Wednesday, September 26, 2012

சரிதாவும், செம்மொழியும்

Posted by பால கணேஷ் Wednesday, September 26, 2012

தொலைக்காட்சிகளை ‘தொல்லைக்காட்சிகள்’ என்று அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபணையிராது. ஆனால் என் விஷயத்தில் ‘கொலைக்காட்சி’ என்றே சொல்லலாம் போல எனக்குள் ‘கொலவெறி’யைக் கிளப்பி விட்டது சமீபத்தில். எங்கள் தெருவிலிருக்கும் ஒரு குடும்பத் தலைவி ஜுபிடர் டிவி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கி வந்து விட்டாள். அவ்வளவுதான்... தானும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பரிசு வாங்கி விட வேண்டுமென்று தீர்மானமே (லேடீஸ் சைகாலஜி!) செய்து விட்டாள் சரிதா. விளைவாக...

லுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த என்னிடம் வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... அலுவலகத்திலிருந்து திரும்புகையில் எனக்கு ஒரு முகப்பூச்சுப் பொடி டப்பா வாங்கி வாருங்கள்...’’ என்றாள்.

‘‘சாம்பார் பொடி, மிளகாப் பொடின்னுதானே கேப்ப... அதென்னது புதுசா முகப்பூச்சு்ப் பொடி?’’ என்றேன். ‘‘இதோ பாருங்கள். இதுதான்...’’ என்று அவள் எடுத்துக் காட்டியது அவள் பவுடர் டப்பாவை.

‘‘அடக்கடவுளே... ஃபேஸ் பவுடர் தீர்ந்துடுச்சு, வாங்கிட்டு வாங்கன்னு சொல்ல வேண்டியதுதானே? இதுக்கு ஏன் தமிழ்ப்படுத்திக் கொல்ற?’’ என்றேன் புரியாமல்.

‘‘அதுவா... ஜுபிடர் தொலைக்காட்சியில் ‘கொல்லுங்கம்மா, கொல்லுங்க’ என்று ஒரு நிகழ்‌ச்சி நடத்துகிறார்கள். அதை நடத்துபவரிடம் ஆங்கில வார்த்தை எதுவும் கலக்காமல் தொடர்ந்து மூன்று நிமிடம் தமிழில் உரையாட வேண்டுமாம். அப்படி உரையாடி விட்டால் அளவற்ற பரிசுகள் தருகிறார்கள். நான் அவற்றை அடைவதென முடிவு கட்டி விட்டேன். நிகழச்சிக்கும் விண்ணப்பித்து விட்டேன். ஆதலால் இப்போதிருந்தே தனித் தமிழில் பேசத் துவங்கி விட்டேன்’’ என்றாள்.

‘‘அடியேய்... முதல்ல ஜுபிடர்ங்கற அவங்க டிவி பேரை தமிழ்ல வெக்கச் சொல்லு. அப்புறம் நிகழ்ச்சி நடத்தி தமிழை வளக்கலாம்...’’ என்றேன். ‘ஙே’ என்று விழித்தாள். ‘‘அட, ஆமால்ல...’’ என்றாள்.

ப்ப ஆரம்பிச்சதுங்க. தொடர்ந்து ஒரு வாரமா இங்கிலீஷ் கலக்காம பேசறேன்னு கொலையாக் ‌கொன்னுட்டிருக்கா. நேத்திக்கு காலையில ‘‘நாதா..’’ என்றபடி அருகில் வந்தாள்.

‘‘என்னது... நாதனா? யார் அவன்? அவன் பேரச் சொல்லி என்னைக் கூப்பிடற?’’ என்றேன்.

‘‘ஐயகோ! கணவனை அப்படி அழைப்பார்கள். நீங்கள் பழைய திரைப்படங்களில் பார்த்ததில்லையா? ’’

‘‘டிவில ஓசில போடறானேன்னு எம்.கே.டி. படம்லாம் பாக்காதன்னா கேக்கறியா? இப்டில்லாம் விபரீதமா கூப்பிட்டுக்கிட்டு... சரி, என்ன விஷயம்னு சொல்லு...’’

‘‘மா‌லை அலுவலகத்திலிருந்து விரைவாய் திரும்பி விடுங்கள். நாம் கடற்கரைக்குச் சென்று, பின் பெரிய அங்காடிக்குச் செல்லலாம். அங்கே நம் இல்லத்திற்காய் சில பொருட்களும், எனக்கு சில அழகுசாதனப் பொருட்களும் வாங்கி வர வேண்டும்.’’ என்றாள்.

‘‘பெரிய அங்காடியா? அப்படின்னா?’’ என்று நான் விழிக்க, ‘‘இதைத்தான் இயம்பினேன் நான்’’ என்று அவள் எடுத்துக் காட்டிய கவரில் Big Bazaar என்றிருந்தது. ‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன். அந்தக் கணம் ‘பளிச்’சென்று ஒரு ஐடியா வந்தது. ‘‘சரி, உனக்கெதுக்கு அழகுசாதனப் பொருட்கள்லாம்? அதெல்லாம் சாதாரணப் பெண்களுக்குத்தான்... நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில்.

‘‘என்ன... நான் அவ்வளவு இளமை(?)யாகவா தெரிகிறேன்!! மிக்க மகிழ்ச்சிங்க...’’ என்றாள் வெட்கமாக. சரியான அர்த்தம் தெரிந்திருந்தால், நான் இந்தப் பதிவு எழுத முழுதாகத் தேறியிருக்க மாட்டேன். (ஹேமா, சசிகலா மாதிரி கவிஞர்கள் யாரும் போட்டுக் குடுத்துராதீங்கப்பா)

ஐஸ் வைத்த கையோடு அடுத்த கோரிக்கையை வைத்தேன். ‘‘சரி, திருவல்லிக்கேணில இந்தப் பதிப்பகத்துக்குப் போயி, ‘கல்கி களஞ்சியம்’னு இவங்க ஒரு புக் போட்டிருக்காங்க. வாங்கிட்டு வந்துடேன் ப்ளீஸ், ஈவ்னிங் நாம நீ சொன்ன மாதிரி பீச்சுக்குப் போகலாம்’’ என்றேன். ‘‘சரிங்க.....’’ என்றாள் பல்லெல்லாம் வாயாக.

மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ‘‘என்னங்க இன்னிக்கு இவ்வளவு லேட்?’’ என்றபடி வரவேற்றாள் என் இல்லாள்.

வியப்பாகப் பார்த்தேன். ‘’சரி... குணமாயிட்டியா? ஐமீன்... இங்கிலீஷ் கலந்து சாதாரணமாப் பேச ஆரம்பிச்சுட்டியே...’’ என்றேன்.

‘‘ஆமாங்க. அந்த ப்ரொக்ராம்ல கலந்துக்கற எண்ணத்தையே இன்னிக்கு காலைலயே கை விட்டுட்டேன்...’’ என்றாள். ‘‘நன்று இந்த திடீர் (நல்ல) முடிவுக்கு காரணம் யாதோ?’’ என்றேன்.

‘‘அதுவா... காலைல நீங்க ஆபீஸ் போகும் போது திருவல்லிக்கேணில ஒரு பப்ளிகேஷன் ஆபீஸ் போய் புக் ஒண்ணு வாங்கி வெக்கச் ‌சொன்னீங்கல்லியா... அதுக்காக பஸ் பிடிச்சேன். கண்டக்டர் வந்ததும், டிக்கெட் கேட்டேங்க. அதுக்கு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டான்...’’

‘‘டிக்கெட்டை கண்டக்டர்ட்டதானே கேட்டாகணும்? அதுக்கு ஏன் திட்டினான்?’’

‘‘ஐயா, பனிக்கூழ் இல்லத்துக்கு ஒரு சீட்டு தாருங்கள்- அப்படின்னு கேட்டேன். ‘ஙே’ன்னு முழி்ச்சான். ‘அங்கல்லாம் இந்த பஸ் போகாதும்மா’ அப்படின்னான். ‘இல்லை ஐயா, திருவல்லிக்கேணிக்கு முந்தைய நிறுத்தமே அதுதான்’ன்னேன் நான். ‘ஐய, அது ஐஸ் ஹவுஸ்ம்மா’ன்னான் கண்டக்டர். ‘நான் அதைத்தான் ஐயா தமிழில் இயம்பினேன்’ன்னேன் நான். அவ்வளவுதாங்க... நான்ஸ்டாப்பா கத்த ஆரம்பிச்சுட்டான். ‘புரியற மாதிரி தமிழ்ல(!) கேட்டா இன்னா... நமக்குன்னே வர்றாங்க பாரு’ன்னு ஆரம்பிச்சு அவன் கத்தறான். பஸ்ல எல்லாரும் சிரிக்கறாங்க. எனக்கு ரொம்ப இன்சல்ட்டாப் போச்சு. இந்த வம்பே வேண்டாம்னு நார்மலுக்கு மாறிட்டேன்’’ என்றாள்.

வீட்டுக்குள் என்னிடம் தனித் தமிழ் பேசிக் கொல்லும் இவளை வெளி நபர்களிடம் அனுப்பி வைத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டு சரியாகி விடுவாள் என்று கணித்த என் திட்டத்துக்கு வெற்றி! நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.

‘‘ஆஹா... இல்லாளை வசைபாடுதல் எம்மால் இயலாததன்றோ? அதைச் சாதித்த அந்த நடத்துனர் வாழ்க!’’ என்றேன். அருகில் வந்து வினோதமாகப் பார்த்தாள். ‘‘என்னாச்சுங்க... ஏன் இப்போ இப்படி நீங்க தனித்தமிழ்ல பேசறீங்க?  வேணாங்க...’’ என்றாள்.

‘‘அங்ஙனம் நீ இயம்பினால் யாம் விட்டுவிடுவோமா? எம்மை கடந்த வாரம் முழுதும் தனித்தமிழில் பேசி மகிழ்வித்த(!) உம்முடன் இனிவரும் இரண்டு திங்கள் யாமும் தனித்தமிழில் உரையாடுவதென்பது எமது துணிபு’’ என்றேன்.

சரிதாவின் கண்கள் பிதுங்கின; உதட்டைச் சுழித்தாள் (அழுகையின் ஆரம்பம்!) ‘‘ப்ளீஸ் வேண்டாங்க... நான் டிவில சீரியல் பாத்து அழறது போதாதுன்னு நீங்க வேற அழ வெக்காதீங்க. இனி சீரியலும், சினிமாவும் தவிர வேற எதுவும் பாக்க மாட்டேங்க’’ என்றாள்.

அப்பாடா ஒரு வழியாக டிவி தொல்லையிலிருந்து விடுதலை! ஹி... ஹி... இன்னும் நான் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறேனாக்கும்..!!

74 comments:

  1. பனிக்கூழ் இல்லம்.... ஹா... ஹா...

    "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...
    அது வாங்கி தந்த பெருமை எல்லாம் கண்டக்டரேயே சேரும்.."

    நீங்கள் பாடும் பாட்டு கேட்குது சார்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகப் பிடித்த எஸ்.பி.பி. - எம்.ஜி.ஆர் கூட்டணிப் பாடலைக் குறிப்பிட்டு பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  2. அஹா அஹா சிரிச்சி முடிக்கவே ஐந்து நிமிடங்கள் ஆனதுங்க. அடடா நாதா என்று அவர்கள் அழைக்கும் போது பக்கத்தில் உங்கள் தங்கை இருந்திருக்க வேண்டுமே விழுந்து விழுந்து சிரித்திருந்தாலாவது உடம்பு குறைந்திருக்கும் ஐயா இதை நீங்க அவங்களிடம் சொல்லாம இருந்தா நானும் சொல்ல மாட்டேன் டீலா நோ டீலா ?

    ReplyDelete
    Replies
    1. டீல் தென்றல். நானாச் சொல்ல மாட்டேன். சரியா? ஹி... ஹி...

      Delete
  3. ஹா ஹா சிரிப்பக இருந்தாலும் தனிதமிழில் பேசுவது கேலிக்கும் சிரிப்புக்கும் தான் ஆளாக வேண்டி இருக்கு. சென்னை பதிவர் சந்திப்பில் எல்லாருக்கும் ஒரு பேட்ஜ் கொடுத்தாங்க இல்லியா அதில் என் பேரு லஷ்மின்னு இருக்கனும் . அவங்க லஹ்மினு போட்டிருந்தாங்க அங்க வச்சு நாங்க யாருமே இத கவனிக்கலே. மும்பையில் தம்பி வீடு போனப்பொ என் அப்பா கேக்குராங்க இது யாரோட பேருன்னு அப்பதான் நானே கவனிச்சேன் இது என்ன தமிழ்

    ReplyDelete
    Replies
    1. அடடே... ஸாரிம்மா. அப்பவே கவனிச்சிருந்தா சரி பண்ணியிருக்கலாமே... தனித்தமிழ் பேசி சிலரின் கேலிக்கு ஒரு சமயம் ஆளானவன் நான். அதனால்தான் இந்த அங்கத எழுத்து முயற்சி. மிக்க நன்றிம்மா.

      Delete
  4. மிகவும் அருமையான பகிர்வு........உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. அருமையான பகிர்வென்று சொல்லி ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. செம்மொழிய பேச போய் 'செம்மையா' வாங்கி கட்டிகிட்டாங்க :( கேக்கறதுக்கு கொஞ்சம் வருத்தமா இருந்தாலும், வினவு தளத்தின் சில பதிவுகளுக்கு அப்பறம் நான் படிக்கும் போதே வாய்விட்டு சிரித்தது இந்த பதிவுக்குத்தான்! அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றிங்க :)

    ReplyDelete
    Replies
    1. வாய்விட்டுச் சிரித்தேன் என்று சொல்லி எனக்கு ஊக்கமளித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. Very Very hilarious. Keep it up. Be happy Tamil language is useful to you at least post an article in your blog. If you have any aversion towards television, you can review their programmes sarcastically. But, for this why do you unnecessarily tease your wife vis-a-vis the language. There is one beautiful tamil word to refer the Malls i.e. PAL PORUL ANGADI

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொன்னாலும் என்னை மாதிரி ஆசாமிங்க ‘பல்பொருள் அங்காடின்னா... பேஸ்ட் பிரஷ்லாம் விக்கற கடையான்னு கேட்டு வெறுப்பேத்துவோம்ல...’ ஹி... ஹி... மிக்க நன்றி நண்பரே.

      Delete
  7. நல்ல நகைச்சுவை கலந்த பதிவு, ரசித்தேன்...சிரித்தேன் அய்யா!

    என் தளத்தில் // மை படிந்த கை //

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. என் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் இதைப்போல ஒரு தொ(ல்)லைக் காட்சியில் நடக்கும் போட்டி ஒன்றுக்குப் போய் லட்சம் ரூபாய் வெல்ல வேண்டும் என்று கணவரைப் பாடாய் படுத்திக்கொண்டு இருந்தார். உங்கள் யோசனை அந்தப் பரிதாபத்திற்குரிய கணவரிடம் சொல்லுகிறேன்.

    அருமையான நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... என் எழுத்தில் நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிம்மா.

      Delete
  9. //முதல்ல ஜுபிடர்ங்கற அவங்க டிவி பேரை தமிழ்ல வெக்கச் சொல்லு. அப்புறம் நிகழ்ச்சி நடத்தி தமிழை வளக்கலாம்...’’ என்றேன். ‘ஙே’ என்று விழித்தாள். ‘‘அட, ஆமால்ல...’’ என்றாள்.//

    சபாஷ்.. சரியான உள்குத்து :-))

    மனம் விட்டுச் சிரிக்க வைத்த இடுகை

    ReplyDelete
    Replies
    1. வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசியையும் கவனித்துச் சொல்லி மனம் விட்டுச் சிரித்தும் மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. பனிக்கூழ் இல்லம்! :)) மனம் விட்டு சிரித்தேன்...

    இன்று எனது பக்கத்திலும் ஒரு புதிய இடுகை.... [அப்டேட் ஆகவில்லை!]

    ReplyDelete
    Replies
    1. ஆலய தரிசனத்தை உங்கள் பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன். மனம் விட்டுச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  11. Replies
    1. சிரித்து ரசித்து நல்லா இருக்கு என்ற சீனிக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  12. ஐயையோ, முதலில் உங்க நிலைமையை நினைத்தால் ரொம்ப சரிதாபமாக, அதாவது ரொம்பப் பரிதாபமாக இருந்தது. தப்பித்தீர்! :-))

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... என்னை ரசித்துச் சிரிக்க வைத்த கருத்திட்ட வேணு அண்ணாவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  13. ஹா...ஹா...ஹா... பிரமாதம்.

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் நிறை நன்றி தோழி.

      Delete
  14. பனிக்கூழ் இல்லமா!! -ஆஹா! கேட்கவே எவ்வளவு இனிமையா இருக்கு.. இருந்தாலும் நீங்க சரிதா அம்மா வின் தமிழ் பற்றை ரொம்ப தான் கிண்டல் பண்ணுறீங்க... எவ்ளோ கஷ்ட பட்டு பேசிருக்காங்க..
    நான் சரிதா அம்மா கட்சி தான் .. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! சார் வீட்ல மட்டும்!!! ஜுபிடர் இல்லைனா என்ன ஒரு நெப்டியூன் இல்ல புளுடோ டிவி ல அவங்கள கலந்துக வச்சிட்டபோச்சி..

    "நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில். "- எனக்கு மீனிங் தெரியுமே.. இருங்க போட்டு கொடுக்கறேன்...
    வர வர நீங்களும் சேட்டை சார் மாதிரி நகைசுவை சொட்ட சொட்ட பதிவு போடறீங்க.. சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. சரிதாவின் கட்சிக்கு ஒரு ஆள் கிடைச்சிட்டதை நினைச்சா பூரி பூரின்னு பூரிச்சுப் போவாள். சமீரா நல்ல பொண்ணில்ல... அனியாயமா ஒரு அப்பாவியப் போட்டுக் கொடுத்தா பாவம்மா... விட்று.

      Delete
  15. பனிக்கூழ் இல்லமா!! -ஆஹா! கேட்கவே எவ்வளவு இனிமையா இருக்கு.. இருந்தாலும் நீங்க சரிதா அம்மா வின் தமிழ் பற்றை ரொம்ப தான் கிண்டல் பண்ணுறீங்க... எவ்ளோ கஷ்ட பட்டு பேசிருக்காங்க..
    நான் சரிதா அம்மா கட்சி தான் .. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! சார் வீட்ல மட்டும்!!! ஜுபிடர் இல்லைனா என்ன ஒரு நெப்டியூன் இல்ல புளுடோ டிவி ல அவங்கள கலந்துக வச்சிட்டபோச்சி..

    "நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில். "- எனக்கு மீனிங் தெரியுமே.. இருங்க போட்டு கொடுக்கறேன்...
    வர வர நீங்களும் சேட்டை சார் மாதிரி நகைசுவை சொட்ட சொட்ட பதிவு போடறீங்க.. சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. சேட்டையண்ணா எனக்கு உந்து சக்தி. அவரோடு நீ என்னை ஒப்பிட்டுப் பாராட்டினதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. மிக்க நன்றி.

      Delete

  16. தமிழ் பேசு என்பதற்கும் தமிழே பேசு என்பதற்கும் இடையிலே இருக்கும் தூரத்தை நகைச்சுவை என்னும் கோலால்
    அளந்து காட்டும் உங்கள் பதிவுக்கு எனது பாராட்டுக்கள். பேச்சு மட்டுமல்ல, எழுதும் முறையும் கடந்த நூறு ஆண்டுகளில் மாறி விட்டது. எனது தந்தை வார்த்தைகளைப் பிரித்து எழுதார். அவர் காலத்து தமிழ் நடை.
    பின் வருமாறு. \\

    விருந்துமருந்துமெனச்சொல்லுமிந்தப்பதிவினைப்படித்துப்படித்துப்பயன்பெறவேண்டுமெனுமுயர்வுணரிவனால்
    யானுந்தப்பட்டுச்சற்றே துயிலுமென்னில்லாளிடாமிடமெந்தப்பதிவைப்படிக்கச்சொன்னபொழுதவள் யானையொருமுறைத்த பார்வைகண்டஞ்சினேனெறாலது மிகையாமோ !!


    அது சரி.. நீங்கள் ஒரு வார்த்தை ஒரு லட்சம் என விஜய் டி.வி.யில் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் நிகழ்ச்சி
    கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதில் வார்த்தை என்ன என கண்டுபிடிக்க தரப்படும் சொல் தமிழாகத்தான்
    இருக்கவேண்டும் என்கிறார்கள்.

    ஆனால், ரூபாய் 30 ஆயிரம் அளவில் பரிசுத்தொகை செல்லும்பொழுது, புரியாத‌
    பழக்கத்தில் இல்லாத பல வடமொழி வார்த்தைகளை கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள். அந்த வடமொழி வார்த்தைகள்
    தமிழில் அவ்வப்பொழுது எழுதப்படுகின்றன என்றாலும் அவை நடைமுறை இலக்கியத்தில் காணப்படுவதில்லை.

    இவற்றினைத் தவிர்த்திடுமாறு ஜேம்ஸ் வசந்தனுக்கு ஒரு விண்ணப்பம் உங்கள் பதிவின் மூலம் செய்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எழுதிய பாராவை அசை பிரித்துப் புரிந்து கொண்டு விட்டேன். அருமை ஐயா. உங்களின் விண்ணப்பத்தை அவர்கள் கவனித்தால் நன்று. தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  17. பனிக்கூழ் இல்லம்.ரொம்பவே ரசித்தேன்.//
    ‘‘அங்ஙனம் நீ இயம்பினால் யாம் விட்டுவிடுவோமா? எம்மை கடந்த வாரம் முழுதும் தனித்தமிழில் பேசி மகிழ்வித்த(!) உம்முடன் இனிவரும் இரண்டு திங்கள் யாமும் தனித்தமிழில் உரையாடுவதென்பது எமது துணிபு’’ என்றேன்.
    // சிரித்து முடியலே.

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த சரிதாவின் ரசிகையான தங்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  18. //// நேத்திக்கு காலையில ‘‘நாதா..’’ என்றபடி அருகில் வந்தாள்.

    ‘‘என்னது... நாதனா? யார் அவன்? அவன் பேரச் சொல்லி என்னைக் கூப்பிடற?’’ என்றேன்.
    ////

    ஹா.ஹா.ஹா.ஹா.........

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி ராஜ்.

      Delete

  19. கலக்கல்! கற்பனை அருமை!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  20. ஹா...ஹா. கலக்கல்.

    ஐஸ்கிரீம் (குளிர்களி ) என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. குளிர் களி . இதுவும் புதிய வார்த்தையா இருக்கே... குறிச்சுக்கிட்டேன். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  21. புன்னகைத்த உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி மோகன்.

    ReplyDelete
  22. //
    நீதான் பேரிளம் பெண்ணாச்சே...’’ என்றேன் ஐஸ் குரலில்.
    //

    இந்த டயலாக்தாண்ணே நமக்கு கிடைச்ச ஒரே எஃபெக்ட்டிவ் ஆயுதம். இது காலாவதி ஆகுரதுக்குள்ள வேற வழி கண்டுபிடிக்கனும்.

    பெரிய கடை ....அப்புறம் இந்த "பனிக்கூழ்" சூப்பர்.ருங்க இந்த ப்திவு படிச்சி முடிக்கும்போது "பாக்கியம் ராமசாமி" நினைவுக்கு வந்துட்டுப் போனார் :-)))

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய டயலாக்குகள் கைவசம் இருக்கு. சொல்லித் தர்றேன் தம்பி. நகைச்சுவை ஜாம்பவான் பாக்கியம் ராமசாமியை ஒப்பிட்டுப் பாராட்டின உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  23. ரொம்பவே கலாய்க்கறீங்க!

    ReplyDelete
    Replies
    1. கலாய்த்தலை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி குட்டன்.

      Delete
  24. சரிதா மேடம் ,சரிதா மேடம்,உஷ்!கிட்ட வாங்க,காதைக் குடுங்க,"பேரிளம்பெண்" அப்படின்னா...........சரியா?அவர்கிட்ட நான் சொன்னதா சொல்லிடாதீங்கோ ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. என்னங்க செளம்யா... இப்படி மாட்டி விட்டுட்டீங்க... மெடிகல் பில் அனுப்பறேன்... தயாரா இருங்க... ஹி... ஹி... மிக்க நன்றிங்க.

      Delete
  25. நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    சரிதா அவர்கள் போட்டியில் கலந்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று உலக புகழ் பெற்று இருப்பார்கள் அதை கெடுத்து சதிதிட்டம் போட்டு இப்போது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் உங்களூக்கு எனது கண்டணங்கள்

    ReplyDelete
    Replies
    1. என் சதிக்கு எதிராக இந்தப் பதி சதி செய்வேனா நண்பா... சும்மா ஜாலி கலாய்த்தல் தான். மிக்க நன்றி.

      Delete
  26. அன்புள்ள கணேஷ்,

    உங்களுக்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. சின்னக் கடுகு என்ற பெயருக்கு மிகப் பொருத்தமானவர்தான் நீங்கள்..

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  27. சொல்லமுடியவில்லை.ஃப்ரெண்ட்.இன்னொரு முறை வாசித்துக்கொள்வேன் !

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு ப்ரெண்ட். நீங்க அடிக்கடி வரணும்கறதுதான் என் ஆசையே... வெல்கம் அண்ட் மெனி தாங்க்ஸ்.

      Delete
  28. Replies
    1. பாஸ் மார்க்குக்கும் மேலேயே உங்களிடமிருந்து கிடைத்ததில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி ஸார்.

      Delete
  29. ஹா ஹா ஹா அது சரி, ஹேமா சசிகலா தான் போட்டுக் கொடுக்கனுமா... ஏன், நாங்கள்ளாம் இல்லே? எங்களுக்குத் தமிழ் தெரியாதா??!! :)))))
    சேட்டை சரிதாபகரமான கமெண்ட் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கல்லாம் நம்ம இனமாச்சே... போட்டுத்தர மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கைதான் ஸ்ரீராம். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  30. பனிக்கூழ் இல்லம்... நல்ல சிந்தனை அய்யா உமக்கு... சலிப்பு தட்டாமல் திகட்டமால் ஒரு நகைச்சுவை விருந்து...
    சரிதா அவர்கள் உங்களிடம் படும் பாட்டை நினைக்கும் பொழுது எங்களுக்கு சந்தோசமாய் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை படித்து ரசித்துப் பாராட்டிய சீனுவுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  31. அந்தத் தமிழ்த் தாய்க்கு ஒரு வணக்கம். :-)

    ReplyDelete
    Replies
    1. தமிழ்த் தாயை வணங்கி ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  32. பனிக்கூழ் இல்லம் பற்றி கூறி இருந்தது மிகவும் ரசிக்க வைத்தது சார்! நகச்சுவையோடு தாங்கள் கொடுத்த தூய தமிழ் விருந்து மிக்க அருமை!

    ReplyDelete
    Replies
    1. நாளாச்சு யுவராணியைப் பார்த்து. வந்ததற்கும் நகைச்சுவையை ரசித்துப் பாராட்டியதற்கும் என் உளம் கனிந்த நன்றிம்மா.

      Delete
  33. உண்மை நிலை இதுதான் சந்தேகமில்லை.சிரிக்க வச்சிட்டேங்க கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த முரளிதரனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  34. செம செம்மொழி !
    மிகவும் ரசித்தேன் !
    நன்றி !

    ReplyDelete
    Replies
    1. செம்மொழி நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  35. அண்ணா, யானும் இப்படி செம்மொழி வளர்க்க பாடுபடலாமென்றிருகிறேன்! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! அருமையான பதிவு அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... பாடு படுங்கள் மணி. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  36. ‘அங்ஙனம் நீ இயம்பினால் யாம் விட்டுவிடுவோமா? எம்மை கடந்த வாரம் முழுதும் தனித்தமிழில் பேசி மகிழ்வித்த(!) உம்முடன் இனிவரும் இரண்டு திங்கள் யாமும் தனித்தமிழில் உரையாடுவதென்பது எமது துணிபு’’ என்றேன//
    aஅப்படிப் போடுங்கோ. இரண்டு திங்கள் நூவீர் தமிழில் இயம்பினீர்களா, ...வீர்களா:)நல்ல பதிவு கணேஷ்.நகையும்சுவையும் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா... இரண்டு தினங்கள் அல்ல... அதற்கு மேலும் நம் மொழியை பேசி மகிழலாம் தானே... நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  37. மிக நகைச்சுவையாக இருந்தது.
    தனித் தமிழ் இந்தப் பாடு படுகிறது..
    ம்..ம்....
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  38. :):) நற்றமிழில் நான் நகைத்து இயம்புவேன்
    நன்றென்று இதுகு மேல முடியல கணேஷ்... சிரிப்பதில் நான் எப்பவுமே மன்னி!!

    ReplyDelete
  39. ஹா ஹா அண்ணி இஞ்சவந்துபாருங்க. அண்ணா உங்கள வாரு வாருன்னு வாரியிருக்காரு..

    செம்மொழியான தமிழ்மொழியே உனக்கு வந்த சோதனையைப்பார்த்தாயா?

    யார் அங்கே பிடித்துவாருங்கள் அந்த கண்டாக்டரையும் .அச்சோ கண்டக்டரை.. அதோடு எங்க அண்ணாவையும். அவர்கள் இருவருக்கும் ஒரு நாள் முழுக்க செம்மொழியிலேயே பேசவேண்டுமென உத்தரவிடுகிறேஎன் ...

    நகைச்சுவை உணர்வுவோடு சூப்பரா எழுதியிருக்கீங்கண்ணா..

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube