தீபாவளிப் பண்டிகை மிக அண்மையில் இருக்கிறது. புதிய உடைகளுக்குச் செலவிட்டும், வருடம்தோறும் விலை ஏறும் பட்டாசுகளை குழந்தைகளுக்கு வாங்கித் தந்தும் பட்ஜெட் எகிறும் மாதம் இது. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன், ஒரு ஐந்து பாராக்களில் சம்பிரதாயமாக தீபாவளியைப் பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாம்:
தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. தீபம் என்பது ஒளி தருவது. ஆவளி என்பது வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளிப் பண்டிகை. ஒவ்வொருவரும் தம் மனதில் உள்ள இருட்டுகளை எரித்துவிட வேண்டும் என்பது உட்பொருள்.

இந்துக்கள் தீபாவளி கொண்டாடு வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித் ததைக் கொண்டாடுவதே தீபாவளி என்றும், ராமர் வனவாசம் முடிந்து மீண்டும் நாடு திரும்பிய நாளே தீபாவளி என்றும் சொல்லப்படுகிறது. ஸ்கந்த புராணம், சக்தியின் கேதாரகெளரி விரதம் இந்நாளில் முடிவடைந்து சிவன் அர்த்தநாரீஸ் வரரான தினம் என்கிறது. சீக்கியர்கள் தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினமான இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். சமணர்கள் மகாவீரர் மகாநிர்வாணம் அடைந்த தினமாக இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆக, இந்தியா முழுவதும் பரவலாக வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி.
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து, புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கை வியாபித்து இருப்பதாக நம்பப்படுவதால் ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பது வழக்கமாக இருக்கிறது.
அஸாமில் மகாலட்சுமி பூஜை செய்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் புதுக் கணக்கு எழுதியும், புதிய தொழில் தொடங்கும் நாளாகவும் கருதுகின்றனர். ஹிமாசலப் பிரதேசத்தில் பலவித மண்பாண்டங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை செய்து, அவற்றை மற்றவர்களுக்குப் பரிசளிக்கின்றனர். ராஜஸ்தானில் ஒட்டகங்கள், யானைகளின் அணிவகுப்பு நடத்தி, குன்றுகளில் தீபம் ஏற்றி, பலவர்ண ஆடைகள் அணிந்து கொண்டாடுகின்றனர். ஒரிஸ்ஸாவில் முன்னோர்களை நினைவுகூரும் வண்ணம் அவர்களுக்குப் படையல் வைத்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. மும்பையில் கணபதிக்கும் லட்சுமிக்கும் பூஜை செய்து, மற்றவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் அளித்துக் கொண்டாடுகின்றனர். பீஹாரில் அரிசி மாவில் லட்சுமி படம் வரைந்து, பட்டாசுகள் வெடித்து, துளசிச் செடி முன் படையல் இட்டு தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
இப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் வேறு வேறு விதமாக தீபாவளி கொண்டாடப்பட்டாலும் அஞ்ஞான இருள் அகற்றி, ஒளிமிகு நல்வாழ்வு அமைய அனைவரும் ஒரு மனதாய் பிரார்த்திக்கின்றனர். நாடெங்கும் மகிழ்ச்சி நிலவுகிறது.
பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது அவசியமா என்பது என் மனதில் நீண்ட நாளாக இருந்து வரும் கேள்வி. புராணக் கதையில் கூட, நரகாசுரன் தான் இறந்த தினத்தை அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று கிருஷ்ணரிடம் வரம் கேட்டதாகத்தான் இருக்கிறது. இடையில் பட்டாசு வெடிக்கும் பழக்கம் பிற்காலத்தில் எவராலோ நுழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து என்று செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. சிறுவர்கள் அதிகம் வேலை வாங்கப்படும் தொழில்கள் என்றால் உங்கள் மனதில் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும்தான் நினைவுக்கு வரும். புதிய ஆடைகள் பட்டாசு வெடிப்பதால் பாழ்படுவதும், குழந்தைகள் சிறு விபத்துக்களை சந்திப்பதற்கும் காரணமாக இருக்கும் இந்த விஷயம் எதற்காக? ‘இப்படிப் பலரை துன்புறுத்தி செய்யப்படும் பட்டாசுகளை வெடித்துத்தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா? கொண்டாடுவதற்கு வேறு வழிமுறைகளா இல்லை?’ என்று கேட்டு என் நண்பரின் மகள் பல வருடங்களாக பட்டாசு வெடிப்பதே இல்லை. நானும் அப்படித்தான்.

பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோ கமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங் களில் இருக்கும் குழந்தைகள் தீபா வளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்ய லாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.
தீபாவளி்ப் பண்டிகையைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி...?
|
|
Tweet | ||
தீபாவளி வந்தாச்சு; செலவும் வந்தாச்சு! :-))))))))))
ReplyDeleteநிறைய தகவல்கள் – தீபாவளி மத்தாப்புப் போல...!
சேட்டைக்காரன் said...
ReplyDeleteதீபாவளி வந்தாச்சு; செலவும் வந்தாச்சு! :-)))))))))) நிறைய தகவல்கள் – தீபாவளி மத்தாப்புப் போல...
-ஆம், செலவுகள் வந்தாச்சு... அவை நன்முறையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். வருகைக்கு நன்றி.
"பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோ கமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங் களில் இருக்கும் குழந்தைகள் தீபா வளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்ய லாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.
ReplyDeleteதீபாவளி்ப் பண்டிகையைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி...?"
என் கருத்தும் இது தான்...
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நிறைய தகவல்கள்.,
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
Kannan said...
ReplyDelete"பட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவிடும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோகமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் தீபாவளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்யலாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.
தீபாவளி்ப் பண்டிகையைப் பொறுத்தமட்டில் என் கருத்து இப்படி. உங்களுக்கு எப்படி...?" என் கருத்தும் இது தான்..
-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்ணன்.
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநிறைய தகவல்கள்., பகிர்வுக்கு நன்றி..
-தங்கள் வருகையால் மகிழ்ந்தேன். நன்றி கருன் சார்.
நல்ல தகவல் .. திபாவளி வந்தாஜு
ReplyDeleteநல்லதொரு அலசல்.அறியாத தகவல்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டோம்.
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteநல்ல தகவல் .. திபாவளி வந்தாஜு
-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ராஜா சார்!
ஸாதிகா said...
ReplyDeleteநல்லதொரு அலசல்.அறியாத தகவல்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டோம்.
-தங்களின் கவிதைகளை நான் ரசித்ததுண்டு. தங்களின் வருகையும் கருத்தும் மிக மகிழ்வைத் தந்தது சிஸ்டர். நன்றி.
உண்மைதான்.ஆனல் சிறுவர்களின் பட்டாசு ஆசைக்கு எப்படித் தடை போடுவது?
ReplyDeleteசென்னை பித்தன் said...
ReplyDeleteஉண்மைதான்.ஆனல் சிறுவர்களின் பட்டாசு ஆசைக்கு எப்படித் தடை போடுவது?
-கஷ்டம்தான். எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். (ஒவ்வொரு ஆண்டும் உயரும் பட்டாசு விலை காரணத்தால் உல்லாசப் பயணம், தீம் பார்க் அழைத்துப் போகிறேன் என்று டைவர்ட் செய்ய வேண்டும்.)
நல்ல தகவல்கள்
ReplyDeleteதீபாவளி சீட்டில் சேர்ந்து பட்டாசுகளை வாங்கியபோது எனக்கு இவ்வளவு தொகையில் வாங்க வேண்டுமா என்ற எண்ணம் வந்தது உண்மையே... ஆனால் குழந்தைகளை சமாளிப்பதுதான் கடினம். மற்ற குழந்கைள் வெடிக்கும்போது இவர்களுக்கு வரும் ஏக்கத்தை கண்கொண்டு பார்க்க முடியாது. இந்த விசயத்தை படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். அதற்கு குழந்தைகளை பழக்க வேண்டும். அந்த பக்குவம் குழந்தைகளுக்கு வரவேண்டும்.
ReplyDeleteபட்டாசுகள் வாங்கு வதற்குச் செலவி டும் பணத்தை வைத்து உங்கள் வீட்டுக் குழந்தை களுக்கு உபயோ கமான பொருள் ஏதாவது வாங்கித் தரலாம், அல்லது அனாதை இல்லங் களில் இருக்கும் குழந்தைகள் தீபா வளி கொண்டாடும் விதமாய் அங்கு டொனேட் செய்ய லாம். பண்டிகை என்பது மன மகிழ்வுக்குத் தானேயன்றி வேறு எதற்குமில்லை.
ReplyDeletevery informative.
வைரை சதிஷ் said...
ReplyDeleteநல்ல தகவல்கள்
-வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சதீஷ்!
குடந்தை அன்புமணி said...
தீபாவளி சீட்டில் சேர்ந்து பட்டாசுகளை வாங்கியபோது எனக்கு இவ்வளவு தொகையில் வாங்க வேண்டுமா என்ற எண்ணம் வந்தது உண்மையே... ஆனால் குழந்தைகளை சமாளிப்பதுதான் கடினம். மற்ற குழந்கைள் வெடிக்கும்போது இவர்களுக்கு வரும் ஏக்கத்தை கண்கொண்டு பார்க்க முடியாது. இந்த விசயத்தை படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். அதற்கு குழந்தைகளை பழக்க வேண்டும். அந்த பக்குவம் குழந்தைகளுக்கு வரவேண்டும்.
-அன்புமணி... எனக்கும் இந்த எண்ணம் உண்டு. நேற்று நான் படித்த ஒரு துணுக்கில் காந்திஜி இந்த விஷயத்தில் அற்புதமான ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். அதை வெள்ளிக்கிழமையன்று பதிவிடுகிறேன். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்.
இராஜராஜேஸ்வரி said...
very informative.
-தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!