Friday, October 26, 2012

மொறு மொறு மிக்ஸர் - 14

Posted by பால கணேஷ் Friday, October 26, 2012

தெள கீர்த்தனாரம்பத்திலே... லோகத்திலே நல்ல விஷயங்களைச் சொல்றவா குறைஞ்சு போயிட்டா இந்தக் காலத்துல. அதனால நாம நல்லதா சில வார்த்தைகளை முதல்ல காதுல போட்டுண்டுரலாம். அப்புறமா மனசுலயும் போட்டுக்கலாம்...  இந்தப் புள்ளையாண்டான் வெளிநாட்டுக்காரனா இருந்தாலும் எவ்வளவு ‌ஜோராச் சொல்லியிருக்கான் பாருங்கோ...

)- நீ காட்டுவதை விட அதிகமாக வைத்திரு. நீ அறிந்தவற்றை விடக் குறைவாகப் பேசு. உன்னிடம் இருப்பதைவிடக் கொஞ்சமாகக் கொடு.

)- நீ கொடுப்பது பெரிய கொடையாக இருந்தாலும் அன்பு இன்றிக் கொடுத்தால் அது கொடையாகாது. தேய்ந்து போகும்.

)- உன்னுடைய நோக்கத்தை வாளின் மூலம் சாதிப்பதைவிட நகை முகத்தால் சாதிக்கக் கற்றுக் கொள்!

                                                                                                -ஷேக்ஸ்பியர்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

‘நன்றி’ என்கிற வார்த்தை ஏனோ நிறையப் பேரின் அகராதியில் மிக அபூர்வமான ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. ஓட்டலில் உங்களின் விருப்பத்தையும், அவசரத்தையும் புரிந்து உடனே கவனிக்கும் சப்ளையருக்கோ, பெட்டிக் கடையில் அல்லது அருகில் நிற்பவரிடம் விலாசம் விசாரித்து அவர்கள் வழி ‌சொல்லும் போதோ... இதுபோன்ற பல சந்தர்ப்பங்களில் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல்லை உதிர்க்காமல் பலர் சென்று விடுவதைக் கண்டிருக்கிறேன் நான்.

ஐரோப்பிய நாடுகளில் அதிகம் உச்சரிக்கப்படும் மூன்று வார்த்தைகள் ‘வணக்கம், நன்றி, குட்பை’ ஆகியவைதான் என்று படித்திருக்கிறேன். அங்கெல்லாம் பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் வாடிக்கையாளரிடம் ‘நன்றி’ என்பார் கடைக்காரர் சில்லறை பாக்கியை கடைக்காரர் தரும் போது வாடிக்கையாளர் ‘நன்றி’ என்பார். ‘நன்றி’ என்கிற எளிய சொல்லும், ஒரு குறுநகையும் நிறையச் சாதிக்கும்.

நியாயமான தொகை கேட்கும் ஆட்டோக்காரருக்கு, கவுண்ட்டிங்கில் ஃப்ராடு பண்ணாமல் பெட்ரோல் போடும் பங்க் காரருக்கு, குறைந்த தொகை வாங்கும் மருத்துவருக்கு, தொகுதிப் பக்கம் வந்து நற்பணி செய்யும் (அப்படி எவரேனும் இருந்தால்) அரசியல் பிரமுகருக்கு, உங்களுக்காக வாகனங்களை நிறுத்தி நடக்க வழி செய்து தரும் போக்குவரத்துக காவலருக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ‘நன்றி’ சொல்லப் பழகலாம் நாம் என்பது என் கருத்து. அந்தச் சொல் தரும் உற்சாகம் அவர்களை நிஜமாகவே சிறப்பாகச் செயல்பட வைக்கும்.

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

க்காலத் திரைப்படப் பாடல்கள் தமிழ்ப் பாடல்களாக இல்லாமல் ஆங்கிலம் கலந்து வருகின்றன. சில சமயங்களில் தமிழை விட ஆங்கிலம் மிகுதியாக இருக்கிறது என்பதை முன்பொரு பதிவில் அங்கலாய்த்திருந்தேன். எ‌தேச்சையாக பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்றைப் புரட்டியபோது இந்தத் தகவல் கண்ணில் பட்டது. மிக வியப்பாக இருந்தது எனக்கு.



=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

கும்பகோணத்தில் மாடத்தெருவில் இருந்தது டாக்டர் பி.ஜி.கிருஷ்ணனுடைய வீடும் ஆஸ்பத்திரியும். கீழே குடித்தனம், மாடியில் டிஸ்பென்சரி என்று வைத்துக் கொண்டிருந்தார். வாசல்புறமாக இருந்த மாடிப்படி மிகமிகச் ‌செங்குத்தாக இருக்குமாகையால் அதில் ஏறிப் பழக்கப்பட்ட அவ்வளவு பேருக்கும் அதில் இருப்பது 32 படிகள் என்பது நெட்டுருப் பாடம்!

மாடியில் டாக்டரின் அறைக்கு வெளியே டாக்டர் உட்காருவதற்காக மேஜையும், நாற்காலியும் போட்டிருக்கும். மேஜை நிறையப் புஸ்தகங்களாக அடுக்கியிருக்கும். டாக்டரின் நாற்காலியைத் தவிர இன்னோர் நாற்காலியும், ஓர் ஒற்றை பெஞ்சும் அங்கே காணப்படும். ஒற்றைப் பெஞ்சில் நெருக்கமாக நாலு பேர் உட்காரலாம்; அப்பது ஒருவர் முழங்காலுக்குக் கீழே தொங்க விட்டுக் கொள்வதானால் தாராளமாகப் படுக்கலாம். இந்த பெஞ்சியைக் காலியாகப் பார்த்திருக்கும் இருவர் இரவில் கடைசியாக அறையைப் பூட்டும் கம்பவுண்டரும், காலையில் விளக்குமாற்றுடன் வரும் வேலைக்காரியுமாகத் தான் இருக்க வேண்டும்!

                                                                        -‘கல்யாணி’ நாவலில் தேவன்

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

விச்சந்திரன் நடித்து ‘மதறாஸ் டு பாண்டிச்சேரி‘ என்று ஒரு படம் நான் பிறந்த குழந்தையாக இருந்த ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. அந்தத் திரைப்படத்தை இந்தியில் மெகமூத் என்று ஒரு தயாரிப்பாளர் ‘பம்பாய் டு கோவா’ என்ற பெயரில் எடுத்தார். அமிதாப்பச்சன் நடித்தும் அப்படம் இந்தியில் பப்படமாகியது.

இதில் ஒரு ஆச்சரியத் தகவல் என்னவென்றால் மெகமூத் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க முதலில் அணுகியது அப்போதைய பாரதப் பிரதமரின் மகனை.

இந்திராகாந்தியின் மகனான ராஜீவ் காந்தியிடம் அவர் நடிக்க வேண்டுகோள் வைக்க. ராஜீவ் மறுத்து விட்டதால் அவரது நண்பரான அமிதாப் நடித்திருக்கிறார். 

‘த ஹிந்து’வின் ஞாயிறு இணைப்பில் இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிக வியப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்கு...?


 =*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

ரஸ்வதி பூஜை தினத்தன்று யதேச்சையாக விஜய் டிவி வைத்த போது ‘துப்பாக்கி’ படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லிக் கொண்டிருந்தார். ‘‘ஹீரோ ஒரு பரபரப்பான கேரக்டர்ங்க. மூணு வேலைய ஒரே நேரத்துல செஞ்சிட்டிருப்பாரு. செஞ்சிட்டிருக்கும் போதே நாலாவது வேலையப் பாக்கப் போயிடுவாரு. அந்த வேலை முடியறதுக்குள்ளயே அஞ்சாவது வேலையில இறங்கிடுவார். அப்படி ஒரு டைப்’’ -இப்படிச் சொன்னார் அவர். ஆகக்கூடி ஹீரோ உருப்படியா ஒரு வேலையும் செய்யத் தெரியாதவன்னுதானே அர்த்தமாகுது. என்னங்ணா இது? ஹி... ஹி...

63 comments:

  1. அத்தனையும் ரசிக்கும்படியாக தகவல்கள்...

    தொகுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  2. பல செய்திகளின் தொகுப்பு தங்கள்' நச்' கருத்துடன்
    நகைச்சுவை பாணியுடன், ஒரு பல்சுவை இதழைப்
    படித்தது போன்றதோர் உணர்வு. நன்றி சொல்ல
    மறப்பது அழகல்லவே .. எனவே உங்கள் மொறு மொறு விற்கு
    என் சுறு சுறு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து சுறுசுறு நன்றியைப் பகிர்ந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  3. தகவல்கள் அனைத்தும் அருமை...

    நன்றி...
    tm3

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் ரசித்த உங்களுக்கு அகமகிழ்வுடன் என் நன்றி.

      Delete


  4. பண்டைய தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.

      Delete
  5. இந்த நேரத்துல சோடாவும் சுவையாவும் சொன்னீர்கள் .நன்றி உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சூடாகவும் சுவையாகவும் சொன்னதாய் சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. மழைக்காலத்திலும் உங்கள் மிக்ஸர் வழக்கம்போல் ‘மொறு மொறு’ என்றே இருந்தது.

    தமிழ் திரைப்படங்களில் பாடல்களில் ஆங்கில சொற்கள் வருவதைப்பற்றி சொல்லியிருக்கிறீர்கள். 1961 ல் வெளிவந்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் திரு A.L.ராகவன் மற்றும் திருமதி ஜானகி இணைந்து பாடிய ‘அடிச்சிருக்கு நல்லதொரு சான்சு கிடைச்சிருக்கு நமக்கு அந்த நியூசு. நினைச்சதுபோல் நீயும் நானு பாஸு காப்பி அடிச்சவங்க அத்தனை பெரும் பெயிலு’ என்று ஒரு பாடல் வரும். எனவே பாடல்களில் ஆங்கிலம் கலப்பது என்பது ஒரு ‘ஃபேஷன்’ போல என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓ... நல்லவன் வாழ்வான் படப்பாடல் நான் கேட்டதில்லை. புதிது. தகவல் தந்தமைக்கும் ரசித்துப் படித்தமைக்கும் என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. நன்றி பத்தின தகவல் ரொம்ப அருமை! அப்பறம் ராஜீவ் மேட்டர் ஆச்சர்யமாக இருந்தது! லாஸ்ட்டா சொன்னீங்க பாருங்க.... துப்பாக்கினு படத்துக்குப் பேர் வச்சதுக்கு பதில உங்களுக்கு வச்சு இருக்கலாம்!:))) ஹி, ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... எனக்கு இப்படியொரு பட்டம் கூடத் தர்றீங்களா? அருமைங்க. மிக்க நன்றி.

      Delete
  8. பாட்டை விடுங்க. எம்.கே.ராதாவா? அது யாருங்க? பாக்குறதுக்கு அட்டகாசமா இருக்காரு! தமிழ் ஹீரோவா, ஹிந்தி டப்பிங்கா?

    ReplyDelete
    Replies
    1. நான் சினிமா பார்க்க ஆரம்பிச்ச காலத்துக்கு முந்தைய தமிழ் ஹீரோவாம் அவர். சந்திரலேகான்னு புகழ் பெற்ற படத்துல நடிச்சிருக்காரு அப்பா ஸார். ஒரிஜினல் தமிழ்தான். டப்பிங் இல்ல... மிக்க நன்றி.

      Delete
    2. சந்திரலேகா சாம்பார் படம்னு நினைச்சிட்டிருந்தேன்!!

      Delete
  9. நன்றி சொல்ல பலரும் மறக்கும் வெளையில் நினைவு படுத்திய விதமும் பல்சுவை தகவலும் அருமை! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  10. மன்னிப்பு, நன்றி இந்த இரு சொல்லையும் சரியான நேரத்தில் பயன்படுத்த கற்றுக்கொண்டாலே போதும் வாழ்வில் பாதியை வெற்றி கொண்டு விட்டவர்களவோம்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான வார்த்தை தம்பி. மிக்க நன்றி.

      Delete
  11. எல்லாமே அருமையான தகவல்கள் ... பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா :)

    நான் வழக்கமாக யாராக இருந்தாலும், உதவி ஒன்றைப் பெற்றால் நன்றி சொல்லிவிடுவது வழக்கம். என் அப்பா மூலம் வந்த பழக்கம்.. :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொல்லும் நல்ல பழக்கம் உள்ள உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  12. நன்றி சொல்வது நம் ரத்தத்தில் இல்லவே இல்லை!

    வெளிநாட்டுக்காரர் சொன்னாலாவது கேட்கிறார்களா பார்ப்போம்.

    ராஜீவ் காந்தி நடிக்க வந்திருந்தால் நம் நாட்டின் தலையெழுத்தும் மாறி இருக்குமோ என்னவோ!

    'துப்பாக்கி' பற்றி நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி படு ஜோர்!


    உங்கள் மொறுமொறு மிக்ஸர் கார சாரமாக மணத்துடன் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். ராஜிவ் நடிக்கப் போயிருந்தால் ஒருவேளை அவர் விதி மாறியிருக்குமோ என்றுதான் எனக்கும் தோணிச்சும்மா. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. மொறு மொறு மிக்ஸர்
    வழக்கம்போல் அருமை
    பலதரப்பட்ட செய்தியாக இருப்பதால்
    படிக்க மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மொறு மொறு மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  14. மொறுமொறு மிக்ஸர் அனைத்தும் சுவைக்கின்றது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சுவைத்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  15. துப்பாக்கி ஹா ஹா..., விஜய் ஹி ஹி ஹி...,

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சிரிக்க முடிஞ்சுதா... பேஷ்...

      Delete
  16. மதராஸ் டூ பாண்டிச்சேரி படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாகேஷுடன் இன்னொருத்தரும் கலக்கி யிருப்பார்(அந்த நடிகர் பேர் நினைவில்லை.) இதில்தான் ஒரு நடிகர் பக்கோடா காதராகி நம் கவனத்தை ஈர்த்தார்னு நினைக்குறேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த நடிகரின் பெயர் ஏ.கருணாநிதி. பக்கோடா காதரின் ஆரம்பம் இந்தப் படம்தான்ங்கற தகவல் சரிம்மா. ரசிச்சுப் படிச்சு உற்சாகம் தந்த தங்கைக்கு மகிழ்வுடன் என நன்றி.

      Delete
  17. ஸ்வாமி பாலகணேஷ சாஸ்திரிகளே! கதாகாலட்சேபம் வெகு பேஷாயிருந்தது போங்கோ! :-)

    அப்புறம், டு தி பெஸ்ட் ஆஃப் மை நாலெட்ஜ், ‘பாம்பே டு கோவா’ இந்தியிலேயும் சூப்பர் ஹிட்டான படம்!

    ‘துப்பாக்கி’ படம் பத்தி; படம் பார்க்குறவங்களாவது உருப்படியா பார்க்குறா மாதிரியிருந்தா நல்லாயிருக்கும். அடுத்தடுத்துப் பெரிய தலைங்க படமெல்லாம் சுருண்டிட்டிருக்குங்காணும்! :-)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அது தோல்விப்படம்னு நான் கேள்விப்பட்டது நிச்சயம் தப்பாயிருக்கும. ஏன்னா.. உங்க மேல எனக்கு நம்பிக்கை உண்டு, ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  18. முதலில் உங்களுக்கு நன்றி சார்.. இப்படி தேடிபிடித்து எங்களுக்கு மிக்சர் தரிங்களே...
    வெளிநாட்டுக்காரன் சொன்ன கரெக்ட் தான் இருக்கும்...
    ராஜீவ்-கு நடிக்கும் ஆசை இருந்ததோ?? அதனால் தான் அவரை அனுகினாரோ மெஹமூத்?
    தங்க்லீஷ் தமிழ் பாட்டு: அன்பே வா படத்தில் வரும் "Once a பாப்பா met a மாமா எங்கள் little tourist bus" நான் அதிகம் முனுமுனுக்கும் பாடல் இது!!
    துப்பாக்கி - பாவம் எதையுமே ஒழுங்கா முடிக்க தெரியாத ஹீரோ போல..
    மீண்டும் ஒரு நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. இல்லம்மா... ராஜிவுக்கு நடிக்கும் ஆசை இல்லாததால தான் சம்மதிக்கலை. ஒரு வேளை சம்மதிச்சிருந்தா... வரலாறு மாறியிருக்கும. அன்பே வாவின் பாட்டு ஏஎல்ராகவனின் குரலுக்காகவே எனக்கும பிடிச்சது. ரசிச்சுப் படிச்சதுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா.

      Delete
  19. தகவல்கள் எல்லாமே சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. மிக்சர் டேஸ்ட் வழக்கம் போல் சூப்பர்.ஷேக்ஸ்பியர் சொன்ன முதல் பொன்மொழி நடைமுறைக்கேற்றது

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரையும் பொன்மொழியையும் ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  21. சுவையான மிக்சர் கொடுத்ததற்கு மிக்சர் ... சாரி மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. // இந்தப் புள்ளையாண்டான் வெளிநாட்டுக்காரனா இருந்தாலும் எவ்வளவு ‌ஜோராச் சொல்லியிருக்கான் பாருங்கோ...//
    நன்னா சொல்லி இருக்கேளே! பேஷ், பேஷ்! :)

    மிக்ஸர் நல்லா இருக்கு. எம்.கே. ராதா அந்த காலத்து handsome ஹீரோ. இவர் நடிச்ச சந்திரலேகா என்னோட favorite படம். தூர்தர்ஷன்ல ஒளிபரப்பு பண்ணின பொழுதெல்லாம் விடாம பாத்திருக்கேன். அப்போ எல்லாம் அந்த காலத்து படம்னா எங்க பெரியம்மா, பாட்டியோடதான் பார்ப்பேன். அவங்க கமெண்ட் எல்லாம் அட்டகாசமா இருக்கும். ரொம்ப ஜாலியா, என்ஜாய் பண்ணி பாக்கலாம். நல்ல ரசனை உள்ளவங்களோட சேர்ந்து பாக்கும்போது இன்னும் ரசிச்சு பாக்க முடியும், இல்லையா.

    மெட்ராஸ் டு பாண்டிச்சேரி திரும்ப பாக்கணும்னு சீடி வாங்கினா பிரிண்ட் சரி இல்லை. படத்தை ஞாபகபடுத்திடீங்க. You tube-la நல்ல பிரிண்ட்ல இருக்கா பாக்கணும். படத்துல கருணாநிதி கலக்கல்.

    கணேஷ், நான் போட்ட கமெண்ட் ரெண்டு தடவையும் சரியா பப்ளிஷ் ஆகல. அதான் மூணு தடவ போடற மாதிரி ஆயிடுத்து. சாரி!

    ReplyDelete
    Replies
    1. எம்.கே.ராதா நடிச்சு நான் பார்த்த ஒரே படம் சந்திரலேகாதான் மீனாக்ஷி - தொலைக்காட்சி உபயத்தால். மிக்ஸரை ரசிச்சுக் (பொறுமையா) கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  25. நம் ஆட்கள் நன்றி சொல்லிகிறார்களோ இல்லையோ ஸாரி என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் புரியாமல் எல்லா இடங்களிலும் தேவைக்கும் அதிகமாக உபயோகிக்கிறார்கள்..

    மிக்ஸர் மிக சுவையாக இருக்கிறது,,, பகிர்ந்ததற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டுப்பா. இந்த ஸாரிங்கற வார்த்தையும் பெரிய பெரிய தப்புக்கெல்லாம்கூட சாதாரணமா பயன்படுது. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  26. கடைசி மேட்டர் ஹீ ஹீ

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  27. செம டேஸ்டான மிக்சர்....

    பக்கோடா, பக்கோடா என அழுது அழுது அதற்குப் பின் ’பக்கோடா காதர்’ என்றே அழைக்கப்பட்ட காதர் முதலில் நடித்த படமும் இது தான் என நினைக்கிறேன்.

    ராஜீவ் நடிக்க வந்திருந்தால் - நல்ல கேள்வி... எத்தனையோ நல்லது நடந்திருக்கலாம் :)

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். பக்கோடா காதரின் முதல் படம் அது. ராஜிவ் நடிக்க வந்திருந்தால் சரித்திரம் மாறியிருக்குமே என்றுதான் நானும் நினைத்தேன். ஸேம் பிளட். ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  28. கொஞ்சல், கோபம் ,புன்னகை, நன்றி எதற்கும் அர்த்தம் தெரியாதவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் மின்னல் வரிகளை படிகக்ச்சொல்லனும்.

    ReplyDelete
    Replies
    1. சொல்லுஙக தாயி... எனக்கும் ஹிட் லிஸ்ட் கூடும். ஹி... ஹி... ரசிச்சுப் படிச்சதுக்கு என் இதய நன்றி.

      Delete
  29. Very Nice mixture. Very odd news like approaching Rajiv Gandhi for acting in a film, oldest song in thanglish, saying thanks to whomsoever comes across in our day to day life etc. etc.,

    ReplyDelete
    Replies
    1. அத்தனை அம்சங்களையும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  30. ஷேக்ஸ்பியரின் வாசகங்களும் நன்றி பற்றிய கருத்தும் உங்களின் பதிவிற்கு படிக்க ஆரம்பிக்கும்போதே கூடுதல் அழகை சேர்த்து விட்டன!

    மனதில் உன்மையான நன்றியுணர்வு ஏற்படுமானால் நிச்சயம் அது செய்கையிலும் இருக்கும்! இல்லாதவர்களை உங்கள் எழுத்து நிச்சயம் யோசிக்க வைக்கும்!

    ஐம்பதுகளில் ' மைனர் லைஃப் ரொம்ப ஜாலி' என்று ஏ.எம்.ராஜா ' இல்லறமே நல்லறம்' என்ற படத்தில் [ ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி நடித்தது] ஆங்கிலம் கலந்து பாடியிருக்கிரார்!

    துப்பாக்கி ஹீரோவிற்கான‌ விமர்சனம் ரொம்பவும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... ஜெமினி படத்துலயும் இப்படி பாட்டு இருக்கா? புதிய தகவல் எனக்கு. மிக்ஸரின் அனைத்துப் பகுதியையும் ரசித்துக் கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் நன்றி.

      Delete
  31. ஷேக்‌ஷ்பியர் சொன்னதுல ரெண்டாவது மூணாவது பாயிண்ட் ரொம்ப பிடிச்சிருந்தது...

    எப்பவும் நன்றி என்ற வார்த்தை யாரிடம் என்ன பெற்றாலும் உடனே சொல்லிடுவேன்பா....இந்தமுறை ஊருக்கு போனப்ப பூ வாங்குறவங்க கிட்ட பழம் வாங்குறவங்க கிட்டயும் நான் தாங்க்ஸ் சொன்னப்ப அவங்க முகத்தில் கனிவான புன்னகை கண்டேன் அத்தனை பரபரப்பான சூழலிலும் நம் நன்றி என்ற வார்த்தை அவர்களுக்கு எத்தனை இதமாக இருக்கிறது என்பதையும் கண்டேன்.. அதே போல் விஷ் பண்றது மனசாத்மார்த்தமா பண்ணனும். இயந்திர கதியில் ஓடுறாங்க ஜனங்க.. மனசுல கொஞ்சம் சாந்தம் இருந்தால் கண்டிப்பா நீங்க சொல்ற இந்த வார்த்தைகள் வரும்..... முயற்சி நம்மில் இருந்து தொடங்கவேண்டும்.. யாராச்சும் செய்யட்டும்னு இருக்கக்கூடாது....

    அட.... 1938 ல ஆங்கிலம் கலந்த தமிழ் சினிமா பாடலா.. ஆச்சர்யத் தகவல் இதுப்பா... எம் கே ராதா அட்டகாசமான ஹீரோ ஆச்சே....

    அவ்ளவு ராசிக்கார டாக்டரா?

    மெகமூத் அட்டகாசமான அழகான நகைச்சுவை நடிகர்... ஆனால் குணச்சித்திரமாகவும் நடித்து கைத்தட்டல் பெற்றார்.. ஒரு அனாதைக்குழந்தை ஊனமுற்றக்குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கும் ரிக்‌ஷாக்காரராக.... என்னது மெகமூத் முதல்ல கேட்டது நம்ம ராஜீவ் காந்தியையா?? அழகான ஒரு ஹீரோவை நம் சினிமா உலகம் இழந்துவிட்டதே... ஆமாம் பம்பாய் டு கோவா படம் பார்த்திருக்கேன் ஹிந்தில பச்சன் நடிச்சது.... மெகமூத் புகழ்ப்பெற்ற அளவுக்கு அவர் மகன் பெறவில்லை... ராஜீவ் காந்தி நோ சொன்னதால் நமக்கு ரஜினி போல ஹிந்தி பட உலகுக்கு சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கிடைத்தார். ஆமாம் ராஜீவ் காந்தியின் தோழன் தான் அமிதாப் பச்சன்...

    துப்பாக்கி படம் பற்றி எனக்கு ஐடியாவே இல்லப்பா.... அதனால தெரியலையே..

    மிக்சர் மொறுமொறுன்னு நல்லாவே இருந்திச்சுப்பா கச்சேரி களைக்கட்டுவது போல...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கணேஷா அரியத்தொகுப்பின் பகிர்வுக்கு.

    ReplyDelete
  32. மிக்ஸர் சுவையோ சுவை. ஷேக்ஸ்பியரின் பொன் மொழிகள் அருமை.

    ReplyDelete
  33. நன்றி சொல்ல நமக்கும் நேரமில்லை என்பதை விட அதை வாங்கிக் கொள்ள அவர்களுக்கும் நேரம் இல்லை...
    நன்றி சொல்லி பல்பு வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு வாத்தியாரே :-)

    தங்கள் மீது துப்பாக்கி வழக்கு தொடுக்கப் போகிறது :-) பார்த்து பத்திரமாக இருக்கவும்


    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube