Wednesday, April 18, 2012

நடை வண்டிகள் - 13

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2012
பி.கே.பி.யும் நானும் - 5

தெரிந்தோ, தெரியாமலோ ஒருத்தன் கோர்ட் படியை மிதிக்க வேண்டி வந்துட்டா, எவ்வளவு செலவாகும் என்பது உங்களுக்கெல்லாம் ந்ன்றாவே தெரிந்திருக்கும். நிறையச் சொத்து பத்து இருக்கறவர்களுக்கே அதெல்லாம் கரைஞ்சு போயிடும். ‌சொத்து எதுவும் இல்லாத எனக்கு..? அந்தப் பிரச்னையிலருந்து நான் மீண்டு வந்தப்ப, எனக்குள் தப்பித்துவிட்ட நிம்மதி இருந்ததே தவிர, ஃபைனான்ஷியல் லெவலில் கையிருப்பெல்லாம் கரைஞ்சு போய் கிட்டத்தட்ட 0 லெவலில்தான் இருந்தேன்.

அடுத்த வேலைக்கு ட்ரை பண்ணலாம்னு நினைத்த போதுதான் அதற்கு முந்தின மாதம் சந்தித்தபோது பி.கே.பி. ஸார் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போது ஸ்ரீனிவாஸ் பிரபு அரசு வேலைக்குச் சென்று விட்டதால் அவருடன் இல்லை. ‘‘எனக்கு ஒரு உதவியாளர் தேவைப்படுது கணேஷ். கதை, கட்டுரைன்னு எழுதத் தெரியாட்டாலும், நிறையப் படிக்கிறவங்களா கதைன்னா என்னன்னு தெரிஞ்சவங்களாகவாவது இருக்கணும். உஙகளை மாதிரியான ஒரு இன்ட்ரஸ்ட் உள்ள ஆளா உங்க சர்க்கிள்ல யாராவது இருந்தாச் சொல்லுங்க...’’ என்றிருந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை அப்போது.

இப்போது அது நினைவுக்கு வந்ததும் அவரின் வீட்டிற்குச் சென்றேன். சிறிது நேரம் பேசிய பிறகு, ‘‘போன முறை சந்திச்சப்ப ஒரு உதவியாளர் வேணும்னு சொல்லியிருந்தீங்க ஸார்... அது...’’ என்று இழுத்தேன். உண்மையில் அவரிடம் ‘‘என்னைச் சேர்த்துக் கொள்கிறீர்களா ஸார்?’’ என்று அவரிடம் கேட்கக் கூச்சமாக இருந்தது. பிறரின் மனதைப் புரிந்து கொள்ளாதவர் எழுத்தாளராக இருக்க முடியுமா? அவர் சட்டென்று புரிந்து கொண்டவராகச் சொன்னார். ‘‘கணேஷ்! அந்த ஆஃபர் இன்னும் வேலிடாத்தான் இருக்கு. நீங்க விரும்பினா எனக்கு உதவியாளராகச் செயல்படலாம்!’’ என்றார். மனநெகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தேன். மறுநாளிலிருந்து திருவான்மியூர் அலுவலகத்துக்கு வரச் சொன்னார். விடைபெற்றேன்.

நன்றி: ஓவியர் அனில் கார்த்திக்!
றுதினம் திருவான்மியூர் அலுவலகம் வந்தபோது எனக்கு நன்கு அறிமுகமான தாஸும், அதிகம் பழகியிராத மற்ற இரண்டு உதவியாளர்களும் இருந்தனர். பி.கே.பி. ஸார் சொன்னார். ‘‘கணேஷ்! முதல்ல கொஞ்ச நாளைக்கு நாங்க கதைய டிஸ்கஸ் பண்ணும் போது நீங்க எதுவும் குறுக்கிட்டுப் பேச வேண்டாம். நல்லா கவனிங்க. உங்க கிட்டருந்து அவுட்புட்டை எப்ப வாங்கிக்கணும், எப்படி வாங்கிக் கணும்னு எனக்குத் தெரியும். ‌ஸோ... பேசாம கவனிச்சுட்டே வாங்க...’’ என்றார். தொலைக்காட்சித் தொடர்களுககான கதை வசன விவாதம் தினமும் நடக்கும். பி.‌கே.பி. ஸார் உதவியாளர்களுடன் விவாதி்த்து கதையை மெருகேற்று வதையும், கேரக்டர்களை வடிவமைப் பதையும் கவனித்து வந்தேன். ஏறக்குறைய முதல் ஒரு மாதம் முழுவதும் வேலையே செய்யாமல் அவரிடம் சம்பளம் பெற்றேன்.

அவர் சொன்னது போலவே நான் தானாகத் தலையிடாமல் இயல்பாகவே அவர்களுடன் இணைந்து கொண்டது நடந்தது. மெல்ல மெல்ல விவாதங்களிலும், பின் அவர் சொல்லும் டயலாக்குகளை டைப் செய்யும் பணியிலும் ஈடுபட்டு, அலுவலகத்தில் செட்டிலானேன்.  அலுவலகத்தில் செயல்படும் நேரங்களில், விவாதங்களின் போது ஒரு ‘பாஸ்’ ஆக நடந்து கொள்வார். நானும் அதற்கேற்றாற் போல செயல்படுவேன். அலுவலக நேரம் தவிர்த்த நேரங்களில் நல்ல நண்பராக நடந்து கொள்வார், வெளிப்படையாகப் பேசுவார். நானும் அவ்விதமே. எந்த நிலையிலும் அலுவலகத்தையும், தனிப்பட்ட நட்பையும் நானும், அவரும் கலந்து கொண்டு குழப்பிக் கொண்டதில்லை. இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்லாருக்கும் அமைந்து விடுவார்களா என்ன?

நான் பட்ட காயத்தின் ரணம் ஆறாமல் உள்ளே வலித்துக் கொண்டிருந்த காலகட்டமல்லவா அது! அலுவலக நேரத்தில் நான் சரியாகப் பணி செய்து வந்தாலும், மனதுக்குள் எனக்குள்ளிருந்த வேதனையின் கனத்தை அவர் நன்றாகவே உணர்ந்து கொண்டிருந்தார். (உண்மையான நண்பராயிற்றே...) என்னை அவர் செல்லும் சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். பார்த்த படங்களைப் பற்றி விமர்சிககச் சொல்வார். அவரின் விமர்சனத்தையும் சொல்லுவார். கூர்மையான அவரின் திரைக்கதை அறிவை அருகிலிருந்து பார்த்து நான் வியந்திருக்கிறேன் பல முறை. எப்போதாவது மலையாளம், தெலுங்குப் படங்களையும், பெரும்பாலும் தமிழ்ப் படங்களையும் பார்த்து கிணற்றுத் தவளையாக இருந்து வந்த எனக்கு உலக சினிமா என்று ஒன்று இருப்பதை அறிமுகப்படுத்தி விசாலமான அந்தக் கதவைத் திறந்து விட்டவர் பி.கே.பி. ஆங்கிலப் படங்களையும், ஈரானிய, ஃப்ரெஞ்ச் படங்கள் என்று மொழி வேறுபாடில்லாமல் அவருடன் சேர்ந்து பார்த்து ரசிக்க என்னால் முடிந்தது.

நான் பார்த்து ரசித்த படங்களுக்கு விமர்சனங்களும் எழுதியிருக்கிறேன் பின்னாளில் ஊஞ்சலில். இப்ப‌ோது சற்று ஊஞ்சல் இதழைப் பற்றிப் பேசிவிட்டு மீண்டும் பி.‌கே.பியின். அலுவலகத்துக்கு வரலாம். அதுவரையில் ஊஞ்சல் இதழுக்கான கதையை டைப் செய்து, பிழைத் திருத்தம் செய்து, என் வீட்டில் வைத்துத்தான் டிசைனிங் செய்வேன். பின் அவர் அலுவலக கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டி, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்ததும், முடிவான வடிவத்தை தெளிவான ப்ரிண்ட் அவுட்டுகளாக எடுத்து அவரிடம் ஒப்படைத்து வருவேன். இதுதான் நடைமுறையாக இருந்தது.

இப்போது அவருடனேயே பணி செய்ததால், வடிவமைப்பு முழுவதையும் அலுவலகத்திலேயே செய்து விடலாமே என்றார் அவர். என்னிடம் எப்போதுமே அவர் சொல்லிற்கு மறுப்பு இருந்ததில்லை. (அப்போது நான் ஊஞ்சல் இதழின் வடிவமைப்பாளன் மட்டுமே, உதவி ஆசிரியராக இல்லை). ஆக, முதல் முறையாக முழுமையான வடிவமைப்பையும் அவரை அருகில் வைத்துக் கொண்டே செய்யத் தொடங்கினேன். அந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து மற்றுமொரு விஷயத்தை நான் கைக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நல்ல பழக்கத்தைப் பற்றி...

                                                                           -தொடர்கிறேன்!

பின்குறிப்பு : பல நண்பர்களின் (என்னுடையதும்) விருப்பத்தின்படி நண்பர் ‘சேட்டைக்காரன்’ மீண்டும் பதிவு எழுத ஆரம்பித்துள்ளார். விரும்புபவர்கள் இங்கே க்ளிக்கி அவரின் நகைச்சுவையை ரசித்துச் சிரிக்கலாம்.

55 comments:

  1. நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களது நல்லெண்ணம் மகிழ்வுறச் செய்கிறது கணேஷ்......

    தொடருங்கள். தொடர்கிறேன்.

    சேட்டை மீண்டும் தனது சேட்டையைத் தொடங்கியதில் எனக்கும் மகிழ்ச்சி! சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் போன்ற பல கற்பனை நபர்களை உருவாக்கிய ஒரு படைப்பாளி ஆயிற்றே அவர்.

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டிக்கு உங்களின் தொடர் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி வெங்கட்! நீங்கள் சேட்டையைப் படித்துக் கருத்திட்டிருந்ததைக் கவனித்தேன் நண்பா! கிரேஸி மோகனின் ‘சிரிப்பு ராஜ சோழன்’ மாதிரி சேட்டையண்ணாவின் அந்த ‘சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்’ மனதில் நின்ற ஒன்று. உங்கள் நினைவிலும் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி.

      Delete
  2. போங்க ...சார்...சுவராஸ்யமாக போய்ட்டு இருக்கும் போது திடுக் திடுக்க்னு தொடரும் போட்டு விடுகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னங்க பண்றது? ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல எழுதிட்டே போனா... படிக்கறவங்க உதைப்பாங்கதானே! சுவாரஸ்யம்‌னு நீங்க சொல்ற ஒரு வார்த்தையே எனக்கு எனர்ஜி டானிக்! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  3. உண்மையான நட்பும் முகமூடி நட்பும்! ஊஞ்சல் மூலம் உங்கள் திறமையையும் சொல்லிச் சொல்லும் வண்டியில் நானும் வந்துகொண்டு இருக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. அழகாய் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கீங்க நேசன். உண்மையான நட்பு கிடைத்ததில் அதிர்ஷ்டசாலிதான் நான்! தொடர்ந்து வரும் தம்பி நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. றொம்க சுவாரஸ்சியமா இருக்கு அண்ணா.அனில் கார்த்திக்கின் ஓவியம் இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள் கூறினேன் என சொல்லுங்கள். தொடரட்டும் நடை வண்டிகள்.

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டியின் சுவாரஸ்யத்தைப் பாராட்டியதில் மிக்க மனமகிழ்வு கொண்டு என் உளம்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்!

      Delete
  5. வண்டியோடு தொடர்கிறேன் ஃப்ரெண்ட்.அனுபவ வண்டிகள்தான் வாழ்வின் பள்ளிகள் !

    ReplyDelete
    Replies
    1. அனுபவ வண்டிகள் வாழ்வின் பள்ளிகள்! -ஆஹா... வார்த்தைகள் நல்லாயிருக்கு ஃப்ரெண்ட். தொடர்ந்து நாம் பயணிக்கலாம். நடைவண்டிப் பயணம் முழுவதும் துணைவரும் உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  6. (முதலிலேயே வந்து ஒரு பின்னூட்டமிட்டேன்...நெட் படுத்திய பாட்டில் அது வெளியாகவில்லை என்று தெரிகிறது.)

    சுவாரஸ்யத்துடன் தொடர்கிறேன்.

    சேட்டை மீண்டு(ம்) வந்ததில் மிக மிக மகிழ்ச்சி. எழுத்தில் இயல்பான நகைச் சுவையுடன் எழுதும் இவரைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே என் அவா.

    ReplyDelete
    Replies
    1. நீங்களெல்லாம் தொடர்வது தரும் உற்சாகம்தானே என்னை ஓட வைக்கிறது ஸ்ரீராம்! என் மனமார்நத நன்றி தங்ளுக்கு. சரியான வார்த்தை சொன்னீங்க... பல கஷ்டங்களைச் சந்திச்சு மீண்டுதான் வந்திருக்கார் சேட்டையண்ணா!

      Delete
  7. உங்கள் அனுபவங்களில் இருந்து நிறைய விஷயம் தெரிந்து கொள்கின்றோம் .. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நற்கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ராஜா!

      Delete
  8. அனுபவங்கள் என்பது ஒரு படிப்பினை.
    படிப்பினையை எங்கனம் நாம் பயன்படுத்திக்கொள்கிறோம்
    என்பதே வாழ்வின் ரகசியம்..
    கொண்ட அனுபவங்களை நீங்கள் வெற்றிப் பாதைகளாய்
    மாற்றிக்கொள்ளும் ஒவ்வொரு பகுதியும்
    நான் அனுபவித்து கற்றுக்கொள்கிறேன் நண்பரே..
    தொடரட்டும் பயணம்..
    நானும் தொடர்ந்து என் மனதில் உங்கள் அனுபவத்தை
    நடவுப் பாட்டு பாடிக்கொண்டு நட்டு வைத்துக் கொள்கிறேன்..

    நண்பர் சேட்டைக்காரன் பதிவு பார்த்துவிட்டேன் நண்பரே..
    அற்புதமான எழுத்தாளர்..
    நாம் இழக்க மனமில்லா எழுத்தாளர்..

    ReplyDelete
    Replies
    1. படிப்பினையை நாம் பயன்படுத்திக் கொள்வதில்தான் வாழ்வின் வெற்றி இருக்கிறது. மிகச் சரியான வார்த்தைகள் மகேன். என்னுடன் நீங்களும் நடைபயில்வதில் என்னைவிட எவர் மகிழ்வு கொண்டு விட இயலும்? தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  9. சேட்டைய எழுத வைத்ததுக்கு நன்றிகள்....பி.கே.பியை பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இந்த தொடர் அமையும்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பா... இனி வரவிருக்கும் பக்கங்கள் இன்னும் விரிவாக அந்த வாய்ப்பைத் தரும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. நடைவண்டியுடன் நடக்கிறேன் என்று நினைக்கிறேன் மிக மிக நன்றாக உள்ளது அனுபவங்கள். வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. நன்றாக உள்ளது என்று பாராட்டி, வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  11. அப்படியானால் கதை விவாதம் என்றால் தங்களை அழைக்கலாம் போலிருக்கிறதே..அனுபவம் தங்களிடம் அதிகமாக இருக்கிறது. எந்த விசயத்திற்காக தங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற குழப்பமே ஏற்பட்டுவிட்டது போங்கள்..

    ReplyDelete
    Replies
    1. கதை விவாதங்களுக்கு இப்போதும் பி.கே.பி. ஸார் அழைத்தால் செல்வதுண்டு கவிஞரே... நீங்கள் இந்த நண்பரை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  12. தங்களின் காயத்திற்கு சரியான மருந்து நண்பரின் மூலம் கிடைத்ததை விளக்கிய விதம் அருமை .

    ReplyDelete
    Replies
    1. நல்‌லதொரு கருத்தைச் சொல்லி என்னை ஊக்கப்படுத்திய தென்றலுக்கு... என் இதய நன்றி!

      Delete
  13. அழகாய்ச் செல்லுது நடைவண்டி. அழகு. அந்த நல்ல பழக்கத்தை தெரிந்து கொள்ள ரொம்பவே ஆர்வம்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வந்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கும் நண்பனுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. Your article reflects the struggle you were compelled to encounter, whether it is manmade or Godmade. Still It is interesting and I really wonder how much forbearance / stress you might have had while undergoing this mental agony. Keep it up because it helps us to take a leaf of lesson or two from this article.

    ReplyDelete
    Replies
    1. மற்றவர் அனுபவங்களில் இருந்து நாம் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு பூரண சம்மதம் மோகன்! தங்களின் கருத்துக்கு மிக மகிழ்ந்து என் நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

      Delete
  15. பதிவுகளின் நீளம், பதிவுகளில் சுவாரஸ்யம், பகிர்வுகளின் பாங்கு எல்லாமே சூப்பர் உங்கள் பதிவுகளில். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டு என்றுமே மனமகிழ்வும் நிறைவும் தருவது எனக்கு. இம்முறையும் கிடைத்ததில் மகிழ்ந்து உங்களுக்கு என் நன்றி!

      Delete
  16. பி.கே.பி அவர்களிடமிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி சார்.
    சேட்டை அவர்கள் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எனக்குள்ளும் மகிழ்வைத் தோற்றுவித்து விட்ட தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  17. கணேஷ் நிறைய மோதிரக்கையால் குட்டு வாங்கி இருக்கீங்க. அது உங்க எழுத்தின்மூல நல்லாவே புரியுது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் குட்டுகள் என்னை வளப்படுத்துதலின் பொருட்டே என்பதில் சிறிதும் ஐயமில்லைம்மா. தங்களின் வாழ்த்துக்களினால் மகிழ்ந்து என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  18. எனக்குள் தப்பித்துவிட்ட நிம்மதி இருந்ததே தவிர, ஃபைனான்ஷியல் லெவலில் கையிருப்பெல்லாம் கரைஞ்சு போய் கிட்டத்தட்ட 0 லெவலில்தான் இருந்தேன்.
    >>>
    பணம், காசுலாம் எப்ப வேணுமினாலும் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் மன நிம்மதி கோடிகோடியாய் கொட்டி குடுத்தாலும் கிடைக்காது. எனவே நிம்மதியை கையிருப்பாய் கொண்டு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு சிறிதளவாவது சாதித்தீர்கள்தானே அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா... நிறைய நல்ல உள்ளங்களின் நட்பையும் உன் போன்ற பல உறவுகளையும் சம்பாதித்திருக்கிறேன். போதுமென்ற மனதை சம்பாதித்திருக்கிறேன். கடன் எதுவும் இல்லாமல், படுத்தால் உறக்கம் வரும் அமைதியை சம்பாதித்திருக்கிறேன். சரிதானே..!

      Delete
  19. ரொம்ப சுவாரஸ்யமாக போய்க்கொண்டு இருக்கும் பொழுது தொடரும் போடுவதில் பி கே பி ஆர் கேயை தூக்கி சாப்பிட்டுடுவிங்க போலிருக்கு?:)

    ReplyDelete
    Replies
    1. சே‌ச்சே... என்னம்மா இது பெரிய ஜீனியஸ்களோட போய் அண்ணனை ஒப்பிட்டுக்கிட்டு..? நீங்க ரசிக்கிறதே பெரிய சொத்தா நினைக்கிறவன் நான். ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. நடை வண்டியின் தளிர் நடை மிகவும் அழகாய் இருக்கிறது! ரசனையுடன் எழுதி வரும் உங்களின் எழுத்து, அது வடிக்கும் அனுபவங்கள், அவற்றில் தென்படும் நேர்மை எல்லாமே அருமை!!

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்களையும், அதிலுள்ள நேர்மையையும் பாராட்டி என்னை ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

      Delete
  21. //இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்லாருக்கும் அமைந்து விடுவார்களா என்ன?//
    கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.உண்மைதான் எல்லோருக்கும் நட்பான Boss கிடைப்பதில்லை.

    தங்களின் நடை(வண்டிப்பயணம்)சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லாச் சொன்னீங்க நண்பரே... கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான். தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  22. நவில்தொரும் நூல் நயம் போன்ற தொடர்பல்லவா!சுவையான பகிர்வு.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  23. தொடரும் என்று போடுவது சரியல்ல! காக்க வைப்பதும் முறையல்ல! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. சரி ஐயா... இனி சற்றுப் பெரிய பதிவாக எழுதுகிறேன். சரிதானே... நன்றி தங்களுக்கு!

      Delete
  24. "இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்லாருக்கும் அமைந்து விடுவார்களா என்ன?"- உண்மையில் எளிதில் யாருக்கும் அமைவது இல்லை.. சுவையாக உள்ளது..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸவிதா, நலம்தானே... என்னுடைய எழுத்தை ரசித்து, சுவையாக உள்ளது என்று நற்கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  25. hii.. Nice Post

    Thanks for sharing

    Best Regarding.

    More Entertainment

    For latest stills videos visit ..

    www.chicha.in

    ReplyDelete
  26. மகிழ்வான பகிர்வு.

    "சேட்டைக்காரன்" நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  27. Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  28. நண்பர்கள் அமைவது அரிது அமைந்த நட்பே தோள் கொடுப்பது அரிதினும் அரிது

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube