Monday, October 22, 2012

மனம் திருடிய ‘குபேரவனம்’

Posted by பால கணேஷ் Monday, October 22, 2012

ரித்திரக் கதை அல்ல; ஆனால் சரி்திரம் பேசும்! காதல் கதை அல்ல; ஆனால் காதலைப் பற்றிப் பேசும்!  மாயமந்திரக் கதையல்ல; ஆனால் மர்மமான நிகழ்வுகளைப் பற்றிப் பேசும்! குடும்பக் கதை அல்ல; ஆனால் குடும்பப் பெருமைகளைப் பற்றிப் பேசும்! -இப்படி ‘குபேரவனக் காவல்’ நூலாசிரியர் தன் உரையில் சொல்லியிருந்தது படிப்பதற்கான என் ஆவலை ஏகத்துக்கும் விசிறி விட்டது. படிக்கத் துவங்கினேன்.

செல்வங்களுக்கு அதிபதியான குபேரனின் வனத்தைக் காவல் காத்து வந்த புருஷாமிருகம் அபார ஆற்றல் பெற்றது. குபேர வனத்திற்குள் பிரவேசிக்கும் எவரையும் நொடியில் விழுங்கி விடும். தர்மரின் யாகத்திற்கு குபேரனை அழைக்க வந்த பீமன் (கண்ணன் ஆலோசனையின் பேரில்) புருஷாமிருகத்திடம் ‘வரும்போது என்னை விழுங்கு’ என்று சொல்லி குபேரனைப் பார்த்துவிட்டு, வருகையில் ஓட்டமெடுக்கிறான். துரத்தி வரும் புருஷாமிருகத்தின் முன் கண்ணன் தந்த 12 கற்களில் ஒன்றைப் போட கல், லிங்கமாக மாறுகிறது. சிவபக்தியில் தலைசிறந்த புருஷாமிருகம் சிவலிங்கத்தைக் கண்டால் குளித்து பூஜை செய்துதான் மற்ற வேலை செய்யும். எனவே அது சென்று விட, ஓடுகிறான். பூஜை ‌செய்து மீண்டும் துரத்துகிறது மீண்டும் கல் - லிங்கம். இப்படியே 11 முறை செய்து 12வது முறை அஸ்தினாபுர எல்லையை தொட்டுவிட்ட சமயத்தில் அதனிடம் அவன் கால் சிக்குகிறது அதனிடம் சிக்கிய கால் புருஷாமிருகத்திற்கே உரியது, அதை வெட்டித்தா என்று தர்மர் கூற, புருஷாமிருகம் அவர் நேர்மையில் மகிழ்ந்து பீமனை விட்டு விடுகிறது. பூமிக்கு வந்த அது சிவாலயங்களில் காவல் காக்கும் பணியைச் செய்கிறது.

புருஷாமிருகம் குபேரவனத்தை விட்டு நீங்கினால் தன் சக்தியை ம்ருகரஞ்சிகா என்கிற யட்சிணியிடம் தந்து, வனத்தை காவல் காக்க நியமிக்கும். ஒருமுறை ஒரு கந்தர்வன் குபேரவனத்திற்குள் நுழைந்துவிட, புருஷாமிருகத்தின் சக்தி பெற்ற ம்ருகரஞ்சிகா துரத்துகிறாள். இறைவன் அருளால் 11 ஜென்மங்களில் அவன் அவளிடமிருந்து தப்பி விடுகிறான். 12வது ஜென்மமாக 1919ல் சிதம்பரத்தில் ‘புரு‌ஷோத்தமன்’ என்ற பெயரில் பிறக்கிறான் அந்த கந்தர்வன்.

ஜாதகம், கைரேகை இவற்றை பார்க்காமல் மனித உடலில் உள்ள நாடிச் சக்கரங்களின் ஒட்டத்தைக் கொண்டு எதிர்காலத்தைத் துல்லியமாகக் கூறுபவர்கள் சகடவாக்கியர் எனப்படுவர்.அப்படி சகடவாக்கியான குடும்ப நண்பர் நம்பாடுவான், புருஷ்ஷின் பூர்வ பிறவிகளைப் பற்றியும், யட்சிணி துரத்துவதையும் எடுத்துக்கூறி, இந்தப் பிறவியில் அவளிடமிருந்து தப்பினால் இனி பிறவி கிடையாது என்கிறார். யட்சிணியின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதையும் விவரிக்கிறார். பதினொரு ஜன்மங்களாக அவனை அழிக்கத் துரத்தி வரும் யட்சிணியின் கண்ணில் படாமல் புருஷ் வாழ்ந்துவிட இயலுமா என்ன? இப்பிறவியிலும் யட்சிணியைச் சந்தித்து விடுகிறான்.

ப்படி ஒரு பரபரப்பான நிலைக்களத்தை அமைத்து, அவன் யட்சிணியிடம் சிக்கினானா? தப்பினானா? எனில் எப்படி? அவனுக்காய் யட்சிணி என்னவெல்லாம் செய்தாள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு வெகு சுவாரஸ்யமாக தன்னுடைய 4வது நாவலான ‘குபேரவனக் காவல்’ நூலில் விடை தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு.‘காலச்சக்கரம்’ நரசிம்மா. புதன்கிழமை காலையில் புத்தகத்தைக் கையிலெடுத்த நான், வியாழன் மாலைக்குள் 432 பக்கங்களையும் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் வைத்தேன்.

ரபரப்பான ஒரு க்ரைம் த்ரில்லரின் ஊடாக மெலிதான ஆன்மீக, புராணப் பின்னணியைக் கொண்டு, பயனுள்ள பல தகவல்களையும் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கும் (இந்திராசெளந்தர்)ராஜ ரகசியம் திரு.‘காலச்சக்கரம்’ நரசிம்மாவுக்கும் நன்கு கைவரப் பெற்றிருககிறது. இந்த த்ரில்லரின் ஊடாகவும் அவரின் சிந்தனைகள் அங்கங்கே சிறகு விரித்துப் பறந்து கருத்துக் குவியல்களை நம்முன் கொட்டியிருக்கிறது. எனக்கு மிகப் பிடித்த இரண்டை இங்கே சாம்பிள்களாகத் தருகிறேன் :

===============================

‘‘ஒரு மனநல மருத்துவரோட புத்தகத்தைப் படிச்சேன். நம்ம நெத்தி மையத்துல இருக்கற திங்கிங் டிஷ்யூவை அலைகளால பாதிக்கச் செய்ய முடியுமாம். உதாரணத்துக்கு ‘குளிர் காத்து வீசுது’ன்னு நியூரான் செல்கள் திங்கிங் டிஷ்யூவுக்கு மெசேஜ் அனுப்புது. உடனே ‘ஸ்வெட்டர் போட்டுககோ’ன்னு திங்கிங் டிஷ்யூவும் பதில் மெசேஜ் அனுப்புது. அதனால உடனே ஸ்வெட்டர் போட்டுக்கறோம். இந்த திங்கிங் டிஷ்யூ, நம்ம நியூரான் செல்லுல ஏற்படற மின்சார அதிர்வலை மூலம் மெசேஜ் வாங்கி தன் உத்தரவை மூளைக்கு செலுத்தறது. அந்த நியூரான் செல்லுல இருந்து திங்கிங் டிஷ்யூவுக்கு மெஸேஜ் போகாதபடி வெளி அலைகள் மூலமா அந்த திங்கிங் டிஷ்யூவை கட்டுப்படுத்த முடியும்.

அந்த வெளி சக்தி இருக்கற உணர்வலைகளைத்தான் நாங்க வசியம்னு சொல்றோம். அந்த வெளி சக்திகள் நம்ம திங்கிங் டிஷ்யூவை பாதிக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான் நாங்க நாமம், திருநீறு, பொட்டுன்னு வெச்சு்கறோம். இந்த வசிய மையை நெற்றியில வெச்சா, வசியம் செய்யறவங்களோட எண்ண அலைகள், மை வச்சுட்டு இருக்கிறவங்களோட எண்ண அலைகளைத் தாக்கி தங்கள் இஷ்டப்படி அவங்களை ஆட்டிப் படைகக முடியும்...’’

‘‘மைகாட்! 20ம் நூற்றாண்டுல கூடவா இப்படி..!’’ மாடில்டா அசந்து போனாள்.

அமுதன் சிரித்தான். ‘‘நீங்க பிளாக் மாஜிக்கை சயன்ஸ் கண்ணோட்டத்துல பார்க்கறீங்க. நாங்க சயன்ஸையே பிளாக் மாஜிக்கா மாத்திக் காட்டறோம். அவ்வளவுதான்...!’’

===============================

‘‘இந்த மாதிரி புருஷனோட உடன்கட்டை ஏற எவ்வளவு தைரியம் வேணும்! எனக்கு அந்‌த தைரியம் வராதுப்பா. பட், அமுதன்... புருஷனோட உயிர் துறக்கணும்னா ஏன் கோரமா நெருப்புல எரியணும்? தூக்க மாத்திரை சாப்பிட்டு அமைதியா சாக முடியாதா?’’

‘‘அப்படியில்லை மாடில்டா. எங்க நாட்டுல ‌அக்னி... அதாவது நெருப்புதான் சுத்தத்துக்கு அடையாளம்! ஃபயர் இஸ் ப்யூர்! ஒருத்தர் சுத்தமானவர்னு காட்டணுமின்னா கிராமத்துல தீ மேல நடந்து, தாங்க பரிசுத்தமானவங்கன்னு நிரூபிப்பாங்க. எங்க சீதாதேவியே அக்னிப் பிரவேசம் செய்துதான, தான் பரிசுத்தமானவள்னு நிரூபிச்சா!’’

‘‘பெண்கள் ஏன் பரிசுத்தமானவள்னு நிரூபிக்கணும்? ஆணை மாதிரி அவளும் எல்லா உரிமையோட இருக்கலாமே...?’’

‘‘நோ மாடில்டா! ஃபாதர் இஸ் பிலீஃப், மதர் இஸ் ட்ரூத்! அப்பா ஒரு நம்பிக்கை! அம்மா ஒரு உண்மை! உண்மைதான் தான் தூய்மையானதுன்னு நிரூபிககணும். நம்பிக்கை இல்லை!’’

‘‘எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் வெச்சிருக்கு உங்க தேசம்...’’

===============================

432 பக்கங்கள் கொண்ட ‘குபேரவனக் காவல்’ நூலை ரூ.175 விலையில் சென்னை தி.நகரில் தீனதயாளு தெருவில் 23ம் ‌எண்ணில் இருக்கும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சிதம்பரம், சென்னை, கேரளா, லண்டன், உத்தரப்பிரதேசம், ஊட்டி என்று வெவ்வேறு நிலைக்களன்களின் பின்னணியில் விறுவிறுவென்று நகர்கிறது இந்தக் கதை. ‘‘நகத்தைக் கடித்தபடி சுவாரஸ்யமாகப் படிகக ஒரு புத்தகம் வேண்டும்’’ என்கிற ரகமாக நீங்கள் இருந்தால் இந்தப் புத்தகத்தைத் தவற விடாதீர்கள்!

55 comments:

  1. புத்தக விமர்சனம் - படிக்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டுகிறது...

    வாங்கி (நகம் கடிக்காமல்) படிக்க வேண்டும்...

    நன்றி...
    tm2

    ReplyDelete
    Replies
    1. சகடவாக்கியம் பற்றி இதுவரை கேள்வி பட்டதில்லை தகவலுக்கு நன்றி
      பல்சுவை விருந்துடன் மேலும் தெரிந்துகொண்டேன்...நன்றி

      Delete
    2. முதல் நபராக வந்து கருத்துரைத்து படிக்கிறேன் என்ற நண்பர் தனபாலனுக்கும். புதிய தகவல்களை தெரிந்து கொண்டதாய் கூறி உற்சாகம் தந்த கவியாழி அவர்களுக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. நல்ல சுவாரஸ்யமான புத்தகம் சார்.. விமர்சனம் சூப்பர்..
    எனக்கு சரித்திர நாவல்கள் பிடிக்கும் சாண்டில்யன் நாவல் மட்டும் படிப்பேன்...

    ReplyDelete
    Replies
    1. சாண்டில்யன் மட்டும் என்று எல்லைகளைக் குறுக்கிக் கொள்ளக் கூடாது சமீரா. நிறையப் படிக்கணும். அப்பதான் நிறையத் தெரிஞ்சுக்கிட்டு நிறைய எழுதவும் முடியும் சரியா? ரசித்துப் படிச்ச கருத்துச் சொன்ன உனக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  3. நான் ஏற்கனவே புக்குலாம் வாங்கி பைசாவை வேஸ்ட் பண்றேன்ன்னு உங்க மாப்ளை திட்டுவார். இந்த புக்கையும் கேட்டால்??!! உங்களை தேடி கண்டுபிடிச்சு சண்டை போடுவார்ண்ணா.

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு. சென்னை வர்றப்ப அண்ணனோட புத்தகத்தையே எடுத்துப் பேர்ய் படிச்சிடலாம்மா. நோ ப்ராப்ளம்.

      Delete
  4. விமர்சனமே நாவலைப் படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்ட ஸ்ரீனிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. வாசிப்பு, உங்களுக்கு சுவாசிப்பு போல கணேஷ்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா... எத்தனை பணிகள் இருந்தாலும் கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் என்னை இழுப்பவை புத்தகங்களே... தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. Reading is a good habit but giving a review about the books need a special skill and it should induce the readers to go after such books. Your review has not only given the outline of the entire book but also makes us to read this book. Every post is unique in its own and we are unable to guess what will be your next post or about what you are going to write. You keep suspense not only in your serials but also in your posts.

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்தக அறிமுகத்தை ரசித்ததற்கும் என்னை சஸ்பென்ஸ் கடைப்பிடிக்கச் சொன்ன யோசனைக்கும் என் இதயம் நிறை நன்றி நண்பரே...

      Delete
  7. சிலர் ஏனோதானோ என்று கடமைக்கு புத்தக விமர்சனம் செய்வார்கள். அவ்வாறு இல்லாமல், தாங்கள் அந்த “குபேரவன காவல்” என்ற நூலை, புத்தகத்தோடு புத்தகமாய் ஒன்றிப் போய் படித்து முடித்து, நூல் விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். தங்கள் விமர்சனம் அந்த புத்தகத்தை படிக்க இழுக்கிறது. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்துப் படிக்கும் நூல்களில் சுவாரஸ்யமானவற்றையே அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். ஆழ்ந்து படித்தல் என்பது வரம். அதை அவதானித்து எனக்கு மகிழ்வு தந்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      Delete
  8. ‘குபேரவன காவல்’ நூல் பற்றி நூலாசிரியர் தந்த உரையைவிட தாங்கள் சுருக்கித் தந்த கதையின் பகுதியே நாவலைப் படிக்க தூண்டுகிறது. திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னதுபோல கடமைக்கு விமரிசனம் செய்யாமல் இரசித்து, எங்களையும் இரசிக்கவைத்து விமரிசனம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. படியுங்கள் சபாபதி ஸார். ஏமாற்றாது இந்தப் புத்தகம் உங்கள் மனதையும் திருடும். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. இத்தனை சொன்ன நீங்கள் கடைசி பக்கத்தையும் எழுதி இருக்கலாம்!
    (சும்மா ....ஜோக்!)

    உங்களது விமரிசனம் புத்தகத்தை வாங்கத் தூண்டுகிறது.

    நல்ல விமரிசனம்.

    பாராட்டுக்கள். நல்லதொரு புத்தகத்தை அறிமுகம் செய்திட்ட உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கடைசி சில பக்கங்கள் என்றில்லாமல் ஆரம்ப பக்கத்தில் துவங்கிய வேகம் கடைசி வரை இருக்கிறது ரஞ்சனிம்மா. அதனால்தான் சம்பவங்கள் எதையும் சொல்லாமல் கதைப் பின்னணியை மட்டும் சொல்லிருக்கேன். படிக்கிறேன் என்று சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. ஓ.... இவரது அடுத்த புத்தகத்தையும் வாங்கிப் படித்து விட்டு விமர்சனம் எழுதி விட்டீர்கள்! சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீராம். சங்கத்தாராவில் இருந்த அதே வேகமும் முடிவை நெருங்குகையில் பக் பக்கும் இதிலும் உண்டு. படித்து ரசியுங்கள். நன்றி.

      Delete
  11. படிக்கத் தூண்டும் விமர்சனம். அடுத்த பயணத்தின் போது வாங்க இப்போதே குறித்து வைத்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட். அலைய வேண்டாம் நீங்க. உங்களுக்காக நானே வாங்கி வெச்சிடறேன். சரியா... உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  12. இன்டரஸ்டிங்...உங்க எழுத்து நடை அருமை.

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்து நடையைப் பாராட்டிய துரைக்கு என் மனம் நிறை நன்றி

      Delete
  13. உங்களின் விமர்சனமே படிக்கத் துாண்டுகிறது ஐயா.
    இந்தியா வந்தால் தான் வாங்கனும்...

    ReplyDelete
    Replies
    1. இந்திய விசிட்டில் தவறாம வாங்கி படிச்சு ரசியுங்க நண்பா. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  14. கதைக்களம் பிரமாதமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன். இந்த சயன்ஸை ப்லேக் மேஜிக்காக்குகிறேன் என்பது இடிக்கிறது. மூளைக்கும் தசையணுக்களுக்கும் தகவல் தொடர்பு இருப்பது தெரிந்த விஷயம் தானே? in fact, நம் உடல் முழுதும் அப்படி தகவல் தொடர்பு இருப்பதனால் தான் இயங்குகிறோம். வசியம் என்பது புருடா. டெலபதியை வேண்டுமானால் வசியத்துக்கு அருகே கொண்டு செல்லலாம் - அதுவும் டெலபதி இயங்க இரண்டு மனம் வேண்டும் :). நம்மை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் நம் மன அலைவரிசையில் ஒத்து இயங்குவது இந்த ரகம் தான். இதில் ப்லேக் மேஜிக் எதுவுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. கதைக்களம் வித்தியாசமாக அமைத்து வாசக சுவாரஸ்யத்திற்கும் பஞ்சம் வைக்கவில்லை நரசிம்மா அவர்கள். வசியம் பற்றிய உங்களி்ன் கருத்தை அவரிடம் தெரிவிச்சிடறேன். நன்றி ஸார்.

      Delete
  15. கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு. எனக்கு இந்த மாதிரி கதைகள் ரொம்ப பிடிக்கும். ரசித்து படிப்பேன். அறிமுகத்துக்கு நன்றி.

    //புதன்கிழமை காலையில் புத்தகத்தைக் கையிலெடுத்த நான், வியாழன் மாலைக்குள் 432 பக்கங்களையும் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுத்தான் வைத்தேன். //
    ம்ம்ம்... பொறாமையா இருக்கு. பிடிச்ச புத்தகத்தை இந்த மாதிரி விடாம படிக்கற சுகமே தனிதான். இப்ப எல்லாம் நேரத்தை எற்படுத்திண்டு படிக்க உட்காந்தா நாலு பக்கம் படிக்கறதுக்குள்ள தூக்கம்தான் வரது. :) இருந்தாலும் விடாம படிக்கறேன். படிக்க வேண்டிய புத்தக லிஸ்டும் அனுமார் வால் மாதிரி நீண்டுண்டே போயிண்டு இருக்கு. :)

    ReplyDelete
    Replies
    1. அது என்ன மாயமோ தெரியலங்க... சுவாரஸ்யமான புத்தகம் கிடைச்சு ஆரம்பிச்சுட்டா வர்ற தூக்கம் கூட விலகிப் போயிடுது எனக்கு. நீங்களும் அந்த ரகம் தான்ங்கறதுல மகிழ்ச்சி. சில புத்தகங்களை எடுத்தா கீழ வைக்க மனம் வராது. சில புத்தகங்களை கீழ வெச்சுட்டா எடுக்க மனம் வராது. இந்த புத்தகம் முதல் ரகம். படிச்சுப் பாருங்க. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  16. first give a sweet for me... ennoda bloglayum nethu puththaga vimarsanamdan! apram inda book e-bookaga kedaikuma? neenga eludi iruka vimarsanam kadai romba swarasyamaaga irukum poola... epdiyum padichudanum!

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்தகம் சமீபத்துல தான் வெளியாச்சு சுடர். ஈ புக்கா கெடைக்குமான்னு தெரியலை. விசாரிச்சு சொல்றேன்மா. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  17. காலச்சக்கரம்’ நரசிம்மா எனக்கு ஒரு புது எழுத்தாளரை,அதுவும் சரித்தர நாவலாசிரியரை அறிமுகம் செய்துள்ளீர்கள். அதற்கு முதலில் நன்றியய்யா. சாண்டில்யன்,கல்கி,விக்ரமன்,கோ.வி.மணிசேகரன். இவர்கள் தான் என்னுடைய சரித்திர நாவலின் வட்டம்.
    இந்த புத்தகத்தைப் பார்க்கையில் தான் இன்னும் என் வட்டம் சிறியது என்று தோன்றுகிறது.

    அருமையான பதிவு. இது போல் புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் என்னைப் போல் நிறையப் பேர்கள் அறிய இது போன்ற பதிவை தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இவரை சரித்திர எழுத்தாளர் என்று ஒரு வட்டத்துக்குள் அடைக்க முடியவில்லை ராஜா. நான்கு நாவ்லகள் எழுதியிருக்கார். ஒவ்வொண்ணும் வேற வேற தளங்கள். இனி அடுத்தடுத்து நான் படித்த நல்ல புத்தகங்களை தொடர்ந்து எழுதறேன் நண்பா. எல்லாம் நீங்கள் தரும் ஊக்கம்தான், மிக்க நன்றி.

      Delete
  18. நல்ல பகிர்வு.

    உங்கள் விமர்சனம் புத்தகம் படிக்கத் தூண்டுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. படிக்கத் தூண்டுகிறது என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  19. ஆன்லைனில் இந்த புத்தகத்தை எங்கே பெறலாம்?

    ReplyDelete
    Replies
    1. உடுமலை டாட் காமில் தமிழ் புத்தகங்கள் அனைத்தையும் ஆர்டர் செய்து பெறலாம். இதுவும் கிடைக்கும் என நினைக்கிறேன். சமீபத்தில் வெளியானதாகையால் உறுதியாகத் தெரியவில்லை. அங்கே முயலவும் நண்பரே... மிக்க நன்றி.

      Delete
  20. அட கணேஷ் கண்லதான் இந்தமாதிரி புக்ஸ் படுதுபாருங்கப்பா... நானும் வாங்கிப்படிக்கறேன் ஆர்வத்தைக்கிளப்பற மாதிரியான விமர்சனம் எழுதிட்டீங்க ப்ரதர்

    ReplyDelete
    Replies
    1. ஆர்வத்தைத் தூண்டுகிறது என்று சொன்ன அக்காவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  21. எல்லாரையும் வாங்கத் தூண்டும் விமரிசனம்

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  22. படிப்பதில் ஆர்வம் உள்ளவங்களுக்கு இதுபோல புத்தக விமரிசனங்கள்
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. படி்த்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  23. நல்லதொரு புத்தக விமர்சனம்,புத்தகத்தை வாங்கத்தூண்டும் விதமாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நல்லெதாரு விமர்சனம் என்று பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  24. அன்பர் கணேஷ்

    வணக்கம். மின்னல் அடிக்கும் போதும் இடியோசை கேட்கும் போதும், மரத்தின் கீழ் நிற்க கூடாது என்று சொல்வார்கள். எனது நாவல் குபேர வன காவலை வானதி பதிப்பகம் வெளியிட்டவுடன், இலக்கிய மரத்தின் கீழ் நின்று மின்னல் வரிகள் வெட்ட போகும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். மின்னல் வெட்டவில்லை. பூமரிதான் பொழிந்து உள்ளது. அன்று அரசியல் வானம், ரஜினிகாந்த் என்கிற சூப்பர் ஸ்டார் செய்யபோவது என்ன, சொல்லபோவது என்ன என்று அனைவரும் ஆவலுடன் பார்த்தது ஒரு காலம். காரணம், அவர் சுட்டி காட்டும் திசையில் பயணிக்க எண்ணற்ற இளைஞர் கூட்டம் இருந்ததை, அரசியல் வாதிகள் மருட்சியுடன் பார்த்து கொண்டு இருந்தனர். அதே போல் எழுத்தாளர்களும் உங்களை, மருட்சியுடன் பார்த்துவருகின்றனர். நீங்களும் இந்த புத்தகத்தை படியுங்கள் என்று சுட்டிக்காட்டும் புத்தகத்தை மட்டுமே படிக்கும் பெரிய குழாம் ஒன்றை கையில் வைத்து இருக்கிறீர்கள். இதுதான் அப்பா துரை புருடா என்று சொன்ன வசியம். நீங்கள் தங்கள் விமர்சன திறமையால் அப்பா துரை போன்றவர்களை வசியம் செய்து வைத்திருப்பது சாத்தியம் என்றால், வசியம் என்பது ஒரு புருட அல்ல. சொல்ல போனால், ஒருவர், நாவல் ஆசிரியரின் அறிமுகத்தை விட, உங்கள் விமர்சனம் மிக அருமை என்று சொல்லி இருக்கிறார். அது அவரது எண்ண அலைகள், உங்கள் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறது என்றுதான் பொருள். இதுவே ஒரு வசியம்தானே.


    வசியம் என்பது ஆங்கிலத்தில் ஸ்பெல் என்று சொல்லுவார்கள். தேர்தல் பொது அரசியல்வாதிகள் இலவசங்களை அள்ளி தந்து மக்களை வசியம் செய்து தங்களுக்கு வோட்டு போட வைப்பதும் ஒரு வசிய கலைதான். உறுதியான விஸ்வமித்தரர் மேனகையிடம் விழ்ந்தது வசியத்தால்தான். அருமையான தனது விளையாட்டல் டெண்டுல்கர் மக்களை ஈர்த்து வைத்திருப்பதும் வசியம்தான். மைகேல் ஜாக்சன் மரணித்தபோது தற்கொலை செய்து கொண்ட ரசிகர்களும் அவர் போட்ட வசியத்தால் தான் தங்களையே மாய்த்து கொண்டார்கள். வசியம் என்பதே ஒருவரின் தனித்தன்மையை இல்லாமல் செய்ய வைத்து, அவரை தங்களை சார்ந்தே இருக்க வைப்பதுதான். எண்ணற்ற தேவதைகள், பிர்த்ருக்கலாகைய நமது முன்னோர்கள், ஆகியோரை, தங்களை சார்ந்து நிற்க வைத்து பல காரியங்களை சாதித்து இருக்கிறார்கள். அண்ணாதுரை யின் பெயரை அப்பா துரை மறந்து இருக்க மாட்டார். அவர் பெயரில்தானே மக்களை வசியம் செய்து, திராவிட நாடு என்கிற உலக வரைபடத்தில் இல்லாத ஒரு நாட்டை பற்றி பேசி, ஆட்சியை பிடித்தனர், தி மு க. இன்று, தாத்தா (காந்தி) மாமா (நேரு) அண்ணா, அய்யா, அம்மா என்று பெயர்களை வைத்து தானே வசியம் செய்து தங்கள் உறவுகளை மட்டும் வாழ வைக்கின்றனர், அரசியல்வாதிகள். இதை போலதான், கேட்ட தேவதைகளை, மந்திர உச்சாடனம் மூலம், தேர்தல் அறிக்கையை போன்று, உனக்கு இது தருகிறோம் அது தருகிறோம் என்று வாக்களித்து, கேட்ட தேவதைகளை வசியம் செய்ய முடியும். இந்த பதிலையே ஒரு நாவலாக என்னால் எழுத முடியும். எல்லாமமே எண்ண அலைகளை மாற்றுவதில்தான் இருக்கிறது. அம்மா அல்லது மனைவி கையால் மட்டுமே உணவு உண்டனர் பெரியவர்கள். காரணம் பிறரது எண்ண அலைகள் தமது ஜீரண சக்தியடி பாதித்து விடும் என்று அவர்கள் உறுதிபட நம்பினார்கள். எனவே தான் மூதாட்டிகள் பிறர் காண சாப்பிட மாட்டார்கள். சுவர் பக்கம் திரும்பி சாபிடுவர்கள். பிறரது எண்ண அலைகள் நம்மை வசியம் செய்து விடாதபடி பார்த்து கொண்டார்கள். இன்று ஹோட்டல் லில் உண்பவர்கள் , உணவு விஷம் என்று கூறுவது, இந்தாள் ஆர்டர் செய்து கொண்டே இருக்கிறானே...இப்படி தின்கிறானே...டிப்ஸ் எவ்வளுவோ தருவானோ என்று விட்டர்கள் தங்கள் எண்ணங்களால் உண்பவறது ஜீரண தன்மையை பாதிப்பதால்தான்.

    அப்பா துரை அவர்களே...வசியத்தை பற்றி விலாவாரியாக எண்டது காலச்சக்ரம் நாவலில் கூறியுள்ளேன். இந்த நாவலை வெளியிட்ட கவிஞர் வாலியும், பகுத்தறிவு குடும்பத்தை சேர்ந்த கனிமொழி யும் அதை மேடையிலேயே பாரட்டினார்கள். எனவே, முயன்று பாருங்களேன்.

    நன்றி கணேஷ் அவர்களே.
    காலச்சக்ரம் நரசிமமா

    ReplyDelete
    Replies
    1. புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியை நான் வெளியிட்டதால் அப்பா ஸாருக்கு எழுந்த கேள்வி அது. விரிவான விளக்கம் தந்தமைக்கும் என் எழுத்தைப் பாராட்டியைமக்கும் என் மனம் நிறைந்த நன்றி ஸார்.

      Delete
  25. Narasimha Kalachakkaram அவர்களின் விரிவான விளக்கம் ரசிக்கவைத்தது.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  26. படிக்கத் தூண்டும் விமர்சனமாக இருந்தது.... (என் கையில்) கிடைக்கும் போது படிக்கிறேன்....:)

    ReplyDelete
    Replies
    1. விரைவில் கிடைத்து விடும். படித்து ரசித்துச் சொல்லுங்கள் தோழி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  27. நல்ல கருத்துக்கள் அடங்கிய புத்தகம் அனைவரையும் படிக்கத் தூண்டும் விதமாக இருக்கிறது.நேரம் இருக்கும் போது படிக்கின்றேன்.நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. அவசியம் படித்து ரசியுங்கள் நட்பே. மிக்க நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube