சமீபத்தில் இந்திரா செளந்தர்ராஜன் எழுதிய ‘துளிர்க்கும்’ என்கிற நாவல் படித்தேன் குழந்தை இல்லாத பணக்கா தம்பதியர், அவர்களுக்கு ஒரு சாமியாரம்மாவின் மூலம் கிடைக்கும் குழந்தை, மனநிலை தவறிய அதன் தாய் இன்னும் சில குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு அவர் அமைத்திருந்த கதை மனதிற்கு நிறைவாக இருந்தது நான் மனதில் எண்ணியிருந்த சில விஷயங்களை அவர் நாவலில் எழுதியிருந்ததைக கண்டு மிக்க ஆச்சரியம் + மகிழ்ச்சி அடைந்தேன். அந்த இரண்டு பகுதிகள் இங்கே உங்களுக்காக...
============================================
டிராஃபிக் போலீஸ் நல்ல வேட்டையில் இருந்தது ஹெல்மெட் போடாமல் வந்து ஒரு பைக் காரர் சிக்கி விட்டிருந்தார் பவானி இருந்த காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு பைக் காரரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தனர். பைக் காருரும் சளைக்கவில்லை.

‘‘சார், ஹெல்மெட் அணியறதக் கட்டாயப்படுத்தி எந்தச் சட்டமும் போடப்படலை சார். நான் ஒரு வக்கீல். எனக்கும் சட்டம் தெரியும் ஹெல்மெட்டுங்கறது ரேஸ்ல 150 மைல் ஸ்பீடுல ஓட்றவங்க பாதுகாப்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்க டிராஃபிக்ல ஊர்ந்து போறவங்களுக்கு இது தேவையில்லை.’’
‘‘நீங்க வக்கீலா... அதான் இந்த பேச்சு பேசறீங்க! நாங்க உங்க நல்லதுக்குத்தானே சொல்றோம்? ஏன் கேக்க மாட்டேங்கறீங்க?’’
‘‘இது நலலதுக்குத்தான்னு ினைக்கறவங்க தாராளமா போட்டுக்கட்டும். அதே சமயம் இதை பெரிய உபத்ரவமா நினைக்கற என்னைப் போன்றவங்களும் இருக்கோம். எங்க போனாலும் கைல பிச்சைக்காரன் திருவோடு மாதிரி தூக்கிக்கிட்டு சுத்தற கொடுமையை கார்ல போய் கார்ல வர்றவங்களால புரிஞ்சுக்க முடியாது.’’
‘‘அப்ப கோர்ட்டுல ஜட்ஜ் இதை எதிர்த்துப் போட்ட வழக்கை தள்ளுபடி செய்துட்டாரே. இதுக்கென்ன சொல்றீங்க?’’
‘‘எந்த ஜட்ஜ் இப்ப பைக்குல கோர்ட்டுக்கு வரார்? அவர் ஒரு ரெண்டு நாள் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டினா சத்தியமா தள்ளுபடி பண்ணியிருக்க மாட்டார்.’’
‘‘இது அதிகப்பிரசங்கித்தனம். உங்க நல்லதுக்குச் சொல்றதக் கேட்டு நடககறதுதான் உங்களுக்கு நல்லது’’
‘‘இதுல எந்த நல்லதும் இல்லை. நடந்துபோய் அடிபட்டு சாகறவங்களும் இருக்காங்க. கார்ல போய் ஆக்சிடெண்ட் ஆகி சாகிறவங்களும் இருக்காங்க. அவங்க ஹெல்மெட் போட்டுருந்தா உயிர் பிழைச்சிருக்கலாம்னு கூடத்தான் பேசலாம். தினமும் லட்சக்கணக்குல குடிச்சு செத்துப் போறாங்க. அழிக்க முடியாத கொசுவால காய்ச்சல் வந்து சாகறாங்க. அவங்க நல்லா இருக்க இப்படி ஏதாவது ஒரு சட்டம்னு சொல்லி கட்டாயப்படுத்துங்களேன்.ஏன் டூ வீலர் வெச்சிருக்கறவங்க மேல மட்டும் இவ்வளவு கரிசனம்?’’
அந்த வக்கீலின் கேள்வி பவானிக்கு மிகப் பிடித்து விட்டிருந்தது. ‘‘டேய், இவனை பாத்து வெச்சுக்குங்கடா... நல்லா பாயிண்ட் பேசறான். நமக்கு யூஸ் ஆனாலும் ஆவான்’’ என்றாள்.
============================================
‘‘அதுக்கும் ஒரு எல்லை இருக்கும்மா... இந்தக் குழந்தையும் என்னை விட்டு போயிட்டா நான் தற்கொலை செய்துக்க தயங்கவே மாட்டேன்...’’
‘‘அதுதான் உன் விதின்னா, யாராலம்மா மாற்ற முடியும்?’’
அந்தப் பெண்மணி அப்படி ஒரு பதிலைக் கூறவும் ஜானகிக்குப் பொசுக்கென்று போய்விட்டது. இதைச் சொல்லவா இத்தனை தேஜஸோடும், லட்சணத்தோடும் அருகில் வர வேண்டும்? ஜானகி அந்தப் பெண்ணை வெறித்தாள்.
‘‘என்னம்மா பாக்கறே?’’
‘‘உங்க பதில் எனக்கு அதிர்ச்சியா இருக்கு. உங்க கிட்ட இருந்து ஆறுதலா ஏதாவது கிடைக்கும்னுதான் நான் நம்பினேன்.’’
‘‘உனக்கு ஆறுதலான விஷயத்தை நான் சொல்ல முடியும். வருத்தம் எப்பவும் அதிகமா இருக்குன்னா, சந்தோஷத் தட்டுல எடை குறைவா இருக்குன்னு அர்த்தம். அந்தத் தட்டுல நம்பிக்கைங்கற பிரார்த்தனையை வை. எவ்வளவுக்கெவ்வளவு வைக்கிறியோ அவ்வளவுக்கவ்வளவு தட்டு கனமாகி வருத்தம் சிறிதாயிடும்.’’
‘‘ஒவ்வொரு நொடியும் நான் பிரார்த்தனை செய்துகிட்டுத் தானே இருக்கேன்?’’
‘‘உண்மையா பிரார்த்தனை செய்தியா?’’
‘‘செய்தியாவா? என்னப் பார்த்தா உங்களுக்குத் தெரியலியா?’’
‘‘உண்மையான்னா, புரிஞ்சு பிரார்த்தனை செய்யறதுன்னு அர்த்தம். நீ பிரார்த்தனை செய்யலேன்னு நான் சொல்லலை. புரிஞ்சு செய்யணும்.’’
‘‘புரிஞ்சு செய்யறதுன்னா?’’
‘‘நல்லா கேட்டுக்கோ. எந்த ஒரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் நம் செயல்தான் காரணம். நம்ம நிழல் போல அதுவும் கூடவே வரும். எப்ப பிள்ளைப் பேறு இல்லையோ அப்ப அந்த கர்மமும் அந்த ரகம்தான். முதல்ல இதை ஒத்துக்கணும். நாம போட்ட குப்பையை நாமதான் எடுத்துப் போடணும். நாம வாங்கின கடனை நாமதான் வட்டியோட கட்டணும். அந்த வகைல பிள்ளை இல்லாத குறையை முதல்ல முழு மனசா ஏத்துக்கோ. கடவுளே, இந்தத் தண்டனையை நான் முழுசா அனுபவிச்சு தீக்கறேன்னு சொல்லு. அதுதான் நீ புரிஞ்சு பிரார்த்தனை செய்யறதுக்கு அர்த்தம்.
பிராந்தர்ங்கற சித்தர் முன்னால அவர் அழைக்காமலே காளிதேவி பிரசன்னமானா. பிரசன்னமானதோட பிராந்தரோட தீராத வியாதியையும் குணப்படுத்தறேன்னு சொன்னார். ஆனா பிராந்தர், ‘வேண்டாம், நீ புறப்படு’ன்னு சொல்லிட்டார். காளிதேவி ஆச்சரியப்பட்டா. ‘இது கர்மத்தால வந்தது. நான் அனுபவிச்சு தீத்துட்றேன்’னார். ‘உன் கருணையால இது தீர்ந்து போனா எனக்கு இதோட முழு வலி தெரியாமலே போயிடும்’ன்னு பதில சொன்னார்.
இப்படி ஒரு மனத்தெளிவோடயும், துணிவோடயும்தான் பிரார்த்தனை செய்யணும். இந்த ஜென்மத்துல நாம தவறுகள் செய்யாம இருந்திருக்கலாம். ஆனா அதற்கு முன்பு பல பிறப்புகள் கடந்துதான் மனிதப் பிறப்புக்கே வந்திருக்கோம். அந்தப் பிறப்புல நாம ஒரு தவறும் செய்யலைன்னு எப்படிச் சொல்ல முடியும்?
அதனாலதான் பிராந்தரோட மனநிலைல நின்னு கர்மத்தை அனுபவிக்கறதை நான் உண்மையான பிரார்த்தனைன்னு சொன்னேன். பிரார்த்தனை மட்டும் செய்தாலே போதும். அவன் கிட்ட எதையும் கேக்கத் தேவையே இல்லை. உனக்கொரு அப்பா, அம்மா, உனக்கொரு கணவன், உனக்குன்னு ஒரு ஊர், அதுல சுற்றங்கள்ன்னு எல்லாத்தையும் அவன் உன்கிட்ட கேட்டா கொடுத்தான்? இதெல்லாம் எப்படி தானா அமைஞ்சதோ அப்படித்தான் உனக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் தானா கிடைக்கும்.’’
அந்தப் பெண்ணின் பேச்சில் அளவுக்கதிகமான ஞானமும், பொருளும் இருந்து ஜானகியை ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

|
|
Tweet | ||
நான் தான் பர்ஸ்ட்..படிச்சுட்டு அப்புறமா வர்ரேன்.
ReplyDeleteஆம்... என்னை ஊக்குவிக்கறதுல எப்பவும் தங்கைதான் பர்ஸ்ட். வெல்கம் மா.
Deleteநாந்தான் லாஸ்ட் படிச்சிட்டு அப்புறமா வரவா இல்லை இப்பவே கமெண்ட போடாவா?
Deleteஇரண்டு கதைகளும் சிறப்பான பகிர்வு.
ReplyDeleteமுதல் கதையில் நான் தான் நாயகன்.
இரண்டாம் கதை இறையிடம் இரைஞ்சும் மனதிற்கு மருந்து.
இரண்டையு்ம் ரசித்த தம்பிக்கு மனம் நிறைய நன்றி.
Delete
ReplyDeleteசிந்தனைத் துளிகள்!சிறப்பான பதிவு!
இயலுமா ? இயலாதா என்பது வேறு
உண்மைதான் ஐயா. இரண்டிலுமே யதார்த்தம் என்பது வேறுதான். இருப்பினும் சரியான கருத்துக்கள் அல்லவா... மிக்க நன்றி.
Delete
ReplyDeleteமுதல் பகுதி தேவையில்லாத விதண்டாவாதம் .
ஹெல்மெட் போடாதவன் ஹெல்லை சீக்கிரம் மீட் பண்ணுகிறான்.
விட்டுட்டு போங்க.
இரண்டாவது பகுதி பிரார்த்தனையின் சிறப்பு பற்றி.
வயசானவங்களுக்காகவே போட்டிருக்கீங்க அப்படியா !
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!
என்ற ஔவையின் வெண்பாவும்
ஆல்ஃப்ரட் டென்னிசன் சொல்லிய
"More things are wrought by Prayer than this World dreams of"
என்ற வாக்கியமும்
நினைவுக்கு வருகிறது.
யோவ் !! நீ செஞ்ச பாவம் தான்யா உன்னை சுத்து சுத்துனு சுத்தியாலே அடிக்குது
அப்படின்னு சொல்லாம,
ஆறுதலா ஒரு வார்த்தை சொல்றீக பாருங்க..
அம்மாடி ! நம்ம ஆத்தாட்ட போய்
அழு.
அவ கண்ணத் திறந்து பார்ப்பா..உன்
கண்ணீரத் துடச்சு விடுவா..
அப்படின்னு.
அதாங்க ..
டிஸ்ப்லேயிங் எம்பதி.
சும்மா சொல்லக்கூடாது.
super post ங்க ..
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
சூப்பர் போஸ்ட்ன்னு பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.
Deleteவாங்கி படிச்சுட தூண்டுது உங்க பகிர்வு. நான் இந்திரா சௌந்திரராஜனின் விசிறி. அவர் படம் வேற போட்டிருக்கீங்க. படத்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்கிப் படிக்கத் தோன்றுகிறது என்ற தங்கைக்கு மகிழ்வுடன் என் நன்றி.
Deleteசிறப்பான பகிர்வு..
ReplyDeleteசிறப்பு என்ற உங்களுக்கு என் இதயம் நிறை ந்ன்றி.
Deleteஇரண்டுமே சிறப்பு.
ReplyDeleteசிறப்பு என்ற உங்களுக்கு என் மனமா்ர்நத ந்ன்றி.
Deleteசிறப்பானதொரு பகிர்வு! அதிலும் இரண்டாவது பிரார்த்தனை பற்றிய வரிகள் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html
ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமா்ர்நத ந்ன்றி.
Deleteம்ம்ம் இரண்டும் அருமைசார்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள் சார்
பகிர்வைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteஅருமை .
ReplyDeleteசார் நேத்து ஹெல்மட் போடாம போனதுக்கு நூறு ரூபா பைன் கட்டினேன் ஹி ஹி ஹி.....
ReplyDeleteஆமாம் சீனு. அதுதா்ன யதார்த்தம். ஆனா முக்கி முக்கி போனாலும் 40 கி.மீக்கு மேல போகாத சூப்பர் எக்ஸ்எல்லுக்கெல்லாம் போடணும்கறது சிரிப்பா இருக்கு. மிக்க நன்றி.
Deleteஇரண்டுமே எதார்த்தத்தின் பிரதிபலிப்புகள் தான்! அதனால், எளிதில் மனதை வருடுகின்றன. நல்ல பகிர்வு கணேஷ்ஜீ!
ReplyDeleteஇரண்டையும் ரசித்த உங்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி.
Deleteமுதல் வாதம் மிக அழகுங்க சார் ..
ReplyDeleteஇரண்டு அப்படியே நெஞ்சில் நிலைகொண்டது ...
பகிர்வுக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்
நான் ரசித்த இரண்டையும் ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteநல்ல பகிர்வு!
ReplyDeleteஇன்று நானும் பிரார்த்தனை பற்றியே எழுதியுள்ளேன்!
பிரார்த்தனை பற்றியா.. பார்க்கிறேன். மிக்க நன்றி நட்பே.
Deleteநல்ல பகிர்வு கணேஷ்! பிரார்த்தனை பற்றிய என் பதிவு இதோ:
ReplyDeletehttp://ranjaninarayanan.wordpress.com/2012/08/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
அவசியம் படிக்கிறேன் அம்மா. மிக்க நன்றி.
Deleteசிறப்பான பகிர்வு கணேஷ். இரண்டுமே மிகவும் ரசிக்கத்தக்கவை. பாராட்டுகள்.
ReplyDeleteஇரண்டையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deleteசார், 2வது ப்ரார்த்தனை பற்றியது, நான் என்ன நெனக்கறேனோ, அது அவங்க சொல்லி இருக்காங்க! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்ல கருத்துக்களைக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.
Deleteஇரண்டு பகுதிகளையும் படித்து விட்டு முழுதாக படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்தி விட்டீர்களண்ணா.
ReplyDeleteபடித்து ரசித்துக் கருத்திட்ட தங்கைக்கு மனம் நிறைந்த நன்றி.
Deleteகடைசில போலீஸ்கார் மாமூல் வாங்குனாரா?? இல்லியா??? சொல்லவே இல்லியேண்ணே???
ReplyDeleteஏண்ணே ஏன்?????
அதை கதாசிரியரும் சொல்லாமயே விட்டுட்டாரு ஜெய். மிக்க நன்றி.
Deleteமுதலில் ஒரு வேண்டுகோள் - உங்களுக்கும், உங்கள் பரம ரசிகர் / ரசிகைகளுக்கு: படித்துவிட்டே பின்னூட்டம் போடுங்கள். 2 நிமிஷம் படிக்கமுடியாமல் ‘நான் தான் ஃபர்ஸ்ட் / எனக்குத் தான் வடை’ பின்னூட்ட்ங்கள் இந்த பதிவின் க்வாலிடியை குறைப்பதாக என் எண்ணம்.
ReplyDeleteஇ. சௌ. அவர்களின் நாவலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இரண்டும் அவர் எழுத்தின் வலிமையையும் உங்கள் ரசிப்புத் திறனையும் நிரூபிக்கின்றன. நானும் ரசித்தேன்.
ஹெல்மெட் வாதம் எப்போது தீரும்? நான் Oil & Gas Industry யில் கான்ட்ராக்ட் கம்பெனி இஞ்ஜினீயராக பணிக்குப் போகும் போது, Safety instructions கொடுப்பார்கள். ஒரு முறை, ஓர் அதிகாரி - அரபிக்காரர்- எங்களையெல்லாம் பார்த்து ‘ யார், யார் விதியை நம்புகிறீர்கள்?’ என்று கேட்டார். அனேகமாக எல்லோரும் கையைத் தூக்கினோம். பின், அவர் சொன்னது - ‘அப்படியானால், உங்களுக்கு ஆபத்து ஏற்படவேண்டும் என்று இருந்தால் ஏற்பட்டுத் தானே தீரும், ஏன் வீணாக இந்த சேஃப்டி பயிற்சி?’ - உடனேயே, அவர், தாம் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், ஒவ்வொருத்தரும் எதிர்பார்க்ககூடிய அபாயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முயல்வது அவசியம் என்றும், மற்றும் இந்த இண்டஸ்ட்ரியில், ஒருவரது கவனமின்மை மற்றவர்களையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெளிவு படுத்தி, கேள்வி - பதில் மூலம் எல்லோரும் நன்றாக பாதுகாப்பு தேவைகளைப் புரிந்துகொள்ளச் செய்தார்.
யாரேனும் தற்கொலைக்கு முயல்பவர்களை ஆதரிப்பார்களா?
இரண்டாவது - ப்ரார்ந்தர் சித்தர் மாதிரி எல்லோராலும் தண்டனையை தாங்க முடியுமா? நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். அந்தப் பெண்மணி போல் ஆறுதல் சொல்லும் ஆள் கிடைத்தால் போதும்!
பகிர்வுக்கு நன்றி.
-ஜெ.
உங்களின் கருத்தை வார்த்தைக்கு வார்த்தை ஆமோதிக்கிறேன். மிக்க நன்றி ஜெ.
Deleteசிறப்பான பகிர்வு சார்... நன்றி...
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஇரண்டு கதைகளுமே சிறப்பு.முதலாவது கதையை என்னோடு ஒட்டிப்பார்க்க வைக்கிறது.அடுத்த ...பிராத்தனைகள் நாளானாலும் நிச்சயம் பலிக்கும் !
ReplyDeleteநான் ரசித்த இரண்டையும் ரசித்த என் ப்ரெண்டுக்கு இதயம் நிறை நன்றி.
Deleteமுதல் கதை எங்க நாட்டில் செல்லுபடி ஆகாது.
ReplyDeleteரெண்டாவது........ தோழி ஒருத்தரின் ஆன்மீக குரு சொன்னது.
குழந்தை இல்லைன்னு மனம் நொந்து அவரிடம் பிரார்த்திக்கச் சொல்லி வந்தவர்களிடம் சொன்னது.
"உங்களுக்கு அடுத்த ஜென்மம் இல்லை. சந்தோஷப்படுங்க. கருமவினை எல்லாம் தீர்ந்ததுன்னு மகிழ்ச்சியா இருங்க "
இதுவும் ஒருவிதத்தில் நல்லாத்தான் இருக்கு.
அட... நீங்க சொல்ற கருத்து கேக்கவே நல்லாவும் மனதுக்கு இதமாவும் இருக்கே... இந்தக் கோணத்துல பாக்கறது நல்லதுதான். மிக்க நன்றி டீச்சர்.
Deleteஇரண்டு கதைகளும் மிக சிறப்பாக இருக்கிறது பதிவிற்கு நன்றிகள்
ReplyDeleteரசித்துப் படித்த நண்பனுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
Deleteமிகச் சரியான இரண்டு பகுதிகளை எடுத்து
ReplyDeleteபதிவாக்கிக்கொடுத்த விதம் ரசித்தேன்
அதன் கருத்து உடன்பாடோ இல்லையோ
இரண்டும் சிந்திக்கத்தக்க தூண்டும் விஷயங்கள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
நா்ன ரசித்த சிந்தனையைக் கிளறும் பகுதிகளை நீங்களும் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.
Deletetha.ma 14
ReplyDeleteம்.....இரண்டும் சிறப்பு
ReplyDeleteநல்ல பதிவு.இ.சௌ. குழந்தை இல்லாத பெண்ணுக்கு ஆறுதல் சொல்லத்தான் நினைக்கிறார். மூளை வளர்ச்சியில்லாத குழந்தையைப் பராமரித்து வரும் எனக்குத் தெரிந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டரும் கூட இதை முழுமனசா ஏத்துக்கோ, அப்பத்தான் வாழ்நாள் முழுக்க போராடுவதற்கான தைரியம் கிடைக்கும் என்றுதான் சொல்கிறார். இ.சௌ. சொல்லும் கருத்தை அவரவர் நோக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
ReplyDeleteஉண்மைதான் இழப்பின் நிலையில் இருப்பவர்களுக்கு அதன் வலி நிச்சயம் புரியும். அவர் எழுத்தை என்னைப் போல நீங்களும் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி.
Deleteஇந்திரா சௌந்திரராஜன் அவர்களின் நாவற் பகுதிகளை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி கணேஷ். பிராந்தர் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பகிர்ந்த இரண்டுமே ரசனையான பகிர்வுகள்.
ReplyDeleteஅருமையான பதிவு..
ReplyDeleteஇரண்டு கதைகளும் சிறப்பாய் இருந்தது.
முதல் கதையில் வரும் உரையாடல் .. ..
ReplyDelete// ஏன் டூ வீலர் வெச்சிருக்கறவங்க மேல மட்டும் இவ்வளவு கரிசனம்? //
எல்லோரும் கேட்கும் கேள்வி. அதிலும் பண்டிகை நாட்கள், கல்விக் கட்டணங்களை கட்டும் சமயம் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப கரிசனம் வந்துவிடும்.
இரண்டாம் கதை. நம்பிக்கைதான் பிரார்த்தனை. பிரார்த்தனைதான் நம்பிக்கை.
நான் படிக்காத கதை..ஆனால் அழாக புரியும்படி அதில் உள்ள நல்ல பகுதிகளை பகிர்ந்து இருக்கீங்க சார்...
ReplyDeleteமுதல் பகுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது.. உண்மையில் இந்த சென்னைல 40km ஸ்பீட் ல கூட போகமுடியாத அளவுக்கு டிராபிக் பெருகிடிச்சி, இதுல ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டினா, வியர்வையால தலை நனைந்து தலைவலி உடனே வருகிறது... இருந்தாலும் ஹெல்மெட் சில நேரங்களில் பாதுகாப்பு கவசம் தான்.. (அந்த சில நேரம் எப்போது என்பது தெரியாததால் எப்போதும் ஹெல்மெட் அணிவது சிறந்தது)....
இரண்டாம் பகுதி ரொம்ப அருமை..ஏதோ தெளிவு பிறந்தது போல இருந்தது அந்த பகுதி படித்ததும்... நானும் சில நேரங்களில் இப்படி நினைப்பதுண்டு //"உனக்கொரு அப்பா, அம்மா, உனக்கொரு கணவன், உனக்குன்னு ஒரு ஊர், அதுல சுற்றங்கள்ன்னு எல்லாத்தையும் அவன் உன்கிட்ட கேட்டா கொடுத்தான்? இதெல்லாம் எப்படி தானா அமைஞ்சதோ அப்படித்தான் உனக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் தானா கிடைக்கும்.’’//...
நல்ல ஒரு கதையை பகிர்ந்து இருக்கீங்க சார் நன்றி!!!
நீங்கள் ரசித்த பகுதிகளாக இரண்டு விஷயங்கள் இந்திரா சௌந்தராஜன் நாவலில் இருந்து பகிர்ந்து இருக்கீங்க... அருமையான விஷயம்... ஆரம்பமே ஹெல்மெட் போடுவது ஏன் அதனால என்ன குறைந்துவிட்டது. என்ன நேரப்போகிறது. விதி இருந்தால் உயிர் போய் தான் தீரும் என்று அந்த வக்கீல் வாதாடினது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது....
ReplyDeleteபடிக்க தான் சுவாரஸ்யம் ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராத விஷயம். அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்பா...
இந்தமுறை ஊருக்கு சென்று நாங்கள் குவைத் திரும்பிய அன்று என் தோழியின் குடும்பம் இந்தியா சென்றது.... சென்ற இரண்டாவது நாள் மிகப்பெரிய ஆக்சிடெண்ட் சந்தித்தார்கள் பைக் ஆக்சிடெண்ட்.... அவர் ஹெல்மெட் போட்டிருந்ததால் அவர் தலைபாகம் மட்டுமே தப்பியது.... மற்றபடி இருவருக்குமே உடலில் பயங்கர அடி உடல் முழுவதும் ரத்தகளறி. பின் அமர்ந்த என் தோழியின் தலையில் பின் மண்டையில் பலத்த அடி.... தையல் மிக நீளமாக....
ஆபிசுல லீவும் எடுக்கமுடியாம தலைவலியுமாக அவஸ்தை பட்டுக்கொண்டு இருக்கிறார்... வக்கீல் கேட்டது எல்லாமே நியாயமான கேள்விகள் தான்.. எந்த ஜட்ஜ் பைக்ல வந்திருக்கார். கார்ல போறவங்களுக்கு எங்க அவஸ்தை தெரியாது.... கரெக்ட் ஒப்புக்கொள்கிறேன். அடிக்கிற வெயிலில் வியர்வை ஒழுக ஹெல்மெட் அணிந்துக்கொண்டு ட்ராஃபிக் அடர்த்தியாக இருக்கும் நேரத்தில் ஹெல்மெட் மிகப்பெரிய சுமை... அது மட்டுமில்லாமல் எங்காவது வண்டி பார்க் செய்துட்டு போகும்போது ஹெல்மெட்டை நம் கதையாசிரியர் சொன்னது போல கையில் எடுத்துக்கொண்டு போகும் அவஸ்தை....
நம் உயிருக்கு உத்தரவாதம் தருமா ஹெல்மெட் என்றால் ஆமாம் என்பேன் நான்... இன்னைக்கு என் தோழியின் கணவர் உயிரோடு இருப்பதற்கு காரணம் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தான்... ஆனால் நம்ம ஊர் ட்ராஃபிக்குக்கு இது சிரமமாக இருக்கிறது....
பத்தாம்பசலியாகவே யோசித்தே பழக்கமாகிவிட்டது... என் மகனுக்கு தினமும் போன் செய்து வண்டி எடுக்கும்போது கருடர் ஸ்லோகம் சொல்லுடா, ஹெல்மெட் அணிந்துக்கொண்டு தான் போகவேண்டும் என்று தினப்படி பாராயணம் போல் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.. அவனும் இந்த வக்கீல் சொன்னது போல் நிறைய என்னிடம் வாதாடி பார்த்தான்.. ப்ளீஸ் அம்மாக்காக இதை செய்டா தங்கம் என்று சொன்னதால் அவனுக்கு இஷ்டமில்லை என்றாலும் ஹெல்மெட் அணிந்து செல்கிறான்.. ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் அசௌகரியங்கள் மிக அருமையாக வக்கீல் மூலம் சொல்லி இருக்கிறார் கதையாசிரியர்... என்ன செய்வது.. விதி ஒன்று இருந்தாலும் நம்மால் முடிந்தவரை இதை கடைப்பிடிப்போமே...
அருமையான பகுதியை நீங்கள் ரசித்த ஒரு நல்ல கருத்து எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் கணேஷா...
அடுத்த பகிர்வும் மிக அருமையான எல்லோரும் அறிந்து தெளியக்கூடிய பகிர்வு....
ReplyDeleteபாகவதம்ல சொல்ற மாதிரி அந்தம்மா சொல்லி இருக்காங்க..
பகவான் நமக்கு துன்பங்கள் தருகிறார்னு ஏன் நினைக்கிறோம்...
நம்முடைய செயல்களின் காரணகர்த்தா நாம் தான்... நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும்... வினை விதைத்தால் வினையின் பயனையும் அனுபவிக்கும் திண்மையும் இருக்கவேண்டும் என்று அழுத்தமாக சொன்ன பதிவு....
கதையாசிரியர் அந்த பெண் சொல்வதாக சொன்னது அத்தனையும் மிக மிக அருமை...உண்மையும் கூட... அதென்ன இறைவன் நமக்கு நல்லதையும் சந்தோஷத்தையும் நல்ல நட்பையும் உறவுகளையும் நம்மை கேட்டுக்கொண்டா கொடுத்தார்... அதற்கு நன்றி சொல்லக்கூட நாம் மறப்பதுண்டு....
ஆனால் துன்பம் ஏற்பட்டால் அந்த துன்பத்திற்கு இறைவனை நிந்திக்கிறோம்... ஏன் இப்படி எல்லாம் துன்பம் கொடுக்கிறே என்று சண்டை இடுகிறோம் கோபப்படுகிறோம்... ஆனால் பகவான் முகத்திலோ அதே ஏகாந்த புன்னகை மட்டுமே பதிலாக கிடைக்கும்...
எல்லாத்தையும் நாம செஞ்சுட்டு பகவான் மேல் பழியை போட்டா சிரிக்கமாட்டாரா....
மிக அருமையாக சொல்லி இருக்காங்க.... இந்த கலியுகத்தில் இறைவனை சரண் அடைய இரண்டு வழிகள் ஒன்று இறைவனின் நாமம் விடாமல் சொல்லிக்கொண்டே இருப்பது.... உள்ளார்ந்த பிரார்த்தனை.... நமக்காக எதுவும் வேண்டாமல் அடுத்தவர் துன்பத்துக்காக என்னிக்கு வேண்டுகிறோமோ அது உடனே நிறைவேறுகிறது.. தன்னலமில்லாத பிரார்த்தனைக்கு தான் உடனடி பலனும் கிடைக்கிறது....
தெய்வ பக்தி நிறைந்தவருக்கு இந்த பகிர்வு மிக்க மிக்க சந்தோஷம் தரக்கூடிய அருமையான பகிர்வு....
தங்களின் ரசனை என்றும் உயர்ந்ததாகவே இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த இரண்டு பகிர்வும்...
ஒன்று.... நல்ல கருத்தினை எல்லோருக்கும் பகிரும் வண்ணமாக....
மற்றொன்று.... பிரார்த்தனை என்பது ஆத்மார்த்தமானதாகவும் இறைவன் தரும் துன்பத்தினை அனுபவிக்க சக்தி கொடுக்கச்சொல்லி மட்டுமே வேண்ட வேண்டும் என்றும்.... துன்பங்கள் கொடுக்காதே என்றால் இதற்கென்று மீண்டும் ஒரு பிறவி எடுக்க வேண்டிய அவசியமாகிவிடுகிறது.....
கர்மாக்களை அனுபவித்து தீர்த்து முக்தி பெறுவதே எளிதான விஷயமாக தோன்றுகிறது...
இரண்டுமே அருமையான பகிர்வு கணேஷா.. அன்பு நன்றிகள் தங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு.