Friday, June 7, 2013

காதல்! ஒரு தென்றல் போல... அநேகமாக எல்லார் வாழ்விலும் காதல் அல்லது காதல் போன்றொரு உணர்வு ஒரு முறை கடந்து சென்றிருக்கும் என்பது நி்ச்சயம். அதென்னமோ தெரியவி்ல்லை... காதல் வந்தாலே கூடவே கவிதையும் வந்து விடுகிறது. காதலிக்கிற நபர்கள் ஒன்று கவிதை எழுதுகிறார்கள். அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எதையாவது எழுதி, மற்றவர்களைப் படுத்துகிறார்கள். என் அறை நண்பன் ஒருமுறை காதலி கீழே ‌போட்ட பஸ் டிக்கெட், தவறவிட்ட பைசா எல்லாம் தனக்குப் பொக்கிஷம் என்று எழுதின கவிதையை அப்படி கிண்டலடித்திருக்கிறேன். ஏன்னா... அந்த ஃபீலிங் நம்ம பக்கம் திரும்பாததாலதான்! அதிர்ஷ்ட (துரதிர்ஷ்ட?) வசமாக எனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லையென்பதால் கவிதை உலகம் தப்பிப் பிழைத்தது! ஹி.. ஹி...!

கோவையில் வேலைக்குச் செல்லத் துவங்கிய நாட்களில் ஒருமுறை கோவையில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். பஸ்ஸின் பின் பகுதியில் நின்றிருந்த என்னை முன் பகுதியில் நின்றிருந்த ஒரு மலையாளப் பெண் உற்று நோக்குவதைக் கவனித்தேன். புன்னகைத்தாள் என்னைப் பார்த்து. மலையாள பாணியில் வெள்ளையில் ஜரிகை பார்டர் போட்ட புடவை... கருகருவென இடுப்பைத் தொடும் கூந்தல்... ஏக்கரா கணக்கில் அகன்ற கண்கள்! செம க்யூட்! நான் சுற்றுமுற்றும் பார்த்து, நிஜமாகவே என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறாளா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். (கன்னம் பழுத்துவிடக் கூடாது, பாருங்கள்... ஹி... ஹி...) என் அருகில் ஒரு தாத்தாவும், இந்தப் பக்கம் ஒரு பொடியனும் நின்றிருந்தார்கள். நிச்சயம் நம்மைப் பார்த்துத்தான் சிரிக்கிறாள் என்பது கன்ஃபர்ம்ட். நானும் புன்னகைத்தேன். அடுத்த நான்கு நிறுத்தங்கள் தள்ளி நாங்களிருவரும் இறங்கும் வரை பலமுறை என்னைப் பார்த்து சிரித்து, ஏதோ சொல்ல முயற்சித்தாள். எனக்குத்தான் சைகை பரிபாஷை புரியவில்லை. நான் இறங்கிய ஸ்டாப்பிலேயே அவளும் இறங்கியதால் ஆர்வத்தோடு அவளை அணுகி, ‘‘ஹாய்... என்கிட்ட ஏதோ சொல்ல வந்தீங்களே... என்ன?’’ என்று ஆர்வமுடன் கேட்டேன். ஒரு பந்தில் ஒரு விக்கெட் விழுவதைத்தானே பார்த்திருப்பீர்கள் நீங்கள்... அவள் சொன்ன ஒற்றை வார்த்தை என்னை இரண்டு முறை விக்கெட் வீழ்த்தி காலி பண்ணியது. அந்த வார்த்தை என்னவென்பதை நான் சொல்ல மாட்டேன்ப்பா!

காதல் என்பது பொதுவாக பெண்களுடன் சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. நட்பைக் காதலிக்க, இயற்கையைக் காதலிக்க, பெற்றோரைக் காதலிக்க என்று எத்தனை இருந்தாலும் ‘காதல்’ என்ற ஒற்றை வார்த்தை முதலில் குறிப்பது ஆண்-பெண் காதலைத்தான். காலேஜ் படிக்கும் காலத்தில் மஹேஸ்வரி என்ற ஒரு பெண்ணை அவளின் பழைய 10 பைசா நாணயம் போன்ற நெளிக் கூந்தலுக்காக விரட்டி விரட்டி சைட் அடித்தது நினைவில் இருக்கிறது. அப்பக்கூட காதல் என்ற உணர்வோ, கிட்டே போய்ப் பேசும் தைரியமோ வரவில்லை.

அதன்பின் ஸ்மூத்தாகப் போய்க்கிட்டிருந்த லைஃப்ல இன்னொரு பொண்ணு குறுக்கிட்டா. அலுவலக வேலை நிமித்தமாக கோவை பிராஞ்சிலிருந்த நானும், சென்னை பிராஞ்சிலிருந்த அவளும் நாள் முழுதும் நிறையப் பேச வேண்டியிருந்தது. பேச்சு அலுவலக விஷயங்களைத் தாண்டி எங்கெங்கோ போனதுல நேரில் சந்திக்காமலே லவ் ஸ்டார்ட்டாயிடுச்சு. லவ்வுன்னா உங்கூட்டு லவ்... எங்கூட்டு லவ இல்லீஙக.. செமையான லவ்! கோவையில பாக்கற எல்லாமே அழகாத் தெரிஞ்சது எனக்கு. என் ரூம் கூட பிரகாசமாயிட்ட மாதிரி ஃபீலிங். அறை நண்பன்தான் கேட்டான். ‘‘என்னடா ஆச்சு உனக்கு...? ஒரு வாரமா ‌கோமியம் குடிச்ச மாதிரி மூஞ்சிய வெச்சுககிட்டிரு்க்க?’’ என்று.

சரிதான்... இந்தக் காதல் நமக்குள்ளதான் பிரகாசத்தைத் தரும் போலருக்குன்னு நெனச்சுக்கிட்டேன். அந்தக் காதல் பின்னாடி நேர்ல சந்திச்ச ஒரு சந்திப்புக்கப்புறம் நீர்த்துப்‌ போச்சு. காதலி பை சொல்லிட்டா.. ஏன்னா நம்மளோட உருவ அழகு(?) அப்படி! அப்படின்னா அதுக்குப் பேர் காதலே இல்லன்னு நீங்க சொல்லலாம்... ஆனா என் சைட்ல முழு மனசோட இருந்ததால அது நிச்சயம் காதல்தான் அப்படின்னு நான் சொல்லுவேன். விதி அதுக்கப்புறம் நமக்கு இந்த அனுபவத்தைத் தந்து சோதிக்காம கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாயிருடான்னு சொல்லிடுச்சு. ஹும்...!

இப்ப எதுக்காக இப்படி காலயந்திரத்தில அதுவும காதல்ங்கற எபிஸோட்ல மட்டும் பேக் ட்ராவல் பண்ணனும் நாம? காரணம்... நம்ம கு.மி.சி. சீனுதாங்க! அவரோட தளத்துல காதல் கடிதங்களுக்கு ஒரு போட்டி வெக்கப் போறதாகவும், அதுக்கு நான் நடுவரா இருக்கணும்னும் கேட்டுக்கிட்டாரு. (ஐயோ, பாவம்!). காதல் கடிதங்கள் எழுதறதப் பத்தின ‌போட்டி அது. நடுவரா நீங்க இருந்து தகுதியானவங்களை செலக்ட் பண்ணித் தந்துட்டா ஒரு கார் வாங்கித் தர்றேன்னிருக்கார் சீனு! ஹி... ஹி... அந்தப் போட்டி பத்தின மேல் (அ) ஃபீமேல் விவரங்கள் வேண்டுவோர் இங்கே க்ளிக்குக. உடனே காதல்ங்கற சப்ஜெக்ட் மனசுக்குள்ள புயலாப் புகுந்துருச்சு. நான் உணர்ந்த காதலின் சில துளிகளை மனம் மீண்டும் நினைச்சுப் பாககவும். அதுலருந்து கொஞ்சத்தை உங்களோடல்லாம் ஷேர் பண்ணிக்கலாம்னு தோணிச்சு. சரின்னு எழுதி்யாச்சு. பின்ன காணான்... என்னங்க... ஓ...! அதுவா...?

அவள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை : ‘‘ஜிப்பைப் போடுங்க அண்ணா!’’
 

52 comments:

  1. காலேஜ் படிக்கும் காலத்தில் மஹேஸ்வரி என்ற ஒரு பெண்ணை அவளின் பழைய 10 பைசா நாணயம் போன்ற நெளிக் கூந்தலுக்காக விரட்டி விரட்டி சைட் அடித்தது நினைவில் இருக்கிறது.

    றொம்ப வெளிப்படை அங்கிள் நீங்க.

    காதல் எல்லோர் வாழ்விலும் வரும்.

    ReplyDelete
    Replies
    1. பாத்து நாளாச்சு எஸ்தரை! நல்லா இருக்கியாம்மா? மீண்டும் வலைப்பக்கம் வந்தாசசா? வந்து பாக்கறேன்... இயல்பான சுவாரஸ்யங்கள் எல்லார் வாழ்விலும் உண்டு எஸ்தர். வெளிப்படையாய் இருப்பதே சிறப்பு! ரசித்துப் படித்த உனக்கு மிக்க நன்றி!

      Delete
  2. செமையான லவ் தான் போங்க... ஏக்கரா கணக்கில் கண்கள் அப்படியே தெரிகிறது... முடிவில் அந்த அண்ணா தான் கொஞ்சம் இடிக்கிறது... கொடுத்து வைக்காதவ(ள்)ர்...

    இதையே கடிதமாக மாற்றினால் 500 ரூபாய் உங்களுக்கு தான் தர வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம்ம்... என்ன செய்ய தனபாலன்? நமக்கு லக் அவ்ளவ்தான். ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. வள் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை : ‘‘ஜிப்பைப் போடுங்க அண்ணா!’’///
    பாத்தீங்களா உங்க லஞ்ச் பேக்குல இருந்த உங்க லஞ்சை எடுத்துவிட்டு நமட்டு சிரிப்பு உங்களை பாத்து சிரித்துவிட்டு கடைசியில ஜிப்பைப் போடுங்க அண்ணா!’ என்று சொல்ல என்ன தைரியம் அந்த பொண்ணுக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா... உங்களின் கற்பனைக் குதிரையின் ஓட்டம் எப்பவுமே ரசிக்க வெக்கும். இப்பவும் அருமை! நன்றி நண்பா!

      Delete
  4. //காதல் அல்லது காதல் போன்றொரு உணர்வு//

    99 சதவீத பேருக்கு காதல் போன்ற உணர்வு மட்டும் இருப்பதே உண்மை

    //ஏன்னா நம்மளோட உருவ அழகு(?) அப்படி!//

    சென்னையின் ரெமோவைக் காதலிக்காத அந்தப் பெண்ணுக்கு என் வன்மையான கண்டனங்கள்!

    // கு.மி.சி//

    அப்படின்னா?

    //‘‘ஜிப்பைப் போடுங்க அண்ணா!’’//

    ஹா ஹா ஹா... கடைசி பஞ்ச் கலக்கல்...

    ReplyDelete
    Replies
    1. கு.மி.சி. ன்னா குருவை மிஞ்சிய சிஷ்யன்-னு அர்த்தம். கடைசி பஞ்ச் வரை ரசித்த ஸ்கூல் பையருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
    2. எனக்கும் இந்த கு.மி.சி என்றால் என்ன என்ற கேள்வி தோன்றியது, இங்கு தெளிவு கிடைத்தது.

      Delete
  5. 4 ஸ்டாப்பிங் போறதுக்குள்ள கற்பனைல எவ்ளோ தூரம் சார் போனீங்க... :P

    ReplyDelete
    Replies
    1. கரெக்டா சைக்காலஜியப் புரிஞ்சு கேட்ருக்கீங்க ப்ரியா... ‌நாலு ஸ்டாப்பிங் வர்றதுக்குள்ள ஸ்விஸ்ல பனிமலையில டூயட் பாடற வரை கற்பனைல பறந்தாச்சு! மிக்க நன்றி!

      Delete
  6. ‘‘ஜிப்பைப் போடுங்க அண்ணா!’’

    சொல்லிட்டாளே அவ இப்படி..

    ReplyDelete
    Replies
    1. பண்ண என்ன முடியும் நண்பா? உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  7. அண்ணா! நீங்க காதலிச்சீங்களா? சைட்லாம் கூட அடிச்சீங்களா?! நான் நம்ப மாட்டேன். அப்படியே இருந்தாலும் இப்படி பப்ளிக்கா சொல்லலாமா? இனி பாருங்க கும்மி அடிக்க போறங்க. போங்கண்ணா உங்க பேச்சு க்க்க்க்கா...,

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஜனங்கதானே... கும்மியடிச்சு சந்தோஷமா இருந்தா இருந்துட்டுப் போகட்டும்மா. விடு... இதுக்கெல்லாம் கா விட்டுறக் கூடாது. ரைட்டா?

      Delete
  8. மலையாளப் பெண் பற்றிய வர்ணிப்பு அருமை...

    // செலக்ட் பண்ணித் தந்துட்டா ஒரு கார் வாங்கித் தர்றேன்னிருக்கார் சீனு! // ஆமா அந்த காரை பெற்று செல்ல சரிதாவுடன் நீங்க வர வேண்டும், நீங்கள் சரிதாவிடம் அடிவாங்குவதை நான் பார்த்து ரசிக்க வேண்டும் :-)

    அந்த பதிவை உடனடியாய் சூடாய் சுவையாய் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி வாத்தியாரே

    ReplyDelete
    Replies
    1. எனக்கெதுக்குப்பா நன்றில்லாம்? இப்ப நான் சொல்றதை நடிகர் கார்த்திக் ஸடைல்ல வெத்தல பாக்கு குரல்ல படிக்கவும். என்னது காரா...? யாரு...? யாரு கேட்டது? எனக்கு ஒண்ணுமே தெரியாது...! ஹி.. ஹி...

      Delete
  9. I really guessed about that one word while reading the post. Very very cute way of conveying your feelings!!!! on love. But my doubt is when love is blind, how can it give weightage to your physique? Please explain. Cheenu has already given the order for your car but the problem is, it will take minimum 10 years to produce it. OK.
    .

    ReplyDelete
    Replies
    1. அப்பல்லாம் நான் இப்ப இருக்கறதைவிட ஒரு மடங்கு அதிக குண்டா இருப்பேன் மோகன். முகம் வேற வயசு்க்கு மீறின முதிர்ச்சியைக் காட்டும் எப்பவுமே. அதான் மைனஸ் ஆயிருச்சு. ரசிச்சுப் படிச்சுக் கருத்திட்ட உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  10. வணக்கம் சகோதரரே!...

    உங்கள் பதிவுகண்டு மறுபடி சிரித்து என் வயிறு புண்ணாகியது.
    முத்தாய்ப்பாக அந்தப் மலையாளக்குயில் கூவிய வசனம் கேட்டு இப்பவும் வரும் சிரிப்பை அடக்கமுடியவில்லை பிரதர் செம காமெடிதான்.... :).

    காதல் வந்தால் கூடவே கவிதையும் வந்துவிடுகிறது என்பது உண்மைதான். மொழியைக் காதலித்தால் கவிதை கன்னபின்னான்னு கொட்டும்... ஆனால் இந்தத் தொப்பியை நான் எனக்குப் போட்டுக்கொள்ளமாட்டேன். நான் மொழியைக் காதலிக்கின்றேன் ஆனால் கவிதை எழுதுபவள் இல்லை எழுதுவது அத்தனையும் கிறுக்கல்கள்தான்.

    நல்ல பதிவும் பகிர்வும். மிக்க நன்றி சகோ!.

    நண்பர் சீனுவின் தளம் சென்று பார்க்கின்றேன். சகோ சீனுவுக்கும் நடுவராக பதவியேற்றிருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    த ம. 4

    ReplyDelete
    Replies
    1. கிறுக்கல்கள் என்று நீங்கள் சாதாரணமா சொல்லிக்கிட்டாலும் எங்களுக்கு அவை நல்ல கவிதைகள்தான் சிஸ்! இந்தப் பதிவை ரசித்துச் சிரித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. நேரில் சந்திக்காமலே லவ் ஸ்டார்ட்டாயிடுச்சு. லவ்வுன்னா உங்கூட்டு லவ்... எங்கூட்டு லவ இல்லீஙக.. செமையான லவ்! கோவையில பாக்கற எல்லாமே அழகாத் தெரிஞ்சது எனக்கு. ////

    ஹாய்ய் கணேஷ் அண்ணே, நல்லா இருக்கேளா? ரொம்ப நாளாச்சு உங்ககூட பேசி! 4 மாசமா கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்!

    ஆமா, நேரில் பார்க்காமலேயே லவ்வா? அட, அப்போ உங்க சொந்தக் கதையைத்தான் அகத்தியன் காதல் கோட்டையாக எடுத்தாரா?

    அப்போ காப்பிரைட்ஸ் கேட்டுடுங்க :) :)

    ReplyDelete
    Replies
    1. காதல் கோட்டை சாக்லெட் தடவிய பொய். நிஜத்தில அந்த மாதிரி காதல் என்னாகும்கறதுக்கு நானே உதாரணம் மணி! ‌அப்பப்ப முகநூல்ல உங்களப் பாக்கறப்பல்லாம் இந்தப் பக்கம் காணமேன்னு நானும் நினைச்சுக்கறதுண்டு. இப்ப பாத்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  12. சார்... காதல் கடிதங்கள் போட்டிக்கு நடுவராக அருமையான தேர்வு நீங்களென உங்களின் இந்தப் பதிவு அனுபவங்களின் வரைவு கட்டியம் கூறுகிறது....

    ReplyDelete
    Replies
    1. தெம்பூட்டிய உங்களின் வார்த்தைகளுக்கு என் உளம் கனிந்த நன்றி எழில்!

      Delete
  13. சீனுவின் பதிவர் பரிசுப் போட்டிகேற்ற சுவையான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. நடுவர்களில் ஒருவராக நீங்களும் கரம் கோர்த்ததில் மிக்க மகிழ்ச்சிம்மா எனக்கு. எப்போதும் எனக்குத் தெம்பூட்டும் உங்கள் கருத்துக்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  14. நடுவராய் இருக்க மிகச் சரியான
    நபர்தான் நீங்கள் என்பதுதங்கள்பதிவைப்
    படித்ததும் புரிந்தது
    உள்ளிருந்து ஒரு விஷயத்தைப் பார்ப்பதைவிட
    வெளியிலிருந்து அதைப்பார்த்தால்தான்
    மிகச் சரியாகப் பார்க்க முடியும்
    காதல் கடிதங்களில் சிறப்பானதை
    காதலில் சிக்கித் திணறியவரை விட
    அதில் மாட்டாது தப்பியவரே மிகச் சரியாக
    கணிக்கமுடியும் என்பதுதான் எனது கருத்தும்
    நாட்டாண்மையின் சிறந்த
    தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. தெம்பூட்டிய தங்களின் கருத்துக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  15. நடுவராக இருப்பவர் தனது காதல்கதையைக் கூறணும் என சொல்லிவிட்டார்களா அதே இந்தக் காதல் கதைகள் பிறந்தனவா :)))

    ஹா...ஹா..... ரசனை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நடுவர்கள் போட்டி முடிஞ்ச பின்னால தனிப் பதிவா எழுதணும்னு சீனு கேட்டுக்கிட்டாரு. இது சும்மா இன்ட்ரோதான் மாதேவி! ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. எதிலயும் மாட்டாம தப்பிச்சிருக்கிங்க என்பதே சந்தோஷமான விஷயம் தானே.. இப்ப பாருங்க சுதந்திரமா பேச முடியுது. நடுவர் தீர்ப்பு தீர்ப்பு சுவாரஸ்யமாதான் இருக்கும்..அதிலென்ன சந்தேகம்

    ReplyDelete
    Replies
    1. நடுவர்களின் மேல் நம்பிக்கை கொண்டு உற்சாகப்படுத்துகிற உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  17. நான் ரசித்த வரிகள்

    //அல்லது கவிதை என்று நினைத்துக் கொண்டு எதையாவது எழுதி, மற்றவர்களைப் படுத்துகிறார்கள்.

    //‘என்னடா ஆச்சு உனக்கு...? ஒரு வாரமா ‌கோமியம் குடிச்ச மாதிரி மூஞ்சிய வெச்சுககிட்டிரு்க்க?’’ என்று.//
    தங்கள் நடுவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்த விஷயங்களைக் குறிப்பிட்டு மகிழச் செய்த ரூபக்குக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  18. சிரிப்பும், காதலும்......அண்ணே அண்ணே சூப்பரு போங்க...!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  19. சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த நடுவர் பொறுப்பு வாத்தியார் என்று கணேஸ் அண்ணாச்சியிடம் ஜாமாய்க்க வாழ்த்துக்கள் இதுவும் சீனு நூலாக போட வாழ்த்துக்கள்§

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வோடு வாழ்த்திய நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  20. முதல் காதல் போயின்...
    மற்றதெல்லாம் அடுத்து வந்த காதல்களே!!
    படித்துச் சிரித்தேன் பாலகணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. படித்துச் சிரித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  21. பற்களைக் காட்டி சிரிக்கும் சிரிப்பை நிறுத்துங்கள் என்று சொல்லக் கூட 'ஜிப்பை மூடுங்கள்' என்று சொல்வார்களோ! இந்தக் காதலில் இன்னொரு அவஸ்தை நடுவராக இருப்பது. எல்லாக் காதலும் நல்ல காதல்தானே, எந்தக் காதல் ஒஸ்தி என்று எப்படியுரைப்பீர்கள் மாந்தர்காள்!!! கணேஷாய நமஹ... அப்பாதுரையாய நமஹ.... ரஞ்சனி நாராயணாய நமஹ....! :))))))))))))

    ReplyDelete
    Replies
    1. நீங்க ‘எஸ்’ஸாகப் பாத்தா விட்ருவமா தலைவா... சிரிப்பை நிறுத்த இந்த வார்த்தையை குறிப்பது பின்னாளில் வந்தது. மிக்க நன்றி!

      Delete
  22. நான் நேத்தே சீனு சாரோட போட்டிய பத்தி அவரோட தளத்துல படிச்சேன்! அப்பவே உங்களுக்கு கால் பண்ணிடனும்னு நெனச்சேன்! கொஞ்சம் வேலையா போச்சு! இன்னைக்குக் காலையில பாத்தா இங்கையும் இப்படி ஒரு பதிவு....பதிவு கலக்கல்தான் வழக்கம் போல! நடுவராகப் பொறுப்பேற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. என்ட்ட எப்ப வேணாலும் பேசலாம் சுடர்! பதிவை ரசித்து, என்னை வாழ்த்திய உனக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  23. நல்ல ஃபீலிங்கோட எழுதியிருக்கீங்க!வாவ்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  24. அவங்க சொன்னது ஒற்றை வார்த்தையல்லவே கணேஷ்.....

    மூன்று வார்த்தைகள்! :) முதலில் மூன்று வார்த்தைகள் எனச் சொல்லி இருந்தால் இன்னும் சஸ்பென்ஸ் அதிகரித்திருக்கக் கூடும்! நாங்க எல்லோரும் I LOVE YOU என நினைத்திருப்போம் இல்லையா!

    ReplyDelete
  25. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்தேன். சுவாரஷ்யமான பதிவு..... இரசித்தேன் அண்ணா.....

    ReplyDelete
  26. இனிப்பும் புளிப்பும் கசப்புமான உங்கள் காதல் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி கணேஷ். திடங்கொண்டு போராடு வலைப்பூ சென்று பார்த்தேன். நடுவராய் அமரவிருக்கும் உங்களுக்கும் காதல் கடிதம் தீட்டவிருக்கும் சக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. அடடா இங்கேயும் காதல் கடந்துபோச்சா. காதல்னா அப்படித்தான் கணேஷண்ணா. காதபோயின் சாதலெல்லாம் சும்மா ஜோலாயி. அதெல்லாம் மலையேறி நாளாச்சி.இல்லயில்ல யுகமாச்சி..

    ஆனாலும் அண்ணாவின் காதல் சூப்பர்.

    அதுசரி அந்த விசயம் சாந்தியண்ணிக்கும் தெரியுதானே அவ்வ்வ்வ்வ் [சாரதா அண்ணி நீங்க ரொம்பாஆஆஆஆஆஅ நல்லவங்க..

    ReplyDelete
  28. நீங்க தகுதியான நடுவர்தான்னு நிரூபிச்சிட்டீங்க. ஆஹா. நடுவரா இல்லன்னா அருமையான ஒரு காதல் கடிதம் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube