நல்ல உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட அவன் அந்த பங்களாவின் முன் வந்து நின்றான். சிவப்புநிற டிஷர்ட். இது வரை சோப்பையும் தண்ணீரையும் கண்டிராத ஜீன்ஸ், பாலீஷ் பார்க்காத ஷு, முற்றிய முரட்டு முகத்தில் இரண்டு கத்தித்தழும்புகள்.
-இதுதான் மனோகர். பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்பவன். யாருக்கும் பயப்படமாட்டான். யாரைப் பற்றியும் கவலைப்படவும் மாட்டான். உலகில் அவனுக்குப் பிடித்த மூன்று விஷயங்கள்: 1. பணம், 2. இன்னும் பணம், 3. மேலும் பணம்.
முகத்தில் விழுந்த முடியை முன்னுச்சி விரல்களால் தள்ளிவிட்டுக் கொண்டு கூர்க்காவை முறைத்தான் மனோகர். பீடி பிடித்துக் கொண்டிருந்த கூர்க்கா இவனைக் கண்டதும் பீடியை அவசரமாக அனைத்து காதில் சொருகிக் கொண்டு பவ்யமாக ஒரு வணக்கத்தைச் சொல்லி கேட்டை திறந்து விட்டான்.
பங்களாவின் மாடியறையில் மெல்லிய குரலில் இசை ஒலித்துக் கொண்டிருக்க, சோபாவில் சாய்ந்தபடி ஒரு கையில் மதுவையும், மற்றொரு கையில் சோடாவையும் சமமாகக் கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தார் தொழிலதிபர் ராஜேந்திரன். ‘‘எதுக்கு வரச் சொன்னீங்க என்னை?’’ என்றபடி அவர் முன்னால் போய் நின்றான் மனோகர்.
''வாடா... வா... மனோ! உனக்கு ஒரு வேலை வந்திருக்கு.என் பொண்ணு தீபாவை, ராஜான்னு ஒருத்தன் தினமும் கலாட்டா பண்றானாம்.நேத்து தீபா என்கிட்ட சொல்லி அழுதா.என்னோட பொண்ணுன்னு தெரிஞ்சும் கலாட்டா பண்ணியிருக்கானே.அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? அதனாலே...'' நிறுத்திவிட்டு மனோகரை நிமிர்ந்து பார்த்தார் ராஜேந்திரன். அவரின் கையில் ராஜாவின் புகைப்படம் இருந்தது.
''அவன் இனி உங்க பொண்ணுகிட்ட பேசவே மாட்டான். நாக்கு இருந்தாதானே பேசமுடியும்?'' என்றான் மனோகர்.
''நீ ரொம்ப புத்திசாலிடா! நான் மனசுல நினைத்ததை நீ சொல்லிட்டே.சரி எவ்வளவு வேணும்?''
"இருபத்தஞ்சாயிரம்''யோசிக்காமல் சொன்னான் மனோகர்..
"இத்தனூண்டு நாக்குக்கு இருபத்தஞ்சாயிரமாடா?''
‘‘ரைட்டு. நீங்களே பாத்துக்கங்க, நான் வர்றேன்'' என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான் மனோகர்.
"இரு மனோ... சொன்னா சொன்னபடி செய்றவன் நீங்கறதாலதானே உன்னைக் கூப்பிட்டேன். முணுக்குன்னா கோவிச்சுக்கறியே...''என்றவர் ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து டீபாயின் மேல் போட்டார்.
"இது அட்வான்ஸ். வேலைய முடிச்சிட்டு மீதியை வாங்கிக்க. அடுத்து உனக்கு ஒரு பெரிய வேலை காத்திருக்கு. எனக்குப் போட்டியா தொழில்லே செந்தில்ன்னு ஒருத்தன் குறுக்கிடறான்.அவனை குளோஸ் பண்ணனும். அதுக்கு அஞ்சு லட்சம் தர்றேன் மனோ!''
"நாளைக்கு சாயங்காலம் ராஜாவோட நாக்கோட வந்து உங்களைப் பார்க்கறேன்'' ராஜாவின் புகைப்படத்தை வாங்கிக் கொண்டு, நூறு ரூபாய்க் கட்டை எடுத்து பாண்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டு அநாயசயமாக வெளியேறினான் மனோகர்.
மறுதினம் மாலையிலேயே சொன்னபடி கண்ணாடி டப்பாவில் அடைபட்ட நாக்குடன் வந்தான் மனோகர். ராஜேந்திரன் இப்போதும் மது அருந்திக் கொண்டிருந்தார். (வேற வேலையே கிடையாதா இவருக்கு?). அவரிடம் நீட்டினான். "பேஷ்! நாக்குத் தவறாதவன்டா நீ! ஸாரி, வாககுத் தவறாதவன்டா நீ! ரொம்ப சந்தோஷம். உட்கார்.என்னோட ஒரு பெக் சாப்பிட்டுட்டுப் போகலாம்.’’
இன்னொரு டம்ளரை எடுத்து அவனுக்கும் மதுவை ஊற்றினார். மனோகர் உட்கார்ந்தான். ராஜேந்திரன் எழுந்து போய் பீரோவைத் திறந்தார். கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நோட்டுக் கற்றைகளிலிருந்து ஒரு நூறுரூபாய் கட்டையும், ஐம்பது ரூபாய் கட்டையும் எடுத்தார். "இந்தா மனோ..உனக்குச் சேரவேண்டிய மீதி பணம்'' என்று அவனிடம் வீசினார். கப்பென்று கேட்ச் பிடித்தான் அவன்.
மீண்டும் சோபாவில் அமர்ந்த ராஜேந்திரன், ‘சியர்ஸ்’ ஒரு சிப் சிப்பினார். மனோகர் தன் பங்கை ஒரே மடக்கில் உள்ளே தள்ளினான். அமைதியாக அவரையே கவனித்தான். அந்த ரவுண்டை முடித்திருந்த ராஜேந்திரனின் குரல் மது போதையையும் மீறி குழறலாய் வெளிவந்தது.
"மழோ... மழோ... எழக்கு எழ்ழமோ ஆயிழுச்சுடா. ஓவழா தலை சுத்துது.''
‘‘அதுவா ராஜேந்திரன்! நான் உங்களுக்கு விஸ்கியில கலந்த விஷத்தோட ஆரம்பக்கட்ட செயல்பாடு அது...’’
‘‘ழேய்... விஷம் கழந்தியா...? ஏழ்டா இப்படி?’’
‘‘ஸாரி மிஸ்டர் ராஜேந்திரன். நான் ராஜாவோட நாக்கை அறுத்த விஷயத்தைக் கேள்விபட்ட அவனோட அப்பா ஸிட்டில இருக்கற டாப் ரவுடிகளக் கூப்பிட்டு என்னை தீர்த்துக்கட்டச் சொல்லியிருக்கார். அவங்க என்னோட மோதப் பயந்து வேலைய ஏத்துக்காததால அவரே நேரடியா என்னை வந்து சந்திச்சார். பத்து லட்ச ரூபாய் பணத்தை ஒரே பேமெண்ட்டாக் கொடுத்து உங்களைத் தீர்த்துக் கட்டச் சொன்னார். அதான் நீங்க பணத்தை எடுக்கப் போனப்ப, விஷத்தைக் கலந்துட்டேன். நாளைக்கு ஹார்ட் அட்டாக்ல தொழிலதிபர் ராஜேந்திரன் இறந்ததா செய்தி வரும். சாகறதுக்கு முன்னால ஒண்ணு தெரிஞ்சுக்கங்க... உங்களைத் தீர்த்துக் கட்டச் சொன்ன ராஜாவோட அப்பா பேரு செந்தில். நீங்க கொஞ்சம் லேட். அவர் முந்திக்கிட்டாரு...’’
’’ழேய்... மனோ... எவ்வளவு பணம் கொழுத்திருக்கேன் உழக்கு? இப்பழி நன்ழி இழ்ழாமே...’’
‘‘நன்றியா? என் மாதிரி ஆசாமிங்களுக்கு அதுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது என்னமோ இலவசமா பணம் கொடுத்திட்ட மாதிரி நன்றியப் பத்திப் பேசறீங்க...? மிஸ்டர். ப...ண...ம்... அதான் எனக்குத் தெரிஞ்ச விஷயம். நீங்க அவர் உயிருக்கு போட்ட மதிப்பு அஞ்சு லட்சம். அவர் உங்களுக்குப் போட்ட மதிப்பு பத்து லட்சம்! பிஸினஸ்ல எப்பவுமே எதிரியை குறைச்சு மதிப்பிடக் கூடாது ஸார்! யூஸ் திஸ் இன் நெக்ஸ்ட் ஜென்மா...’’ ராஜேந்திரன் மார்பை பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருக்க, ரசித்துச் சிரித்தபடி வெளியேறினான் மனோகர்.
|
|
Tweet | ||
ஒரு பக்க க்ரைம்..நல்லாயிருந்துச்சு..ரெண்டாவது மேட்டர் வந்ததுமே கொஞ்சம் என்னால யூகிக்க முடிஞ்சது..தொடர்ந்து க்ரைம் சிறுகதைகள் எழுத வாழ்த்துகள்..சிறப்பு..
ReplyDelete"பேஷ்! நாக்குத் தவறாதவன்டா நீ! ஸாரி, வாக்குத் தவறாதவன்டா நீ!
ReplyDeleteக்ரைமிலும் நகைச்சுவையா?..ஹாஹாஹா
க்ரைம் நாவல்கள் பல எழுதியும் படித்தும் இருப்பதால் உங்களால் எளிதில் ஊகம் செய்ய முடிந்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாய்த்தர முயல்கிறேன் கவிஞரே.. நகைச்சுவை எதை எழுதினாலும் லேசாய் தெளிக்கப்பட்டு விடுவது என் மைனஸ்ஸா பிளஸ்ஸா தெரியலை. உற்சாகம் தந்த முதல் கருத்துக்கு என் இதய நன்றி.
Deleteவாத்தியாரே அடுத்த திகில் கதையா தூள் கிளபுகிரீங்க போங்க.. எங்க முடிக்காம அடுத்த பதிவில் தொடரும்னு போடுவீங்கலோனு நினைச்சேன்... நல்ல வேலை சஸ்பென்ஸ் எல்லாம் இல்லாம சுபம கொலை பண்ணிடீங்க டன்க் சிலிப் கொலை பண்ண வச்சிடீங்க
ReplyDeleteம்ம்ம். இதைவிட பெட்டரா எழுதணும்கறதுதான் என் எண்ணம் சீனு. மிக்க நன்றி.
Deleteசுஜாதா பாணியில் ஒரு கதை.சூப்பர்
ReplyDeleteசுஜாதா உயரத்துக்கெல்லாம் இந்தக் கதை போகாது முரளிதரன். எனினும் அந்தளவுக்கு ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteநல்ல கதை
ReplyDeleteமரணவியாபாரி ரொம்ப கறாரான வியாபாரியாக இருக்கிறார் இந்த கதையில்
வர்ணனைகள் அருமை
வர்ணனைகளை ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteக்ரைம் கதை மன்னராயிட்டீங்க!
ReplyDeleteஇல்லை ஸார். அந்த சிம்மாமசனத்திற்கு நான் ஆசைப்படவில்லை. போக வேண்டிய தூரம் நிறைய. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Delete''..எதிரியை குறைச்சு மதிப்பிடக் கூடாது ஸார்!...''
ReplyDeleteகுட்டித் திறில்.
நன்று இனிமை.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
சின்ன த்ரில் கதையை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஒருவர் தமிழில் "ழ"கரம் அதிகம் கலந்து பேசினால்,ஒன்று அவர், ஃபிரஞ்ச் இலக்கியத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்றோ அல்லது பாரிசவாயு நோய் தாக்கப்பட்டவர் என்றோ இதுவரை எண்ணியிருந்தேன்.விஸ்கியில் விஷம் கலந்து சாப்பிட்டாலும் பேச்சு அப்படித்தான் இருக்கும் என உங்களால் அறியமுடிந்தது.
ReplyDeleteபொதுவாக என்னை மிகவும் திகிலடைய செய்வது டி.வி.யில் வரும் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க!" நிகழ்ச்சிதான்.(அதில் நேயர்கள் சொல்லும் "அற்புத"பதில்களைக்கேட்டு "இவங்கெல்லாம் ஒட்டு போட்டல்லவா நம் அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்!!" என்ற திகில்)அதையும் beat செய்துவிட்டது உங்களின் இந்த சிறுகதை.
//நல்ல உயரமும், ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட அவன் அந்த பங்களாவின் முன் வந்து நின்றான். சிவப்புநிற டிஷர்ட். இது வரை சோப்பையும் தண்ணீரையும் கண்டிராத ஜீன்ஸ், பாலீஷ் பார்க்காத ஷு, முற்றிய முரட்டு முகத்தில் இரண்டு கத்தித்தழும்புகள்.//
படிக்கவே குலை நடுங்கும் இத்தகைய மனிதனின் பெயர் பொதுவாக ஜம்பு என்றுதான் இருக்கும்.அதையும் மனோகர் என மாற்றி புரட்சி செய்து விட்டீர்.பாராட்டுக்கள்.
ழகரம் பிரெஞ்சு மொழியில் மட்டுமல்ல... குடிகாரர்களிடமும் அதிகம் வரும் என்று எனக்கு போதித்தவர் ராஜேஷ்குமார்தான். எல்லாப் புகழும்(!) அவருக்கே. முதலில் அந்த அடியாளின் பெய்ர் டேவிட் என்றுதான் வைத்திருந்தேன். பிறகுதான் இப்படி மாற்றினேன். புரட்சியைப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி நண்பரே.
Deleteநல்லா இருக்கு. ஆனால் கிட்டத் தட்ட இதே போல ஒரு கதையை முன்னர் படித்த நினைவு ஒரு துப்பறிவாளன். ஹார்ட் அட்டாக் மாத்திரை....! :))
ReplyDeleteஉங்களின் ஞாபக சக்திக்கு ஒரு ஜே! இனி கதைக்கருவில் எந்த அம்சமும் ரிபீட் ஆகாமல் பார்த்துக்கறேன் ஸ்ரீராம். மிக்க நன்றி.
Deleteதலைப்பும் பொருத்தமாய் இருக்கிறது..
ReplyDeleteசுவாரஷ்மமும் குன்றவில்லை அருமையான பதிவு சார்
ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteசுவாரஸ்யம்...
ReplyDeleteஉங்கள் பாணியில் வர்ணனை அருமை...
வர்ணனைகளை ரசித்துப் பாராட்டிய நணபருக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteshort and sweet. Right from the first line onwards, mind indicated that this rajendran would be killed at last because you have given enough evidence that it is a crime thriller.
ReplyDeleteநற்கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteநல்ல க்ரைம் கதை. ஆங்காங்கே அதிலும் நகைச்சுவை. முதல் பாரா வர்ணனையில் கண் முன்னே நிறுத்தி இருக்கீங்க மனோகரை!
ReplyDeleteதொடரட்டும்.
வர்ணனையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பா.
Deleteக்ரைம் ஸ்டோரி நல்லா வந்திருக்கு.பாராட்டுகள்.
ReplyDeleteக்ரைம் கதையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteதிக் திக் திக்..
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி முனைவரையா.
Deleteஉங்கள் பாணியில் ஒரு தொடர்!ம்ம்
ReplyDeleteரசித்துப் படித்துக் கருத்திட்ட தம்பிக்கு மனம் நிறை நன்றி.
Deleteக்ரைம் கதை நன்றாக இருக்கின்றது.
ReplyDeleteஅடுத்து... தொடருங்கள்.
அடுத்து சில நகைச்சுவைக்குப் பின் மீண்டும் க்ரைமுக்கு வருகிறேன் மாதேவி. ரசித்துப் பாராட்டி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteகழை ழுண்மையிழே ழொம்ப யழ்ழா யிழுக்கு! ழூப்பழ்! :-)
ReplyDeleteழழித்துப் பழிழ்தத் உழ்கழுககு ழென் ழிதயம ழிறை ழன்றிண்ணா.
Deleteபாலகணேஷ் கிரைம் கணேஷாக
ReplyDeleteமாறியது போலிருந்தது
சுவாரஸ்யமான கதை
தொடர வாழ்த்துக்கள்
க்ரைம் கதையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deletetha.am 10
ReplyDeleteராஜேஷ் குமார் நாவல் அதிகம் படிச்சதாலோ என்னமோ! முடிவை முன்னாலாயே யூகிக்க முடியுது. என்னன்னு பாருங்கண்ணா.
ReplyDeleteகரெக்ட்தான். அடுத்த கதை பண்ணும் போது நிச்சயம் யூகிக்க முடியாத பகீர்த் திருப்பம் வெச்சிடறேன். நன்றிம்மா.
Deleteக்ரைம் ' தீம் ' நல்லா இருக்கு. நல்ல டைம்-பாஸ்...!
ReplyDeleteஇதுல இன்னொரு ட்விஸ்ட் ....வில்லாதி வில்லனான செந்தில் ,
என்ன இருந்தாலும் மகனை ஊமையாக்கிய ராஜேந்திரனை கொன்றாலும் ,
அதை நிறைவேற்றிய பணத்தாசை பிடித்த மனோஹரனை பழி தீர்க்க
லாரி ஏற்றிக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தது பாவம் அவனுக்குத் தெரிய
வாய்ப்பில்லை. இப்படியே நீட்டித்துச் சென்று ...இறுதியில்
' தர்மமே வெல்லும் ' என்று வழக்கம் போல சொல்லி இருக்கலாம் ...
i am எஸ்கேப்.....
..
நீதி சொல்லும் கதைகளில் எனக்கு உடன்பாடில்லை. நீங்க சொல்றது மாதிரி டைம்பாஸில் அது வேற எதற்கு..? ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteநல்லா எழுதுறீங்க அடிக்கடி சிறுகதை எழுதுங்க
ReplyDeleteஉற்சாகம் தந்த வார்த்தைகளுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே.
Deleteநச் என்று இருக்கு கதை. நகைச்சுவையும் இழையோடுகிறது. குரூரமும் பண ஆசையும் தெறிக்கிறது. தொடர்ந்து நிறைய எழுதுங்க சார்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரசித்துப் படித்து என்னை வாழ்த்திய துரைக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteபணம் பத்தும் செய்யும் அதுக்காக மனோ பதினொன்னும் செய்வான் போல.. உலகத்துல இது வெகுவா பரவிட்டு வர வியாதி சார்.. இது டெங்கு விட மோசமானது...
ReplyDeleteநல்ல கதை சார்...
நல்ல கதை என்று பாராட்டிய சமீராவுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteஎதிர்பாரா முடிவு அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteரசித்துப் படித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.
Deleteஒரளவு எதிர்த் பார்த்த முடிவு! என்றாலும் சுவை நன்று!
இனி எதிர்பாராத முடிவுகள் அமைக்கிறேன் ஐயா. சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.
Deleteமனோகரின் பார்வையிலிருந்து பார்த்தால் மரண வியாபாரியின் செயல் சரியானது தான். காசுக்காக வேலை செய்பவன் எதை வேண்டுமென்றாலும் செய்வான் தானே! அவனிடம் நான் உனக்கு இதைச்செய்தேன், அதைச் செய்தேன் என்று தற்பெருமை சொல்லிக் கொண்டிருப்பது வீண்.
ReplyDeleteஎங்கிருந்து பணம் எவ்வளவு வருகின்றது அதுவும் என்ன வேகத்தில் வருகின்றது என்பது தானே முக்கியம். நல்ல கதை. முடிவனது படிக்கும் போதே கொஞ்சம் புலப்பட்டது.
நன்றி
பலரும் முடிவை ஊகிக்க முடிந்ததாக செர்ல்லியிருக்கிறீர்கள். எனினும் ரசித்துப் படித்தமைக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteகெடுவான் கேடு நினைப்பான்......
ReplyDeleteமிகச் சரியாகச் சொன்னீர்கள். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
Deleteஇது போன்ற கதைகளில் முடிவு ஓரளவு ஊகிக்க முடிந்தது தான் என்றாலும் நடை கதையைப் படிக்கத்தூண்ட வேண்டும் என்பது தான் முக்கியம். அந்த வித்தைக் கைவரப் பெற்றவர் நீங்கள் என்பது மீண்டும் புலப்படுகிறது.
ReplyDeleteபாராட்டுகள் கணேஷ்!
என் எழுத்து நடையைப் பாராட்டிய ஸ்ரீனிக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஆஹா! ரொம்ப நாளைக்குப் பிறகு 1 கிரைம் கதை! நான் முதன்முதலில் க்ரைம் ஸ்டோரி படிக்க ஆறம்பிச்சதே உங்களோடதுதான்! ஸ்வாரஸ்யமா இருந்தது! ஆனா, 1 உண்மைய ச்ப்ல்லட்டுமா? நேர்ல பாக்கரப்போ உங்களோட காமெடிதான் வெளிய தெரிஞ்சது! ஆனா இவ்வளவு க்ரைம் எப்ப்டிதான் யோசிக்கிரீங்களோ? அடுத்தது ஒரு வித்யாசமான கதை எழுதுங்க! க்ரைம், காமெடி தவிர்த்து ஏதாவது டிஃபரண்ட்டா ஏன் ட்ரை பண்ணக் கூடாது? ### சின்ன வேண்டுகோள்...
ReplyDeleteஒரு வித்தியாசமான கதைக்கு நிச்சயம் ட்ரை பண்றேன் உங்களுக்காக சுடர். உற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிம்மா.
Deleteஅப்பறம் டெம்ப்லேட் நல்லா இருக்கு! நானே ரொம்ப நாளா சொல்ல நெனச்சுட்டு இருந்த விசயம்தான்! அநேகமா இப்போ ஸ்க்ரீன் ரீடர் நல்ல சப்போட் பண்ணும்னு நெனைக்கிறேன்!
ReplyDeleteபுதிய தோற்றத்தை வரவேற்ற உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஇறுதி முடிவை ஓரளவு முன்னமே யூகிக்க முடிந்தாலும், படிக்கும் பொழுது சுவாரசியமாகத் தான் இருந்தது.
ReplyDeleteஎன்ன என் பெயரில் ஒருவனை ஊமையாக்கிவிட்டீர்கள்.
இதில் எதெனும் உள் குத்து இருக்கிறதோ.
ஹா... ஹா... எந்த உள்குத்தும் இல்லை ராஜா. எதேச்சையாய் அப்படி பெயர் அமைஞ்சது. அவ்ளவ் தான். ரசித்ப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.
DeleteThank you verymuch with full of my Heart Sir!
ReplyDelete