‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே’ என்று ஒரு முதுமொழி உண்டு. அக்கம்பக்கம் யாரும் இல்லையே என்று சோதித்துப் பார்த்துவிட்டு ரகசியங்களைப் பேச வேண்டும், இரவின் இருளில் எவர் மறைந்திருப்பதும் தெரியாது என்பதால் இரவில் பேசக் கூடாது என்றும் கருதிய காலத்திலிருந்த இன்றைய காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இரவைப் பகலாக்கும் விளக்குகள் எல்லாம் இன்றைய நவீன யுகத்தில் உண்டு.
முற்காலங்களில் சாலையில் ஒருவன் தனக்குத் தானே பேசிக் கொண்டு நடந்தால், ‘‘ஐயோ, பாவம்’’ என்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். இன்றைக்கு அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். காதில் இயர்போன் செருகியிருக்கிறதா என்பதைத்தான் கவனிப்பார்கள். அலைபேசி என்று அழைக்கப்படும் செல்போனை இடுப்பில் வைத்துக்கொண்டு, வயர்லெஸ் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு, நினைத்த நேரம் பேசிக் கொண்டு அலைகிறார்கள் பலர்.
அதில் குற்றம்காண நான் முற்படவில்லை. ஏனென்றால் ‘செல் இல்லாதவன் அரை மனிதன்’ என்று பழமொழியை மாற்றி எழுத வேண்டிய காலகட்டத்தில் இரு்க்கிறோம். ஆகவே நான் குறிப்பிட விரும்புவது செல்போனில் பேசும் விதத்தைப் பற்றித்தான். முன்பொரு பதிவி்ல் பேருந்தில் ஒரு நபர் தன் மனைவியுடன் உரக்கப் பேசிக் கொண்டு வர, அவர் மனைவியின் பெயர், காத்திருக்கும் இடம் போன்ற அனைத்து விவரங்களும் பஸ் டிரைவரிலிருந்து கடைசி சீட் பயணி வரைக்கும் கேட்டது என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். சமீபத்தில் என் அலுவலக நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் கண்டதும் இதைப் பற்றி மீண்டும் சொல்ல வேண்டியதாகிறது இங்கே.
அலுவலக வேலையாக வங்கிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் அலுவலகத்தில் நழைந்த அவர் படபடப்பாக இருந்தார். வந்ததும் பாட்டிலை எடுத்து அரை டம்ளர் தண்ணீரைக் காலி செய்தார். ‘‘என்னாச்சு... இதோ பக்கத்து தெருவுல இருக்கற பேங்குக்கு போய்ட்டு வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பா?’’ என்றேன் நான்.
‘‘நீங்க வேற படு்த்தாதீங்க கணேஷ்! பாங்க்ல ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்மேல சந்தேகப்பட்டு கேள்வியா கேட்டு தொளைச்சுட்டார்.என்னை. நல்லவேளை... ஆஃபீஸ் ஐடி கார்டு இருந்ததால காட்டிட்டு தப்பிச்சேன்’’ என்றார்.
‘‘போலீஸா? உன்னை சந்தேகப்பட்டாரா? உன் முகத்தைப் பாத்தாலே லேடீஸ் ஹாஸ்டலையே நம்பி உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு தோணிருமே. இந்தப் பால் வடியற முகத்தையா சந்தேகப்பட்டாரு?’’
‘‘ஆமா, வடியுது.. ஒரு டம்ளர்ல பிடிச்சுட்டுப் போங்க. சும்மா சத்தாயக்காதய்யா.. நான் வழக்கம்போல இயர் போன் மாட்டி செல்லுல பேசினதால வந்த வினை...’’
‘‘அப்படியா? என்ன நடந்துச்சு?’’
‘‘அதை ஏன் கேக்கறீங்க?’’
‘‘சரி, கேக்கலை விடுங்க’’ என்று நான் மானிட்டரிடம் திரும்ப, ‘‘அட, கேளுங்க சார்...’’ என்றார் எரிச்சலாக. ‘‘சொல்லுங்க’’ என்று மீண்டும் அவர் பக்கம் திரும்பினேன்.
‘‘பாங்க்குக்கு போனேனே... அங்க ஒரு வயசான கிழவி சலான் எழுதத் தெரியாம முழிச்சுட்டிருந்துச்சு...’’
‘‘வயசானா தான்யா அது கிழவி!’’
‘‘லொள்ளு பண்ணாம கேளுய்யா. அவங்களுக்கு உதவியா நான் சலான் எழுதிக் கொடுத்துட்டு கேஷ் கவுண்டர்ல பணத்தைக் கட்டிட்டு எதிர்ல இருக்கற சீட்ல வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்ப என் செல்லுக்கு ஒரு கால் வந்துச்சு. வழக்கம்போல காதுல இயர்ஃபோன் மாட்டிருக்கறதால நான் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன். (நண்பருக்கு இயல்பாகவே வெண்கலத் தொண்டை, மெதுவாய்ப் பேச வராது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்) சொல்லு ரமணா, இன்னிக்கே போட்டுடறேங்கறியா? நான் நாளைக்கு நீ போட்டாப் போதும்னு நினைச்சிட்டிருந்தேன். ம்ம்.... சரி, பரவாயில்லை, இன்னிக்கே போட்டுறு. எந்தப் பிரச்சனையும் வராம நான் பாத்துக்கறேன். அட, புலம்பாதடா. நீ போட்று, நான் பாத்துக்கறேங்கறேன்ல -அப்படின்னு பேசிட்டு போனை வெச்சேன் கணேஷ்! பக்கத்துல இருந்த ஆசாமி என்னை முறைச்சுப் பாத்துட்டு, ‘மிஸ்டர் நீங்க யாரு? எங்கருந்து வர்றீங்க?’ன்னு கேட்டாரு. ‘நீங்க ஏன் சார் அதைக் கேக்கறீங்க?’ன்னு நான் கேட்டதுக்கு, ‘நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்’ன்னு சொன்னாரு அவரு. ‘நீங்க பேசினதப் பாத்தா எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. யார்ட்ட சார் பேசினீங்க?’ன்னு அவர் கேக்கவும், நான் என்ன பேசினேன்ங்கறதை மனசுல ஒரு தடவை ஓடவிட்டுப் பார்த்தேன். பளிச்சுன்னு மண்டையில பல்பு எரிஞ்சுச்சு.’’
‘‘அது ட்யூப்லைட்டுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே...’’
‘‘வெளையாடாதய்யா. நான் சட்னு அவரைப் பார்த்து ‘சார், நீங்க நினைக்கிற மாதிரி ஆளைப் போட்டுத் தள்ள போன்ல பேசற தாதா இல்லைங்க நான். அதுவும் இதுமாதிரி பப்ளிக் ப்ளேஸ் யாராவது பேசுவாங்களா. நான் ....... கம்பெனில ஒர்க் பண்றேங்க’ அப்படின்னு சொல்லி கம்பெனி ஐடி கார்டைக் காட்டினேன். ‘அப்படியா? போன்ல நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்?’னு அவர் கேக்கவும், ‘சார்! மதுரைல இருக்கற என் ஃப்ரெண்டோட பையன் சென்னைல ஹாஸ்டல்ல சேர்ந்து படிச்சுட்டிருக்கான். நாளைக்கு அவனுக்கு எக்ஸாம் ஃபீஸ் கட்ட லாஸ்ட் டேட். அதனால என்னோட பேங்க் அக்கவுண்ட்ல இன்னிக்கே பணத்தைப் போட்டுடறேன்னு அவன் சொன்னான். நாளைக்கு போட்டாக்கூட பிரச்னை இல்லடா. நான் பாத்துக்கறேன்னு நான் சொன்னேன். அவ்வளவுதான் ஸார்’ன்னு அவருக்கு விளக்கிப் புரிய வெச்சுட்டு வர்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுச்சுப்பா...’’ என்றான் அவன்.
‘‘ஹய்யோ... ஹய்யோ... உன் காமெடி பீஸ் மூஞ்சைப் பாத்துட்டுக்கூட ஆளை போட்டு்த் தள்ள ப்ளான் பண்ற தாதான்னு சந்தேகப்பட்டிருக்காரே... அவரை நினைச்சாத்தான் சிரிப்பா வருது.’’ என்று வாய்விட்டுச் சிரித்தேன் நான். முறைத்தான்.
‘‘சரீ... சரீ... அப்படி முறைக்காத. பேசறதை சரியாப் புரிஞ்சுக்கற மாதிரி பேசலைன்னாலும் சரி, தப்பாப் புரிஞ்சுக்கிட்டாலும் சரி, இப்படி்த்தான் பிரச்னை வரும். முன்ன நான் ஒரு நாளிதழ்ல வேலை பார்த்தேன்ல... அப்ப அங்க சீஃப் எடிட்டர், தன் அசிஸ்டெண்ட்டைக் கூப்பிட்டு, ‘வைகோ நியூஸை கமப்யூட்டர் செக்ஷனுக்கு அனுப்பியிருந்தேன். நீ போய் அதை அடிச்சு வாங்கிட்டு வா’ அப்படின்னாரு. அந்தப் பையன் சமீபத்துலதான் டிகிரி முடிச்சுட்டு வந்த கிராமத்துப் பையன். அவர்கிட்ட தொழில் கத்துக்கிட்டிருந்ததாலயும், அவர் நாலெட்ஜ்னாயும் அவர் மேல தேவதா விஸ்வாசம் அவனுக்கு. நேரா எங்க செக்ஷனுக்கு வந்தான். செக்ஷன் இன்சார்ஜ் குனிஞ்சு ரெஜிஸ்டர்ல என்ட்ரி பண்ணிட்டிருந்தார். அவர் தோள்ல பளார்னு ஒரு அடி வெச்சான். ‘ஹப்பா’ன்னு அலறிட்டு நிமிர்ந்த அவர்கிட்ட ‘வைகோ நியூஸ் ரெடியாயிடுச்சா? சப் எடிட்டர் கேட்டார்’ன்னான். ‘ப்ரூஃப் பாத்துட்டிருக்காங்க. இப்ப வந்துடும். அதக் கேக்க எதுக்குய்யா இப்படி சுளீர்னு அடிச்சே?’ன்னு அவர் கோபமாக் கேக்கவும், ‘சப்-எடிட்டர் ஸார்தான் உங்க செக்ஷன்ல அடிச்சு வாங்கிட்டு வரச் சொன்னார்’ன்னான் அந்த அப்(படு)பாவி! ‘வெளங்காதவனே! அவர் டைப் அடிச்சு வாங்கிட்டு வரச்சொன்னா, ஆளையே அடிச்சா கேக்கறது?’ன்னு கோபமா திட்டி அவனுககுப் புரிய வெச்சாரு....’’
நான் இப்படிச் சொல்லவும், என் நண்பர் டென்ஷன் நீங்கி வாய்விட்டுச் சிரித்தார். ஆகவே தோழர்களே... தோழியர்களே... நான் சொல்ல விரும்புவது என்னன்னா... வேணாம், எதுக்கு வம்பு? ‘‘நீதியாவேய் சொல்றீரு? படிச்சாப் புரிஞ்சுக்கறதுக்கு எங்களுக்கென்ன ஐ.க்யூ கிடையாதா?’’ன்னு என் தலையில குட்ட, நண்பர் கண்பத் கைய ஓங்கிட்டு ரெடியா நிக்கிறார். அதனால... நீங்களே புரிஞ்சுக்கங்கப்பா...!

|
|
Tweet | ||
present sir
ReplyDeleteWelcome Saravanan!
Delete/சப்-எடிட்டர் ஸார்தான் உங்க செக்ஷன்ல அடிச்சு வாங்கிட்டு வரச் சொன்னார்/
ReplyDeleteசப் எடிட்டர் நலாத்தான் சொல்லியிருக்காரு.அதை இன்னும் நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க..ரசிச்சேன்.சிரிச்சேன்..
அவன் செய்த செயலால் அன்று நாங்கள் சிரித்த சிரிப்பு இருக்கே... நம்மால முடியாததை அவன் செஞ்சுட்டான்டா என்று கமெண்ட் வேறு... அது ஒரு அழகிய நிலாக்காலம் கவிஞரே.. மிக்க நன்றி.
Deleteநீங்கள் சொல்வது போல் செல் போனில் பேசும் சிலர் ஸ்பீக்கர் சவுண்ட் போல் பேசி நம்மை இம்சிக்கிறார்கள் இதனால் தங்கள் சொந்த விஷயங்கள் அடுத்தவருக்கு தெரியுதே என்ற கவலை கொள்வதில்லை இல்லை அதை பற்றி அவர்கள் அலட்டி கொள்வதில்லை யா
ReplyDeleteஆம். இப்படியான ஆசாமிகள் பலரைப் பார்த்திருக்கேன். மனசுக்குள்ள சிரிச்சிருக்கேன் சரவணன். என்ன செய்ய... மனிதர்கள் பலவிதம்.
Delete‘சப்-எடிட்டர் ஸார்தான் உங்க செக்ஷன்ல அடிச்சு வாங்கிட்டு வரச் சொன்னார்’ன்னான் அந்த அப்(படு)பாவி!
ReplyDeleteஹா ....ஹா
ரசித்துச் சிரித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
DeleteSema sirippu :)
ReplyDeleteசிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஇது இப்படி என்றால் சில இளம்பெண்கள் தன்னுடைய பாய்பிரண்டுடனோ காதலனுடனோ பேசும்போது (அவள் பாய்பிரண்டுடனோ காதலனுடனோதான் பேசினாள் என்று உங்களுக்கு எப்படித்தெரியும்னுலாம் கேக்கப்பிடாது. 2 மணிநேரம் யாராவது அம்மாவுடனோ அப்பாவுடனோ பேசுவார்களா?)பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாலும் ஒரு அட்சரம் கூட கேட்காது தெரியுமா? "ஐய்யய்யோ" "நான் மாட்டேம்பா" என்பவை மட்டும்தான் கேட்கும்.உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் திருப்பூர் சென்று சேரும் வரை தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தாள் அந்த இளம்பெண். எனக்கு அவளுடைய மற்றும் அவளுடன் பேசும் அந்த நபருடைய காதுகளைப் பற்றித்தான் கவலையாக இருந்தது.இதற்கு அந்த வெண்கலத்தொண்டை நண்பர் பரவாயில்லை.
ReplyDeleteஹா... ஹா... இது மாதிரி அரை மணி நேரம் பேசும் பெண்களை பார்த்திருக்கிறேன். உடுமைலைப் பேட்டை டு திருப்பூர் ஏறத்தாழ இரண்டரை மணி நேரமல்லவா? அவளுடன் பேசியவர் பாவம்தான் நண்பா. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteசிரித்தேன் ரசித்தேன் கணேஷ்
ReplyDeleteசிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஹாஹாஹா நிஜமாவே அடிச்சிட்டாரா..:)
ReplyDeleteநிஜம்தான் பொது இடத்தில் இப்படித்தான் பலபேரு அட்ரஸ் சொல்றாங்க. சில பேர் நாம எங்க இருந்தாலும் அட்ரச சொல்லுங்கன்னு படுத்துவாங்க.. :)
ஆமாக்கா. அவன் வெகுளித்தனத்தை நினைச்சு அன்னிக்கெல்லாம் சிரிச்சுட்டிருந்தோம். போன்ல படுத்தறவங்க பத்தி நீங்க சொன்னது சரியே. உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteபதிவின் தலைப்பும் அருமை, பதிவிட்ட கருத்தும் அருமை.
ReplyDeleteநகைச்சுவை கலந்து நல்ல கருத்தைத் தந்தமைக்கு நன்றி.
நகைச்சுவை கலந்து சொன்ன கருத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteகேட்பவர்களுக்கு புரியும் படி பேசு என்றால் ஊருக்கே கேட்க சிலர் பேசுவார்கள் ..
ReplyDeleteநல்ல பதிவு
ஊருக்கே கேட்கும்படி பேசிய சிலரைப் பார்த்ததால்தான் இந்த ஆதங்கப் பதிவே. மிக்க நன்றி ராஜா.
Deleteஇன்று
ReplyDeleteஅஜித் , சிம்பு இணையும் தர்மத்தின் தலைவன் ரீ - மேக்
ஹைய்யோ.. ஹைய்யோ :-)))))
ReplyDeleteசுருக்கமாக நீங்க ரசிச்சதை அருமையா உணர்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஹா ஹா ஹா நல்லவே புரிஞ்சிகிட்டோம் வாத்தியாரே... எனகென்னவோ அந்த போலீஸ்ல மாட்டின ஆசாமி கணேஷ்ன்னு தோணுது ... நீங்க என்ன நினைகிறீங்க மிஸ்டர் பாலா கணேஷ்.. :-)
ReplyDeleteஏம்ப்பா... ஏன் இந்தக் கொலவெறி?
Delete//மெல்லப் பேசுங்கள்; பிறர் கேட்கக் கூடாது!//
ReplyDeleteவாத்தியாரே நீதி செத்து போச்சு... பிறர் கேட்கக் கூடாதுன்னு சொனீங்க சரி, யார் கூட பேசுரோமோ அவங்களுக்கு கேக்கலாமா கூடாதான்னு சொல்லியே... :-)
நிச்சயமா. மெல்லிய குரல்ல ரிஸீவர் மூலமா அவங்களுக்கு மட்டும் கேக்கறாப்பல பேசினாலே போதும் சீனு. ரசித்துப் படித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஹ..ஹா.. கணேஷ், வெளியிடங்களில் ஹெட் போன் மாட்டிண்டு பேசினா பரவாயில்லை..என் பெண்கள் வீட்டுக்குள்ளேயே மாட்டிண்டு பேசுகிறார்கள்..அவர்கள் போனில் பேசுவது தெரியாமல் நான் பல சமயம் பதில் சொல்லி பல்ப் வாங்கியிருக்கேன்..
ReplyDeleteரசித்துப்படித்தேன்..
அடடே... நீங்க சொல்லியிருக்கறதும் வித்தியாசமா இருக்குதே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteநல்ல தலைப்பு! நல்ல சுவை கலக்கல்!
ReplyDeleteநல்ல சுவையை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி ஐயா.
Deleteஹாஹா .....
ReplyDeleteரசித்தேன்.
செல் இல்லாதவன் புல் என்பது புதுமொழி. காப்பிரைட் என்னிடம்:-))))
நீஙக சொல்றது Bull-ஆ இல்ல Grass-ஆ டீச்சர்? ஹி... ஹி... காப்பிரைட் உங்களுக்கே. ரசித்துப் படித்த உங்களுக்கு மனம் நிறை நன்றி.
DeleteGrass !
Deleteஒரு மதிப்பும் இல்லாதவனை போடா புல்லேன்னு சொல்வதுண்டு நம் அண்டை மாநிலத்தில்!
கள் ஆனாலும் கணவன், ஃபுல் ஆனாலும் புருஷன்.
இதுக்குக் கூட காப்பிரைட் என் வசமே:-))
ரசித்து சிரித்தேன்...
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நனறி.
Deleteநல்ல பாடம் !!
ReplyDeleteஉண்மை. மற்றவர் அனுபவம் நமக்குப் பாடம்தான். மிக்க நன்றி.
Deleteஹா ஹா ஹா..... அடிச்சு கேட்டாரா!
ReplyDeleteஹெட் போன்ல பேசுவதில் இப்படி கூட பிரச்சனை வருமா....
ராம்வியின் பின்னூட்டத்தை படித்து ரசித்தேன்.
ஆம். அடித்துதான் கேட்டார் உண்மையில். பின்னூட்டத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
DeleteThough this post is quite lengthy, it is interesting to read and I finished it in one stretch. With just one mobile conversation which lasted only for few seconds, you have made a good humarous article out of it. Very nice and very very interesting.
ReplyDeleteமெலிதாய் தூவின நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஒரு முக்கிய விஷயத்தை நகைச்சுவையாச் சொல்லியிருக்கீங்க!
ReplyDeleteநகைக்சுவை கலந்து சொன்ன கருத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஹெட் ஃபோன் மாட்டிக்கிட்டு பேசுறவங்களை கண்டால் எனக்கும் பத்திக்கும். பாட்டு கேட்டால் ஓக்கே. நான் பேருந்து பயணங்களில் அப்படித்தான் கேட்பேன். என் வீட்டுக்காரருக்குதான் பிடிக்காது திட்டுவார்:-(...
ReplyDeleteஹெட்போன் மாட்டிட்டும் கத்திப் பேசறவங்கதான் எனக்கு எரிச்சல் மூட்டுறாங்க. என் நண்பர்கூட அப்டி பேசினதாலதானே வம்புல மாட்டினாரு. படித்து ரசித்த தங்கைக்கு மனம் நிறைந்த நன்றி.
Deleteஉண்மைதான்:)! பொது இடங்களில் மொபைலில் பேசும் போது தன்னையே மறந்து விடுகிறார்கள் பெரும்பாலானவர்கள்.
ReplyDeleteகருத்தை ரசித்து ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஆமாங்க தினமும் ரயில் பயணத்தில் பக்கத்தில் தான் அமர்ந்திருப்பேன் அப்படி இருந்தும் சில பொண்ணுங்க என்னதான் பேசுதுங்க தெரியாது எங்க போய் டிரைனிங் எடுப்பாங்களோ ?
ReplyDeleteஎனக்கும் இந்த ஆச்சரியம் பெண்களிடம் உண்டு தென்றல். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteவணக்கம் ஐயா எப்படி சுகம் ?...எப்போதும் நகைச்சுவையுடன் சிறந்த
ReplyDeleteபயனுள்ள அறிவுரைகளை வழங்கும் தங்கள் ஆக்கங்கள் மிகவும்
ரசிக்கத்தக்க விதத்தில் உள்ள தன்மையைக் கண்டு வியந்துபோகிறேன் .
இன்றைய தகவல் மிகவும் அருமையானதொரு தகவல் சிலர் இப்படித்தான்
எதிரில் இருப்பவர்களைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் ஏதோ நினைத்த பாட்டிற்கு கதைப்பவர்களாய் உள்ளனர் .அதிலும் இங்கு வெளிநாட்டில் உள்ள எம் இனத்தவர்களை வைத்தே என் கருத்தினைச் சொல்கிறேன் .அறியாமல் பேசுவதும் ,பிறர் அறிய தன் சொந்த விசயத்தை உணர்வற்று கத்திப் பேசுவதும் தவறு என மக்கள் புரிந்துகொள்ள இந்த சிறந்த ஆக்கம் அவசியம் தேவையானதே!..மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
நான் நலமே. உங்களைப் பார்த்து நீண்ட நாளாயிற்று இல்லையா... இப்பதிவை ரசித்து நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஇது சமூகத்தின் கலாசாரமாகவே மாறும் விபரீதம் இருக்கிறது. பேசுவது மட்டுமின்றி செய்யும் செயலையும் கூடத் தான் கத்தி கத்தி விளம்பரம் செய்கிறார்கள். என்ன செய்வது...?
ReplyDeleteஅவசியமான பதிவு ஐயா...
பதிவை ரசித்து ஆமோதித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபாவம் மனுஷன் டென்ஷன்ல இருக்கும்போது எவ்வளவு லொள்ளு
ReplyDeleteபண்றீங்க. :)) நல்ல நகைச்சுவை. ரசிச்சு படிச்சேன்.
இந்த தலைப்பு கொடுத்து ஒரு அருமையான பாட்டை நினைவு படுத்திடீங்க. இப்ப அதை கேட்டே ஆகணும் எனக்கு. :) நன்றி கணேஷ்.
என்னோட பழகறவங்களுக்கு என் லொள்ளும பழகிடும் மீனாக்ஷி. அதனால பிரச்னையில்ல. நகைச்சுவைய ரசிச்சுப் படிச்சதுக்கும். என்னை மாதிரியே பழைய பாடல் ரசனைல ஒத்துப் போறவரா நீங்க இருக்கறதுக்கும் மகிழ்வோட என் நன்றி.
Deleteஇந்த சப்-எடிட்டர் மேட்டருலே ஏதோ ஒரு உள்குத்து இருக்குறாப்புலே தோணுதே கணேஷ்! :-) இன்னும் வலிக்குதோ?
ReplyDeleteஐயய்யோ... நான் பார்த்தது மட்டும் தாண்ணா. அடிவாங்கினவரு வேற ஒருத்தருதான். இதுல ஒரு குத்தும் இல்ல... மிக்க நன்றி.
Deleteஹா...ஹா...
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteபோலீஸ்ல மாட்டுன ஆசாமியும், அடிவாங்கிய ஆசாமியும் ஒரே ஆள் போல தோணுது! :)))) அதாங்க... சென்னையில் சமீபத்தில் நான் சந்தித்தவரே தானா?
ReplyDeleteஆஹா... ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்களா... ரெண்டு விஷயத்திலயும் நீங்க சென்னைல சந்திச்சவர் பார்வையாளர் மட்டும்தான் நண்பா. மிக்க நன்றி.
Deleteரசித்து சிரித்தேன்.
ReplyDeleteரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteநாலைக்கி போட்ரு...ஹஹா...ஸ்டேசன் கொண்டுபோய் உரிச்சி விசாரிக்காம விட்டாரே.....:-)))
ReplyDeleteஅப்புரம் அந்த அடிச்சி வாங்கிட்டு வா... நல்ல வேலைணே.... அடியோட போச்சி.... போய் கொண்டு வா சொல்லிருந்தா.... கொண்டே போட்ருப்பார்....:-)))
இரண்டு விஷயங்களையும ரசிச்சுப் படிச்ச தம்பிக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஉங்க பிரெண்ட் மேட்டரும், உங்க வைகோ மேட்டரும் நச் நச். ரசித்தேன். சாதாரண விஷயத்தை இவ்ளோ அழகா நகைச்சுவையா எழுதறீங்களே. சூப்பரு!
ReplyDeleteநகைக்சுவையாய் எழுதிய விதத்தை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி துரை.
Deleteஹா ஹா ஹா ஹா கலக்கல் சிரிப்பு சிரிப்போ சிரிப்பு...!
ReplyDeleteசிரித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா.
Deleteஇன்றைய நடைமுறை இப்படித்தானே இருக்கு அதையும் நகைச்சுவைகலந்து நல்லா சொல்லிடிங்க.
ReplyDeleteநகைச்சுவை கலந்து சொல்லியதை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteகணேஷ், ரொம்ப நாள் கழ்ச்சு 'வேணுவனம்' ப்ளாக் பக்கம் போனேன். அவரோட இளையராஜா பத்தின பதிவுல உங்களோட கமெண்ட் படிச்சேன். 'ஒரு குங்கும செங்கமலம்' பாட்டு 'ஆராதனை' படம். பாட்டோட லிங்க் இதோ.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Nx3opO-h8gg
நேரம் கிடைக்கும்போது வேணும்னா கேளுங்க. விவித்பாரதியே கதின்னு இருந்த நாட்கள்ல அடிக்கடி கேட்ட பாடல் இது.
ஆஹா.... ஸ்கூல் டேஸ்ல காதால மட்டும் கேட்டு மனசுல புகுந்த பாட்டு. ஆராதனைங்கற படமா? இப்ப நீங்க சொன்ன லிங்க் மூலமா விஷுவலா பாக்கவும் என்ன அழகா இருக்கு. டவுன்லோடே பண்ணிகிட்டேன். எனக்காக நீங்க தேடித்தந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு மீனாக்ஷி. மிக்க நன்றி.
Deleteபதிவைப் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
ReplyDeleteஇப்பதான் சார் படிக்க டைம் கிடைச்சது... நகைசுவையோட அருமையான தகவல்.. பஸ்-ல ஏறினா இப்படிதான் பல பேர், தான் மட்டும் தனியா டிராவல் பண்ற மாதிரி பேசி அடுத்தவங்க முகத்த சுளிக்க வைப்பாங்க!! நிறைய பேர் அவங்களோட தனிப்பட்ட விஷ்யங்களகூட மேடை போடாத குறையா பேசி கடுபெத்துவாங்க...
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சார்...
ரசித்துப் படித்துக் கருத்திட்ட சமீராவுக்கு என் உளம்கனிந்த நன்றி.
Deleteமெல்லப் பேசுங்க பிறர் கேட்கக் கூடாது...அருமை!...
ReplyDeleteஎனக்கும் இந்த பேருந்தினுள் பெலமாப் பேசுறவங்க மேல ரெம்பவே கோபம்.
பிடிச்ச பதிவு. நல்வாழ்த்து.
சிரித்திர புரம் தொடர்ந்து வாசிக்காததால் தவிர்த்து விட்டேன் மன்னிப்புடன்.
வேதா. இலங்காதிலகம்.