Wednesday, August 1, 2012

கல்யாண சமையல் சாதம்

Posted by பால கணேஷ் Wednesday, August 01, 2012

ணவு என்கிற விஷயத்தில் தென்னிந்தியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையை வேறு எந்த நாட்டவரும் எடுத்துக் கொள்வதில்லை என்பது என்னுடைய கருத்து. நார்த் இன்டியன் ஃபுட், சைனீஸ், ஃபுட், கான்டினென்டல் ஃபுட் என்று எத்தனையோ விதவிதமான உணவு முறைகள் இருந்தாலும் நம் தென்னிந்திய உணவு முறைகளை அடித்துக் கொள்ள முடியாது. நம் உணவு வகைகளில்தான் எத்தனை எத்தனை வெரைட்டிகளில் டிபன் ஐட்டங்கள், சாப்பாட்டு ஐட்டங்கள்...! இப்போதும் பரிசோதனை முயற்சியாகச் செய்து புதிய புதிய விதங்களி்ல் சமையல் குறிப்புகள் நிறையக் கண்களில் படுகின்றன. உணவு சாப்பிடுவது என்பது பசியைப் போக்குவதற்காக மட்டுமின்றி, ரசனை சார்நததாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

‘புதிய பறவை’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘‘நல்லா இருக்குன்னு சொல்றோமே... அது நல்ல ரசனையிலிருந்துதான் உருவாகுது. எல்லாத்துக்கும் ரசனைதான் அடிப்படை’’ என்பார் சிவாஜி. உணவின் சுவையானது உணவுப் பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை சுத்தம் செய்வதிலும், கழுவுவதிலும், ‌சமையலில சேர்க்கும் உப பொருட்கள் எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன, எந்த உஷ்ண நிலையில் சமைக்கப்படுகின்றன என்பதில்தான் அமைந்திருக்கிறது. மற்றபடி, ‘எங்கம்மாவின் கைப்பக்குவம் வராது’ ‘என் மனைவி செஞ்சா ஊரே மணக்கும்’ என்பதெல்லாம் சுத்த ஹம்பக்தான்!

ரஜினியோட எக்ஸ்ப்ரஷனை பாருங்க..!
‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு; நெய் மணக்கும் கத்தரிக்காய்; நேத்து வெச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா, நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா...’ என்று துவங்கும் பாடலில் தான் ரசிக்கும் சாப்பாட்டு ஐட்டங்களை கதாநாயகி பாடுவதாக கவிஞர் (யார்?)  எழுதியிருப்பார் பாருங்கள்... ரசிகரய்யா! அவரையம் விஞ்சும் வண்ணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய ‘கடல்மேற்க குமிழிகள்’ என்ற நாடகக் காப்பியத்தில் உணவைப் பற்றியும் பாடியிருக்கிறார் இப்படி:

‘‘கத்தரிப் பொரியலும், கரும் பாகற்குழம்பும்
புத்துருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும்,
மிளகின் சாறும், புளியாத தயிரும்,
அனைவர்க்கும் நிகரே! ஆயினும் மின்னொளி
உனக்கொன் றதிகள்’’ என்றுரைத்தான் வையன்.
‘‘என்ன?’’ என்றாள் மின்னொளி.
சின்னதாய் முத்தம் தந்தான்-
அன்னதனோடே அருந்தினாள் விருந்தே!


என்ன ஒரு ரசனை! கிடைத்தால் இப்படி முத்தத்தோடு உணவருந்தி சமையலோடு சேர்த்து காதலையும் வளருங்கள். (ஹோட்டல்ல யார்ட்டயாவது கேட்டு நீங்க அடி வாங்கினா, நான் பொறுப்பில்ல... பாரதிதாசன்தான் பொறுப்பு!) கரும்பாகற் குழம்பு என்றால் என்னவென்ற யோசித்ததில் வற்றல் குழம்பைத்தான் சொல்லியிருக்கிறாரோ என்று தோன்றியது. வற்றல் குழம்புடன் சுட்ட அப்பளமும், பருப்புத் துவையலும் கிடைத்தால் எனக்கு அமிர்தம்தான்!

இப்படி உணவு வகைகளுக்கு அவைகளுக்கேற்ற சரியான காம்பினேஷன் அமைந்து விட்டால், மூக்குப் பிடிக்கத் தின்றாலும் சரி, அளவோடு சாப்பிட்டாலும் சரி... பசியோடு நல்ல ருசியையும் அனுபவிக்கலாம். குழாய்ப் புட்டு என்கிற ஒரு ஐட்டம் எனக்கு மிகப் பிடித்தமானது. அதனோடு வாழைப்பழத்தைப் பிசைந்து சாப்பிடலாம். கொண்டைக் கடலை மசாலா இருந்தால் அதைச் சேர்த்தும் சாப்பிடலாம். ஒருமுறை உணவகத்தில் ஒருவர் அதைப் பாலில் கலந்து சாப்பிடுவதைக் கண்டு வியந்தேன். ஆப்பம் என்கிற ஒரு ஐட்டத்துக்குத்தான் தேங்காய்ப்பால் சரியாக வரும் என்பது அதுவரை என் கருத்தாக இருந்தது.

இப்படி விதவிதமான காம்பி னேஷன்களைக் கண்டுபிடித்துச் சாப்பிடுவதும் ஒரு தனி சுவாரஸ்யம்தான். இல்லாமலா பின்னே, ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்கிற பாடலில் விதவிதமான சாப்பாட்டு காம்பினேஷன்களை அப்படி விளக்கியிருப்பார்கள்? அத்தனை வகைகளையும் கடோத்கஜன் சாப்பிடுவது போல் சாப்பிட்டால் நம் வயிறு என்னாகும் என்பது வேறு விஷயம். நான் சொல்ல வந்தது ரசித்துச் சாப்பிடுவது என்பதைத்தான்.

உணவை ரசித்துச் சாப்பிடும் விஷயத்தில் கூட சில மேனர்ஸ் கடைப்பிடிக்க வேண்டுமென்பதும் என் கருத்து. என் நண்பன் ஒருவன் சாப்பிடும் போது டிடிஎஸ் சவுண்ட் எபெக்ட் போல ‘சபக் சபக்’ என்று மெல்லும் சத்தம் என் காதுகளைக் குடையும். அவனோடு உணவருந்துவதை பின்னாட்களில் தவிர்த்து விட்டேன். சாம்பாரையோ, ரசத்தையோ, பாயசத்தையோ கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் போது ‘சர்’ரென்று சத்தம் எழ உறிஞ்சுபவர்கள் என் அருகில் அமர்ந்து தொலைத்து விட்டால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து விடுவேன். (தலையெழுத்து! பலமுறை அப்படி அமைந்து விடுகிறது). மற்றவர்களுக்கு உறுத்தாமல் வெகு நளினமாகச் சாப்பிடும் கலை நம்மவர்களில் பலருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே என் கருத்து.

அடை- அவியல், பூரி -கிழங்கு, வெஜிடபிள் பிரியாணி... சொல்லிக் கொண்டே போனால் லிஸ்ட் மிக நீண்டு விடும். இப்படி சாப்பிடுவதில் பிடித்த ஐட்டங்கள் பல இருந்தாலும் எனக்கு எப்போதும் சம்மதமானது தோசைதான். சில நேரங்களில் மதிய உணவு நேரம் தாண்டிவிட்டால் தோசை சாப்பிட்டே பொழுதை ஓட்டிவிடுவேன். சட்னி, சாம்பார், தோசை என்கிற இந்தக் காம்பினேஷன் எனக்கு எந்த நேரத்திலும் எந்த சீதோஷ்ண நிலையிலும் சம்மதமான, ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயமாக இருந்து வருகிறது.

உணவு விஷயத்தில் என் நிலைப்பாடு இது. உங்களின் கருத்து எது?

பின்குறிப்பு : இதைப் படித்ததும் எனக்கு எதுவும் பட்டம்(?) வழங்கலாமா என்று யாரும் யோசிக்க வேண்டாம். அடுத்து நான் ‘அழகு’ பற்றிய என் கண்ணோட்டத்தை எழுதும் போது என்ன பட்டம் தருவதென்று நீங்கள் திருதிருவென்று முழிக்க நேரிடும். கபர்தார்!

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது : கத்தரித்தவை-8

87 comments:

  1. ஆஹா நாளை ஆடிப்பெருக்கு; இன்றே விருந்தா? நடக்கட்டம்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுலக பாஷையில் ‘வடை’ எனக்கா?

      Delete
    2. ஒவ்வொண்ணா ரசனைகளை பகிர்ந்துட்டு நண்பர்கள் கருத்தை கேப்போம்னுதான் ஆரம்பிச்சேன். நீங்க சொல்லிதான் ஆடி18ன்னு ஒரு பொருத்தம் இருக்கறது தெரியுது. நன்றி நண்பா. நீங்க ஆசைப்பட்ட வடை இதோ...

      [im]http://www.spiceindiaonline.com/files/images/recipes/vadai/l_vadai2.jpg[/im]

      Delete
    3. எலேய் பிரகாஷ், இனி வடை இல்லை, ஊறுகாய்'னு சொல்லுவோமா ஹி ஹி...

      Delete
    4. அண்ணே, பிரகாஷ் கேட்டது இந்த வடை இல்லை, பருப்பு வடை....

      Delete
  2. சீனிக்கு வடை எனக்கு பாயசம்

    மீன் குழம்பு பத்தியெல்லாம் நீங்கள் எழுதி உள்ளது ஆச்சரியமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. பாயசம் தானே... தந்துட்டாப் போச்சு. அந்தப் பாட்டுல வர்ற அத்தனையும் (மீன் குழம்பைத் தவிர) நல்ல ருசியான ஐட்டங்கள்தானே... அதான் குறிப்பிட்டேன். ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  3. எங்கள் வீட்டில் தோசை அல்லது இட்லிதான் காலை உணவு அதற்கு ஈடு ஏதுமில்லை சாப்பாட்டு விஷயததில் நானும் உங்கள் கட்சிதான். வத்தகுழ்ம்பு அப்பளம் அல்லது துவையல், சாம்பார் பொறியல், ரசம் மிளகு கூட்டு இப்படிதான் எங்கள் வீட்டு சமையல் இருக்கும் எங்கள் வீட்டு சமையல் எங்களது நண்பர்கள் மத்தியில் மிக பிரபலம்

    ReplyDelete
    Replies
    1. சாப்பாட்டு விஷயத்தில் என் கட்சி நீங்களும் என்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பா. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. நமக்கு பூரியும் உருளைக்கிழங்கும் இருந்தா அடுத்த வேளைக்கும் சேர்த்து வயிறு நிரம்பிவிடும். :) :)

    இங்கு பால்புட்டு என்று ஒன்று செய்வார்கள். சுடச்சுட அதில் சீனியும் வாழைப்பழமும் பிசைந்து சாப்பிடுவதும் ஒரு தனி சுவை தான்.

    ReplyDelete
    Replies
    1. பூரி கிழங்கும் நம்ம பேவரைட்ல ஒண்ணுதான். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  5. அருமையான பந்தி பரிமாறி விட்டீர்கள் .
    ருசித்து சாப்பிட்டேன். செய்யுளும் , படங்களும்
    மனதையும் , வயிற்றையும் நிறைத்தன .

    [ இன்று என் வலைப் பக்கத்தில் ....
    எந்திர உயிர்ப்பு !

    http://sravanitamilkavithaigal.blogspot.in/ ]

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாளைக்குப் பின் ஸ்ரவாணியைக் கண்டதிலும் கருத்தைப் படித்ததிலும் மிக்க மகிழ்வு கொண்டேன். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. எந்த சாப்பாடாயிருந்தாலும் முகம் சுளிக்காம சாப்பிடனும்ன்னு அப்பா சொல்லி குடுத்திருக்கார். ஆனா, காலையில சுடுசாதம் மட்டும் சாப்பிட மாட்டேன். மத்தபடி இட்லி-வெங்காய சட்னி, பழைய சாதம்-மீன் குழம்பு, டபுள் ஸ்ட்ராங்க் காஃபி, ரோஸ்மில்க், லஸ்ஸி, பிரியாணி- சிக்கன் கிரேவி. அவ்வளவுதான் நம்ம ஃபேவரிட் உணவுகள்.

    ReplyDelete
    Replies
    1. காலையில சுடுசோறு சாப்பிடறது குடலுக்கு ஏத்ததில்லை. அதனால நல்ல பழக்கம்தான். மத்த எல்லா பேவரிட் ஐட்டங்களும் அண்ணனின் ரசனையோட ஒத்துப் போறதாத்தான் இருக்குன்றதுல மகிழ்ச்சியோட என் நன்றி.

      Delete
    2. என்ன நீங்க ரெண்டு பேரும் அனிமல் திங்குற ஆளா? அட ராமா....நான் நீங்க ரெண்டு பேரும் பக்கா வெஜ்னு நினைச்சேன்

      Delete
  7. Your article has made me to feel hungry. Now, let me have an early dinner and then I will write my comments. Leave alone the lunch and dinner; in our office, there are people who drink their tea with hi-fi bacground effect creating an awkward atmosphere.

    ReplyDelete
    Replies
    1. அடாடா... அந்த மாதிரி ஆசாமிகளால நீங்களும் நொந்து போயிருக்கீங்களா... கொஞ்சம் ஆறுதல் எனக்கு நம்மளை மாதிரி இன்னொருத்தரும் இருக்கறது. மிக்க நன்றி நண்பா.

      Delete
  8. நம் வீட்டு விசேசங்களுக்கு சாப்பாடு தான் முதலில்... சாப்பாட்டை பார்த்து பார்த்து பரிமாறுவோம்., விருந்து என்றால் சொல்லிக்க வேண்டியதில்லை... அருமையான பதிவு...

    ReplyDelete
    Replies
    1. விருந்தை ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. சாப்பாட்டுராமன் என்று யாரும் பட்டம் கட்டிவிடக்கூடாது என்று முஞாக்கிரதையாக ஒரு பின் குறிப்பு போட்டு நான் நகைச்சுவைதிலகம் மட்டுமல்ல முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்பதையும் நிரூபித்து விட்டீர்கள்:)மிகவும் ருசிகரமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... எழுதி முடிச்சதும் யாராவது அந்தப் பட்டத்தை குடுத்துடுவாங்களோன்னு மனசுல பட்டுசுசு. அதான் அடுத்த பதிவுல அழகைப் பத்தி எழுதினா அழகன்னு பட்டம் கொடுக்க யோசிப்பாய்ங்க இல்ல.. ருசிகரமான பதிவுன்னு சொல்லி ரசிச்ச தங்கைக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  10. பகிர்வு வெகு சிறப்புங்க.... ///உணவை ரசித்துச் சாப்பிடும் விஷயத்தில் கூட சில மேனர்ஸ் கடைப்பிடிக்க வேண்டுமென்பதும் என் கருத்து. என் நண்பன் ஒருவன் சாப்பிடும் போது டிடிஎஸ் சவுண்ட் எபெக்ட் போல ‘சபக் சபக்’ என்று மெல்லும் சத்தம் என் காதுகளைக் குடையும். அவனோடு உணவருந்துவதை பின்னாட்களில் தவிர்த்து விட்டேன். சாம்பாரையோ, ரசத்தையோ, பாயசத்தையோ கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் போது ‘சர்’ரென்று சத்தம் எழ உறிஞ்சுபவர்கள் என் அருகில் அமர்ந்து தொலைத்து விட்டால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து விடுவேன்///

    இதே ரசனைதான் எனக்கும்.

    ReplyDelete
    Replies
    1. என் ரசனையுடன் நீங்கள் ஒத்துப் போவதில் மிக மகிழ்வுடன் உங்களுக்கு என் நன்றி.

      Delete
  11. http://www.youtube.com/watch?v=JROigL20fwA//

    இதையும் ஒரு தடவை கேட்டு ரசியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பரங்கிப் பேட்டைய கேட்டு ரசிச்சேன் தங்கச்சி. அருமை.

      Delete
  12. இப்போ எல்லாம் கல்யாண பந்தியிலோ பார்ட்டிகளிலோ உணவு வீணாவதைக் கண்டு நான்
    'கல்யாண சமையல் சாதம்' என்ற தலைப்பிலேயே எழுதிய என் பதிவைப் பாருங்களேன்.

    சகாதேவன்
    http://vedivaal.blogspot.in/2007/12/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. இப்பவே படிச்சுப் பார்த்துடறேன் நண்பரே... மிக்க நன்றி.

      Delete
  13. வயிறு நிறைந்ததோ இல்லையோ தெரியவில்லை.... மனது நிறைந்து விட்டது சார்...


    வாழ்த்துக்கள்...
    நன்றி...
    (த.ம. 3)

    ReplyDelete
    Replies
    1. மனது நிறைந்து விட்டது என்று வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  14. ஐயோ ஐயோ.... இப்படி சாப்பாட்டப் பத்தி சொல்லி பசியக் கிளப்பி விட்டுட்டீங்களே!..... தோசைதான் ### all time favourite! அப்டியே 1 மசால் தோச பார்சல்!!!!....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்களும் நம்ம கட்சியா.. பார்சல் தோ. இப்ப கிடைச்சிடும். சாப்டுட்டுப் போங்க சாமு... மிக்க நன்றி.

      Delete
  15. அனேகம் பேர் விரும்புவதைப் போல தோசை தான் என் இஷ்டம் கூட..
    ஆனால் பாருங்கள்..இதில் மட்டும்தான் ..special roast,ghee roast,vadakari,masala roast ,rava roast,paper roast ,onion roast என பல varieties..இதில் rava roast தான் என் favourite

    ReplyDelete
    Replies
    1. ஆனியன் ரவா என்னோட ஃபேவரைட் சௌம்யா. கிட்டக் கிட்டத்தான் இருக்குது ரசனை. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. மிகவும் ரசிக்க ருசிக்க வைத்த பதிவு! உடன் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் மேனர்ஸ் கடைபிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை!அதே சமயம் பசிக்கானாலும் உணவை ருசித்து ரசித்து உண்ணவேண்டும் என்பது என் கருத்து!

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு விஷயத்திலும் நீங்க நம்ம கட்சிதான். மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய என் நன்றி.

      Delete
  17. சேலம் நகரவாசிகளின் உணவு ரசனையே தனி.சேலம் ஒரு cosmopolitan நகரம்,எந்த வகுப்பினரும் பெரும்பான்மையர் கிடையாது.எல்லா வகுப்பினருக்கும் ஒரே மாதிரியான உணவு ரசனைதான்.பெரும்பான்மையான தமிழ்நாட்டு பிராமணர் இரவில் சாதம் சாப்பிடுவார்கள், ஆனால் சேலத்தில் பிராமணர் உள்பட இரவில் பலகாரம்தான் சாப்பிடுவார்கள்.ஞாயிற்று கிழமை காலைவேளையில் அசைவ உணவு சாப்பிடுவோர் வீடுகளில் கட்டாயம் இட்லி கறிகொழம்புதான்.இது எழதப்படாத சட்டம்.இப்போது வெளியூர் ஆட்கள் பணி நிமித்தம் நிறைய இருப்பதால் இந்த ரசனை மாறியிருக்க கூடும்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு புதிய தகவலை அறியத் தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  18. நித்தம் நித்தம் நெல்லுச் சேறு,,,,
    நான் மறந்த பாடல்களில் ஒன்று நினைவு படுத்தியமைக்கு நன்றி சார்.....

    உண்மைதாஅன் உணவு உண்ணுதலில் நாகரீகம் பேணவேண்டியது மிகவும் அவசியமானது இன்னும் சிலர் இருக்கின்றனர் சேர்ந்து சாப்பிடும் சந்தர்ப்பங்களில் தும்மல் வந்தால் அதனை அப்படியே அவ்விடத்திலே தும்மி விடுவர்........ஏனையவர்கள் இனி விரதம் தான்

    அழகான பதிவு சார்

    த,ம..5

    ReplyDelete
    Replies
    1. அழகான பதிவென்று ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  19. ஒரு கிழமையா வேலை இடத்தில சாப்பாடு.நாளண்ணைக்குத்தான் லீவு.எப்படா உறைப்புப் புளிப்பா சமைச்சுச் சாப்பிடுறதுன்னு ஏக்கம்.இங்க வந்தா சாப்பாட்டுப் பட்டியலைப் போட்டு வெறுப்பேத்தறீங்க ஃப்ரெண்ட்.உங்களைப்போல தோசையும் மீன்குழம்பும்,இல்லாட்டி தேங்காய்ச் சம்பல் பிடிக்கும்.ஆனால் பொதுவாக பசிக்கு அப்போ எது கிடைக்குதோ சாப்பிட்டுச் சாமாளிச்சுக்கொள்ளும் பழக்கம் எனக்கு.இதுதான் பிடிக்குமென்று அடம்பிடிக்கும் பழக்கமெல்லாம் இல்ல !

    ReplyDelete
    Replies
    1. அடம் பிடிக்கும பழக்கம் எனக்கும் கிடையாது ஃப்ரெண்ட். ஆனா தனிப்பட்ட ரசனைகள்ல இதுவெல்லாம் கிடைச்சா ரொம்பவே ரசிப்பேன். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  20. என் நண்பன் ஒருவன் சாப்பிடும் போது டிடிஎஸ் சவுண்ட் எபெக்ட் போல ‘சபக் சபக்’ என்று மெல்லும் சத்தம் என் காதுகளைக் குடையும். அவனோடு உணவருந்துவதை பின்னாட்களில் தவிர்த்து விட்டேன். சாம்பாரையோ, ரசத்தையோ, பாயசத்தையோ கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் போது ‘சர்’ரென்று சத்தம் எழ உறிஞ்சுபவர்கள் என் அருகில் அமர்ந்து தொலைத்து விட்டால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து விடுவேன். //

    அய்யோ அண்ணே, இவனுக எனக்கு பல வெரைட்டிஸ்ல இருக்கானுக.....தாங்க முடியாமல் எத்தனையோ நாள் அலறியிருக்கேன்.....டீ குடிப்பானுக பாருங்க, பக்கத்தில் இருப்பவன் அலறி ஓடிருவான் ஏன்னா அவன் டீ'யையும் இவன் உறிஞ்சிருவானொன்னு பயந்து....!

    எவளவோ சொன்னாலும் கேக்கமாட்டேன்னு அடம் பிடிக்கிராணுக....!

    ReplyDelete
    Replies
    1. ஆமா மனோ... இந்த டீ குடிக்கறவங்கள லட்சணத்தை எழுத மறந்துட்டேன். நினைவுபடுத்தினதுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  21. பூரியும் உருளைக்கிழங்கும் சூப்பரா பிடிக்கும் எனக்கு!ஹீ!
    நல்ல சாப்பாட்டுப்பதிவு!
    நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடல் எழுதியது கங்கை அமரன் .

    ReplyDelete
    Replies
    1. அட... கங்கை அமரனா எழுதினது அது? குட். ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நேசன்.

      Delete
  22. சாப்பாடு எப்படி தவறவிட்டேன்? அருமையோ அருமை!

    இப்பெல்லாம் சென்னை ரெஸ்ட்டாரண்ட்களில் சீனச்சமையைலும் வட இந்தியச் சமையலும்தான் அதிகம்.

    தென்னிந்திய சாப்பாட்டு வகைகளில் லிமிட்டட் ஐட்டம்ஸ்தான். நாலைஞ்சு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டவுடன் கொஞ்சம் போரடிச்சுருது:(

    பாரம்பரிய சமையல் கிடைக்கும் இடங்கள் இருக்கா?

    நியூஸியில் துளசிவிலாஸில் கிடைக்கும் என்பது உபரித்தகவல்:-)

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான் டீச்சர் விசாரிச்சு வெக்கறேன். மிக்க நன்றி.

      Delete
  23. சுவையான பதிவு! இதே தலைப்பில் எங்கள் ப்ளாக்கில் ஒரு பழைய பதிவு உண்டு. அதுவும் சுவை பற்றித்தான். வேறு டேஸ்ட்டில்! :))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எங்கள் ரசனைக்கு அதிகம் வித்தியாசம் இருக்காது என்பது எனக்குத தெரியும். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
    2. ஸ்ரீராம்,அந்த லின்கையும் சேர்த்து கொடுத்து இருக்கலாமே?தேடி தேடி மவுஸை பிடித்ததில் கை வலி வந்து விட்டது:)

      Delete
  24. மிகவும் ரசனையுடன் சாப்பிடுபவர்களால் மட்டுமே சாப்பாட்டின் அருமை பெருமைகளை இப்படி அழகாய் சிலாகிக்க முடியும். அந்தவகையில் உங்கள் பதிவு சூப்பர் கணேஷ். வெளியிடங்களில் எத்தனை உணவு வகைகளை ருசி பார்த்தாலும் நம்முடைய தென்னிந்திய உணவு அதுவும் நம் கையால் சமைத்து உண்டால் அதன் ருசியே அலாதிதான்.

    ReplyDelete
    Replies
    1. என் ரசனையுடன் ஒத்துப் போகும் என் தோழிக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  25. ” கல்யாண சமையல் சாதம் ...... அதுவே எனக்குப் போதும் ‘ பதிவு முழுக்க விருந்தின் மணம். உணவு விடுதிகளில் இன்றைய ஸ்பெஷல் என்றும் சாப்பாடு ரெடி என்றும் உணவு விவரங்களை எழுதிப் போடுவதும் படித்தவுடனேயே சாப்பிடத் தோன்றத்தான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்... நீஙகள் சொல்வது சரிதான். கவர்ந்து ஈர்க்கத்தானே எழுதிப் போடப்படுபவை அவை. தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  26. ஹா..ஹா..ஹா.. உணவை பத்தி அழகா சொல்லிருக்கீங்க சார். எனக்கு பிடித்த ஐட்டங்கள் இட்லி-(வெள்ளை)சட்டினி, தோசை-சாம்பார், மைதா (or)ரவா தோசை-சீனி, இடியாப்பம்-சீனி+பால், இந்த காம்பினேசன்கள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    :D :D :D

    டிஸ்கி: இதைப் படித்ததும் எனக்கு எதுவும் பட்டம்(?) வழங்கலாமா என்று யாரும் யோசிக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. இட்லி தவிர்த்து நீங்க சொல்லியிருக்க மத்த ஐட்டங்கள் எனக்கு ஓகேதான் பாஸித். உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  27. உணவைப்பற்றிய சுவையான பதிவு. இதோ சுவையான சாப்பாடு எது என அவ்வைப் பாட்டி வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்பவன் அளித்த உணவை உண்டு பாடிய பாட்டாம் இது.
    "வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்,
    முரமுரெனவே புளித்த மோரும், - திரமுடனே
    புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து இட்ட சோறு
    எல்லா உலகும்பெறும்".
    இது போல் மற்றவர்கள் பாடிய பாட்டையும் ‘எனது களஞ்சியத்திலிருந்து’ என்ற தலைப்பில் ‘நினைவுத்தடங்கள்’ (http://ninaivu.blogspot.in/2006/11/24_28.html) வலைப்பதிவில் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி. நீங்கள் குறிப்பிட்ட பதிவையும் படித்து ரசித்தேன்.

      Delete
  28. முழுவதும் உணவு பற்றிய அலசல் சிறப்பு .பசி ஏறுகிறது சுவையில் நன்றி. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  29. வணக்கம் நண்பரே..
    காடாறுமாதம் நாடாறுமாதமென
    விக்கிரமாதித்த வாழ்க்கையுள்ள எனக்கு
    விடுமுறையில் இருக்கையில்
    என் மனைவி சமைக்கும் அத்தனை
    சமையலும் எனக்குப் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. மனைவியின் சமையலை மிக ரசிக்கும் என் நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  30. அறுசுவை பதிவு!!
    சிலர் உணவு உண்டபின் கையை தண்ணீர் செலவின்றி 'கழுவிடுவார்கள்' அது ஹோட்டல் ஆனாலும் சரி உறவினர் வீடே என்றாலும் சரி.. இது பலரை முகம் சுளிக்க வைக்கும்...
    எனக்கும் நல்ல ருசித்து ரசித்து சாப்பிட தான் பிடிக்கும்..இப்போ பசிக்குது சார் உங்க பதிவு படிச்சதும்... நல்ல பதிவிற்கு நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  31. ரஸணை என்பது உணவு உடை இருப்பிடம்
    என அனைத்திலும் இருந்தால்தான்
    நம் காரியங்கள் அனைத்தும்
    சிறப்பாக இருக்க முடியும் என்பதுதான்
    எனது எண்ணமும்
    எந்தப் பொருள் தொடர்பான பதிவுஎன்றாலும்
    சிறப்பாக செய்து போவதன் ரகஸியம்
    இதுவாகக் கூட இருக்கலாமோ ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்னை உற்சாகத்தில் மூழ்க வைக்கும் வண்ணம் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  32. Arumayaana padhivu!! Kaiyendhi bhavan mudhal star hotels varai rusiyaana unavai thedi unda pazhaya nyaabahangalai meetuthandhu. Sameebathil malayalathil vandha salt & pepper neengal paarkavendiya padam - mozhi thadaillai yendral. Irandu saapaatu piriyargal yeppadi vaazkayil inaikiraargal yenbadhai sollum oru elimayaana thiraipadam.

    ReplyDelete
    Replies
    1. மலையாளம் மொழி சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியதுதானே... நீங்கள் குறிப்பிட்ட படத்தை நிச்சயம் பார்க்கிறேன் நண்பரே. தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  33. செம செம... :D

    எனக்கு ரொம்ப பிடித்த உணவு புளியோதரையும் தேங்காய் துவையல்

    அடுத்தது இட்லி தக்காளி சட்னி (note my honer தக்காளின்னா - tomato; திட்டுற வார்த்தை கிடையாது ஹி ஹி)

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... தக்காளின்ற வார்த்தையே இப்பல்லாம் திட்டுற வார்த்தையாயிட்டுதுல்ல... வினோதம் தான். ரசித்துப் படித்து உங்கள் ரசனையையும் பகிர்ந்ததற்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  34. அட சூப்பர் ரசனை உங்களுக்கு!

    சாப்பாடு பற்றியே சில பாடல்கள் இருக்கு. என் ரசித்த பாடல் தளத்தில் பகிர்ந்ததன் சுட்டி இங்கே.

    சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் - http://rasithapaadal.blogspot.com/2010/12/blog-post_25.html

    போஜனம் செய்ய வாருங்கள் - http://rasithapaadal.blogspot.com/2011/05/blog-post_24.html

    கேட்டு ரசியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் கேட்டு ரசிக்கிறேன் வெங்கட். ரசித்துப் படித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  35. //கரும்பாகற் குழம்பு என்றால் என்னவென்ற யோசித்ததில் வற்றல் குழம்பைத்தான் சொல்லியிருக்கிறாரோ என்று தோன்றியது//

    பாகற்காய் குழம்புனு தான சொல்லிருக்காரு... நீங்க எப்படி உங்களுக்குப் பிடிச்ச வத்தக்கொழம்பை லின்க் பண்ணிட்டீங்க :)))))

    ReplyDelete
    Replies
    1. சுபத்ரா மேடம்... பாகற்காயை குழம்புல போடுவாங்கன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. அதனாலதான் அப்படி மீனிங் எடுத்துக்கிட்டேன். பாகற்காய் குழம்பு கசந்து வழியாது? எப்படிச் சாப்பிட முடியும்? தெரியலை... ட்ரை பண்ணிப் பாக்கறேன். மிக்க நன்றிங்க.

      Delete
  36. ////ஸாதிகா said,
    //ஸ்ரீராம்,அந்த லின்கையும் சேர்த்து கொடுத்து இருக்கலாமே?தேடி தேடி மவுஸை பிடித்ததில் கை வலி வந்து விட்டது:)//

    http://engalblog.blogspot.in/2010/04/blog-post_21.html கல்யாண சாப்பாடு போட வா! லேசாக தலைப்பு மாறியுள்ளது!!!!

    http://engalblog.blogspot.in/2010/03/blog-post_8853.html இது இன்னொரு சாப்பாட்டு இடுகை! இன்னும் கற்சட்டி சமையல் 1950 களில் அடுப்புகளும், சமையலும் என்ற சுவை இடுகைகள் இட்டிருந்தோம்!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கை ஸாதிகாவோட சேர்ந்து நானும் ஒருமுறை விஸிட் அடிச்சுடறேன் ஸ்ரீராம். மிக்க நன்றி.

      Delete
  37. சாப்பாடு.....சொன்ன விதம் அழகு - பட்டம் எதுவும் வேண்டாம் என கேட்டு கொண்டதால்.... சரி வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்த. பட்டம் வழங்காது விட்ட மனச்சாட்சிக்கு என் மநம் நிறைந்த நன்றி.

      Delete
  38. //தென்னிந்தியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையை வேறு எந்த நாட்டவரும்// இதை என்னுடன் வேலை செய்யும் வட இந்தியன் படித்திருந்தால் அவ்வளவு தான்.. எனக்கும் அவனுக்கு தினசரி சண்டையே இதில் தான் ஆரம்பிக்கும்... பித்துப் போட்ட பன் அவனுக்குப் பிடிக்கும் சுட சுட இருக்கும் இட்லி பிடிக்காது....

    // ‘சபக் சபக்’ // இப்படி எங்கள் வீட்டில் யாராவது சாபிட்டால் கன்னத்தில் செமத்தியாய் விழும்

    நல்ல வேலை மதிய உணவை முடித்து விட்டு இப்பதிவை படித்தேன்... இல்லையேல் பட்டம் கொடுத்திருக்க மாட்டேன், நாள்ளு நல்ல வார்த்தைகள் கூறி இருப்பேன் ( ஹா ஹா ஹா சிரிக்க மட்டும் )

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான். நம் வீட்டு உறுப்பினர்களாக இருந்தால் அடிதான். நண்பனை என்ன செய்வது? நலலதா நாலு வார்த்தையா... உதைதான் கிடைக்கும் உனக்கு. ஹா... ஹா...

      Delete
  39. ஏவ்!(அஜீரணத்துக்கு மருந்து தேடிக்கொண்டிருக்கிறேன்!)

    ReplyDelete
    Replies
    1. வயிறு முட்டச் சாப்பிட்டு ரசித்து ஏப்பம்விட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  40. பாரதிதாசனின் பாடலும் உங்கள் சமையல் ரசிப்பும் என்னை ரசிக்க வைக்கிறது ருசியோடு அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. பாரதிதாசனினி தமிழுககு மயங்காதார் யார்? என் ரசனையும் உங்களை ரசிக்க வைத்ததில் மிகமிக மகிழ்வு எனககு. என் உளம் கனிந்த நன்றி தோழி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube