Wednesday, June 26, 2013

சரிதாவின் சபதம்!

Posted by பால கணேஷ் Wednesday, June 26, 2013
‘‘இதோ பாருங்க... நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ தெரியாது... உடனே உங்க அருமை மாமாவைக் கிளப்பியாகணும். அவ்ளவ்தான்...’’ என்றாள் சரிதா இடுப்பில் கை வைத்தபடி.

‘‘வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தா சந்தோஷப்படணும் சரி. இப்ப... உங்கம்மாவோ தம்பியோ வந்தா ரொம்ப நாள் தங்காம தொண்ணூறே நாள்ல கிளம்பிடறாங்க. நான் ஏதாவது சொல்றேனா...? நீ ஏன் என் மாமாவை இப்படி கரிச்சுக கொட்டறே? அவர் ஒருத்தருக்கு எக்ஸ்ட்ராவா சமைக்கறதால என்ன கொறைஞ்சுடப் ‌போறே?’’

‘‘சந்தடி சாக்குல எங்கம்மா டேரா போடறாங்கன்னு சொல்லாட்டி உங்க தலை வெடிச்சுடுமே...! அவர் இருக்கறதுல எனக்கென்ன ஆட்சேபணை? ஆனா, உங்க மாமா பிளேடு பரந்தாமன் இருக்காரே...’’

‘‘இதபாரு... அவர் பேரு வெறும் பரந்தாமன்தான்...’’

‘‘சரி, வெறும் பரந்தாமன் இருக்காரே... ரொம்ப ரொம்பப் படிச்சவர்தான்; விஷயம் தெரிஞ்சவர்தான். அதனால பேச ஆரம்பிச்சா... ரொம்ப சுவாரஸ்யமா மணிக்கணக்கில பேசி போரடிக்கிறார். எல்லா லாங்வேஜ்லயும் அவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ‘புல் ஸ்டாப்’ தான் போலருக்கு. அவரோட பேச்ச‌ை நிறுத்தறதுங்கறது 100 வாட்ஸ் பல்பை வாயால ஊதி அணைக்கற மாதிரி... ஸ்ஸப்பா.... என்னால முடியலங்க...’’ என்று அலுத்துக் கொண்டாள்.

‘‘அதான் அவர் 15 நாள்ல கிளம்பிடுறதாச் சொல்லியிருககாரேடி...’’ என்றேன் பரிதாபமாக.

‘‘இந்த நாராயணசாமி‌ டயலாக்தானே வேணாங்கறது. அப்படி அவர் சொல்லியே நாலு 15 நாளாயிடுச்சு.... நீங்களானா ஹாயா ஆபீஸ் போயிடறீங்க... இங்க கெடந்து அவஸ்தைப் படறது நான்ல்ல...! ஒரு வாரமா கரடியாக் கத்தறேனே... உங்களுக்குக் கொஞ்சமாச்சும் உறைக்குதா? அறிவிருக்குதா?’’

‘‘என்கிட்ட அதைல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இருந்தா உன்னைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேனே...’’

‘‘என்னது...? என்ன சொன்னீங்க...?’’ என்று பத்துமைல் நான்ஸ்டாப்பாக ஓடிவந்து நின்றவள் போல கோபப் பெருமூச்சு விட்டபடி கேட்டாள். இதற்கு மேலும் பேசினால் ஆபத்து என்பதை அனுபவம் உணர்த்தியதால், ‘‘இப்ப என்ன பண்ணச் சொல்ற என்னை?’’ என்றேன்.

‘‘இப்ப மாமாக்கு ஒதுக்கியிருக்கற ரூமுக்குப் போறோம். அவர்ட்ட சாமர்த்தியமாப் பேசி நீங்க ஊருக்குக் கிளப்பறீங்க...’’

‘‘என்கிட்ட இல்லாததையெல்லாம் எதிர்பார்த்தா என்னம்மா நியாயம்...?’’ என்று முனகியபடியே (வேறு வழியின்றி) மாமாவுக்கு ஒதுக்கியிருந்த அறை நோக்கி நடந்தேன்.

ண்ணாடியில் பார்த்து தலைசீவியபடி ‘‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்; அவள் மாம்பழம் வேண்டு‌மென்றாள்’’ என்று (கோரமாக) பாடிக் கொண்டிருந்தார் மாமா. நடு மையங்களில் காலியாகி எல்லையோரங்களில் மட்டும் சில செடிகள் இருக்கும் தோப்பு போல, அவரது ‘துப்பறியும் சாம்பு’ தலைக்கு சீவும் ஆசையெல்லாம் வராக்கூடாததுதான். பின்னால் வந்தபடியே, ‘‘நல்லவேளை... நீங்க டாஸ்மாக்ல நிக்கலை மாமா...’’ என்றேன். ‘‘பலேடா கண்ணா..’’ என்றபடி அருகில் வந்துவிட்டிருந்த சரிதாவின் தோளில் பலமாகத் தட்டினார் மாமா. உற்சாகம் ஓவராகி விட்டால் அருகில் இருப்பவரின் தோளிலோ, தொடையிலோ பளாரெனத் தட்டுவது அவரது மேனரிஸம்(?)

‘‘மாமா... காலம்பற வரது பேசினான். உங்களைப் பிரிஞ்சு இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்காம். அப்பா என்னதான் பண்றார் அங்க, உடனே இங்க அனுப்பிடுன்னான்’’ என்றேன். ‘‘‌நேத்துக்கூட நான் பேசினேன... இப்படி எதும் சொல்லலையே படவா... இருக்கட்டும், பேசிக்கறேன்...! இங்க கொஞ்சம் வேலை இருக்கு. சில பேரைப் பாக்க வேண்டியிருக்குடா. முடிச்சுட்டு கிளம்பிர வேண்டியதுதான்...’’ என்ற படி சோபாவில் அவர் அமர, அவர் அருகில் அவசரமாக என்னை அமர வைத்தாள் சரிதா.

டி.வி.யில் சிவகுமார் பேசிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடி மாமா, ‘‘கம்பராமாயணத்துல கம்பன் ‌என்ன சொல்லியிருக்கான் தெரியுமோ...? ‘ஹனுமான் கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்’ன்னு. எல்லாரும் கண்ணாலதானே பாப்பா? இதை ஏன் ஸ்பெசிபிககாச் சொல்லணும்? ஹனுமான் தன் கண்ணால பார்த்தான்னு அர்த்தமில்லடா கண்ணா. அங்க இருந்த ஏகப்பட்ட பெண்கள்ல சீதை கண்கள்ல மட்டும் தாரை தாரையா கண்ணீர் கொட்டிருந்ததை வெச்சு இவதான் ஜானகியா இருக்கணும்னு அவளை கண்களால அடையாளம் கண்டானாம். எப்பூடி?’’ என்று உற்சாகமாக என் தொடையில் தட்டினார். ‘‘சூப்பர் மாமா...’’ என்றேன் முகத்தைச் சுளித்தபடி

 ‘‘அம்மா சரிதா... ஹனுமான் கண்ணுக்கு ஒரு வெள்ளைப் பூ சிவப்பாத் தெரிஞ்சுதாம். ஏன்னு ‌சொல்லு...’’ என்று கேட்க, சரிதா ‘ழே’ என்று விழித்தபடி, ‘‘மஞ்சள் காமாலை மாதிரி அவருக்கு சிவப்புக் காமாலைன்னு ஏதும் வந்திருக்குமோ மாமா?’’ என்றாள். ‘‘ஹா... ஹா... அதில்ல... கடு்ங்கோபத்துல ஹனுமான் இருந்ததால அவர் கண்ணுல வெள்ளைப் பூ சிவப்புப் பூவாத் தெரிஞ்சிருக்கு.’’ என்றபடி அவர் கையை உயர்த்த, அவசரமாக நான் நகர்ந்து கொண்டேன். சோபாவின் முதுகில் தட்டினார். ‘‘அப்புறம் சரிதா...’’ என்று அவர் ஆரம்பிக்க, ‘‘நான் உங்களுக்கு காபி போட்டு எடுத்துண்டு வர்றேன் மாமா...’’ என்றபடி வேகமாக ‘எஸ்கேப்’பானாள் என் சகதர்மிணி. எனக்கு எஸ்கேப்பாக காரணம் ஏதும் கிடைக்காததால் பொறுமையாக மாமாவின் (நான்ஸ்டாப்) பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

டுத்தடுத்து இரண்டு வாரங்கள்தான் ஓடிக் கடந்தன. மாமா கிளம்புகிற வழியாகத் தெரியவில்லை. அன்று வீட்டினுள் வரும்போதே பரபரப்பாக வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... மாமாவை ஊருக்குக் கிளப்ப ஒரு வழி கண்டுபிடிச்சுட்டேன்’’

‘‘என்னமோ, அமெரிக்காவுக்கு வழி கண்டுபிடிச்ச கொலம்பஸ் மாதிரி அவ்வளவு பெருமையாச் சொல்ற? என்ன.. உன் கையால மைசூர் பாகு பண்ணி அவருக்குத் தரலாம்னு ஐடியா பண்ணியிருக்கியா?’’

முறைத்தாள். ‘‘அதில்ல. பெருமாள் கோயில் போயிருந்தேன்ல.. அங்க பரமசிவனைப் பார்த்தேன்...’’

‘‘பெருமாள் கோயில்ல ஏதுடி பரமசிவன்? ஹனுமாரையும், கருடனையும்ல்ல பார்த்திருப்ப?’’

‘‘ஹய்யோ... நான் சொல்றது என்னோட ஒண்ணுவிட்ட மாமா பையன் பரமசிவனை. கோயில்ல அவனைப் பார்த்துப் பேசிண்டிருந்தப்ப ஒரு சூப்பர் ஐடியா சொன்னான்... நான் நாளைக்கே உங்க மாமா அவர் ஊர்ல இருக்கும்படி பண்ணிடறேன் பாருங்க...’’

‘‘உன்னால ஆகற காரியமாப் பேசுடி. மாமா இப்போதைக்குக் கிளம்ப மாட்டார். உன்னால நிச்சயம் அதைப் பண்ண முடியாது..’’

 ‘‘முடியுதா இல்லையான்னு பாருங்க... இன்னைக்கு நைட்டு மாமா ஊருக்குப் புறப்பட்டிருப்பார். அப்படி இல்லன்னா, அடுத்த ஒரு வருஷத்துக்கு என் பிறந்த வீட்டைப் பத்தி ஒரு வார்த்தை பேச மாட்டேன். இது சரிதாவின் சபதம்!’’

‘‘அதுஏன் கடைசி வார்த்தைய மட்டும் இப்படி ஹை பிட்ச்ல சத்தமா சொல்றே?’’

‘‘எல்லாம் உங்களுக்காகத்தான். தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்னு யாரும் கேட்டுறக் கூடாதில்ல...’’

‘‘கதைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னே யாரும் இதுவரை கேட்டதில்ல. இதையா கேட்டுறப் போறாங்க... நான் வர்றேன்...’ என்றபடி என் வாகனத்தை உதைத்து அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

லுவலகத்தில் அன்றைக்குப் பார்த்து ஏகப்பட்ட ஆணிகள். பிடுங்கிவிட்டு வர இரவு மணி எட்டாகி விட்டிருந்தது. வீட்டினுள் நுழையும் போதே கவனித்தேன்- வீடு படு நிசப்தமாயிருந்தது. ஆனந்தமாக டி.வி.யில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த சரிதா, என்னைக் கண்டதும் ‘தம்ப்ஸ் அப்’ சிம்பல் காட்டினாள்.‘‘மாமா ஒன்பது மணி ட்ரெயினைப் பிடிக்க கிளம்பிப் போயாச்சு.... சரிதாவின் சாதனை!’’

‘அட, இதுகூட நல்ல டைட்டிலா இருக்கே’ என்று ஒரு கணம் யோசித்த நான், ‘‘என்ன பண்ணினே அப்படி அவர் அவசரமாக் கிளம்பிப் போகற அளவுக்கு?’’ என்று கேட்டேன். மெல்லப் புன்னகைத்த அவள் அருகில் வந்து, ‘‘சென்னையில வெயில் ரொம்ப கொளுத்துது. ஒரே புழுக்கமா இருக்கு. ஃபேன் பத்தலைன்னாரு. பேசாம மத்தியான நேரத்துல ஏ.ஸி. தியேட்டர்ல சினிமா பாத்துட்டு கூலா வாங்கோ மாமான்னு சொன்னதும் சரின்னார். சமீபத்துல நீங்க பாத்த நல்ல படம்னும், ரொம்பப் புகழ்ந்துட்டிருந்தீங்கன்னும் இந்தப் படத்தைப் பத்திச் சொலலி, அவருக்கு டிக்கெட் வாங்கிக் குடுத்து அனுப்பினேன். படம் பாத்துட்டு வந்தவர் மூஞ்சில அருளே இல்ல. ‘என்ன மாமா, படம் பிடிச்சிருந்துச்சா? இவர் ரசிச்ச இன்னொரு படத்துக்கு நாளைக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்’னேன். ‘இல்லம்மா. ஊர்ல எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டுட்டு வந்துட்டேன். நான் அடுத்த தடவை வர்றப்ப பாத்துக்கறேன். நான் கிளம்பறேன்’னுட்டு பொட்டியக் கட்டிட்டாரு...’’ என்று சிரித்தாள்.

‘‘அடிப்பாவி...! அவர் என்னப் பத்தி என்ன நெனச்சிருப்பார்? சமாதானம் பண்ணவே நான் ரொம்ப மெனக்கெடணுமே! சரி சரி... அப்ப நான் போய் நாளன்னிக்கு ‌மேட்னி ஷோவுக்கு அதே படத்துக்கு மூணு டிக்கெட் புக் பண்ணிட்டு வர்றேன்’’

‘‘என்னது...? மறுபடி டிக்கெட்டா? எதுக்குங்க?’’

‘‘நாளைக்கு உங்கம்மாவும் தம்பியும் இங்க வர்றாங்களாம். ஈவினிங் போன் வந்துச்சு. அதான்...  நீயும் அவங்களும் பாக்கலாமேன்னுட்டு...’’ என்றவன் உடன் நகர்ந்ததால் பறந்து வந்த டம்ளர் சுவரில் மோதி உருண்டது. அடுத்தடுத்து பறந்து வரும் பொருட்களிலிருந்து தப்ப... இப்போது அவசரமாக எனக்குத் ‌தேவை ஒரு கேடயம்! யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் ப்ளீஸ்...!

72 comments:

  1. திருமதி சரிதாவின் சாதனை என்னவென்று சொல்வது?
    அப்படியேன்ன திருமதி தமிழ் படம் அவ்வளவு மோசமா?உங்கள் விமரிசனத்தை இன்னும் படிக்கவில்லை.

    பறந்து வந்த டம்ளர் எவர்சில்வர் தானே! டிக்கெட் புக் செய்து திருமதி சரிதாவிடம் நக்கலடித் உங்களுக்கு புகலிடம் யாருமே தர மாட்டார்கள்.
    ஜாக்கிரதை.Every action has an equal and opposite reaction !!

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தைப் படியுங்கள். ஏன் இந்தக் கொலவெறின்னு புரியும். ஆமாங்க.. நல்லவேளையா எவர்சில்வர் டம்ளர்தான்ங்கறதால அதுவும் தப்பிச்சுது, நானுமு் தப்பிச்சேன். சரிதாவுக்கு சப்போர்ட் பண்ணுகிற உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
    2. சரிதா என் மனைவியை சந்திக்காத வரை உங்களுக்கு நல்லது... ஒரு வேளை சந்தித்தால் டம்பள்ர் பரக்காது பூரிக்கட்டைதான் பறக்கும்

      Delete
    3. மதுரைத்தமிழனுக்கு இரும்பினால் செய்யப்பட்ட பூரிக்கட்டை ஒன்று (எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை) பார்சல் செய்து அனுப்பவும்....

      Delete
    4. மதுரைத் தமிழனுக்கு தங்கத்தால் பூரிக்கட்டை ரெடியாகிக்கொண்டிருக்கிறது.

      Delete
    5. அடடா... ஸ்.பை.க்கு மதுரைத் தமிழன் மேல் என்ன அன்பு...! சசி...! தங்கத்துல பூரிக்கட்டை தருவியா? அப்படின்னா எனக்கும் ஒண்ணு...! ஹி... ஹி...!

      Delete
  2. சமீபத்துல நீங்க பாத்த நல்ல படம்னும், ரொம்பப் புகழ்ந்துட்டிருந்தீங்கன்னும் இந்தப் படத்தைப் பத்திச் சொலலி, அவருக்கு டிக்கெட் வாங்கிக் குடுத்து அனுப்பினேன்.

    சரிதாவின் சாதனை ..!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  3. ஹா ஹா ஹா... திருமதி தமிழ் படத்தையும் சரிதாவையும் இணைத்த விதம் சூப்பர்... வழக்கம்போல் மின்னலாய் மின்னும் வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. அந்தப் படம் பாத்த (நொந்த?) சமயத்துல எழுதினது தம்பி இது. ஏ‌னோ பப்ளிஷ் பண்ண மனசு வராம விட்டுட்டன். இப்ப தூசுதட்டி, புதுசாக்கிப் போட்ருக்கேன். வரிகள் மின்னின என்றதற்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  4. பலரும் திருமதி தமிழ் விமர்சனத்தை படிப்பார்கள் என்பதால்.... திருமதி தமிழை மனதில் ஆழமாக விதைத்த தி.த. தலைவர் மெ.பவன் அவர்களை பாராட்ட வேண்டும்... (நொந்த மாதிரி தெரியலே...) ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  5. // ‘‘இந்த நாராயணசாமி‌ டயலாக்தானே வேணாங்கறது,//
    இதைப் படித்ததும் வாய்விட்டு சிரித்தேன். இயல்பான நகைச்சுவை இழையோடும் பதிவைத் தந்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாய்விட்டுச சிரித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  6. அட கேடயம் கொஞ்சம் பெரிதாகவே வேணும் உங்களுக்கு! :)

    சரிதாவின் சபதம்.... ”நினைத்ததை முடிப்பவள் நான்..... நான்” அப்படின்னு சரிதா பாடறா மாதிரி ஒரு ஃபீலிங்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... கற்பனையிலும் கண்டு ரசி்த்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  7. ராஜகுமாரன் சங்கம் வைத்திருக்கும் எங்கள் தனித் தலைவன் படத்தை கிண்டல் பண்ணியமைக்கு, உங்க ரெண்டு [[சரிதா]] போரையும் ச்சே பேரையும் கடுமையாக கண்டிக்கிறோம் என்பதை கொலை வெறியுடன் கூறிக்கொள்வதில் யாம் பெருமை அடைகிறோம் ஆத்தீ....

    ஒடுலெய் மனோ....

    ReplyDelete
    Replies
    1. சங்கத் தலைவன் வர்றதுக்குள்ள நானே ‘எஸ்’ஸாயிருவேன் மனோ! ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
  8. எனக்கு அண்ணனா பொறந்துட்டு இப்படியா ப்யந்தாங்கொள்ளியா இருக்குறது?! என்னை பாருங்க நான் உங்க மாப்பிள்ளைக்கு பயப்படுறேனா?!

    ReplyDelete
    Replies
    1. ராஜி! நீங்க வில்லியா இருப்பீங்களோ?

      Delete
    2. நல்லா சொல்லிக்குடுங்கம்மா...

      Delete
    3. ஜெஷ்வா... ராஜியைப் போல ஒரு பேரன்புக் காரியை நீங்க பாக்கவே முடியாது. அவங்களைப் பத்தி நீங்க சொன்னதை வாபஸ் வாங்கவும்! என்ன சசி இது...? மத்தவங்கட்ட நம்ம சிஸ்டரை விட்டுக் குடுத்துப் பேசலாமா நீயி? தலையில குட்டறேன் உன்னை!

      Delete
  9. திரு மதி தமிழுக்கு அத்தனை பவரா
    தெரியாமல் போச்சே
    படம் தியேட்டரில் ஓடாவிட்டால் என்ன
    கேஸட் வாங்கி வீட்டிலிலேயே வைத்து ஓட்டி
    ஓட செய்து விடமாட்டாமோ
    ஒரு சிதம்பர ரகசியத்தை சிரிக்கச் சிரிக்கச்
    சொன்னமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சிரித்து மகிழ்ந்து வாழ்த்தின உங்களு்க்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. சே..எல்லா மனைவிகளும் இப்படிதான் இருப்பாங்களோ? ஆண்கள் ரொம்ப உஷாரா இருக்கணும் போல.

    ReplyDelete
    Replies
    1. எல்லா மனைவிகளும் இல்லீங்க... 90 சதம் இப்படித்தான். ஹி.. ஹி... உஸாராத்தான் இருந்துக்கோணும்! மிக்க நன்றி!

      Delete
  11. நகைச்சுவை அருமை! வெகுவாக இரசித்தேன்! மேலும் எதிர்பார்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களு்க்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  12. கேடயம் என்ன பாஸூ கேடயம்,
    பேசாமல் நைட்ஷோவுக்கு போய் டைம் பாஸ் பண்ணவேண்டியதுதானே!
    //நாராயணசாமி‌ டயலாக்// நல்லா பிரபலமாகிறது, இப்போல்லாம்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஐடியா தந்த பிரதருக்கு மனம் நிறைய நன்றி!

      Delete
  13. ஹைய்யோ!!!!

    ஹா ஹா ஹா ஹா

    இப்படி நான் சிரிச்சு ரொம்பநாளாச்சு!

    சரிதாவை சந்திக்கும் வேளை வந்து கொண்டிருக்கிறது!!!

    ReplyDelete
    Replies
    1. இப்படி சிரிச்சதை நீங்க ‌சொல்லக் கேக்கையில மனசுக்கு தெம்பா இருக்கு டீச்சர்! யூ ஆர் மோஸ்ட் ஈகர்லி எக்ஸ்பெக்டட் அண்ட் வெல்கம்! மிக்க நன்றி!

      Delete
  14. //100 வாட்ஸ் பல்லை வாயால ஊதி அணைக்கற மாதிரி...//

    பல்புன்னு திருத்தி வாசிச்சுக்கிட்டேன் :-)

    பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாக்கும் சரிதாவோடது :-))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அவசரமா திருத்தி பப்ளிஷ் பண்ணாலும் எப்படியோ என் கண்ணை ஏமாத்தி எனக்கு பல்பு வாங்கித் தந்துட்டுதே இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்! திருத்திப் படிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி சாரல் மேடம்!

      Delete
  15. ஹா... ஹா....

    சரிதாவின் சாதனைன்னே சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சு சிரிச்ச உங்களுக்கு மனம் நிறைய நன்றி பிரகாஷ்!

      Delete
  16. இந்தக் கதையை படித்து சந்தோசமா படிச்சிட்டு இருக்கும்போது நடுவுல அந்தப் படத்த பத்தி ஞாபகப்படுத்தி பயமுறுத்திட்டீங்களே சார்... அந்தப் படத்தோட போஸ்டரைப் பார்த்த பயமே இன்னும் போகலை சார்.. சரியான ஆயுதத்தைத்தான் எடுத்திருக்காங்க... சரிதா...

    ReplyDelete
    Replies
    1. சரிதாவைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. சரிதா உங்களிடம் இருந்தே இது மாதிரி ஐடியாக்களை தெரிந்துகொண்டிருப்பாங்களோ ? பாவம் அவங்க ...

    ReplyDelete
    Replies
    1. அடடா... கூட்டுச் சேர்ந்துட்டியா சசி...! இனி நான் முன்னை விட ‘ஐயோ பாவம்’ தான்! ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
  18. சரிதாவின் சபதம் சூப்பர் சார்.. கைவசம் இந்த மாதிரி நிறைய ஐடியா இருக்கோ உங்கள்ட... அப்பப்போ தேவைப் படும் போது கேட்டு தெரிஞ்சுக்கலாம் போலயே

    ReplyDelete
    Replies
    1. கன்சல்டிங் ஃபீஸோட ரெடியாயிடுங்க ப்ரியா? நிறைய ஐடியா தெரிஞ்சுக்கலாம். ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
  19. /////‘‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்; அவள் மாம்பழம் வேண்டு‌மென்றாள்’’ என்று (கோரமாக) பாடிக் கொண்டிருந்தார் மாமா////

    நல்லதொரு மறுவாதை மாமாவுக்கு. ஹ..ஹ..

    அருமை

    ReplyDelete
    Replies
    1. அவர் கண்ணுல இது படாதுன்னு ஒரு தெகிரியம்‌ தேங்! ஹி... ஹி.. மிக்க நன்றி!

      Delete
  20. அவரோட பேச்ச‌ை நிறுத்தறதுங்கறது 100 வாட்ஸ் பல்லை வாயால ஊதி அணைக்கற மாதிரி... ஸ்ஸப்பா...// எப்படின்னா இப்படில்லாம்????

    உங்கள் கற்பனை வளத்திற்கு ஒரு ஜே.அப்படி என்ன அந்தப்படத்தில் இருந்தது..?எப்படியோ அந்த பதிவு என் கண்ணில் படவில்லை.இதோ உங்கள் பட விமர்சனம் பார்த்துடுறேன்.

    ReplyDelete
    Replies
    1. கற்பனை வளத்தை ரசித்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. நினைத்தேன் அந்தப் படம் அது வாகத்தான் இருக்கும் என்று!! :))))

    ReplyDelete
    Replies
    1. நீ படா கில்லாடி நைனா! அ‌தொட்டு கண்டுக்கின. டாங்ஸு!

      Delete
  22. ஊர்லேருந்து வந்து தங்கறவங்களை விரட்ட இப்படி ஒரு அபாயம் ஸாரி உபாயம் பண்ணின சரிதாவின் அறிவை எப்படி பாராட்டறது? உங்க சரிதாயணம் படிச்சா எங்களுக்கும் நகைச்சுவை வந்துடுது, கணேஷ்!

    வரிக்கு வரி சிரிப்பு!

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த உங்களுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றி!

      Delete
  23. கதை படிச்சு சிரிச்ச முகமாயிருந்த என் முகத்தை விமர்சனம் படிக்க வைச்சு தீய வைச்சிட்டிங்களே! இது நியாயமா கணேஷ் சார்!

    ReplyDelete
    Replies
    1. சிரிச்சு ரசிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  24. உங்க வாழ்க்கையில மறக்க முடியாத படமா இந்தப் படம் மனசுல பதிந்துவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... ஆமப்பா! மிக்க நன்றி!

      Delete

  25. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். .! திருமதி தமிழ் படிக்காதவர்களையும் படிக்க வைக்கும் உத்தி...? படத்தின் பெயரையே இப்போதுதான் கேட்கிறேன். . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  26. இனி நீங்கள் இடது கையாலும் எழுத ஆரம்பிக்கலாம், நகைச்சுவை பீரிட்டு வாகிறது உங்களுக்கு! உண்மையிலேயே ஒவ்வொரு வரியும் சுவையாக இருக்கிறது. கொஞ்சம் முயற்சி எடுத்து வெகுஜன பத்திரிகைகளில் எழுதுங்கள். உங்கள் கோடி இன்னும் உயரே பறக்கட்டும்! வாழ்த்துக்கள்! - ஜெ.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்ததுடன் அக்‌கறை கொண்டு அறிவுரையும் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஜெ!

      Delete

  27. சரிதாம்மா ! நீ செஞ்சது சரியாம்மா ?

    மாமா பாவம் !!
    மனசு நொந்து போய், ஊருக்கு ட்ரைன் ஏறுவதற்கு பதிலா, கேதார நாத்துக்கு போற வண்டிலே போனவரு,
    அங்கேந்து வர முடியாம, ஸ்ட்ரான்ட் ஆகி இருக்காராம்.

    ஒரு ஹெலி காப்டர் அனுப்பிச்சு வைக்கச்சொல்லி இருக்காரு.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... சூப்பர் கற்பனை சுப்புத்தாத்தா. நீங்க கதை எழுத ஆரம்பிச்சா எங்களுக்கெல்லாம் டெபாஸிட் காலி! மிக்க நன்றி!

      Delete
  28. நான்காவது வரியில் ஆரம்பித்த சிரிப்பு கதை முடிந்தபின்னும் நினைத்து நினைத்து சிரிக்கிறேன். என்ன ஒரு அற்புதமான நகைச்சுவை. வரிக்கு வரி உங்கள் கைவண்ணம் மிளிர்கிறது. எதைக் குறிப்பிட்டு சொல்வதென்றே தெரியவில்லை. என்ன இருந்தாலும் சரிதா அண்ணியின் சாமர்த்தியம் வேறு யாருக்கும் வராது. கலக்கலான கதைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. சிரித்த மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  29. படம் பற்றிய சிதம்பர ரகசியத்தை போட்டு உடைத்து விட்டீர்கள்.நல்லவேலை
    நான் தப்பித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  30. அருமையான கேலி நகைச்சுவை. நிறைய இடங்களை ரசித்தேன்.
    ஒரு வேளை கடல் படமா இருக்குமோனு ஒரு சந்தேகம் - அந்த லிங்கைக் கிளிக் செய்யவும் பயந்துட்டன்னா பாத்துக்குங்க.

    ReplyDelete
  31. அட இந்தக் கதைய எப்படி நான் மிஸ் பண்ணினேன்னு தெரியல...

    கிளைமாக்ஸ் தான் டாப்பு

    ReplyDelete
  32. சரிதாவின் புத்திசாலித்தனம் எனக்கு இல்லையே விருந்தாளியை விரட்ட! ஹீ மிகவும் சிரிப்பு புராணம்!

    ReplyDelete
  33. சரிதாவின் சாகசங்கள் என்று ஒரு தொடரே எழுதலாம் போல..

    ReplyDelete
  34. செம்ம கலாய்யி ...! சூப்பருன்னேன் ...!

    ReplyDelete
  35. சூப்பர் ட்விஸ்ட் சார்.. ஆனாலும் அவங்க மாமா பாவம் சார்.

    ReplyDelete
  36. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/2.html?showComment=1379461793265#c1036978093212335884

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube