‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றத்ம் இருப்பதாக அழைத்ததால் வந்திருந்தேன். பஃபே விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விதி: முன்னோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே செய்ய வேண்டியது. அதன்படி பார்க்காத மாதிரி பார்த்து வைத்துக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டேன்.
முதல் பாத்திரத்தில் மஞ்சள் நிறத்தில் ரசமலாய் மிதந்து கொண்டிருந்தது. ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்ற பெரியவர்கள் சொல்லியிருந்த போதிலும் எந்தச் சர்க்கரை வியாதிக்காரனுக்கும் இனிப்பு ஆசை மட்டும் விடுவதில்லை. வசதியான கரண்டியால் லாகவமாக எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டேன். அடுத்து பொங்கல் (ரவா உப்புமாவாகவும் இருக்கலாம்) அதில் முக்கால் கரண்டி. பிறகு அழகிய, சிவப்பான இளம் வடைகள்- வடை சைஸில் பெரிதாகவே இருந்தது. அடுத்த பாத்திரம் இட்லி. அதன் பிறகு பளபளவென்ற ஜொலிப்புடன் மடித்து வைக்கப்பட்டிருந்த தோசை- அதில் ஒன்றையும் பக்கத்திலேயே தொட்டுக் கொள்ள வைத்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவில் அரைக் கரண்டியும் போட்டுக் கொண்டேன்.
இனி, பத்திரமாக ஒரு மேஜையை அடைய வேண்டியதுதான் என்று தீர்மானித்த போதுதான் அதிர்ச்சி. உட்கார்ந்து சாப்பிடுவதற்கான மேஜை எதுவும் காணோம். என்னைத் தவிர மற்ற எல்லோரும் அனுபவஸ்தர்கள். பஃபேக்கு பழக்கப்பட்ட புத்திசாலிகள். தட்டை லாகவமாகப் பிடித்துக் கொண்டு ஸ்பூனையோ, விரலையோ உபயோகித்து ருசித்துக் கொண்டிருந்தார். ஜாடியில் கைவிட்ட குரங்கு மாதிரி நான்தான் அத்தனை ஐட்டங்களையும் சின்னத் தட்டில் வைத்துக் கொண்டு முழித்தேனே தவிர, அவர்கள் முதலில் ரஸமலாய் சாப்பிட வேண்டியது; அதன்பின் பொங்கல்; அதன் பின்னர் வடை -இப்படி அவ்வப்போது விழுங்கிக் கொண்டிருந்தார்கள். (கணக்குப் பார்த்தால் நான் எடுத்துக் கொண்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கூட இருக்கும்.)

‘‘என்ன, செளக்கியமா?’’ என்று முதுகுப் பக்கமாய் யாரோ விசாரித்தார்கள். ‘‘ஓ, நீங்க எப்படி இருக்கீங்க?’’ என்றபடி திரும்பினேன். தட்டின் அபாயமான முனையில் ரிஸ்க்கான விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த சாம்பார் சற்றே வெளியுலகத்தைப் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. ஒரு குண்டு அம்மையாரின் காஞ்சிபுரத்தில் ஒர துளி பட்டதோ- அல்லது பட்டதாக அவர் நினைத்துக் கொண்டாரோ- ஒரு முறைப்பு முறைத்தார். ‘‘ஹி.... ஹி...’’ என்றேன். (தர்மசங்கடமான கட்டங்களி்ல கைகொடுக்கும் வடமொழி தமிழ்ச் சொல். கண்டுபிடித்தவர்: எஸ்.ஏ.பி.)
அந்தக் கணத்தில்தான் எப்படிப்பட்ட பயங்கரமான போர்க்களத்தின் நட்டநடுவே நான் இருக்கிறேன் என்று புரிந்தது. கூட்டம் எக்கச்சக்கமாய் உள்ளது. எல்லோருமே தீனிப் பண்டாரங்கள். எல்லாத் தட்டுகளிலும் வழிய வழியச் சாம்பார், சட்டினி. ஆரம்பத்தில் நான் கண்ட நாசூக்குக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. பேச்சும் வேகம்; அசைவுகளும் வேகம். ‘‘ஆயிரம் சொல்லுங்க... டோனி செய்தது மடத்தனம்தான்’’ என்று அடித்துப் பேசினார் ஒருவர். எனக்கும் அவருக்கும் சில அங்குலமே இடைவெளி. வேறொருத்தர், ‘‘அவளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு’’ என்று சொல்லி நெற்றியில் படீரென்று அடித்துக் கொண்டார். ஒரு கறுப்புக் கண்ணாடிப் பெண், ‘‘ஈஸி இன்ஸ்டால்மெண்ட்’’ என்று தன் கையை நீட்டி வளையலை இன்னொரு பெண்ணிடம் காட்டிக் கொண்டிருந்தார்.
நின்று கொண்டே, தட்டில் இருப்பதைத் தின்று கொண்டே, மறு கையையும் ஆட்டியபடி பேச சிலரால் எப்படி முடிகிறது என்ற வியப்புடன் நான் சாப்பிடவும் முடியாமல், கையை நீட்டவும் முடியாமல், தட்டைப் பிடித்துக் கொள்ளவும் முடியாமல் கோமாளி மாதிரி தடுமாறினேன். ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் தமிழர்கள் என்ற அவப்பெயர் உண்டு. ஆனால் அத்தனை உணர்ச்சி வசப்படுகிறவர்களும் இங்கே குழுமியிருந்ததுதான் ஆச்சரியம்! எனக்கு இன்விடேஷன் கொடுத்த செல்வராமன் கண்ணில் பட்டிருந்தால் நானும் உணர்ச்சிவசப்பட்டிருப்பேன். படவில்லை. இவ்வளவு அமளிகளுக்கு நடுவே ஒரு சர்வர் நீள அகலமான பெரிய ட்ரேயில் இரண்டு குடம் சாம்பாரை நிரப்பிக் கொண்டு வேகமாக நீந்தி என்னைக் கடந்து சென்றார். எனக்குக் குலை நடுங்கியது.
கொஞ்சம் சாம்பாரோ, இட்லி விள்ளலோ மேலே விழுந்துவிட்டால்தான் என்ன, அதற்கு இப்படி அலட்டிக் கொள்ள வேண்டுமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. காரணம் என்னவெனில் இந்த மாதிரி விசேஷ வைபவங்களுக்குப் போவதற்காகவே நான் வைத்திருந்த தும்பைப் பூ வெள்ளை கதர் வேட்டியும் கதர் சட்டையும் அன்றைக்கு அணிந்து கொண்டிருந்தேன். துளி கறை பட்டாலும் அக்கிரமப் பளிச்செனத் தெரியும்; ஒரு ட்ரே சாம்பார் கொட்டினால்..?
அங்கிருந்து நகர்ந்து தளத்துக்கு வரும் மாடிப்படியின் கைப்பிடி ரெய்ல்ஸில் சாய்ந்தாற்போல் நான் நின்றிருந்தேன். இறங்கிச் செல்வோரும், ஏறி வருவோரும் என் முதுகைச் செல்லமாய் உரசிக் கொண்டே போனார்கள் அல்லது வந்தார்கள். ‘‘சீச்சீ1 அங்கே போய் வாங்கித் தர்றேன். அங்கிள் வச்சிருக்கிறதை எடுக்கக் கூடாது’’ என்று ஒரு தாயின் குரல் கேட்டது. பார்த்தால் அவள் தோளிலிருந்த இரண்டு வயதுக் குழந்தை என் தட்டை- தட்டில் இருந்த எதையோ எட்டிப் பிடிக்க, தட்டிப் பறிக்க- முயன்று கொண்டிருந்தது. தாய் அதன் கையை மடக்கி மடக்கி அடக்கிக் கொண்டிருந்தாள். முள்ளின் மீது துணி விழுந்தாலும் துணியின் மீது முள் விழுந்தாலும் துணிக்குத்தான் ஆபத்து என்று ஏதோ ஒரு பழைய சினிமாவில் கேட்ட வசனம் ஞாபகத்துக்கு வந்தது. குழந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றி பெற்றாலும் என் வேட்டி சட்டைக்குத்தான் அபாயம் என்பதை உணர்ந்தபோது என் கை மேலும் அதிகமாக நடுங்கியது. காலில் எதுவோ தட்டுப்பட, கீழே பார்த்தேன். சாப்பிட்ட தட்டுகளைப் போடுவதற்காக நீல நிறத்தில் பெரிய பிளாஸ்டிக் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தட்டை அதில் வைத்தேன். கடவுளுக்கு நன்றி சொன்னேன். நடையைக் கட்டினேன்.
வயிற்றெரிச்சலான பின்கதை ஒன்று இதற்கு உண்டு. அடு்த்த வாரத்தில் ஒரு நாள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் செல்வராமனைப் பார்க்க நேரிட்டது. ‘‘சுஜியின் டான்ஸ் புரோகிராம் எப்படியிருந்தது?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அருமையாயிருந்தது. ஆனால் எனக்குத்தான் டயமில்லை. மாமனாரை ரயிலேற்றிவிட வேண்டியிருந்ததால் சும்மா அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு புறப்பட்டு விட்டேன்’’ என்றேன். ‘‘நீங்க வந்ததே பெரிய சந்தோஷம்! டிபன் சாப்பிட்டேளோல்லியோ?’’ என்றார். ‘‘சாப்பிட்டேனே...’’ என்றவன் அதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். ‘‘பஃபேயானதால சாப்பிடச் சிரமப்பட்டு விட்டேன்’’ என்று சொல்லி விட்டேன். ‘‘பஃபேயா? டைனிங் டேபிள் போட்டு, வந்தவர்களை உட்கார்த்தி வைத்து சர்வர்கள் பரிமாறும்படியான்னா ஏற்பாடு பண்ணினேன் ஸ்வாமி? போளி, பாதாம்கீர், ஸமோஸா’’ என்றவர் என் முகத்தைப் பார்த்து, ‘‘நீங்க பாலாம்பிகா ஹாலுக்குத்தானே வந்தேள்?’’ என்றார்.
‘‘ஆமாம்’’ என்றேன்.
‘‘எந்த ஃப்ளோர்?’’
‘‘இரண்டாவது ஃப்ளோர்!’’
‘‘அட ராமா! எங்காத்து ஃபங்ஷன் மூணாவது ஃப்ளோர்லன்னா நடந்தது? ரெண்டாவது ஃப்ளோர்ல ஒரு...’’
நான் மடையன்தான். ஆனால் செல்வராமன் சொல்லும் மீதியையும் கேட்டுக் கொண்டு நிற்கும் அளவுக்கு அல்ல.
-‘அம்பலம்’ மின்னிதழில் இக்கட்டுரையை

எழுதியவர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.
|
|
Tweet | ||
ஆஹா... ஃப்ளோர் மாறிப் போச்சா... ஹா...ஹா... (TM 4)
ReplyDeleteமுதல் நபராய் வந்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஅனுபவம் பேசுகிறது !!
ReplyDeleteஆமாங்க... சீனியரின் அனுபவம் நல்லாவே பேசியிருக்கு. ரசிச்ச உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஅடக்கொடுமையே ...
ReplyDeleteநேர்த்தியாக எழுதி இருந்தார் ... அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்களுக்கும் என் நன்றிகள்
ரசித்துப் படித்த அரசனுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅடடா ஃப்ளோர் மாறிப் போனது தான் போனாங்க இந்த அட்டகாசமா பண்ணுவாங்க சாப்ட்டு வந்திருக்கலாம். தற்மசங்கடமான நிலைமைதான் இது தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதோ?
ReplyDeleteஎன்ன செய்யறது...? அவருக்கு ட்ரஸ் தப்பிக்கணுமேங்கற கவலை. ரசித்துப் படித்த உங்களுக்கு மிக்க நன்றி தென்றல்.
Deleteமுதலிலிருந்து படிக்க ஆரம்பித்தவுடன் ஒரே சந்தோஷம்!கணேஷ் எழுத்து ரொம்ப பரிமளிக்க ஆரம்பித்து விட்டது என்ன அருமையான descriptions! என்று மனம் குதூகலிக்க ஒரே மூச்சில் படித்து முடித்து இறுதிப்பகுதிக்கு வந்தால்!!!
ReplyDeleteம்ம்ம் என்ன இருந்தாலும் ஜாம்பவான் என்று சும்மாவா சொன்னார்கள்!
Thank You Ganesh for sharing this nice writeup by an all time great
ம்ம்ம்... நாமள்ளாம் இந்த மாதிரி எழுத ரொம்ப நாளாகும் தலைவரே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅனுபவம்... ம்
ReplyDeleteஹா ஹா ஹா..சிரித்து முடியலே.இனி பஃபே போனால் நீங்கள் பகிர்ந்த இந்த பகிர்வு நினைவுக்கு வராமல் இருக்காது...
ReplyDeleteரசித்துச் சிரித்துக் கருத்திட்ட தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஹி ஹி ஹி ஹி! பின்கதை செம செம!
ReplyDeleteஅதானே ஹைலைட்டே... ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteரசித்து சிரிக்கும் விதத்தில் நன்றாக எழுதியிருக்கிறார்
ReplyDeleteநன்றி சார்
பகிர்வுக்கு நன்றி கணேஷ் சார்
எனது தளத்திற்கும் நேரமிருக்கும் போது வருகை தாருங்கள் நன்றி
ரசித்துச் சிரித்த உங்களுக்கு மிக்க நன்றி. நாளை அவசியம் உங்கள் தளம் வருகிறேன் நண்பா. நன்றி.
DeleteHilarious. I have also gone to one marriage and ate in another place. :)
ReplyDeleteஉங்களுக்கும் இந்த மாதிரி விசித்திர அனுபவம் உண்டா? நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி மோகன்குமார். மிக்க நன்றி.
Deleteஉங்களுடைய அனுபவமென்றுதான் நினைத்துப் படித்தேன். உண்மையில் பஃபே சிஸ்டம் எனக்கும் பிடிக்காது கணேஷ். நிதானமாக ரசித்து ருசித்து சாப்பிடவும் முடியாது. எப்போதும் ஒரு பதைபதைப்பு(தட்டு கைநழுவிடுமோ) இருந்துகொண்டே இருக்கும். அதுவும் குழந்தைகளை அழைத்துப் போயிருந்தால் பெருங்கஷ்டம். நமக்கு மட்டுந்தான் இப்படியொரு சங்கடமா என்று நினைத்திருந்த நினைப்புக்கு இப்போதுதான் அப்பாடா என்றிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி கணேஷ்.
ReplyDeleteஎன் அனுபவமும் கிட்டத்தட்ட இதே போலத்தான் கீதா. அதனால்தான் இது படித்ததும் பிடித்தது. பகிர்ந்தேன். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteபாலாம்பிகா ஹால்ல போய் ஒரு தட்டை எடுத்துண்டு எல்லா அயிட்டத்தையும் தட்டுல போட்டுண்டு தடுமாறின ஒரு பீலிங் வாசிக்கரவங்களுக்கும் வரும்படியா எழுதின விதம் அருமை. ரசித்து வாசித்தேன். :)
ReplyDeleteரசித்து வாசித்து கருத்திட்ட உங்களுக்கு மிக்க மனமகிழ்வுடன் என் நன்றி.
Deleteநல்லது தலைவரே...
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி நண்பா.
Deleteஇனிமேல் எங்கே பஃபே சாப்பிட்டாலும் கீழே சிந்தாமல் சாப்பிடுவது கடினம்; அதனால் உங்களுக்கு என் கண்டனங்கள்....
ReplyDelete[பின்னே! இது ஞாபகம் வந்து குலுங்கி குலுங்கி சிரித்தால் உணவு கீழே சிந்தாதா?]
ஆஹா... கருத்திடுதலிலும் ரசிக்க வைக்க முடியும் என்பதை அறிகிறேன் உஙகளால். மிக்க நன்றி நண்பரே.
Deleteபகிர்வுக்கு நன்றிகள்..
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteகதை அருமை...
ReplyDeleteஅருமை என்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Delete// ரவா உப்புமாவாகவும் இருக்கலாம்// என்னவென்று தெரியாவிட்டாலும் என்னவென்று தெரியாமலே எடுத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தில் தெரிகிறது நாம் தமிழர் என்று ( சீமான் கிட்ட இந்த டயலாக் பத்தி சொல்லிராதீங்க)
ReplyDelete//தர்மசங்கடமான கட்டங்களி்ல கைகொடுக்கும் வடமொழி தமிழ்ச் சொல். கண்டுபிடித்தவர்: எஸ்.ஏ.பி// அருமை
//நடையைக் கட்டினேன்// அப்போ சாப்பாடு
//அம்பலம்’ மின்னிதழில் இக்கட்டுரையை
எழுதியவர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள்.
// அவர் எழுத்துகளைப் போலவே உங்கள் எழுத்துக்களும் இருப்பதன் மாயம் என்ன வாத்தியாரே,... நீங்களே உங்கள் அனுபவத்தை எழுதியது போல் இருந்த்தது . சற்றும் வித்தியாசம் இல்லை
அந்த ஜாம்பவானோடு என்னை ஒப்பிட்ட உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி நண்பா.
Deleteஹஹஹா... சார் இதேபோல என் அக்கா ஒருமுறை அவளுடைய மைத்துனர் நிச்சயதார்த்த விழாவிற்கு வீடு மாறி சென்று மினி tiffan முடித்துவிட்டு வந்தாள்...
ReplyDeleteஅட... இந்த அனுபவம் பலருக்கு இருந்திருக்கும் போலருக்கே... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஹ ஹ ஹ ....சரியா போச்சு
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஇனிமேல எங்க ப்ஃபே விருந்துக்கு போனாலும் இந்தப்பதிவு தான் ஞாபகத்தில் வரும். நானும் இதில் ரொம்ப அவஸ்தைபட்டதை நாயர்வீட்டு கல்யாணம் பகுதியில் சொல்லி இருதேன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவாரசியமான அனுபவங்கள்தான்
ReplyDeleteஆம். அந்தப் பதிவை ரசித்துக் கருத்திட்டிருக்கிறேன் நான். இதை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசிரிக்க வைத்த அனுபவம் உங்க அனுபவமோன்னு நினைச்சேன்! ரா.கி.ர.வோடுதுன்னாலும் ரசிக்க வைத்தபதிவு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஉங்களுடைய அனுபவம் என நினைத்து இரசித்து படித்து முடிக்கும்போதுதான் தெரிந்தது அது திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களுடைய அனுபவம் என்று! வரிக்கு வரி நகைச்சுவை இழைந்தோடிய பதிவைத் தந்தமைக்கு உங்களுக்கு நன்றி!
ReplyDeleteவரிக்கு வரி இழைந்தோடிய நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஆஹா.... ரா கி ர வா....! அபாரம். எனக்கும் முதலிரு முறை இந்த அனுபவம் உண்டு என்றாலும் அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்த முறைகளில் ஒன்றை எடுத்துக் காலி செய்து விட்டு அடுத்ததற்குப் போகக் கற்றுக் கொண்டு விட்டேன்!!!
ReplyDeleteநானும் உங்களைப் போல்தான் ஸ்ரீராம். பழக மிக சிரமப்பட்டேன். இப்ப கொஞ்சம் பரவாலலை. மிக்க நன்றி.
Deleteகடைசியல ஒரு சூப்பர் பஞ்ச் வச்சுட்டாரில்ல
ReplyDeleteரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteகதை வாசிக்கவே வேண்டாமே.தலைப்பே ஒருமாதிரிச் சிரிப்பைக் கொண்டுவருது.பிறகென்ன...உங்க தெரிவுதானே.சிரிக்காமல் விடுவமோ ஃப்ரெண்ட் !
ReplyDeleteசிரித்து மகிழ்ந்த என் தோழிக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஅவர் ரசித்துச் சாப்பிட்டாரோ இல்லை
ReplyDeleteஅவர் அவஸ்தை படிக்க வெகு சுவாரஸ்யம்
(அடுத்தவர் கஸ்டம் எப்போதும் சுவாரஸ்யம்தானே )
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deletetha.ma 13
ReplyDeleteநீங்களும் நகைச்சுவை வித்தகரல்லவா!உங்கள் இக்கட்டான அனுபவம் என்று எண்ணிப்படித்துகொண்டே வந்தால்,கடைசியில் ரா,கி,ரா, என்று போட்டு விட்டீர்கள்.அருமை
ReplyDeleteரசித்துப் படித்து அருமை என்ற உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteவணக்கம் வலையுலக நண்பர்களே,
ReplyDeleteமதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இணையுங்கள் நண்பர்களே
http://maduraibloggers.blogspot.in/
நன்றி பால கணேஷ். அருமையான பகிர்வு. ரா.கி.ரா உண்மையிலேயே ஒரு ஜாம்பவான் தான்...
ReplyDeleteஜாம்பவானை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteத.ம.16
ReplyDeleteஉங்கள் கதை படித்தது போல் இல்லை உடனிருந்து அனுபவித்தது போல் இருக்கிறது Sir!
ReplyDeleteநகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய யுவராணிக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஹா ஹா ஹா ஹா பஃபே சாப்பிடும்போது பிளேட்டோடு கீழே விழுந்த ஆட்களும் இருக்கிறார்கள் அண்ணே...!
ReplyDeleteபலருக்கும் பொதுவான அனுபவத்தை எழுதும் போது நகைச்சுவை வெல்கிறது. மிக்க நன்றி நண்பா.
Deletesuperb
ReplyDeleteரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.
DeleteSalutations to Raa.Ki.Ra. - R. J.
ReplyDeleteஆஹா... நான் கூட உங்களுக்குத்தான் இது நடந்துச்சோனு நெனச்சேன்..ம். கடைசில எனக்குத்தான் பல்பு! செம காமெடி சார்! பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇந்தக் கட்டுரை வந்த சில நாட்களிலேயே ரா.கி.ர. அமரர் ஆகிவிட்டது பெரும் சோகம். - ஜெ.
ReplyDeleteரா.கி.ர.... என்ன அற்புதமான எழுத்து....
ReplyDeleteபஃபேயில் நம் ஊர் உணவு எவ்வளவோ பரவாயில்லை... இங்கே மொத்தமான தந்தூரி ரொட்டியும் சப்ஜியும் நின்று கொண்டு சாப்பிடுவதற்குள் போராட்டம் தான்.... :)
ஆனால் பழகிவிட்டது கணேஷ்....
சரியான காமடி ..
ReplyDeleteபஃபே சிஸ்டம் கொஞ்சம் எரிச்சல் தான்
சில சுலபமானவகைகள் சாப்பிட ஈசி , வெங்கட் சொல்லுவது போல் தந்தூரி ரொட்டி சப்ஜி ஐய்யோ அதோடு சண்டைபோடவதுகுள் போதும் போதும் என்றாகிடும்,
நான் பொறுமையாக ஒரு டேபுளை தேடி போய் உட்கார்ந்து சாப்பிடுவது