Saturday, October 6, 2012

மொறு மொறு மிக்ஸர்-13

Posted by பால கணேஷ் Saturday, October 06, 2012

பேரன்புடையீர், உங்களனைவருக்கும் இம்முறை யான் வெற்றியின் ரகசியம் யாதென விண்டுரைத்திட விழைகின்றேன்... அடச்சே... சரிதாவை வெறுப்பேத்தறேன்னு சுத்தத் தமிழ் பேசி அதுவே பழக்கமாயிடும் போலருக்கே... ‌சரி, விடுங்க... முதல்ல கொஞ்சம் தத்துவங்கள், அப்புறம் கொஞ்சம் சிரிக்கலாம்... பின்னால வெற்றியின் ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலாம், சரியா...?

===============================================

                                        மும்மத மொழிகள்

துடுப்புப் போடாமலேயே படகில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமா? பாடுபட்டு உழைக்காமலே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற முடியுமா? சிலருக்குத்தான் அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கிறது. பலர் தங்கட்குக் கிடைக்கும் வேலையை விரும்புகிறார்கள். வேலை செய்து முடித்த பிறகு தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில் விழுவதற்கு முன்னால் அவரின் கூலியைக் கொடுத்திடு. -நபிகள் நாயகம்

ல்ல மரமானது கெட்ட கனியைத் தராது. அதேபோல கெட்ட மரம் நல்ல கனியைத் தருவதில்லை. யாரும் முள் செடிகளில் அத்திப் பழங்களைப் பறிக்க எண்ணுவதில்லை. அதேபோல நெருஞ்சி முள் செடியில் திராட்சைப் பழங்களைப் பறிக்கவும் முடியாது. நல்ல பெற்றோரிடமிருந்து நல்ல பிள்ளைகளே பிறப்பார்கள். இதனால் உலகம் நல்ல வழியில் முன்னேறும். வெளியில் வராத மறைபொருள் எதுவுமில்லை. மற்றவர்கள் அறியப்படாத ரகசியமும் இல்லை. நீங்கள் யாரும் அறியாமல் இருளில் பேசுவதாக நினைப்பது வெளிச்சத்தில் மற்றவரால் கேட்கப்படும். ஏனெனில் எல்லா இடத்திலும் ஆண்டவன் இருக்கிறார். -இயேசு கிறிஸ்து.

‘‘கடவுளைத் தாங்கள் கண்டிருக்கிறீர்களா? எனக்குக் காட்ட முடியுமா?’’ என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் தன்னையே ஒருவன் எதிரே வைத்துப் பார்க்க வேண்டும். ‘உண்மையான நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டு தன்னையே காண முயல வேண்டும். அதற்கு வேண்டிய மனப்பக்குவம் அவனுக்குக் கிடைத்து விட்டால் தனக்கும் மூலமாக உள்ள கடவுளைக் காண முடியும். ‘நான்’ என்கிற அகந்தை தான் நமக்கும் கடவுளுக்கும் இடையே இருக்கிறது. அது மறைந்து விட்டால் அங்கே எஞ்சியுள்ள நிஜ ஸ்வரூபமே கடவுள். -ஸ்ரீ ரமண மகரிஷி

===============================================

நாட்ல ரெண்டு மூணு பொண்டாட்டியக் கட்டினவன்லாம் ஜாலியா இருக்கான். ஒரே ஒரு சரிதாவக் கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே. அய்யூய்யய்யய்யோ.... !  அப்படி என்ன பண்ணியிருப்பான்னு தானே யோசிக்கறீங்க? சொல்றேன்...

போன வாரத்துல ஒரு நாள் அவகிட்ட, ‘‘சரி, ஜபல்பூர்ருந்து வந்திருக்கற என் ஃப்ரெண்டோ ஃபாமிலியை ஞாயித்துக்கிழமை லன்ச்சுக்கு வரச் சொல்லியிருக்கேன்னு சொன்னேன்ல... என்ன பண்ணப் போற நீ? நான் என்ன பண்ணனும்?’’ அப்படின்னு கேட்டேன். ‘‘நீங்க ஒண்ணும் பண்ணாம இருந்தாலே போதும்.. நான் பாத்துக்கறேன். இதோபாருங்க... மெனுவே ப்ளான் பண்ணிட்டேன்’’ன்னு சொல்லி ஒரு சீட்டுல எழுதி வெச்சிருந்‌ததைக் கொடுத்தாள்.

படிச்சதும் எனக்குத் தலை சுத்திடுச்சு. ‌என்னத்தை எழுதியிருக்கா இவள்னு புரிஞ்சுக்கவே ரொம்ப நேரம் ஆச்சுது. உங்களுக்குப் புரியுதான்னு பாருங்க மக்கா...!

சரிதாவின் மெனு : 1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.

===============================================

செல்லப்பா : உனக்கு ஒண்ணும் தெரியாதுடா, இது சாதாரணக் காதல் இல்லை, தெய்வீகக் காதல்!

கோபி : மண்ணாங்கட்டி! மூணு மணி நேரம் ட்ராமா பாத்திருக்கே காய்கறிக்காரியா அவ நடிச்சா. Just 3 Hours! அதுக்குள்ள காதலா? ‌ஏதோ நல்லவேளை Social Drama போட்டோம். 3 மணில முடிஞ்சது. சம்பூர்ண ராமாயணம் போட்டிருந்தா நீ கல்யாணத்தையே முடிச்சிருப்பே போலருக்கே....

செல் : கண்டிப்பா.... அவ சீதையா நடிச்சிருப்பா!

கோபி : அப்போ உனக்கு No chance!

செல் : ஏண்டா?

கோபி : சீதைக்கும் அனுமாருக்கும் கல்யாணம் நடக்குமா? கொஞ்ச நேரம் பார்த்ததுமே லவ்? நான்சென்ஸ்!

செல் : காதல்ங்கறது ஒரு Govt. Busடா. கிடைக்கிற வரை கிடைக்காதா, கிடைக்காதான்னு காத்துக்கிட்டு இருப்போம். காதலிக்கும் அந்த மாதிரிதான் ஏங்கணும். பஸ் கிடைச்ச ஏறி உட்கார்ந்துட்டா எப்படா நம்ம இடத்துக்குப் போய்ச் சேருவோம்னு ஆயிடும். காதலி கிடைச்ச உடனே எப்பத்தான் கல்யாணம் பண்ணிப்போம்னு தவிப்போம். பஸ்ஸில் நம்ம இடத்துக்குப் போய்ச் சேர்ந்த உடனேயே, ‘சே! இதைவிட நடந்து வந்திருக்கலாமேன்னு தோணும். கல்யாணம் ஆனவுடனே, ‘சே! இதைவிட பிரம்மச்சாரியாவே இருந்திருக்கலாமேன்னு தோணும். Terminusக்கு போய்ச் சேர்ற பஸ்ஸை விட Break down ஆகற பஸ்தான் அதிகம். கல்யாணத்துல முடியற காதலைவிடப் பாதியில Break ஆயிடற காதல்தான் அதிகம்.

                   -‘மனம் ஒரு குரங்கு’ என்கிற ‘சோ’ எழுதிய நாடகத்திலிருந்து...

===============================================

ன் நண்பர் ஒருவர் மின் மடலில் இரண்டு நண்பர்களின் கதை என்று சொல்லி இதை அனுப்பியிருந்தார். படிச்சதும் எனக்கு என்னாவும்னு அவருககு நல்லாத் தெரிஞ்சதால, அவரே கீழ தீர்வும் கொடுத்திருக்கார் பாருங்க...

2 friends named Mr. See & Mr. Saw did not see sea. 1 day Mr.See saw sea mr. Saw didnt see sea. see saw sea jumped in sea. see saw in sea saw saw see in sea. see saw both saw sea & both saw & see were happy to see sea.

I hope you have head ache now? cool down, no tension. Forward this to others and get relaxed, that is the remedy.

===============================================

லுவலத்திலிருந்து வீடு திரும்பிய கணவன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டதும் ஆத்திரமாகச் சொன்னான்: ‘‘வரட்டும் அவள்...! இன்றைக்கு இரண்டில் ஒன்று கேட்டு விட வேண்டியதுதான்!’’ மனைவி ஷாப்பிங் செய்து, கை நிறைய பைகளுடன் சற்று நேரத்தில் வந்தாள். கண்டதும் கேட்டான்: ‘‘இரண்டு சாவிகளில் ஒன்றையாவது என்னிடம் கொடுத்து வைத்திருக்கக் கூடாதா நீ?’’ என்று. ஹி... ஹி... ஹி...

‘‘உங்களிடம் உள்ளதெல்லாம் ஒருநாள் கொடுத்துத் தீர வேண்டுவனவே!’’ அப்படின்னு ஒரு பழமொழியை கலீல் கிப்ரான்-ங்கற மேதை சொல்லியிருக்காருங்க. அவர் வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தப்பா இந்த தத்துவம் அவர் மண்டையில உதிச்சிருக்குமோ? டவுட்டு! ஹி... ஹி... ஹி...

===============================================

ரைட்டு... அடுத்த பதிவுல சந்திக்கலாமா.... என்ன கேக்கறீங்க...? ஆங், மறந்துட்டேன். வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுச் சொல்லலாம்னு வெற்றியோட வீட்டுக்குப் போனா ‘‘அவன் ஊருக்குப் போயிருக்கான்பா, வர்றதுக்கு நாலு நாளாகும்’’னு அவங்கம்மா சொல்றாங்க. நான் என்னங்க பண்ணட்டும்? ஹி.... ஹி....

52 comments:

  1. மும்மத மொழிகளும் அருமை. எடுத்துப் போட்டுள்ள ஜோக் சூப்பர்! மொத்தத்தில் சுவையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் மொத்தச் சுவையையும் ரசித்து ருசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. // 2 friends named Mr. See & Mr. Saw did not see sea. 1 day Mr.See saw sea mr. Saw didnt see sea. see saw sea jumped in sea. see saw in sea saw saw see in sea. see saw both saw sea & both saw & see were happy to see sea.//

    யோவ் ! ஸீ....யா ...? ஸா வா.... என்னய்யா பேரு ?
    உங்களுக்கு எல்லாம் ஸீ யிலே தான் யா ஸாவு.

    உங்கள ஸீ ய எங்க ஊட்டுக்காரரு
    ஸீக்குப்போனவரை யாருனாச்சும் ஸா ?

    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... மீனாட்சிப் பாட்டி நல்லாக் கேட்டாங்க கேள்வி. ஆனா இதுக்கு நான் பொறுப்பில்லப்பா... எஸ்கேப். கருத்திட்டு என்னை மகிழ்ச்சிக்காளாக்கிய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ஐயா.

      Delete
  3. தத்துவப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் . சரிதாவின் மெனு என்னனு தெரிந்ததா ? நாங்க வெற்றியின் ரகசியம் கேட்கவேயில்லங்க ஏன் ஏன் இப்படி ?

    ReplyDelete
    Replies
    1. சரிதாவின் மெனு எனக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு. உங்களுக்குப் புரிஞ்சதா தென்றல்? வெற்றியின் ரகசியம்... திடீர்னு வந்த ‘கொலவெறி’ தான், ஹி... ஹி...

      Delete
  4. மும்மத மொழிகள் மிக நன்று.

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்த முத்திரை வரிகளை நீங்களும் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  5. வழக்கம்போல் ‘மொறு மொறு மிக்ஸர்’ சூப்பர்.
    ஏன் திருமதி சரிதா அவர்கள் பச்சரி சாதத்தை மட்டும் அப்படியே எழுதிவிட்டார்கள். Greenrice சாதம் என எழுதியிருக்கலாமே!
    இரண்டு நண்பர்களின் கதையைப் படித்தக்டும் வரும் தலைவலி தீர உங்கள் நண்பர் சொன்ன அந்த ஆலோசனையை நானும் கடைப்பிடித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சரிதாக்கு இப்படி ஐடியா கொடுக்கல்லாம் ஆள் இருக்கா... அவ்வ்வ்வ்! ஆலோசனையை கடைப்பிடித்து தலைவலியிலிருந்து தப்பித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  7. டேஸ்ட்டா இருந்ததால் மிக்சர் நிறைய சாப்பிட்டுட்டேன். இருங்க முதல்ல தண்ணி குடிச்சிட்டு வந்திடறேன்!

    ReplyDelete
    Replies
    1. அந்த அளவுக்கு மிக்ஸரை ரசித்து ருசித்த உங்களுக்கு என் உளம் கநின்த நன்றி துரை.

      Delete
  8. இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.


    இதுல ஐஸ் க்ரீம் முட்டைகோஸ் பொறியல் ராய்தா முருங்கைக்காய் சாம்பார் போளி புரிஞ்சுது 1ம் 8ம் என்ன கணேஷ்? மொறுமொறு வழக்கம்போல அருமை.

    ReplyDelete
    Replies
    1. 1 & 8, புலாவ், & பீடா... - கணேஷ் சார் சரிதா மேடம் கிட்ட கேட்டு சரியானு சொல்லுங்க..

      Delete
    2. ரொம்பச் சரிம்மா சமீரா. மிக்ஸரின் சுவையை ரசித்த ஷைலஜாக்காவுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  9. நல்ல ஜோக்ஸ்...

    மும்மத மொழிகள் அருமை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மும்மத மொழிகளையும் நகைச்சுவையையும் ரசித்த பின்னூட்டப் புயலுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. மிக்ஸர் நல்ல சுவை அண்ணே.

    அந்த சமையல் மெனுதான் புரியலை.

    ReplyDelete
    Replies
    1. சமையல் மெனுவை சமீரா கரெக்டா புட்டுப்புட்டு வெச்சுட்டாங்க, பாருங்க தம்பி. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. மும்மதமும் சொன்ன மொழிகள் , ஜோக்ஸ் என்று கலந்து தந்த மிக்சர் படிக்க சுவாரசியம் தந்தது

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யத்துடன் படித்த சரவணனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. நான் கண்டு பிடிச்சிட்டேன்.. புலாவ், போளி, முருங்கை சாம்பார், முட்டைகோஸ் போரியல், ஐஸ்கிரீம், பீடா... எப்புடி??
    மொறு மொறு மிக்ஸ்சர் - ரொம்ப டேஸ்ட்...
    அடுத்தமுறை வெற்றிய பிடிச்சி, ரகசியத கேட்டு கண்டிப்பா சொல்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. நூற்றுக்கு நூறு மதிப்பெண் உனக்கு- சரியாக் கண்டுபிடிச்சதுக்கு, மிக்ஸரின் டேஸ்ட்டை ரசித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  13. மும்மத மொழிகள் அருமையோ அருமை.

    //சரிதாவின் மெனு : 1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.
    // இதற்கு பதில் போடும் பொழுது இதற்கான விளக்கத்தையும் தந்தாகணும்.:)

    மொத்தத்தில் மொறு மொறு மிகசர் கமகம..

    ReplyDelete
    Replies
    1. மேலே சமீரா மிகச் சரியா சொல்லியிருக்காங்க பாரும்மா ஸாதிகா. மிக்ஸரை ரசிச்சுச் சுவைச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  14. எல்லா மதங்களும் நல்ல கருத்துக்களைத் தான் போதிக்கின்றன என்பதற்கு அழகான உதாரணங்கள். மக்கள் நாம்தான் அவற்றை உணர்ந்து நமக்குள் பேதங்கள் மறந்து ஒற்றுமையாய் வாழவேண்டும். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.

    என்ன இருந்தாலும் சரிதாவின் சாமர்த்தியம் வேறு யாருக்கும் வராது. பாருங்க, உங்களிடம் நேரடியாய் சொன்னால் சஸ்பென்ஸ் உடைந்திடும் என்று குறிப்பெழுத்தில் எழுதி வச்சிருக்காங்க.

    பகிர்ந்த அனைத்தும் ரசிக்கவைத்தன. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. மும்மதக் கருத்துக்களை ரசித்த, சரிதாவைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம நிறை நன்றி கீதா.

      Delete
  15. மிக்சர் கலப்பதில் எக்ஸ்பர்ட் ஆயிடிங்க சுவையோ சுவை

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  16. சூப்பர் மெனு!ஒருநாள் நானும் வரேன் சாப்பாட்டுக்கு;இன்னொரு ஐட்டமா மொறு மொறு மிக்சர் சேர்த்துக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வாங்கோ குட்டன். மொறு மொறு மிக்ஸரோட சுவையான விருந்தும் கிடைக்கும். படித்து ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  17. மிக்சரின் அனைத்தும் பகுதிகளுமே ரொம்ப அருமையா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் சுவைத்து ரசித்த தோழிக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  18. //1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa.//

    இதெல்லாம் பண்ணுறதுக்கு முன்னாலே வைச்ச பெயரா? பண்ணினதுக்கப்புறம் அதைச் சாப்பிட்டுப்புட்டு மலங்க மலங்க விழிச்சபோது வைச்ச பெயரா? :-)

    மிக்சர் பிரமாதம் கணேஷ்! :-)

    ReplyDelete
    Replies
    1. முன்னாலேய அவ தீர்க்கதரிசனமா வெச்ச பேர்தான் அண்ணா. ரசித்துச் சுவைத்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  19. Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. காதல்ங்கறது ஒரு Govt. Busடா. கிடைக்கிற வரை கிடைக்காதா, கிடைக்காதான்னு காத்துக்கிட்டு இருப்போம். காதலிக்கும் அந்த மாதிரிதான் ஏங்கணும். பஸ் கிடைச்ச ஏறி உட்கார்ந்துட்டா எப்படா நம்ம இடத்துக்குப் போய்ச் சேருவோம்னு ஆயிடும். காதலி கிடைச்ச உடனே எப்பத்தான் கல்யாணம் பண்ணிப்போம்னு தவிப்போம். பஸ்ஸில் நம்ம இடத்துக்குப் போய்ச் சேர்ந்த உடனேயே, ‘சே! இதைவிட நடந்து வந்திருக்கலாமேன்னு தோணும். கல்யாணம் ஆனவுடனே, ‘சே! இதைவிட பிரம்மச்சாரியாவே இருந்திருக்கலாமேன்னு தோணும். Terminusக்கு போய்ச் சேர்ற பஸ்ஸை விட Break down ஆகற பஸ்தான் அதிகம். கல்யாணத்துல முடியற காதலைவிடப் பாதியில Break ஆயிடற காதல்தான் அதிகம்.

    அது ஏன் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி மட்டும் இந்த அறிவுரை யாருக்கும் புரிய மாட்டங்குது...

    ReplyDelete
    Replies
    1. ஹா்... ஹா... அதான் உலகத்துல வேடிக்கை ராஜா. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  21. மொறு மொறு மிக்ஸர்’ சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. மி்க்சரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. மிக்சர் நன்கு சுவைக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. மி்க்சரின் சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  23. சரிதாவின் மெனு போன்ற மிகக்கடினமான புதிர் போடும் உங்களைப்போற்றுவதா அல்லது அதை நொடியில் தீர்க்கும் சகோதரிகளின் 120+ IQ வைப் புகழ்வதா என்றே தெரியவில்லை.
    மற்றபடி உங்கள் arupputha நகைச்சுவை எப்பொழுதுமே 'கொல்' என சிரிக்கவைக்கும்.இம்முறையும் ஏமாற்றவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எல்லாரிடமும் நாம் 120 ஐக்யூ எதிர்பார்க்க முடியாதில்லயா கண்பத்... எளிமையான சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் சமயங்கள்ல தேவைதானே... என் Humour Sense-ஐப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  24. அப்பப்பா,,, மொரு மொருனு இருந்துச்சுங்க,,, இன்னொரு பிளேட் வேணும்,,,

    ReplyDelete
  25. Mixture is really nice to enjoy and good time pass. It eases the tension for a momemt. Nice post. Please give such mixture with more cashewnut and groundnuts in it.

    ReplyDelete
  26. மும்மத மொழிகளுடன் இயல்பான நடையிலே கலகலப்பூட்டும் பதிவினை தந்திருக்கின்றீர்கள் சகோ.! மகிழ்ச்சி

    1) இழுAV, 2) ராய்Give, 3) Goளி, 4) பச்சரிசி சாதம், 5) முருங்Hand சாம்பார், 6) Eggபோகுது பொறியல், 7) கண்கள் Cream, 8) ஈDa

    1) புலாவ்
    2) தெரியவில்லை
    3) போளி
    4) பச்சரிசி சாதம்
    5) முருங்கை சாம்பார்
    6) முட்டைகோஸ் பொறியல்
    7) ஐஸ்கிரீம்
    8) பீடா

    இதில் 2வது என்ன பொருள் சகோ?

    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  27. மிக்சரின் ஒவ்வொரு பகுதியும் படித்து ரசித்தேன்... அடிச்சு விளையாடிட்டீங்க கணேஷ்.

    ReplyDelete
  28. மும்மத மொழிகளை ரசித்தேன் அன்பரே

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube