Thursday, June 20, 2013

டெஸ்ட் கிரிக்கெட்டும், 20/20யும்!

Posted by பால கணேஷ் Thursday, June 20, 2013
லைப்பதிவை எழுதிவிட்டு நண்பர்கள் யார் கருத்திடுவார்கள் என்று காத்திருந்து, கருத்துக்களுக்கு பதிலளித்து, நாம் எழுதியது ரசிக்கப்படுகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிற வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்குச் சமமானது. முகநூலிலோ, ஒரு விஷயத்தை அப்லோட் செய்த சில கணங்களிலேயே நண்பர்களால் படிக்கப்பட்டு, விரும்பப்படுகிறதா இல்லையா என்பதையும் கமெண்ட்டையும் பெற்றுவிட முடிகிற வகையில் 20/20 மேட்சுகளைப் போலத் தோன்றுகிறது எனக்கு முகநூல். ஆனாலும் எனக்கு 20/20யைப் பிடிககிற அதே அளவுக்கு டெஸ்ட் மேட்ச்களும் பிடிக்கும் என்பதால் முகநூலில் அப்லோட் செய்த இரு விஷயங்களை இங்கும் பகிர விரும்பியே இந்தப் பதிவு. 

ரிஷபண்ணா வீட்டு மாடியிலிருந்து ஸ்ரீரங்க கோபுர தரிசனம்!œ
கடந்த சனி ஞாயிறு திருச்சி சென்றிருந்தேன். நான் சென்ற வேலையையும் பூர்த்தி செய்து கொண்டு பதிவுலக உறவுகளான ரிஷபன் அண்ணா, வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் கோவை டு தில்லி ஆகியவர்களைச் சந்தித்தேன். சனி இரவு ரிஷபன் அண்ணாவின் இல்லத்தில் தங்கியதில் வயதில் மூத்தவராக இருந்தாலும் சுறுசுறுப்பில் இளையவராகவும், என் ரசனைக்கு ஒத்துச் செல்பவராகவும் இருந்த ரிஷபண்ணாவின் அப்பாவைச் சந்தித்த உரையாடியது மிக மகிழ்வானது. நான் தந்த ‘சரிதாயணம்’ புத்தகத்தில் சாம்பிளுக்கு ஒரு கதையை சுடச்சுட படித்துவிட்டு அவர் பாராட்டியது இன்னும் சந்தோஷம் தந்த விஷயம்.

உபசரித்து அசத்திய வை.கோ.!
மறுதினம் காலை வை.கோ. அவர்களை சந்திக்கச் சென்றோம் நானும் ரிஷபன் அண்ணாவும். வை.கோ. அவர்களின் விருந்தோம்பலைப் பற்றி அப்பா ஸாரும், தோழி மஞ்சுவும் நிறையச் சொல்லியிருந்ததால், முதல்நாளே சொல்ல வேண்டாம், சர்ப்ரைஸாகப் போகலாம் என்று ரிஷபண்ணாவிடம் சொல்லியிருந்தேன். அப்படிச் சென்றும்கூ;ட விதவிதமான ஸ்னாக்ஸ், குளிர்பானம் என்று தந்து உபசரித்து அசத்தினார் வை.கோ. கூடவே எனக்கு ஒரு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து (வெட்கத்தில் என்னை நெளிய வைத்து) என் மீது அவர் கொண்ட மதிப்பையும் அன்பையும் தெற்றென வெளிப்படுத்தினார். ‘‘மறுபடி ஒரு தடவை நிதானமா நிறைய நேரம் இருக்கற மாதிரி வாங்கோ’’ என்ற அவரின் அன்புக்கு நன்றி சொல்ல இன்னும் வார்த்தைகளை நான் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்.

வை.கோ. வீட்டிலிருந்து மலைக்கோட்டை தரிசனம்!
அன்று மாலை என் நண்பர் வெங்கட்டின் துணைவியார் ஆதி வெங்கட் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். புத்தகம் படிப்பதில் நிறைய ஆர்வம் கொண்ட ‌தோழி அவர் என்பது எனக்கு ரொம்ப்ப பிடித்த விஷயம். வெங்கட்டின் தாயாரையும், தந்தையாரையும் அறிமுகம் செய்வித்தார். வெங்கட்டின் அப்பாவும் சுறுசுறுப்பாகவும், பளிச்சென்று பேசி, அன்புடன் பழகுபவராகவும் இருந்தார். எனக்கு அவரை மிகப் பிடித்துப் ‌போனதில் வியப்பில்லை... அவருக்கு என்னைப் பிடித்துப் போனதுதான் வியப்பு! புறப்படுகையில், ‘‘அடுத்த தடவை வந்தா ஒரு நாள் என்கூட தங்கற மாதிரி வரணும்’’ என்று அன்பான உத்தரவாக என்னிடம் அவர் சொன்னது என் பாக்கியம்.

மொத்தத்தில் அங்கிருந்த வார இறுதி நாட்கள் முழுக்க மிக மகிழ்ச்சியுடன் கழிந்து எனக்குள் டன் கணக்கில் புத்துணர்வைத் தந்தது என்பதே நிஜம்! இரவு ரயிலில் வருகையில்தான் என்னுடன் அன்பாய்ப் பழகி உபசரித்த இவர்கள் யாவருக்கும் பதில் மரியாதை ஏதும் செய்யாமல் வந்துவிட்டேன் என்பது மனதுக்கு உறைத்தது. தலையில் கு்ட்டிக் கொண்டேன். அடுத்த முறை அவசியம் ஏதாவது செய்யத்தான் வேணும்!

செவ்வாய்க்கிழமையன்று தோழி மஞ்சுபாஷிணியின் தமிழக வருகையை முன்னிட்டு புலவர் ஐயாவின் வீட்டில் காலை 10 மணிக்கு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பன் கோவை ஆவி சென்னைக்கு வருவதாக திங்களன்று போன் செய்து சொன்னதும் கூடுதல் மகிழ்வானது எனக்கு. அவரையும் அழைத்துச் செல்வதெனத் தீர்மானித்தேன். சொன்னதும் ஆனந்தும் மகிழ்வுடன் சம்மதித்தார். செவ்வாய் ‌காலை நானும் ஆனந்தும் மயிலாப்பூருக்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டு காலை ஒன்பதரைக்கு புலவர் ஐயா வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கையில் சசிகலா போன் செய்து, தான் வந்துவிட்டதாகச் ‌‌சொல்ல, எப்பவும் லேட்டாக வரும தென்றல் இன்று புயலாய் வந்து என்னை முந்தி விட்டதில் மயக்கம் வராத குறை எனக்கு.

இடமிருந்து: சீனு, கண்ணதாசன், கோவை ஆவி, சசி, சேட்டை, புலவர், மதுமதி, மஞ்சு, ரூபக்!
புலவர் ஐயாவின் வீட்டுக்கு அடித்துப் பிடித்‌துச் சென்றால், அங்கே சசியுடன், கண்ணதாசன் வந்திருக்க, மஞ்சுபாஷிணியை அழைத்து வந்திருந்தார் மதுமதி. பதிவர் சந்திப்பு என்றாலே மது இல்லாமல் இருக்காது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்த ‘மது’ இல்லாமல் என்னைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்பு கிடையாது. எல்லாருக்கும் ‘ஹாய்’ ‘ஹாய்’ சொல்லிவிட்டு, ஆனந்தை அறிமுகப்படுத்திவிட்டு உடல்நலக் குறைவினால் ஓய்வில் இருக்கும் சேட்டைக்கார அண்ணாவை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு சூளைமேடு கிளம்பினேன்.

புறப்படுகையில் சமீபத்திய காதல் மன்னன் சீனு போன் செய்து புலவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். சீனுவுடன் ரூபக் ராமும் பில்லியனில் உட்கார்ந்து செல்வதைப் பார்த்தபடியே கடந்து சென்று சேட்டையண்ணாவின் வீட்டை அடைந்து அவரை புலவர் வீட்டுக்குக் கடத்தி வந்தேன். சேட்டை மீன்ஸ் கலகலப்பு! அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தமும், உற்சாக ஒலிகளும் இருந்து கொண்டே இருக்கும். அன்றும் அப்படியே! கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் பையன் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் பர்மிஷன் சொல்லிவிட்டு ‘பரோலில்’ வர, அரட்டைக் கச்சேரி களை கட்டியது.

நிற்பவர்கள்: சசி, கண்ணதாசன், அடியேன், ஸ்கூல் பையன், மதுமதி. அமர்‌ந்திருப்பவர்கள்: சேட்டைய்ண்ணா, புலவர், மஞ்சு. கீழே: ரூபக் ராம், சீனு, கோவை ஆவி (எ) ஆனந்த்.
மஞ்சுபாஷிணியின் எழுத்திலும் பின்னூட்டத்திலும் நீங்கள் பார்க்கும் வாஞ்சையும், கனிவும் நேரில் சந்திக்கையில் அதிகமாகவே உணர்வீர்கள். மதிய உணவு நேரத்திற்குப் பின் சீனுவும், ரூபக்கும், ஸ்கூல் பையனும் கிளம்பி விட்டனர். முதல்நாள் நைட் டூட்டி பார்த்துவிட்டு தூககத்தைத் துறந்து நண்பர்களைச் சந்திக்க உற்சாகமாய் வந்திருந்த ரூபக்குக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு! அப்புறமென்ன... மஞ்சு, என் தங்கை ஸாதிகாவைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல, ஸாதிகாவின் வீட்டிற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றேன். சசிக்கு பையன்கள் பள்ளிவிட்டு வரும் நேரமாகி விட்டதால் ஸாதிகாவுக்கு ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு ‌கிளம்பிட்டாங்க.

நாங்கள் அனைவரும் ஸாதிகாவின் உபசரிப்பிலும் அன்பிலும் நனைந்தோம். மஞ்சுவை நான், மது, கண்ணதாசன், ஆனந்த் நால்வருமாக உடன் சென்று அண்ணா நகரில் அவங்க தங்கை வீட்டில விட்டுட்டு திரும்புகையில் மணி மாலை ஆறரையைத் தாண்டிவிட்டிருந்தது. மஞ்சு திருநள்ளாறு உட்பட சில இடங்களுக்கு விசிட் அடிச்சுட்டு, பெங்களூரு போவதாகவும் அங்குள்ள நட்புகளை போனில் பேசி அழைத்து சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாங்க. பெங்களூரு ஃப்ரெண்ட்ஸ்...! ப்ளீஸ் நோட் திஸ்!

ஆக மொத்தத்தில் மூன்று முழு தினங்கள் கணிப்பொறியை அண்டாமல், நண்பர்களுடன் உற்சாகமாகப் பழகி, மனம்விட்டுச் சிரித்து மகிழ்ந்ததில் எனக்கு பத்து வயது குறைந்துவிட்ட ஃபீலிங்!  இந்த ரெமோவுக்கு இன்னும் பத்து வயசு குறைஞ்சுட்டதால நண்பர்கள் எழுதற காதல் கடிதங்களைப் படிக்கறதுக்கு இப்ப இன்னும் ஜாலியா, சுறுசுறுப்பா தயாராயிட்டாராக்கும்...! ஹி... ஹி...!

85 comments:

  1. குடும்பமாக பழகி கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்று தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழா... இந்தப் பெரிய குடும்பத்தில் என்றும் அன்பும் பாசமும் தொடரணும்கறதுதான் என் விருப்பமும்!

      Delete
    2. குடும்பத்தில் நீங்களும் இருக்கிங்க தமிழா. ஆனா விடுப்பில் சென்றிருக்கிங்க. விரைவில் வருக வருகவென வரவேற்கிறோம்.

      Delete
  2. மஞ்சுபாஷிணியின் எழுத்திலும் பின்னூட்டத்திலும் இருக்கும் வாஞ்சையும், கனிவையும் படிக்கும் போது வயதில் சிறிது பெரியவரோ என்று நினைத்து இருந்தேன். ஆனால் படத்தை பார்க்கும் போது வயதில் அல்ல மனதில் மிகப் பெரியவர் என்று தோன்றுகிறது...அவரை நீங்கள் மீண்டும் பார்த்தால் அல்லது பேசினால் எனது வாழ்த்தை அவரிடம் தெரிவியுங்கள் நன்றி அனைவரும் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தெரிவிக்கிறேன் நண்பா. மிக்க நன்றி!

      Delete

  3. ஒரு சந்தேகம் படத்தில் எல்லோரும் உட்கார்ந்து இருக்கும் போது தென்றல் மட்டும் நின்று அதிகாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறதோ

    ReplyDelete
    Replies
    1. அதிகாரம் இல்லீங்க...உபசாரம்! எங்களுக்கு அருமையாய் டீ போட்டுத் தந்து அசத்தினாங்க தென்றல் சசி!

      Delete
    2. அட அவங்களுக்கு டீ போடகூடத் தெரியுமா என்ன?

      Delete
    3. அட ஆமாப்பு... டீ கூட டீ மாதிரி டேஸ்ட்டோடயே இருந்துச்சுன்னா பாத்துக்கங்களேன்!

      Delete
    4. ஆமாங்க தேநீர் போட்டு சர்வ் செய்ய தான் ஆட்கள் இல்லையாம் நீங்க வந்தா நன்றாக இருக்கும் மதுரைத்தமிழா.. வாங்கோ வாங்கோ.

      Delete
    5. அது என்ன டீ கூட கணேஷா... நான் சமைத்ததை சாப்பிட்டுத்தான் இவ்வளவு நல்லா எனர்ஜிட்டிக்கா எழுதுறிங்க நினைவிருக்கட்டும்.

      Delete
    6. நல்லாவே சமைச்சிருந்த நீங்கறத இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கறேன் சசி. அதென்ன நீயும் மஞ்சு மாதிரியே என்னைக் கூப்பிட ஆரம்பிச்சுட்டே?

      Delete
    7. மன்னிக்க மன்னிக்க அக்காவோட இருந்ததில் இருந்து இன்னும் நான் விடுபடவில்லை அந்த தாக்கமாக இருக்கலாம்.

      Delete
  4. //சமீபத்திய காதல் மன்னன் சீனு//

    தற்போது பதிவுலகையே காதல் மூடுக்கு கொண்டுவந்திருப்பதால் சீனுவுக்கு இந்தப் பட்டம் பொருத்தமானதே....

    // இந்த ரெமோவுக்கு இன்னும் பத்து வயசு குறைஞ்சுட்டதால//

    அடுத்து நக்கல் நையாண்டி ஆரம்பிச்சிருமே...

    ReplyDelete
    Replies
    1. சீனுவுக்கு நான் எல்லா விஷயத்திலயும் சீனியர்ங்கறத மனதில் கொள்க ஸ்கூல் பையன்! நக்கல் + நையாண்டி ஆரம்பிச்சாச்சு எப்பவோ... சதவீதம் கூடிரும் இனி! ஹி... ஹி...! மிக்க நன்றி!

      Delete
    2. //சமீபத்திய காதல் மன்னன் சீனு//

      இத நான் ஆமோதிக்கிறேன்..

      Delete
  5. படிக்கும் பொழுதே அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது...உடன் நானும் சென்னையில் இல்லையே என்கிற வருத்தமும்.. அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. மனமிருந்தால் மார்க்கபந்து, ஸாரி மார்க்கமுண்டு! ஆகஸ்டில் சென்னையில் நடக்க இருக்கும் மெகா பதிவர் சந்திப்புக்கு அவசியம் வாங்க ப்ரியா... உங்கள் வருத்தம் + ஆதங்கம் பறந்துடும். மிக்க நன்றி!

      Delete
  6. மகிழ்ச்சியான சந்திப்பு... வாழ்த்துக்கள்...

    20/20 விறுவிறுப்பில் டெஸ்ட் மேட்ச்யை மறந்தவர்கள், வெறுத்தவர்கள் பல பேர்... டெஸ்ட் மேட்ச் வேறு அவ்வப்போது தான் நடக்கிறது...! அவ்வாறு Blog ஆகி விடாமல் இருந்தால் சரி...

    ReplyDelete
    Replies
    1. டெஸ்ட் மேட்சுகள் தொடர்ந்து நடக்க உங்களை மாதிரி உற்சாகமான ஓபனிங் பேட்ஸ் மேன் இருக்கணும். அதனால நீங்க சோர்வில்லாம இருக்கறவரை ப்ளாக்கும் சுறுசுறுப்பா இருக்கும் D,D. மிக்க நன்றி!

      Delete
  7. நல்ல தேநீர் மற்றும் பகலுணவும் பரிமாறிய சசிகலா,மஞ்சுவுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வார்த்தைகளை வழிமொழிகிறேன். மிக்க நன்றி!

      Delete
    2. அனைவரையும் அமர வைத்து அரட்டையை தாங்கிக்கொண்ட ஐயாவிற்கு சொல்வோம் நன்றியை.

      Delete
  8. பதிவர்கள் சந்திப்பு கலை கட்டுகிறதே!
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  9. உங்கள் யாவருக்கும் எனது வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய மனோவுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. ஃபோனில் மது சொன்ன அந்த தலைப்பாக்கட்டி பிரியாணி அஹ்டும் கால் ப்ளேட்டுல 4 லெக்ஃபீஸ் கொண்ட அந்த பார்சலும் செரிமானத்துக்கு 2.5 லிட்டர் மிரிண்டா பாட்டலும் வந்தாகனும்..,

    ReplyDelete
    Replies
    1. மது இதையெல்லாம் யார் உங்கள சொல்ல சொன்னது ? ஏற்கனவே அங்க புகைஞ்சின்டு இருக்கு தெரியாதா ?

      Delete
    2. ராஜி அக்கா நான், மஞ்சு அக்கா ,சேட்டைக்காரன் ஐயா மூவரும் தயிர் சாதம் தான் சாப்பிட்டோம். நோட் திஸ்.

      Delete
    3. என்னம்மா நீயி..! சாப்ட்ட விவரத்தையெல்லாம் பப்ளிக்ல சொல்லி மாட்டி விட்டுட்டியே... (உளறின மதுவை தனியா கவனிச்சிரலாம்.) இந்த ஐட்டம்லாம் ராஜிக்குன்னு ரிஸர்வ் பண்ணியாச்சுப்பா! ஓ.கே.வா?

      Delete
  11. டன் கணக்கில் புத்துணர்வைத் தந்த அருமையான சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறை நன்றி!

      Delete
  12. கோவையில் இருந்து வர முடியாத வருத்தத்தை நண்பர் ஆவி வந்து சரி செய்துவிட்டார் படங்களும் பகிர்வும் மகிழ்ச்சியை அள்ளி தருகிறது நீங்கள் மட்டும் அல்ல நாங்களும் புத்துணர்வோடு செயல்பட இந்த சந்திப்புகள் அவசியம் தான் நன்றி பாலா சார்

    ReplyDelete
    Replies
    1. சந்திப்பை ரசித்து மகி்ழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. படிக்கும்போதே மகிழ்ச்சி கொட்டுகிறது! அருமையான சந்திப்பு!

    ReplyDelete
    Replies
    1. படித்து மகிழ்ந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. ஆஹா..வார்த்தைகளில் தெரிகிறது சந்தோஷமும்,பூரிப்பும்.அருமையாக பதிவர் சந்திப்பை விவரித்து இருப்பது அருமை.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தமைக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  15. மகிழ்ச்சியான சந்திப்பைப் பத்தி வாசிக்கையிலேயே மகிழ்ச்சியாயிருக்கு..

    ReplyDelete
    Replies
    1. வாசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  16. எல்லோரையும் பார்த்து யாவற்றையும் படிக்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது சகோ!. அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!


    இதெல்லாம் பார்க்கிறப்போ நெஞ்சுக்குள்ளே சுள் என ஒரு வலி. தனிமரங்களாய் தேடுவாரிலாமல் நமக்குநாமே பேசிக்கொண்டு... ச்சே!.. என்ன இந்த வெளிநாட்டு வாழ்க்கைன்னு வலிக்கிறது....நாங்களும் எப்போ அங்கின வந்து இப்பிடி எல்லாருடனும் பழகுறது என்று ஏக்கம்!..

    எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்..:(.

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோ!..

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக நாம் அனைவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் தோழி வருத்தம் வேண்டாம்.

      Delete
    2. ஹேமா, நேசன், ராஜ், பூ்ங்கோதை, நீங்கன்னு நான் சந்திக்க விரும்பற, வெளிநாட்டில் வாழ்பவர்களின் ஒரு பெரிய லிஸ்ட்டே என்னிடம் இருக்கு. முடியாததால இங்கயும் ஏக்கமும், வருத்தமும் கலந்த பெருமூச்சுதான் சிஸ்! சசி சொன்ன மாதிரி சந்திக்கும் ஒரு நாள் வரும்கற நம்பிக்கையோட காத்திருப்போம். மிக்க நன்றி!

      Delete
  17. மஞ்சுபாஷிணி அவர்களின் அன்பை நானும் அறிவேன். நீங்கள் அனைவரும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  18. எப்பவும் லேட்டாக வரும தென்றல் இன்று புயலாய் வந்து என்னை முந்தி விட்டதில் மயக்கம் வராத குறை எனக்கு./// மஞ்சு அக்காவை பார்க்க வரும் சந்தோஷம் அத்தனை வேகமா கிளம்ப வைத்தது. மது காலையிலேயே போன் செய்து கரெக்ட்டா 10 மணிக்கு அட்டணஸ் சைன் பண்ணனும் என்று கூறியதாலும் அந்த வேகம். அந்த மயக்கத்திலும் குளிர் பானம் வாங்க மறக்கவில்லை மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. வருகையும், கருத்தும் தந்தது மகிழ்வு. தென்றலுக்கு என் இதுயம் நிறை நன்றி!

      Delete
  19. வந்து போனதை மனதில் தங்கிப் போகிறமாதிரி அழகாய் எழுதி விட்டீர்கள்.
    பதிவர் மினி மீட் வர முடியாத எனக்கு நேரில் வந்த உற்சாகம் தந்தது படிக்கும் போது..

    ReplyDelete
    Replies
    1. எப்போதுமே திருச்சி என் மனதில் நிற்கும். இப்போது உங்களால் மனதை விட்டு நொடியும் அகல மறுக்கிறது நினைவுகள். நேரில் வந்த உற்சாகத்தைப் படித்து அடைந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  20. அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    படம் இரண்டில் ஒருவரையும், படம் நான்கில் ஒருவரையும், படம் ஐந்தில் இருவரையும் எங்கேயோ ........ பார்த்த ஞாபகம் !!!!! ;)))))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...! ‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’னு வாத்யார் மாதிரி பாடிருவீங்க போலருக்குதே...! செம குறும்புண்ணா நீங்க!

      Delete
  21. திருநள்ளாறு போகும் வழியில் மஞ்சு என்னிடம் தொலைபேசியில், தகவல் கொடுத்தும் கூட, 20/20 பார்க்க முடியாமல் போன எனக்கு, இந்த டெஸ்ட் மேட்ச் ஆவது பார்க்க முடிந்ததில் திருப்தியோ திருப்தி தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. மினி பதிவர் சந்திப்பை உங்க ஸ்டைலில் கலக்கலா பகிர்ந்தமைக்குநன்றி! விரைவில் உங்கள் சந்திப்புக்களில் இணைய ஆவலாக உள்ளேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் மாத சந்திப்பில் அவசியம் இணையுங்கள் சுரேஷ். மிக்க நன்றி!

      Delete
  23. சூப்பர் ...!

    ரெமோ பிரதர் ...! காதல் கடிதங்கள படிக்கும் போது அந்நியனா மாறீடாதீங்க ...!

    நோ ..நோ ...! அது நீ எழுதுறத பொறுத்துன்னு சொல்லப்புடாது ...

    அப்புறம் சீனுவ பாத்தா ஒரு சாயலுக்கு பாண்டியராஜன் மாதிரியே இருக்குல ...!

    ReplyDelete
    Replies
    1. அலோ, யாருப்பா அது எங்க காதல் இளவரசனை கிண்டல் பண்றது?


      ஹா ஹா ஹா சீனு தொப்பி தொப்பி தொப்பி..

      Delete
    2. ஹா ஹா ஹா இருங்க இருங்க உங்க எல்லாரையும் கூடிய சீக்ரியம் பிரபலம் ஆக்குறேன் :-)

      Delete
    3. சும்மாக் கிடந்த சீனுவ தீயா வேலை செய்யத் தூண்டிட்டியே ஜீவன்...! பாக்கலாம் என்ன பண்றாருன்னு..! ரெமோ எந்த நாளும் அன்னியனாக வாய்ப்பில்ல தம்பி! மிக்க நன்றி!

      Delete
  24. //விதவிதமான ஸ்னாக்ஸ், குளிர்பானம் என்று தந்து உபசரித்து அசத்தினார் வை.கோ. கூடவே எனக்கு ஒரு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து //
    //உற்சாகமாகப் பழகி, மனம்விட்டுச் சிரித்து மகிழ்ந்த//
    //அரட்டைக் கச்சேரி களை கட்டியது//
    //உபசரிப்பிலும் அன்பிலும் நனைந்தோம்//
    //எனக்கு பத்து வயது குறைந்து//
    இவ்ளோ கீதாபா இந்த பதிவர் சந்திப்புலே?
    ரொம்ப சந்தோஷமாகீது பார்க்கவும் படிக்கவும்.
    அப்போ லாஸ்ட் டைம் மாதிரி நானும் "மெகா மீட்"லே கலந்துக்க ட்ரை பண்றேன்பா!



    ReplyDelete
    Replies
    1. கண்டிசனா வந்துரணும் தலீவா! அப்போதான அல்லாருக்கும் குஜாலா இருக்கும்! கண்டுகினியா? ரொம்ப டாங்ஸுப்பா!

      Delete
  25. வைகோ ஸார் வீட்டிலிருந்து இதே டைரக்ஷனில் வடைக் கடையை புகைப்படம் எடுத்து அவரேயும் பகிர்ந்திருக்கிறார்!

    தேடி வந்து கூடிப் பேசி களித்த சந்தோஷம் பதிவில் தெரிகிறது. சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. எனனதான் வைகோ போட்டோ போட்டிருந்தாலும் நம்ம கேமரால நம்ம கையால படம் எடுக்கற த்ரில்ல விட்ற முடியுமா ஸ்ரீராம்? ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  26. //நாங்கள் அனைவரும் ஸாதிகாவின் உபசரிப்பிலும் அன்பிலும் நனைந்தோம். // என்னாது இது

    திருச்சியில் இருந்து சென்னை வரை அனைத்து சந்திப்புகளையும் ஒன்றாய் கலந்து கொடுத்து விட்டீர்கள்... தனித்தனியாய் எதிர்பார்த்தேன், இருந்தும் இதுவும் நிறைவே...

    ரூபக் ராம் தான் பாவம் கொஞ்சம் கஷ்டப்பட்டு போயிருப்பான்

    ReplyDelete
    Replies
    1. என்னங்கலே... பயணத்தை விரிவா எழுதினா, இவ்வளவு நீளமான்னு கேக்கறீங்க... சரின்னு, சந்திப்புகளை சுருக்கி எழுதினா தனித்தனியா எதிர்பார்த்தேன்ற. நியாயமாலேஏஏஏ! ரூபக் கண்ணுல லேயர் லேயரா தூக்கம் தெரிஞ்சது அன்னிக்கு எனக்கு. கொஞ்சம் என்ன... ரொம்பவே கஷ்டப்பட்டுருச்சு பயபுள்ள! அதையும் மீறி முகத்துல சந்தோஷமும் இருந்துச்சுல்ல...!

      Delete
    2. ஹா ஹா. உங்கள் அனைவரையும் பார்த்ததில் களைப்பு பறந்து விட்டது

      Delete
  27. இளமதி தோழி சொன்னது போல்
    இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேண்டும் தான்.

    பதிவிலேயே நானும் ஐக்கியமாகி விட்டதால் நானும்
    உங்களுடனே இருந்தது போன்ற உணர்வைத் தந்தது.

    பகிர்விற்கு மிக்க நன்றி பால கணேஷ் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மிக ரசித்துப் படித்தீர்கள் என்ப‌து புரிகிறது அருணா! உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  28. சின்ன சின்ன தாக பதிவர்கள் சந்திப்பு நடந்து கொண்டே இருக்கிறது. எங்களைப் போன்ற வெளியூர் பதிவர்களுக்கும் எல்லோரையும் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஆவல் அதிகமாக இருக்கிறது. திரு மதுமதி அவர்கள் விரைவில் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறார். காத்திருக்கிறோம்.

    திருமதி மஞ்சுவை பெங்களூரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
    சந்தித்தவுடன் நானும் ஒரு பதிவு போடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சந்தித்து எழுதுங்கள்மா. ஆகஸ்ட்டில் மெகா சந்திப்பு இருக்கும். அவசியம் வாருங்கள்...! மிக்க நன்றி!

      Delete
  29. ஒரு குடும்பத்தில் யாரேனும் உறவினர் வரும் போது அவர் வந்து சென்ற மகிழ்ச்சியை வெளி நாட்டில் இருப்பவருக்கு ,குடும்ப அங்கத்தினர்கள் தெரிவிக்கும் போது தானும் அங்கு இல்லையே என்ற ஏக்க உணர்வில் மகிழ்வார்களே அந்த உணர்வோடு தான் நான் இருக்கிறேன்

    ஆபீசுக்கு கட்டடிக்க முடியாததால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை பால கணேஷ் சார்

    ReplyDelete
    Replies
    1. அடுத்தொரு சந்திப்பு நிகழ்கையில் நீங்கள் அவசியம் வரணும் சரவணன். மிக்க நன்றி!

      Delete
  30. மிகவும் சந்தோஸம் மூத்தவர்கள் என்று இல்லாமல் ஜாலியாக நட்புடன் பழகும் விதம் கண்டு!ம்ம் வை.கோபு சார் திருச்சியிலா!ம்ம் போய் வந்துவிட்டாள் போச்சு!

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தந்த கருத்துககு என் மனம் நிறைந்த நன்றி நேசன்!

      Delete
  31. இனிய தருணங்கள். மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. டெஸ்ட் மேட்சுன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சுருக்கமா 10-10 மாதிரி எழுதீட்டீங்களே தலைவரே..


    விரைவில் வருகிறது- சென்னையின் "மொட்டை" வெயிலில்.. படிக்கத் தவறாதீர்கள்..

    ReplyDelete


  33. திரு வை.கோ அவர்களை தங்களுடன் நிழற்படத்தில் பார்த்ததில் மகிழ்வு. உங்களை நான் திருமதி துளசி கோபால் அவர்களின் அறுபதாவது பிறந்த நாளன்று சந்தித்து இருந்தேன். திரு வை.கோ அவர்களை ( எனது தொலைவு உறவினராக இருக்கக்கூடுமென்ற ஒரு நினைப்பு இருக்கிறது ) பார்த்தத்து மனம் நிறைவு. மேலும் அவர் இருக்கும் அதே தெருவில் நான் 1968 வரை ஒரு இருபது அல்லது முப்பது ஆண்டுகள் இருந்திருக்கிறேன். மலைக்கோட்டையை அதே வ்யூகத்தில் பார்த்திருக்கிறேன். எல்லா பழைய நினைவுகளும் ஒரே கணத்தில் வரும்படி இருந்தது உங்கள் பதிவு.

    ஆக முதற்கண் உங்களுக்கு நன்றி.

    அடுத்து, பதிவர் விழா துவங்குமுன், திருமதி மஞ்சு அவர்கட்கும், திரு மதுமதி அவர்களுக்கும் இங்கிருந்து தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். விழாவில் ஒரு கலை நிகழ்ச்சியாக ஒரு இனிய பியானோ இசையையும் அனுப்பியிருந்தேன். அது அங்கே ஒலிபரப்ப பட்டதா என தெரியவில்லை.

    திருமதி சசிகலா அவர்களது கவிதைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு நாள் விடியலின் போதும் நம்மை எழுப்பிடும் கதிரவனின் ஒளிக்கிரணங்கள். நான் ரசிக்கவில்லை அந்தக் கவிதைகளை.. புசிக்கின்றேன்.

    திரு புலவர் இராமானுசம் அவர்களின் தமிழ்த் தொண்டு சொல்லுக்கும் அப்பாலானது. உலகெங்கும் வாழும் வாழும் தமிழர்களை ஒன்று திரட்டிடும் கவிதைகளை, மரபுக்கவிதைகளை அவர் மாட்சியுடன் படைக்கும் அழகே அழகு.

    என்ன சொல்ல !! யான் வரவில்லையே என எங்கோ மனதினில் ஒரு ஏக்க கீறல்,

    யாரேனும் ஒரு களிம்பு தாருங்களேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. துளசி டீச்சர் ஃபங்ஷனுக்கு முன்னாலயே பதிவர் சந்திப்புலயும் நாம சந்திசசோமே சுப்புத்தாத்தா... வயசானதால மறந்துடுச்சு போல! வைகோ அவர்கள் பற்றியும் நம் சக பதிவர்கள் பத்தியும் எழுதி மனதை நெகிழ வெச்சுட்டீங்க...! அமெரிக்காவுலருந்து நீங்க தமிழகம் வந்ததும், உங்களுக்காகவும் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்றேன். அதான் களிம்பு! வாங்கோ... மிக்க நன்றி!

      Delete
  34. //sury Siva June 21, 2013 at 6:15 PM

    திரு வை.கோ அவர்களை தங்களுடன் நிழற்படத்தில் பார்த்ததில் மகிழ்வு. உங்களை நான் திருமதி துளசி கோபால் அவர்களின் அறுபதாவது பிறந்த நாளன்று சந்தித்து இருந்தேன். திரு வை.கோ அவர்களை ( எனது தொலைவு உறவினராக இருக்கக்கூடுமென்ற ஒரு நினைப்பு இருக்கிறது ) பார்த்தத்து மனம் நிறைவு. மேலும் அவர் இருக்கும் அதே தெருவில் நான் 1968 வரை ஒரு இருபது அல்லது முப்பது ஆண்டுகள் இருந்திருக்கிறேன். மலைக்கோட்டையை அதே வ்யூகத்தில் பார்த்திருக்கிறேன். எல்லா பழைய நினைவுகளும் ஒரே கணத்தில் வரும்படி இருந்தது உங்கள் பதிவு.//

    ஐயா நமஸ்காரம்.

    நானும் உங்களைப்போல ஆங்கரை தான் பூர்வீகம். மாந்துறையான் தான் எங்களுக்கும் [குல தெய்வ] கிராம தேவதை.

    நானும் தங்களின் “சங்கிருதி கோத்ரம் - ஆபஸ்தம்ப சூத்ரம் - மழைநாட்டுப் பிரஹசரணம்’ தான். நாம் இருவரும் தாயாதி பங்காளிகளாக இருக்கக்கூடும்.

    பல தலைமுறைகளுக்கு முன்பான என் கொள்ளுத்தாத்தாவும், உங்கள் கொள்ளுத்தாத்தாவும் சொந்த அண்ணன் தம்பியாகவும் கூட இருக்கலாம்.

    திருச்சி வடக்கு ஆண்டார் தெருவில், அந்தக்காலத்தில் இருந்த, தங்கள் உறவினர், வக்கீல் சிவசுப்ரமணிய ஐயர் கூட எங்களுக்கு தாயாதி தான். அவர் மறைவுக்கு நாங்கள் தீட்டு அனுஷ்டித்த ஞாபகம் எனக்கு இன்னும் உள்ளது.

    இதைப்பற்றியெல்லாம் ஒருநாள் உங்களுக்கு மெயில் மூலம் நான் சொல்லியிருந்தேன் என்று ஞாபகம்.

    இதையெல்லாம் சரியான முறையில், தலைமுறைச் சீட்டின் மூலம் நிரூபிக்க இப்போது தகுந்த பெரியவர்கள் யாரும் இல்லை.

    எப்படியோ இவரின் இந்தப்பதிவின் மூலம் என்னை போட்டோவில் பார்த்து விட்டீர்கள். சந்தோஷம்.

    பதிவுலகில் உள்ள நாம் எல்லோருமே சொந்த பந்தங்கள் தான். சகோதர சகோதரிகள் தான். மிக்க மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க கோபு அண்ணா! பதிவர்கள் அனைவருமே சொந்த பந்தங்கள்தான். மிக்க நன்றி!

      Delete
  35. முழு நேரம் இருக்க முடியாமல் பாதியில் கிளம்பியது வருத்தம் தான் என்றாலும், புதியவன் என்ற உணர்வே இன்றி, இருந்த அந்த சில மணி நேரம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete
  36. அடுத்த சந்திப்பில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..நானும்தான் வருவன் இல்லனா ஆட்டத்தைக் கலைப்பேன்

    ReplyDelete
  37. So you had a great mini get-together with the co-bloggers which must have enabled you to charge your batteries. Hope you must have enjoyed every moment of this meet and also cherish the sweet memories of the same. Wish you to have such mini meet often.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube