நானும், ‘அவரும்!’
கோவையிலிருந்து என் நண்பன் விஜயன் போன் செய்தான். அவனும் அவன் நண்பன் ராமசுப்ரமணியனும் அன்றிரவு சென்னை வருவதாகவும், ராமசுப்ரமணியன் எழுத்தாளர் ............ன் தீவிர விசிறி என்பதால் மறுநாள் ஞாயிறன்று அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டு. அந்த எழுத்தாளரை எனக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும், அவரின் போன் நம்பரைத் தேடிப் பெற்று டயல் செய்தேன். அவரே எடுத்தார். நான் விஷயத்தைச் சொன்னதும்... ‘‘வாசகரைச் சந்திப்பது என் பாக்கியமல்லவா? நாளைக் காலை அவசியம் வாருங்கள்’’ என்றார். நான் மகிழ்வுடன் கோவைக்கு போன் செய்து என் நண்பனுக்கு விஷயத்தைச் சொல்லி விட்டேன்.
நான் அந்த எழுத்தாளர் எழுதிய கதைகளை நிறையப் படித்ததுண்டு. மனித உறவுகளையும், வாழ்க்கை குறித்த அக்கறையுடனும் எழுதும் அவர் எழுத்தின் மேல் எனக்கு மிக மதிப்பு உண்டு. அவரின் எழுத்துக்களைப் படித்து தீவிர விசிறியான பல வாசகர்கள் அவரை ஞானகுரு என்று கொண்டாடுவார்கள். அத்தகைய மதிப்புமிக்க எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரைச் சந்திக்கப் போகும் மகிழ்வு என்னுள் ததும்பியது. மறுதினம் காலையில் அவர்கள் இருவரையும் அவர் வீட்டிற்கு அழைத்தச் சென்றேன்.
மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் அவர். என்னை அறிமுகம் செய்து கொண்டு, என் நண்பர்கள் இருவரையும் அறிமுகம் செய்வித்தேன். ராமசுப்ரமணியம் அவரைச் சந்தித்த மகிழ்வில் அவரின் கதைகளைப் பற்றிப் பேச, அவர் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டு, இடையிடையே சில அறிவுரைகளையும் அவனுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த நான் அவர் பேசும் விதத்தையும், நொடிக்கு நொடி மாறும் அவரது முகபாவங்களையும் ரசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். தன் வாசகனுடன் நீண்ட உரையாடல் நடத்திக் கொண்டிருந்த அவர், திடீரென்று என் பக்கம் திரும்பி, ‘‘இவன் என்ன பெரிய புடுங்கி மாதிரி அட்வைஸ் பண்ணிட்டிருக்கான்னுதானே நீங்க இப்ப மனசில நினைக்கறீங்க?’’ என்று கேட்டார்.
தூக்கிவாரிப் போட்டது எனக்கு. ‘‘இல்லை ஸார்... நான் அப்படியெல்லாம் நினைக்கக் கூடியவன் இல்லை. உங்களோட பேச்சையும், முகபாவங்களையும் ரசிச்சுப் பார்த்துட்டிருந்தேன். என் மனசுல நீங்க சொன்ன மாதிரி நினைப்பு ஓடலை. வேறொரு விஷயம் ஓடிட்டிருந்தது. அதை உங்ககிட்ட கேக்கலாமா?’’ என்றேன். அவருக்கு ஏன் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்பதும், என்னை ஏன் அப்படிக் கேட்டார் என்பதும் எனக்குக் குழப்பமாகவே இருந்தது. ‘‘எதுவா இருந்தாலும் கேளுங்க’’ என்றார்
அவர். நான் சொன்னேன்: ‘‘ஸார்! விகடன்ல ஒருசமயம் சிறுகதைப் போட்டி வெச்சிருந்தாங்க. பரிசு மிகப் பெரிய தொகைங்கறதால கோவைல என்கூட வேலை பார்த்துட்டிருந்த முத்துசாமிங்கற நண்பன் லீவு போட்டுட்டு கன்னியாகுமரில (அவன் சொந்த ஊர் நெல்லை) ஒரு தனி இடத்துல உக்காந்து யோசிச்சு கதை எழுதிட்டிருந்தானாம். அப்ப கடற்கரைல நீங்க தனியா நடந்து வர்றதைப் பார்த்திருக்கான். உடனே உங்ககிட்ட ஓடிவந்து மேல்மூச்சு வாங்க, ‘ஸார்... நான் உங்க தீவிர ரசிகன் ஸார். உங்க கதைல்லாம் படிச்சிருக்கேன்’ன்னு சொல்லிருக்கான். நீங்க ஒருமுறை நிமிர்ந்து பார்த்து, ‘படி’ ன்னீங்களாம். அவன் பரசவத்தோட, ‘உங்களை இங்க பாப்பேன்னு நினைக்கவே இல்ல ஸார். உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் ஸார்’ன்னானாம். நீங்க ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்து, கைய உயர்த்தி, ‘சந்தோஷப்படு!’ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு நடந்து போயிட்டீங்களாம். அவன் திகைச்சுப் போய் நின்னுட்டானாம். பின்னொரு நாள்ல இதைச் சொல்லி ‘அந்த எழுத்தாளர் ஒரு கர்வி’ன்னான். ஆனா நீங்க பேசறதை, பழகறதைப் பார்த்தா அப்படித் தெரியலையேன்னு தான் நான் யோசி்ச்சிட்டிருந்தேன்’’ என்றேன்.
‘‘உங்க நண்பனுக்குப் புரியவில்லை. ஒரு எழுத்தாளன் தனிமையில சிந்திச்சபடி நடந்து வந்துட்டிருக்கறப்ப சிந்தனை கலைக்கப்பட்டால் ஏற்படும் எதிர்விளைவு அது. நானென்ன சினிமா நடிகனா என்னைப் பார்த்ததும் பரவசப்பட்டு பேச்சு வராமல் திகைக்கற அளவுக்கு? என் கதைகளைப் பத்திப் பேசியிருந்தா நானும் நின்னு பேசியிருப்பேன். வெறுமே பார்த்ததுலயே பரவசம், சந்தோஷம்ங்கறவங்க கிட்ட நான் என்ன பேசிட முடியும் சொல்லுங்க...’’ என்றார். அவர் சொன்னது எனக்கு மிகச் சரியாகப் பட்டதால் ஆமோதித்தேன். அதன் பின்னர் ஒரு மணி நேரம் அவருடன் உரையாடிவிட்டு நாங்கள் மூவரும் விடைபெற்றபோது வாசல்வரை வந்து வழியனுப்பினார்.
பின்வந்த காலத்தில் அவரின் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர் ஒருவர் எனக்கு நண்பராகி அவருக்கு பல புத்தகங்கள் லேஅவுட் செய்து கொடுத்தேன். அப்போது இந்தச் சம்பவத்தைச் சொன்னேன், "ஏன்யா உங்க எழுத்தாளரு அப்படிச் பேசினாரு?" என்று கேட்டதற்கு அவர் மிக வியந்தார். எழுத்தாளர் இயல்பில் நல்ல குணமுடையவர் என்றும், அனைவரிடமும் அன்பாகப் பேசுபவர் என்றும், உங்களிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க வாய்ப்பேயில்லையே என்றும் சொன்னார். உண்மையில் ஏன் என்னைப் பார்த்து அப்படிக் கேட்டார் அவர் என்பது இன்றும் எனக்குள் ஒரு வியப்புக் குறிதான்! நான் அவரை வெறித்த விதம் அநாகரீகமாக இருந்திருக்கும் போலும் என்றெண்ணி அதை நான் திருத்திக் கொண்டேன். அதன்பின் அந்த எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை.
===================================
‘நடை வண்டிகள்’’ தொடர் இத்தடன் நிறைவு பெறுகிறது. இறையருளினால் சில எழுத்தாளர்களை நண்பர்களாகப் பெற்ற நான் அந்த அனுபவங்களிலிருந்து நான் கற்றுக் கொண்ட விஷயங்களையும், எழுத்தாளர்கள் பற்றிய நான் அறிந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தொடரை எழுதத் தொடங்கினேன். கற்றதும் பெற்றதுமான என் அனுபவங்களை நீங்கள் அனைவரும் ரசித்து வரவேற்று என்னை உற்சாகப்படுத்தியது என்றும் என் மனதிலிருந்து அகலாமல் பசுமையாக இருக்கும். உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகமிக நெகிழ்வுடன் என் இதயம் நிறைந்த நன்றி.
- நிறைவு -

|
|
Tweet | ||
உங்களுடன் நடைவண்டியைத் தொடர்ந்து வந்து
ReplyDeleteபல நல்ல எழுத்தாளர்களின் அனுபவங்களை அறிந்து நல்லா
நடக்கப் பழகி விட்டேன். நிறைவு சிறு வருத்தம் தந்தாலும்
வேறொரு மிதிவண்டி வராமலா போகும் என்ற நம்பிக்கையுடன் ....
நடைவண்டிக்கு அடுத்து இன்னொரு தொடர் தருவேன் என்ற என் மீதான உங்களின் நம்பிக்கை நெகிழ வைக்கிறது. விரையில் சுவாரஸ்யமான வேறொரு விஷயத்துடன் வருகிறேன் தோழி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteசிறப்பான தொடர் சார்... முடிந்து விட்டதே என்று ஒரு சிறு வருத்தம்...
ReplyDeleteஇன்னுமொரு தொடர் வராமலா போகும்...?
வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)
தொடர் முழுவதும் உடனிருந்து ஆதரவு தந்த நீங்கள் அடுத்த தொடருக்கும வரவேற்புச் சொல்வது மகிழ்வை அளிக்கிறது நண்பரே... என் இதயம் நிறை நன்றி உங்களுக்கு.
Deleteதொடர் நல்லா சுவரசியமாக இருந்தது. ஏன் இப்பவே முடிக்கிரீங்க?
ReplyDeleteஏன்யா இன்னும் இழுக்கறன்னு யாரும் கேட்டுரக் கூடாதில்லம்மா... எழுத்தாளர் அனுபவங்கள் அவ்வளவு தான்ங்கறதால. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteகற்றதும் பெற்றதுமான அனுபவங்களை ரசித்து பகிர்ந்த அருமையான தகவல்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஇந்த நடைவண்டிப் பயணத்தில் சற்றும் சோர்வின்றி நான் பயணிக்க நீங்களும் ஒரு முக்கியக் காரணம். உங்களுக்கு மனம் நிறைய மகிழ்வுடன் என் நன்றி.
Deleteஅனுபவங்களை பகிர்ந்தவிதமமருமை அண்ணே. எழுத்தாளர்கள் பலரை சிநேகிதர்களா பெற்றதற்கு வாழ்த்துகள். எல்லோருக்கும் இந்த குடுப்பின கிடைப்பதில்ல.:)
ReplyDeleteஆமாம் தோழரே. எனக்குக் கிடைத்த வரம் என்றுதான் கருதுகிறேன் நான். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றி.
DeleteVery good posts. But very sad to note that it has come to an end so soon. Hope you will utilise this title for writing about people who are famous in some other field.
ReplyDeleteஏன் சீக்கிரம் முடிந்து விட்டது என்று நீங்கள் கேட்கும் கேள்வி என்னை உற்சாகம் கொள்ளச் செய்கிறது நண்பரே. விரைவில் மற்றொரு சுவாரஸ்யத்துடன் தொடரலாம். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅருமை வாத்தியாரே... நிறைவு என்ற ஒன்று தான் அதிர்ச்சி அளிகிறது... இருந்தும் நடை வண்டியைப் போல் வேறொரு சுவாரசியமான அனுபவத் தொடரை உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்....
ReplyDeleteஅந்த "ன்" என முடியும் கன்னியாகுமரி எழுத்தாளர்... கன்னியாகுமரி என்ற புத்தகத்தை எழுதிய கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வெறும் பெயரில் ஜெயத்தை உடைய மோகன எழுத்தாளர் என்று நினைக்கிறன்... சரி தானா?...
தவறென்றாலும் தவறில்லை... அவர் யார் என்று சொல்லுங்கள் இல்லை தூக்கம் வராது
அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும சீனுவுக்கு என் மனம் நிறைந்த நன்றி. விரைவில் தொடங்கிடலாம். நீங்கள் ஊகித்த எழுத்தாளர் அல்ல அவர்.
Deleteநிறையப்பேர்,நிறைய அனுபவங்கள்....ஏன் ஃப்ரெண்ட் களைச்சுப்போனீங்களோ....நிறைவு போட்டு ... இனியும் நடைவண்டி உங்களோடு தொடரும் !
ReplyDeleteநீங்கள்லாம் கூட இருக்கும் போது களைப்பு வருமா ஃப்ரெண்ட்? அனுபவங்கள் அவ்வளவுதான்ங்கறதால முடிச்சுட்டேன். இனி வேறொரு பயணத்தை தொடங்கிட வேண்டியதுதான். மிக்க நனறி.
Deleteசுவாரஸ்யமான தொடர் நிறைவு பெற்றது வருத்தம் என்றாலும் சிறப்பானமுறையில் உங்கள் அனுபவங்களை கற்றுக் கொண்டது எங்களுக்கும் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
அனுபவங்களை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Delete
ReplyDeleteஉங்க அனுபவத்தை பகிர்ந்துக்கிட்ட விதம் ரொம்ப நல்லா இருச்சிச்சி சார். ஒண்ணு விடாம எல்லாத்தையும் படிச்சேன். சுவாரஸ்யமான நடை. இன்னும் புதுசா நிறைய எழுதுங்க.
தாஸ்... நீங்க எல்லாத்தையும் படிச்சீங்கன்றதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். உங்களப் போல நண்பர்கள் தட்டிக் கொடுத்தா... எழுதிக் குவிச்சிட மாட்டோமா என்ன... மிக்க நன்றி.
Deleteஇன்னும் பலரின் தொடர்பு உங்களுக்கு இருந்திருக்க வேண்டுமே.நிறுத்திவிட்டீர்களெ!அதுவும் அவர் யார் என்று சொல்லாமலே!ராயப்பேட்டைக்காரரா?
ReplyDeleteஇப்போது பழகி வருபவர்களை வைத்து சிலகாலம் சென்றபின் இரண்டாம் பாகம் எழுதிடலாம் செ.பி,ஸார். அவர் ராயப்பேட்டைவாசி இல்லை. மயிலாப்பூர் வாசி.
Deleteஎனக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
ReplyDeleteநாங்கள் தூர இருந்து எழுத்துக்களை ரசித்த பலஎழுத்தாளர்களுடன் நட்புள்ள உங்களுடன் பழகுவது எமக்கு பெருமைதான் பாஸ்
ReplyDeleteசில பகுதிகளை நான் வாசிக்காவிட்டாலும் பெரும்பாலும் வாசித்தேன் அருமை
ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.
Deleteநிறைவு செய்து விட்டீர்களா? கை வீசம்மா கை வீசு என்று உங்களுடன் வந்து கடைசி வரை படித்து சந்தோஷித்தாயிற்று.
ReplyDeleteஆரம்பம் முதல் கடைசி வரை என்னுடன் வந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஎழுத்தாளர்களுடன் பழகிய அனுபவங்களை எங்களுக்கு சுவை மாறாமல் தந்து நிறைவு செய்தமைக்கு நன்றி கணேஷ் சார்
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபலரோடு பழகிய அனுபவத்தை இனிதே எழுதிச்சென்ற நடை வண்டி இன்று இறக்கம் வந்துவிட்டது இறங்கலாம் என்பது மனதில் ஒரு தாக்கம் ஆகிவிட்டது!ம்ம் பலரின் அனுபவம் ஒரு சுவாரசியம் இன்னொரு வண்டி வர வேண்டும் என்பதே என் ஆவல்!
ReplyDeleteவிரைவில் திட்டமிட்டு மீண்டும் வர உத்தேசம் நேசன். என்னைத் தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅந்த எழுத்தாளரின் அகம்பாவமும் crankiness உம் ஜகப்ரசித்தம்.எழுத்துடன் மட்டும் தொடர்பு வைத்துகொள்ளவேண்டிய
ReplyDeleteஒரு சில எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்த பா.......ன்
நடைவண்டி நல்லா இருந்தது.
சபாஷ். அந்த எழுத்தாளரை சரியாக இனம் கண்டு கொண்டது நீங்கள் ஒருவர்தான் நண்பரே. உங்களின் கருத்துடன் ஒத்துப் போகிறேன் நான். நடைவண்டிப் பயணத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் இதய்ம் நிறை நன்றி.
Deleteநடைவண்டியில் உங்களுடன் நாங்களும் பயணித்தது நிறைவாக இருந்தது.
ReplyDeleteஎன்னுடன் தொடர்ந்து பயணித்து வந்து இந்தப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஅடடா என்ன இப்படி சொல்லிட்டிங்க அதெல்லாம் முடியாது நடை வண்டிய புதுசா மாத்தி மாட்டு வண்டி இது போல எப்படிவேனா மறு பயணம் வாங்க உங்களுக்கும் எழுத்தாள நண்பர்களுக்குமான பயணத்திற்கு முடிவே இருக்க கூடாது.
ReplyDeleteஆஹா... உங்களின் எண்ணச் சிதறல் என்னை கொள்ளை கொள்ளையாய் மகிழ வைத்து விட்டது தென்றல். விரைவில் மீண்டும் தொடர்ந்து விடலாம். மிக்க நன்றி.
Deleteஉங்களின் நடைவண்டிகள் தொடர் மிக அருமை!! ஒரே வருத்தம் விரைவாக முடிந்துவிட்டதே என்றுதான்!!! இது போன்ற பயனுள்ள ரசனைமிகுந்த தொடர்களை உங்களிடம் எதிர்பார்கிறேன் சார்... நல்வாழ்த்துக்கள் (ம) நன்றிகள் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து பொதுவுடைமையாக்கியதர்க்கு!!!!
ReplyDeleteஎன் அனுபவங்களை ரசித்துக் கருத்திட்டதோடு இதுபோன்று தொடர்களை எதிர்பார்ப்பதாகக் கூறி ஊக்கமளிக்கும் சமீராவுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள். விரைவிலேயே மீண்டும் தொடரில் சந்திக்கலாம்.
Deleteஅந்த எழுத்தாளர் பெயரை சொல்லவே இல்லையே சார்...
ReplyDeleteவெளிப்படையாக பெயரைச் சொல்ல மகிழ்வான அனுபவம் அல்லம்மா அது. அதனால்தான் சொல்லவில்லை.
Deleteஓ... இன்னும் நான் கவனிக்கவில்லை. பார்த்து விடுகிறேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
ReplyDeleteகணேஷ் நடை வண்டிகள் தொடர் முழுவதும் படிச்சேன், ரொம்ப நல்லா இருந்திச்சி... எழுத்தாளர்களுடனான நட்பு பற்றிய தொடரில் கடைசியா வந்த எழுத்தாளர் யாருன்னு சொல்லாம (பட் எனக்குத் தெரியும்??)அனுபவத்தை மட்டும் சொன்னீங்க பாருங்க...வெரி வெரி நைஸ். குட்.
ReplyDeleteகணேஷ்!நான் ராயப்பேட்டைக்காரர் என்ரு குறிப்பிட்டது அவரைத்தான்.70களில் டீச்சர்ஸ் காலனி,பின் லாயிட்ஸ் ரோடு.எனது பரிச்சயம் அவரோடு ஏற்பட்டது,டீச்சர்ஸ் காலனிக்கு அருகில் உள்ள ஜகதாம்பாள் காலனியில்தான்.அந்த நாள் கணையாழியில் ராயப்பேட்டை பாலு என்ற பெயரில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் இன்கடைசிப்பக்கத்துக்கு கமெண்ட் கூடக் கொடுத்திருக்கிறார்.
ReplyDeleteபுது template கண்ணுக்கு இதமாக இருக்கிறது
ReplyDeleteசென்னையில் சந்தித்தபோது நீங்கள் சொன்ன பதிவு. “நான் கண்டுபிடித்து விடுவேன்” என்று சொன்ன உங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை... :)
ReplyDeleteபதில் ஏற்கனவே வந்துவிட்டதால் மீண்டும் சொல்லவில்லை.
நடைவண்டிப் பயணம் அதற்குள் முடிந்துவிட்டதே என்று தான் வருத்தம். மீண்டும் சில நாட்கள்/மாதங்கள் கழித்து உங்கள் நடைப்பயணம் தொடரட்டும்....
ரசித்து படித்தேன்
ReplyDeleteBlogging Tools