மனசையும் நிறைத்த ‘தாய்’ மீல்ஸ்!
வழக்கமாக என் தாய் செய்து தரும் மீல்ஸையே சாப்பிட்டு வந்த எனக்கு நேற்று ‘தாய்’லாந்து மீல்ஸை ருசி பார்க்கும் அனுபவம் கிட்டியது. ‘‘சார்.. ஆழ்வார்பேட்டைல எஸ்.ஐ.ஈ.டி. காலேஜ் எதிர்ல ஒரு ஹோட்டல்ல ‘தாய்லாந்து’ ஃபுட் நல்லாயிருக்காம். ஆரூர் மூனா ஒரு மணிக்கு வர்றதா சொல்லியிருக்காரு. நீங்களும் ஜாயின் பண்ணிக்கறீங்களா?’’ என்று மெ.ப.சிவகுமார் கேட்டபோது, ‘‘ஓ.கே. சிவா’’ என்று சம்மதி்த்தேன். ஆனால் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்ட கேபிள், ‘‘தாய்லாந்து ஃபுடஸ் எல்லாமே ஸ்வீட் அண்ட் ஸோர் பேஸ்டா இருக்கும். விசாரிக்காம போனா ‘ழே’ன்னு முழிக்க வேண்டியிருக்கும். கான்டினென்டல் ஃபுட் பிடிக்காதவங்களுக்கு பிடிக்காது’’ என்றதும் கொஞ்சமென்ன... ரொம்பவே தயக்கமாக இருந்தது. ஆனாலும் ஆரூரார் அங்கேதான் சாப்பிட வேண்டுமென்று ஒற்றைக் காலில் நி்ன்றதால் அங்கேயே போனது நால்வர் அணி. தாய்லாந்துசெட் நான்வெஜ் லன்ச் ஆர்டர் பண்ணினார் ஆரூரார்.
முதலில் ஸ்டார்ட்டராக வெற்றிலை ஒன்றில் கொஞ்சம் கடலை, கொஞ்சம் இஞ்சி, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் சாஸ் எல்லாம் போட்டு பீடா மாதிரி ஒன்றைத் தந்தார்கள். என்னடா இது... கடைசில தர்ற பீடாவை முன்னாலயே தர்றாங்களேன்னு பாத்தா, அது பசியைத் தூண்டறதுக்காகன்னாரு கேபிள். சாப்ட்டுப் பாத்தா.. ரொம்பவே நல்லா இருந்தது. அடுத்ததா சூப் வந்தது. சூப். அதுவும் ஏமாற்றவில்லை. நல்ல ருசி! மூன்றாவதாக அவர்கள் தந்தது மாங்காயை மெல்லியதாக நறுக்கி சுவை சேர்த்த நூடுல்ஸ் மற்றும் சிக்கன் பீஸஸ்! மாங்காயின் இனிப்பு சுவையுடன் பற்களில் ஒட்டாத க்ரிஸ்பியான சிக்கன் பீஸ்களுடன்.... சூப்பரு்ஙகோ!
அப்புறம் ஒரு நூடுல்ஸ் தந்தார்கள் பாருங்கள்... நான் வாழ்க்கையில் இதுவரை சாப்பிடதிலேயே ரியல் டேஸ்ட் நூடுல்ஸ் இதுதாங்கோ..! எக்ஸ்ட்ரார்டினரி. பின் கொஞ்சம் ரைஸும், சிககன் குருமாவும்! இதுவும் ஏமாற்றாத சுவையில். கடைசியாக டெஸர்ட் கொடுத்தார்கள். தேங்காய்ப் பாலில் பலாச்சுளைகளை சிறிதாக கட் பண்ணி மிதக்கவிட்டு அதற்கு மேல் வெனிலா ஐஸ்க்ரீமை மிதக்க விட்டு.... ரியலி எக்ஸ்ட்ரார்டினரிலி டிவைன்லி டெஸர்ட்!

தாய் செட் லன்ச் நான்வெஜ் ரூ.246ம் வெஜ் லன்ச் ரூ.226ம் என விலைப்பட்டியல் சொல்கிறது. இந்த டைப் தாய் லன்ச் சாதாரணமாக ரூ.700 ஆகுமென்றும், அறிமுகத்துக்காக இந்த விலை என்றும் ஆரூரார் சொன்னார். முகவரி: Sawadika, 21/45, First Floor (Opp. to S.I.E.T. College), K.B.Dasan Road, Alwarpet, Chennai-600 018. ஆழ்வார்பேட்டையில் கே.பி.தாசன் ரோடு எது என்று யோசிக்காதீர்கள். கவிஞர் பாரதிதாசன் ரோடு என்பதைத் தான் அத்தனை லட்சணமாக சுருக்கியிருக்கிறார்கள் அங்குள்ள கடைக்காரர்கள்! (டமில் வாலுக!) அடம்பிடித்து இங்கு எங்களை அழைத்துச் சென்ற (முக்கியமாக பில்லும் கொடுத்த) ஆரூரார் வாழ்வாங்கு வாழட்டும்!
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
துணிச்சலின் மறுபெயர் எம்.ஆர்.ராதா!
‘‘தூக்குமேடை நாடகத்துக்கு நாட்டுல எவ்வளவு ஆதரவு இருந்ததோ அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது.’’
‘‘பெரிய மனிதர்களின் அந்தரங்க வாழ்க்கையை முதன்முதலாக அம்பலப்படுத்திய நாடகம் அது என்று சொல்வார்களே, எதிர்ப்பு இல்லாமல் இருக்குமா?’’
‘‘நான்தான் எதிர்ப்பிலேயே வளர்ந்தவனாச்சே! அதுக்கெல்லாம் அஞ்சுவேனா? என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி வைத்துத் தின்னா உடம்புக்கு நல்லது; அதேபோல என் நாடகக் கருத்துகளிலே உள்ள உண்மையும் உங்களில் சிலருக்குக் கொஞ்சம் கசப்பாய்தான் இருக்கும். அதை முகத்தைச் சுளிக்காம, எதிர்த்துக் கூச்சலிடாம, அமைதியா இருந்து கேட்டா உங்க அறிவுக்கு நல்லது. எங்களுக்கு அறிவு வேணாம்னு யாராவது நினைச்சி கலாட்டா செய்யறதாயிருந்தா அவங்க தயவுசெய்து டிக்கெட்டைக் கவுண்ட்டர்லே கொடுத்துப் பணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்கம்பேன். அதையும் மீறி வம்புச் சண்டைக்கு வந்தா, அந்தச் சண்டைக்கும் நான் தயாராயிருப்பேன்.
‘‘நீங்க பார்த்திருப்பீங்களே... நம்ம சாமிகளிலே ஏதாவது ஆயுதம் ஏந்தாத சாமி இருக்கா? இருக்கவே இருக்காது. எல்லாச் சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும். எதுக்கு அப்படியிருக்கு? மனுஷனைக் கண்டு பயந்தா? ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லாச் சாமியும் அப்படியிருக்கு’ன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ஆயுதம் ஏந்தி ‘சாமி’யாவே இருந்துக்கிட்டிருந்தேன்..!’’

‘‘சுவாமிகள் ஏதாவது ‘தப்புத் தண்டா’ செய்தால்கூட அதைத் ‘திருவிளையாடல்’ என்று பக்தர்கள் சொல்லிவிடுவார்கள். நீங்கள் ‘தப்புத் தண்டா’ செய்தால்....’’
‘‘‘‘நானாக எப்பவுமே எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டேன். எல்லாம் தானாகத்தான் வந்து சேரும்...’’
‘‘அது உங்கள் ஜாதக விசேஷம் போலருக்கு...’’
‘‘இல்லே... நாடக விசேஷம்!’’
-‘எம்.ஆர்.இராதா-வாழ்க்கையும் சிந்தனையும்’ என்ற விந்தன் எழுதிய நூலை சென்னை கே.கே.நகரில் 5D, பொன்னம்பலம் சாலையில் இயங்கி வரும் ‘தோழமை’ பதிப்பகம் ரூ.80 விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு பகுதிதான் நீங்கள் மேலே படித்தது. கேள்வி-பதில்களாக எம்.ஆர்.ராதாவுடன் உரையாடியதை அவருடைய வார்த்தைகளிலேயே தொகுத்துத் தந்திருக்கிறார் திரு.விந்தன். படிககப் படிக்க சுவாரஸ்யமாகவும், யார் என்ன சொல்வார்களோ என்ற கவலை எதுவுமின்றி நிஜம் பேசியிருக்கும் எம்.ஆர்.ராதா என்ற துணிச்சல்காரரின் சுயரூபத்தைக் கண்டு பிரமிப்பும் விரிகிறது. விருப்பமிருப்போர் வாங்கி வாசித்து இந்த அனுபவத்தை நீங்களும் பெறலாம்.
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+= நான் படித்த சில ந(பொ)ன்மொழிகள்:
பெண் என்பவளே என் தாய், என் சகோதரி, என் துணைவியும் அவளே, பெண்ணே என் மகள் என்னும் உணர்வு ஆண்களிடம் வேரூன்றித் தழைத்தால் பெண்ணுக்கு இழிவு நேருமா? நேராதே!
தன்னம்பிக்கை என்பதற்கும், ஆணவம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு மிக நுண்மையானது. வலிமை குறைந்தவரிடம் ‘நான்’ ‘என்’ என்பவை தன்னம்பிக்கை. அதுவே வலிமை நிறைந்தவரிடம் ஆணவம் என்று பெயர் பெறும்.
உடம்பும் ஒரு பாத்திரம்தான். அதில் அன்பு நிரந்தரமாக நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது பரிமளிக்கும். நாம் அன்பாகத்தான் இருக்கிறோம். ஆனால் அது காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறிக் கொண்டே இருககிறதல்லவா? அப்படி இல்லாமல் நிலையாக அன்பு செய்ய வேண்டும்.
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+= கொஞ்சம் ஹிஹிங்க...!
To end with a smile... இரண்டு ஜோக்குகளைப் படித்து கொஞ்சம் ரிலாக்ஸ்... எப்போதோ எங்கேயோ கேட்ட, நான் ரசித்த ஜோக்குகள்.
1) மிக வேகமாக பாரில் நுழைந்தான் அவன். அங்கிருந்த விற்பனையாளனிடம், ‘‘சண்டை துவங்குவதற்குமுன் எனக்கு சீக்கிரமாக விஸ்கி ஒரு லார்ஜ் கொடு’’ என்றான். விற்பனையாளன் வியப்படன் ஊற்றிக் கொடுத்தான். அவன் மடமடவென்று குடித்துவிட்டு, மீண்டும், ‘‘சண்டை துவங்குவதற்குள் இன்னொரு லார்ஜ் கொடு’’ என்றான். அவன் மறுபடி ஊற்றிக் கொடுக்க, அவசரமாகக் குடித்து வைத்தான். இதே டயலாக்கைச் சொல்லி இப்படி ஐந்து லார்ஜ்கள் குடித்துவிட்டான். ஆறாவது லார்ஜை இதே வசனத்துடன் அவன் கேட்டபோது, விற்பனையாளன் கேட்டான் வியப்புத் தாளாமல்... ‘‘சண்டை துவங்கப் போகிறது என்கிறாயே... எங்கே துவங்கப் போகிறது. யாருக்கும் யாருககும் சண்டை?’’ ஆறாவது லார்ஜை நிதானமாகக் குடி்த்து முடித்த அவன் சொன்னான், ‘‘இங்கேதான் துவங்கப் போகிறது! உனக்கும் எனக்குமிடையில் தான்! நான் இதுவரை குடித்த ஆறு லார்ஜ்களுக்கும் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை!’’
2) அமெரிக்காவுக்கு சுற்றிப் பார்க்கச் சென்ற நம் இந்தியர் ஒருவருக்கு அவசரமாக ‘சுச்சா’ போக வேண்டியிருந்தது. ஆள் நடமாட்டமற்ற தெரு ஒன்றைக் கண்டுபிடித்து, நம்நாட்ட வழக்கப்படி சாலையோரம் ஜிப்பை இறக்கப் போகையில் பின்னால் வந்து நின்ற அமெரிக்க போலீஸ்காரன் அவர் தோளில் தடியால் தட்டினார். ‘‘இங்கேயெல்லாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது மிஸ்டர்! உனக்கு அவசரமெனில் நான் வேறொரு இடம் காட்டுகிறேன். அங்கே போயக் கொள்...’’ என்றான். நம்மவருக்கு ஒரே குஷி! ‘‘சீக்கிரம் இடத்தக் காட்டுப்பா’’ என்றார். அவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி அழைத்துச் சென்று ஒரு அழகான கட்டிடத்தைக் காட்டினார். அந்தக் கட்டிடத்திற்கு முன்னால் விசாலமாகப் புல்வெளிகளும், மரங்களும் இருந்தன. ‘‘இங்கே நீ விரும்பியதைச் செய்யலாம்’’ என்றார். நம்ம ஆள் அவசரமாக ஓடி ஒரு மரத்தின் மறைவில் ‘வேலை’யை முடித்துவிட்டு வந்து போலீஸ்காரனிடம், ‘‘சாலையோரம் செய்வதை விடுத்து இவ்வளவு அழகான கட்டிடத்தின் புல்வெளிக்கு ஏன் கூட்டி வந்தாய் என்னை? இது என்ன இடம்?’’ என்று கேட்டார். போலீஸ்காரன் நிதானமாகப் பதில் சொன்னார்... ‘‘இதன் பெயர் இந்தியத் தூதரகம் தம்பி!’’ என்று.
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
மைதானத்தில் மேய : சித்திரமேகலை-1

|
|
Tweet | ||
எம்.ஆர. ராதா ஒரு சுவாரசியம். என்றாலும் அணைக்கு ஏனோ அவரை பிடிப்பதில்லை.
ReplyDeleteஅமெர்க்காகாரன் இந்தியனை நல்லாவே புரிஞ்சி வச்சுருக்கான்.
மிக்சர் சுவைதான்.
ஏனோ தெரியலை முரளி.... நிறையப் பேருக்கு ராதாவைப் பிடிப்பதில்லை. மிக்ஸரின் சுவையை ரசித்த உங்களுக்கு என்மனம் நிறைய நன்றி!
Deleteதாய்லாந்து உணவைப் பற்றி படித்த போது நாவில் எச்சில்..இருந்தாலும் தாய்லாந்தின் எதார்த்த ஸ்பெஷாலிட்டி வேற தலைவரே.. ;-)
ReplyDeleteஅதென்னன்னு எனக்குத் தெரியலையேப்பா... அடுத்த முறை விசாரிச்சுப் பாத்து சாப்ட்டுற வேண்டியதுதான்!
Deleteஸாரி.. ஜோக்கா இருந்தாலும் ஏத்துக்க முடியல. அமேரிக்கர்கள் ஒரு போதும் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
ReplyDeleteஎப்பவோ கேட்ட ஜோக்... வேணும்னா இந்தியாக்காரன்கறதை பிரிட்டிஷ்காரன்னும், அமெரிக்காவை ரஷ்யான்னும் மாத்திப் படிச்சுக்கலாம் ஆவி! மிக்க நன்றி!
Deleteமிக்சர் சூப்பர் பொன்மொழிகள் அருமை...
ReplyDeleteமிக்ஸரின் சுவையை ரசித்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteதாய் உணவில் எனக்கு பிடித்தது டோம்கா எனும் சூப். வெஜிடேரியன். பிரமாதமாக இருக்கும். ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள்.
ReplyDeleteஜோக் குறித்து ஓர் தேவையில்லாத குறிப்பு. அமெரிக்காவில் பொது கழிப்பறை எல்லா பெரிய கடைகளிலும் இருக்கும். நீங்கள் அங்கு பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் அங்கு அவற்றை உபயோகித்துக்கொள்ளலாம். எனக்கு மிக பிடித்த ஒரு விஷயம் அது. ஆண்களை விட பெண்களுக்கு இது பெரிய சௌகரியம்!
நீயூயார்க் நகரத்தில் & நீயூஜெர்ஸியின் சில இடங்களில் கஸ்டமர்களுக்கு மட்டும் என்ற போர்டு வைத்திருப்பார்கள் தகவலுக்காக இந்த செய்தி
Deleteடோம்கா சூப்பா..? அவசியம் ட்ரை பண்றேன் பந்து! அடடே... அமெரிக்காவில் இப்படியொரு நல்ல விஷயம் இருக்கா? புதுத் தகவல் எனக்கு! மிக்க நனறி! மதுரைத் தமிழன்... கஸ்டமருக்குன்னு போர்டு வெச்சிருந்தாலும் வசதி பண்ணியிருக்காங்களே... நாம ஒரு சாக்லேட் வாங்கிட்டு கூட அதை யூஸ் பண்ணிக்கலாம் பாருங்க...
Deleteதாய் உணவு மிகவும் பிரசித்தம் இங்கே... பச்சை தாய்க்கறி, சிவப்பு தாய்க்கறி இன்னும் பிரசித்தம். வீட்டிலும் அடிக்கடி செய்வதுண்டு. எம்.ஆர்.ராதா அவர்களின் துணிச்சல் பற்றி சொல்லவும் வேண்டுமா? புத்தக அறிமுகத்துக்கு நன்றி கணேஷ். பொன்மொழிகள் மனத்தில் என்றென்றும் பதிக்கவேண்டிய நன்மொழிகள்தாம். சந்தேகமேயில்லை. நகைச்சுவை கலக்கல்.
ReplyDeleteஎல்லாப் பகுதிகளையும் ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவழக்கம்போல் உங்கள் மிக்ஸர் மொறு மொறுப்பாக இருந்தது. கவிஞர் பாரதிதாசன் சாலை என்ற தெருவின் பெயரை சுருக்கியுள்ளது பற்றிய எனது கருத்தை ‘என்ன பெயரில் அழைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன்.( http://puthur-vns.blogspot.com/2012/01/blog-post.html)
ReplyDeleteபார்க்கிறேன் நண்பரே... மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteசுவையான மிக்ஸர்
ReplyDeleteகாரத்துடன் மணத்துடன் சுவையுடன்....
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
படித்து ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deletetha.ma 3
ReplyDeleteடமில் வாலுக!
ReplyDeleteநடிகவேள் - நிஜ துணிச்சல்காரர்...
வித்தியாசமான பொன்மொழிகள்... மிக்ஸர் நல்ல சுவை...
சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Delete//சாலையோரம் செய்வதை விடுத்து இவ்வளவு அழகான கட்டிடத்தின் புல்வெளிக்கு ஏன் கூட்டி வந்தாய் என்னை? இது என்ன இடம்?’’ என்று கேட்டார். போலீஸ்காரன் நிதானமாகப் பதில் சொன்னார்... ‘‘இதன் பெயர் இந்தியத் தூதரகம் தம்பி!’’ என்று.///
ReplyDeleteஇந்திய தூதரகம் அழகாக இருக்குமா அப்படி பொய் சொன்னது யாரு
ஹி... ஹி... கற்பனை ஜோக்குதான? விடுங்க பாஸ்...! மிக்க நன்றி!
Deleteசோறு பரிமாறிய தங்கச்சி பத்தி சொல்லவே இல்லியே?
ReplyDeleteஓ...! சோறு பரிமாறின (உங்களோட) தங்கச்சியப் பத்தி சொல்ல மறந்தது தப்புதான் சிவா! வெண்ணையில சர்க்கரையக் கலந்து செஞ்ச பொம்மை மாதிரில்லா இருந்துச்சு!
Deleteசெம சாப்பாட்டு போல... நான் தான் மிஸ்சா... மிக்சர் நல்ல மொறு மொறு வாத்தியாரே
ReplyDeleteஅடு்த்த வாரம் உன்னோட சேர்ந்து மறுக்கா போய்ட்டா போச்சு. மிக்ஸரை ரசிச்ச உனக்கு மிக்க நன்றி!
Deleteதங்கச்சிக்கு மிக்சர் மட்டும்.., அண்ணனுக்கு தாய் ஃபுட்டா?! இதெல்லாம் நல்லதுக்கில்லைண்ணா. நான் கிளம்பி வரேன்.., பர்சை ஃபுல்லாக்கி அந்த ஓட்டல் வாசல்ல நிக்கவும்.., எனக்கென்னமோ எம்.ஆர்.ராதா நடிப்பு பிடிப்பதில்லைண்ணா.
ReplyDeleteFrom your title, I thought you are going to write about AMMA UNAVAGAM. But after reading, I came to know about the title's meaning. Mixture is good but the joke about Indian in America is not quite acceptable as we know about the so called american culture better now. Regarding M.R. Radha, his opinions are good but it was pertaining to target only a particular sect of people. Hence, could not enjoy.
ReplyDeleteஎனக்கு பிடித்த பழம்பெரும் நடிகர்களில் ராதாவும் ஒருவர் சூப்பர்
ReplyDeleteமிக்சர் அருமை.
ReplyDeleteபடிக்கும் போதே சாப்பிடலாம் போல் இருக்குங்க... நல்ல தகவல்...
ReplyDeleteசாதாரணமாக இந்த வகை உணவுகள் காரசாரம் இல்லாமல் இருக்கும் என்பார்கள்.
ReplyDeleteநடிகவேள் வார்த்தைகள் ஜோர்!
இரண்டாவது ஜோக்....ம்... தேவையா நமக்கு ரகம்!
தாய் உணவுக்குப் பதில் தாய்லாந்து உணவா?ரசித்துச் சாப்பிட்டிருக்கிறீர்கள்.கேபிள்,மோகன் பாணியில் உணவக விமரிசனம் தொடருமோ?
ReplyDeleteஎம்.ஆர் ராதாவின் துணிச்சல் வியக்க வைத்தது! ஜோக்ஸ் சூப்பர்! சுவையான பகிர்வு நன்றி!
ReplyDeleteஜோக்ஸ் புதுமை ரசித்தேன்
ReplyDelete'தாய்' உணவு நாக்கில் எச்சில் ஊறவைத்து.
ReplyDeleteM.R ராதாவைக் கண்டு பல முறை வியந்தது உண்டு, விரைவில் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.
'இந்திய தூதரகம்' செம சூப்பர். இந்த ஜோக்ஸ் உங்கள் சிந்தனையின் உயிரா அல்லது படித்தா?
மொத்தத்தில் மொறுமொறுப்பு குறையாத மிச்சர்.
தாய் உணவு என்றாலே அசைவம் என நினைத்திருந்த எனக்கு சைவமும் உண்டு என்று உங்கள் பதிவில் இருந்துதான் தெரிந்தது.
ReplyDeleteஎம்ஆர் ராதா அவரது வார்த்தைகளாலேயே அடையாளம் காட்டப்படுபவர். நல்ல சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
கடைசி ஜோக் வருத்தப்பட வைத்தது.
இப்பவே தாய்க்கு போகனும்னு தோணுது...
ReplyDeleteமிக்ஸர் சுவை நன்றாக இருந்தது
ReplyDeleteஉணவகம் பற்றி பதிவு தொடர்வீர்கள் என்று நினைக்கிறேன்
நல்லா, கரு கரு மொறு மொறு என்று இருந்தது மிக்ஸர்! டமில் வாலுக சூப்பர்! தாய் சாப்பாடு அருமை!!
ReplyDeleteஉணவை விவரிக்கும்போதே சாப்பிடத் தூண்டுகிறது அய்யா
ReplyDeleteதாய்லாந்து நூடில்ஸ் அறிமுகம் சுவையாக...
ReplyDeleteதாய் ரெஸ்டரன்ட் பத்தி இன்னுமொரு இடத்திலும் படித்தேன் (மோகன்குமார்?)
ReplyDeleteஅமெரிக்க போலீஸ்காரருக்கு இந்தியனை இந்தியனாக அடையாளம் தெரிந்தது ஆச்சரியம்.. இந்தியத் தூதரகம் தெரிந்தது இன்னும் ஆச்சரியம்..
மொறுமொறு மிக்ஸர் சுவையாகவே இருந்தது பாலகணேஷ் ஐயா.
ReplyDeleteமொறு மொறு மிக்சர் அதி சுவாரஸ்யம்.
ReplyDeleteநல்லதொரு ரெஸ்டாரெண்ட் அறிமுகம் அசத்தல்.இனி அடிக்கடி ரெஸ்டாரெண்ட் போய் நீங்கள் ஒரு சாப்பாட்டுக்கடை உங்கள் பிளாகில் ஆரம்பித்து விடுங்கள்.ரொம்ப நல்லாவே விமர்சனம் செய்கின்றீர்கள்.
படித்த பொன்மொழிகள் மூன்றும் முத்துக்கள்!
ReplyDelete
சுவையான மொறுமொறு மிக்சர். ஒவ்வொரு பகுதியையும் மிகவும் ரசித்தேன் கணேஷ்.
ReplyDelete