இனிய
நட்புகளுக்கு வணக்கம். இன்றைய இரவு விடிந்தால்,,, காலை சென்னையில் தமிழ்
வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கி விடும். இந்த விழாவிற்கு அயல்நாடுகளில்
இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின்
வாழ்த்துகள் வந்த வண்ணமிருப்பது விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்ற
வேட்கையை அது அதிகரிக்கிறது
இந்தப் பதிவர் சந்திப்பில் இரண்டு விசேஷ அம்சங்கள் என்னவென்றால் இதுவரை முகம் காட்டாமல் ஒரு கேள்விக்குறியாக இருந்த சேட்டைக்காரன் முகம் காட்டி ஆச்சர்யக் குறியாக பரிமளிக்க இருக்கிறார். மற்றொரு வியப்பு... இதுவரை முகம் காட்டாமல் மறைந்திருந்த நல்ல கவிஞர் ஒருவர் கவியரங்கில் கவிதை வாசித்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார், உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் அவர் பெயர் : கேபிள் சங்கர் (மண்டபத்துக்குள்ள தக்காளி. முட்டைல்லாம் எடுத்துவர அனுமதி இல்லை. சொல்லிப்புட்டேன்)
மண்டபத்திற்கு வரும் வழி : சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள் அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்) சென்று எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம்.5 வது ரயில் நிறுத்தம் மேற்கு மாம்பலம். இதேபோல் செங்கல்பட்டு, தாம்பரத்திலிருந்து வரும் தோழர்கள் எலெக்ட்ரிக் ரெயில் ஏறி மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கலாம். ஒரு ஆட்டோவைப் பிடித்து ஐந்து விளக்கு என்று சொல்லி அமர்ந்தால் 10 நிமிடங்களில் மண்டபத்தை அடையலாம்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் 17 என்று எண்ணிட்டு வடபழனி,சாலிகிராமாம்,பூந்தமல்லி,ஐயப்பன் தாங்கல் போன்ற ஊர்களின் பெயர்களைத் தாங்கி வரும் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம். இந்த நிறுத்தத்தில் இறங்கி லிபர்டி தியேட்டர் செல்லும் வழியில் வந்தால் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் வரும். அதைத்தாண்டி வந்தால் ஐந்து விளக்குகளைக் கொண்ட மின்கம்பம் வரும். அதன் அருகிலேயே மணடபம் உள்ளது. 1 மணி நேரத்தில் மண்டபத்தை அடையலாம். தாம்பரத்திலிருந்து பேருந்தில் வரும் தோழர்கள் கோயம்பேடு மற்றும் அதன் வழியாக செல்லும் பேருந்துகளில் ஏறி வடபழனி (சிக்னல்)காவல் நிலையம் நிறுத்ததில் இறங்கி சாலையைக் கடந்து வடபழனி ஆண்டவர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வருகின்ற பேருந்துகளில் ஏறி லிபர்டி அல்லது மீனாட்சி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கலாம்.(நீங்கள் எலெக்ட்ரிக் ரயிலில் வருவதே சாலச் சிறந்தது)1 மணி நேரம் ஆகலாம்.
பூந்தமல்லியிலிருந்து வருகை தரும் தோழர்கள் 25G,17E,17M என்று குறியிட்டு சென்ட்ரல் மற்றும் பிராட்வே செல்லும் பேருந்துகளில் ஏறி கோடம்பாக்கம் லிபர்டி என்ற நிறுத்தத்தில் இறங்கலாம்.(கோடம்பாக்கம் மூன்று பேருந்து நிறுத்தங்கள் கொண்டது)இந்த நிறுத்தத்திற்கு மீனாட்சி காலேஜ் என்ற பெயரும் உண்டு.1 மணி நேரம் ஆகலாம். கோயம்பேட்டிலிருந்து வரும் தோழர்கள் 27சி என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கலாம்.சாலிகிராமம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதியில் இருந்து 12 சி என்ற பேருந்தில் ஏறினால் 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம்.15 நிமிடங்கள் ஆகும்.
தி. நகரிலிருந்து பேருந்தில் வருபவர்கள் போத்தீஸ் துணிக்கடையின் எதிர்புறம் இருக்கும் நிறுத்தத்தில் 12சி என்ற பேருந்து ஏறி 5 விளக்கு நிறுத்தத்தில் இறங்கலாம். 10 நிமிடங்கள் ஆகும். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வருபவர்கள் 25G என்ற பேருந்தில் ஏறி லிபர்டி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.

பதிவர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பவை :
1. அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும். 2. மது
அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும். 3.
பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து
தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள்
அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும். 4. ஒவ்வொரு
பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.
முக்கிய நிகழ்வுகளாக கவியரங்கம் மற்றும் மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.இந்த இரண்டுக்குமான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.இறுதி செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை கீழே காணலாம்.

கலந்து கொள்ள இயலாத பதிவர்களுக்காக
நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.தங்கள் வலைப்பக்கத்தில் இருந்த படியே நீங்கள்
பார்த்துக்கொள்ளலாம்.அதற்கான நிரலை எப்படி இணைப்பது என்பதை இங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்.
வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்.
வாருங்கள் தோழர்களே.. சென்னையில் சங்கமிப்போம்.
|
|
Tweet | ||
கேபிள் கவிதை படிக்கிறேன்னு காமேடிக்கு சொல்லிருப்பார் நிஜமா அரங்கில் கவிதை வாசிக்க மாட்டார் என நினைக்கிறேன் அதுவும் பட்டுக்கோட்டை பிரபாகர் வேறு அப்போது இருப்பார் எனவே கேபிள் யோசிப்பார் என்பது என் எண்ணம்
ReplyDeleteவிரிவான தகவல்களுக்கு நன்றி !
ReplyDeleteவிழா .....
கனி போல இனிக்கட்டும் !
பனி போல குளிரட்டும் !
அணி போல சிறக்கட்டும் !
திருஷ்டி சுத்தி போடவும் கண்டிப்பாக .
விழா வெற்றிகரமாக நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteமறக்காமல் அனைத்து பதிவர்களையும் சேர்த்து க்ரூப் போட்டோ ஒன்று எடுக்கவும்.
வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் (TM 4)
ReplyDeleteஉங்கள் அனைவரது முயற்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! அப்பறம் சந்திப்பு முடிந்ததுமே திங்கள் அன்று கண்டிப்பா ஒரு பதிவு அதப் பத்தி எழுதீடுங்க சார்! நன்றி!
ReplyDeleteமிகச் சரியாக வந்து சேரும்படியாக
ReplyDeleteமிக அருமையான தகவல்களும் வரைபடமும்
நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கான
ஆலோசனைகளும் மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
tha.ma 5
ReplyDeleteபதிவர் சந்திப்புத் திருவிழா சிறக்கட்டும்!
ReplyDeleteபுதிய திருப்பங்கள் நிகழட்டும்.
இது டென்மார்க்கிலிருந்து
வேதா. இலங்காதிலகம்.
இலங்கை இந்திய கட்சிகள் சங்கங்களின் கேலிக்கூத்து நிர்வாகங்கள், நடைமுறைகளால் மனம் வெறுத்துப் போய் ஆரம்பத்தில் திரு இராமானுஜம் ஐயாவிற்கு எனது மறுப்பையும் இலேசாகக் காட்டினேன்.(- சங்கம் கட்சி இணைப்பதை.)
இலஞ்சமும் ஊழலும் மலிந்துள்ளதே. நீதி நிர்வாகம் எடுபட வேண்டுமே என்று.
இந்த எண்ணத்தை இங்கு பதிவு செய்கிறேன. இக்கருத்தை அங்கு விதைப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.என் அனுபவம் கொண்டு (65 வயது) இதைக் கூறுகிறேன்
நிகழ்வு சிறப்புற மீண்டும் மீண்டும் நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கேபிள்...பீ கேர்புல்...(என்னை சொன்னேன்).
ReplyDeleteOkay we will avoid bringing eggs and tomotoes; but are we allowed to bring inside rotten tomatoes and spoiled eggs read carefully SPOILED EGGS AND NOT BOILED EGGS. Your roadmap to the hall is really really superb and that even a blind man can reach the spot without any difficulty. Thanks for uploading this function. Being Sunday may view it if not otherwise disturbed by other programmes.
ReplyDeleteநாளை சிந்திப்போம் நண்பரே...
ReplyDeleteநாளை சந்திப்போம் நண்பரே...
ReplyDeleteசென்னையில் சங்கமிப்போம் வாருங்கள் பதிவர்களே..
ReplyDeleteவிழா சிறப்புற வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்க வளர்க! பிரமிக்க வைக்கும் ஏற்பாடுகளை எல்லா தளங்களிலும் படித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள்.
ReplyDeleteவிழா சிறப்புடன் நடந்தேற மனமார்ந்த வாழ்த்துகள்..
ReplyDeleteஅருமையான நிகழ்வு சிறப்புடன் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள் கணேஷ். இன்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.
ReplyDeleteவிழா வெற்றிகரமாக நடைபெற என் வாழ்த்துக்கள்§
ReplyDeleteசிறப்பான ஏற்பாடுகள்! வாழ்த்துகள்!
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றேன்.
ReplyDeleteமிகச்சிறப்பான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
அட்டகாசம்தான்.....கொண்டாடுங்கோ !
ReplyDeleteவிழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...ஆனால் அதன் பின் செய்ய வேண்டிய வேலைகள்? இதப் படிங்க http://tamilmottu.blogspot.in/2012/08/blog-post.html
ReplyDeleteவிழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கணேஷ் சார்.
ReplyDeleteசந்தோஷமாக இருக்கிறது... மனம் நிறைகிறது.... நான் ப்ளாக்ஸ்பாட்டில் பதிவு போட ஆரம்பித்த நாளில் இருந்து பலமுறை நினைத்தவை இது.... பதிவர்கள் சந்திப்பு ஊரில் நிகழ்ந்தால் எல்லோரையும் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைக்குமே என்று... எல்லோரும் ஒன்று கூடி தேர் இழுத்தது போல் மிக அற்புதமான இந்த சந்திப்பும் விழாவும் நான் நேரில் வந்து பார்க்கமுடியவில்லையே என்ற குறையையும் தீர்த்தது நேரடி ஒளிபரப்பு மூலமாக...
ReplyDeleteநான் ஜூன் மாதம் குடும்பத்துடன் இந்தியா சென்று ஜூலை திரும்பியாச்சு.. இனி இதோடு அடுத்து விசிட் இந்தியாவுக்கு எப்போதோ நான் அறியேன்... ஜஸ்ட் மிஸ்....
விழா சிறப்புடன் நடைப்பெற்று எல்லோரும் மகிழ்வுற்று இருக்க இறைவனிடம் என் அன்பு பிரார்த்தனைகள்... கலந்துக்கொண்டு விழாவை சிறப்பிக்கும் அத்தனை நண்பர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....
கணேஷுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா.... விழாவை பற்றி நான் அறிய வந்ததே கணேஷ் மூலமாக தான்...
மாலை வீட்டுக்கு சென்றதும் விழாவைப்பற்றிய ஒளிபரப்பு காணவேண்டும்... இப்ப அலுவலகத்தில் காண இயலாது...
மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்...
சென்னை சங்கமம் சிறப்பானதாக அமையட்டும்.
ReplyDeleteஅசத்திப்புட்டீங்க மக்கா!வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDelete