சமீபத்தில் வீட்டிலிருந்த பழைய குமுதம் இதழ்த் தொகுப்பு ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு விஷயம் கண்ணில் பட்டது. 1970களில் சுஜாதா குமுதம் இதழில் ‘கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து வாரம் ஒரு பக்கம் எழுதி வந்திருக்கிறார். அதில் இரண்டு கட்டுரைகளைப் படிக்க முடிந்தது. சுஜாதா இவற்றில் எழுதியிருப்பதை எந்தப் புத்தகத்திலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. (சுஜாதாவின் தீவிர விசிறியான நண்பர் பாலஹனுமான் தான் சொல்ல வேண்டும்) அவற்றில் ஒன்று இங்கே :
போதும்!
ஒரு வட இந்திய நகரில் நண்பர்கள் இருவருடன் இரவில் கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு கடையில் கறிவேப்பிலைத் துவையல் போல ஏதோ பச்சிலை அரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். பலர் வந்து ஆளுக்கு ஒரு பெரிய கோலி அளவுக்கு வாங்கி வாயில் அடக்கிக் கொண்டு, ஒரு கிளாஸ் தண்ணீருடன் மளக்கென்று விழுங்கி விட்டுக் காசு கொடுத்துவிட்டுத் தம் வழியே சென்றார்கள்.
இது என்ன? ஸீனியர் நண்பரைக் கேட்டபோது, ‘‘சாப்பிட்டுப் பார்க்கிறீர்களா?’’ என்றார்.
‘‘என்ன செய்யும்?’’ என்றேன்.
‘‘வேலை செய்யும்’’ என்றார்.
அதையும் பார்த்து விடலாம் என்று ஸ்பெஷலாகப் பாதாம் பால் கலந்து ஆளுக்கு ஓர் உருண்டையை விழுங்கினோம். விழுங்கிவிட்டு நடந்தோம். அரை மணி ஆயிற்று. ஒன்றுமே ஏற்படவில்லை. சாப்பிட்ட அளவு போதாது, இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் (வேண்டாம்! சுத்தும்!) என்று பிடிவாதமாக மறுபடி அந்தக் கடைக்குச் சென்று அதே அளவு துவையலை .உட்கொண்டோம்.

நேராக ஓர் ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஓர் ஓட்டைத் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். ம்ஹும்... ஒன்றும் நிகழவில்லை எங்களுக்கு. அமெரிக்க கட்டிடக் கலை பற்றி ஒரு டாக்குமெண்டரி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு காட்சியில் ஒரு ஃப்ரேம் சட்டென்று மாறியது. அவ்வளவுதான். என்னுள் ஸ்விட்ச் போட்டாற் போல் மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.
முதன்முதலில் உடம்பெல்லாம் சூடாயிற்று. ஜப்பானிய நீராவிக் குளியல்போல், காது நுனியிலிருந்து ஆரம்பித்து உடம்பு பூராவும் சூடு. நாக்கு உலர்ந்து எதிரே திரைப்படம் தூர தூரச் செல்ல ஆரம்பித்தது. இந்த வேக்காட்டில் இனி உள்ளே உட்கார முடியாது என்று எழுந்து வெளிவந்தால் நடக்க முடிகிறதா? முழங்காலுக்குக் கீழ் பஞ்சு போலவும், பூட்ஸுக்குள் மேகம் போலவும் ஒரே தொள தொள. ஒரு கடைக்குச் சென்று ஆரஞ்சு ஜூஸ் உறிஞ்சிப் பார்த்தோம். நாக்கு நனையவில்லை.
மனத்திற்குள் பயம் ஏற்பட்டது. திரும்பப் போய்விடலாம் என்று டாக்ஸியைக் கூப்பிட்டேன். நண்பர்களில் ஒருவன், ‘‘என் பல்ஸைப் பார். என் பல்ஸைப் பார்’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பது தூரத்தில் கேட்டது. என்னை விட்டு நானே ரொம்பத் தொலைவில் நடந்து கொண்டிருப்பது போன்ற .உணர்ச்சி.
எப்படியோ டாக்ஸி பிடித்தோம். டாக்ஸியில் செல்லும் போது நகரமே துப்புரவாக அலம்பி விட்டிருப்பது போலத் தெரிந்தது. நியான்கள் பளிச்சென்று ஒளிர்ந்தன. உடன் ஒரு பயம். ‘நீ காலி, நீ காலி’ என்று ஒரு கோரஸ் (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்). டாக்ஸியில் மூன்று மாதம் பிரயாணம் செய்து எங்கள் விடுதியை அடைந்தோம். யார் பணம் கொடுத்தார்கள்? எப்போது படுக்கையில் விழுந்தேன்..?
என்னைப் பொறுத்த வரை ஒரு தடவை போதும்.

=================================================
பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை. நண்பர்கள் குறிப்பிட்டுச் சொன்னால் ஒன்றிரண்டு மட்டும் பார்ப்பேன். நேற்று சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சிகள் கொஞ்சம் பார்க்கலாமே என்று வைத்தேன். விஜய் டிவியில் தன் டிரேட்மார்க் கண்ணாடியுடன் மிஷ்கின் பேசிக் கொண்டிருந்தார். தான் ‘Bar Anthem’ என்கிற ஒன்றை இயற்றியிருப்பதாகச் சொல்லி பாடிக் காட்டினார். அடாடா1 பாடலின் கருத்தாழத்தில்(?) புல்லரித்துப் போனேன். எந்தமிழ்நாட்டுக் குடிமக்கள் இனி இதைப் பாடிப் பரவசித்து, நிறையக் குடித்து, இந்த அரிய சேவை(!)க்காக மிஷ்கினுக்கு கடற்கரையில் ஒரு சிலை வைப்பார்களாக!
மாலையில் ‘வேங்கை’ என்று ஒரு படம் சன் டிவியில் போட்டார்கள். கஞ்சா கருப்பு என்கிறவர் காமெடி என்கிற பெயரில் அடித்திருக்கும் கூத்து.... விரசத்தின் உச்சம்! எனக்கு வந்த வெறிக்கு அந்த ஆசாமி மட்டும் என் கைல கிடைச்சிருந்தான்.... இப்படி நொந்து நூடுல்ஸாகிப் போயி எதேச்சையா மெகா டிவி வெச்சப்ப, முனைவர் கு.ஞானசம்பந்தன் காமராஜர் அவர்களைப் பத்தி ஒரு அருமையான உரை நிகழ்த்திட்டிருந்தாரு. பல அரிய தகவல்களோட அவர் நடத்தின அந்த நிகழ்ச்சி தென்றல் வீசின மாதிரி மகிழ்ச்சியைத் தந்தது. இப்படி ஒண்ணு ரெண்டு நல்ல நிகழ்ச்சிகள் கண்ல படறதாலதான் அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக்காம வெச்சிருக்கேன்.

|
|
Tweet | ||
வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்ற மின்னல் வரிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஆஹா... நான் மதிக்கும் வை.கோ. அவர்கள் எனக்கு விருது தந்திருக்காரா... உட்னே போய்ப் பாக்கறேன். தகவல் தந்ததுக்கு மிக்க நன்றி.
Deleteஅப்போ சுஜாதாவும் நம்ம ஜாதிக்காரர் தான்...நானும் வேங்கை பார்த்து பிடிக்காமல் பயணம் விஜய் டிவியில் பார்த்தேன்..
ReplyDeleteநண்பா... கீழ இருப்பது என் கருத்து. நீங்களும் என்னைப் போலங்கறதுல மகிழ்ச்சி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteayya kovai! there is 2 news. 1. sujatha matter.2. last aug 15th tv show. dont confuse man. enna sujatha saraku karuvepillai urundaiya .
Deleteதங்களுக்கு கிடைத்த சுஜாதா அவர்களின் பொக்கிஷ எழுத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சார் சுஜாதா சுஜாதா தான்
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சரவணன்.
Delete'போதும்' போதுமானதாக இருந்தது...
ReplyDeleteதொ(ல்)லைக்காட்சி பார்ப்பது எப்போதாவது...
பகிர்வுக்கு நன்றி சார்.... (TM 2)
நானும் எப்போதாவதுதான் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கும் ஆசாமி. சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஇதுவரைப் படிக்காத கட்டுரை
ReplyDeleteவெகு சுவாரஸ்யம்
பதிவாக்கித்தந்தமைக்கு மனாஅர்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteசுஜாதா என்றாலே வித்தியாசம்தானே
ReplyDeleteஆம் முரளிதரன். அந்த வித்தியாசத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
DeleteSujatha's confessional was very original and genuine.All of us have tried different things in our adoloscent days.It takes a lot of guts to accept it.
ReplyDeleteBy the way, yesterday's Neeya Naana was very enlightening, for a change.
நீயா நானாவை யூடியூபில் தேடிப் பிடித்து விடுகிறேன். சுஜாதாவின் வெளிப்படையான அனுபவத்தை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஎனக்கு சுஜாதாவின் அந்தக் கட்டுரையைப் படித்த ஞாபகம் இருக்கு!
ReplyDelete'மிஸ் தமிழ்த்தாயே வணக்கம்' அல்லது 'சுஜாதாட்ஸ்' என்ற புத்தகத்தில் வெளிவந்திருக்கலாம். இரண்டையும் இரவல் கொடுத்து, திரும்ப வரவில்லை! :-(
இரண்டாவது பகிதியும் சுஜாதா ஸ்டைல்ல இருக்கே பாஸ்! :-)
சுஜாதாட்ஸில் இல்லை என்பது நன்றாகத் தெரியும். மிஸ் தமிழ்த்தாயே... நான் பார்க்கிறேன் நண்பா. சுஜாதாவை ரசித்துப் படித்த கையோடு எழுதியதால் அப்படி தோன்றுகிறதோ என்னவோ... உங்களுக்கு மிக்க நன்றி.
Deleteஇரண்டாவது அனுபவம் எல்லோருக்கும் வருவது தான்.
ReplyDeleteஆகையால் பொறுத்துப் போக வேண்டியது தான். நல்ல பதிவு. நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
ஆமாங்க... நிறையப் பேரின் பொது அனுபவமாகத்தான் அது இருக்குன்னு இப்பப் புரியுது. பதிவை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசுவாரஸ்யமான கட்டுரை.//நல்ல நிகழ்ச்சிகள் கண்ல படறதாலதான் அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக்காம வெச்சிருக்கேன்.// அதே..
ReplyDeleteசுஜாதாவின் எழுத்தையும். என் கருத்தையும் ஒருசேர ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு என் உளம் கனிந்த ந்ன்றி.
Deleteபடித்த ஞாபகம் இருக்கிறது.
ReplyDeleteஎனக்குப் புதிதாக இருந்தது. சுஜாதாவை இன்னும் நான் முழுமையாகப் படிக்கவில்லை என்பதை அறிகிறேன் ஸ்ரீராம். மிக்க நன்றி.
Deleteகஞ்சா கருப்பு வந்தால் பார்ப்பதேயில்லை என்ற கொள்கை!
ReplyDeleteநானும் அந்த முடிவுக்கு வந்தாச்சு நண்பரே...
Deleteகளவும் கற்று மற என்பதுபோல இருக்கு !
ReplyDeleteஆமா ஃப்ரெண்ட். சில அனுபவங்கள் ஆர்வ மிகுதில இறங்கிட்டு ஒரு தடவையே லைஃப்ல போதும்னு ஆயிடும். அதை சுவையா சொல்லிருக்கார் அவர். ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteபகிர்வுக்கு மிக்க நன்றி சார்!
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deletepakirvukku nantri ayyaa!
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteசுஜாதா துவையல் சாப்பிட்டதை முன்பு வேறெங்கோ வாசிச்ச நினைவு இருக்கு.
ReplyDeleteசுஜாதா பற்றிய எந்த விவரமுன்னாலும் நம்ம தேசிகனைக் கேட்டால் தெரியுமே!!!!!
தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் நகைச்சுவைன்னு சில ப்ளேடுகள் வருதே:(
எனக்கு ஐயோன்னு இருக்கும் அந்த மக்களை நினைச்சால்.....
நான் படிக்கத் தவறி இருக்கேன்னு தெரியுது. தொலைக்காட்சியினால நொந்தவங்க நிறையப் பேர் இருக்கறது எனக்கு ஆறுதலா இருக்கு டீச்சர். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅறியாத செய்தி அறிந்தவரின் தளத்தில் .....தொடரட்டும்
ReplyDeleteரசித்துப் படித்ததை அழகாய் சொன்ன உங்களுக்கு என் இதய நன்றி நண்பரே.
Deleteஉண்மைதான் தேசிகனுக்குத் தெரியாத விஷயமே கிடையாது
ReplyDeleteஅவரும் பதிவர் சந்திப்புக்கு வருகிறாரா.
கண்ட விரசத்தைப் பார்ப்பதற்கு நல்ல நிகழ்ச்சிகளைப் பொதிகைட்யில் பார்க்கலாம்.என் போன்றவர்களுக்கு மஹாபாரதம் கிருஷ்ணா என்று நிகழ்ச்சிகள் வருகின்றன,.போதும்.
அவர் வருவதாக இதுவரை சொல்லவில்லை. பொதிகையையும் இனி அப்பப்ப பாக்கறேன் வல்லிம்மா. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டு களியுங்கள் என்று ஒருவாரமாகவே அறிவிச்சுண்டே இருப்பா. ஆனா சுதந்திரதுக்கும் அவங்க காட்டும் நிகழ்ச்சிகளுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இருக்காது.எப்பவாவது எங்கியாவது சில நல்ல நிகழ்ச்சிகள் வருதே அதுக்காக்த்தான் டி, வி பெட்டி இன்னும் ஹால்ல உக்காந்துகிட்டிருக்கு.
ReplyDeleteஎன்னைப் போலத்தான் நீங்களும்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஇது வரை அறியாத செய்தி...
ReplyDeleteஎன்னைப் போல உங்களுக்கும் இது புதிதாய் இருந்ததுல மகிழ்ச்சி. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.
ReplyDelete
ReplyDeleteஇரண்டுமே சுவாரஸ்யம்.
ரசித்துப் படித்து பாராட்டிய உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி.
DeleteIt is very difficult to get fame in cine industry. It is still more difficult to retain the fame for which, any one whosoever it is, be it villain, hero, heroine, comedian they have to compromise certain matters and this is the offshoot of such compromises. We cannot blame them because their entire livelihood depends upon the cine industry and they do not try anything else for their livelihood. Of course,I also saw the same movie. Just go and see the earlier movies of the hero of the same film i.e. Dhanush and you will say that Gancha Karuppu has acted decently.
ReplyDeleteதனுஷின் மற்ற படங்களைப் பார்க்கும் பாக்கியம்(!) அதிர்ஷ்டவசமாக எனக்கு அமையவில்லை. இந்தப் படத்தில் கஞ்சா கருப்பு என்பவர் என்னை சினங்கொள்ள வைத்ததென்னவோ நிஜம். சினிமாத் துறையில் சர்வைவலுக்காக நீங்கள் சொன்னது போல் பல விஷயங்களை செய்யத்தான் வேண்டியுள்ளது. அருமையான கருத்துரைத்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஉங்கள் எழுத்தில் இன்று போதை சற்று கூடுதல் தான் காரணம், முதலில் சுஜாதாவின் கஞ்சா இலைப் பால் (பாங்க்) அனுபவம் தொடர்ந்து ‘கஞ்சா’ கருப்பு என்று ஒரே லாகிரி வஸ்து பற்றி எழுதியிருக்கிறீர்களே. இருக்காதா?
ReplyDelete[புது lay-out நன்றாக இருக்கிறது]
ha ha ha
Deleteஎப்போதும் ரசிக்கும்படியான கருத்துக்களைத் தரும் நண்பர் வெங்கட் ஸ்ரீனிவாசனுக்கு என் இதயம் நிறை நன்றி. புதுவடிவம் உங்களுக்குக் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி எனக்கு.
Deleteஒண்ணு ரெண்டு நல்ல நிகழ்ச்சிகள் கண்ல படறதாலதான் அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக்காம வெச்சிருக்கேன்.
ReplyDeleteபலரது ஆதங்கத்தை வரிகளில் கண்டேன்
ஆமாம் சசி. ஆங்கில சானல்கள் தவிர்த்து தமிழில் எப்போதாவது நல்ல நிகழ்ச்சிகள் வரத்தான் செய்கின்றன. நாம்தான் தேடிப் பிடிக்க வேண்டும். மிக்க நன்றி.
Deleteஅருமை அருமை! தொல்லைக்காட்சியா அல்லது தொலைக்காட்சியா என்பது நாம் பார்ப்பதில்தானே உள்ளது!... நன்றி!
ReplyDeleteமிகமிகச் சரியாகச் சொன்னீங்க சாமு. அதை சரியாப் பயன்படுத்தறது நம்ம கைலதான் இருக்குது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Delete// அந்த இடியட் பாக்ஸை இன்னும் தூக்கிப் போட்டு உடைக்காம வெச்சிருக்கேன்.// வாத்தியார் முதல் பாகம் சின்ன வாத்தியார் இரண்டாம் பாகமா... கலக்குங்க.... வேங்கை படக் காமெடி ரசனைக் குறைவான காமெடி... கொஞ்சம் கூட ரசிப்புத் தன்மை இல்லை...
ReplyDeleteபுதிய தோற்றம் முகப்பு மிகவும் குளுமை
புதிய தோற்றத்தை ரசித்து. என் கருத்துடன் ஒத்துப் போகிற சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசிறப்பான பகிர்வு! நானும் வேங்கை பார்த்து வெறுத்துப்போனேன்! முழுசும் பார்க்கலை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
சிறப்பான பகிர்வு என்று பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteபடித்ததில்லை. நன்றி. எழுபதின் குமுதம் என்று சாதாரணமாக எடுத்துப் போட முடிகிறதே உங்களால்.. வியப்பை அடக்க முடியவில்லை.
ReplyDeleteபாங்.... ஹோலி என்றால் இது இல்லாமல் இல்லை.... இந்த இலையில் பக்கோடா செய்வார்கள். இது கொஞ்சம் அதிகமானால் போதை தலைக்கேறி அழுதால் அழுது கொண்டே இருப்பார்கள், சிரித்தவர்கள் சிரித்து கொண்டே இருப்பார்கள்.....
ReplyDeleteநண்பரொருவர் சிரித்துக்கொண்டே இருந்ததைப் பார்த்து நாங்களும் சிரித்திருக்கிறோம்! :)))
புதிய லே அவுட் நன்று. எனக்கும் மாற்றவேண்டுமே... கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ். :)
மிஸ் தமிழ்த்தாயே தொகுப்பில் இக்கட்டுரை உள்ளது .அதே தொகுப்பில் அவரின் ப்ளேன் ஒட்டக் கற்றுக்கொண்டேன் கட்டுரையும் அருமையாக இருக்கும் !
ReplyDelete