Thursday, October 20, 2011

பழைய சோறு + ஊறுகாய் - 2

Posted by பால கணேஷ் Thursday, October 20, 2011
ரே விஷயத்தை அணுகும் முறை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டிருக்கும். நகைச்சுவை என்கிற விஷயத்தை எல்லோரும் ஒரே விதமாகத் தான் அணுக முடியும். தங்களின் நகைச்சுவை அனுபவங்களைச் சொல்லும்படி கேட்கப்பட்ட போது பழைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை மேதைகளான இந்த மூவரின் பார்வையும் எப்படி மாறுபட்டிருக்கிறது பாருங்களேன்...

===================================================================
ஜே.பி.சந்திரபாபு :

‘அன்னை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மாலை 6 மணி சுமாருக்கு அந்தப் படத்தில் புது மாதிரியான சிரிப்புக் காட்சி ஒன்றைச் சேர்க்கும் படி திடீரென்று என்னிடம் சொன்னார்கள். ‘‘சரி, பெருச்சாளிகளை எங்கிருந்தாவது உடனே பிடித்து வாருங்கள்’’ என்றேன். பன்னிரண்டு பெருச்சாளிகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அந்தப் படத்தில் பெருச்சாளிகள் என் உடம்பு முழுக்க ஓடுவதைப் பார்த்திருக்கலாம். அசல் பெருச்சாளிகள்தான் அவைகள். என் கன்னத்தில் கூட பெருச்சாளிகள் நிற்கும். அவற்றின் பயங்கர நாற்றம் ஒருபுறம் என்றால் அவைகள் என் உடம்பெங்கும் நகத்தால் கீறியது மறுபுறம் அவஸ்தை. இதற்காகப் பல ஊசிகள் போட்டுக் கொண்டேன்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் முட்டையைச் சாப்பிட்டுவிட்டு கோழிக்குஞ்சு என் வாயிலிருந்து வருவதாகக் காட்சி. உண்மையாகவே வாயில் அசல் கோழிக்குஞ்சு ஒன்றை வைத்திருந்தேன். அந்த ‘ஷாட்’ முடிய சுமார் மூன்று நிமிடம் ஆயிற்று. அதுவரை வாயில் இருந்த கோழிக் குஞ்சு நாக்கைப் பிறாண்டியது. வாயைக் கொத்தியது. மூச்சுக்கூட விட முடியாமல், கோழி்க்குஞ்சு அளித்த வேதனைகளைப் பொறுத்துக் கொண்டேன். வாயில் ரத்தம்கூட வந்து விட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் கஷ்டம் என்று நான் கருதவில்லை. நடிப்பு என்பது உயர்ந்த கலை. உண்மையான நடிகன் இதையெல்லாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்.

(சந்திரபாபுவின் அந்த ‘அன்னை’ , ‘நாடோடி மன்னன்’ காட்சிகளை இப்போது பார்த்தாலும் குபீர் சிரிப்பு வருவதென்னவோ உண்மைதான்!)


===================================================================
 ஊறுகாய் :
 

===================================================================
   நாகேஷ் :

தாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் ரசிகர்களைச் சிரிக்க வைக்க இப்படிக் கஷ்டப்பட்டேன் என்று நான் சொல்ல, அதைப் படிக்கும் ரசிகர், ‘‘பாவம், இவ்வளவு கஷ்டப்பட்டீர்களா? எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால் சிரித்திருப்பேனே...’’ என்று சொல்லி விட்டால் என்ன செய்வது?

நான் ஒரு படத்தில் ‘‘எனக்கு சோடா கிடையாதா?’’ என்று சாதாரணமாகக் கேட்டபோது ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இன்னொரு படத்தில் நான் கஷ்டப்பட்டு நடித்ததாக நினைத்தேன். ஆனால் யாருமே சிரிக்காமல் ‘கம்’மென்று இருந்து விட்டார்கள்.

(‘பொடி மட்டைகள் தும்மாது. பொடி போடுபவன்தான் தும்முவான்’ என்று தென்கச்சி சுவாமிநாதன் சொன்னார். அதுமாதிரி நாகேஷ் சிரிக்காமல் இதைச் சொன்னாலும் நமக்குத்தான் சிரி்ப்பு பொத்துக் கொண்டு வருகிறது.)
===================================================================
 ஊறுகாய் :


=================================================================== தங்கவேலு :

‘தேன் நிலவு’ படத்திற்காக காஷ்மீர் போயிருந்தபோது நான், ஜெமினி, வைஜயந்தி ஆகியோர் ஒரு ‘டோங்கா’ (குதிரை) வண்டியில் அமர்ந்து மலைச் சாலையில் போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று குதிரை மிரண்டு படுவேகத்தில் ஓட, வண்டி கழன்று பின்னாலேயே ஓடியது. மலைப்பாதையில் வேலி போட்டிருக்க, பின்புறம் ஓடிக் கொண்டே வந்த வண்டி வேலியை நெருங்கியது. வேலி முறிந்தால் வண்டி அப்படியே மலையிலிருந்து கீழே விழ வேண்டியதுதான். நான் உடனே சமயோசிதமாக வேலியை ஒரு உதை உதைத்தேன். அதிலிருந்த ஒரு கம்பு உடைந்து எகிற, மற்ற இரண்டு கம்புகளில் வண்டிச் சக்கரங்கள் அகப்பட்டுக் கொண்டு வண்டி நின்றதால் தெய்வாதீனமாகத் தப்பித்தோம்.

-இந்த மாதிரி சுவாரசியமான அனுபவங்கள் எதுவும் எனக்கு இல்லை. வேண்டுமானால் இதுபோல இன்னும் சுவாரசியமாகப் பொய் சொல்லவா?

(ஆஹா... நெசம்போலவே ஒரு விசயத்தைச் சொல்லி நம்மை இப்படி ஏமாத்திட்டாரே... ஆனாலும் டமாசாத்தான் இருக்கு!)

===================================================================
 ஊறுகாய் :
 
===================================================================
 
-பழைய ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...

17 comments:

  1. டணால் தங்கவேலு பணால்-னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்காரே? :-)

    நல்ல தொகுப்பு!

    ReplyDelete
  2. தெரியாத விஷயம் ...நன்றி

    ReplyDelete
  3. சேட்டைக்காரன் said...

    டணால் தங்கவேலு பணால்-னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்காரே? :-)
    நல்ல தொகுப்பு!

    -இல்லையா பின்னே... டூப் மாஸ்டரா நடிச்சே பேர் வாங்குனவராச்சே அவரு...

    ReplyDelete
  4. கோவை நேரம் said...

    தெரியாத விஷயம் ...நன்றி

    -உங்கள் வருகை எனக்கு உவகை. உங்கள் பாராட்டு எனக்கு உரம். நன்றி சார்!

    ReplyDelete
  5. அருள் said...

    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    -லிங்க்ல நல்ல விஷயம் சொல்லியிருக்கிங்க அருள். வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தையும் சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

    ReplyDelete
  6. மூன்று நகைச்சுவை நடிகர்களின் பகிர்வும் அருமை.. நன்றி கணேஷ்..:)

    ReplyDelete
  7. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    மூன்று நகைச்சுவை நடிகர்களின் பகிர்வும் அருமை.. நன்றி கணேஷ்..:)

    -உங்கள் வருகை எனக்கு என்றுமே மகிழ்ச்சி தருவது. உங்களுக்குப் பிடித்திருந்ததில் மேலும் மகிழ்கிறேன். நன்றிக்கா.

    ReplyDelete
  8. நல்ல தொகுப்புக்கள் பாஸ்
    நன்றி

    ReplyDelete
  9. கட்டித்தயிருடன் அமிர்தம்!

    ReplyDelete
  10. அருமையான நகைச்சுவை நடிகர்களின் தொகுப்பு

    ReplyDelete
  11. K.s.s.Rajh said...
    நல்ல தொகுப்புக்கள் பாஸ். நன்றி

    -உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ராஜா.


    சென்னை பித்தன் said...
    கட்டித்தயிருடன் அமிர்தம்!

    -நான் மிக மதிப்பவர்களில் ஒருவரான தங்களின் ரசிப்பு எனக்கு மகிழ்வூட்டுகிறது. நன்றி சார்!

    வைரை சதிஷ் said...
    அருமையான நகைச்சுவை நடிகர்களின் தொகுப்பு.

    -ஹல்லோ சதீஷ் நலம்தானே... தங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  12. மறக்க முடியாத முக்கிய மூன்று நகைசுவையாளரின்தொகுப்புப் பகிர்வு அருமை !...மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ..

    ReplyDelete
  13. முத்தான மூன்று நகைச்சுவை நடிகர்கள் பற்றிய பகிர்வு நன்று சார்

    ReplyDelete
  14. அம்பாளடியாள் said...
    மறக்க முடியாத முக்கிய மூன்று நகைசுவையாளரின்தொகுப்புப் பகிர்வு அருமை !...மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ..

    -என் தளத்துக்கு வந்தமைக்கும் பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தங்களுக்கு உரித்தாகுக!

    r.v.saravanan said...
    முத்தான மூன்று நகைச்சுவை நடிகர்கள் பற்றிய பகிர்வு நன்று சார்.

    -வாங்க சரவணன் சார், முதல் தடவையா விசிட் பண்ணியிருக்கீங்க. நல்வரவு. தங்கள் பாராட்டுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  15. அருமையான..முத்தான... மூன்று நகைச்சுவை தொகுப்பு பொக்கிஷங்களை பகிர்ந்து பரவசமளித்தமைக்கு எமது வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  16. மூன்று பேருமே தமிழ் திரைக்கு கிடைத்த நகைச்சுவை முத்துக்கள்.
    சிரித்து மகிழ்ந்தேன்.
    நன்றி

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube