Saturday, August 11, 2012

மொறு மொறு மிக்ஸர் - 9

Posted by பால கணேஷ் Saturday, August 11, 2012

முதல்ல கொஞ்சம் யோசிங்க...!

ராணுவ முகாமில் மில்கா சிங்குக்கு காவல் வேலை தரப்பட்டிருந்தது. சிங் கொஞ்சம் தூக்கப் பிரியர். மத்தியான நேரத்தில் ஒரு நாள் நன்றாக அசந்து விட்டார். அப்போது ஒரு சூப்பர் கனவு வந்தது. மில்காசிங் அயல்நாடு ஒன்றில் உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். வீர சாகசத்துடன் அயல்நாட்டு மண்ணில் ஒளிந்து மாறவேடம் போட்டு பல ரகசியங்களைத் தெரிந்து கொண்டு விட்டார். ஆனால் வெண்ணெய் திரளும் போது எதிரிகளிடம் பிடிபட்டு விட்டார். எதிரி ராணுவ கோர்ட் அவரை விசாரித்து மரண தண்டனை வழங்கி விட்டது. சிங்கைச் சுட்டுத் தள்ள துப்பாக்கி ஏந்திய நாலு வீரர்கள் தயாராக நின்று குறி பார்க்கிறார்கள். கவுண்ட் டவுன் நடக்கிறது.

சிங் இந்த மாதிரி கனவு ‌கண்டு கொண்டிருக்கும்போது முகாமின் தளபதி அந்தப் பக்கமாக வந்தார். வந்தவர் சிங் செளகரியமாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் கடுங்கோபம் கொண்டு அருகிலிருந்த வேலியில் தன் கைப் பிரம்பால் தடதடவென்று தட்டினார்- இதுதான் காவல் காக்கிற லட்சணமா என்று. அந்தச் சத்தம் தன்னைச் சுடத் தயாரான துப்பாக்கிகளிலிருந்து தோட்டா வெளிப்பட்ட சத்தம் என்று மில்கா சிங் அதிர்ந்து போய், அந்த அதிர்ச்சியிலேயே இதயம் நின்று இறந்து விட்டார்.

-கதையப் படிச்சாச்சா? இந்தக் கதையில் ஓர் அபத்தம் ஒளிந்துள்ளது. அது என்னவென்று சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள், பார்க்கலாம்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

அடுத்து ஆன்மீகக் கரையில கொஞ்சம் ஒதுங்கலாமே...!

ரம்பமும் முடிவும் இல்லாத துன்பத்தை நீ உன் பழைய பிறவிகளில் அனுபவித்திருக்கிறாய். அந்தத் துன்பங்கள் கடலுக்குச் சமமானது. அவ்வளவு பெரிய துன்பத்தில் பிரியமானவர்கள் இறந்து விட்டால் அந்தத் துன்பம் கடலிலள்ள ஒரு துளி நீருக்குச் சமம். மரணம் சத்தியமானது; பிறவியும் அப்படியே! மனதைத் திடப்படுத்திக் கொண்டு யோகமார்க்கத்தில் ஈடுபடு! வாழ்வு நிலையற்றது என்று அடிக்கடி எண்ணு! -இப்படி போதித்தவர் புத்தர் பெருமான்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

இப்ப... கொஞ்சம் ஹி... ஹி...ங்க...!

‘‘டேய்,.. என்னடா அப்படிக் கப்பல் கவுந்துட்ட மாதிரி சோகமா உக்காந்துட்டே? வாடா பீச்சுக்குப் போயிட்டு வரலாம்’’ என்றார் நண்பர்.

‘‘அடப்போடா... ஏகப்பட்ட கடன்ல மாட்டிட்டு முழிச்சுட்டிருக்கேன்.எனக்கிருக்கும் கவலைக்கு பீச் ஒண்ணுதான் குறைச்சல்’’ என்றேன் சோகமாக

‘‘அப்படியென்னடா கவலைகள் .உனக்கு இருக்கு? அதைச் சொல்லு... கவலைகள் குறைய நான் வழி சொல்றேன்...!’’

‘‘ஒண்ணா, ரெண்டா சொல்வதற்கு? டூ வீலர் வாங்கின வகையில கட்ட வேண்டிய கடன் அஞ்சாயிரம் இருக்குடா....’’

‘‘சரி...!’’

‘‘தங்கச்சி கல்யாணத்துக்காக வாங்கின முப்பதாயிரம் ரூபாய்ல இன்னும் பத்தாயிரம் கொடுக்க வேண்டியிருக்குடா...’’

‘‘சரி...!’’

‘‘இன்சூரன்ஸ் ட்யூ கட்டறதுக்கு ரெண்டாயிரம் ரூபாய் வேணும்...’’

‘‘அவ்வளவு தானே...?’’

‘‘என்னடா அவ்வளவு தானே? இவ்வளவு கடன் தொல்லைகள் போறாதா? எல்லாத்தையும் சொன்னா கவலைகள் குறைய வழி சொல்றேன்னு சொன்னியே... சொல்லுடா... என்ன பண்ணனும்?’’

‘‘இப்ப நீ சொன்ன கடன்களையெல்லாம் மொத்தமாக் கூட்டி எவ்வளவு தொகை வருதுன்னு சொல்லு எனக்கு...’’

மனக்கணக்காகக் கூட்டிச் சொன்னேன். ‘‘டேய், பதினேழாயிரம் ரூபாய் வருதுடா...’’

‘‘இப்ப உன்கிட்ட மொத்தமா பதினேழாயிரம் ரூபாய் இருந்தா உன் கடன் எல்லாம் தீர்ந்துடும் தானே...?’’

‘‘ஆமாம்டா...’’

‘‘‘பைத்தியக்காரா.... இதுக்காடா ஏகப்பட்ட கடன்னு சொல்லி மனசைப் போட்டுக் குழப்பிட்டிருக்கே? எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து பதினேழாயிரம் ரூபாய் வேணும்னு ஒரே கவலையாப் பட வேண்டியதுதானேடா...! ‌கவலைகள் குறைஞ்சு இப்ப ஒரு கவலை ஆயிடுச்சா இல்லையா...! நான் வரட்டா...’’

‘‘அவ்வ்வவ்வ்வ்வ!’’

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

அடுத்ததா கொஞ்சம் பொது அறிவைக் கூட்டிக்கங்க...!

புகையி‌லையின் பயன்பாடு இன்று மிக அதிகமாகி விட்டது. அது ஒரு உயிர்க்கொல்லி என்பதை நன்கு அறிந்தும்கூட பலர் பயன்படுத்தி வருகின்றனர். புகையிலைச் செடியி்ன் தோற்றுவாய் அமெரிக்காதான். அந்த நாட்டுச் சிவப்பிந்தியர்கள் அதை மந்திர மூலிகையாகப் பயன்படுத்தி வந்தனர். 1492ல் கொலம்பஸ் அமெரிக்காவில் புகையிலையைக் கண்டுபிடித்தார். 1502ல் ஸ்பெயினுக்கு அந்தச் செடி கொண்டு வரப்பட்டது. மெல்ல மெல்ல அதன் உபயோகம் ஐரோப்பாவில் பரவிற்று. 1508ல் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்குப் புகையிலை, உருளைக்கிழங்கு, தக்காளி இவைகளைக் கொண்டு வந்து பயிர் செய்ய ஆரம்பித்தனர். அப்படித் துவங்கியது இன்று பல லட்சக்கணக்கான ஏக்கர்களில் புகையிலை இந்தியாவில் பயிரிடப்படுகிறது. ஆடம்பரப் பொருளாக ஆரம்பித்த புகையிலையின் உபயோகம் இன்று ஆளைக் கொல்லும் நச்சுப் பொருளாக உருவாகி விட்டது!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

ரைட்டு, இப்ப ஒரு வினோதத்தை தெரிஞ்சுக்கங்க...!

மெரிக்காவில் டெஸ்மாயின் என்ற ஊரில் மாவட்ட நீதிபதி தியோடர் மில்லர் அவரது நீதிமன்ற அறைக்கு வெளியே காத்திருந்தார். அறை பூட்டப்பட்டிருந்தது சாவியைக் காணோம். காவலாட்கள் வந்து என்னென்னமோ செய்து பார்த்தார்கள். பூட்டைத் திறக்க முடியவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்தவர்களில் அன்றைக்கு வழக்கு நடத்த வேண்டிய வக்கீலும் ஒருவர். அவர் நீதிபதியைப் பணிவுடன் அணுகி, ‘‘தாங்கள் அனுமதித்தால் என் கட்சிக்காரர் வில்சன் பூட்டைத் திறந்து தருகிறேன் என்கிறார்’’ என்றார்.

நீதிபதியும் அனுமதி தரவே, ஒரு சாதாரண பேப்பர் க்ளிப்பைக் கொண்டு மூன்றே நிமிடத்தில் பூட்டைத் திறந்து விட்டார் வில்சன். நீதிபதி அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே சென்று தம் ஆசனத்தில் அமர்ந்து வில்சனின் வழக்கில் தீர்ப்பளித்தார். பத்தாண்டுகள் சிறைவாசம்! வில்சனின் மீதிருந்த வழக்கு: ஒரு லாண்டரியில் பூட்டை உடைத்துத் திருடினாரென்பது!

                                                                          -1985 ‘நியூஸ்வீக்’ இதழிலிருந்து

.=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

ஆச்சா...? இப்ப சில அரிய யோசனைகள்...!

ங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி வளரணும்னு நினைக்கறீங்களா...? ரொம்ப ஸிம்பிளான வழி இதோ: உங்கள் மனைவி அல்லது சகோதரியின் தங்கச் சங்கிலியை கையில் வாங்குங்கள். அது நகை. அதை வாயில் வைத்துச் சப்புங்கள். அதன் சுவையை அனுபவியுங்கள்... இதுதான் நகைச்சுவை! ஹி... ஹி...! என்ன முறைக்கறீங்க...? சரி, சரி... இப்ப நீங்க ஜாலியாக இருக்கறதுக்கான வழியச் சொல்றேன். இது இன்னும் ஸிம்பிள்ங்க. நேராப் போய் கெஸட்டுல உங்க பேரை ‘ஜாலி’ன்னு ரிஜிஸ்டர் பண்ணிடுங்க. இப்ப எல்லாரும் உங்களை ‘ஜாலி’ன்னுதானே கூப்பிடுவாங்க. நீங்களும் ஜாலியா இருப்பீங்கல்ல...! ஹய்யோ... ஒரு கூட்டமே கெளம்பிடுச்சு போலருக்கே... மீ எஸ்கேப்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

சீரியஸா ஒரு மேட்டரோட முடிச்சுப்பமா..?

செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2011ல் நான் பதிவு எழுதத் துவங்கினேன். எழுதத் துவங்கி இரண்டு மாதங்களின் பின் எனக்கு பதிவு எழுதக் கற்றுத் தந்த என் நண்பரான சீனியர் பதிவரைச் சந்தித்தபோது, ‘‘பெரிய ப்ளாகர்ஸ்லாம் உங்களைப் படிக்கறாங்க. கமெண்ட்ஸ்ல பாத்தேன். அதனால நீங்க நல்லா எழுதணும்...’’ என்று அட்வைஸினார். ‘‘நான் நல்லா எழுதறேனான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? ஸிம்பிளான வழி சொல்லுங்க’’ என்று கேட்டேன். ‘‘ஸிம்பிளாவா? நீங்க எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகறப்ப உங்களைப் பின்தொடர்றவங்க எண்ணிக்கை 200ஆ இருக்கணும். அப்புறம்... தமிழ்மணம்னு எல்லாரும் மதிக்கற ஒரு திரட்டி இருக்கு. அதோட ரேங்கிங்ல முதல் அம்பதுக்குள்ள உங்க ப்ளாக் இருக்கணும்,’’ என்றார்.

அதுமுதல் நான் எப்போதும் போல எழுதி வந்தாலும் இந்த இரண்டும் ஓராண்டுக்குள் நடக்குமா என்று ஒரு சிறு பையனின் ஆர்வத்துடன் அவ்வப்போது கவனித்து வந்தேன். இப்போது... முதல் வருடப் பிறப்பிற்கு இன்னும்  30 நாட்கள் இருக்கும் நிலையில் என்னைப் பின்தொடரும் நண்பர்கள் 200க்கும் மேல், முதல் 50க்குள் வந்தால் பெரிதென்பதற்குப் பதிலாக 5வது இடத்திலேயே இருக்கிறேன். இதெல்லாம் உங்கள் அனைவரின் அன்பினாலும் ஆதரவினாலும் தான் சாத்தியமாயிற்று. எத்தனை உறவுகள், எத்தனை நட்புகள் கிடைத்திருக்கின்றன என்னை அரவணைக்க! உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து கரங்கூப்பிய என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

76 comments:

  1. சூப்பர் பாஸ்ட் டிராக்கில் போறீங்க சார் நீங்க. ரெண்டு வருஷத்தில் அசத்திபுட்டீங்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  2. ரெண்டு வருசமல்ல ஒரு வருடம் மன்னிக்க !

    ReplyDelete
    Replies
    1. பதிவுலக வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா...

      Delete
  3. முதல் வருடப் பிறப்பிற்கு இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில்
    >>>>
    ஒரு கிராண்ட் பார்ட்டிக்கு ரெடி ஆகிடலாமா அண்ணா(பிளாக்கர்ஸ் மீட்டிங்ன்னு நழுவக்கூடாது)

    ReplyDelete
    Replies
    1. தஙகைக்கில்லாத பார்ட்டியா..? நான் ரெடி. ஆமா... கிராண்ட் ஸ்வீட்ல ஸ்வீட் வாங்கித் தர்றதுதானே கிராண்ட் பார்ட்டி..?

      Delete
  4. பட்டய கெளப்புறீங்க..

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தந்த உங்களுக்கு உளமார்ந்த நன்றி.

      Delete
  5. எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து பதினேழாயிரம் ரூபாய் வேணும்னு ஒரே கவலையாப் பட வேண்டியதுதானேடா...!
    >>>
    ஆஹா! கவலையை குறைச்சுக்க இது நல்ல வழியா இருக்கே. இனி நான் டிரை பண்றேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த சுலப வழி பிடிச்சிருக்கா..? ஹி... ஹி... யான் பெற்ற இன்பம்... மிக்க நன்றிம்மா,

      Delete
  6. அபத்தம்:
    //மாறவேடம்//
    மாறு வேடம்.

    பத்து மார்க் இல்லை என்றாலும் இரண்டு மார்க்காவது போடுங்க சார்!

    கடன் ஜோக் சூப்பர்.

    உங்களின் இந்த வெற்றிக்கு நகைச்சுவையுடன் கூடிய உங்கள் எழுத்து நடை முக்கிய காரணம். மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. மார்க் போட்ரலாம் பாஷித். ஆனா விடை அது இல்ல. ஜோக்கை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  7. பல்சுவை பகிர்வு...
    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...(TM 2)

    ReplyDelete
    Replies
    1. என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. அபத்தம் : விழிக்காமலே அவர் இறந்தார் என்றால் அவர் கண்ட கனவு எப்படி தெரியும் ?

    ReplyDelete
    Replies
    1. ரொம்பச் சரியாச் சொல்லிட்டீங்க ராஜா... என்ன இருந்தாலும் வாத்தியாராச்சே... மிக்க நன்றி.

      Delete
  9. எல்லாமே அருமை குறிப்பா நகை சுவை பிரமாதம் பிரமாதம் எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்களோ எல்லாம் இந்த மதுரைக் காரர்களுக்கு மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும் போல (மதுரை தமிழன்).

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் மதுரைவாசியா கொஞ்ச நாள் இருந்துட்டீங்கன்னா தன்னால வரும் இதேல்லாம். தென்றலுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
    2. இக்கரைக்கு அக்கரை பச்சை...எங்களுக்கு எப்படிடா இவங்க தினமும் ஒரு கவிதை எழுதி கலக்குறாங்கன்னு நினைக்க்றோம். நாங்களும் கவிதை எழுதலாம் என்று கொஞ்சம் யோசிச்சாலே இருக்கிற சிறு மூளையும் சுளுக்கிகிறது ( அது யாரு மதுரைகாரங்களுக்கு எல்லாம் மூளை இருக்கிறதா என்று கேட்கிறது உஷ் சத்தம் போட்டு கேட்காதீங்க மக்கா)

      Delete
  10. மிக்சர் தங்களின் எழுத்து சுவையுடன் சிறப்பாக இருந்தது
    சார் வாழ்த்துக்கள்
    r.v.saravanan
    குடந்தையூர்

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருந்ததுன்னு சொல்லி வாழத்தின குடந்தையூராருக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. மிக்ஸர் நல்ல மொறு மொறுப்பாக.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சுவைத்த உங்களுக்கு உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. பதிவு தொடங்கி ஒரு ஆண்டிற்குள் 202 பேர்கள் பின் தொடர்பவர்கள் ஆக இருப்பதும், தமிழ்மணம் ரேங்கில் 5 வது இடைத்தை அடைந்திருப்பதும் சாதனைதான். பிடியுங்கள் என் வாழ்த்துக்களை!

    'மொறு மொறு‘ மிக்ஸர் வழக்கம்போல் சுவை குறையாமல், நமத்துப் போகாமல் இருந்தது. வாழ்த்துக்கள்!

    முதல் கதையில் மில்கா சிங் இறந்தது விட்டார் என்கிறபோது அவர் கண்ட கனவு எப்படி தெரிந்தது? இதுதான் அந்த ‘அபத்தம்’ என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லிய விடை மிகச் சரியானது சார். மிக்ஸரின் சுவையை ரசித்து. எனக்கு வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மிகமிக மகிழ்வுடன் கூடிய என் நன்றி.

      Delete
  13. அருமை....! 17000 ரூபாய் ஐடியா நல்லாருக்கே...!

    ReplyDelete
    Replies
    1. ஐடியாவை ரசித்துப் பாராட்டிய உஙகளுககு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. அப்புறம் கணேஷ் சார்! காவலர் உடற்தகுதித் தேர்வு வருகிற 21.08.12 முதல் 30.08.12 வரை தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கிறது. எங்கள் தூத்துக்குடியில் 6500 பேருக்கு நடக்கிறது. நானும் அதில் Nodal Team-ல் இருக்கிறேன். ஆதலால் சென்னை பதிவர் திருவிழாவிற்கு என்னால் வர இயலாது. மன்னிக்கவும். தங்களையும் மற்ற பதிவுலக சொந்தங்களையும் நேரில் காண இயலாதே என்ற நிஜமான வருத்தம் உண்டு. பார்க்கலாம் இதைப் போல இன்னொரு சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்க இறைவன் அருள் புரியட்டும். மற்றபடி விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நடக்கவிருக்கும தேர்வில் நீங்கள் நல்லமுறையில் வெற்றி காண என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் துரை. எனக்கும உங்களை மிஸ் செய்வதில் வருத்தம்தான். விழா சிறக்க வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  15. நீங்க நடத்துங்க...ம் ம் ம் - போட்டு தாக்குறீங்க

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      Delete
  16. Replies
    1. அனைத்தையும் ரசித்த ஸ்ரீராமுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  17. விநோதமும் , சீரியசும் - காராபூந்தியும் , ஓமப்பொடியும்
    போல் மிக்சரில்..... வெரி டாமினன்ட் !

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தந்த உங்களின் கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  18. விடை காண முடியாமல்..திரும்ப திரும்ப படித்தேன்.பின்னூட்டத்தைப் படித்து தெரிந்து கொண்டேன்.மிக்சர் சுவை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட கவிஞருக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  19. மில்கா சிங் தூக்கத்திலிருந்து விழிக்காமல் இறந்துபோய் விட்டதால், அவர் கண்ட கனவு,
    அவர் சொல்லாமல். மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸார். இதுவே மிகச் சரியான விடை. நீங்கள் ரசித்துக் கருத்திட்டதில் மிக்க மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  20. அருமையான மிக்சர்! கதையும் வினோதமும் அருமை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  21. பதிவு தொடங்கி ஒரு ஆண்டிற்குள் 202 பேர்கள் பின் தொடர்பவர்கள் ஆக இருப்பதற்கும், தமிழ்மணம் ரேங்கில் 5 வது இடைத்தை அடைந்திருப்பதற்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவை வெளியிட்ட நேரம் தமிழ்மணம் என்னை 6வதா ஆக்கிடுச்சு, அவ்வ்வ்வ்.... வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.

      Delete
  22. தொகுப்பு அருமை.

    முதல் வருட நிறைவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. சுவாரசியமான தொகுப்பு. kggயா சும்மாவா?
    சிறிய வெற்றிகள் பெரிய வெற்றிக்கான படி கணேஷ். தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  24. எல்லாமே நல்லா இருந்துது.

    ஹி ஹி ஹி..... கலக்கல்! உங்க அரிய யோசனை சூப்பரோ சூப்பர். படிச்சுட்டு நான் அசந்து போய் உக்காந்துட்டேன்னா பாத்துக்கோங்களேன். :)

    அருமையா எழுதறீங்க கணேஷ். முதல் ஆண்டு நிறைவுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அருமை என்று எனக்கு உற்சாக டானிக் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  25. தொடரட்டும் வெற்றிகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  26. மிக்சர் மொறு மொறுப்பு சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. மொறுமொறு மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதய்ம நிறை நன்றி.

      Delete
  27. கற்றுக் கொடுக்கும் வாத்தியார் தேர்வில் தோல்வி அடைந்த்ததாய் சரித்திரம் இல்லையே வாத்தியாரே .... மென்மேலும் வளர்ந்து பதிவுலகில் பெரும் சாதனை புரிய வாழ்த்தும் சிஷ்யன்

    ReplyDelete
    Replies
    1. நண்பனின் வாழ்த்து மகிழ்வு தந்தது. நன்றி.

      Delete
  28. மிச்சர் மொறு மொறுவென்று இருந்தது. சூப்பர்... நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல திரு.கடுகு அவர்கள் மூலமாக தங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்களுடையது தானாகச் சேர்ந்த கூட்டம். சேர்த்த கூட்டமல்ல :-) நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைய வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  29. கதம்பப் பதிவு சிறப்பு. சகல கலக்கல்களும் உள்ளது.
    ஓராண்டு நிறைவு,.5வது பிள்ளை
    எல்லாவற்றிற்கும். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வோடு வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  30. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்! தமிழ் மனத்தில் முதல் 10 இடங்களுக்குள் வந்தமைக்கும் 200 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களை பெற்றமைக்கும்!

    ஒரு வருடத்தில் இது வியக்கத்தகு சாதனை தான்! இந்த நிலையை எட்டுவதர்க்குத்தான் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன், பணிச்சுமை காரணமாக இடையிடையே பதிவிடுவதில் சற்று காலதாமதம் ஆகிவிடுகிறது!

    ReplyDelete
    Replies
    1. என்னையும் பல சமயங்களி்ல் பணிச் சுமை அழுத்தி திணறடிக்கிறது. அதைத் தாண்டித்தான் ஓட வேண்டி உள்ளது. வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  31. மிகவும் தரமான பதிவுகள் தந்து, சகபதிவர்களிடம் மரியாதையுடனும் சிநேகத்துடனும் பழகி, இயல்பான நகையுணர்வு மற்றும் பல பொறுப்பான தகவல்கள் பகிர்ந்து எங்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. உங்களனைவரின் மனதில் எனக்கு ஒரு இடம் உள்ளது என்பதையே நான் பெரிதாக எண்ணி மகிழ்கிறேன் தோழி. உங்களின் வாழ்த்திற்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  32. வணக்கம் நண்பரே,
    பொழுது போக்கிற்காக எழுதாது
    எழுதும் எழுத்துக்கள்;
    நெஞ்சில் பதியமிடும் வகையிலும்
    அதன்மூலம் உலகின் பன்முகக்
    கோணங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியும்
    வரும் உங்கள் எழுத்துக்கள்
    என்றும் மார்க்கண்டேயனாய் வாழட்டும்...
    நாங்கள் தேன் குடிக்கும் வண்டாய்
    உங்கள் எழுத்துக்கள் எனும் மலர் தேடி வருகிறோம்...
    இன்னும் பல ஏற்றமான பல நிலைகளுக்கு உங்கள்
    எழுத்துக்கள் சென்றடைய தமிழ்த்தாய் அருள்புரிவாள்.
    அவளின் மைந்தர்கள் யாம் உடனிருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. என்றும் என் உடனிருந்து மகிழும் நண்பா... உங்களு்ககு மனநெகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  33. Replies
    1. பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா.

      Delete
  34. இப்போது கொடுத்த மிக்சர் நல்ல “மோட்டா” மிக்சர். நீங்கள் சிறந்த பதிவர்தான். இதில் என்ன சந்தேகம்.

    ReplyDelete
    Replies
    1. மனமகிழ்வு தந்த உங்களின் பாராட்டிற்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  35. உங்கள தரமான எழுத்துக்களே உங்கள் வளர்ச்சிக்கு சாட்சி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    இன்னும் பல அரிய யோசனைகளை எதிர்ப்பார்க்கிறேன். :-)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற என்னாளும் முயல்வேன் நண்பா. மிக்க நன்றி.

      Delete
  36. இங்க பார்டா....நகைச்சுவையாமாம்.இப்பிடியே எழுதினா 1000 பேர்கூட வந்திடுவாங்க சீக்கிரமா.தமிழ்மணத்தில நீங்கதான் ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. என் வளர்ச்சியில் மகிழும் என் தோழிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  37. மிக்ஸர் அருமை... இந்த பிரபலம் , முதல் இடம் இதெல்லாம் விட்டு தள்ளுங்க.... தரமான பதிவுகளா எழுதுங்க. அது போதும். வாழ்த்துகள் கணேஷ் :)

    ReplyDelete
    Replies
    1. சரியான வார்த்தை சொன்னீர்கள் நண்பேர... மிக்க நன்றி.

      Delete
  38. அனைத்தையும் சுவைத்தேன்... ரசித்தேன்.

    ஒரு வருடத்திற்குள் 200 தொடர்பவர்கள், தமிழ்மணத்தில் ஐந்தாம் இடம்... அசத்துங்க....

    பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube