Saturday, August 18, 2012

மொறுமொறு மிக்ஸர் - 10

Posted by பால கணேஷ் Saturday, August 18, 2012
                           
                             எலும்புகள் சொன்ன கதை!

ர் ஸிட்னி ஸ்மித் என்ற அறிஞர் எடின்பரோ சர்வகலாசாலையில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு பல ஆண்டுகள் கெய்ரோவில் சவப் பரிசோதகராகவும் இருந்தவர் அவர். பல பெரிய கொலை வழக்குகளில் இவருடைய ஆராய்ச்சி மிகவும் பயன்பட்டிருக்கிறது.

ஒரு நாள் மூன்றே மூன்று எலும்புகள் அடங்கிய ஒரு சிறு பொட்டலத்தை போலீசார் அவரிடம் அனுப்பினார்கள். ஒரு பழைய கிணற்றைச் சுத்தம் செய்யம் போது அவை கிடைத்தனவாம். போலீசாருக்கு ஒரு சந்தேகமும் முதலில் அதைப் பற்றி எழவில்லை. தற்செயலாக ஆடு, மாடு ஏதாவது விழுந்து இறந்திருக்கும் என்று நினைத்தனர். இருப்பினும், ஸர். ஸிட்னியின் பரிசோதனைச் சாலைக்கு வழக்கப்படி அனுப்பி, ‘‘இவைகள் மனித எலும்புகளா?’’ என்று விசாரித்தனர்.

எலும்புகளைப் பரிசோதித்த பின்பு ஸர்.ஸிட்னி சொன்ன தகவல்கள் இவை: 1) அந்த மூன்றும் ஒரு பெண்ணின் எலும்புகள் 2) அந்தப் பெண் குட்டையாகவும், ஒல்லியாகவும் இருந்தவள் 3) வயது சுமார் 23 இருக்கும் 4) மூன்று மாதத்திற்கு முன்பு இறந்திருக்கிறாள் 5) மணமானவள் 6) ஒரு குழந்தைக்குத் தாய் 7) அவள் இடதுகால் சற்றுக் குட்டை, சாய்ந்து சாய்ந்து நடக்கிறவள் 8) துப்பாக்கியிலிருந்த ரவை வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது  9) ஒன்பதடி தூரத்திலிருந்து நேர்முகமாகத் துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள் 10) அவளைக் கொன்றவன் எதிரே சற்றே இடது பக்கம் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ சுட்டிருக்கிறான் 11) சுட்டவுடனேயே அவள் இறக்கவில்லை, ஒரு வாரம் அல்லது பத்து நாள் கழித்து இறந்திருக்கிறாள்.

-இந்தத் தடயங்களைதக் கொண்டு போலீஸார் துப்பறிந்து குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள். குற்றவாளி அந்தப் பெண்ணின் தந்தைதான்! வீட்டில் அவர் துப்பாக்கி ரவை செய்வதுண்டு (லைசென்ஸ் பெறாமல்). மூன்று மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது தற்செயலாக அவர் மகள் மீது ஒரு ரவை பாய்ந்து விட்டது என்றும், புண் புரையோடி அவள் இறந்து விட்டாள் என்றும், போலீசுக்குப் பயந்து அவளை ஒரு பாழ் கிணற்றில் போட்டு விட்டதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

ஸர். ஸிட்னி மூன்று எலும்புகளைக் கொண்டு எப்படி இவ்வளவு விவரங்களை சரியாக ஊகித்துச் சொன்னார்? நீஙகளும் கொஞ்சம் யூகித்து, கண்டுபிடியுங்களேன்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

ரு எழுத்தாளர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நேரத்தில் கதை எழுத உட்கார்ந்தார். இப்படி எழுதினார்:

பாவம் அந்த போதைப் பெண்! அவள் கணவன் விக்‘ரம்’ அவளைக் கொல்ல வருவதாக மனப்‘பிராந்தி’ அடைந்து, பயத்தில் ‘பீரி’ட்டு அலறி, ஓடியதில் ‘கள்’ தடுக்கி விழுந்து விஸ்‌கி விஸ்கி அழுதாள்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

பெரிய பாராக்களையும், நீண்ட கதைகளையும் படிக்க இந்நாட்களில் யாருக்கும் அவகாசமில்லை. சின்னச் சின்ன வாக்கியங்களில் எழுதிக் கொண்டிருக்கிறோம். அன்றைய காலகட்டத்தில் சாண்டில்யன் எழுதுகிற மாதிரி நீஈஈஈஈஈண்ட வாக்கியங்கள் அமைத்து எழுதுவது சஜகமாயிருந்திருக்கிறது. முண்டாசுக் கவிஞன் எழுதிய ஒரு நீண்ட வாக்கியத்தைப் படியுங்கள்:

ங்ஙனம் மனித ஜாதிக்கே பொது இகழ்ச்சியாகவும், பொதுக் கஷ்டமாகவும், இந்தியர்களுக்கு விசேஷ அவமானமாகவும், விசேஷ கஷ்டமாகவும் மூண்டிருக்கும் இந்த வறுமையாகிய நோய்க்கு ஒரு மருந்து கண்டுபிடித்து, அந்த நோயை நீ்க்கி, இந்தியாவிலும் பூ மண்டலத்திலும் சகல ஜனங்களுக்கும் ஆகார சம்பந்தமாகப் பயமிலாதபடி அரை வயிற்றுக் கஞ்சியேனும் நிச்சயமாகக் கிடைப்பதற்கு வழிகள் எவை என்பதைப் பற்றி ஒவ்வொரு புத்திமானும் ஆராய்ச்சி செய்தல் இவ்வுலகத்திலுள்ள எல்லா அவசரங்களைக் காட்டிலும் பெரிய அவசரமென்று நான் கருதுகின்றேன்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

முதிர் இளைஞன் ஒருவனுக்குக் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை. அவன் நண்பன் ஒருவன் அதற்கு யோசனை சொன்னான். ‘‘டேய், நீ எந்தப் பெண்ணைப் பத்தி உன் அம்மா கிட்டே சொன்னாலும் வேண்டாம்னு உங்கம்மா மறுத்துடுறதாச் சொல்றே. ஒண்ணு பண்ணு... உன்னுடைய அம்மாவைப் போலவே தோற்றத்திலும் குணத்திலும் உள்ள ஒரு பொண்ணைப் பார்த்து விட்டாயானால் அம்மாவால மறுத்துப் பேசவே முடியாது. அதை வேணா ட்ரை பண்ணிப் பாரேன்...’’

ஒரு வாரம் கழித்து நண்பனைச் சந்தித்ததும் அவன் கேட்டான்: ‘‘என்னடா... நான் சொன்னபடி செஞ்சியா?’’

‘‘அலையா அலைஞ்சு தேடிக் கண்டுபிடிச்சேன்டா...’’

‘‘‘வெரிகுட்! நிச்சயதார்த்தம் எப்போடா?’’

‘‘அடப்போடா... அந்தப் பொண்ணை எங்கப்பா வேண்டாம்னு சொல்லிட்டாருடா. அவ்வ்வ்வ்வ!’’

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

சின்னச் சின்ன ட்வீட்டு! சிங்கார ட்வீட்டு! குறு வரிகளில் நறுக்கான ட்வீட்டுகள் சில இங்கே...

* நகரங்களில் கொஞ்சமும் கவலையின்றி ஒன்று மிகப் பணக்காரர்கள் வசிக்க முடியும்; அல்லது மிக ஏழைகள் வசிக்க முடியும்.

* கார் ஓட்டுவதை விடவும் விமானம் ஓட்டுவது ஆபத்து குறைவானது.

* மாற்று அறுவை சிகிச்சை செய்து இதயங்களைக் கூட மாற்றி விடலாம். ஆனால் ஜலதோஷத்தைப் போக்க முடியாது.

* ஏழைகளே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதை விட செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது சுலபம்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

ஸர். ஸிட்னி கண்டுபிடித்த விதம்:

1) போலீஸார் தந்த மூன்று எலும்புகளில் இரண்டு இடுப்பு எலும்புகளாகவும், ஒன்று அவைகளை இணைக்கும் நடு எலும்பாகவும் இருந்தன. அந்த மூன்றையும் பொருத்திப் பார்த்தால் இடுப்பின் கீழ்ப் பாகம் சரியாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அது பெண் என்பது சுலபமாகப் புரிந்தது. 2) அவை சிறியதாகவும், லேசாகவும் இருந்ததால் அந்தப் பெண் குட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்திருப்பாள். 3) இடுப்பு எலும்புகள் சாதாரணமாக 22 வயதிலிருந்து 25 வயதுக்குள் ஒன்று சேரும். ஆனால் அவை சரிவரச் சேராததனால் வயது உத்தேசமாக 23 இருக்கலாம் என்பது யூகம். 4) அந்த எலும்புத் துண்டில் கொஞ்சம் மாமிசம் ஒட்டிக் கொண்டிருந்தது. அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 3 மாதங்களுக்கு முன் இறந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். 5,6) எலும்புகளில் பள்ளங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு அவள் மணமானவள், தாய் என்பதை அறிய முடிந்தது. 7) வலது இடுப்பு எலும்பு இடப்பக்கத்தை விட பளுவாகவும், பெரியதாகவம் இருந்தது. அதனால் வலது பக்கம்தான் உடம்பின் பளுவைப் பல வருடங்களாகத் தாங்கிக் கொண்டிருந்தது என்று முடிவு செய்தார். ஒரு பக்கமாகச் ‌சாய்ந்து நடந்தால்தானே அப்படி ஏற்படும்?  8) வலது பக்கத்து எலும்பில் துப்பாக்கியின் ரவை நன்றாகப் பதிந்திருந்தது. எடுத்துப் பரிசோதித்ததில் அது வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தது. 9,10) எலும்பில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து எந்தத் திசையில், எவ்வளவு தூரத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று யூகித்தார். 11) காயம் எலும்பில் நன்றாக ஊடுருவிப் பரவியிருந்ததால் அவள் சுடப்பட்டவுடனேயே இறக்கவில்லை என்றும் ஒரு வாரம் கழித்துத் தான் இறந்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார்.

                                    எலும்புக் கதைக்கு மூலம் / நன்றி : குமுதம் 1963 இதழ்!

50 comments:

  1. //சின்னச் சின்ன வாக்கியங்களில் எழுதிக் கொண்டிருக்கிறோம்.//

    சமீபத்திய 'எங்கள்' பதிவு பார்க்கவில்லையா?!!

    எவ்வளவு சொல்ல முடிந்திருக்கிறது, அந்த எலும்புத் துண்டுகளை வைத்து? குமுதத்தில் இந்தப் பகுதி படித்த ஞாபகம் லே...ஸாக நினைவு இருக்கிறது.


    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார்

      கணேஷ் சார் தான் நியாபகத்தில் சிறந்தவராய் இருப்பவர் என்று நினைத்தால் நீங்கள் அவருக்குப் போட்டியை வந்து விடுவீர் போல் உள்ளதே.....ஹா ஹா ஹா :-)

      Delete
    2. சமீப்த்திய பதிவு நான் பார்க்கத் தவறியிருக்கிறேன் என்பது புரிகிறது. இதோ கவனிக்கிறேன் ஸ்ரீராம். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  2. மிக்சர் சுவை மிக மிக அதிகம் சார்.. எலும்புக் கதை சிந்திக்கத் தூண்டுகிறது.. அதாவது ஒரு மனிதன் இந்த அளவிற்கு சிந்திகிறாரா என்பதைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து சிந்தித்த சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  3. மிக்சர் கர கர மொறுமொறு வென்று வெகு சுவை.
    குறிப்பாக எலும்புக்கதையும் , போதை எழுத்தாளன் கதையும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  4. எலும்புக்கதை சிறப்பு..சர் ஸிட்னி கண்டுபிடித்த விதம் அருமை.மிக்ஸர் வழக்கம்போல சுவை.

    பதிவர் சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு - அவரவர் தளத்திலேயே காண ஏற்பாடு

    ReplyDelete
    Replies
    1. எலும்புக் கதையைப் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி கவிஞரே...

      Delete
  5. Very nice mixture especially twitter messages. Yes there is no medicine to cure cold cough and dry throat. Still it is mysterious to know whether it is possible to find out the details pertaining to the killer and his target.

    ReplyDelete
    Replies
    1. என் ட்வீட்டுகளை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. மிக்சர் நல்ல சுவை!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  7. சுவையான மிக்சர்

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  8. மிக்ஸர் ரொம்ப மொறு மொறு
    வீட்டில் அனைவரும் ரசித்துப் படித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வீட்டினர் அனைவரும் ரசித்துப் படித்தீர்கள் என்பதில் எனக்கு மிகமிக மகிழ்ச்சி. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. மிக்சர் சுவை குறையாமல் சிறப்பாக இருந்தது.
    ஏழைகளே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதை விட செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது சுலபம்.

    சிறந்த யோசனை.

    ReplyDelete
    Replies
    1. ட்வீட்டையும் மிக்ஸரையும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. ஒரு சில எலும்புத்துண்டுகளை வைத்து எப்படில்லாம் யோசித்திருக்கிரார் க்ரேட்

    ReplyDelete
    Replies
    1. எலும்புக் கதையை ரசித்து வியந்து பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  11. சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நனறி.

      Delete
  12. நல்ல சுவையான மிக்சர்... நன்றி... (TM 8)

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்துப் பாராட்டி எனக்கு மகிழ்வளித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

    ReplyDelete
  14. எலும்பு கதை சூப்பர்!


    பயbபிராந்தியால் விஸ்கி விஸ்கி அழுதா எப்படி? ரெண்டரை ஆன்டுகளுக்கு முபு!

    http://thulasidhalam.blogspot.co.nz/2010/01/b.html

    ReplyDelete
    Replies
    1. எலும்பு கதையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி. பயப் பிராந்தி பதிவு படித்து ஆச்சரியப்பட்டேன் - இரண்டு வருடங்களுக்கு முன்பேயா... சூப்பர்ப்! சல்யூட்ஸ் டு சீனியர் மேட்ம

      Delete
  15. அருமையான ஸர். ஸிட்னி கண்டுபிப்பு...

    உங்க சின்ன ட்வீட்டு சூப்பர் சார்...

    இப்போ வர நாவல்களில் சின்ன சின்ன வாக்கியத்திலேயே எழுத்து பிழை வாக்கியபிழை அதிகமா இருக்கிறது.. இதுல சாண்டில்யன் மாதிரி பெர்ரிய வாக்கியம இருந்தா அதை படிச்சி புரிந்துகொல்வதற்குள்ள நாம் kilpauk தான் போகவேண்டிவரும்..
    இல்லையென்றால் http://nirusdreams.blogspot.in/2012/08/blog-post_8.html - நிரஞ்சனா எழுதியதைபோல அந்த முதல் குறிப்பு எல்லாருக்கும் தேவைப்படும் சார்...

    பல்சுவை பதிவிற்கு நன்றி!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆகா... என் ட்வீட்டுகளை ரசித்த சமீராவுக்கு மிகமிக மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  16. oops........ தட்டச்சுப்பிழை ரெண்டு இருக்கு என் பின்னூட்டத்தில்:(

    ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு!

    ReplyDelete
  17. அவரேதான் அந்தத் தந்தையோ?!

    ReplyDelete
  18. மிகச் சிறப்பான உய்த்துணர்தல்!
    முந்தைய கமெண்ட்--முழுதும் படித்து முடிக்காமல் முந்திரிக் கொட்டைக்
    கமெண்ட்!
    மொறு,மொறு!

    ReplyDelete
    Replies
    1. நல்லது. நான் விளக்கம் கூற எத்தனிப்பதற்குள் நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள் நண்பரே. ரசித்துப் படித்து உற்சாகமூட்டும் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  19. சுவைத்தேன் நெடுநேரம் நன்றிக சார்

    ReplyDelete
    Replies
    1. படித்துச் சுவைத்த உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி நண்பரே.

      Delete
  20. மிக்சர் மிக நன்றாகவே இருந்தது! எலும்பு துண்டை வைத்து இவ்வளவு கண்டுபிடித்தது அதிசயமாக இருந்தது! சுவையான பதிவு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. மிக்சரின் சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  21. எலும்பு...உண்மையில் சுவாரஸ்யம்.....இதுதான் விஞ்ஞானம்.பிராந்தி....சின்னச் சின்ன ட்வீட்டு,அப்பாவுக்குப் பெண்தேடின படலம்....எல்லாமே சுவைதான்.என்ன ஒரு டீ தராமப் போய்ட்டீங்க ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. என்ன ப்ரெண்ட்... உங்களு்க்கில்லாமலா... இந்தாங்க சுடச்சுட பில்டர் காப்பி. எல்லா மேட்டரும் நல்லாருக்குன்னு சொல்லி எனக்கு எனர்ஜி டானிக் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  22. I thought the forensic scientist was the culprit father of the girl!

    Bharathi's line - Could he have written this long a sentence if it was really urgent!

    -R. J.

    ReplyDelete
    Replies
    1. அந்த சயன்டிஸ்ட் சொன்ன தகவல்களை வைத்து காணாமல் போன பெண்கள் பட்டியலிலிருந்து அந்தப் பெண் யார் என்பதையும். அவள் தந்தையே குற்றவாளி என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தார்கள் என்பதை நான் சரியாக விளக்கவில்லை என்று நினைக்கிறேன். தங்களின் நற்கருத்துக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ஜெ.

      Delete
  23. ரா.கி.ரங்கராஜனுக்கு இரு வரிகள் அஞ்சலி செய்தி போடுவீர் என எதிர்பார்த்து ஏமாந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இறப்பின் சமயம் அஞ்சலிச் செய்தி வெளியிடுவதை நான் செய்வதில்லை. அன்னாரை நினைவுகூர்ந்து தனிக் கட்டுரை ஒன்றை நிதானமாக தயாரித்து வெளியிட உத்தேசம் நண்பரே. மிக்க நன்றி.

      Delete
  24. வழக்கம்போல் மிக்ஸர் மொறு மொறு என்று இருந்தது. மிக்ஸரில் எனக்குப் பிடித்தது துப்பறியும் துணுக்குதான். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. துப்பறியும் துணுக்கை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  25. ஒரு எழுத்தாளர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நேரத்தில் கதை எழுத உட்கார்ந்தார். இப்படி எழுதினார்:

    பாவம் அந்த போதைப் பெண்! அவள் கணவன் விக்‘ரம்’ அவளைக் கொல்ல வருவதாக மனப்‘பிராந்தி’ அடைந்து, பயத்தில் ‘பீரி’ட்டு அலறி, ஓடியதில் ‘கள்’ தடுக்கி விழுந்து விஸ்‌கி விஸ்கி அழுதாள்.//ஜோக் செம செம..

    ReplyDelete
    Replies
    1. என் இந்தத் துணுக்கை ரசித்து, மனம் விட்டுப் பாராட்டிய தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  26. மிக மிக அருமையான மிக்சர்.. அங்கங்கே முந்திரிப்பருப்பு போட்டு, கார சாரமா நல்லா இருந்தது...

    மூன்று எலும்புகளை வைத்து எவ்வளவு விஷயம் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது... அற்புதம்.

    நல்லதோர் பகிர்வுக்கு நன்றி கணேஷ். ட்வீட்டுகள் அருமை.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube