Saturday, April 28, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீ்க்கிங்-4

Posted by பால கணேஷ் Saturday, April 28, 2012

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.  

நான் பார்த்த சினிமாக்கள்!

டஙகள் பார்த்தே நான் நடிக்க வந்தேனோ, என்னவோ...

அவ்வளவு படம் பார்ப்பேன். அதுவும் பார்க்க வேண்டிய நேரத்தில் இல்ல, படிக்கப் போற நேரத்தில். படிக்கிற காலத்தில் பணம் கிடைப்பது கஷ்டம்தான். ஆனா எனக்குப் படம் பார்க்காம இருப்பது அதைவிடக் கஷ்டம்!

படம் பார்ப்பதற்காகப் பொய் சொல்லவும் தயார். ஏன், திருடவும் கூடத் தயார்தான்! வீட்டில கேட்டா அனுப்ப மாட்டாங்க- அதுவும் நான் விரும்பிக் கேட்கிற படத்துக்கு. ஏதாவது ஒரு படம் நூறு நாளைத் தாண்டி ஓடினால், அதுவும் புராணப் படமாக இருந்தால் குடும்பத்தோட நாய்க்குட்டி சகிதமாய்ப் போய்ப் பார்க்கணும். ஹோ.... படா பேஜார்!

என் இஷ்டத்துக்குப் படம் பார்க்கணும்- அவ்வளவுதான்! ஆனா பணம்..? என்னா பெருசு, சேர்த்துக்க வேண்டியதுதானே..? கடை வைச்சிருந்தாங்க எங்க வீட்டிலேயே. அதுதான் எனக்கு அக்கவுண்ட் இருக்கிற பேங்க்... ஆனா, யாருக்கும் தெரியாம பணம் ‘டிரா’ பண்ணனும். அதில எல்லாம் நான் கில்லாடி! பணம் கைக்கு வந்துடும்.

நேரம்..? ஸ்கூலுக்கு ‘கட்’!

வாத்தியாருக்கு லீவ் லெட்டர்- எங்க அப்பா எழுதின மாதிரி. லெஃப்ட் ஹேண்டால அவுங்க கையெழுத்து.

ருநாள் என் அண்ணன் கிட்டே மாட்டிக்கிட்டேன் தியேட்டர்லே. விழுந்தது அடிகள். என் வலது முழங்கையில இப்பவும் அந்த அடிகள் தந்த தழும்பு அடையாளத்தைப் பார்க்கலாம்.

அதுக்குப் பிறகு நான் படம் பார்ப்பது பாதி பாதிதான். இப்பவும் அப்படித்தான். ஸ்டார்ட் ஆன பிறகு போறேன். முடியறதுக்கு முன்னாலேயே வந்துடுறேன். அப்ப வீட்டுக்கு லேட்டா போனா, படம் பார்த்தது தெரிஞ்சு போகும்னு பயம். இப்ப ஜனங்கள் பார்ப்பாங்கன்னு பயம்!

ரு கன்னடப் படம் பார்க்க சைக்கிளில் போய், முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போக என் சைக்கிள வந்து பார்த்தேன். சைககிள் இருக்கு - டைனமோ இல்லே. யாரோ அடிச்சிட்டுப் போயிட்டாங்க. அங்க சண்டை போடவும் நேரமில்லே. கம்ப்ளைண்ட் பண்ணவும் முடியல. வீட்டில டைனமோ எங்கேன்னு கேட்பாங்களேன்னு பயம். லைட் இல்லாம சந்து பொந்தெல்லாம் நுழைந்து, போலீஸை ஏமாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.

ஆனா, வீட்டிலே என்ன சொல்றது..? ஒரு ஐடியா தோணிச்சு. சைக்கிளை வீட்டு வாசலுக்கு முன்னால நிக்க வைச்சேன். ஒரு கல்லை எடுத்து உள்ளே இருக்கிறவங்களுக்கு நல்லாக் கேட்கிற மாதிரி ஜோரா சைக்கிள் மேலே வீசி அடிச்சேன். ‘டக்...!’

என்னமோ ஏதோன்னு ஓடி வந்தாங்க. நான் ஓரமா மறைஞ்சிக்கிட்டேன். சைக்கிளைப் பார்த்தாங்க. டைனமோ இல்ல! அவங்களே முடிவு பண்ணிட்டாங்க- கேட்ட ‘டக்’ சத்தம் யாரோ டைனமோவை எடுத்த சத்தம்ன்னு!

பரவாயில்லை... என் மூளையும் அப்போ நல்லாவே வேலை செய்தது. ஆனா, இதுபோல எல்லொருக்கும் மூளை வேலை செய்யும்னு அப்பத் தெரியல. அந்த நிகழ்ச்சி....!

து ஒரு டூரிங் டாக்கீஸ். பேரு ‘பசவேஸ்வரா’. ‌தரை நாலணா, பெஞ்சு பன்னிரெண்டனா- Entrace Fees. இருக்கிற டெண்ட்டும் பழசு, ஓடற படங்களும் பழசு.

எனக்கு ரொம்ப செளகரியம். நாலு மாதத்துக்கு ஒரு வாட்டி கேம்ப் போடுவாங்க. அங்க வேலை செய்யறவங்கதான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலிங்கன்னு என் நினைப்பு. காரணம்... அவுங்க டெய்லி படம் பார்க்கிறாங்களே..!

நானும் எங்கப்பாவும் வீட்டுக்கு வெளியேதான் படுக்கிறது. ஒன்பது மணிக்குப் படுப்போம். பத்து மணிக்கு அப்பா குறட்டை அடிப்பாரு. பத்தே கால் மணிக்குப் படம் ஆரம்பமாகும். பத்தரை மணிக்கு நான் எழுந்திருப்பேன். மூணு தலையணை வைச்சிருப்பேன் கைவசம். மனுசன் படுத்திருக்கிற மாதிரி ‌தலையணைகளை வைச்சி பெட்ஷீட்டைப் போர்த்திட்டு - அப்பா தூங்கிட்டாங்கன்னு அறிஞ்சுக்கிட்டு - மழை வராததையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகு என் கால்கள் டூரிங் டாக்கீஸ் பக்கம் பறந்து ஓடும்- இருட்டுல.

நாலணா கொடுத்துட்டு, யாருக்கும் தெரியாம இப்ப நான் தியேட்டருக்குள்ள நுழையிற மாதிரியே அப்பவும் நுழைவேன். யாராவது பார்த்திடுவாங்கன்னு பயந்து, இப்ப படம் பார்க்கிற மாதிரியே அப்பவும் படத்தைப் பார்ப்பேன். படம் முடியறதுக்கு முன்னாடியே ஓடிடுவேன். படதட்தை விட்டு ஜனங்க ரோட்டில இருக்கும் போது நான் என் படுக்கையில இருப்பேன்..!

இருட்டு! அமைதி... கலகல சப்தம். அப்பா எழுந்திடுச்சிடுவாரு. என் படுக்கைப் பக்கம் பார்ப்பாரு. தலையணை போயி சிவாஜிராவ் அங்கே இருப்பான். இப்படியே நடந்தது பல காலம். எதுக்கும் ஒரு முடிவு வேணுமே...

‘ஜெகதேகவீரனி கதா’ கிளைமேக்ஸ் படு இன்ட்ரஸ்‌டிங்! என்னை மறந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். ‘வணக்கம்’ போட்டதையும் பார்த்திட்டேன். நான் பார்த்த படங்களிலே முதல்ல ‘வணக்கம்’ பாத்து வெளில வந்தேன். லேசா மழை வந்துக்கிட்டு இருக்கு. டெண்ட்டை விட்டுப் பறந்தேன். வீட்டுக்கு வெளியே போயி விழுந்தேன்... பார்த்தேன்!

படுக்கையைக் காணோம்! எல்லாத்தையும் சுருட்டி உள்ளே கொண்டு போயிட்டாங்க- மழை வந்ததுனால. மெதுவா கதவைத் தட்டினேன். தட்டின சப்தம் எனக்கே கேட்கலை. ஆனா... உடனே கதவைத் திறந்தாங்க.

தூங்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாரும் எழுந்திருச்சி உட்கார்ந்தாங்க- அடி தாங்காமல் நான் போட்ட சத்தத்திலே! அன்னையிலேருந்து இன்னிக்கி வரைக்கும் நான் வெளியே தூங்கல.

- ரஜினியின் அனுபவங்கள் நிறைவு -

41 comments:

  1. எல்லோருக்கும் இது மாதிரி அனுபவங்கள் இருக்கும்னாலும் ரஜினின்னா ஸ்பெஷல்தானே ....அவர் பொண்ணுங்க மற்றும் பேரன்கள் இப்போ இதைப் படிக்கணும்...!

    ReplyDelete
    Replies
    1. ம்.. பேரன், மக்களோட முதியவர் ரஜினி படிச்சா அவருக்கே கூட இப்ப ரசிக்கத் தோணும் இந்த அனுபவங்களை! முதல் நபராய் வந்து கருத்திட்ட உங்களுக்கு... இந்தாங்க சூடான காஃபி மற்றும் என் இதய நன்றி!

      Delete
  2. தேங்க்ஸ் கணேஷ்....ஸ்....அப்பா...நல்லா சூடா இருக்கு காஃபி... சர்க்கரையும் கம்மியா அழகாப் போட்டு நுரை பொங்க.... ஆஹா...நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஹை! எனக்கும் சுபாவுக்கும் இந்த மாதிரி காஃபிதான் பிடிக்கும். நீங்களும் நம்ம டைப்ங்கறதுல ரொம்ப சந்தோஷம்!

      Delete
  3. ரொம்ப சுவாரஸ்யமான அனுபவங்கள். நமக்கும் இந்த அனுபவங்கள் நடந்திருந்தாலும், ரஜினிக்கு நடந்தா அது ஹாட் டாபிக் ஆச்சே. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... பிரபலங்களின் அனுபவம் என்றால் அது தனிரகம்தானே! ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு நன்றிகள் பல!

      Delete
  4. // படம் பார்த்தது தெரிஞ்சு போகும்னு பயம். இப்ப ஜனங்கள் பார்ப்பாங்கன்னு பயம்! //

    தலைவரோட அனுபவங்கள் சுமையானதாவும் சுகமானதாவும் இருக்கு. அவரும் சின்ன வயசுல நிறைய சேட்டை செஞ்சிருக்காரு. அருமையான பதிவுகள் சார். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீனு! அருமையான பதிவுன்னு சொல்லி, வாழ்த்தின உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  5. தலைவர பத்தின சுவையான அனுபவங்கள்...நல்லா இருக்கு.அதுக்குள்ளே முடிச்சி விட்டீங்களே...

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்ய..? என்கிட்ட இருந்த ஸ்டாக் அவ்வளவுதான். இன்னும் பழைய புத்தகங்கள்ல தேடி அடுத்த செட் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டாப் போகுது... படித்து ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  6. சுவாரஸ்யமான பதிவு நிறைவடைந்தது வருத்தமே.இருப்பினும் கூடிய விரைவில் இதுபோல் சுவையான செய்தி தொகுப்புகள் தங்கள் பதிவில் வரும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் எதிர்பார்‌க்கலாம். நண்பர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் என் கடனே! தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. ரொம்ப அருமையான பகிர்வு. அதனை நிறைவா
    கொடுத்து, நிறைய கொடுத்து நிறைவு செய்து
    இருக்கீங்க. வித்தியாசமான முயற்சி.
    வாழ்த்துக்கள் கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான முயற்சி என்று ஸ்லாகித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  8. மிக மிக சுவாரசியமாக இருந்தது சார். அதுக்குள்ள முடிஞ்சுடுச்சேன்னு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணுமே...

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் சற்று இடைவெளி விட்டு மறுபடி ஒரு ரவுண்ட் வரலாம் பாலா. பார்க்கலாம்... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  9. சுவையான அனுபவங்கள் ,நகைச்சுவைகலந்து படிக்கவே வெகு சுவாரஸ்யமாக உளளது.

    தூங்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாரும் எழுந்திருச்சி உட்கார்ந்தாங்க- அடி தாங்காமல் நான் போட்ட சத்தத்திலே! அன்னையிலேருந்து இன்னிக்கி வரைக்கும் நான் வெளியே தூங்கல.//ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஸ்டார் மனம் திறந்து பேசினது ரொம்பவே ரசிக்க வைச்சுட்டுதில்ல... உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  10. மிகவும் அருமையாக இருந்ததுங்க . நீங்க சொன்ன விதம் குறிப்பா .

    ReplyDelete
    Replies
    1. ஓ... ரொம்பப் பிடிச்சிருந்ததா? மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி தென்றல்!

      Delete
  11. He is not only a super star but also a super human being because he talks straight from the heart without bothering about the impact it may create in the minds of his fans. Very interesting to read. This is the reason why he hesitates to enter politics because there this sort of attitude will not work out. To put it in other words, "ivan antha velaikku layakku padamattan" - a dialogue from one of the vadivelu's film.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்! சூப்பர் ஸ்டார் என்பதைவிட சூப்பர் மனிதன் என்பதில்தானே பெருமை! அரசியல் விஷயத்தில் உங்களின் கருத்தை நூறு சதம் ஆமோதிக்கிறேன் மோகன். உற்சாகமூட்டிய கருத்துக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  12. பகிர்வுக்கு நன்றிங்க கணேஷ் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. அருமைத் தம்பி! மனவிழியழகா! ரசித்துப் படித்த உங்களுக்கு நானல்லவோ நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி!

      Delete
  13. ரஜினியோட அனுபவங்கள் என்பதால் கூடுதலாகவே சுவாரசியமாக இருந்தது. சைக்கிள் டைனமோ மேட்டர் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  14. ''...அடி தாங்காமல் நான் போட்ட சத்தத்திலே! அன்னையிலேருந்து இன்னிக்கி வரைக்கும் நான் வெளியே தூங்கல....'
    சிரிப்பு வருகிறது.....காலம் செய்யும் கோலம்.....பல நினைவுகள் வருகிறது.....நன்று....பிரபலம்...பழைய அனுபவம்......வாழ்த்துகள்.....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் என் சிறுவயது அனுபவங்கள் சிலவற்றை நான் பகிர்ந்திருக்கிறேன் என் பதிவுகளில். நினைத்தாலே இனிப்பவை அவை. சூப்பர் ஸ்டாருக்கும் அப்படித்தானே... ரசித்து, என்னை வாழ்த்திய தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோ!

      Delete
  15. படிக்கும் போதே சிரித்துக்கொண்டேன். நல்ல சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமாக ரசித்துப் படித்த உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. நல்ல சுவரசியமான அனுபவங்கள் எப்பவுமே படிக்க படிக்க சுகம தான்.

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமான அனுபவங்களை ரசித்த உங்களுக்கு என் மனமார்நத நன்றி!

      Delete
  17. இரவில் படம் பார்த்துவிட்டு திருட்டுத் தனமாய் வீட்டுக்கு வந்து படுத்து.... அடி வாங்கி.. அப்பப்பா... நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    ”நண்பர் வீட்டுக்குப் போறேன், வர லேட்டாகும். அதனால வெளியே திண்ணையில் படுத்துக்கிறேன்” ன்னு சொல்லிட்டு நெய்வேலியிலிருந்து பாண்டி போய் ராத்திரி ஷோ சினிமா பார்த்து விடியும் முன் வந்து திண்ணையில் படுத்த நினைவுகளை மீட்டெடுத்தது! :))

    சீக்கிரமே முடிந்து விட்டதே என்ற ஒரே வருத்தம்தான்!

    ReplyDelete
    Replies
    1. ரஜினியின் அனுபவம் கிட்டத்தட்ட உங்கள் அனுபவத்துடன் நெருங்கி வருகிறதே...! நல்லாருக்கு. சீக்கிரம் முடிந்து விட்டால் என்ன... மறுபடி வேறொரு சுவாரஸ்ய விஷயத்தைப் பிடித்து உங்களுடன் தொடர்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. சுவையான அனுபவங்களுடன் கூடிய நிறைவான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிறைவான பகிர்வு என்று எனக்கு உற்சாகம் அளித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  19. அருமையான அனுபங்களை அழகாய் பட்டியல்லிட்ட பெருமை கணேஷண்ணாவுக்கே!

    அண்ணா தாங்கள் மற்றும் அண்ணி குழந்தைகள் அப்பா அம்மா அனைவரும் நலமா?

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க சிஸ்டர்! நாங்க இங்க நலமே. அனுபவங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. உங்கள்
    வரிகளில் அழகிய
    சுராசியமாக ரஜினியின்
    அனுபவம்

    ம்ம்ம் அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. அனுபவப் பகிர்வை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube