Friday, September 21, 2012


சில பேர் கிட்ட வருஷக்கணக்கா பழகினாலும் நெருக்கமா உணர முடியாது. சில பேர் கிட்ட ஒரு மணி நேரம் பழகினாலும் பல வருஷம் பழகினவங்க போல உணர்வோம். அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவங்கதான் துளசி டீச்சரும் கோபால் சாரும். நியுசியிலருந்து அவங்க வந்திருக்கறது தெரிஞ்சதும் தி.நகர்ல அவங்க தங்கியிருந்த இடத்துக்குப் போய் சந்திச்சப்ப என்கிட்ட புதிய அறிமுகங்கள்ங்கற எண்ணமே வரல்லை. நேத்திக்கு நடந்த அவங்களோட சஷ்டியப்த பூர்‌த்தியிலயும், மாலையில் நடந்த பிறந்ததின விழா சந்திப்பிலும் முழுமையா கலந்துக்கறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு.

காலையில மைலாப்பூர்ல இருக்கற ராகசுதா ஹால்ல ஹோமம் வளர்த்து சம்பிரதாயப்படி 60ம் கல்யாண வைபவம் நடந்துச்சுங்க. வல்லிம்மா புன்னகை முகமா என்னை வரவேற்றாங்க. நண்பர் உண்மைத் தமிழன் வந்திருந்தார். அவரோட பேசிக்கிட்டே மேடையில நடக்கற விசேஷங்களை கவனிச்சுட்டிருந்தேன். கொஞ்சநேரத்துல பாரதி மணி ஐயா வரவும், உண்மைத் தமிழன் அவரோட பேசப் போயிட்டார். நான் சும்மா ஹாலைச் சுத்தி வந்தப்ப, ஒரு பெரியவர் என்னை நிறுத்தி, நான் நான்தானா என்று விசாரித்தார். (நீங்கதானே பாலகணேஷ் என்று). ‘‘என் பேரு சுப்புரத்தினம்’’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘சுப்புத்தாத்தா’ என்று அன்பாக நாங்கள் அழைக்கும் அவரை பதிவர் திருவிழாவி்ன்போது சந்தித்திருந்தேன். ஆனாலும் அதிகம் பேச முடிந்ததில்லை. அந்தக் குறை நேற்று நீங்கியது. சுப்புத்தாத்தா எனக்கு ஆசி வழங்கி, நான் எழுதறதை ரசிச்சதா சொன்னது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியங்கள்ல ஒண்ணுன்னுதான் நினைக்கறேன்.

கொஞ்ச நேரத்துல ஷைலஜாக்கா வந்தாங்க. பெங்களூர்ல இருந்து இந்த விழாவுக்காக சென்னை வந்து ரெண்டு நாளாச்சுன்னு சொன்னாங்க. அக்காட்ட பேசிட்டிருந்தா, நேரம் போறதே தெரியாது இந்தத் தம்பிக்கு. ஷைலஜாக்கா, கவிதாயினி மதுமிதாவை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சாங்க. அவங்களைப் பத்தி நிறைய சந்தர்ப்பங்கள்ல கேள்விப்பட்டிருந்த எனக்கு சந்திச்சுப் பேசினதுல ரொம்ப சந்தோஷம். அதுலயும் அவங்க ரொம்பவே சிம்பிளா, அன்பா, கனிவா உரையாடினது மேலும் குஷிதான் போங்க.

மணமக்கள் மாங்கல்ய தாரணம் முடிஞ்சு மூத்தவங்க கிட்ட ஆசி வாங்கியும், இளைஞர்களை ஆசிர்வதிச்சுக்கிட்டிருந்தபோது ஷைலஜாக்கா, வல்லிம்மா, மதுமிதா எல்லாருமாச் சேர்ந்து ‘நாளாம் நாளாம் திருநாளாம், துளசிக்கும் கோபாலுக்கும் மணநாளாம்’ன்னு காதலிக்க நேரமில்லை படப் பாட்டின் மெட்டிலேயே வரிகளை எழுதிப் பாடினாங்க. ஒருமித்த குரல்ல பாடின அந்தப் பாட்டுல அவ்வளவு இனிமை! எல்லாரும் கை தட்டி ரசிச்சோம். அருமையான மதிய விருந்தை ஒரு கை பார்த்துட்டு ‘மாலையில் சந்திக்கலாம்’னுட்டுப் பிரிஞ்சோம்.

வ்னிங் 7 மணிக்கு உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல ‘கெட்-டு-கெதர்’க்காக நான் 6.50க்குப் போயிட்டேன். பர்த்டே பேபியான கோபால் சார் ட்ரிம்மா ட்ரஸ் பண்ணிக்கிட்டு எல்லாரையும் வெல்கம் பண்ணிட்டிருந்தாங்க. காலையில மணமகளா மேடையில இருந்ததால துளசி டீச்சர் கைல எடுக்க இயலாம இருந்த ஆயுதத்தை (கேமிரா) இப்ப கைல எடுத்திருந்தாங்க. என்னையும் சுட்டுத் தள்ளினாங்க. கிரிக்கெட் வர்ணனைகள்ல புகழ்பெற்ற அப்துல் ஜப்பார் அவர்கள் வந்திருந்தாங்க. ரெண்டு வார்த்தை பேசிட்டிருந்தப்ப வலைச்சரம் சீனா அவர்கள் வந்திருக்கறதைப் பார்த்துட்டு அவரோட உரையாடிட்டிருந்தேன். அப்ப, தலைநகரிலிருந்து வந்திருக்கற என் நண்பர் வெங்கட் நாகராஜ் என்ட்ரி கொடுத்தார். அவரோட கொஞ்ச நேரம் பேசிட்டு சந்தோஷமா பொழுது போயிட்டிருந்த நேரத்துல வரிசையா நண்பர்கள் எல்லாரும் வர ஆரம்பிச்சாங்க.

மோகன்குமார், தங்கை ஸாதிகா, உண்மைத்தமிழன், லதானந்த், கேபிள் சங்கர், பலாபட்டறை சங்கர், புதுகை அப்துல்லா, ஜோதிஜி, கேஆர்பி செந்தில், வலைச்சரம் சீனா ஐயா, வெங்கட் நாகராஜ், யுவகிருஷ்ணா, அதிஷா, ஷைலஜாக்கா, மதுமிதா, இன்னும முன்பு நிறையப் பதிவுகள் எழுதிட்டு இப்ப அதிகம் எழுதாத சில பதிவர்கள்ன்னு கிட்டத்தட்ட மினி பதிவர் திருவிழா மாதிரி ஒரு ஃபீலிங் வந்துட்டுது. எல்லாரோடயும் ஜாலியா பேசிட்டு இருந்ததுல (எனக்கு ஜாலி; அவங்களுக்கு?) நேரம் போனதே தெரியலை. அப்புறம்... கோபால் ஸார் வெட்டினாரு - கேக்கை; ஊட்டினாரு- துளசி டீச்சருக்கு. எல்லாரும் பாட்டுப் பாடி (பயமுறுத்தி?) வாழ்த்துச் சொன்னோம். ஷைலஜாக்கா அருமையான கவிதை ஒண்ணை எழுதிட்டு வந்திருந்தாங்க. அதை மேடையில படிச்சு, அத்தனை பேரின் கைதட்டலையும் அள்ளிக்கிட்டாங்க.

யுவகிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார் மோகன்குமார். முன்னால மார்னிங் ஃபங்ஷன் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தப்ப மோகன் போன் பண்ணி, ‘‘ஃபங்ஷனுக்கு யுவகிருஷ்ணா வந்திருந்ததா +ல எழுதியிருக்காரே. பாத்துப் பேசினீங்களா?’’ன்னு கேட்டார். ‘‘அடடா... நான் கவனிக்கலையே மோகன்...’’ன்னு வருத்தமா சொன்னேன். மாலையில பார்ட்டில மோகன் அறிமுகப்படுத்தினதும்தான் தெரிஞ்சது- காலையிலயே அவரை கவனிச்சிருந்தும் யார்னு தெரியாததால ஹலோ சொல்லாம இருந்திட்டேன்னு. அவர்கிட்ட ஒரு ஸாரி சொல்லிட்டு, அப்புறம் நல்லாவே பேசினது ரொம்பத் திருப்தி எனக்கு.

அப்புறம் என்ன... பஃபே விருந்துதான். கைல ப்ளேட்டைத் தூக்கிட்டு உணவு வகைகளைக் கொறிக்கும் இந்தரக பஃபே பார்ட்டிகள் எனக்கு அலர்ஜியா இருந்தாலும், சமீபகாலங்கள்ல அதிகமா அட்டெண்ட் பண்றதால சமாளிக்கப் பழகிடுச்சு. கைல தட்டு ஏந்திக்கிட்டு டிபன் வகைகளை கொறிச்சுட்டிருந்தப்ப, எழுத்தாளர் ஷங்கரநாராயணன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஃபங்ஷன் ஹாலில் பார்த்தும் யாரென்று அறியாதிருந்த எனக்கு ஆச்சரியம். அவருக்கு சங்கர் நாராயணனை (கேபிள் சங்கர்) அறிமுகம் செய்து வைத்தேன். கேபிளுக்கு அவரை ஏற்கனவே தெரிந்திருந்தது. முன் சந்தித்த சந்தர்ப்பங்களை சொல்லி ஞாபகப்படுத்தினார். உணவு முடித்து வந்ததும் அப்துல் ஜப்பார் அவர்கள் தன் கிரிக்கெட் வர்ணனையாளர் வாழ்விலிருந்து சில சுவாரஸ்ய சம்பவங்களைப் பகிர்ந்து கலகலப்பாக்கினார். (அஸ்குபுஸ்கு! இங்க சொல்லிடுவனா... தனிப் பதிவால்ல எழுதியாகணும் அதையெல்லாம்!)

காலையிலயும், மாலையிலயும் முழுமையா இருந்து விழா நிகழ்வுகளை ரசிச்சு, கோபால்-துளசி தம்பதிகள்ட்ட ஆசி வாங்கி, நிறைய நண்பர்களோட உரையாடி... இப்படி நிறைய நிறைய மகிழ்ச்சியைத் தந்த தினம் நேத்திக்கு. ஆனா ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா... காலையில உண்மைத் தமிழன் தன்னோட ஸேம்ஸங் நோட்ல படம் எடுத்தார், வல்லிம்மா அவங்க கேமரால படம் புடிச்சாங்க, நானும் என் ‌மொபைல்ல பங்ஷன் போட்டோ எடுத்தேன். 

வீட்ல வந்து ஓபன் பண்ணிப் பாத்தா... டீச்சர் முகமும், கோபால் ஸார் முகமும் தண்ணிக்கடியில இருக்கற மாதிரி கலங்கலா வந்திருக்கு. நம்ம மொபைலோட க்வாலிட்டி அந்த லட்சணம்! ஈவ்னிங் பங்ஷன்ல நண்பர் கேபிள் ஒரு சூப்பரான கேமரா வெச்சு படங்களை சுட்டாரு பாருங்க... அதுக்குப் பேரு 7D கேமராவாம். அப்படி ஒரு க்ளாரிட்டி! ‌எனக்கு காதுகள்ல புகை வராத குறைதான்! மக்கா, சீக்கிரம் நாமளும் எப்படியாவது ஒரு கேமரா வாங்கி அழகழகா(!) படங்களை சுட்டுத் தள்ளிரணும்டான்னு முடிவே பண்ணிட்டேன். அதனாலதான் படங்கள் இணைக்காம இந்தப் பதிவு... ஹி... ஹி... ஹி...

69 comments:


  1. என்னவிட்டுடு எல்லாரும் நல்ல என்ஜாய் பன்னிருகீங்க... படிக்கவே சுவாரசியமா இருந்துச்சு சார்... நானே நேர்ல கலந்துகிட்ட மாதிரி இருந்துச்சு... என்னால கலந்துக்க முடியலஈன்னு ஒரு சின்ன வருத்தம் அவ்ளோ தான்....

    எங்கிருந்தாலும் வாழகன்னு அவங்க ரெண்டு பெரும் என்ன வாழ்த்தினா அதுவே போது #ஹி ஹி ஹி


    //மக்கா, சீக்கிரம் நாமளும் எப்படியாவது ஒரு கேமரா வாங்கி அழகழகா(!) படங்களை சுட்டுத் தள்ளிரணும்டான்னு முடிவே பண்ணிட்டேன். // சேம் பீலிங் வாத்தியாரே... சீக்கிரம் வாங்குறோம் எல்லாரையும் சுட்டுத் தள்ளுறோம்

    ReplyDelete
    Replies
    1. அவங்களோட ஆசிகள் உங்களுக்கும் உண்டு சீனு. சீக்கிரம் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே (கேமிராவில்) சுட்டுத் தள்ளிரலாம். உடன் வநது கருத்திட்ட உனக்கு உளம் கனிந்த நன்றி.

      Delete
  2. ஜபார் சார் கிட்டே தனி பேட்டி எடுத்து போடணும் என அவர் போன் நம்பர் வாங்கிட்டு வந்தேன். நீங்க அங்கேயே வச்சி பேட்டி முடிச்சுட்டீங்களா? கிர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. நீங்க பேட்டி எடுக்கலாம் மோகன். நான் மிக்ஸருக்குத் தூவுற அளவுககு முந்திரிப் பருப்புகளைத்தான் அவர்ட்ட இருந்து எடுத்துட்டு வந்திருக்கேன். ஹி... ஹி.... மிக்க நன்றி நண்பரே.

      Delete
  3. Even though there is no visuals in your post, the commentary itself took us to the function dais for a moment. May be the effect of presence of Mr.Abdul Jabbar in the function. Very nice to read the article. The first two lines I enjoyed a lot because it happes to us also whenever we travel by train from here to chennai. Though they are known as train friends, by the time we reach chennai, we became very thick friends. This cannot be explained in words and it needs to be experienced to know its true value.

    ReplyDelete
    Replies
    1. படங்கள் இல்லாத குறையே தெரியலைன்னு நீங்க சொல்றது ஜில்னு நேத்து சாப்பிட்ட ஐஸ்க்ரீம் மாத்தி இருக்குது. நட்பு பத்தின என் கருத்தோட உங்க அனுபவமும் ஒத்துப் போறது டபுள் ட்ரீட் எனக்கு. மிக்க நன்றி.

      Delete
  4. சீனு என்னையும் விட்டுட்டு போய்டாங்க எல்லாரும் சரி சரி விடுங்க பார்த்துக்கலாம் . கேமரா எடுத்துட்டு போய் குடுத்தாலும் உங்க வாத்தியாரு படம் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு பா.

    ReplyDelete
    Replies
    1. ஆமா சசி... கேமராவை கைல ஹேண்டில் பண்ண எனக்கு பயம். சரியாப் படம் எடுக்காட்டி குடுத்தவங்க ஏமாந்துடுவாங்களேன்னு. நேத்துதான் சொந்தமா வாங்கி நிறைய படம் எடுத்து பயிற்சி பண்ணனும்னு மனசுல முடிவாச்சு. மிக்க நன்றிம்மா,

      Delete
  5. சுகமான அனுபவங்களில் கலந்து கொண்டு எங்களையும் ரசிக்க வச்சீங்க. நன்றி

    ReplyDelete
    Replies
    1. அனுபவத்தை ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.

      Delete


  6. காலையில்
    சாலைகள் தனியாக நின்ற வேளை.
    அவ்வேளையில் ஓர் வேள்வி.
    வேதங்கள் ஒலிக்கும் காட்சி.
    நாதங்கள் நர்த்தன மாடின.
    அங்கே அப்பொழுது ,
    இக்கிழவனை
    அகமுகம் நக,
    அன்பு காட்டி, வாருங்கள் எனச்சொன்ன‌
    வல்லி நரசிம்மன் அவர்கட்கு நன்றி.

    மத்தள வாத்தியங்கள் நடுவே அமர்
    மணமக்கள் துளசி கோபாலோ எம்
    கண்கள் சந்திக்குமுன்னாலே
    எங்கள் இருக்கை நோக்கி வந்து
    பொங்கும் புன்னகையுடன்
    பூரிப்புடன் வரவேற்றார்.
    பண்புக்கோர் உவமை யாக
    பெருக்கத்து வேண்டும் பணிவு என்பதற்கோர்
    புவியில் ஒர் சான்றாக
    புன்னகை மன்னராக ( மன்னியாக )
    பாரிலே அவர்கள் மாட்சி !!
    என்றுமே நாம் மறவோம்.

    இனிய உணவு
    ஈடெல்லா பதிவன்பர் பெருந்தன்மை
    எப்பேறு பெற்றேனோ !!
    இவ்வைவியில் ஓர் அழைப்பு பெற !!

    மாலை வர இயலவில்லை.
    மன வருத்தம்தான் . வாட்டம் தான்.
    மனோரஞ்சித மதுமிதா
    மலர் கண்டேன். மாலையிலே அவர் பதிவிலே
    இருப்பினும்
    உற்ற நண்பர்
    இள வினாயகர்
    ஆம் !
    பால கணேஷ் அவர்கள்
    எனது அன்பு வாழ்த்துக்களை
    அனைவருக்கும் சொல்வதாக
    அவரே சொன்ன வாக்கு
    இனித்தது.

    அன்புடன்
    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. கவிதை நடையில் நிகழ்வை ரசித்ததை எழுதி என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா.

      Delete
  7. It was good to see all bloggers at a place.. excited :)

    Thanks to Tulasi madam, for giving us a oppurtunity to photograph the event and Special thanks to Umanath annae (vizhiyan) for introducing her.

    Regards,
    Jagadeesh. S
    Team Jasan Pictures
    www.jasanpictures.com

    Follow us on Facebook: https://facebook.com/jasan.pictures
    Follow us on twitter: https://twitter.com/jasanpictures
    Follow My Blog: https://jaggy.me
    www.jasanpictures.com

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுககு என் மனமார்ந்த நன்றிங்க.

      Delete
  8. அருமையா ஒரு பிறந்தநாள் விழாவை வர்ணனை செஞ்சிடீங்க.. துளசி டீச்சர் - னு நீங்க இவ்ளோ அன்பா பதிவுகள் போடறதை பார்த்து அவங்கள பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆவல் வருது.. உண்மையில் அவங்களை இதற்கு முன்னாடி கேள்வி பட்டதில்ல...

    படம் இல்லைனாலும் உங்க பதிவுகள் படிக்கும் போது மனகண்ணில் வண்ண வண்ண படங்கள் வந்து போகின்றன.. நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. அவங்க 2003லருந்தே எழுதிட்டிருக்காங்க சமீரா. சுவாரஸ்யமான பல புத்தகங்கள் வெளியிட்டிருக்காங்க. துளசிதளம்கறது அவங்க தளத்தோட பேரு. படிச்சுப் பாரும்மா. என் பதிவை படங்களாய் கற்பனை செய்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.

      Delete
  9. சுவாரஸ்யமான பகிர்வு...

    வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. தொழிற்களம் குழுவின் வாழ்த்து இரட்டிப்பு உற்சாகம் தருகிறது. மிக்க நன்றிங்க.

      Delete
  10. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆம். யூத் பதிவர் சந்திப்பில் பார்த்திருந்தேன். நேற்று கொஞ்சம் பேச முடிந்தது. மிகமிக மகிழ்ச்சி என்னுள்ளும். மிக்க நன்றி நண்பரே.

      Delete
  11. ரசித்து எழுதி பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி...

    உங்களுக்கு எதுக்கு சார் கேமரா...? (எழுதும் எழுத்துக்கள் பல கேமிராவுக்கு சமம்...)

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்கள் பல கேமிராவுக்குச் சமம் என்று சொல்லி எல்லையற்ற தெம்பை எனக்கு வழங்கிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி தனபாலன்.

      Delete
  12. படங்களுக்கான அவசியமே இன்றி விரிவான விவரிப்பில் காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்:)! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. காட்சிகள் கண்முன் தெரிவதாகக் கூறி மகிழ்வளித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிங்க.

      Delete
  13. அன்பின் கணேஷா,

    இந்த பயணத்தில் எங்களையும் இணைத்து துளசிம்மா கோபால் சார் சஷ்டியப்த பூர்த்திக்கு ராகசுதா மண்டபத்துக்கு கூட்டிட்டு போய்.... கன ஜோரா அவங்க ஹோமம் வளர்ப்பதை பார்க்கவைத்து... வல்லிம்மாவோடு சேர்ந்து நாளாம் நாளாம் திருநாளாம் பாடலையும் ரசித்து கேட்க வைத்து நம் பதிவர்களை எல்லாம் ஒருசேர மீண்டும் சந்திக்கவைத்த அருமையான காட்சிகளை கண்முன் நிறுத்திய அசத்தலான பகிர்வு கணேஷா....

    மாலை கெட் டு கெதர்ல பஃபே முறையில் உணவருந்திவிட்டு எல்லோருடனும் சந்தோஷமாக உரையாடியதை அருமையாக அழகாக இங்கே பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் கணேஷா.....

    ReplyDelete
    Replies
    1. என் வார்த்தைகளைப் படித்தே என்னுடன் பயணித்து ரசித்த உங்களுக்கு மிகமிக அகமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  14. விழாவை முழுமையாகக் கவர் பண்ணியிருக்கீங்க.... நன்றி. படம் இல்லாத குறையே தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திடட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸ்ரீராம்.

      Delete
  15. சமீரா அவர்கள் சொன்னது போல் தான் எனக்கும் உங்கள் பதிவைப் படித்த பின் தான் அவர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.


    சென்னையில் தான் நடந்திருக்கிறது. தெரிந்திருந்தாலும் கலந்துக் கொண்டிருந்திருக்கலாமே என்ற சின்ன வருத்தம் மனதில் இருக்கிறது. அந்த நிகழ்வை அப்படியே கண் முன் காட்டி விட்டீர்கள். மொபைல் கேமராவை விட உங்கள் கண் அருமையான கேமராவாக மாறியிருப்பது உங்களின் எழுத்தில் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தைப் பாராட்டி மகிழ்வளித்த தமிழ் ராஜாவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  16. பொறாமையா இருக்கு பால கணேஷ் சார்!

    ReplyDelete
    Replies
    1. பொறாமை வேண்டாம் நண்பா... விரைவில் உங்களுக்கும் இதுபோல சந்திப்புகள் அமையும். மிக்க நன்றி.

      Delete
  17. சந்தோச அனுபவங்களை பகிர்வாய் தந்தமைக்கு நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷ அனுபவங்களை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பரே...

      Delete
  18. தொப்பி...தொப்பி.....இது துளிசி டீச்சரை போட்டோ எடுத்த ஆளுக்கு....ஹிஹிஹி !

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... அருமையாச் சொன்னீங்க... மிக்க நன்றி ஃப்ரெண்ட்.

      Delete
  19. அண்ணே..பார்டியில் சுட சுட தோசை சாப்பிட்ட மாதிரி சுடச்சுட பதிவு.அனைவரையும் பார்த்ததில் அதிலும் நீங்கள் சைலஜாஅக்காவை அறிமுகப்படுத்தி வைத்து அவர்களுடன் அளாவளாவியதில் மிகவும் மகிழ்ச்சி.//பஃபே விருந்துதான். கைல ப்ளேட்டைத் தூக்கிட்டு உணவு வகைகளைக் கொறிக்கும் இந்தரக பஃபே பார்ட்டிகள் எனக்கு அலர்ஜியா இருந்தாலும்// நீங்கள் சாப்பிடும் பொழுதே நினைத்தேன்.அமர்ந்து கொள்ள நாற்காலிகள் போட்டு இருந்து நின்று கொண்டே,நடந்து கொண்டே சாப்பிடும் பொழுது நினைத்தேன்.அண்ணனுக்கு பஃபே ரொம்ப பழக்கமாகி விட்டது என்று:)

    ReplyDelete
    Replies
    1. நின்று கொண்டே சாப்பிட்டால் ஒவ்வொன்றாக எல்லா ஐட்டத்தையும் சுவைத்து ரசிக்கலாம்ல... அதான்மா அப்டி.

      Delete
  20. க்கா, சீக்கிரம் நாமளும் எப்படியாவது ஒரு கேமரா வாங்கி அழகழகா(!) படங்களை சுட்டுத் தள்ளிரணும்டான்னு முடிவே பண்ணிட்டேன்//அண்ணே சிக்கிரமா வாங்கிடுங்க.அடுத்த பதிவர் சந்திப்பிலே கேபிள்ஜி கழுத்தில் தொங்கியது போல் அதேபோல் கேமரா உங்கள் கழுத்தில் தொங்கணும்..:)

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்து சீக்கிரம் பலிக்கும்மா. மிக்க நன்றி.

      Delete
  21. நல்ல வேளை என்னை யாருக்கும் தெரியவில்லை. :-)

    ReplyDelete
    Replies
    1. சிவஞானம் ஜி அவர்களை சந்தித்தது, எதிர்பாராரது.

      Delete
    2. ஆஹா... நேத்து உங்களை சந்திச்சு கை குலுக்கினதை பதிவுல எழுத விட்டுட்டேன். ஸாரி ஸார்... சந்திப்பை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  22. ரொம்ப அருமை கணேஷ். கண் முன்னே காட்சிகள் விரியுது. எத்தனை பேரை மிஸ் பண்ணி இருக்கேன்னு நினைக்கும்போது கும்பகோணத்துல கிடக்கோமேன்னு வருத்தமா இருக்கு. ஹ்ம்ம். சரி குட்டி பதிவர் விழா போல இருக்கு. அடுத்து சூப்பரா காமிரா வாங்கி எல்லாரையும் சுட(!) ஆசீர்வாதம் பண்றேன். என் அன்பு துளசிக்கும் கோபால் சாருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு. வளமுடன், நலமுடன்.:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சீக்கிரம் காமிரா வாங்க நீங்க ஆசி கூறினது மனசுக்கு ரொம்பவே தெம்பா இருக்குக்கா. துளசி டீச்சரையும் கோபால் சாரையும் வாழ்த்தின உங்களோட அன்புக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete

  23. மணமக்கள் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்தைச் சேர்ப்பித்து விடுகிறேன் ஐயா. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  24. ஆஹா ஒண்ணு விடாம எழுதியாச்சா?:) நாளாம் நாளாம் பாட்டு ஒரு காப்பி உங்களை எழுதச்சொல்லி நான் வேலை வாங்கினதையும் எழுதி இருக்கலாமே! நன்றி கணேஷ்!

    ReplyDelete
    Replies
    1. அக்காக்காக செய்றதெல்லாம வேலையில் சேர்த்தியா... அது மகிழ்ச்சிதானே. அதான் சொல்லலை. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றிக்கா.

      Delete
  25. விழா அருமை.
    நண்பர்களைச் சந்தித்தது மிகவும் அருமை.
    மாதப்பனைப் பலரிடமும் அறிமுகம் செய்து வைத்ததும் அவர்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது இன்னும் அருமை.
    பஃபே விருந்து அருமையோ அருமை.
    பிஸ்தா ஐஸ்கிரீம் இரண்டு சாப்பிட்டதும் அருமை

    ReplyDelete
    Replies
    1. அட. நீங்களும் ஐஸ்க்ரீம் + கேக் ரெண்டு ரவுண்டு வந்தீங்களா ஸார்? கருத்திட்டு மகிழ்வித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  26. அருமையான அனுபவங்கள்....

    ரசித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்களை ரசித்த எஸ்தருக்கு என் மனம் நிறைந்த ந்ன்றி.

      Delete
  27. படிக்கும்போதே ஆனந்தமாக இருக்கின்றது. நேரடியாக கலந்து கொண்ட உணர்வை பகிர்வு தருகின்றது.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்ததிலேயே நேரடியாகக் கலந்து கொண்ட உணர்வைப் பெற்றதாய்ச் சொல்லி மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிங்க.

      Delete
  28. டீச்சரும்,கோபால் சாருமா!

    வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  29. நல்ல அனுபவம்!
    எங்களிற்கும் ரசிக்கத் தந்ததற்கு நன்றி.
    மணமக்களுக்கு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவத்தை ரசித்து. மணமக்களை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  30. நேரில் பார்த்ததை, நேரில் நின்று விவரிப்பது போல, ரசிக்கும்படி இருந்தது பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பதிவினை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  31. நேர்ல கலந்துக்கிட்ட மாதிரி இருக்குது. படம் இல்லாட்டி என்ன?. உங்க எழுத்தே மனக்கண்ணுல படங்களா விரியுதே :-)

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்கள் கண்முன் விரிவதாகச் சொல்லி எனக்கு உற்சாகமூட்டிய தங்களின் கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி சாரல் மேடம்.

      Delete
  32. வர வர கணேஸ் அண்ணா மீது பொறாமை வருகின்றது பலரை சந்திக்கும் வரம் எப்படித்தான் கிடைக்கின்றததோ!ம்ம் நன்றி துளசி டீச்சர் மூலம் நல்ல பதிவை படித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ஏதோ கொடுப்பினை தம்பி. சந்திக்கும் வாய்ப்புகள் அமைந்து மகிழ்ச்சி தருகின்றன எனக்கு. இதைப் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  33. கணேஷ் அண்ணே, இந்த பதிவைப் படிச்சதுல, நிகழ்ச்சியை நேர்ல பார்த்த மாதிரி உணர்வு இருக்கு.... நீங்க சொல்லியிருக்கிர பல பேரை நான் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. வாய்ப்பு கிடைச்சா சந்திச்சு பேசனும் :-)))

    ReplyDelete
  34. கணேஷ் உங்களுடைய மெயில் ஐடி என்னிடம் இல்லை. இல்லாவிட்டால் உங்களுக்கும் படங்களை அனுப்பி இருப்பேன் சாரிமா.

    பொறுப்புகளைச் சரியாகக் கவனிப்பதில் காமிராவைக் கவனிக்கவில்லை:)
    உங்கள் எழுத்துவழியாகப் புதிய கோணத்தில் நிகழ்ச்சிகளை அனுபவித்தேன்.
    நன்றிமா.

    ReplyDelete
  35. 60 வயது பூர்த்தி செய்த திரு கோபாலுக்கும், திருமதி துளசிக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பதிவு நேரில் கலந்துகொண்ட அனுபவத்தைக் கொடுத்தது.
    நன்றி கணேஷ்!

    ReplyDelete
  36. துளசிக்கும் கோபாலுக்கும் வாழ்த்துகள்.

    பால கணேஷ் துள்சியின் மணநாள் சாக்கு வைத்து குட்டி பதிவர் மாநாடுதான் நடந்தது. என்ன பதிவைப் பற்றி மட்டும் பேசலை நாம. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி:) ஷைலஜா தான் உங்களிடம் பேசச் சொன்னர். எதுனா பனிஷ்மெண்ட் குடுக்கணுமென்றால் ஷைலாஜாக்கு குடுத்துக்கோங்க. மீ எஸ்கேப்ப்ப்ப்ப் :)

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube