Sunday, June 16, 2013

ஒரு அவசர அறிவிப்பு

Posted by பால கணேஷ் Sunday, June 16, 2013
னைவருக்கும வணக்கம்...

கம்ப்யூட்டரைத் துறந்து, தொலைபேசியை சற்று மறந்து இரண்டு நாட்கள் ஊர்சுற்றி வரலாம் என்ற உத்தேசத்துடன் திருச்சி வந்து அதிலும் ஸ்ரீரங்கத்தில் சிவபெருமானின் வாகனத்தைப் பெயராகக் கொண்டவரின் இல்லத்தில் இருந்த என்னை காலை தொலைபேசியில் பேசி மீண்டும் வலைப்பக்கம் இழுத்துவந்து சிக்க வைத்து விட்டார் தோழி மஞ்சுபாஷிணி. புலவர் ஐயாவின் வலை இணைப்பில் பழுது. மதுமதியோ ஊரில் இல்லை. கண்ணதாசனும் தொடர்பெல்லைக்கு வெளியே... எனவே இரண்டு தகவல்களைச் சொல்லி. இவற்றை நீங்கள் வலையிலும் முகப்புத்தகத்திலும் பகிருங்களேன் என்றார்.

1) இன்று தந்தையர் தினம். மனைவியிடம் சில சமயங்களில் பாராட்டும், பல சமயங்களில் குட்டும் வாங்கி. அத்துடன் குடும்ப பாரத்தையும் சுமந்து. குழந்தைகளுக்காகக் கவலைப்பட்டுப் பொருளீட்டும் தந்தையர்களை இன்று வாழ்த்தி அவர்களுக்கு மகிழ்வையும் ஆறுதலையும் அளிப்போமாக...

2) 18ம் தேதி... அதாவது வருகிற செவ்வாய்க்கிழமையன்று காலை குவைத் நகரத்தைக் கலக்கிய புயல்... பெட்ரோலை பேரல் பேரலாக அங்கேயே விட்டுவிட்டு தனக்குள் எனர்ஜி பெட்ரோலை நிரப்பி வந்திருக்கும் எரிமலை... திருமதி மஞ்சுபாஷிணி அவர்களின் சென்னை விஜயத்தை முன்னிட்டு ஒரு கெட் டு கெதர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. துவங்கும் நேரம்.... காலை பத்து மணியிலிருந்து....  முடியும் நேரம்.... பதிவர்கள் சந்திப்புக்கு முடியற நேரம் சொல்றது சாத்தியமேயில்ல... எல்லாருக்கும டைம் இருக்கற வரை நீளும். மாலை வரை கூட தொடரலாம்.

ரைட்டு... காலைல வந்துடறோம், எங்கன்னு கேக்கறவங்களுக்காக... வரவேண்டிய இடம் நம்ம புலவர் ச.இராமானுசம் ஐயா அவர்களின் இல்லம். முகவரி... பழைய எண்.178.1, புது எண்.14.1, ரங்கராஜபுரம் மெயின் ரோடு, கோடம்பாக்கம். சென்னை 24. புறப்பட்டு வந்து கலந்துக்க விருப்பம் உள்ள நண்பர்கள் 90030 36166 என்ற எண்ணில் பாலகணேஷையோ, 90947 66822 என்ற எண்ணில் புலவர் ஐயாவையோ, 96001 66699 என்ற எண்ணில் கவியாழி கண்ணதாசனையோ, 98941 24021 என்ற எண்ணில் மதுமதியையோ, 95512 53993 என்ற எண்ணில் மஞ்சுபாஷிணியையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிச்சா மகிழ்ச்சின்னு மஞ்சு சொல்லச் சொன்னாங்க. மத்தபடி இவங்க யாரோட போன் நம்பரும் எனக்குத் தெரியாதுப்பா....

நா இங்க திருச்சியில் வசிக்கும் பதிவுலக நண்பர்களை (இதப் படிச்சுட்டு என் வருகையப் புரிஞ்சுட்டு தப்பி ஓடறதுக்கு முன்னால) போய் பார்த்துட்டு நாளைக்கு வந்துடறேன். நாளை மறுதினம் இந்த நிகழ்வை அனைவரும் வந்து கலந்து கொண்டு அசத்துங்கன்னு ரெக்வெஸ்ட் விட்டுக்கறேன். வர்ட்டா... ஸீயூ.

68 comments:

  1. உடனடி தகவலுக்கு நன்றி... திருச்சியிலிருந்து இரண்டு மணி நேரம் தான் திண்டுக்கல்... வாங்க...

    ReplyDelete
    Replies
    1. அப்படியே தனபாலன் விட்டிற்கு பக்கத்தில்தான் மதுரை அங்க உள்ள விமானத்தை பிடிச்சு ஒரு குட்டித் தூக்கம் போட்டின்ன்னா அப்படியே நம்ம ஊர்ருக்கு வந்துடலாமுங்க... அப்புறம் மறக்காம தனபாலகிட்ட சொல்லி தலப்பாகட்டி பிரியாணி வாங்கி வந்துடுங்க

      Delete
    2. தலப்பாகட்டி பிரியாணியா?

      Delete
    3. ஆமாம் அப்பா ஸார்... திண்டுக்கல்ன்னா அதுவும் ஃபேமஸ் ஆச்சே! பஸ், ரயில்ல போறதுக்கே மூச்சு முட்டுது மதுரைத் தமிழா! ஃப்ளைட் ஏர்ற காலம் எனக்கும் விரைவில் வரட்டும் உங்க விருப்பப்படி! மிக்க நன்றி!

      Delete
    4. இந்த தலப்பாகட்டு பெயர்க் காரணம்? தலைப்பா கட்டிக்கிட்டு சாப்பிடணுமா?
      தலைக்கு ஒரு பா சொல்லிட்டு சாப்பிடணுமா? ஒண்ணுமே புரியலியே?

      Delete
  2. தங்கள் பதிவைப் போல அத்தனை சிறப்பாக
    என்னால் எழுதமுடியும் என்கிற நம்பிக்கையின்மையால்
    தங்கள் பதிவையே நாளை காபி பேஸ்ட் செய்ய உத்தேசித்துள்ளேன்
    தங்கள் அனுமதியை எதிர்பார்த்து...அன்புடன்...

    ReplyDelete
    Replies
    1. என்ன ரமணி ஸார்... உங்களுக்கில்லாத உரிமையா...

      Delete
  3. இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களை வழிமொழிகிறேன்!

      Delete
  4. திருமதி மஞ்சுபாஷிணி அவர்களின் சென்னை விஜயத்தை முன்னிட்டு நிகழும் கெட் டு கெதர் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  5. அனைவரும் மின்னலா விரைந்து வாங்கோ வாங்கோ..

    ReplyDelete
    Replies
    1. அதே.... அதே... சசி! நீ சீக்கிžரம் வாம்மா தென்றல்!

      Delete

  6. இனிய தந்தையர் தின வாழ்த்துகள்

    கெட் டு கெதர் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. கலக்குங்கள் ! களியுங்கள் !
    நான் கலந்து கொள்வது கடினம் .
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... உங்கள் நிலை நானறிவேன். அங்கிருந்தே வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
    2. என்ன ஆயிற்று என் நிலை ?
      எனக்கே தெரியவில்லையே ....

      Delete
    3. அட, செவ்வாக்கிழமை உங்களுடைய பிஸியான வொர்க் ஷெட்யூலைத்தாங்க அப்படிச் சொன்னேன். கோச்சுக்காதீங்கோ...!

      Delete
    4. வலைப்பதிவைத் தவிர வேறு தொடர்பின்றி இருக்கும் போது
      என் செவ்வாய்க்கிழமை வொர்க் ஷெடுல் பற்றித் தங்களுக்குத்
      தெரிந்திருப்பது வியப்பே !

      Delete
  8. வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  9. என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களுடன், என் இல்லத்திற்கு இன்று தாங்கள் திடீர் விஜயம் செய்தது + சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நாம் மூவரும் மனம் விட்டு பலவிஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஸ்னேக்ஸ் நிலவரம் எப்படி வைகோ சார்?

      Delete
    2. ;))))) அன்றைய தினம், அடியேனால் இயன்ற அளவு, தீர்த்தம், கடலைமிட்டாய்கள், கை முறுக்குகள், பிஸ்கட்கள், மாங்கோ ஜூஸ், என, வழக்கம் போல ஏதேதோ நிவேதனம் செய்யப்பட்டன. ;)))))

      முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் வருகை என்றால் என்னசெய்வது?

      முன்னறிவிப்பு கொடுத்திருந்தால், பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நான்கு கலந்து ”பால கணேஷ்” க்குப் படைத்திருக்கலாம் தான். ;)))))

      ஏதோ அடியேனால் அன்று முடிந்த “எத்கிஞ்சது” ;))))) மட்டும் கொடுக்கப்பட்டது.

      மற்ற மரியாதைகள் சில, வரும் புதன் கிழமை என் வலைத்தளத்தில் படங்களாகக் காட்டப்படும்.

      Delete
    3. உங்க வீட்டுக்கு வர்றதுக்கு கொஞ்சம் முன்னாலதான் மைக்கேல் அன் சன்ஸ்ல நாலு ஐஸ்க்ரீம் மொக்கிட்டு வந்ததால நீங்க தந்த ‘யத்கிஞ்சது’ எதேஷ்டமாய்டுச்சு கோபு அண்ணா! அதுசரி... பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் குடுத்துட்டு ஒளவையாரே எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல சங்கத் தமிழைல்ல கேட்டாங்க... நீங்க எதைக் கேட்டிருப்பீங்களோ...? புதன்கிழமை புகைப்படங்களுடன் வெளியிடறீங்களா? நான் திருச்சி விசிட்டையும், கெட் டு கெதரையும் ரெண்டையும் எழுத வேண்டியிருக்கு! மிக்க நன்றி!

      Delete
    4. சொல்லாம கொள்ளாம வந்தாலே இத்தனை ஸ்னேக்ஸா!
      ஆமா.. இந்தப் பாலும் தெளிதேனும் சொல்லி படா ஆசை காட்டி, பாலகனேசு வந்தப்புறம் செய்யுளைப் பாடி அதைத்தான் சொன்னதா டீல்ல உட்ற மாட்டீங்க தானே?

      Delete
    5. பாலகணேசு சாரே.. நாலு ஐஸ்க்ரீம் மொக்கிட்டு வந்தப்பின்னே "இயன்ற அளவு, தீர்த்தம், கடலைமிட்டாய்கள், கை முறுக்குகள், பிஸ்கட்கள், மாங்கோ ஜூஸ்,.."ஆ?

      Delete
  10. ஆஹா....

    சரி சந்திப்பு பற்றி போட்டோ,பதிவு வரும்ல அப்ப பாக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் படங்களோட பகிர்றேன் தென்றல் மேடம்! அவசியம் பார்த்து ரசிச்சு கருத்திடுங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  11. சென்னையில் பதிவு புயலைச் சந்திக்க வரும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.சந்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்.
    எப்போது பெங்களூரில் புயல் அடிக்கும் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சந்திப்பில் புயலிடம் பெங்களூரில் வீசும் நேரத்தைக் கேட்டு விடுகிறேன். எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  12. அடடா, நான் மிஸ் செய்யப் போகிறனே!
    அடுத்த முறை சென்னை சதிப்புக்கு கண்டிப்பாக வர முயற்சிக்கிறேன். கணேஷ் சார்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்... உங்களுக்காகவும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்துவிட்டால் போச்சு...! கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  13. இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!

    சந்திப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெறவும் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  14. பதிவர் சந்திப்பில் ஊமைகளாகக் கலந்து கொள்ளப் போகும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் - ஒருத்தரைத் தவிர. அவர் தான் பேசிக் கொண்டிருக்கப் போகிறாரே?!

    ReplyDelete
    Replies
    1. அந்த ஒருத்தர் ‘‘அடுத்த தடவை அப்பாதுரை எப்ப குவைத் வர்றார்னு கேட்டுச் சொல்லுங்க. அன்னிக்கு நான் உண்ணாவிரதம்... ஸாரி, மெளன விரதம் இருக்கப் ‌போறேன். அவரைப் பேசவிட்டுட்டு நான் கேட்டுட்டிருக்கப் போறேன்னு’’ சொன்னாங்க அப்பா ஸார்! உஸாரா இருந்துக்கோங்க!

      Delete
    2. ஹிஹி.. முடியாத விசயமெல்லாம் இன்னாத்துக்கு ட்ரை பண்ணினுகிறேனு தண்டையார்பேட்டை கைல சொல்லிக்க வாத்யாரெ.

      Delete
  15. ஓகே.. அவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  16. கலக்கறீங்க!! கலக்குங்க!!!!!

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷமா வாழ்த்தின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி டீச்சர்!

      Delete
  17. சந்திப்பு இனிதாய் நடைபெற வாழ்த்துக்கள் அய்யா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete


  18. மஞ்சு வரவா ?
    மதியம் உணவா ?
    மறக்காமல் வரணுமா ?

    மஞ்சு பேசுவாங்க என்றால்
    பெஞ்சிலே கூட இடம் கிடைக்காதே !!

    ஹௌஸ் ஃபுல் போர்டு போட்டாச்சா !!


    நான் வரணும்னு தான் நினைக்கிறேன்.
    வரதா இருந்தா ஒரு ராக்கெட்லே தான் வரணும்.
    அம்புட்டு தூரத்திலே நான் இருக்கேன்.

    நல்லா நடத்துங்க...
    மஞ்சுவுக்கு என் சார்பிலே ஒரு
    பூங்கொத்தும் பொன்னாடையும் கொடுத்து
    கௌரவியுங்க...

    அவங்களுக்கும் அவங்க குடும்பத்தாருக்கும்
    அவஙக புள்ளைங்களுக்கும் இந்தக்கிழவனின்
    ஆசிகளை அன்பான வாழ்த்துக்களை
    அவசியம் சொல்லிப்போடுங்க..

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in





    ReplyDelete
    Replies
    1. நீங்க இருக்கற இடம் எனக்குத் தெரியுமே! அங்கருந்து வாழ்த்தின உங்க அன்புக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
    2. திருமதி மஞ்சு பாஷிணி அவர்கள் முதன்மை விருந்தாளியாக, புலவர் திரு இராமானுசம் அவர்கள் தலைமையிலே
      திரு மோஹன் குமார் , திரு மதுமதி,அவர்கள் ,திரு சீனா அவர்கள், திரு பால கணேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அவையில்,

      எனது பேத்தி சஞ்சிதா ஜெர்மன் பாடலும், பியானோ இசையும் கலை நிகழ்ச்சியென அனுப்பித்து, திருமதி மஞ்சு
      அவர்களுக்கு செல்லில் சொன்னேன்.

      விழா நன்றாக நடந்திருக்குமென நினைக்கிறேன். படங்கள்,வீடியோ போடுவீர்கள் இல்லயா !!

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha.blogspot.in


      Delete
  19. எனர்ஜி பெட்ரோலை நிரப்பி வந்திருக்கும் எரிமலை... திருமதி மஞ்சுபாஷிணி? உண்மையாகவா?

    ReplyDelete
    Replies
    1. அங்க வந்து பாருங்க நண்பரே.... உங்களுக்கே புரியும்! மிக்க நன்றி!

      Delete
  20. இனிய வாழ்த்துகள்!

    / பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நான்கு கலந்து ”பால கணேஷ்” க்குப் படைத்திருக்கலாம் தான்./

    :)!

    ReplyDelete
    Replies
    1. ஹி.... ஹி.... அதெல்லாம் படைச்சா பிள்ளையார் இன்னும் பெருசாய்டுவார் மேடம்! மிக்க நன்றி!

      Delete
  21. அண்ணே, நல்லா எஞ்யாய் பண்ணிட்டு வாங்க - வீ ஆர் வெயிட்டிங் :)

    ReplyDelete
    Replies
    1. ரைட் மணி! கலக்கிட்டு வந்து விரிவா பகிர்றேன். மிக்க நன்றி!

      Delete
  22. எங்கேயோ போயிட்டீங்க!

    ReplyDelete
    Replies
    1. இங்கதான் இருக்கேன் குட்டன்! நீங்களும் கலந்துக்கிட்டு எங்களுக்கு எனர்ஜி பூஸ்ட் தரலாம்ல? உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  23. தகவல்களுக்கு நன்றி....

    திருச்சியிலும் தவறவிட்டேன் உங்களை!

    ஒரு தபா எல்லோரும் தில்லிக்கு வாங்கப்பா! :)

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வரணும்னு ஆசை இருக்கு வெங்கட்! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  24. சந்திக்கவிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். சந்திப்பின் விவரங்களைத் தவறாது வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் படங்களுடன் பகிர்கிறேன் கீதா. மிக்க நன்றி!

      Delete
  25. //மனைவியிடம் சில சமயங்களில் பாராட்டும்,

    இது எப்போ? அடுத்தவங்க கணவர்களைப் பாராட்டுவாங்களே தவிர தன் கணவரைப் பாராட்டும் (சில சமயம் கூட) மனைவியை யாராவது கண்டதுண்டா?

    ReplyDelete
    Replies

    1. //அடுத்தவங்க கணவர்களைப் பாராட்டுவாங்களே தவிர தன் கணவரைப் பாராட்டும் (சில சமயம் கூட) மனைவியை யாராவது கண்டதுண்டா?//

      பாராட்டுவதா ? என்ன சொல்கிறீர்கள் ?
      கணவர் தான் பாரிலிருந்து ஆடிக்கொண்டே வருகிறாரே... அவரை இன்னுமா ஆட்டுவது என்று
      அமைதி காக்கிறார்கள்.

      சுப்பு தாத்தா.

      Delete
  26. மஞ்சுவின் வருகை மகிழ்ச்சி நாங்கள் கலந்துகொள்ள முடியாத வருத்தம் மட்டும் அனைவரும் உளம் மகிழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. விரைவில் நடக்கவிருக்கும் அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயம் நீங்களும் கலந்து கொள்ளலாம் தோழி. மகிழ்வுடன் வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  27. ஆஹா.. கலக்குங்க! அனைவர்க்கு என் நட்பான வணக்கங்கள், வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube