Thursday, October 27, 2011

போன தபா சினிமா விமர்சனம் எழுதச் சொல்லோ, நாலு பெரீவங்க ‘ஷோக்காக் கீதுப்பா’ன்னு சொல்லிக்கினாங்க. அத்தொட்டு, தெகிரியமா மறுக்கா ஒரு மலியாள சினிமா விமர்சனத்த இங்க குட்த்துருக்கேன்.

ஒருநாள் வரும் : மலையாளம்
சினிமா என்றால் பொதுவாக கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகள், அவன் குடும்பம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித்தான் கதை செய்வார்கள். கதாநாயகன் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வில்லனை வெற்றி கொள்வான். ஆனால் வில்லன் புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தொடர்ந்து ஹீரோ முகத்தில் கரி பூசினால் எப்படி இருக்கும்?

‘ஒருநாள் வரும்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் அப்படித்தான் வில்லன் ஹீரோ வுக்குத் தண்ணி காட்டுகிறார். தவிர, வில்லனின் குடும்பம், அவன் பிரச்சனைகள் ஆகிய வைகளெல்லாம் அலசப்பட்டு இருப்பதால் வித்தியாசமாக அமைந்திருக்கிறது இப்படம். மோகன்லால், சமீரா ரெட்டி, சீனிவாசன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மோகன்லால் மலையாளத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ. நகைச்சுவையாகவும், சீரியஸாகவும் (ஓவர் ஆக்டிங் இல்லாமல்) நடிக்கத் தெரிந்தவர். இந்தப் படத்தின் கதை, வசனத்தை வில்லனாய் நடித்திருக்கும் சீனிவாசன் எழுதியிருக்கிறார். ‘கத பறயும் போள்’ என்ற வெற்றி பெற்ற (தமிழில் ‘குசேலன்’ என்ற பெயரில் தோல்வி பெற்ற) படத்திற்குப் பின் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்.  சென்ற ஆண்டில் வெளியான ‘ஒரு நாள் வரும்’ படத்தை இப்போது தமிழில் டப் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தந்திப் பேப்பரில் விளம்பரம் பார்த்தேன். வந்தால் தவறவிடாமல் அவசியம் பாருங்கள்...

இனி, ‘ஒரு நாள் வரும்’ கதையின் சுருக்கம்:

சீனிவாசன் ஒரு டவுன் ப்ளானிங் ஆபீசர். தன் பணியில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்வார். ஆனாலும் டிரைவரைப் பயன்படுத்தி ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தொகையைக் கறந்து விடுவார். இவருக்கு லஞ்சம் தராமல் எந்த வேலையையும் சாதித்துக் கொள்ள முடியாது. இவரது குடும்பம் மனைவி, டாக்டருக்கு படிக்கும் கனவில் உள்ள, +2 படிக்கும் ஒரே மகள் ஆகியோர்.

 மோகன்லால் தன் ஒரே பெண் குழந்தையைக் கவனித்துக் கொண்டு தனியாக வாழ்‌ந்து வருகிறார். அவர் தன் மகளின் மீது உயிராக இருப்பதையும், மனைவி சமீரா ரெட்டியைப் பிரிந்து வாழ்வதையும் காட்சி களாக உணர்த்தப்படுகிறது.  லால் தன்னுடைய நிலத்தில் ஒரு வீடு கட்ட விரும்பி, வீட்டின் ப்ளானுடன் சீனிவா சனை அணுகுகிறார். ப்ளானில் குறை சொல்லி அனுப்பும் சீனிவாசன் வழக்கம் போல் டிரைவர் மூலம் லாலிடம் லஞ்சம் கேட்கிறார். லாலேட்டன் பணம் கொடுத்து காரியம் சாதிக்க விரும்பாமல் இன்ஜினியரைப் பார்த்து ப்ளானை திருத்திக் கொண்டு வர, அப்போதும் இன்னொரு குறை கண்டுபிடித்து துரத்துகிறார் சீனிவாசன். பணம் தராமல் காரியத்தை முடிக்க முடியாது என்பதை டிரைவர் மூலம் மீண்டும் அறிவுறுத்துகிறார்.

லாலின் மனைவி சமீரா ரெட்டி அவரைச் சந்தித்து, குழந்தையைத் தானே வளர்க்க விரும்புவதாகவும், தன்னிடம் ஒப்படைக்கும் படியும் கேட்கிறார். லால் மறுத்து, கோர்ட்டில் சந்திக்கலாம் என்று கோபமாகப் பேசி அவரை அனுப்புகிறார்.

இப்போது லால் ஒரு விஜிலன்ஸ் ஆபீசர் என்பது வெளிப்படுகிறது. அவர் பவுடர் தூவிய பணத்துடன் சீனிவாசனுக்கு லஞ்சம் கொடுக்க வருகிறார். தனியறையில் அவரிடம் பணம் தரும்போது மறைவிலிருந்து போலீஸ் வெளிப்பட்டு (தனக்கு லஞ்சம்தர லால் முற்படுகிறார் என்று சீனிவாசன் முந்திக் கொண்டு புகார் தந்ததால்) லாலைக் கைது செய்கிறது. லால், தான் ஒரு விஜிலன்ஸ் ஆபீசர் என்பதை நிரூபித்து வெளியே வந்தாலும் மாலை வரை சிறையில் இருக்க நேரிடுகிறது. அவரை சிறையில் சந்திக்கும் சீனிவாசன், ‘‘நீ விஜிலன்ஸ் ஆபீசர் என்பதை முன்பே அறிவேன். இது பெரிய (லஞ்ச) நெட்வொர்க். உன்னால் பிடிக்க முடியாது’’ என்று கொக்கரிக்க, ‘‘பிடித்துக் காட்டுகிறேன்’’ என்று சவால் விடுகிறார் லாலேட்டன்.

சீனிவாசனின் மகள் ப்ளஸ் டூவில் சுமாரான மார்க் பெற்றிருக்க, பெரிய தொகையை கேபிடல் ஃபீஸாகத் தந்தால்தான் மெடிக்கல் காலேஜில் சேர்க்க முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. ஷாப்பிங் மால் ஒன்றின் ப்ளானை அப்ரூவ் செய்வதன் மூலம் அந்தத் தொகையை அடைந்துவிடலாம் என கணக்கிட்டு அந்த பார்ட்டியிடம் (வழக்கம் போல்) டிரைவர் மூலம் பேரம் பேசகிறார் சீனிவாசன். அந்தப் பார்ட்டியிடம் லஞ்சத்தை தங்கக் காசுகளாக வாங்கி கையில் சூட்கேசுடன் வரும் சீனிவாசனை தன் படையுடன் சுற்றி வளைக்கிறார் லால். முகம் வியர்த்த சீனிவாசன் ஓடத் துவங்குகிறார். ஒரு துரத்தல், அங்கங்கே ஒளிதல் ஆகியவற்றின் பின்னர் காரில் ஏறிப் பறக்கும் சீனிவாசனை வீட்டுக்குள் செல்வதற்குமுன் லால் மடக்கி விடுகிறார். சீனிவாசனின் சூட்கேஸை வாங்கிப் பார்த்தால், உள்ளே மல்லிகைப் பூ இருக்கிறது. முகத்தில் கபடச் சிரிப்புடன் நிரபராதியாக நடித்து லாலின் இம்முறையும் முகத்தில் கரி பூசுகிறார் சீனிவாசன்.

லாலின் வக்கீல், கேஸில் தோற்று விட்டதையும், அவர் மகளை மனைவியிடம் ஒப்ப டைக்கத்தான் வேண்டும் என்ப தையும் லாலிடம் தெரிவிக் கிறார். சீனிவாசன் மறைத்து வைத்த தங்கக் காசுகளை பணமாக மாற்றி மகளுக்காகப் பணம் கட்ட குடும்பத்துடன் புறப்படுகிறார். விமான நிலை யத்தில் கஸ்டம்ஸ் உதவியுடன் அவரை மடக்கி, பணப் பெட்டியை சீல் வைத்து கைது செய்கிறார் லால். கோர்ட்டில் சீனிவாசனை நிறுத்தும் போது சீல் வைத்த பெட்டியைத் திறந்தால் அதில் பணத்துக்குப் பதில் சோப்புக் கட்டிகள் இருக்கின்றன. சீனிவாசன், லால் உட்பட அனைவரும் அதிர்கிறார்கள். நேர்மையாகச் செயல்பட முயன்றாலும் முடியாத ஆதங்கத்தை கோர்ட்டில் கொட்டிவிட்டுக் கோபமாகப் போகிறார் லாலேட்டன்.

சிறையிலிருக்கும் சீனிவாசனை வெளியே அழைத்து வரும் லால், அவரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறார். மருத்துவப் படிப்பில் சேர முடியாத விரக்தியில் அவர் மகள் விஷம் குடித்து ஐ.சி.யு.வில் உயிருக்குப் போராடுவதும், தக்க சமயத்தில் லால்தான் அவளைக் காப்பாற்றியதும் சீனிவாசனுக்குத் தெரிகிறது. சீல்‌ வைத்த பெட்டியில் பணத்தை எடுது்துவிட்டு, சோப்புக் கட்டிகளை வைத்தது தானே என லால் சொல்ல, சீனிவாசன் வியக்கிறார். அவர் ஒருவரை மடக்குவது தன் நோக்கமல்ல, அவரை அப்ரூவராக்கி நெட்வொர்க் முழுவதையும் மடக்குவதே தன் நோக்கம் என லால் சொல்ல, சீனிவாசன் அப்ரூவராகி அவரிடம் எல்லாவற்றையும் சொல்கிறார். லாலின் தலைமையில் அந்த நெட்வொர்க் முழுமையும் கைது செய்யப்படுகிறது.

மகளை அழைத்துப் போக வரும் சமீராரெட்டி, அவள் லால் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறாள் என்பதை வழக்கு நடந்த காலத்தில் தான் அறிந்ததாகவும் மகளை லாலிடமிருந்து பிரித்துச் சென்று வாழ தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்கிறார். ‘‘வேறெப்படி வாழ விருப்பம்? மகளுடன் சேர்ந்தே வாழலாமே...’’ என்று லால் சொல்ல, சமீரா சிரிக்கிறார். இருவரும் தோளில் கை போட்டு மகளுடன் வீட்டினுள் செல்ல, படம் நிறைகிறது.

த்திரைப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று எம்.ஜி.ஸ்ரீகுமாரின் இசை. படத்திற்கு முக்கியத் தூணாக அமைந்து உயிரூட்டியிருக்கிறது இசை. மோகன்லாலில் அலட்டிக் கொள்ளாத பண்பட்ட நடிப்பு கதாநாயகனின் பாத்திரத்தை ஜொலிக்கச் செய்திருக்கிறது. எதிர்நாயகனாக நடித்திருக்கும் சீனிவாசனுக்கு நிறைய வேலை. சிறப்பாகச் செய்திருக்கிறார். சமீராரெட்டி வந்து போகிறார்.

கதையின் ஒரு பக்கம் லாலின் சவால், சீனிவாசன் அவரை முறியடித்து அசடு வழிய வைப்பது, மீண்டும் லாலின் முயற்சி, அவர் ஜெயிப்பது என்று செல்ல, மறுபக்கம் லாலின் மனைவி, மகள், சீனிவாசனின் குடும்பப் பாசம் என்று சென்டிமென்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டையும் பாலன்ஸ் செய்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

படம் நிறைவடையும் போது லால் தன் கடமையிலும் வென்று விடுகிறார், குடும்பத்திலும் அவருக்கு வெற்றி கிடைக்கிறது என்று பாஸிட்டிவ் அப்ரோச்சுடன் நிறைவாக முடித்ததில், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. நீங்களும் படம் பார்த்து அதை உணருங்கள்...

14 comments:

  1. பார்த்துட்டேன்! சமீரா ரெட்டி படம் பார்க்கலேன்னா சாமிகுத்தம் ஆச்சே! :-))

    ReplyDelete
  2. அருமையான விமர்சணம்

    ReplyDelete
  3. சினிமாவே பார்ப்பதில்லை.இருப்பினும் வரி விடாமல் உங்கள் விமர்சனம் படித்து விட்டேன் சகோ.

    ReplyDelete
  4. ஒரு நல்ல படம் பற்றிய அருமையான பகிர்வு.சீனிவாசனின்இன்னோரு படம் கூடத் தமிழில் எடுக்கப்பட்டது ”சிந்தாவிஷ்டயாய சியாமளா” என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. பகிர்வும் அசத்தல்!.... மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...........

    ReplyDelete
  6. சேட்டைக்காரன் said...
    பார்த்துட்டேன்! சமீரா ரெட்டி படம் பார்க்கலேன்னா சாமிகுத்தம் ஆச்சே! :-))

    -ஸ்ரேயா படம் பாக்கலைன்னாலும் சாமி கண்ணக் குத்தும். ஹி ஹி. படம் பிடிச்சிருந்ததா?

    K.s.s.Rajh said...
    அருமையான விமர்சணம்

    -நன்றி ராஜா சார்!

    ஸாதிகா said...

    சினிமாவே பார்ப்பதில்லை.இருப்பினும் வரி விடாமல் உங்கள் விமர்சனம் படித்து விட்டேன் சகோ.

    -எனக்காக பொறுமையாக முழுவதும் படித்த உங்களுக்கு ஒரு சல்யூட் சிஸ்டர். சினிமாவே பார்க்காத நீங்க ஒரு அதிசயப் பிறவி தாங்க!

    ReplyDelete
  7. வேடந்தாங்கல் - கருன் *! said...
    பார்க்கலாம்.,

    -கண்டிப்பா நம்பிப் பாருங்க கருன். உங்களுக்குப் பிடிக்கும். நன்றி.

    சென்னை பித்தன் said...
    ஒரு நல்ல படம் பற்றிய அருமையான பகிர்வு. சீனிவாசனின்இன்னோரு படம் கூடத் தமிழில் எடுக்கப்பட்டது ”சிந்தாவிஷ்டயாய சியாமளா” என நினைக்கிறேன்.

    -இந்தத் தகவல் எனக்குப் புதுசு. விசாரிச்சுப் பாக்கறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செ.பி.சார்!

    அம்பாளடியாள் said...
    பகிர்வும் அசத்தல்!.... மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...........

    -கமெண்ட்டைக் கூட கவிதை மாதிரி சொல்றீங்க. மிக்க நன்றி தங்களுக்கு...

    ReplyDelete
  8. கதையே வித்யாசமா இருக்கு. மோகன் லால் நடிப்பை பத்தி கேக்கணுமா என்ன? ரொம்ப தெளிவா எளிமையா எழுதிருக்கீங்க.

    ReplyDelete
  9. சென்டிமென்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டையும் பாலன்ஸ் செய்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்./

    அருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. interesting... eppadi miss panninean indha padathainnu theriyalai, padam paarthuttu thamizhla kandippaa karuthu ezhudhuvenpa, unga valaithalam miga arumai ganesh, anbu vaazhthugaludan koodiya nandrigal, no tamil fonts here sorryppa...

    ReplyDelete
  11. மோகன் குமார் said...
    கதையே வித்யாசமா இருக்கு. மோகன் லால் நடிப்பை பத்தி கேக்கணுமா என்ன? ரொம்ப தெளிவா எளிமையா எழுதிருக்கீங்க.

    -ந்ன்றி மோகன்குமார் சார்!

    இராஜராஜேஸ்வரி said...

    சென்டிமென்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டையும் பாலன்ஸ் செய்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்./

    அருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    -ஊக்கமளிக்கும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிங்க இராஜராஜேஸ்வரி!

    சென்டிமென்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டையும் பாலன்ஸ் செய்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்./

    அருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    மஞ்சுபாஷிணி said...
    interesting... eppadi miss panninean indha padathainnu theriyalai, padam paarthuttu thamizhla kandippaa karuthu ezhudhuvenpa, unga valaithalam miga arumai ganesh, anbu vaazhthugaludan koodiya nandrigal, no tamil fonts here sorryppa...

    -அடாடா.. என் வலைத்தளம் பிடிச்சிருக்குன்னு நீங்க சொன்னது தென்றல் வீசின மாதிரி இருந்தது. மிக மிக நன்றி!

    ReplyDelete
  12. நல்ல ஒரு படத்திற்கான காத்திரமான விமர்சனப் பதிவு படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றது நண்பரே.

    ReplyDelete
  13. என்.ஜி .சிரிக்குமார் தமிழில் பாடகராகத்தான் தெரியும் (சின்னச் சின்ன மழைத்துளி) இப்படம் தமிழில் வந்தால் நல்ல இசையமைப்பாளர் என்றும் அறியமுடியும் என்கின்றது உங்கள் விமர்சனம்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube