளத்திற்கு வந்து நீராடிச் செல்வார்கள். தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்த சாலிஹோத்ரர் என்ற அந்தணர், ஒரு தை அமாவாசையன்று இங்கு வந்தடைந்து முனிவர்களும் தேவர்களும் நீராடும் காட்சியைக் கண்டு விவரங்களை விசாரித்தறிந்தார். ‘இப்பேர்ப்பட்ட குளத்தி்ன அருகில் இறைவன் இல்லாதிருப்பதா?’ என்ற எண்ணம் அவருள் எழுந்தது.
ஓராண்டு காலம் ஒரு கணமும் பிறழாமல் திருமாலை நோக்கித் தவம் செய்வது என்று தீர்மானித்தார். அதற்கு முன் ஒரு வேளை மட்டும் ஆகாரம் உண்ணலாம் என்று அன்னம் தயாரித்தார் அதிதிக்கு உணவளித்து விட்டு உண்ணுதல் மரபென்பதால் காத்திருந்தார். கண்கள் பஞ்சடைந்து களைப்புடன் காணப்பட்ட ஒரு முதியவர் வந்து யாசகம் கேட்க, மகிழ்வுடன் அவருடைய பங்கைப் படைத்தார். அவர் பசி அடங்கவில்லை. ‘இன்னும் கிடைக்குமா?’ என்று கேட்டார். தன் பங்கையும் சாலிஹோத்ரர் தர, அதை உண்டு திருப்தியுடன் சென்றார் முதியவர். வயிறு வாடினாலும் மன நிறைவுடன் சாலிஹோத்ரர் தவத்தில் ஆழ்ந்தார்.

அடுத்த தை அமாவாசையன்று தேவர்களும், ரிஷிகளும் குளத் தில் நீராட வர, கண் விழித்த சாலிஹோத்ரர் ஓராண்டு ஆகி விட்டதை உணர்ந்தார். குளத்தில் நீராடி, ஆண்டவனைத் தொழுது அன்னம் தயாரித்தார். வழக்கம்போல் அதிதிக்குப் பங்கு பிரித்தார். ஆச்சரியமாக, சென்ற ஆண்டு வந்த அதே முதியவர் இன்னும் உடல் தளர்வுற்று பசியுடன் வந்து யாசகம் கேட்டார். சாலிஹோத்ரர் அவர் பாதத்தைக் கழுவிப் பணிந்து அன்னம் படைத்தார். அதிதிக்குரிய பங்கை உண்டபின்னும் அவர் பசி அடங்கவில்லை என்பதைக் குறிப்பாலுணர்ந்த சாலிஹோத்ரர், தன் பங்கையும் அவர் இலையில் பரிமாறினார். அதையும் உண்ட முதியவர் கண்ணில் ஒளி பிறந்தது. ‘‘ஐயா, பசி தீர்ந்தது. உண்ட மயக்கத்தால் உறக்கம் பிடித்தாட்டுகிறது. படுக்கக் கொஞ்சம் இடம் வேண்டும். எவ்வுள் படுப்பது?’’ என்று வினவினார்.
சாலிஹோத்ரர் தன் பர்ணசாலையைக் காட்ட, முதியவர் அங்கு படுத்தார். கடுங்குளிரினால் அவர் உடல் நடுங்குவதைக் கண்ட சாலிஹோத்ரர் தான் ஆடையாக அணிந்திருந்த மரவுரியை முதியவருக்குப் போர்த்தி விட்டு வெளியே வந்தார். அதன்பின் நிகழ்ந்தது அதிசயம்! துந்துபி வாத்யங்கள் முழங்க, கந்தர்வர்கள் கானமிசைக்க, அப்சரஸ்கள் நடனமிட, சாலிஹோத்ரரின் முன்பாக திருமால் திவ்ய சரீரத்துடன் ஆடை ஆபரணங்கள் அணிந்தவராய் காட்சியளித்தார். ‘‘முதியவராக வந்து உம்மிடம் யாசகம் பெற்றது யாமே. உனக்கு என்ன வேண்டும் சாலிஹோத்ரா?’’ என்று வினவினார்.
சாலிஹோத்ரர் ஆனந்தக் கண்ணீருடன் மண்டியிட்டு, ‘‘ஐயனே, எனக்கு எதுவும் வேண்டாம். உலக மக்களை உய்விக்க நீ இங்கேயே எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும். இக்குளத்தில் நீராடி உன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இடர் எதுவும் நேராமல் காத்தருள வேண்டும்’’ என்று வேண்டினார். ‘‘உமக்காக வேண்டாமல் உலக மக்களுக்காக வேண்டினீரே... உமது சிரசின் மீது ஆணையாக இனி எக்காலமும் நான் இங்கே கிடந்த கோலத்தில் காட்சி தருவேன். என்னைத் தரிசிக்கும் மக்களின் பிணிகளை அகற்றி, அவர்தம் பாவங்களைப் போக்கி அருள்பாலிப்பேன்’’ என்று அருளினார்.
நாராயணன் விரும்பிப் படுத்த பர்ணசாலையே கர்ப்பக்கிரகமாய் .உருவெடுக்க பல்லவர் - சோழர்கள் காலத்தில் அங்கே ஆகம விதிப்படி ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. கோயிலின் நுழைவாயிலின் மேல் ஐந்தடுக்கில் கோபுரம் அமைந்தது. அங்கே குடி கொண்ட பெருமாள் ஆழ்வார்கள் காலத்திலிருந்த ‘வீரராகவப் பெருமாள்’ என்று அழைக்கப்படலானார். தன்னை தரிசிக்கும் பக்தர்களின் பிணிகளைப் போக்கும் சக்தி படைத்தவராக விளங்கவதால் ‘பிணிதீர்த்த பெருமாள்’ என்றும் ‘வைத்திய வீரராகவப் பெருமாள்’ என்றும் வழங்கலாயின.
பெருமாள் ‘எங்கே படுப்பது?’ என்று கேட்கும் விதமாக ‘எவ்வுள்?’ என்று வினவியதால் ‘திருஎவ்வுளூர்’ என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று ‘திருவள்ளூர்’ என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயத்தில் நுழைந்தவுடன் விஸ்தாரமான ஒரு முற்றம், மையத்தில் பலி பீடம், கொடிமரம். அதைக் கடந்து உட்சென்றால் கோயில் கொண்ட பெருமாளின் கூடம். இரு பதினாறு கால் மண்டபங்களுக்கிடையில் அழகாய் அமைந்த கருடன் சன்னதி. கணமும் கண்ணிமைக்காமல் பெருமாளை தரிசித்தபடி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடாழ்வாருக்கு நேரெதிரே கிழக்கு திசை நோக்கி வீரராகவப் பெருமாளின் கர்ப்பக்கிரகம்.

அரவணையில் கிடந்த கோலத்தில் பெருமாள் தென்திசையில் தலையும், வடதிசையில் திருவடியும் வைத்து, இடக்கரம் அவர் நாபியில் உதித்த நான்முனுக்கு பிரவண மந்திரத்தை உபதேசிக்க, வலக்கரம் சாலி ஹோத்ரரின் தலை மீது வலக்கரம் வைத்து சயனித்த திருககோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னதியில் உட்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் லக்ஷ்மி நரசிம்மரின் சன்னதி. வடமேற்கு மூலையில் உள்ள சன்னதியில் மார்பில் விஜயவல்லி துலங்க, பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.
வெளிப்பிரகாரத்தில் ஆழ்வார்களுக்கான இரண்டு மணி மண்டபங்கள். அதையடுத்து வசுமதித் தாயார் என்றும் கனகவல்லித் தாயார் என்றும் போற்றப்படும் தாயார் சன்னதி. கனகவல்லித் தாயார் அமைதியும், கருணையும் துலங்கும் முகத்துடன் காட்சி தருகிறாள். ஸ்ரீ வேதாந்த தேசிகர் இந்தத் தாயாரின் பேரில் 30 ஸ்லோகங்கள் கொண்ட ‘ஸ்ரீ ஸ்துதி’ பாடியிருக்கிறார். தாயார் சன்னதிக்கு நேர் பின்புறம் தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் சன்னதியில் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இளையபெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருடன் காட்சியளிக்கிறார். அடுத்தது ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி. பாமா, ருக்மணி சகிதம் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறான் புருஷோத்தமன்.

பிரகாரத்தின் வடக்கு திசையில் ஒரு சிறு மண்டபம். அதில் சுவாமியின் கல் பாதங்கள். ‘உடல் உபாதைகள் நீங்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை யுடன் வருபவர்கள் இந்த கல் பாதத்தில் மிளகு கலந்த உப்பு சமர்ப்பிக்கிறார்கள். அவர்களின் பிணி நீக்கி அருள்கிறார் வைத்திய வீரராகவப் பெருமாள். ஆலய தரிசனம் முடித்து வெளிவந்தால் ஆலயத்தின் வலதுபுறம் ஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.
தை அமாவாசையன்று வீரராகவப் பெருமாள் சாலிஹோத்ர மகரிஷிக்கு காட்சியளித்ததால் ஒவ்வொரு தை அமாவாசையன்றும் கணக்கில்லா பக்தர்கள் திரண்டு வந்து, குளத்தில் நீராடி, வெல்லம் கரைத்து பால் ஊற்றி, பெருமாளைத் தரிசித்து உப்பு மிளகு சமர்ப்பிதது அவனருள் பெறுகிறார்கள். சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் திருவள்ளூருக்கு நீங்களும் ஒரு முறை சென்று வைத்திய வீரராகவப் பெருமாளைத் தரிசித்து அவனருக்குப் பாத்திரமாகுங்கள்!

மேய்ச்சல் மைதானம் செல்ல குறுக்கு வழி!
|
|
Tweet | ||
இதுவரை பார்க்காத கோவில்
ReplyDeleteஅறியாத சரித்திரம்
அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
முதல் நபராய் வந்து, இந்த ஆன்மீக விஷயத்தை ரசித்து, வாழ்த்துக்கள் சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
DeleteTha.ma 2
ReplyDeleteஎங்களுக்கு வைத்திய வீரராகவர் தான் அண்மைத்தெய்வம்.
ReplyDeleteவயிற்றுவலிக்கு உடனே வேண்டி மருந்தும் கிடைத்துவிடும் ராகவன் பெயர் சொன்னால். நன்றி கணேஷ்.
ஆஹா... உலகளந்த உத்தமனின் பக்தைதானா நீங்களும்! ரசித்துப் படித்து நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஅருமை!
ReplyDeleteஆன்மீகத்துலேயும் கலக்குறீங்க!!!!!
ரெண்டரை ஆண்டுகளுக்கு முன் துளசிதளத்தில் வந்த பதிவின் சுட்டி.
நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.
http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post.html
எல்லா ஏரியாவுலயும் ரவுண்டு கட்டி அடிக்கற நீங்க பாராட்டறப்ப அது தனி உற்சாகம் தருது டீச்சர். இந்த வீரராகவப் பெருமாளைப் பத்தி நகைச்சுவை கலந்துகூட சொல்ல முடியும்னு உங்க பதிவைப் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். சூப்பர்ப்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஇதுவரை அறியாத கதை, கோவில், சுலோகம்...நன்றி.
ReplyDelete(அது சரி, க்ருத யுகத்தில் தை மாசமா?)
என்னோட கிருத யுகத்து நண்பரான காஷ்யப ரிஷி கிட்ட கேட்டப்ப, நாழிகை, ஹோரைன்னுல்லாம் எழுதினா இப்ப யாருக்கும் புரியாது மகனே, இப்ப உள்ள உலக வழக்கப்படி எழுதிடுன்னாரு. அதான்... ஹி... ஹி....
Deleteவரலாற்று ப்ரியையாகிய எனக்கு இந்த வரலாறு றொம்ப பிடித்திருக்கிறது அங்கிள் நான் கிறிஸ்தவள் என்றாலும். இந்து மதத்தில் மரியாதை உண்டு அங்கிள பட் எனக்கு கடவுள் நம்பிக்கை சற்று குறைவு...
ReplyDeleteஅழகான பதிவு....
கடவுள் நம்பிக்கை கிடையாதுனு தாராளமா தைரியமா சொல்லுங்க எஸ்தர் சபி :)
Deleteநான் கடவுள் வெறுப்பாளனும் இல்லை, தீவிர பக்தனும் இல்லை. நடுநிலை வாதிதான் எஸ்தர். அதனால உன்னோட நிலைப்பாட்டைச் சொல்றதுல தப்பே இல்லை. இருந்தாலும் ரசிச்சுப் படிச்சேன்னு சொன்ன உனக்கு என் நன்றி!
Deleteஇது வரை தெரிந்திராத தகவல்கள். தெரிந்துகொள்ள உதவிய பதிவுக்கு நன்றி.
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteபுதிய தகவல் கூறிச்சென்ற விதமும் அருமை . ஆன்மீகக் கதைகள் கேட்கும் போது எங்க ஊர் ஜாபகம் வந்து விட்டது .
ReplyDeleteஆன்மீகக் கதையை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி தென்றல்!
Deleteஆன்மீக வரலாறும் மிக அழகாக, அருமையாக
ReplyDeleteதந்துள்ளீர்! நன்றி கனேஸ்!
சா இராமாநுசம்
ஆன்மீக வரலாறும் அழகாகத் தந்துள்ளீர்
ReplyDeleteநன்றி!கனேஸ்!
சா இராமாநுசம்
ஆன்மீக வரலாறை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா!
Deleteபெருமாள் ‘எங்கே படுப்பது?’ என்று கேட்கும் விதமாக ‘எவ்வுள்?’ என்று வினவியதால் ‘திருஎவ்வுளூர்’ என்று பெயர் பெற்று, அந்த ஊர் இன்று ‘திருவள்ளூர்’ என்று அழைக்கப்படுகிறது. ////////
ReplyDeleteஆஹா! ஆச்சரியம் கலந்த நல்ல பதிவு! அதுவும் பேர் வந்த காரணம் அருமை! தெரியாத தகவல்களைத் திரட்டி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி கணேஷ் அண்ணா!
ஊர்க்காரணத்தையும், பதிவையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மணி!
Deleteஉங்கள் ப்ரோஃபைலை இப்போதுதான் பார்க்கிறேன்!
ReplyDeleteAn ordinary person.
அப்டீன்னு போட்டிருக்கீங்க! பட் பார்த்தா அப்படித் தெரியலையே??
அட, நீங்க வேற... நிறையப் பேரோட பதிவுகளைப் படிக்கறப்ப நான் என்னை சிறுவனாத்தான் உணர்றேன் மணி. நீங்க என்னை பெரிசா மதிக்கறீங்கன்றதுல ரொம்ப சந்தோஷப்படறேன். உங்களுக்கு என் ஸ்பெஷல் தாங்க்ஸ்!
Deleteதெரியாத தகவல்.. நன்றி !
ReplyDeleteஆன்மீகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்!
Deleteதிருவள்ளூர் பெயர்க் காரணமும் தல புராண வரலாறும் தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி!
ReplyDeleteரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்துச் சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இளங்கோ!
Deleteஅறியாத தகவல்கள் ! நன்றி சார் !
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி தனபாலன்!
Deleteஅருமையான ஆன்மீகப் பதிவு.
ReplyDeleteஅழகாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆன்மீகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஅப்பு....சாமி என் ஃப்ரெண்டை முழுசா சாமியாராக்கிடாதேங்கோ எண்டு கும்பிட்டன்.ஒரு மாதிரி சாமி கும்பிட வச்சிட்டீங்கள்...!
ReplyDeleteஅடடா... நான் அப்டில்லாம் சாமியாராப் போயிட மாட்டன். அப்படியே சாமியாராகறதா இருந்தாலும் தவம் பண்ண ஸ்விஸ் மலைக்குத்தான் வருவேன் ஃப்ரெண்ட்!
Deleteகடந்து செல்லும் வழியில் ஓரிரு முறை சென்று வந்திருக்கிறேன். நல்லதொரு பகிர்வு.
ReplyDeleteநான் திருவள்ளூரில் ஒரு வருட காலம் வசித்தேன் ஸ்ரீராம். அங்கிருந்து தினமும் ரயிலில் சென்னைக்கு வேலைககு வருவேன். அப்போதெல்லாம் நான் பலமுறை ரசித்து தரிசித்த தலம் அது. இப்போதுதான் பகிரக் கை வந்தது. உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteதல புராணத்துடன் சிறப்பான பகிர்வு!
ReplyDeleteஸ்தல புராணத்துடன் கூடிய ஆன்மீகப் பதிவை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅழகிய ஆன்மீகப் பதிவு நண்பரே...
ReplyDeleteஎவ்வகைப் பதிவிலும் உங்கள் எழுத்துக்களால்
எங்களைக் கவர முடியும் என்ற உங்கள் திறமைக்கு
மற்றுமொரு உதாரணம்...
திருத்தல வரலாறும் விளக்கங்களும்
மிக நன்று...
ஆன்மீகம் ரொம்ப நாளைக்கு முன்னால ஒண்ணு எழுதினேன். இது ரெண்டாவது. உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப சந்தோஷம். என் உளம்கனிந்த நன்றி உங்களுக்கு!
Deleteவாத்தியரே தற்போதைக்குள் நீங்க ஆன்மீக கட்டுரைகள் எழுதவில்லையே என்று நினைத்தேன் என் குறையை போக்கி விட்டீர்கள். தசாவதாரம் படம் பார்த்துவிட்டு அதன் அடுத்த நாளே இந்த கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியம் கல்லை மட்டும் கண்டால் பாடலில் வருவது போன்ற பெருமாள். மனமுருக மனமகிழ தரிசித்து வந்தேன். உங்கள் எழுத்தில் ராகவரின் தரிசனம் மீண்டும் கிடைக்கப் பெற்றேன்
ReplyDeleteஎன் எழுத்தில் மீண்டும் இறைவனைத் தரிசித்ததாகக் கூறிய உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி நண்பா.
Deleteஹிருத்தாபநாசினி குளம். இக்குளத்தில் வெல்லத்தைக் கரைத்து பாலை ஊற்றினால் பண்ணிய பாவங்கள் அனைத்தும் அகலும் என்பது நம்பிக்கை.
ReplyDeleteசிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ஆன்மீகம் என்றாலே எல்லாருக்கும் உஙகள் நினைவுதான் வரும். நீங்கள் சிறப்பான பகிர்வு என்று சொன்னது எனக்கு விருதுக்கு சமம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசின்ன வயதிலிருந்தே, அதுவும் கடந்த சில மாதங்களாகவே புராண, தெய்வக்கதைகளின் மீது அலாதிப்பிரியம் வளர்ந்துக்கொண்டே வருகிறது..என்னது கொஞ்சம் தாமதமாக வந்திவிட்டேன் இங்கு..மன்னிக்க வேண்டி குமரன்.
ReplyDeleteஇங்கு வந்து படித்தால், மனதோரம் ஒரு மகிழ்ச்சி..அங்கு வர வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.ஒரு நாள் வருவேன்.
ரொம்பவும் பயனுள்ள பகிர்வு ஐயா.மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு.தொடருங்கள்.
நிச்சயம் வாருங்கள் குமரன். உங்களுக்குத் துணைக்கு நான் இருக்கிறேன். என்னைத் தொடரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Delete