பதிவர் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் செம்மையாக நடந்தேற வேண்டுமே என்கிற பயமும் பரபரப்பும் உச்சத்தில் இருக்கிறது. ‘‘ஒரு கல்யாணத்தை நடத்தறது மாதிரி திட்டமிட்டு செயல்படுகிறீர்கள்’’ என்று வல்லிசிம்ஹன் அம்மா பேசும்போது குறிப்பிட்டார்கள். மிகச் சரியான வார்த்தை! கல்யாண மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் ஒரு கல்யாணம் போன்றதுதான்.
கல்யாணத்தை நல்லபடியாகச் செய்து முடித்து விருந்தினர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்கிற ஒரே சிந்தனைதான் இப்போது! கருத்துப் பெட்டியில் கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தவறாமல் பதிலளிப்பது என்கிற என் வழக்கத்தை கடந்த இரண்டு மூன்று பதிவுகளாகச் செயல்படுத்த இயலாமல் நான் மனக்குறையுடன் தவிப்பதன் காரணமும் அதுவே. நிகழ்ச்சி தினம் நெருங்கி விட்டதால் கச்சேரி (பதிவு) செய்யலாம் என்று உட்கார்ந்தால் குரல் (சிந்தனை) ஒத்துழைக்கவில்லை. எனவே சில துக்கடாக்களைத் தூவி நிரவல் செய்கிறேன் இங்கே.
=======================================
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் எவ்வளவு சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர் மிகச் சிறந்த பொய்யர் என்பதை இன்று நான் உணர்ந்தேன். ‘ஸன் லைப்’ தொலைக்காட்சியை இன்று காலையில் வைத்தபோது சிவாஜி இப்படி பாடிக் கொண்டிருந்தார்.
=======================================
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் எவ்வளவு சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அவர் மிகச் சிறந்த பொய்யர் என்பதை இன்று நான் உணர்ந்தேன். ‘ஸன் லைப்’ தொலைக்காட்சியை இன்று காலையில் வைத்தபோது சிவாஜி இப்படி பாடிக் கொண்டிருந்தார்.
‘நடையா இது நடையா, ஒரு நாடகமன்றோ நடக்குது; இடையா இது இடையா, அது இல்லாதது போல் இருக்குது’
யாரைப் பார்த்துப் பாடினார்? அழகான வட்ட முகத்தையும், பூசணிக்காயையொத்த இடையையும் கொண்டிருந்த தேவிகாவைப் பார்த்து! இப்போது சொல்லுங்கள்... சிவாஜி பச்சைப் பொய்யரா இல்லையா? ஹி... ஹி...
=======================================
‘தனக்கு மிஞ்சித்தான் தானம்’ என்பதற்கு நான் ஒரு புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் இங்கே ‘தனக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
=======================================
‘தனக்கு மிஞ்சித்தான் தானம்’ என்பதற்கு நான் ஒரு புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் இங்கே ‘தனக்கு’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து அதை தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் ‘தனக்கு மிஞ்சி தானம்’. நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாக இருந்தாலும், தானம் பண்ணும்படியாக செலவைக் கட்டுப்படுத்தி மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.
-ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்
-ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்
=======================================
பட்டிமன்றங்கள்
என்கிற விஷயங்களின் மீது எனக்குப் பெரிய மரியாதை கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட
காலத்தில் குன்றக்குடி அடிகளார், வாரியார் போன்றவர்கள் நடத்தியபோது
கருத்துச் செறிவுடன், வாதங்களும் எதிர் வாதங்களுமாக ரசிக்க வைக்கும்
பட்டிமன்றங்கள் நிறைய இருந்தன. சாலமன் பாப்பையா நடத்திய வரையில் இருந்த
அந்த நிலைமை மாறி, இன்றைக்கு துணுக்குத் தோரணங்களைத் தொங்க விடும் வெற்று
அலங்கார மண்டபங்களாக மாறிவிட்டன பட்டிமன்றங்கள்.
நான்கைந்து ஜோக்குகள், எதிரணியினரின் தனிப்பட்ட விஷயத்தைக் கூட கேலியாக மேடையில் பேசுதல் (வீட்ல பூரிக்கட்டையால அடி வாங்கினவருங்க இவரு) என்றெல்லாம் அவற்றின் தரம் இறங்கி, இன்றைக்கு ‘இடை ஆட்டுவதில் சிறந்தவர் அனுஷ்காவா, ஹன்ஸிகாவா’, ‘பதிவர்களில் சிறந்தவர் ஜாக்கி சேகரா, கேபிள் சங்கரா’ என்றெல்லாம் தலைப்பு வைத்து நடத்தப்படும் ஒரு நிலையை அடைந்து விட்டன. ஹோட்டலின் மெனு மாதிரி ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் ஒன்றரை மணி நேரத்தை விளம்பரங்களுடன் ஒப்பேற்ற பட்டிமன்றங்கள் என்பவை அத்தியாவசியமாகி விட்டன ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும். நான் இவற்றைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வெளியேறி விடுவேன். உங்களின் எண்ணம் இவ்விஷயத்தில் எப்படி?
நான்கைந்து ஜோக்குகள், எதிரணியினரின் தனிப்பட்ட விஷயத்தைக் கூட கேலியாக மேடையில் பேசுதல் (வீட்ல பூரிக்கட்டையால அடி வாங்கினவருங்க இவரு) என்றெல்லாம் அவற்றின் தரம் இறங்கி, இன்றைக்கு ‘இடை ஆட்டுவதில் சிறந்தவர் அனுஷ்காவா, ஹன்ஸிகாவா’, ‘பதிவர்களில் சிறந்தவர் ஜாக்கி சேகரா, கேபிள் சங்கரா’ என்றெல்லாம் தலைப்பு வைத்து நடத்தப்படும் ஒரு நிலையை அடைந்து விட்டன. ஹோட்டலின் மெனு மாதிரி ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் ஒன்றரை மணி நேரத்தை விளம்பரங்களுடன் ஒப்பேற்ற பட்டிமன்றங்கள் என்பவை அத்தியாவசியமாகி விட்டன ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும். நான் இவற்றைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வெளியேறி விடுவேன். உங்களின் எண்ணம் இவ்விஷயத்தில் எப்படி?
|
|
Tweet | ||
சார், துக்கடா நல்லாவே இருந்துச்சு! இன்றைய பட்டிமன்றங்கள் பயனுள்ளதாக இல்லையே என்ற உங்க ஆதங்கம் எனக்குப் புரிகிறது... ஆனால் நாங்கள் குன்றக்குடி அடிகளாரோடதெல்லாம் கேட்டதில்லை அதனால எங்களோட தலைமுறைக்கு இந்தக் காலத்து வெட்டி மன்றங்கள் கேட்டுத்தான் பழக்கம் !... ஆனால் கு. ஞானசம்பந்தன் என்று ஒருவரின் பட்டிமன்றங்கள் பரவாயில்லை என்று நினைக்கிறேன்! அருமையான துக்கடா!
ReplyDeleteலியோனி பட்டி மன்றத்தில் குறிப்பாய் லியோனி மற்றும் இனியவன் பேசுவதை மட்டும் கேட்பேன் மனம் விட்டு சிரிக்கலாம் என்பதால் ; மற்ற நேரம் சேனல் மாற்றிடுவேன்
ReplyDeleteவிழாவிற்காக உங்கள் அனைவரின் உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும் வாழ்த்துகள்
பெண்ணின் திருமணம் நாள் நெருங்க நெருங்க, அந்த பெண்ணின் தந்தைக்கு ஏற்படும் பதற்றம்/ மன அழுத்தம் போன்று, பதிவர் சந்திப்பு நாளுக்கு இரண்டு நாள் இருக்கும்போது, பதிவர் சந்திப்புக் குழுவினருக்கு (உங்களையும் சேர்த்து) நல்லபடியாக நிழ்ச்சிகள் நடைபெறவேண்டுமே என்ற கவலை , பதற்றம் இருக்கலாம். கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடியே நடக்கும்,
ReplyDeleteபட்டி மன்றத்தைப்பற்றிய உங்களது கருத்தை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம், பேராசிரியர் இராதாகிருஷ்ணன் பேராசிரியர் சத்திய சீலன் பேராசிரியர் சாலமன் பாப்பையா (70 களில்) ஆகியோர் கலந்து கொண்ட பட்டிமன்றங்கள் தான் உண்மையான பட்டிமன்றம். இப்போது நடப்பது வெட்டி(பேச்சு) மன்றம் தான்.
உண்மையாக எனக்கும் அந்த உணர்வே இருக்கிறது திருமணத்திற்கு வருபவர்களை சிறப்பாக கவனித்து அனுப்ப வேண்டுமே என்கிற பயம் தான் இருக்கிறது.
ReplyDeleteநடையா... பாடலும் அருமை உங்க விளக்கமும் சிறப்பு.
Your comment on the quality of debate is very very correct. Here I would like to reproduce the saying of Cho Ramaswamy Sir who once described the quality of print media which is now applicable to channel media - He said that the magazines not only get their standard down to cheapest level through their articles but also got their readers standard also reduced to that level. This they claim as success for their magazine. This comment was passed by Cho Sir before 15 years which is even now applicable to all sorts of media.
ReplyDeleteவிழா சிறப்பாக அமையும்... நன்றி... (TM 4)
ReplyDeleteநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்...,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...?
////யாரைப் பார்த்துப் பாடினார்? அழகான வட்ட முகத்தையும், பூசணிக்காயையொத்த இடையையும் கொண்டிருந்த தேவிகாவைப் பார்த்து! இப்போது சொல்லுங்கள்... சிவாஜி பச்சைப் பொய்யரா இல்லையா? ஹி... ஹி...
ReplyDelete////
ஹி.ஹி.ஹி.ஹி..........
ReplyDeleteஉண்டியல் பெட்டி போல உலுக்க உலுக்க வரும்
காச் போல பழைய செய்திகள் உங்கள கருத்துப் பெட்டியில் இருந்து வந்து கொண்டே இருக்கின்றன!
விழாவிற்கு நடுவிலும் இது போன்ற சுவையான பதிவு...
ReplyDeleteஅருமையான துணுக்குகள்.
விழா வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகள்.
பட்டிமன்றங்கள் சுவைப்பது நல்ல தலைப்பினாலும்
ReplyDeleteவாதிடுபவர்களினாலும் தான். இப்போதும் நான்
பார்க்கிறேனே .....
ஒரு பதிவு நிறைய ஹிட்ஸ் பெறக் காரணம் ......
கவரும் கருத்தா அல்லது மயக்கும் எழத்து நடையா ??
என பதிவர் விழாவில் பேசினால் போயிற்று ...
துக்கடா ... அடடா . !
பதட்டமான சூழலில் பதிவிட்டபோதும்
ReplyDeleteசுவை சிறிதும் குறையவில்லை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 7
ReplyDeleteயாரைப் பாத்து என்ன சொல்றதுனு வரைமுறை இல்லாமப் போச்சு.. பூசணிக்காயாமே? ஹ..
ReplyDeleteஉங்க துக்கடா கூட தூக்கலா தான் சார் இருக்கு..
ReplyDeleteவெட்டி மன்றங்கள்: நான் பார்ப்பதே இல்லை... - இவை வெறுபேற்றும் மன்றங்கள்.....
இப்போதெல்லாம் தொலைகாட்சிபெட்டிகள் - தொல்லைகாட்சிபெட்டிகலாக தான் உள்ளன. பெரும்பாலும் நான் இதன் பக்கம் போவதே இல்லை சார்.
துக்கடா என்று சொல்லி அருமையான கருத்துக்களை பதிந்து பாராட்டு பெற்றுவிட்டீர்கள்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html
ம் ...
ReplyDeleteபதிவர் சந்திப்பு விழா பிசில பாட்டெல்லாம் பார்க்கவும் கேட்கவும் கூட டைம் இருக்காண்ணா?!
ReplyDeleteபதிவர் சந்திப்பில் பிசியாக இருந்தாலும் துக்கடா என்று சொல்லி அசத்தலான பதிவிட உங்களால் தான் முடியும்....
ReplyDeleteபூசணிக்காய்! இது ரொம்ப ஓவர்....
பட்டி மன்றம் - பார்ப்பதே இல்லை.... அதனால் தொல்லையில்லை.
நல்ல பகிர்வு. பதிவர் சந்திப்பு சிறப்பாய் நடக்க வாழ்த்துகள் கணேஷ்.
That song was written as per VANCHAPUGALCHI ANI by Kavipperasu Kanndasan.HAAHAA... With regard to pattimantram, your words are correct for sometimes .The concerned professionals may take into our opinions for future of their programme.With kind regards.DK
ReplyDeleteஅப்போ எல்லாம் துடி இடை நடிகை விஜலக்ஷ்மிக்கு மட்டும் தான். அடுத்தாற்போல காஞ்சனா.
ReplyDeleteமற்றவர்களுக்கெல்லாம் பாடப்பட்டப் பாட்டுகள் கேலிக்கூத்துதான். பாவம் .