Saturday, October 1, 2011

பழைய சோறு + ஊறுகாய்..!

Posted by பால கணேஷ் Saturday, October 01, 2011
டுத்து பதிவைப் படிப்பவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் நம் சக பதிவர்களின் ஸ்டால்களைக் கவனித்தேன். படிப்பவர்களுக்காக ஒருவர் கொத்து பரோட்டா போட்டுத் தருகிறார். இன்னொருவர் சுடச்சுட சாண்ட்விச்சும் நான்வெஜ்ஜீம் கொடுக்கிறார். வேறொருவர் பேல்பூரியைப் பரிமாறுகிறார். சரி,   நாமும் அப்படி ஏதாவது தரலாமே என்று யோசித்தேன். ஒரு முடிவுக்கும் வர முடியாமல் இருந்த வேளையில் என் அப்பா வாங்கிச் சேர்த்து வைத்து விட்டுப் போன புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டினேன்.

 ‘கல்கண்டு கதம்பம்’ என்று அவரே தலைப்பு வைத்து பைண்ட் பண்ணி வைத்திருந்த 1960-62 ஆண்டு கல்கண்டு இதழ்களின் (விலை 13 பைசா) தொகுப்பு அது. அதில் இருந்த நிறைய சுவையான விஷயங்களில் சிலவற்றை உங்களுக்குத் தருவதென்று முடிவு செய்தேன். ஆக... இது பழைய சோறும் ஊறுகாயும்! (இந்த காம்பினேஷனின் சுவையே அலாதி என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள்)  
=====================================================================
பழைய சோறு :
சந்திரபாபுவின் திமிர்(?)

ட்டங்களும், கேடயங்களும், கோப்பைகளும் வழங்கப்படும்போது அதை நட்சத்திரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் பாராட்டுகளையும், பட்டம் கொடுப்பதையும் வெறுக்கும் நகைச்சுவை நடிகர் நம்மிடையில் இருக்கிறாரென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் சந்திரபாபுவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

சந்திரபாபுவிற்கு ‘சிறந்த நகைச்சுவை நடிகர்’ என்று பாராட்டி ஒரு கோப்பையையும் பரிசளித்தது சினிமா ரசிகர் சங்கம். தான் நன்றாக நடிக்காத ஒரு படத்தில் நடித்ததற்காக அந்தப் பரிசு கொடுக்கப்பட்டதால் அதை மறுத்துவிட்ட சந்திரபாபு, ‘‘என் நடிப்பை ரசிப்பவர்கள் என் ரசிகர்கள். அவர்கள் பாராட்டும் அன்பும் இருந்தால் அதுவே எனக்குப் போதும்’’ என்று சொன்னார்.

அவரிடம் பின்னர் அதைப் பற்றிக் கேட்டபோது, ‘‘பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படம் பார்க்கிறார்கள். ஆனால் சிறந்த நடிகனைத் தேர்ந்தெடுப்பதற்குப் பத்துப் பேர்கள் தானாம்! நான் நடித்ததால் ஓடியது என்று சொல்ல முடியாத ஒரு படத்தில் நடித்ததற்காக எனக்குப் பரிசு கொடுத் தார்கள்! அப்படி என்னை சிறந்த நகைச்சுவை நடிகன் என்று தேர்ந்தெடுக்க யார் இந்தப் பத்து பேர்கள் என்று கேட்கிறேன்...’’ என்று சொல்லுகிறார் சந்திரபாபு.

=====================================================================
ஊறுகாய் :


=====================================================================
பழைய சோறு :

நம்பியாரும், நகைச்சுவையும்!

ப்போதும் தீயவனாக நடிக்கும் நம்பியார் ஒரு நகைச்சுவைப் பேச்சாளர் என்பது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா? நம்பியார் எல்லோரையும் சிரிக்க வைப்பதற்காக கதை சொல்லும் போது சுற்றுமுற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்வார். ஏன் தெரியுமா? அவர் சொல்லும் ஹாஸ்யங்கள் அவ்வளவு தரமுடையவையாக இரா! நம்பியார் ஒரு ‘ஹ்யூமரிஸ்ட்’ என்‌பதை விளக்க அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒன்று போதுமே...

ஜுபிடர் பிக்சர்ஸின் ‘அரசிளங்குமரி’ படப்பிடிப்பில் நடந்தது இது: கதாநாயகன் எம்.ஜி.ஆரும், வில்லன் நம்பியாரும் உக்கிரமாகச் சண்டையிடும் காட்சிதான் அன்று படமாக்கப்பட்டது. இருவருமே கத்திச் சண்டையில் கை தேர்ந்தவர் களாதலால் ‘டூப்’ தேவைப்படவில்லை. கத்திகள் மின்னல் வேகத்தில் சுழன்றன. இருவரும் லாகவமாக சண்டை செய்தும் சற்றும் எதிர்பாராத விதமாக நம்பியாரின் கத்தி, எம்.ஜி.ஆரின் நெற்றியைப் பதம் பார்த்து விட்டது.  ரத்தம் சொட்டுச் சொட்டாக கொட்டவும் ஆரம்பித்து விட்டது.

என்ன செய்வதென்று புரியாமல் அனைவரும் செயலிழந்து நின்றிருந்த போது நம்பியார், ‘‘நான் இன்னமும் டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தவில் லையே...’’ என்று சொன்னதும் அடிபட்டிருந்த மக்கள் திலகம் காயத்தையும் மறந்து வாய் விட்டுச் சிரித்தார். மற்றவர் களும் சிரித்தார்கள். காரணம், டைரக்டர் குத்தச் சொன்ன இடம் என்று நம்பியார் குறிப்பிட்டது படக் கதையின் படி எதிரியின் நெஞ்சு!

என்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தவர்களை செயல்படச் செய்த நம்பியாரின் நகைச்சுவை யாரைத்தான் சிரிக்க வைக்காது?

=====================================================================
ஊறுகாய் :


=====================================================================
பழைய சோறு :

வில்லனைச் சுட்ட வில்லன்!

‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்ற படத்தில் எம்.ஆர்.ராதா வில்லன். அவருக்கு வில்லனாக நடித்தார் ‘கள்ளபார்ட்’ நடராஜன். படத்தின் கிளைமாக்ஸ் சீனில் வில்லன் தன்னை எதிர்க்கும் நடராஜை துப்பாக்கியால் சுட வேண்டும், அவர் இறந்து விடுவார் என்று காட்சி. நிஜத் துப்பாக்கியில் டம்மி தோட்டாவை வைத்து விட்டு தனியாக ‘டுப்’ என்ற சப்தத்தை மட்டும் ஒலிப்பதிவாக்குவது வழக்கம்.

படப்பிடிப்பு துவங்கியதும் இரண்டு வில்லர் களுக்கும் ரோஷமான சண்டை நடந்தது. உணர்ச்சிகரமான அந்தக் கட்டத்தில் இருவரும் சிறப்பாக நடித்தனர். அப்போது ராதாவை அடித்துக் கீழே தள்ளிய நடராஜன் அவர் மேல் ஏறி உட்கார்ந்தார். என்ன இருந்தாலும் நடராஜன் இளைஞரல்லவா?
   கோபம் அதிகரித்த ராதா, கையிலிருந்த துப்பாக்கியால் நிஜமாகவே நடராஜனைச் சுட்டு விட்டார். ‘டம்மி’ தோட்டாவாக இருந்தும் சட்டையைக் கிழித்துக் கொண்டு அது நடராஜைக் கொஞ்சம் தாக்கி விட்டது. ரத்தம் வந்தது. இதனால் ‘கள்ளபார்ட்’ நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் சிறிதானாலும் பெரிய நடிகரால் சுடப்பட்டவர் என்ற பெருமையை அவர் அடைந்து விட்டார் அல்லவா?

=====================================================================
ஊறுகாய் :


=====================================================================
பழைய சோறு:

எம்.ஜி.ஆர்.ன்னா சும்மாவா..?

தமிழ்வாணி தம்பி, கிருட்டிணராயபுரம் எழுப்பிய கேள்வி : எம்.ஜி.ஆரை ஏன் இப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறீர்கள்?

தமிழ்வாணன் எழுதிய பதில் : ஒரு நடிகன், ஒரு படாதிபதி, ஒரு நடிகை, ஓர் எழுத்தாளன் ஆகியோர் அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருந்தல் முதலில் அவர் எழுத்தாளரைப் பார்த்துப் பேசுகிறார். அடுத்து நடிகனைப் பார்த்துப் பேசுகிறார். அடுத்து நடிகையைப் பார்த்துப் பேசுகிறார். கடைசியில்தான் தனக்குப் பணம் தரும் படாதிபதியைப் பார்த்து அவர் பேசுகிறார். அதனால்தான் எம்.ஜி.ஆரை நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இப்படி ஆடுகிறேன்!


டிஸ்கி 1: பழைய சோறு கல்கண்டு இதழ்களிலிருந்தும், முதல் இரண்டு ஊறுகாய்கள் ஆனந்த விகடன் இதழ்களிலிருந்தும் என்னால் தொகுக்கப்பட்டவை. (காப்பி, பேஸ்ட் அல்ல) கடைசி ஊறுகாய் என் நண்பர் ஆரோக்கியதாஸ் வரைந்து கொடுத்தது.


டிஸ்கி 2: நாளை உலக உத்தமர் காந்தியின் பிறந்த தினத்தில் உலகெங்கும் சாந்தி நிலவ பிரார்த்திப்போம்.

டிஸ்கி3 : பழைய சோறும், ஊறுகாயும் எப்படி? ஒரு வார்த்தை சொல்லிப் போட்டிங்கன்னா சந்தோஷம்!

13 comments:

  1. தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்து விட்டேன். ஆணி தீர்ந்ததும் வந்து பின்னூட்டம்..! டோண்ட் மைண்ட்! :-)

    ReplyDelete
  2. பிரமாதம் போங்க... (என்ன இருந்தாலும் பழையசோறு பழையசோறுதான்... ஊறுகாயும் சேர்ந்து நல்ல சுவை... தொடருங்கள்...

    ReplyDelete
  3. சந்திரபாபுவின் வாதம் வினோதமாக இருக்கிறதே! ஜீனியஸ்கள் இப்படித்தானோ? :-)

    அரசிளங்குமரி செய்தி+படம் வெகுஜோர்!
    (அனேகமாக நீங்க தலீவரோட பெர்ர்ரிய விசிறின்னு தோணுது. கீப் இட் அப்)

    ஆரோக்கியதாஸின் கார்ட்டூன் சூப்பர்ப்!

    அசத்துங்க ராசா! :-))

    ReplyDelete
  4. பழைய சோறும் ஊறுகாயும் சூப்பர்தான். நம்பியார் நகைச்சுவை அருமை சார்...
    வாழக்வளமுடன
    வேலன்.

    ReplyDelete
  5. குடந்தை அன்புமணி said...

    பிரமாதம் போங்க... (என்ன இருந்தாலும் பழையசோறு பழையசோறுதான்... ஊறுகாயும் சேர்ந்து நல்ல சுவை... தொடருங்கள்...

    -பாராட்டியதற்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  6. சேட்டைக்காரன் said...

    சந்திரபாபுவின் வாதம் வினோதமாக இருக்கிறதே! ஜீனியஸ்கள் இப்படித்தானோ? :-)

    அரசிளங்குமரி செய்தி+படம் வெகுஜோர்! (அனேகமாக நீங்க தலீவரோட பெர்ர்ரிய விசிறின்னு தோணுது. கீப் இட் அப்) ஆரோக்கிய தாஸின் கார்ட்டூன் சூப்பர்ப்! அசத்துங்க ராசா!

    -நன்றியண்ணா. நான் தலைவரின் தீவிர விசிறிதான். பத்து பேர் கொடுக்கும் அவார்டைவிட ஆயிரம் பேரின் பாராட்டே பெரிது என்ற சந்திரபாபுவின் வாதம் சரிதான் என்றே எனக்குப் படுகிறது. தாஸ் இன்னும் நிறைய எனக்கு வரைந்து கொடுத்துள்ளார். பின்னர் வரும். என்னைப் பொறுத்தவரை ஓட்டை விடவும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டே பெரிதெனக் கருதுகிறேன். நன்றி.

    ReplyDelete
  7. வேலன். said...

    பழைய சோறும் ஊறுகாயும் சூப்பர் தான். நம்பியார் நகைச்சுவை அருமை சார்... வாழக்வளமுடன்.
    -வேலன் சாரின் வருகைக்கும் பாராட்டினையும் கண்டு மிக மகிழ்வடைந்தேன். நன்றிங்க...

    ReplyDelete
  8. முனைவர்.இரா.குணசீலன் said...

    வயிறு நிறைந்தது..
    -முனைவரையாவின் பாராட்டுதல்கள் இன்னும் நிறைய செய்வதற்கு ஊக்கம் அளிப்பவை. நன்றிகள் உரித்தாகுக.

    ReplyDelete
  9. வயிறு நிரம்பி விட்டது கணேஷ்!ஏவ்!
    நல்ல பகிர்வு!

    ReplyDelete
  10. பழைய சோறும் ஊறுகாயும் சூப்பர்

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said...

    வயிறு நிரம்பி விட்டது கணேஷ்!ஏவ்! நல்ல பகிர்வு.
    -நன்றி ஐயா. அடுத்த விருந்து தயாரானதும் அவசியம் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  12. Riyas said...

    பழைய சோறும் ஊறுகாயும் சூப்பர்
    -உங்களின் பாராட்டுக்கு நன்றி ரியாஸ் சார்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube