Tuesday, August 14, 2012


1947 ஆகஸ்ட் 14 இரவு 11 மணிக்கு அரசியல் நிர்ணய சபை கூடியது. அந்த உன்னத சபையிடம்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க உள்ளனர். அன்றைய இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அச்சபையில் இருந்தனர். நள்ளிரவை நெருங்கி்க் கொண்டிருந்த நேரத்தில் மூன்று தலைவர்கள் எழுந்து சுருக்கமாக உரையாற்றுகின்றனர். புதிய பாரதம் எப்படி இருக்க வேண்டுமென்று அவர்கள் கண்ட கனவு உரையில் வெளிப்படுகிறது. நீங்களும் கேளுங்கள்...

அரசியல் நிர்ணய சபையின்
தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் :

து மகிழ்வுடன் கொண்டாட வேண்டிய நாள் என்பதை விட நம் கனவுகளில் உள்ள இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய நாள் இது. கடந்து போன காலத்திலிருந்து நம் கண்களைத் திருப்பி எதிர்காலத்தில் நம் பார்வையையும் பதிக்க வேண்டும். மற்ற நாடுகளோடு நமக்கு எந்த சச்சரவும் கிடையாது. அவர்களும் நம்மோடு எந்த சச்சரவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நாம் நம்பலாம். சரித்திர பூர்வமாகவும், கலாச்சார பூர்வமாகவம் நாம் அமைதியை விரும்புபவர்கள். இந்தியா உலகத்தோடு சமாதானமாக இருக்க விரும்புகிறது.

தன் எல்லைகளு்கு வெளியே இந்தியா வென்றது ஆன்மாக்களைத்தான். இரும்பினாலோ தங்கத்தாலோ ஆன அடிமைச் சங்கிலியிடும் சாம்ராஜ்ய வெற்றிகள் அல்ல அவை. பிற நாடுகளையும், மக்களையும் கலாச்சாரம், நாகரிகம், சமயம், ஞானம் என்கிற தங்கப்பட்டு கொண்டு பிணைத்த வெற்றிகள். இந்தப் பாரம்பரியத்தை நாம் தொடர்வோம். அகிம்சை எனும் ஆயுதத்தால் அமைதியும் விடுதலையும் நிறைந்த உலகைப் படைப்போம்.

ஜவஹர்லால் நேரு :

சுதந்திரமும் அதிகாரமும் பெரும் பொறுப்பைத் தருகின்றன. இந்தியக் குடிமக்களின் பிரதிநிதியாகிய சர்வ வல்லமை உள்ள இந்தச் சபையின் தோள்களில் அந்தப் பொறுப்பு அமர்ந்திருக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு நாம் எவ்வளவோ வேதனைகளைத் தாங்கியிருக்கிறோம். துயரின் நினைவுகளால் நம் இதயங்கள் கனக்கின்றன. சில வேதனைகள் இன்றும் தொடர்கின்றன. எனினும் கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். எதிர்காலம் நம்மை அழைக்கிறது.

ஒவ்வொரு விழியிலுள்ள கண்ணீரையும் துடைப்பதுதான் இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த மனிதரின் பேராவலாக உள்ளது. கண்ணீரம் துயரும் உள்ளவரை நம் பணி முடிந்ததாகக் கொள்ள முடியாது. எனவே நம் கனவுகளை நனவாக்க நாம் உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்.

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் :

மக்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பங்களோ ஏராளம். ஆனால் திறமையை அதிகாரம் மீறும் போது நாம் தீமையில் வீழ்ந்து விடுவோம் என்று எச்‌சரிக்க விரும்புகிறேன். நாளை முதல்- இன்றிரவு முதல் -நாம் பிரிட்டிஷ்காரர்கள் மீது பழி சுமத்த முடியாது. நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். சாதாரண மனிதனின் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சமுதாயத்தின் பிற தேவைகளை அளிப்பதன் மூலம்தான் நாம் மதிப்பிடப்படுவோம்.

மேலிடங்களில் உள்ள ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை, அதிகார மோகம், கொள்ளை லாபம், கறுப்புச் சந்தை இவை இந்த உன்னதமான நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை நாம் ஒழிக்கவில்லையானால் நம் திறமையை உயர்த்திக் கொள்ள முடியாது.

-டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பேசி முடித்ததும் நள்ளிரவு பன்னிரண்டு மணி அடித்தது. ஆகஸ்ட் 15 பிறந்தது. தொடர்ந்து சபையில் இருந்த உறுப்பினர்கள் யாவரும் எழுந்து நின்று நாட்டுக்குச் சேவை செய்ய உழைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

                                                                                             -நன்றி : தினமணி 14.8.2011

25 comments:

  1. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சார்

    நன்றி ....

    ReplyDelete
  2. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...(TM 2)

    ReplyDelete
  3. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனியதொரு நாளில் நல்லொதொருபகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சுதந்திரதின நல்வாழ்த்துகள். அவர்கள் நினைத்த பாரதம் வேறு, இப்போது இருக்கும் இந்தியா வேறு.

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி.வெல்க பாரதம்!

    ReplyDelete

  10. முப்பெரும் தலைவர்கள் அன்றைய பேச்சுக்கும், இன்றைய நிலைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால்......?கனவு நினைவாக வில்லை என்பதே உண்மை!

    ReplyDelete
  11. நள்ளிரவு பனிரண்டு மணிக்கு வெளியிட்டிருக்க வேண்டிய பதிவு!! இன்னும் ரொம்ப தூரம் போகணும் நாம்!

    ReplyDelete
  12. அட்வான்ஸ் சுதந்திரதின வாழ்த்துக்கள் அண்ணேன்.

    ReplyDelete
  13. இது மகிழ்வுடன் கொண்டாட வேண்டிய நாள் என்பதை விட நம் கனவுகளில் உள்ள இந்தியாவை உருவாக்க நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய நாள்

    இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  14. நாட்டுக்கு மட்டுமே சுதந்திரமென்று நான் நினைக்கிறேன்.வாழ்த்துகள் ஃப்ரெண்ட் !

    ReplyDelete
  15. பாரதி கண்டபாரதம் சீக்கிரம் அமைய வேண்டும் என்ற நல் எண்ணத்தோடு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. innikku tamil work panna maattenguthu. suthanthirathina nal vaazththukal.

    ReplyDelete
  17. விடுதலை தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  18. இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!


    ReplyDelete
  19. இனிய சுதந்திர நன்னாள் வாழ்த்துகள் கணேஷ்.

    ReplyDelete
  20. //மேலிடங்களில் உள்ள ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை, அதிகார மோகம், கொள்ளை லாபம், கறுப்புச் சந்தை இவை இந்த உன்னதமான நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை நாம் ஒழிக்கவில்லையானால் நம் திறமையை உயர்த்திக் கொள்ள முடியாது.//

    டாக்டர் ரதாகிருஷ்ணனின் கனவு 65 வருடமாகியும் நினைவாக வில்லை ...

    ReplyDelete
  21. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  22. நல்லாயிருக்கு. சுதந்திரதின வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  23. அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறை நன்றிகள்.

    ReplyDelete
  24. கொஞ்சம் லேட் தான்.. இருந்தாலும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube