Saturday, September 1, 2012

இன்னும் கொஞ்சம் சுஜாதா!

Posted by பால கணேஷ் Saturday, September 01, 2012

1970களில் சுஜாதா குமுதம் இதழில் ‘கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து வாரம் ஒரு பக்கம் எழுதி வந்திருக்கிறார். அதிலிருந்து ஒரு சின்னக் கட்டுரை இங்கே...

                                  லிஃப்ட்!
                                   -சுஜாதா-

றைக்குள் நுழைந்ததும் அவரைப் பார்த்தேன். கைகளைக் கட்டிக் கொண்டு என் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நான் இதுவரை சந்தித்திராதவர். நடுத்தர வயதும், சதைப் பற்றான உடலுமாக இருந்தார். லிஃப்ட்டுகள் தயாரிக்கும் ஒரு கம்பெனியிலிருந்து தான் வருவதாகவும், சில தினங்களுக்கு முன் அவர் கம்பெனி லிஃப்ட்டுகள் பற்றி நான் தொலைபேசியதை ஞாபகப்படுத்தினார். புதிதாகக் கட்டப்படும் ஒரு கட்டிடத்திற்கு லிஃப்ட் வசதி பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கம்பெனிக்கு போன் செய்தது நினைவுக்கு வந்தது.

வந்தவர் தன் கம்பெனி லிஃப்ட்டுகள் பற்றி விஸ்தாரமாகப் புகழ்ந்து சொன்னார். அவைகள் தானாக இயங்கக் கூடியவையாம். ஒரு சிறு குழந்தைகூட அவற்றை இயக்கலாமாம். கதவுகள் சிறிதுகூடச் சப்தமிடாதாம். தானாகத் திறந்து கொள்ளுமாம். தானாக மூடிக் கொள்ளுமாம். புறப்படும் போது மிகவேகமாகச் சென்று விரும்பிய மாடிக்கு வந்து சேரும் முன் வேகம் குறைந்து நிற்க வேண்டிய இடத்திற்கு முக்கால் இன்ச்சுக்குள் சப்தமிடாமல் நின்று, கதவு திறந்து வழிவிட்டு நுழைபவர்களை அணைத்துக் கொண்டு கதவு மூடும். ஆம்!

இந்த லிஃப்ட்டுக்கு மூளை கூட இருக்கிறதாம். முதலில் யார் பட்டனை அழுத்தினார், அவர் மேலே போக வேண்டியவரா, கீழே போக வேண்டியவரா, அடுத்து அழுத்தியது யார், அவர் நோக்கம் மேலா, கீழா என்று பற்பல செய்திகளை எல்லாம் கிரகித்துக் கொண்டு சிக்கனமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படும். ‘‘ஷி இஸ் எ ப்யூட்டி! உள்ளே லினோலியம் கண்ணாடி. எமர்ஜென்ஸி பட்டன். மெளனமான மின் விசிறி... ஹைஃபி சங்கீதம்... நீங்கள் கொடுக்கப் போகும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு!’’

‘‘என்ன விலை?’’ என்றேன்.

‘‘லட்சத்து எண்பதாயிரம்’’ என்றார்.

நான் மனத்திற்குள் ஒரு குட்டிக்கரணம் அடித்தேன். முழுக்க முழுக்க ஆட்டோமாட்டிக் டிக் டிக் டிக் என்றார்.

இந்த ஆட்டோமாட்டிக் திடீரென்று பாயைப் பிராண்டினால் என்ன ஆகும்? தானாகப் பிரிந்து மூடிக் கொள்ளும் கதவுகளுக்கு இடையில் யாராவது கை மாட்டிக் கொண்டு கதவு சடக்கென்று மூடிக் கொண்டு உடனே கிளம்பி விட்டால் என்ன ஆகும் என்றெல்லாம் சந்தேகம் எழுந்தது எனக்கு.

கேட்கவில்லை. கேட்டால் அவர் எங்கே லிஃப்ட்டுக்கு (லட்சத்து எண்பதினாயிரம்) ஆர்டர் எடுத்துக் கொண்டு செக் கிழிக்கச் சொல்வாரோ என்று பயந்து, ‘‘யோசித்துச் சொல்கிறேன். உங்களுக்கு மறுபடி போன் பண்ணுகிறேன்’’ என்று கத்தரித்துக் கொண்டேன்.

அவர் மேலே கொஞ்சம் தன் லிஃப்ட்களைப் பற்றி ஆராதனை செய்துவிட்டு ஒரு வழியாகப் புறப்பட எழுந்தார். எழுந்தவருடன் வழக்கம் போல் கை குலுக்க முற்பட்ட போது என் ரத்த ஓட்டத்தில் குபுக் என்று ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது.

அவர் தன் இடது கையால் கை குலுக்கினார். வலது கை மணிக்கட்டுடன் நின்று மொண்ணையாக இருந்தது..!

=========================================

ன்ஸ்டன்ட் ரசம் மிக்ஸ், சாம்பார் மிக்ஸ் என்பவை போன்று நிறைய ஐட்டங்கள் ‘இன்ஸ்டன்ட்’ பாக்கெட்களில் கிடைக்கின்றன. சாதாரணமாக இந்த ‘திடீர் மிக்ஸ்’கள் எதுவாக இருந்தாலும் அவற்றில் ‘பேராசிடமால்’ மாத்திரைகளில் உள்ள கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. தவிர, இந்த மிக்ஸ்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக ‘சாலிசிக்’ என்கிற அமிலத்தைச் சேர்க்கின்றனர். இந்த அமிலம் 100 கிராம் மிக்ஸ் பாக்கெட்டில் 75 மில்லிகிராம் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கும். இவை போன்ற திடீர் மிக்ஸ்களை ஏதாவது அவசர சந்தர்ப்பங்களில் மட்டும் சமைப்பதற்கு உபயோகித்துவிட்டு அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதே நலம்.

=========================================

‘‘ஸார்... ரயில்வே ஸ்டேஷனுக்கு எந்தப் பக்கம் போகணும்?’’

‘‘நேராப் போங்க ஸார். கொஞ்ச தூரத்துல ஒரு அஞ்சு மாடிக் கட்டிடம் வரும். அதைத் தாண்டினீங்கன்னா, ரயில்வே ஸ்டேஷன்தான்!’

‘‘ஐயோ! என்னால அவ்வளவு உயரம்லாம் தாண்ட முடியாதுங்க. நான் பஸ்லயே போய்க்கறேன்...’’

=========================================

‘‘இப்பத்தான் உங்களை நினைச்சுட்டிருந்தேன், நீங்களே வந்துட்டீங்க...’’

‘‘வர்ற மாசம் சம்பளம் வாங்கினவுடனே கொடுத்துடறேன்...’’

‘‘இந்த வீட்டை உங்க சொந்த வீடு போல நினைச்சுக்குங்க...’’

‘‘என்னைப் பொறுத்தவரை நான் எதுக்கும் பொய் சொல்றதே இல்லை ஸார்..’’

-அன்றாட வாழ்வில் இதுபோல நிறையப் பொய்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். இவற்றைப் போன்ற அன்றாடப் பொய்கள் உங்களுக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே. அதற்காக ‘நீங்கள் நன்றாக ப்ளாக் எழுதுகிறீர்கள்’ அப்படின்னு போட்டு என்கிட்டயே விளையாட்டுக் காட்டினீங்கன்னா, பிச்சுப்புடுவேன் பிச்சு!

62 comments:

  1. //அவர் தன் இடது கையால் கை குலுக்கினார். வலது கை மணிக்கட்டுடன் நின்று மொண்ணையாக இருந்தது..!// ஹா ஹா ஹா இது தான் சுஜாதா டச் .. பிரமாதம்

    ReplyDelete
    Replies
    1. வாத்யார் சுஜாதாவின் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  2. //நீங்கள் நன்றாக ப்ளாக் எழுதுகிறீர்கள்//

    ஹா ஹா

    யோசிக்கிறேன் எதுவுமே வர மாட்டேங்குது... அதுக்ககா நான் பொய்யே சொல்லமாட்டேன்னு சொல்லல... பயபுள்ள கொஞ்ச நஞ்சம் பொய்யா சொல்லி இருக்கேன்...

    ReplyDelete
    Replies
    1. எலேய்... நான் எழுதக் கூடாதுன்னு சொன்னதை எனக்கேவா?

      Delete
  3. லிப்ட்... முடித்த விதம் செம!

    திடீர் மிக்ஸ் - அதிர்ச்சி, பெண்கள் கவனிக்க!!!

    அன்றாட வாழ்வில் பொய்கள் செம! எங்களுக்கு வாய்ப்பு கொடுக்காம நீங்களே முந்திக்கிட்டீங்களே, இருந்தாலும் "நீங்கள் நன்றாக ப்ளாக்குகிறீர்கள் சார்" ஹா ஹா ஹா! :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் பகுதிகளையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. (நன்றாக ப்ளாக்குகிறேன் - நீங்களுமா?)

      Delete
  4. திடீர் மிக்சர் அதிர்ச்சி தான். அவசரத்திற்குப் பாவிக்கிறோமே!
    பதிவு சுவை நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. அவசரத்திற்கு எப்போதாவது பாவிக்கலாம். அடிக்கடி எனில்தான் பிரச்னை என்கிறார்கள். உங்களின் நற்கருத்துக்கு என் நன்றி.

      Delete
  5. சுஜாதா என்றும் கதை ராஜன்தான். கற்பனையும் வார்த்தைகளும் எவ்வளவு அழகாய் பொங்கி வருகிறது பாருங்கள் அவரிடம்...! பகிர்ந்தமைக்கு நன்றி.

    ---

    நீங்க இவ்ளோ மோசமா எழுதுவீங்கன்னு நான் நினைக்கல...

    - இதுதான் சார் உலகத்திலேயே பெரிய பொய்... (ஹா...ஹா...!)

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவை ரசித்ததுடன், நான் சந்தோஷப்படற மாதிரி ஒரு அன்றாடப் பொய்யவும் சொல்லி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டீங்க துரை. மிக்க நன்றி.

      Delete
  6. ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’ - என்னோட அன்றாடப் பொய்யி எப்பூடீ? ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... உதைதான் வாங்கப் போற நீயி. இதோ வர்றேன்...

      Delete
  7. Single line climax sorry anti-climax that is sujatha!!!! I do not know what lie I should say about you because really I do not know how to tell a lie???

    ReplyDelete
    Replies
    1. பொய்யே சொல்லத் தெரியாத. சுஜாதாவின் எழுத்தை ரசித்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  8. சுஜாதா பகிர்வு அருமை!

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா ஸாரின் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. சுஜாதா சாதாரண நிகழ்வையும் வித்தியாசமாக எழுதுபவர் ஆயிற்றே! பகிர்வு நன்று.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  10. சுஜாதா கட்டுரை பத்தி சொல்ர அளவு எனக்கு தமிழறிவு கிடையாது சார்!...

    அப்பறம்....
    ‘‘என்னைப் பொறுத்தவரை நான் எதுக்கும் பொய் சொல்றதே இல்லை/// நம்பீட்டேன் ஸார்..

    நீங்கதான் என்னோட பெஸ்ட் எனிமி. எப்படி ### பொய்?

    மிக்ஸ் பத்தி சொன்னது ரொம்ப அருமை, தேவையான விசயம்! எல்லாருமே அதத்தான் மாஞ்சு மாஞ்சு நிறைய பேரு வீட்டில் உபயோகிக்கின்றனர்... குழந்தைகளுக்கும் தருகிறார்களே! அருமை! அப்பறம் இன்னைக்கு உங்களுக்கு முதல் முறையா ஓட்டு போட்டு இருக்கிறேன்! ஒழுங்கா ட்ரீட்டு குடுத்துடுங்க!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்க சொன்ன பொய் அருமை சாமு, மிக்ஸ் பத்தின கருத்தை ஆமோதிச்சதுக்கும். ஓட்டுப் போட்டதுக்கும் ஸ்பெஷல் ட்ரீட் நிச்சயம் உண்டும்மா. மிக்க நன்றி.

      Delete
  11. சுஜாதா சாரின் அருமையான பகிர்வு கணேஷ் அண்ணா! - உங்கள் போட்டோகள் பார்த்தேன்! மகிழ்ந்தேன் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. என் படங்களைப் பார்த்தும் (பயப்படாமல்) மகிழ்ந்த மணியத்தாருக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  12. லிப்ட்டுக்கு மூளை இருக்கு..ஆஹா...நான் இண்டைக்கு வேலை இடத்தில போய் எடுத்து விடப்போறேன்!

    பிச்சி..பிச்சிப்போடுவன்....பிறகு ஆராச்சும் இந்தப் பக்கம் வருவினமோ...!

    ReplyDelete
    Replies
    1. அடாடா... ‘சும்மா இரு கழுதை‘ன்னு நாம பிள்ளைங்களை கொஞ்சறதில்லையா... அதுமாதிரி அன்பா நான் சொல்லியிருக்கேன்கறதை நம்ம ஃப்ரெண்ட்ஸ் புரிஞ்சுககுவாங்க ஹேமா.

      Delete
  13. //-அன்றாட வாழ்வில் இதுபோல நிறையப் பொய்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். இவற்றைப் போன்ற அன்றாடப் பொய்கள் உங்களுக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே.//

    கணேஷ்ஜீ! அதான் நாங்களும் வலைப்பதிவுன்னு ஒண்ணு எழுதிட்டிருக்கோமில்லே? எல்லாத்தியும் இங்கே பகிர்ந்துகிட்டா, அப்பாலிக்கா எங்க பொழப்பு என்னாவுறது?

    :-))

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவுல நீஙகளும் பல பொய்கள் எழுதிக் குவிக்கப் போறீங்களாண்ணா... அவசியம் வந்துடறேன்...

      Delete
  14. மிகவும் அருமையான பகிர்வு! நன்றி! பொய் சொல்றேன்னு நினைச்சுடாதீங்க சார்!

    இன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. நினைக்க மாட்டேன் சுரேஷ். மிக்க நன்றி.

      Delete
  15. சுஜாதா சார் அவர்களின் அருமை பகிர்வை தந்தமைக்கு நன்றி கணேஷ் சார்

    kudanthaiyur.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் பதிவை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சரவணன்.

      Delete
  16. கடைசி வரி. கணேஷ் கணேஷ் தான்.

    ReplyDelete
    Replies
    1. என் இதயம் நிறை நன்றி ஸார்.

      Delete
  17. ரசித்தேன் சார்...

    பொய் (வீட்டில் துணைவியிடம்) : உன்னைத் தவிர இது போல் யாரும் ருசியாக சமைக்க முடியாது... (ஆனா, என் பொண்ணு உண்மையை சொல்லிடுவார்கள்...)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நீங்க சூப்பரா அன்றாடப் பொய் சொல்வீங்க போலருக்கே... மிக்க நன்றி ஸார்.

      Delete
  18. (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்... (Edit html : Remove Indli Vote button script & and Remove Indli Widget) (Caution : Restore/Backup your HTML) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
    Replies
    1. அடாடா.. . கவனிக்கிறேன் நண்பரே...

      Delete
  19. நீங்கள் நன்றாக பிளாக் எழுதுகிறீர்கள்.. :)

    ReplyDelete
  20. திடீர் மிக்ஸ்களை ஏதாவது அவசர சந்தர்ப்பங்களில் மட்டும் சமைப்பதற்கு உபயோகித்துவிட்டு அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதே நலம்.

    நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஆமோதித்த உங்களுககு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  21. அடடா... வாத்தியார் வாத்தியார் தான்... படித்துக்கொண்டே வந்து கடைசி வரியைப் படித்ததும்.... சுஜாதா தெரிந்தார்....

    பொய்யா - அப்படின்னா என்ன கணேஷ். எந்த கடையில் விக்கும் :)))

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரின் கடைசி வரி பஞ்ச் மிகப் பிரபலமாயிற்றே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. (அடுத்த முறை ஆதி மேடத்துக்குத் தெரியாம வீட்டுப் பக்கம் வாங்க. பொய்ன்னா என்னன்னு கத்துத் தர்றேன். ஹி... ஹி...)

      Delete
  22. சுஜாதா அவர்களின் ஃபைனல் டச்
    ரசித்துப்படித்தேன்
    பின்னூட்டத்தில் அடங்கிவிடுமா
    நாம் அன்றாடம் சொல்லும் பொய்கள்
    ஒரு பதிவு அல்லவா போடவேண்டும்
    (இது எப்படி இருக்கு ? )

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவை ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி. தனிப் பதிவே போடும் அளவுக்கு ஸ்டாக் இருக்கா... வியப்புதான்.

      Delete
  23. நீங்க ஸிலிம்மா இருப்பதன் ரகசியம் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இதுவரை வந்த பொய்களிலேயே இதான் சூப்பர். ‘பொய்யரசி‘ன்னு பட்டம் கொடுத்துடலாம் தென்றலுக்கு.

      Delete
  24. ஹெ ஹெஹே ஹெஹெஹே.... நான் சுஜாதா சாருக்கு பெண்டாமீடியாவுல வேலை செஞ்சப்ப தினத்துக்கும் காலை வணக்கம் சொன்னவனாக்கும்...
    * அண்ணே அஞ்சுமாடி ஜோக் நல்லாருந்தது...
    * சமயல் பொடி தகவல் சூப்பர், வீட்டம்மாகிட்ட சொல்லனும்...
    * நீங்க ரொம்ம்ம்ப்ப நல்ல எழுதுரீங்கண்ணே...

    இப்படிக்கு
    உங்களின் அன்புத்தம்பி
    மான்புமிகு பட்டிகாட்டான் ஜெய் அவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ம்... நீங்களும் நல்லாவே பொய் சொல்றீங்க மாண்புமிகு தம்பி. உங்களின் அன்புக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  25. லிப்ட் நன்றாக இருந்தது, கடைசி ட்விஸ்ட் சூப்பர்..

    அன்றாட பொய்களா? - நீங்க ரொம்ப ஸ்மார்ட் சார்!! :)

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  26. சுஜாதாவின் லிஃப்ட் அருமை. நானும் இப்பொழுது தான் அவரின் ஒரு புத்தகம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். ;-)

    ''நான் இப்போ ஒரு மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் கூப்பிடறேனே?''
    ''உலகத்துலயே நீதான் ரொம்ப அழகு'' (ஓரக்கண்ணால் பக்கத்துல போற பொண்ண ரசித்துக் கொண்டே) :-)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்றாடப் பொய்களை மிக ரசித்தேன். அருமை. மிக்க நன்றிங்க.

      Delete
  27. நிசமாவுமே சொல்றேன் பால கணேஷ் சார் !!
    நிச்சயமாவும் சொல்றேன் ஸார் !

    நீங்க நம்பினாலும் சரி,
    நம்மட்டையே ரீல் விடறீகளே அப்படின்னு
    நாலு சாத்து சாத்தினாலும் சரி !!

    உண்மையைச் சொல்லணும்லே ! அதையும்
    ஊருக்கு முன்னாடி சொல்லணும்லே !!

    சொல்லிப்புடுவேன் !! சொல்லிப்பூடுவேன்னு ஏண்டா
    சொதப்புறே !
    சொல்லுடா சீக்கிரம்னு நீங்க‌
    சொல்லுறது காதுலே விழறது.

    இருந்தாலும் அண்ணே !!
    இல்லே இல்லே !
    இனிய தம்பி பால கணேஷ் !!

    பொய்யுன்னு நினைச்சு என்ன நீங்க‌
    பொக்கவாயான்னு திட்டினாலும் சரி !
    பொழுதன்னிக்கும் ஒரே வார்த்தை தான்
    பேருக்குத் தக்க ஆள் நீங்க தான் !!

    என்ன ஒரு குழந்தை முகம் !!
    அந்த அமுல் பேபி முகம்
    அப்படியே இருக்கே !

    சுப்பு ரத்தினம்.
    In lighter vein. Dont come and beat me. I may not be able to withstand.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இப்படி ஒரு அன்றாடப் பொய்யை உங்க கிட்டருந்து எதிர்பாக்கவே இல்ல. சூப்பர் ஸார். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  28. உங்க வீட்டுல உள்ள எல்லா தமிழ் புத்தகங்களையும் அப்படியே எனக்கு அனுப்பி வைச்சுடுங்க அப்புறம் ஒன்ணு சொல்ல மறந்துட்டடேன்.......... உங்களுக்கு மிக தங்கமான மனசு சார் ஹீ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. அனுப்பிடலாம் நண்பா... கப்பல் தாங்குமான்னுதான் தெரியல. ஒண்ணு பண்ணுங்க... நீங்க ஒரு தனி ப்ளைட் புக் பண்ணி என் வீட்டுக்கு வந்துடுங்களேன்... ஆஹா... இப்படி ஒரு அன்றாடப் பொய்யைச் சொல்லி என்னைக் கவுத்துப்புடடீங்களே... உங்க பேச்சு ‘கா‘.

      Delete
  29. //அன்றாடப் பொய்கள் உங்களுக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே// அப்பாடா உங்களுக்குத் தெரிந்தவைகளை பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே என்றிருந்துச்சே சகோதரிகளேன்னு இல்லை தப்பிச்சோமுடா சாமி.. நாங்களெல்லாம் ரொம்ப நல்லபிள்ளைங்க கணேஷண்ணா அதெப்படி உங்களுக்கு தெரிந்தது. பின்னே தெரியாதா அண்ணாத்தேவாச்சே..

    பதிவு மிக சுவாரஸ்யமாக இருந்தது அண்ணா.. உண்மைய சொல்லட்டா சூப்பராக எழுதுறீங்கண்ணா இதெல்லாம் பாத்தா அண்ணி ரொம்பாஆஆ சந்தோஷப்படுவாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... இப்படி தப்பிக்கறதுக்குகூட வழி இருக்குதா... சூப்பரும்மா. அண்ணி சந்தோஷப்படறாளோ இல்லையோ... ரொம்ப நாளைக்கப்புறம் தங்கைய இங்க பார்த்ததுல நான் சந்தோஷப்படறேன் நிறைய.

      Delete
  30. ”நீங்க[நான்] ரசிக்கிறங்களுக்கு” பக்குதுல ”உங்க உறவுங்க” ஒருத்தரையும் காணோமே.. ஹூஉம் ஹூம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... உறவுங்களை வரச் சொல்லிரலாம்.

      Delete
  31. சுஜாதாவுடைய ‘லிஃப்ட்’ கட்டுரையல்ல - டிபிகல் சுஜாதா கதை! ஒரு சந்தேகம் - அவருக்கு முன்னால் உண்மையிலேயே இப்படி ஸ்வாரசிய முடிவு கதைகள் யாரும் எழுதவில்லையா? ஜெஃப்ரி ஆர்ச்சர் அப்படி எழுதியிருக்கிறார், ரா.கி.ர. ‘ட்விஸ்ட் கதைகள்’ எழுதியிருக்கிறார். ஆனாலும் சுஜாதா கதைகளின் கடைசி வரி தரும் திருப்பம் / அதிர்ச்சி - ம்ஹூம், சான்சே இல்லை, வேறு யாரும் கிட்ட வரமுடியவில்லை!

    தினசரி பொய்களில் ஒன்று - போன் வந்ததும், ‘இப்பத் தான் உனக்கு போன் பண்ண போனை எடுத்தேன், நீயே பண்ணிட்ட!’

    மனைவி அல்லது காதலியிடம் - ‘ஆஹா இந்த ட்ரெஸ் / பொட்டு / நகை உனக்கு ப்ரமாதமாக இருக்கிறது’ அல்லது, ‘உன் சமையல் இன்று டாப்!’

    - ஜெ.

    ReplyDelete
  32. திரு பாலகணேஷ்,
    சுஜாதாவின் பல கதைகள் நினைவில் நச்சென்று நிற்கக் கூடியவை..
    பகிர்ந்ததற்கு நன்றி..

    ஆயினும் இந்தக் கதையின் முடிவு ஒரு சுஜாதாவின் கதை'க்கான யோக்யதையில் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து..

    உங்களது பதிவில் அனைத்துப் பதிவுப் பட்டைகளையும் எப்படி ஓரிடத்தில் தனியாகத் தொகுத்திருக்கிறீர்கள் என்று அறிய ஆசை..நேரமிருக்கும் போது எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube