Thursday, October 18, 2012


ங்க இலக்கியப் பாடல்களை அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என்று இரண்டு பிரிவுகளில் ரசிக்கலாம். தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் மற்றும் இல்லறம் குறித்த பாடல்கள் அகப்பாடல்கள். அரசனின் வீரம், நாட்டின் நிலை போன்ற பிற விஷயங்களைப் பற்றிச் சொல்பவை புறப்பாடல்கள். நல்ல செந்தமிழில் இருக்கும் இந்தப் பாடல்களைப் படித்ததும் உடனே புரிந்து விடாது. சற்று சிரமம் மேற்கொண்டு பொருள் புரிந்து ரசித்தீர்களாயின்... அன்றைய தமிழர்களின் கற்பனை வளமும், சொல் வளமும் பிரமிக்க வைத்து விடும்.
 
காதல் தலைவன், தன் தலைவியோடு சேர்ந்து மகிழ்ந்திருக்கிறான். அவளுடன் கூடி வாழ்தல் மட்டுமே வாழ்க்கையில்லையே...? அந்த வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த (எக்காலத்திலும்) பொருள் வேண்டுமே! அஃதில்லாது இவ்வுலக வாழ்வு உண்டோ? எனவே, வேறு வழியின்றி அவளிடம் விடைபெற்று பொருள் தேடுவதற்காக வெளியூர் சென்று விடுகிறான் அவன். 

தன் தலைவனைப் பிரிந்த அவளுக்கு இரவுப் பொழுது நெருப்பாக எரிகிறது. சுற்றுச் சூழலில் காண்பவையெல்லாம் அவள் இதயத்தில் எரியும் நெருப்பை விசிறி விடுபவையாகவே இருக்கின்றன. -இப்படி ஒரு சூழ்நிலையில் அமைந்த இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள். பாடலின் விளக்கம் (எனக்கு்த் தெரிந்த அளவில்) கீழே கொடுத்திருக்கிறேன். விளக்கத்தைப் படித்த பின்னர் பாடலை மீண்டும் படித்துப் பாருங்கள். கூடுதலாய் ரசிக்கும் என்பதே என் நம்பிக்கை.

பகலினும் அகலா தாகி யாமம்
தவலில் நீத்தமொடு ஐயெனக் கழியத்
தளிமழை பொழிந்த தண்வால் வாடையொடு
பனிமீக் கூரும் பைதற் பானாள்
பருகு வன்ன காதலொடு திருகி
மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து
ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ
அருளி லாளர் பொருள்வயின் அகல
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யானென் உளனோ - தோழி! தானே
பராரைப் பெண்ணைச் சேக்குங் கூர்வாய்
ஒரு தனிஅன்றில் உய்வுக்குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனைஎரி பிறப்‌ப ஊதும்
நினையா மாக்கள் தீங்குழல் கேட்டே?

                                                               -வடவண்ணக்கன் பேரி சாத்தனார்



பாடலின் பொருள் :

கல் நேரம் நீண்டதாகிக் கொல்கிறது. இரவின் யாமங்களும் வெள்ளப் பெருக்கோடு மெல்ல மெல்லக் கழிந்தன. மேகம் கண் திறந்து மழையைப் பொழிந்து தள்ள, அதனால் வாடைக் காற்றும் வந்தது. பனி மிகுதியாகப் பொழிகின்ற, வருத்தம் தரும் நள்ளிரவு அது.

ஒருவர் உடலினுள்ளேயே மற்றவர் புகுந்துவிடுவது போல கைகளை வளைத்து அவ்வளவு இறுக்கமாகத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள் அந்த தம்பதி! ஒரே உயிர் போல இப்படி இணைந்திருக்கும் அவர்கள் கூடப் புலம்புவார்களா? ஆம்! புலம்புவார்கள்...! இதோ அந்தத் தலைவி இப்படிப் புலம்புகிறாள்...

இதயத்தில் சற்றும் இரக்கமில்லாத (அருளில்லாத) தலைவன் பொருள் தேடப் பிரிந்து சென்று விட்டார். அந்தத் துயரத்தை தாங்கிக் கொண்டு கனத்த துன்பமுடைய நெஞ்சத்தோடு நான் எப்படித்தான் வாழ்கிறேனோ தோழி? பருத்த அடியை உடைய பனை மரத்தில் இருந்து கூரிய அலகு படைத்த துணையில்லாத ஒரு அன்றில் பறவை ஏக்கக் குரலை எழுப்புகிறது. அது என்னுள் கனலை மூட்டி விட்டதால் உள்ளே கனல்கிறது என் உள்ளம்!

என் வருத்தம் பற்றி சற்றும் அறிந்திராத ஆயர்கள் ஆநிரைகளுக்காக இனிய புல்லாங்குழலை ஊதி இசை ‌எழுப்பி, என் உள்ளத்தின் கனலை மேலும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறார்களே...! இதையெல்லாம் என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள இயலும்?

--- என்ன நண்பர்களே... பாடலில் இயற்கையும் காதலும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வெளிப்பட்டிருப்பதை ரசீத்தீர்கள் தானே...!

61 comments:

  1. ooommm!!!!I am the first....???!!!!!...
    ஆம் ரசித்தேன் .பல தடவை வாசிக்க வேண்டும் பொருளறிய.
    என்று தான் நான் இப்படிப் புலமை பெறுவெனோ?...
    ஏக்கம் என்னையும் சூழ்கிறது.
    மிக்கநன்றி பதிவிற்கு.
    பிடிக்கும். பிடிக்கும்..
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ஏங்க... நான் ஏதோ சில பாடல்களை கஷ்டப்பட்டு புரிஞ்சுக்கிட்டு எழுதனா இப்டி சொல்றீங்களே... உங்களை மாதிரி கவிதை எழுத வரலையேன்னு நான் பெருமூச்சு விடறது என்க்கில்ல தெரியும். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  2. அருமையான பாடல்
    தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல
    பொருள் தெரிந்துப் படித்ததும்தான்
    கவிதையின் அருமை புரிகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அழகுத் தமிழின் அகப்பொருள் கவிதையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  3. அருமை. பாடலும் அதற்கு தங்களின் விளக்கமும் சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. பாடலையும் விளக்கத்தையும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  4. ரசித்தேன்... பாடலும் விளக்கமும் அருமை...

    நன்றி... tm3

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. சங்க கால பாடலைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ அருமை.

    ReplyDelete
  6. அற்புதம் அருமை தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாடலை ரசித்து என்னைத் தொடரச் சொன்ன ரசிகைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  7. அருமை பழந்தமிழ் காதல் உணர்வுகளை உணர வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள் பாலா சார் அக இலக்கியத்தை ஆய்வு செய்கிறீர்கள் போல

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ... அப்படி எதும் ஆராய்ச்சி இல்லைங்க தோழி. எதெச்சையா தேர்ந்தெடுத்தேன். அடுத்தமுறை ஒரு புறப்பாடலை போட்டுடறேன் சரியா. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. தினமும் பதிவர் பேட்டியா? பாக்கறேன். பதிவை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

    ReplyDelete
  9. அருமையான வரிகள் சார்.. நான் இன்றளவும் மிகவும் வருந்தும் விஷயம், பள்ளியில் தமிழ் பாடத்தை மதிப்பெண் பெறுவதற்கான நோக்கோடு மட்டும் படித்துவிட்டு வந்துவிட்டேன் என்று!! அகம் புறம் சார்ந்த செய்யுள்களை வேண்ட வெறுப்பை மனனம் செய்ததை நினைத்தால் கவலையாக உள்ளது.. விரும்பி படித்து இருந்தால் இன்று மனதில் நின்று நிலைத்து இருக்கும்... தமிழின் மதிப்பு அன்று தெரியவில்லை!!
    அன்றைய நம் செய்யுளில் இல்லாத உர்னர்ச்சிகளா இன்று பாடல் எழுதும் வாலி, வைரமுத்து இன்ன பிற கவிஞர்கள் பாடலில் உள்ளது? நம் செய்யுளை உரைநடையில் படித்து பார்த்தால் இவர்களின் வரிகள் அதில் நூற்றில் ஒரு பங்கு தான் தேறும்..
    இன்றைய அகம் சார்ந்த பாடல்கள் விரசம் என்றால் அன்றைய அக நூல்கள் அமுத ரசம் தான்!!!

    நன்றி சார் இப்படி ஒரு உணர்வியல் சார்ந்த செய்யுளை பகிர்ந்ததற்கு!!!

    ReplyDelete
    Replies
    1. பள்ளி நாட்களில் நாம் எல்லாருமே அப்படித்தான் சமீரா. பின்னாளில் தான் தமிழ் மீது ஆர்வம் கொண்டு நான் நிறையப் படித்தேன். இதை ரசித்துப் படித்துப் பாராட்டிய உனக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
    2. இது பாடல், செய்யுள் அல்ல சமீரா :-)

      Delete
  10. முனைவரின் கோட்டைக்குள் புகுந்து கலக்கிட்டீங்க கணேஷ்!

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அவர். மழைக்கு பள்ளியில் ஒதுங்கும் மாணவன் நான். எப்படி ஒப்பிட முடியும் குட்டன்? ஆனாலும் என் எழுத்தை ரசித்தீர்கள் என்பது விளங்குவதால் என் மனம் நிறைந்த ந்ன்றி உங்களுக்கு.

      Delete

  11. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.குறள் 1151

    என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.
    இந்தப் பாடலைப் ப்டிக்கையில் இந்த குறள் சட்டென எனக்கு நினைவு வந்தது.
    அழகானப் படத்துடன் கூடிய விளக்க அருமை. இருந்தும் ஐயா இந்தப் பாடல் எந்த நூலில் வருகிறது என்று சொல்லியிருந்தால் படிப்பவர் அனைவரும் மனதில் ஏற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்
    எனக்குத் தெரிந்தவரை இது எட்டுத்தொகை நூலில் அகநானூற்றில் 305வது பாடலாக அமைந்தது. தவறிருப்பின் திருத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. ராஜா... முதலில் ரசித்துப் படித்து அருமையான கருத்தைத் தந்தமைக்கு என் மனம் நிறை நன்றி.

      கல்லுரி நாட்களில் அழகப்பா கல்லுரி லைப்ரரியில் படித்து எனக்குப் பிடித்த சில பாடல்களை டைரியில் குறித்து வைத்திருநதேன். அதிலிருந்து ஒன்றை எடுத்துப் போட்டேன் இங்கு. அகநானூறு என்பது சரி. பாடலின் நம்பர் தெரியலை. டமில் ராஜா டுமீல் ராஜாவாக மாறி என்னை சுடுவதற்குள்... எஸ்கேப்!

      Delete
  12. சங்கப் பாடல்கள் பற்றி சொல்லத் தேவையில்லை கருத்துடன் தந்துள்ளீர்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. நல்ல பதிவு சார்
    இந்த சங்ககாலம் பற்றியெல்லாம் பாடசாலையில் வக்கத்து வகுப்பில் ஒரு சொட்ட தலை வாத்தியார் சொல்லிக் கொடுக்கும் போது கேட்டது மாத்திரம் தான் அதன் பின் உங்கள் வலையில்தான் பார்க்கிறேன்
    பகிர்வுக்கு நன்றி சார்.
    தொடர்ந்தும் தாருங்கள் (7)

    ReplyDelete
    Replies
    1. பாடசாலையில் வேறு வழியின்றி மனப்பாடம் செய்து மனதில் இருத்தியிருப்போம். இப்போது தமிழின் சுவையறிந்து ரசிப்பது தனி சுகமாக இருக்கிறது சிட்டு. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  14. ரசித்தோம், ரசித்தோம். நன்றாக இருக்கிறது. தமிழ் என்றுமே இனிமைதான்.

    ReplyDelete
    Replies
    1. என்றும் இளமை மாறாத் தமிழை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  15. Replies
    1. ரசனை மிக்கது என்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  16. அடியேனும் அகநானூறு புத்தகமெல்லாம் வைத்திருக்கிறேன் என்றாலும், அதை வாசித்து, அழகாக விளக்கி, பொருத்தமாக ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு சுவாரசியமான இடுகையாக்குவதெல்லாம் கணேஷால் தான் முடியும் சாமி! அருமை! தொடருங்க!

    ReplyDelete
    Replies
    1. அகநானூறு புததகத்தை உங்களிடம் கடன் வாங்கியே அடுத்த பாடல் எடுத்து பதிவிடலாம்னு தோணுது. மிக்க நன்றிண்ணா.

      Delete
  17. வடவண்ணக்கன் பேரி சாத்தனார் என்னும் மலையாளப் புலவர் எழுதிய அருமையான பாடலை தமிழாக்கம் செய்ததது வியப்பு அளிக்கிறது... உங்கள் பணி சிறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. என்னாது... மலையாளப் புலவரா? வியக்க வைக்கிறது சீனு உங்கள் ஆராய்ச்சி. பாடலை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  18. அருமையான பகிர்வு... தலைவனை பிரிந்த தலைவி படும் துயரை அழகாக கூறியுள்ளது.. நல்ல கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  19. சிறப்பான பாடல். பொருள் தெரிந்து மீண்டும் படித்தபோது பாடலின் ஆழம் புரிகிறது.

    பாடலுக்கேற்ற படமும் அழகு...

    தொடரட்டும் இலக்கியப் பகிர்வுகள்.

    ReplyDelete
    Replies
    1. பாடலுடன் படததையும் ரசித்து தமிழமுதத்தை தொடர்ந்து எழுதச் சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. பாடலும் அதற்கான அழகான விளக்கமும்
    படமும் அருமையாக உள்ளது ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாடல். விளக்கம். படம் என அனைத்தையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  21. Replies
    1. உற்சாகமூட்டிய பாராட்டுக்கு என் உஒம் கனிந்த நன்றி.

      Delete
  22. கதையா? காவியமா? என்ன இப்படி அருமையாக உருவாக்கம் செய்துள்ளீர்கள் மிக்க நன்று .
    சரித்திரதொடர் எழுத இப்போது யாரும் முன் வருவதில்லை ,ஆனால் நீங்கள்


    சிரித்திர தொடராக எழுத்தும் விசித்திர மனிதர்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. அழகான பாடலுக்கு அருமையான விளக்கம். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாடலையும் விளக்கத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  24. பிரமிக்க வைக்கிறது உங்களது புதிய பரிணாமம்!

    பாடலுக்கேற்ற படமும் அழகு..

    தொடருங்கள். ரசிக்கக் காத்திருக்கிறோம்....

    ReplyDelete
    Replies
    1. ஏதோ தோணிச்சு. எழுதினேன். புதிய பரிணாமம்... அப்ப தொடர்ந்து எழுதலாம்னு சொல்றீஙக, ரசித்துப் படித்து உற்சாகம் தந்த நண்பருக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  25. அருமையான பாடலையும், அதன் விளக்கத்தையும் கொடுத்தமைக்கு நன்றி. இனி இதுபோன்ற பதிவுகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசிக்கும் போது தொடராமல் எப்படி? நிச்சயம் தொடர்கிறேன் ஸார். ரசித்துப் படித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  26. அருமையான விளக்கப்பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  27. I have been thinking of reading this AAGANANURU and PURANANURU of late. But after reading your post with the meaning, I really feel that my purpose is getting solved through your blog. I also agree with the views of samira of reading tamil for the sake of examination only and without having interest in those days for which my heart is feeling now. Very good post. Please keep it up and I expect such verses from you often. Very good efforts and THANKS A LOT for the same.

    ReplyDelete
    Replies
    1. என் முயற்சியை ரசித்துப் பாராட்டி தொடரச் சொல்லி உற்சாகம் தந்ததோடு சமீராவின் கருத்தையும் ஆமோதித்து அந்த ரசிகைக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  28. அகநானூற்றுப் பாடலுக்கு படமும் தங்கள் விளக்கமும் இலக்கியச் சுவையோடு உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. இலக்கியச் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  29. படம் யார் வரைந்தது? பாடலைவிட கிக்.
    புலவர் பெயர் நீண்ட சிந்தனைக்குப் பின் உருவாகியிருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. படம் வரைந்தவர் என் நண்பர் செந்தமிழ்ச் செல்வன். தமிழ் எனற் பெயரில் பல பத்திரிகைகளில் வரைந்து வருகிறார் இப்போது.

      Delete
    2. அவருக்கு என் பாராட்டுக்களைச் சொல்லுங்கள்.

      Delete
  30. சாத்தனார்னு பேரு வைக்கிறாங்களே.. அவங்க வாத்தியாரு ரெண்டு சாத்து சாத்துனதாலயா?

    ReplyDelete
    Replies
    1. புலவர் பெயர் அகநானூற்றிலேயே இப்படித்தான் குறிப்பிடிப்பட்டிருக்கிறது அப்பா ஸார். சாத்தனார்னு நிறையப் பேர் பேரு வெச்சிக்கறதுக்கான உஙக காரணம் சூப்பர். ஹா... ஹா...

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube