Friday, October 14, 2011

காந்தியின் பார்வையில் தீபாவளி!

Posted by பால கணேஷ் Friday, October 14, 2011
தீபாவளிப் பண்டிகை பற்றிய என் பதிவைப் படித்துவிட்டு, ‘பட்டாசு‌கள் வெடிக்காமல் இருக்கலாம் என்பது சரிதான். ஆனால் குழந்தைகள் ஏங்கிப் போய் விடுமே... அதற்கு என்ன செய்வது’ என்ற கேள்வியை நண்பர் திரு.சென்னைப் பித்தனும், திரு.அன்புமணியும் எழுப்பியிருந்தார்கள். இதைப் பற்றி நான் யோசித்த வேளையில் பழைய புத்தகம் ஒன்றில் இந்தத் துணுக்கைப் பார்க்க நேர்ந்தது. மகாத்மாவின் இந்தக் கருத்து அந்தக் கேள்விக்குப் பொருத்தமான பதிலாக அமைந்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்! இதோ, மகாத்மா சொன்னது :

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே? ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

கடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.

-‘யங் இந்தியா’ இதழில் காந்திஜி

==================================================================

தீபாவளிப் பண்டிகை மிக நெருக்கத்தில் இருக்க, தி.நகரில்... குறிப்பாக ரங்கநாதன் தெருவில் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. கன்வேயர் பெல்ட்டில் நகர்வது போல் மனித கன்வேயர் பெல்ட்டாகத்தான் நகர முடிகிறது. அதிலும் அந்தத் தெருவை முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி ரோட்டின் நடுவில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள். இவை நானறிந்து பல மாத காலமாக சரிசெய்யப் படாமல்தான் இருக்கின்றன. இத்தனைக்கும் பண்டிகைக் காலம் இல்லாதபோதுகூட நெரிசலாக இருக்கும் தெரு அது.

இது போதாதென்று தெருவிலுள்ள ஒவ்வொரு கடை எதிரிலும் ஐஸ்க்ரீமிலிருந்து, சில்லி பரோட்டா வரை எல்லாவற்றையும் சகாய(?) விலையில் விற்கப்படுகிறது. நம் மக்களுக்கு இப்படியான பொருட்கள் விற்கும் போது பக்கத்தில் குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயம் வியாபாரிகளுக்கும், சாப்பிடுபவர்களுக்கு பேப்பர் கப்களையும், அட்டை பிளேட்களையும் குப்பைத் தொட்டியைத் தேடி அதில்தான் போட வேண்டும் என்ற நல்ல பழக்கமும். கற்பிக்கப்படவில்லை. விளைவாக, தெருவெங்கும் குப்பைமயம். தெருவைக் கடக்கும் வரையில் ‌சங்ககால மகளிர் போல தலையைக் குனிந்தபடியும் அங்கங்கே, ஹை ஜம்ப், லாங் ஜம்ப் செய்தும் போக வேண்டியிருக்கிறது. (ஸ்கூல் டைமில் ஸ்போர்ட்ஸ் கிளாசுக்கு டிமிக்கி கொடுத்ததற்கு தண்டனை) இத்தனை இடைஞ்சல்களிலும் நாம் பர்ச்சேஸ் செய்த பொருட்களையும், செல்போன் இத்யாதிகளையும் பறிகொடுத்து விடாமல் செல்ல வேண்டிய அவசியம் வேறு என்று தெருவைக் கடப்பதற்குள் விழிபிதுங்கி விடுகிறது. அந்தப் பகுதியில் ஷாப்பிங் செல்லும் ஐடியா வைத்திருப்பவர்கள்... உஷார்!

இந்த நேரத்தில், ‘‘ரங்கநாதன் சாலையில் ஓர் உண்டியல் வைத்து, அந்த சாலையைக் கடப்பவர்கள் எல்லோரும் ஒரு ரூபாய் போட்டாலும்கூட போதும். தங்கத்திலேயே அந்த ரோட்டைப் போட்டு விடலாம்...’’ என்று எழுத்தாளர் பா.ராகவன் தன் பதிவில் எழுதியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது.

==================================================================

மிழ் மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வார்த்தைகள் புதிதாய் சேர்ந்து கொண்டு விடுகின்றன. ‘சும்மா’ என்கிற வார்த்தை எப்படி, எப்போது தமிழில் சேர்ந்திருக்கும் என்பது தெரியவில்லை. சும்மா என்ற வார்த்தையை சும்மாச் சும்மா உபயோகிக்கிறோம். ‘சும்மா உன்னைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்...’, ‘சும்மா சொல்லக் கூடாது.’, ‘சும்மா எதையாவது சொல்லாதடா. அவன் அப்படிச் செய்யற ஆள் இல்ல...’, ‘சும்மாச் சும்மா என்னையே குத்தம் சொல்லிட்டிருக்காதீங்க...’ என்றெல்லாம் அனைவராலும் சரமாரியாக பேசப்படும் வார்த்தையாக இது இருக்கிறது.

நான் பார்த்த ஒரு பழைய திரைப்படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தி, ‘‘சும்மா சொல்லப் படாது...’’ என்று அவர் பாணியில் நீட்டி முழக்கிக் கூற, அருகிலிருக்கும் நாகேஷ் கையமர்த்தி விட்டு, தன் பையிலிருந்து பத்து ரூபாய் எடுத்துத் தந்து விட்டு, ‘இப்பப் பேசு’ என்கிற மாதிரி கையசைப்பார். ஒரு வார்த்தையும் பேசாமல் சிரிக்க வைக்க முடியும் என்றால்... அதுதான் நாகேஷ்! ‘சும்மா’ என்ற வார்த்தையைப் பற்றி சும்மா யோசித்தபோது இது நினைவுக்கு வந்தது. அது இருக்கட்டும்... ‘சும்மா’ எப்படி புழக்கத்துக்கு வந்தது என்பதை யாருக்காவது தெரிந்தால் ‘சும்மா’ கரடி விடாமல் ‌எனக்குச் சொல்லுங்களேன்... (தேனக்கா, நீங்க கோவிச்சுக்காதீங்க... நேத்து ராத்திரி ‘சும்மா’ உக்காந்து என்ன மேட்டர்லாம் எழுதலாம்னு யோசிச்சப்ப இது தோணிச்சு. எழுதிட்டேன்.)

==================================================================

பைனல் டச் :
ஸ்மைல் ப்ளீஸ் சார்..!

14 comments:

  1. //இந்த நேரத்தில், ‘‘ரங்கநாதன் சாலையில் ஓர் உண்டியல் வைத்து, அந்த சாலையைக் கடப்பவர்கள் எல்லோரும் ஒரு ரூபாய் போட்டாலும்கூட போதும். தங்கத்திலேயே அந்த ரோட்டைப் போட்டு விடலாம்...’’ என்று எழுத்தாளர் பா.ராகவன் தன் பதிவில் எழுதியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது.//

    எத்தனை பேரு போடுவாங்க-ன்னு நினைக்கறீங்க? ஆனாலும் பா.ரா. ஐயாவுக்கு சென்னைவாசிகள் மேலே இவ்வளவு நம்பிக்கை ஆகாது. :-))

    ReplyDelete
  2. அப்புறம், உங்க ஒவ்வொரு இடுகையையும் தமிழ்மணத்துலே சேர்த்து தன்னலமற்று பணியாற்றி வரும் சேட்டைக்காரன் நிவாரண நிதி என்று தனியாக ஒரு உண்டியல் போட்டு, வசூலாகிற தொகையில் அடுத்த சந்திப்பின் போது டீயும் பொறையும் வாங்கித் தர வேண்டும். :-)

    ReplyDelete
  3. சேட்டைக்காரன் said...

    எத்தனை பேரு போடுவாங்க-ன்னு நினைக்கறீங்க? ஆனாலும் பா.ரா. ஐயாவுக்கு சென்னைவாசிகள் மேலே இவ்வளவு நம்பிக்கை ஆகாது.

    -நல்ல யோசனையா இருக்கேன்னு நான்கூட நம்பிக்கை வெச்சேனே... நானும் அப்‘பாவி‘ தானா..?

    ReplyDelete
  4. சேட்டைக்காரன் said...

    அப்புறம், உங்க ஒவ்வொரு இடுகையையும் தமிழ்மணத்துலே சேர்த்து தன்னலமற்று பணியாற்றி வரும் சேட்டைக்காரன் நிவாரண நிதி என்று தனியாக ஒரு உண்டியல் போட்டு, வசூலாகிற தொகையில் அடுத்த சந்திப்பின் போது டீயும் பொறையும் வாங்கித் தர வேண்டும்.

    -அயராது பணியாற்றி வரும் சேட்டைக்கார அண்ணனுக்கு டீ, பொறைல்லாம் சாதாரணம்... இதயத்தையே கொடுத்திருக்கேனே...

    ReplyDelete
  5. இந்த நேரத்தில், ‘‘ரங்கநாதன் சாலையில் ஓர் உண்டியல் வைத்து, அந்த சாலையைக் கடப்பவர்கள் எல்லோரும் ஒரு ரூபாய் போட்டாலும்கூட போதும். தங்கத்திலேயே அந்த ரோட்டைப் போட்டு விடலாம்...’’ என்று எழுத்தாளர் பா.ராகவன் தன் பதிவில் எழுதியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது.////

    சார்,ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் வரும் மக்கள் எதிரே வரும் ஆளே கண்களுக்கு தெரியாத மாதிரி ஷாப்பின் என்ற ஒரே இலக்கை நிர்ணயித்துக்கொண்டு குதிரைக்கு லாடம் கட்டியது போல் செல்வார்கள்.அவர்களாவது பொறுமையாக நின்று உண்டியலில் காசு போடுவதாவது.

    ReplyDelete
  6. சீஸனுக்கேற்ற உபயோகமான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஸாதிகா said...

    சார்,ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் வரும் மக்கள் எதிரே வரும் ஆளே கண்களுக்கு தெரியாத மாதிரி ஷாப்பின் என்ற ஒரே இலக்கை நிர்ணயித்துக்கொண்டு குதிரைக்கு லாடம் கட்டியது போல் செல்வார்கள்.அவர்களாவது பொறுமையாக நின்று உண்டியலில் காசு போடுவதாவது.

    -ஸாதிகா மேடம்... குதிரையாவது பரவாயில்ல... சிலபேர் எதிர்ல வரவங்களக் கூட பாக்காம மோதிட்டுப் போறாங்க...

    ஸாதிகா said...

    சீஸனுக்கேற்ற உபயோகமான பகிர்வுக்கு நன்றி.

    -உங்கள் வருகையே எனக்கு மிகவும் மகிழ்வு தரும். பாராட்ட வேறு செய்திருக்கிறீர்கள். மிகமிக மகிழ்கிறேன் சிஸ்டர்! என் நன்றியும் தங்களுக்கு உரித்தாகட்டும்.

    ReplyDelete
  8. இந்த நேரத்தில், ‘‘ரங்கநாதன் சாலையில் ஓர் உண்டியல் வைத்து, அந்த சாலையைக் கடப்பவர்கள் எல்லோரும் ஒரு ரூபாய் போட்டாலும்கூட போதும். தங்கத்திலேயே அந்த ரோட்டைப் போட்டு விடலாம்...’’ என்று எழுத்தாளர் பா.ராகவன் தன் பதிவில் எழுதியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது.

    ஸ்மைல் ப்ளீஸ்.

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி.
    சும்மா சொன்னாலும் சூப்பரா சொன்னீங்க!

    ReplyDelete
  10. ரெங்கநாதன் தெருவில் நீங்கள் மழை நேரத்தில் சென்று இருக்கின்றீர்களா? தப்பி தவறி நீங்கள் வெள்ளை பேண்ட்போட்டுகொண்டு சென்றால் அது கறுப்பு நிறமாகவோ-ஊதா நிறமாகவோ இலவசமாக மாறிவிடும்.. சும்மா சொல்லக்கூடாது பதிவு அருமை.போட்டோ அருமை...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. ஸ்மைல் ப்ளீஸ்
    இன்னா செய்தாரை அவர் நாண நன்நயம் செய்துவிடல் ....எப்படி என்று புரிகிறது.....ரெடி ஸ்டெடி ....
    ஷூட் .
    ஒன் டூ த்ரீ

    ReplyDelete
  12. Raja Rajeswari,
    Chennai Pithan,
    Velan,
    Goma

    -Sincere thanks to all for your visit and comments. -ganesh.

    ReplyDelete
  13. அவ்வப்போது தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். இன்று வலைச்சரத்தில் கில்லர்ஜி அழைத்த விடுப்பில் உங்களைக் காணவந்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube