Monday, September 24, 2012

மொறு மொறு மிக்ஸர் - 12

Posted by பால கணேஷ் Monday, September 24, 2012

திவர் திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு அலுவலகத்திலும் நிறைய வேலைகள் இருந்ததால் Mental Stress அதிகமாக இருந்தது. விளைவாக... ஸ்டேட் பாங்க் ஏடிஎம்ல போய் கார்டை சொருகிட்டு பின் நம்பர் கேட்கும்போது பார்த்தா... நம்பர் மறந்து போயிட்டுது. இதுவா, அதுவான்னு அடிச்சுப் பாக்கறேன். மூணு தடவைக்கு மேல ட்ரை பண்ண முடியாதுன்னு கார்டை ரிஜக்ட் பண்ணிடுச்சு. சரி, நிதானமா யோசிச்சு ட்ரை பண்ணலாம்னு வீட்ல உக்காந்து நம்பரை நினைவுக்கு கொண்டு வர ட்ரை பண்றேன். ம்ஹும்...! தோணவே இல்லை. அடுத்த நாளும் குருட்டாம்போக்ல ட்ரை பண்ணிப் பாத்து தோத்துட்டேன். சரி, அடுத்த வாரம் டைம் கிடைக்கறப்ப, பேங்க்ல எழுதிக் குடுத்து வேற பின் நம்பர்தான் வாங்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.

ஆனா அடுத்து வந்த ரெண்டு வாரங்கள்ல அதை செயல்படுத்த முடியலை. மூணாவது வாரத்துல திரும்பவும் அலுவலக, சொந்த வேலைகளின் நெருக்கடி மிக அதிகமாக ஏற்பட்டு டென்ஷன் பண்ணியது. அம்மா பணம் தேவைன்னு சொன்னதால மறுபடி ஏடி‌எம் ஞாபகம் வந்து ட்ரை பண்ணலாமேன்னு போனேன். எனக்கு இருந்த மனக்குழப்பத்துல நம்பரை யோசிக்காம, டைப்பிட்டு தொகையச் சொன்னேன். பணம் குடுத்துடுச்சு அந்த மிஷின். ‘ஆஹா, இப்ப என்ன நம்பரை அடிச்சோம்?’ யோசிச்சப்ப, சோடால கோலிய உடைச்சதும் காஸ் பொங்கற மாதிரி நம்பர் அடி மனசுலருந்து மேல வந்துடுச்சு. டக்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன்.

தமிழ் சினிமாவுல தலையில அடிபட்டு பைத்தியமாயிட்ட ஹீரோ/ஹீரோயினுக்கு மறுபடி ஒரு சீன்ல அதே மாதிரி அடிபட்டதும் நினைவு திரும்பிடுச்சுன்னு வர்ற காட்சிகளை ஏகத்துக்கு கமெண்ட் அடிச்சிருக்கேன்... இப்போ டென்ஷன்ல மறந்துபோன நம்பர் டென்ஷன்ல நினைவுக்கு வந்ததைப் பார்த்தா... அந்தக் காட்சிகள்லகூட ஒரு லாஜிக் இருக்கோன்னுதான் தோணுது. உங்களுக்கு இந்த மாதிரி விசித்திர அனுபவம் ஏற்பட்டதுண்டா?

=========================================

சீதைக்கு ராமனை மணக்கோலத்தில் கண்டுவிடக் கொள்ளை ஆசை! யாருமறியா வண்ணம் கார்மேக வண்ணனைக் கடைக்கண்ணால் கண்டாள். அப்போது தோழியர் சீதையின் கைகளைக் கிள்ளினராம்! உடனே சீதை தலைகுனிந்தபோது அந்தச் சேடியர் கூட்டம் அவளைப் பார்த்துச் சிரித்ததாம்!

உண்மையில் நடந்தது என்ன? கடைக் கண்களால் ராமனை நோக்‌கியபோது உள்ளத்தால் மட்டுமின்றி உடலாலும் சீதை பூரித்துப் போனாளாம். அவளது கைகள் பூரித்தபோது வளையல்கள்தான் அவ்வாறு கிள்ளினவாம். அப்போது தோழியர் கிள்ளுவதாக எண்ணி சீதை ‌தலைகுனிந்தபோது- ராமனைக் காணாத அந்தச் சிறுபொழுதில் அவள் ரொம்பத் தளர்ந்து போனாளாம். அதனால் பூரிப்பெல்லாம் போய் அவளது வளையல்கள் தங்கள் பழைய நிலையை அடையும்போது ஏற்படுத்திய சத்தம்தான் தோழியர் சிரிப்பாகத் தோன்றியதாம். கம்பரின் வர்ணனைக்கு ஈடு, இணை எதுவும் உண்டா? (என் மாணவப் பருவத்தில் சீதா கல்யாணம்’ கதாகாலட்சேபத்தில் கேட்டது)


=========================================


 =========================================

கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தன் வர்ணனையாளர் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் என்று சொல்லியிருந்தேனில்‌லையா... அவற்றில் சில இங்கே:

= தமிழில் வர்ணனை செய்யும் போது மொழியைச் சரியாகக் கையாள்வது மிக அவசியம். கிரிக்கெட் பற்றி நான் அதிகம் தெரிந்திராதவனாக இருந்த சமயத்தில் ஒருமுறை கமெண்டேட்டர் பாக்ஸில் இருந்தேன். வர்ணனை செய்பவர், ‘‘நமது பிள்ளைகள் நன்றாக விளையாடுகின்றனர்’’ என்றார். ‘‘என்னங்க இது?’’ என்று கேட்டேன். ‘‘Our boys are playing well-ங்கறதை தமிழ்ல சொன்னேன் ஸார்..’’ என்றார். எனக்குச் சிரிப்பாகப் போய் விட்டது. ‘‘நமது இளைஞர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்-ன்னு சொல்லுங்க ஸார். இப்படி நேரடியாவா மொழிபெயர்ப்பீங்க. ஸில்லி பாயிண்ட்ல கேட்ச் பிடிச்சான்ங்கறதை ‘முட்டாள் முனையில் நின்று பந்தைப் பிடித்தான்’ அப்படின்னு சொல்வீங்க போலருக்கே...’’ என்று நான் சொன்னதும் அனைவரும் சிரித்து விட்டனர். அவர் ‌சொன்னார்: ‘‘நீங்க எனக்கு நல்லா தமிழ் பேசக் கத்துக் குடுங்க. நான் உங்களுக்கு கிரிக்கெட் கத்துத் தந்துடறேன்..’’ என்று.

= ஒரு முக்கிய பிரமுகர் வந்திருந்த சமயம், கிரிக்கெட் மேட்சைப் பார்த்துவிட்டு கமெண்டேட்டர் பாக்ஸ்க்கும் விசிட் செய்துவிட்டு கீழே வந்தார். அங்கே எதிர்ப்பட்ட என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ‘‘Oh! I met a Abdul Jabbar in upstairs’’ என்றார் அந்தப் பிரமுகர். நான் சொன்னேன். ‘‘அந்த அப்துல் ஜப்பாருக்குத் தமிழ் தெரியாது. இந்த அப்துல் ஜப்பாருக்கு கிரிக்கெட் தெரியாது’’ என்று. அவர் சிரித்து விட்டார்.

= ஒரு சமயம் தமிழக கிரிக்கெட் அணியில் ‌ராமகிருஷ்ணன், சிவராமகிருஷ்ணன், கமெண்டேட்டர் ராமமூர்த்தி என்று அரங்கம் முழுவதுமே ‘ராம’ மயமாக இருந்தது. அப்போது ஒருவர் இப்படி கமெண்ட் அடித்தார்- ‘‘இத்தனை ராமன்களுக்கு நடுவுல ஒரு பாபர் இருப்பாரே...’’ என்று. உடனே அதற்கு பதில் தந்தார் ராமகிருஷ்ணன்: ‘‘அவர் பாபர் இல்லை, பாபர்ராம்!’’ என்று. அனைவரும் கைதட்டி ரசித்தனர்.

= கிரிக்கெட் வர்ணனையாளர்களில் என் சீனியரான ராமமூர்த்தி செய்யும் வர்ணனை எனக்கு ‌ரொம்பப் பிடிக்கும். ஒரு சமயம் டெஸ்ட் மேட்ச் நடந்து கொண்டிருந்த போது சுனில் கவாஸ்கர் அவுட்டாகி விட்டார். நைட் வாட்ச்மேனாக பிரசன்னா உள்ளே வருகிறார். அப்போது இவர் சொன்னது: ‘‘பொக்கிஷமே பறி போய்விட்ட பிறகு இந்த நைட் வாட்ச்மேன் வந்து எதைப் பாதுகாக்கப் போகிறார்?’’ என்று.

=========================================

சுவின் பால் பசுவின் உடம்பிலிருந்து உற்பத்தியாகிறது. அது எப்படி சைவ உணவாக முடியும்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வாரியார் தந்த பதில்: ‘‘உயிர்களைக் கொல்வது பெரும் பாவம். கொன்று அதனால் வருவது இறைச்சி. அதையுண்பது மகாபாவம். கொல்லாமை, புலாலுண்ணாம‌ை என்று இரு அதிகாரங்களில் திருவள்ளுவர் இதன் கொடுமையைக் கூறுகின்றார். கறக்கின்ற பாலைப் பருகுவது குற்றமன்று. அது அசைவ உணவு ஆகாது. பால் கறக்கவில்லையானால் பசுவுக்குத் துன்பம். கன்றுக்கு இரு மடிகளை விட்டு மற்ற இரு மடிகளில் இருந்து பால் கறக்க வேண்டும். பசுவின் பால் புனிதமானது; சத்துவ குணத்தைத் தர வல்லது. ‘பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்’ என்று ஒளவைப் பிராட்டியார் பாடிய பா‌டலை அறிக. (‘வாரியார் விருந்து’ நூலிலிருந்து)

59 comments:

  1. இப்படியா பின் நம்பரை மறப்பீங்க?

    ஜபார் சாரிடம் பேச இன்னும் விஷயம் மிச்சமிருக்கும் என நம்புகிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. அவரிடம் இன்னும் பேசி நிறைய எழுதலாம் மோகன் நீங்கள். நான் பேசியது சொற்ப நேரம்தான். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  2. Replies
    1. ரசித்துப் படித்த சீனிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. Replies
    1. சுவைத்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  4. சோடால கோலிய உடைச்சதும் காஸ் பொங்கற மாதிரி நம்பர் அடி மனசுலருந்து மேல வந்துடுச்சு. டக்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன்.//நல்ல உவமானம்.:)எனக்கும் கூட சமைத்துகொண்டிருக்கும் பொழுது தயிர் எடுப்பதற்காக பிரிட்ஜ்ஜை திறப்பேன்.ஆனால் என்ன எடுக்க வந்தோம்ன்னு மறந்து போய்டும் ஒரு நிமிஷம் யோசித்துப்பார்த்தாலும் ஞாபகத்துக்கு வராது.திரும்பி கிச்சனுக்குள் போய் அடுப்பில் இருக்கும் பாத்திரத்தைப்பார்த்தௌம்தான் சோடாவுலே கோலியை உடைச்சதும் காஸ் பொங்குற மாதிரி புஸ் என்று ஞாபகத்துக்கு வரும்.ஆனால் அண்ணே நீங்கள் ரொம்பவே ஓவர்.இப்படி பின் நம்பரையே மறந்து விட்டீர்களே.நான் சங்கேத வார்த்தையில் பின் நம்பரை வீட்டில் குறித்து வைத்துக்கொள்வேனாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மறதி என்கிற விஷயம் சகஜமானது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. இதுவரை இப்படி எனக்கு ஆனதில்லைம்மா. இதான் முதல் தடவைங்கறதாலதான் எல்லார்ட்டயும் பகிர்ந்துக்கிட்டேன். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  5. சோடால கோலிய உடைச்சதும் காஸ் பொங்கற மாதிரி நம்பர் அடி மனசுலருந்து மேல வந்துடுச்சு.
    அடடா எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.

    ReplyDelete
    Replies
    1. கவிதாயினி தென்றலுக்கு என் உவமை பிடிச்சிருந்ததுல மிக்க மகிழ்ச்சி + மனம் நிறை நன்றி.

      Delete
  6. பின் நம்பரை இனியும் மறக்காதிர்கள் சார் .. அவசர நேரத்தில் கை கொடுக்கும் கடவுள் அது ..
    அப்புறம் கிரிக்கட் வர்ணனை அருமை //
    அந்த லெட்டர் இருக்கே செம கலக்கல் ..
    பசுவின் பாலை பற்றி பகிர்ந்தது சிறப்பு ///நன்றி

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப் பகுதிகளையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. அப்துல் ஜப்பார் அவர்கள் பகிர்ந்த அனுபவங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. கிரிக்கெட் வர்ணனையாளரின் அனுபவங்களை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. -அந்த விஷயத்தை - அதாவது மறந்து விட்ட விஷயத்தை - மீண்டும் மீண்டும் நினைப்பதை விட்டு விட்டு வேறு வேலைகளைக் கவனித்தால் தானாகவே நினைவுக்கு வந்து விடும்! எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு! 'பின்' நம்பரை மறக்க முடியாத நம்பரா, ஒரு ஸ்பெஷல் எண்ணாக மாற்றிக் கொண்டால் மறக்காது! திருமண நாள், பிறந்த நாள் போன்ற தேதிகளை வைத்து!

    -சீதா-ராமர் வர்ணனை.... ஆஹா....ஹா!

    -ஒரு பொக்கிஷம் போனால் என்ன, தங்கமே இன்னும் ரெண்டு மூணு பொக்கிஷங்கள் அங்கு அப்போது இருந்தனவே...! என்று அருகாமை வர்ணனையாளர் சொல்லியிருக்க வேண்டும்! 'வெட்டி ஆடினார்... தட்டி விட்டார்...' போன்ற வர்ணனைகள் வேடிக்கையாக இருந்தாலும் சுவாரஸ்யம் இருக்காது. ராமமூர்த்தியின் வர்ணனை மிக அருமையாக இருக்கும்! (ராமமூர்த்தியின் பெயர் மறந்து யோசித்துக் கொண்டிருந்தாலும் டைப்படித்துக் கொண்டேயிருக்கும்போது கை தானாக அவர் பெயரை டைப் செய்து விட்டது! மேலே நீங்கள் சொல்லியுள்ள விஷயம்!) அது சரி... ரொம்ப நாளாகவே, தற்சமயம் சனிக்கிழமைகளில் பொதிகைத் தொலைக் காட்சியில் இரவு பத்து மணிக்குமேல் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்தும் சுமந்து வி ராமன் பேசும் வேகம் கேட்டிருக்கிறீர்களோ?

    -வாரியார் சொன்னா சரியாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். ராமகிருஷ்ணன் என்று தவறாக எழுதியிருந்ததை ராமமூர்த்தி என்று திருத்தி விட்டேன். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  9. சார் நான் கூட நிறைய டைம் பாஸ்வோர்ட் மறந்திடுவேன்.. சில சமயம் யோசிச்சாலும் ஒண்ணும் நினைவு வராது .. forgot பாஸ்வோர்ட்-னு சொல்லிடு புதுசா கிரியேட் பண்ணிடுவேன்.. ரொம்ப டென்ஷன் ல ரொம்ப சாதாரண விஷயம் கூட மறந்து முழிச்சிருக்கேன்...
    அப்துல் ஜாபர் சார் பத்தி கேள்வி பட்டதில்ல.. ஆனாலும் அவர் பத்தின பகுதி சுவாரஸ்யமா இருந்தது!! பகிர்விற்கு நன்றிகள் சார்!!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... இந்த ஞாபக மறதி விஷயம் உனக்கும் உண்டுங்கறதுல கொஞ்சம் ஆறுதல் சமீரா. கிரிக்கெட் வர்ணனைல தமிழ்ல பேர் வாங்கினவர் அவர். சுவாரஸ்யமா பேசுவார் டிவி இல்லாத அந்த நாட்கள்ல இவருக்கு ஒரு பெரிய ரசிகர் வட்ட்ம் உண்டும்மா. மிக்க நன்றி.

      Delete
  10. ஒரு விஷயம் சொல்லணும் என்று ஃபோன் செய்வேன் பேச ஆரம்பித்ததும் சுத்தமாய் மறந்தே போய்விடும்.பின் நம்பரும் மறந்து இருக்கேன்.பாஸ்வேர்ட் மறந்து போய் திரும்ப மறந்து போய் அந்த அக்கவுண்டையே விட்டும் இருக்கேன். மறந்து போனோர் சங்கம் என்று ஏதாவது இருக்கா??

    ReplyDelete
    Replies
    1. கரெக்டுங்க. நான் சங்கம் ஆரம்பிச்சுடறேன். நீங்க கொ.ப.செவா ஜாயின் பண்ணிடுங்க. ஹி... ஹி... மிக்க நன்றிங்க.

      Delete

  11. கடிதம் கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான ரசனை. எனக்குப் பிடித்ததை நீங்களும் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஐயா. மிக்க நன்றி.

      Delete
  12. When you typed the PIN number first time, so many other problems were occupying your mind like bloggers meet, office work, household worries etc., and when you failed in the first attempt, some other problems also get added in your mind like, you have got only two more chances, what to do if you again fail to type the right number etc. In the process, your attention was diverted in so many ways and you failed miserably. But during the second time when you typed the pin numbers, none of the above problems were there in your mind and it was free of all these tensions and stresses, so you could type the right number in the first attempt itself spontaneously as the pin number is already loaded in your sub-conscious mind.

    Secondly, now you are commenting on the commentators experience very nice post and eager to get more snippets from him.

    Thirdly, you have set the ball rolling by saying whether milk is a vegetarian food or not.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... நீங்க சொன்ன மாதிரி டென்ஷன் மிகுதில ஆகியிருக்கும்னு தான் தோணுது. மிக்ஸரை ரசிச்ச உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  13. An Indian has to remember so many numbers like your PIN number nowadays - for example, in our office, we have to apply leave / salary etc., through system for which there is a password - for railway booking, you need to remember a password to operate the IRCTC - you have to remember a password for bsnl bill payment, payment of insurance premia - etc etc. Better you remember only one password and put all the abovesaid numbers in one file. But do note this number somewhere and do not forget where you noted it down.
    birth date / anniversary date etc., are very easy numbers not only for you but also for the hackers also.

    ReplyDelete
    Replies
    1. அட... ஆமாம்ல.. நினைச்சுப் பாத்தா நிறைய விஷயங்களை நாம நினைவில வெச்சுக்கிட்டுத்தான் வாழ வேண்டியிருக்கு. புதிய கோணத்தைக் காட்டின உங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  14. அருமையான மொறுக்ஸ்
    மிகவும் ரசித்த் அதுவும் குறிப்பாக
    ஏ.டிஎம் எண் விஷயம்
    ஏனெனில் நானும் இப்படி
    அவதிப்பட்டிருக்கிறேன்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. ஆழ் மனத்தின் அனுபவத்தோடு இன்றைய மிக்சர் நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. கைபேசியில் (pin) பின் நம்பரை வித்தியாசமாக சேமித்து வைத்து, அதை கண்டுபிடிக்க ஒரு முறை சிரமப்பட்டதுண்டு... ஹா... ஹா...

    அப்துல் ஜப்பார் அவர்களின் வர்ணனை பகிர்வுக்கு நன்றி...

    வாரியார் விருந்து - அருமை... (TM 13)

    ReplyDelete
  17. பசும் பால் மட்டும் புனிதம் என்று இல்லை.
    பஞ்ச கவ்யம் என்று சொல்லப்படும் ஐந்தமுதக்கலவையில்
    பசும் பால், அந்தப்பாலிலிலுருந்து வரும் தயிர்/மோர்
    பசு விடும் சிறு நீர், மலம் எல்லாமே உள்ளது.
    பசும்பாலில் ஆக்ஸிடோஸின் அதிக அளவில் உள்ளதால் தான் அதை
    தாய்ப்பாலுக்கு அடுத்த ஆல்டர்னேடிவ் ஆக கருதப்படுகிறது.
    பசும்பாலில் இருந்து வரும் தயிர் / மோரில் எருமை மாட்டுத்தயிரைக் காட்டிலும்
    ப்ரோ பயோடிக் அமிலங்கள் இதை லாக்டோ பாஸிலஸ் அதிகமாக காணப்படுகின்றன.
    இன்டஸ்டைனில் இயற்கையாக இருக்கும் லாக்டோ பாஸிலஸ் பாக்டீரியாவுக்கு
    இது ஒரு வேகமும் சப்ஸ்டிட்யூட்டாகவும் காணப்படுகின்றன.
    அடுத்து பசு சிறு நீர் மற்றும் சாணம் ஆன்டி செப்டிக் தன்மை உடைத்தது.
    இதை அந்தக் காலத்தில் வீட்டு வாசல்களில் காலையில் தெளித்தும் வீட்டு முற்றங்களிலும்
    சாப்பிட்ட இடத்திலும் நன்றாகத் தெளித்து விட்டால் ஈ, கொசு முதலியவை அண்டாது.
    இந்த சாணத்தின் உதவியால் எரிபொருள் தயாரிக்கப்படும் வீடுகளில் அந்த எரிந்த புகை மணம்
    அல்லது ஒத்தடம் வலி நிவாரணியாகவும் உபயோகிக்கலாம்.
    ஆயுர்வேத, சித்த மருத்துவங்களில் இதைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    வாரியார் வாக்கு உண்மைக்கு உத்தரவமானது.
    வரிக்கு வரி
    சரி.

    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com



    ReplyDelete
    Replies
    1. ஆஹா... பசு கொடுக்கும் கொடைகளைப் பற்றி விரிவான தகவல்கள் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  18. நல்ல அருமையான துணுக்குகள்.

    இப்பொழுதும் சென்னை பந்தையங்களில் தொலைக்காட்சி வால்யூமை-க் குறைத்து வானொலியில் வர்ணனைக் கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகிறது. ராமமூர்த்தி-ராகவாச்சாரி (சிறப்பு வர்ணனையாளர்) கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும். ஜபாரின் உச்சரிப்பு என்றும் மாற்று குறையாமல் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைவுகளில் மூழ்கி ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  19. வாரியார் விருந்து அருமை ஃப்ரெண்ட்.அப்துல் ஜப்பார் ன் பேச்சு ஆழமாக உணர்வோடிருக்கும்.கேட்டிருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. வாரியார் விருந்தை ரசித்து கிரிக்கெட் நினைவுகளில் ஆழ்ந்த என் இனிய ஃப்ரெண்டிற்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. ம்ம்ம்.... கரெக்டுங்க. நான் சங்கம் ஆரம்பிச்சுடறேன். நீங்க கொ.ப.செவா ஜாயின் பண்ணிடுங்க. ஹி... ஹி.../// அப்போ நாந்தான் பொருளாலர்! மத்தபடி மிக்சர் சூப்பர்! ஆனா, டைட்டில் மிஸ்டேக் மட்டும் கரெக்ட் பண்ணிடுங்க!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... நம்ம கட்சிக்கு சூப்பரான பொருளாளர் வேற கிடைச்சாச்சு டோய்... சீக்கிரம் ஆரம்பிச்சிடலாம். மிக்க நன்றிம்மா.

      Delete
  21. you can say it as muscle/finger memory, some time you can't tell the password clearly, but when you type/press without thinking the password you can automatically do it.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வார்த்தைகள் மிகச் சரியானவை என்றே தோன்றுகிறது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  22. காராபூந்தி.ஓமப்பொடி,கடலை,அவல் எல்லாம் அழகாய்க் கலந்த சுவை மிக்சர்

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரைச் சுவைத்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  23. நான் கூட மறதி கேஸ்தான் அண்ணா. என் மொபைல் நம்பரை நான் மனப்பாடம் செய்ய நான் பட்ட பாடு இருக்கே. 1 வருசம் ஆச்சுண்ணா மெமரி.

    ReplyDelete
    Replies

    1. அண்ணனுக்கு ஏற்ற தங்கச்சி

      Delete
    2. ஹி... ஹி... அதாம்பா சகோதரத்துவம்கறது...

      Delete
  24. மனிதமனம் எல்லாவற்றையும் மறந்துவிடும் ஆனால் ஒன்றை மட்டும் மறக்காது அதுதாங்க வேளா வேளைக்கு சாப்பிடுவது அதௌ மட்டும் எந்த நேரத்திலும் மறப்பதில்லை

    ReplyDelete
    Replies
    1. நிஜம் தாங்க நீங்க சொல்றது. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  25. அப்துல் ஜபார் - எப்போதோ மறந்து போன பெயர்.

    ReplyDelete
    Replies
    1. வானொலியின் ஆதிக்கம் குறைந்து தொலைக்காட்சி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததும் மறந்து போயிருப்பது சகஜம்தான் ஸார். தங்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  26. நீங்கள் எப்படியோ எந்த பின் நம்பரைக் கண்டு பிடித்து விட்டீர்கள் நன் இன்னும் முயன்று கொண்டுள்ளேன்... வாரியார் கூற்று அற்புதம் வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. வாரியார் கூற்றை ரசித்த. என்னைப் போல ஞாபக மறதி கொண்ட சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  27. அண்ணே உங்களுக்கு ஞாபகம் வந்திடுச்சி...எனக்கு இன்னும் ஞாபகம் வரலை..., வங்கியில லெட்டர் குடுக்கனும்.

    கம்பர் புராணம் ஸ்கூல் செய்யுளோட சரி அதுக்கப்புரம்....ம்ஹூம்....நகம்மு கவிதயே அலர்ஜி இதுல கம்பர்...சுத்தம்...

    அப்துல் ஜப்பார் அவர்களின் அனுபவம் சுவாரஸ்யம்... :-)

    ReplyDelete
    Replies
    1. உங்கட்ட ஐடியா கேட்டு பத்து நாள் கழிச்சு திடீர்ன்னு ஒரு நாள் அது நினைவு வந்தது தம்பி. சீக்கிரம் கேட்டு வாங்கிடுங்க நீங்களும். மிக்ஸரை ரசித்த உஙகளுக்கு என் இதய நன்றி.

      Delete
  28. மிக்ஷர் மொறு மொறு என்று சூப்பராய் இருந்தது.....

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரை ரசித்த எஸ்தருககு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  29. நானும் ஒருக்கா பின் நம்பரை மறந்து போக மிஷின் கார்டை முழுங்கிருச்சு. அப்றம் வங்கியில் கடிதம் கொடுத்து மீட்டேன் :-))


    அருமையான பகிர்வுகள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube