Monday, October 29, 2012

பிரமிக்க வைக்குது ஃபிஜித் தீவு

Posted by பால கணேஷ் Monday, October 29, 2012
‘‘பூலா! பூலா!! லாக்கமாய்!!!’’

எனக்கு என்ன ஆச்சோன்னு யோசிக்கறீங்களா? ஒண்ணுமில்லீங்க. ‘‘வணக்கம்! வணக்கம்!! வாங்க!!!’’ அப்படிங்கறதைத்தான் பிஜியர்களின் மொழியில் சொன்னேன். உபயம் - ஃபிஜித் தீவு (கரும்புத் தோட்டத்திலே...) நூலின் ஆசிரியர் துளசி கோபால். நம்ம துளசி டீச்சர் தாங்க!  கோபால் சாரோட பணி நிமித்தமா ஆறு வருடங்கள் பிஜித் தீவில் வாழ்ந்திருந்த சமயம் அங்க அவங்க கவனிச்ச எல்லாவற்றையும் இந்த புத்தகத்துல விரிவா எழுதியிருக்காங்க.

பிஜித் தீவில் தமிழர்கள் குடியேறிய விதம், தமிழர்களுடன் சம அளவில் குஜராத்திகளும் அங்கு வாழ்வதன் பின்னணி, ஃபிஜித் தீவு மக்களின் கலாசசாரம், வாழ்க்கை முறை, தீவி்ன் எழில், அவ்வப்போது விஸிட் அடிக்கும் புயல் விளைவிக்கும் கோரம், தத்துப் பிள்ளைகள் எளிதாகக் கிடைப்பது, பெண் கர்ப்பமானால் புரளி பேசியே சாகடிக்கும் பழக்கம் அங்கில்லை என்பது போன்ற விவரங்கள், ஃபிஜி்த் தீவின் அரசியல் வரலாறு -இப்படி எல்லாக் ‌கோணங்கள்லயும் அந்தத் தீவை அலசிப் பிழிஞ்சு காயப் போட்டிருக்காங்க துளசி கோபால்.

புத்தகத்தைப் படிச்சு முடிச்சப்புறம், முன்னபின்ன ஃபிஜித் தீவைப் பார்த்திராதவங்க கிட்ட, நீங்களே அங்க பல வருஷம் வாழ்ந்ததா ரீல் விட்டு மணிக் கணககாப் பேசி அசத்தலாம். (நான் அந்த மாதிரி யார்ட்டயும் டூப் விடலீங்கோ!) அந்த அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்குது. அதுக்காக ஒரே புள்ளி விவரங்களும், தகவல்களுமா போரடிக்கிற புத்தகம்னு மட்டும் நினைச்சிடாதீங்க.
 துளசி டீச்சருக்கே உரித்தான இயல்பான நகைச்சுவை ததும்பற நடையில ஒரு கதைப் புத்தகம் படிக்கிற சுவாரஸ்யத்தோடதான் புத்தகத்தைப் படிக்க முடியுது.  தான் சந்திச்ச, கவனிச்ச அனுபவங்களின் ஊடாக நிறையத் தகவல் அறிவையும் தேன்ல மருந்தைக் கலந்து கொடுக்கற மாதிரி நமக்குள்ளே புகுத்திடறாங்க நூலாசிரியர்.

புத்தகத்தின் மின்னல்களில் சில : ஒரு சமயம் புயல் அடிச்சு ஓய்ஞ்ச நேரம் காரை எடுத்துக்கிட்டு வெளிய சுத்தறாங்க.  அப்ப...

வ்வளவா சேதாரம் இல்லைன்னு வீட்டுக்கு திரும்பி வந்துக்கிட்டு இருக்கோம். நம்ம தெருமுனைக்கு வரும்போது ஒரு பெரிய சத்தத்துடன் காத்து கிளம்புது. அப்படியே வண்டியை தூக்கப் பாக்குது. அடிச்சுப் புடிச்சு வீட்டுக்குள்ள போயிட்டோம். அப்புறம் தொடர்ந்து ஒரு 25 நிமிஷம் புயலடிச்சது பாருங்க... ஒரே நடுக்கம்தான்! கடைசியில்தான் விவரம் தெரியுது-

பெரிய புயல் சுழிச்சு சுழிச்சு உருவாகும் போது அதுக்கு நடுவில ஒரு வெற்றிடம் இருக்குமாம். அதுக்கு ‘புயலின் கண்’ னு பெயராம். (Eye of the Cyclon) அந்த இடம் கடக்கும்போது ரொம்ப அமைதியா இருக்குமாம். காலி இடமாச்சே! அதைத்தான் புயல் நின்னு போச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஊர் சுத்திட்டு வந்திருக்கோம். அவ்வளவு நேரம் அமைதியாக் கடந்திருக்குன்னா, எவ்வளவு பெரிய புயலா இருக்கணும் பாருங்க!

* (ஃபிஜித் தீவின் கடற்கரையில்) பகலுணவுக்கு மணி அடித்தவுடன் அனைவரும் போய் தட்டுகளில் அவற்றை எடுத்துக் கொண்டு திரும்ப மணல்வெளியில் அமர்ந்து சுற்றிலும் உள்ள கடலை ரசித்த படி உண்ணலாம். கட்டிடத்தி் உள்ளேயும் அமரலாம். ஆனால் எல்லாரும் வெளியே இருக்கவே விரும்புவார்கள். ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் கரையை ஒட்டி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளைப் பயமின்றி விளையாடவும் விடலாம்! ஒரு பெயருக்குக் கூட அலை என்ற சமாச்சாரம் இருக்காது. அமைதியான ஒரு குளம் போன்றே இருக்கும் இந்தக் கடல் பகுதி! ‘ஸ்நோர்கேல்’ செய்யும் உபகரணங்கள் வழங்கப்படுமாதலால் தண்ணீரில் குப்புற மிதந்தபடி, தெளிவான கடலின் அடியில் இருக்கும் காட்சிகளையும் கண்டு மகிழலாம்.

* ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமானால் அடகுக் கடைக்குப் போவார்கள். இதிலென்ன அதிசயம்! அதிசயம்தான்! அது இவர்கள் அடகு வைககும் பொருள்! இந்தியர்களுக்கு நகை, நட்டு எவ்வளவு மதிப்பு வாய்ந்ததோ அதே மதிப்பு இவர்களுக்கு இருப்பது இன்னொரு பொருள் மீது. அது பல்! சாதாரணப் பல் அல்ல, ‘திமிங்கலப் பல்!’ இதன் அளவைப் பொறுத்து இதன் மதிப்புக் கூடும். ஒரு ‘பல்’லைக் கயிற்றில் கோர்த்து மாலையாகக் கழுத்தில் அணிவார்கள். சிறிய பல் என்பது ஒரு ஆறு அங்குல அளவில்(!) இருக்கும். இதன் உருவம் ஃபிஜி நாணயத்திலும் பதிக்கப்பட்டு்ள்ளது. மதிப்புக்கு உரியவர் என்று இவர்கள் நினைக்கும் நபர்களுக்கோ, அல்லது மிகவும் மரியாதைக்குட்பட்ட விருந்தினருக்கோ இந்த ‘பல் மாலை’ அணிவிப்பார்கள்.

* அட்ரெனலின் வாட்டர் ஸ்போர்ட்ஸ். மனுஷனுக்கு பயத்துலே கத்தணுமாம். குடல் வந்து வாய்க்குள்ள விழுந்தாப் போலே அலறணுமாம். ஃப்ளையிங் ஃபிஷ்ன்னு ஒண்ணு. கையில பிடிச்சுக்க வாகாய் ஒண்ணுமே இல்லாத ரப்பர் / பிளாஸ்டிக் மிதவை. அதுலே உக்கார்ந்துக்கிட்டு காலை மட்டும் கீழே இருக்கும் ஒரு பட்டையில் நுழைச்சுக்கணும். இதை ஒரு விசைப்படகு வேகமா இழுத்துக்கிட்டுப் போகும். அந்த வேகத்துக்கு இது துள்ளித் துடிச்சு, மேலேயும் கீழேயுமாப் பறந்து விழுந்துன்னு... அதுலே இருக்கும் மக்கள் கத்திக் கதறி.... இதுக்கு 29 டாலர் டிக்கெட் :))))   நான் மட்டும் இந்த விளையாட்டை நிர்வகிக்கும் ஆளா இருந்தா... அவுங்களுக்கு லைஃப் ஜாக்கெட் போடும் போதே... வாய்க்கும் ஒரு ப்ளாஸ்டர் போட்டு இருப்பேன். இப்பக் கத்துங்க பார்க்கலாமுன்னு... :)))))

-இப்படித்தாங்க... எளிமையான சுவாரஸ்யமான நடையில நிறைய விஷயங்களையும் இந்த புத்தகத்துல இருந்து தெரிஞ்சுககிட்டேன். எனக்குக் கிடைச்ச அந்த அனுபவத்தை நீங்களும் பெறணும்னு விரும்பினீங்கன்னா... 208 பக்கங்கள் கொண்ட இந்தப் பயனுள்ள புத்தகத்தை சென்னை அசோ்க் நகர்ல 9வது அவென்யூவுல 53வது தெருவுல பு.எண்.77ல இருக்கற சந்தியா பதிப்பகம் ரூ.120 விலையில வெளியிட்டிருக்காங்க. போய் வாங்கிக்குங்க. அது செளகரியப்படாதவங்களுக்காக அவங்களோட தொலைபேசி எண் : 044-24896979 ங்கறதையும், www.sandhyapublications.com ங்கற அவங்களோட இமெயில் ஐடியையும் தெரிவிச்சுக்கறேன்.
===================================
பின்குறிப்பு : இந்த புத்தகத்துக்கு என்னைவிட அருமையா என் ஃப்ரண்ட் (என் நண்பரின் மனைவி) விமர்சனம் எழுதியிருந்தாங்க. அதைப் படிச்சதும் தான் இந்த நூலைப் படிக்கணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன். இங்க க்ளிக்கி அதை நீங்க படிக்கலாம்.
===================================

61 comments:

  1. தங்கச்சிக்கு தீபாவளி பரிசா பிஜூ தீவுக்கு டிக்கட் எடுத்து தரப் போறீங்களாண்ணா?!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் எனக்கும் அப்படித்தானே டீச்சர்.

      Delete
    2. என்னைய மறந்துட்டு போயிடப் போறீங்க...

      Delete
    3. துளசி டீச்சர்கிட்ட நமக்கெல்லாம் டிக்கெட் எடுத்துக் கொடுக்கச் சொல்லி ரிக்வெஸ்ட் பண்றேன். நாமல்லாம் போய்ட்டு வந்துடலாம்பா... ஹி... ஹி...

      Delete
  2. இதை படிக்கும்போதே சுவாரஸ்யமா இருக்கு. முயற்சி செய்து பார்த்திடலாம்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி பண்ணுங்க ராஜி. சுவாரஸ்யத்துக்கு நான் கியாரண்டி. உங்களுக்கு நல்வரவு மற்றும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. அட!!!!! தீபாவளி போனஸ் சீக்கிரமே கிடைச்சுருச்சு:-))))

    நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி எனக்குத்தான் டீச்சர். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  4. தலைப்பை பார்த்துஎதோ சுற்றுலா பதிவுன்னு நினைச்சேன். புத்தக அறிமுகமா? அவ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா... சுவாரஸ்யமான நூல் அறிமுகம்தான். சுற்றுலா போய் தொடர் கட்டுரை எழுத எனக்கும ரொம்பநாள் ஆசை. அமையலியே... அமையலியே...

      Delete
  5. துள்சிக்காவோட தளத்துல எத்தனையோ முறை வாசிச்சிருந்தாலும் மறுபடியும் அதுவும் உங்க எழுத்துல வாசிக்கும்போது ருசியாத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. துளசி டீச்சரின் தளத்துலயே வாசிச்சிருந்தாலும் கூட இங்க எனக்காகவும் படிச்சு கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. புயலின் கண்’ னு பெயராம். (Eye of the Cyclon) அந்த இடம் கடக்கும்போது ரொம்ப அமைதியா இருக்குமாம். காலி இடமாச்சே!

    புயலுக்குப் பின்னே அமைதி !

    புயலுக்கு நடுவேயும் அமைதி திடுக்கிட வைக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. ஆம். படிக்கும் போது எனக்குள்ளும் வியப்பும் திடுக்கிடலும் சம அளவில் எழுந்தது. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  7. இதையும் படிச்சேன்;அதையும் படிச்சேன்.ரெண்டுமே நூலைப் படிக்கத் தூண்டுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நான் தந்த சுட்டியிலும் விமர்சனத்தைப் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. ஃபிஜித்தீவு பற்றி திருமதி துளசி கோபால் அவர்கள் எழுதியுள்ள ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற நூல் பற்றிய தங்களது திறனாய்வு கண்டேன். சுவாரஸ்யமாக எழுதியுள்ள தங்களது பதிவைப் படித்ததும் அந்த நூலைப் படிக்கவும், அந்த தீவை பார்க்கவும் ஆவலைத் தூண்டுகிறது. ஃபிஜித்தீவுக்கு போக முடியாவிட்டாலும் ‘கரும்புத் தோட்டத்திலே’ நூலை படித்தாவது மகிழலாம் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தாங்க. நேர்ல பாக்காட்டாலும் கூட நான் புத்தகத்தின் மூலமாக ஒரு முறை தீவைச் சுற்றி வந்தேன். நீங்களும் சுற்றிப் பாருங்க. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. ம்ம்ம் எதிர்பாத்தேன்! இந்த புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுவீங்கனு! அதே போலவே தலைப்பப் பாத்ததும... கெஸ் பண்ணினது போலவே விமர்சனம்... அதுவும் ஸ்வாரஸ்யமா இருந்துச்சு! எனக்கும் படிக்கனும்னு ஆசைதான்... ஆனா, அவங்க எப்போ இதை ஒரு ஈ-புக்காகத் தயாரிப்பார்கள்? புத்தகத்தின் மின்னல்கள் அருமை, ஸ்வாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. ஈ புக் கிடைக்குமான்னு தெரியலைம்மா. பாக்கறேன். இதை சுவாரஸ்யமா ரசிச்சுப் படிச்சதுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  10. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    விலையும் கிடைக்கும் விலாசமும் கொடுத்தமைக்கு நன்றி
    பயன்படுத்திக் கொள்கிறோம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசிக்கிறேன் என்று சொல்லியதுடன் அருமையான விமர்சனம் என்று சொல்லி மனதை மகிழ்ச்சி அலைகளில் மிதக்க விட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்.

      Delete
  11. நானும் குறித்து கொண்டேன் சார் .. வாங்கிற வேண்டியது தான் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கிப் படியுங்கள் அரசன் இந்த நல்ல புத்தகத்தை. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. உங்களது பாராட்டுரை படித்தபின் வாங்காமல் இருக்க முடியமா?

    துளசி டீச்சருக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை ரசித்து துளசி டீச்சரையும் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. நல்ல சுவையான தகவல்கள் கொண்டதாக இருக்குமென்று புரிகிறது உங்கள் பதிவின் மூலம்
    பகிர்வுக்கு நன்றி சார்.....

    அப்புறம் இப்பவெல்லாம் ஈமெயில் ஐடி இப்படித்தான் குடுக்குறாங்களோ...

    www.sandhyapublications.com ங்கற அவங்களோட இமெயில் ஐடியையும் தெரிவிச்சுக்கறேன்.
    /////////////////////

    சரி பார்க்கவும்

    ReplyDelete
    Replies
    1. அந்தப் புத்தகத்தில் இப்படித்தான் இருந்தது நண்பா. படித்து ரசித்த உங்களுககு என் மனம் நிறை நன்றி.

      Delete
  14. இந்தப் புத்தகம் நான் கூட வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்! (போன வருடம்). இந்த வருடமாவது வாங்கி விட வேண்டும்.

    சுவையாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு திமிங்கிலப் பல் மாலை பரிசளிக்க ஆசை. தயவு செய்து ஒரு திமிங்கிலம் பிடித்து அதன் பல்லை எடுத்து மாலையாக அணிந்து கொள்ளவும்!!

    ReplyDelete
    Replies
    1. ஹய்யோ... அதற்கு பல திமிங்கலங்களையல்லவா வேட்டையாணும்... உங்க பாராட்டே எனக்கு விருது ஸ்ரீராம். அது போதும். விருது தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. The book is sold by New Century Book stores in major cities of TN. I saw in Trichy but didn't buy.

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஹிக்கின் பாதம்ஸ்லயும் கிடைக்கும்னு நூலாசிரியர் சொல்றாங்க நண்பரே. வாங்கிப் படியுங்கள். மிக்க நன்றி.

      Delete
  16. நட்புகளுக்கு ஒரு கூடுதல் சேதி.

    சென்னையில் நியூ புக்லேண்ட்ஸ் (தி.நகர்) ஹிக்கின்ஸ்பாதம் போன்ற புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது. தவிர இப்போதெல்லாம் பல நகரங்களில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் சந்தியாப் பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கும்.

    சென்னை வாழ் மக்கள் விரும்பினால் கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்கவும் இயலும்.

    ஆதரவும் அன்புமாக அளித்த பின்னூட்டங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்காகவும் பயனுள்ள தகவலை கொடுத்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி டீச்சர்.

      Delete
  17. என்னுடைய வாசிப்பு ஆர்வம் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே கணேஷ்! :-))) புத்தகத்தை வாசிக்காத குறையை உங்களது இடுகையை வாசித்துத் தீர்த்துக் கொள்கிறேன். துளசி மேடத்துக்கு எனது பாராட்டுகள்! உங்களுக்கு எனது நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. புத்தக அறிமுகத்தை ரசித்து துளசி டீச்சரை வாழ்த்திய உங்களுக்கு என உளம் கனிந்த நன்றிண்ணா.

      Delete
  18. துளசி மேடத்திற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக வாங்கி படித்திட ஆர்வம் எழுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் படிச்சிடலாம் தென்றல் நீங்க. துளசி டீச்சருக்கு வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  19. (Eye of the Cyclon) அந்த இடம் கடக்கும்போது ரொம்ப அமைதியா இருக்குமாம். காலி இடமாச்சே! அதைத்தான் புயல் நின்னு போச்சுன்னு நினைச்சுக்கிட்டு ஊர் சுத்திட்டு வந்திருக்கோம். அவ்வளவு நேரம் அமைதியாக் கடந்திருக்குன்னா, எவ்வளவு பெரிய புயலா இருக்கணும் பாருங்க!


    மிகவும் பயமுறுத்துகிறது வரிகளே...
    நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கிப் படித்திட வேண்டும்.
    அருமையான பதிவு ஐயா தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் படிக்கையில் திகைப்பும் வியப்பும் அடைந்த தகவல் அது. நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி ராஜா. இந்த நல்ல புத்தகத்தை அவசியம் படியுங்கள். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  20. நல்ல விமர்சனம்...

    நன்றி...tm10

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  21. @@ பிரமிக்க வைக்குது ஃபிஜித் தீவு @@
    டைட்டிலாட்டமே உங்க பதிவுங்க ஐயா..உங்க பதிவே ஃபிஜி தீவை எட்டிப்பார்த்த ஃபீலிங்க கொடுக்குது.புத்தகம் படிக்குனமுனு ஆசைதான்..பட் நான் இருக்குறதோ இங்க..பார்க்கலாம்.
    உங்க பதிவுகளை நிறையவே மிஸ் பண்ணிட்டேன்..பிறகு படித்தால் கமெண்டு போடுறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்க நண்பரோட இடமாச்சே... எப்ப வேணா படிச்சு கருத்திடலாம் குமரன். இந்தப் பதிவை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. உங்களோட தலைப்பே ரொம்ப பிரமாதமாக இருக்கு.
    போன வருடம் நான் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் துளசி மேடமோட இந்த சுவாரசியமான பதிவுகளை தேடித்தேடி படித்தது ஞாபகம் வருகிறது. உங்க விமர்சனம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஓ... பதிவுகள்லயே படிச்சிருக்கீங்களா? நல்லது. இந்தப் பதிவை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  23. விமர்சனமே அருமை... புதிய உலகத்தை பற்றி நானும் மிக சீக்கிரமே தெரிந்து கொள்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பார்க்கிறேன் என்று சொன்னால் அதை நீ செய்வாய் என்பதை அறிவேன் சீனு. படித்து ரசிப்பதற்கும். நான் எழுதியதை அருமை என்று கூறி மகிழ்வு தந்ததற்கும் என் மனம் நிறை நன்றி.

      Delete
  24. நல்ல இருக்கு சார் இந்த புத்தகம்!!! வாங்கி படிக்க முயல்கிறேன்..

    பதிவிற்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பாரும்மா. நல்ல புத்தகம். இதை ரசித்த உனக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  25. அருமையான விமர்சனம். புத்தகத்தை படிக்கும் போதே இவ்வளவு தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார்களே என பிரமிப்பாக இருந்தது.செல்லச் செல்வங்களும் அப்படித்தான், நெகிழ்வாக இருக்கும். நியூசிலாந்து புத்தகம் ரயில் பயணத்தின் போது சில பக்கங்கள் படிக்க முடிந்தது. இப்போ தில்லியில்....

    என் பக்கத்துக்கும் சுட்டி தந்ததற்கு நன்றி. சுட்டி மூலம் நிறைய பேர் வந்து பார்த்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு செல்லப் பிராணிகள் மீது ஆர்வமில்லை தோழி. ஆனால் நியூஸிலாந்து புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆவல் அபரிமிதமாக இருக்கிறது. விரைவில் படிக்கிறேன். சுட்டி தந்த எனக்கு நன்றியுரைத்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  26. மிகவும் சிறப்பான புத்தகம். படித்ததை மீண்டும் அசை போட உங்கள் விமர்சனம் உதவிற்று.

    ReplyDelete
    Replies
    1. படித்ததை இதன் மூலம் மீண்டும் அசைபோட்டு ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  27. தித்திக்கின்றது கரும்பு.

    ReplyDelete
    Replies
    1. கரும்பை ரசித்துச் சுவைத்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  28. புத்தகம் என்னிடம் இருந்ததால் படித்துவிட்டே கருத்து எழுத எண்ணியிருந்தேன். எடுத்த புத்தகத்தை வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். அவ்வளவு சுவாரசியம். ஆத்தாடி மாரியம்மா... இடது காலை எடுத்து வச்சு வா வா...என்று தலைப்புகள் அனைத்தும் அருமை. அருமையான நூல் அறிமுகம் செயததற்கு நன்றி கணேஷ்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... முழுமையாய் படித்துவிட்டே விமர்சனம் எழுத வேண்டும் என்று முனைந்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  29. நிச்சயம் செய்கிறேன் நண்பர்களே. மிக்க நன்றி.

    ReplyDelete
  30. தகவல் சொல்லி எனக்கு உதவிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி நண்பரே...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube