மனதிற்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி பதிவாக்கிக் கொண்டிருக்கும் இவனை, ‘பள்ளிப் பருவத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாரண்ணா’ என்று தன்னுடைய இந்தப் பதிவின் மூலம் பணித்தார் தங்கை ராஜி. அவ்வன்பு வேண்டுகோளினை ஏற்று, சற்றே பின்னோக்கிப் பார்ககிறான் இவன்!
வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் பள்ளி என்பதால், அப்பா வாங்கித் தந்த அலுமினியப் பெட்டியில் புத்தகங்களைச் சுமந்தபடி, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கைவீசி இவன் வர, வீட்டு மாடியிலிருந்து அப்பாவும் அம்மாவும் கையசைக்க, பதிலுக்கு இவன் உற்சாகமாகக் கையசைத்தபடி ஓடிவர, பெட்டி திறந்து புத்தகங்கள் கீழே கொட்டியதையும், தெருவோரச் சிறுவன் ஒருவன் அதைப் பொறுக்கிக் கொண்டு ஓடுவதையும் கண்டு, அம்மாவும் அப்பாவும் பதறிக் கையசைக்க, மேலும் உற்சாகமாய் கையசைத்தபடி (திரும்பிப் பாராமலே) வீட்டுக்கு வந்து இவன் திட்டு வாங்கியது ஒன்றிலே.... வகுப்பு ஒன்றிலே!
பள்ளிப் பரீட்சையன்று எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மக்கள் திலகம் ‘சப்லா மாமா டோலக் தாத்தா’ என்று பாடியது மிதந்துவர, அதைக் கேட்ட சுகத்தில் கண்ணுறங்கி எதுவும் எழுதாமல் வந்து, அப்பாவியாய் வீட்டில் நடந்ததைச் சொல்ல, அவர்கள் சிரித்து மகிழ்ந்ததும், அப்பாவை இவன் இழந்ததும் இரண்டில்தான்... வகுப்பு இரண்டில்தான்!
சித்தப்பா கொடுத்த பத்துப் பைசாவை வாயில் அடக்கிய வண்ணம் வகுப்பைக் கவனிக்க, மங்கையர்க்கரசி டீச்சர் ஏதோ சொன்னதற்கு சிரித்து, காசு தொண்டையைத் தாண்டி உட்செல்ல, இவன் கண்கள் செருகி, மங்கை டீச்சரை அழவைத்து, சித்தப்பாவை ஹாஸ்பிடலுக்கு அலைய வைத்தது (மங்கை டீச்சர் உடனே வாழைப்பழங்கள் வாங்கித் தந்து சாப்பிட வைத்த புத்திசாலித்தனத்தால் மறுநாள் எக்ஸ்ரேயில் வயிற்றில் எதுவும் இல்லை, வெளியேறி விட்டது என்பது தெரிந்தது.) மூன்றுங்கோ... வகுப்பு மூன்றுங்கோ!
கேட்ட மாத்திரத்தில் மனதில் பதித்துக் கொள்ளும் திறனை இயற்கை தந்திருந்ததால், இரண்டு பக்க விடையை ஒரே மூச்சில் சொல்லி, ட்யூஷன் மிஸ்ஸிடம் இவன் பாராட்டுப் பெற்றதும், என்னை உதாரணம் காட்டி மிஸ் திட்டியதால் உடன் படித்த சேட்டுப் பெண்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதும் நான்கிலே... வகுப்பு நான்கிலே!
அண்ணனுடன் கோவைக்கு குடிபெயர, இவன் கோலி குண்டும், கிட்டிப்புள்ளும் கதியென தெருத் தெருவாய் அலைந்தது ஐந்தல்லவா... வகுப்பு ஐந்தல்லவா!
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் அடுத்த ஆண்டு படிக்க, வயல் வெளிகளின் ஊடே திரிந்து வகுப்புக்குச் சென்றதும், பாதையில் சர்வசகஜமாய் நடமாடும் பாம்புகளைக் கண்டு இவன் பயந்ததும், கால் பந்து ஆட்டத்தை வெறியுடன் ஆடியதும் ஆறிலேதான்... வகுப்பு ஆறில்தான்!
கமலஹாசன் என்ற புதிய கதாநாயகனைப் பார்த்து ரசித்ததும், ஸ்ரீதேவி என்கிற நடிகையை இவன் ஜொள்ளு விட்டதும் ஏழிலேயல்லவா... வகுப்பு ஏழிலே அல்லவா!
மதுரையில் பாரதியார் பணிபுரிந்த பள்ளி என்கிற பெருமையுடைய சேதுபதியில் இவன் படித்ததும், நிறைய சினிமாக்களை பார்த்ததும், அப்படியும் வகுப்பில் இரண்டாவதாக வந்ததும் (சிவகுமார்னு ஒரு வில்லன் இவனைத் தாண்டி ஃபர்ஸ்ட் வந்தடுவான்) எட்டுங்க... வகுப்பு எட்டுங்க!
தேவகோட்டைக்கு அடுத்த வருஷமே குடும்பம் பெயர, தேபிரித்தோ ஸ்கூல்ல இவன் படிச்சதும், கால்பந்து விளையாடி நண்பனோட கன்னத்துல ரத்தக்கோடு போட்டதும், அதுவே அழுத்தமான நட்பானதும் (என் பதிவு: ரத்தத்தில் பூத்த நட்பு) நிறைய நிறைய சினிமாக்கள் பார்த்ததும் ஒன்பதில்தான்... வகுப்பு ஒன்பதில்தான்!
அடுத்த ஆண்டில் காரைக்குடியில் குடும்பம் இருக்க, தினமும் பஸ்சில் தேவகோட்டை போய் வந்ததும், பஸ் அதிர நண்பர்கள் குழாத்துடன் இவன் கொண்டாடி மகிழ்ந்ததும், பெண் பிள்ளைகளுக்காக சில சாகசங்கள் செய்ததும், எல்லாம் தாண்டி நல்ல சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றதும் எல்லாமே பத்துங்கோ... வகுப்பு பத்துங்கோ!
இவன் வார இதழ், மாத நாவல்கள் எல்லாம் படிக்கத் துவங்கியதும், டைப்பிங் கற்றுத் தேறியதும், ‘ஐங்கரன் கீதமாளிகை’ நடத்தியவரை நட்பாக்கிக் கொண்டு வகுப்பு நேரம் தவிர, அங்கேயே பழியாய்க் கிடந்து இசை கேட்டு மகிழ்ந்ததும், காரைக்குடி கொப்புடையம்மன் திருவிழாவில் இரவெல்லாம் கோலாகலமாய் கழித்ததும் +1ல தாங்கோ... வகுப்பு +1ல தாங்கோ...
காரைக்குடியில் இவனுக்குத் தனி நண்பர்கள் குழு அமைந்ததும், ஓய்வு நேரத்தில் செஸ் விளையாட்டும், சாக்பீஸ் செய்வதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும், புத்தகங்கள் படிப்பதுமாய் இனிமையான பொழுதுகள் அமைந்தது +2வில் அன்றோ! வகுப்பு +2வில் அன்றோ!

தொல்லைகள் அற்ற, என்றும் திரும்பி வராத அந்த பிள்ளைப் பருவத்தை எண்ணி இவன் ஏக்கத்துடன் இருப்பது தொடருமன்றோ எந்நாளும்! இந்த நினைவலைகளைத் தொடர்பதிவாக்கும்படி தங்கை ராஜி கோரியதால் இவன் தனக்குப் பிடித்த ஐவரை அவர்களின் பள்ளிப் பருவத்தைத் திரும்பிப் பார்க்கும்படி அன்புடன் அழைக்கிறான்.
1. நண்பர் மதுமதி.
2. நண்பர் நடனசபாபதி
3. நண்பர் வெங்கட் நாகராஜ்
4. ஷைலஜா அக்கா
5. தோழி ‘தென்றல்’ சசிகலா
இவர்களின் பள்ளிப் பருவ அனுபவங்களைப் படித்து மகிழ, உங்களுடன் சேர்ந்து காத்திருக்கிறான் இவன்!