வின்ஸ்டன் சர்ச்சில்
சர். வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer Churchill) என்பது அவருடைய நீளமான பெயர். 1874ம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த அன்னைக்கும், பிரிட்டிஷ்காரரான தந்தைக்கும் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க போன்ற ஐக்கிய நாடுகளின் கூட்டுப் படைக்குத் தளபதியாக இருந்தவர் சர்ச்சில்! ஹிட்லர், முசோலினி ஆகிய சர்வாதிகாரிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றியவர் என்ற முறையில் சர்ச்சிலுக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் உண்டு.தன்னுடைய மிகச்சிறந்த வீரம் மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் என்ற வகையில் அந்நாட்டு மக்களால் தேவதூதன் போல மதிக்கப்பட்டவர் வின்ஸ்டன் சர்ச்சில்.
அதற்கெல்லாம் அடிப்படை சர்ச்சிலின் பள்ளிப் படிப்பிலிருந்தே துவங்கியது. அவர் சிறுவனாக இருந்தபோதே ராணுவப் பள்ளியில் படித்தவர். அச்சம் என்பதை அறியாமல் வளர்ந்த இளைஞன் சர்ச்சில் முதலாம் உலக யுத்ததின் போது இங்கிலாந்தின் கப்பல் படை அமைச்ச்ராக இருந்தார். கடற்படையை மிகவும் வலுப்பெறச் செய்து வெற்றிகளைக் குவித்தார் அவர். இரண்டாம் உலகப் போர் துவங்கிய சமயம் ஹிட்லரின் ஹிட்லிஸ்ட்டில் இங்கிலாந்தும், பிரான்ஸும்தான் முதல் இடங்களில் இருந்தன. அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லின் என்பவரின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தார் வின்ஸ்டன் சர்ச்சில். சேம்பர்லின் அரசு ஹிட்லருடன் மோதத் தயாராக இல்லை. ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் போட்டார் சேம்பர்லின். ஹிட்லரைப் பற்றித்தான் உலகறியுமே... ஒரு பக்கம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டே மறுபக்கம் யுத்தத்திற்கான ஆயத்தங்களை செய்தார் அவர்.
வீரனாகிய அமைச்சர் சர்ச்சில், பிரதமர் சேம்பர்லினை இந்த விஷயத்தில் கடுமையாக எதிர்த்தார். ‘‘ஹிட்லருடன் ஒப்பந்தமிடுவது போரில் தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு சமம். ஹிட்லரை நம்பக் கூடாது’’ என்று சீறினார். அவரி்ன வார்த்தைகள்தான் சரியென்பதை ஹிட்லர் நிரூபித்தார். அவரின் படைகள் குண்டுமழை பொழிந்தன. அதற்கு மேலும் பொறுமை காக்க இயலாமல் இங்கிலாந்தும், பிரான்ஸும் ஜெர்மனியை எதிர்த்து போருக்குத் தயாராயின. ஆனால் துவக்கத்தில் வெற்றி ஹிட்லரின் பக்கமே இருந்தது. தொடர்ந்து வெற்றிகளை ருசித்தது ஜெர்மனி. அச்சமயத்தில் இங்கிலாந்து பிரதமர் சேம்பர்லின் சோம்பல்-லினாக இருந்த காரணத்தால், அவரின் கட்சியிலேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்ப, பிரதமர் பொறுப்பு சர்ச்சிலைத் தேடி வந்தது. சர்ச்சிலின் வீரம், ராஜதந்திரம் இரண்டும் இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்பிய இங்கிலாந்து மக்களின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது.
மக்களின் நம்பிக்கையை மெய்ப்பித்தார் சர்ச்சில்! நேசப்படைகளின் தளபதியானதும், முதலில் அதுவரை உலகயுத்தத்தில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்த அமெரிக்காவிடம் இங்கிலாந்தின் உறவை பலமாக்கினார். அமெரி்க்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுடன் அவர் கொண்ட நட்புறவின் பயனாக, படைகளுக்குத் தேவையான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏராளமாகக் கிடைத்தன. இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் ஹிட்லர் அமெரிக்காவையும் சீண்டிவிட, பிரான்ஸ், இங்கிலாந்துடன் அமெரிக்காவும் கை கோர்த்து களத்தில் குதித்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர். யுத்த சமயம் அவர் ஆற்றிய உரைகள் படைகளை எழுச்சி கொள்ளச் செய்தன. அதைத் தவிர, Victory என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக் குறிக்கும் வண்ணம் V என்பதைப் போல இரண்டு விரல்களை உயர்த்தி (நம்ம வாத்யார் இரட்டை இலை காட்டுவது மாதிரி) காட்டுவார் சர்ச்சில். ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தை அணை உடைத்த வெள்ளமாய் அந்த சைகை பொங்கச் செய்யும்.
1944ம் ஆண்டு சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்தப் போரில் இங்கிலாந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு மகத்தான வெற்றி கிடைக்கக் காரணமாக இருந்தவர் சர்ச்சில். ஆனால் வாழ்வின் மிகப்பெரிய முரண்களில் ஒன்றாக... போரில் வென்ற சர்ச்சில், தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்தார். ஆம்! 1945ம் ஆண்டு சர்ச்சிலின் பதவிக் காலம் முடிய, இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட சர்ச்சிலுக்கு்க் கிடைத்தது தோல்வி. அதற்குக் காரணம் அவர் முன்பு நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த சட்டதிட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததை மக்கள் மறக்கவில்லை. மிகச் சிறந்த வீரனாகவும், ராஜதந்திரியாகவும் அவரை நம்பிய மக்கள் நாடாள்பவராக அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர், 1951ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார். 1955ம் ஆண்டு பதவியிலிருந்து விலகி அரசியல் ஓய்வு பெற்றார்.
போர்வீரராக இருந்தாலும் சர்ச்சிலுக்கு எழுதுவதில் பெரும் நாட்டம் இருந்தது. அவர் எழுதிய History of the English Speaking People புத்தகம் புகழ்பெற்றது. ஆறு தொகுதிகளைக் கொண்ட இவர் எழுதிய நூலான The Second world War என்ற புத்தகம் இவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. கவிதைகள் எழுதுவதிலும் சர்ச்சிலுக்கு மிகப் பிடித்த ஒன்று. இதைத் தவிர அழகாக ஓவியம் வரையும் திறமையும் சர்ச்சிலின் வசம் இருந்தது. பேச்சில் வல்லவரான அவரிடம் நகைச்சுவை உணர்வும் நிரம்ப இருந்தது. ஒருமுறை சர்ச்சிலின் வாதங்களுக்குப் பதில்தர முடியாத எதிர்க்கட்சி உறுப்பினர் கோபத்தில், ‘‘நீங்கள் என் கணவராக அமைந்திருந்தால் காப்பியில் விஷத்தைக் கலந்து உமக்குக் கொடுத்திருப்பேன்’’ என்று கொதிப்புடன் கூற, சர்ச்சில் கூலாக, ‘‘நீங்கள் என் மனைவியாக வாய்த்திருந்தால் அதை சந்தோஷமுடன் வாங்கிப் பருகியிருப்பேன்’’ என்று பதில் தந்தது உலகப்புகழ் பெற்ற ஜோக்!
சர்ச்சிலுக்கு சென்டிமென்ட்டான விஷயம் அவர் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்! அதை அவர் எப்போதும் பிரிந்ததே இல்லை. புகைப்படங்களில் கூட பெரும்பாலும் அவரை கையில் வாக்கிங் ஸ்டிக்குடன்தான் பார்க்க முடியும். மாபெரும் ராஜதந்திரியான சர்ச்சில் தன்னுடைய 90வது வயதில் 1965ம் ஆண்டு ஜனவரி 24ம் ஆண்டு மறைந்தார். ‘இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தால் இங்கிலாந்தின் கெளரவம் குறைந்துவிடும். எனவே சுதந்திரம் தரக் கூடாது.’’ என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வாதாடினார் என்ற வகையில் நம் நாட்டு மக்களுக்கு உவப்பானவராக அவர் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து மக்களின் நினைவில் இன்றும் குறிப்பிடத்தக்க தலைவராக வாழ்கிறார் சர்.வின்ஸ்டன் சர்ச்சில்!

|
|
Tweet | ||
சர்சில் குறித்துத் தெரியும்
ReplyDeleteஆயினும் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள
பல் விஷயங்கள் இப்போதுதான் தெரியும்
விரிவான அருமையான தகவல்களுடன் கூடிய
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deletetha.ma 2
ReplyDeleteஅடிமைப்பட்டவர்களின் சுதந்திரத்தை விரும்பாத சுருட்டு மனிதன் .
ReplyDeleteநறுக்கென்று சுருக்கமாகச் சொன்னீங்க ஸார்! அருமை! மிக்க நன்றி!
Deleteசர்ச்சிலின் வாழ்க்கையை மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா... நிறைய விஷயங்களை அறியமுடிந்தது... நன்றி...
ReplyDeleteபடித்து ரசித்து அறிந்து கொண்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteசர்ச்சிலின் வீரம், ராஜதந்திரம் - அவர் பெயரைப் போலவே புகழும்...
ReplyDeleteவாக்கிங் ஸ்டிக் உட்பட பல தகவல்களுக்கு நன்றி...
படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteசர்ச்சில் பற்றி அருமையான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி! ஆனால் அவருக்கு பிடித்த சுருட்டு பற்றி எழுதாமல் விட்டுவிட்டீர்களே! அவருக்காக சுருட்டு நமது திருச்சி உறையூரில் தயாரிக்கப்பட்டது என்பது சிறப்புத் தகவல். சர்ச்சில் அவர்களின் ‘இது முடிவின் ஆரம்பமல்ல. ஆனால் ஆரம்பத்தின் முடிவு’ (Now this is not the end. It is not even the beginning of the end. But it is, perhaps, the end of the beginning.) என்கின்ற சொற்றொடர் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்று.
ReplyDeleteசர்ச்சிலின் சுருட்டுப் பழக்கம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானேன்னு குறிப்பிடலை. ஆனா அது இந்தியாவுல தயாரானதுன்ற தகவல் எனக்குப் புதுசு. அந்த சொற்றொடரை மறந்ததும் என் தவறுதான். யாவற்றையும் நினைவுபடுத்தி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசர்ச்சிலை பற்றிய பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம்... நல்ல பதிவு சார்
ReplyDeleteபடித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Delete, Victory என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக் குறிக்கும் வண்ணம் V என்பதைப் போல இரண்டு விரல்களை உயர்த்தி (நம்ம வாத்யார் இரட்டை இலை காட்டுவது மாதிரி) காட்டுவார் சர்ச்சில். ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தை அணை உடைத்த வெள்ளமாய் அந்த சைகை பொங்கச் செய்யும்.
ReplyDeleteஉற்சாகமான பகிர்வுகளுக்குப்பாராட்டுக்கள்..
படித்து ரசித்த உங்களுக்கு மனம் நிறை நன்றி!
Deleteபல புதிய தகவல்களுக்கு நன்றி... ரெமோ சார்...
ReplyDeleteஉங்களுக்கும் ரெமோ ஆயிட்டனா? மிக்க நன்றி நண்பா!
DeleteWow!!! Gist of Mr.Winsten Churchill There are so snippets surrounding him and they are still being recollected even today. Very nice post and totally an unexpected one from you at this juncture. I thought your next post will be related to the bloggers meet but you disappointed me but not displeased me.
ReplyDeleteரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசர்ச்சிலை பற்றிய பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம்... தகவல்களுக்கு நன்றி
ReplyDeleteபாராட்டுக்கள்
Vetha.Elangathilakam
படித்து ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteநல்லதொரு பகிர்வு.
ReplyDeleteநல்ல பகிர்வு என்று கூறி மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteநல்ல பதிவு அண்ணே..
ReplyDeleteபாராட்டிற்கு என் இதயம் நிறை நன்றி கவிஞரே!
Deleteதெரியுமா இவரை!?
ReplyDelete>>
இதுவரை தெரியாது.., இப்போ தெர்ஞ்சுக்கிட்டேன் அண்ணா உங்க தயவில்
அறிந்து கொண்ட தங்கைக்கு மனம் நிறைய நன்றி!
Deleteஇதுவரை இவ்வளவு விஸ்தாரணமாக அறிந்திருக்கவில்லை. இன்று உங்களால் பல தகவல்களை அறிந்தேன்.
ReplyDeleteபகிர்விற்கு மிக்க நன்றி சகோ!
த ம.9
இவரை விரிவாக அறிந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇந்த சர்ச்சில் தான் நம் காந்தியை 'அரை நிர்வாணப் பக்கிரி' எனவும்; இந்தியர்கள் தம்மைத் தாமே ஆழத் தகுதி அற்றவர்கள் என்றவர்.
ReplyDeleteஆமாம்... இவரிடம் நிறைய சின்னத்தனங்களும் இருந்தன. அதைத்தாண்டிய நல்ல விஷயங்கள் மட்டுமே பார்க்கப்பட்டிருக்கின்றன இங்கே. மிக்க நன்றி நண்பரே!
Deleteஇவ்வளவு காலம் அவர் மீதிருந்த மதிப்பு கடைசி பாரா படித்ததும் மறைந்து போனது.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி
மிகமிக உண்மை கவிஞரே நீங்கள் சொன்னது. நானும் அவ்விதமே! மிக்க நன்றி!
Deleteபலவிதங்களில் முரண் பட்ட மனிதர் இவர். ஆனாலும் உலக சரித்திரத்தில் பெரும் புகழ் பெற்றவர். மிக விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!
Deleteநல்ல பகிர்வு,வாக்கிங் ஸ்டிக்கை விட அவரது சுருட்டு பேமஸ்.அவருடைய சுருட்டு ஒருமுறை பல லட்ச ரூபாக்கு ஏலத்தில் போனதாக ஞாபகம்
ReplyDeleteஆமாம். சுருட்டுடனேயே நிறையப் படங்களில் போஸ் தந்திருப்பார். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteசர்ச்சிலைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி பாலகணேஷ் ஐயா.
பகிர்வினை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபல விஷயங்கள் பற்றி சர்ச்சில் பற்றி அறிந்து கொண்டேன்... தொடர்ந்து எழுதுங்கள்...
ReplyDeleteஉற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteஉங்கள் நடையில் ரசிக்க வைத்த தகவல்.
ReplyDelete//‘‘நீங்கள் என் கணவராக அமைந்திருந்தால் காப்பியில் விஷத்தைக் கலந்து உமக்குக் கொடுத்திருப்பேன்’’ என்று கொதிப்புடன் கூற, சர்ச்சில் கூலாக, ‘‘நீங்கள் என் மனைவியாக வாய்த்திருந்தால் அதை சந்தோஷமுடன் வாங்கிப் பருகியிருப்பேன்’’ என்று பதில் தந்தது உலகப்புகழ் பெற்ற ஜோக்!// முதல் முறை கேள்விப்படுகிறேன்
இப்போது கேள்விப்பட்டு ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteஅருமை சார்! தெரியாத பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன் சார்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteசர்ச்சில் அவர்களின் நகைச்சுவை உணர்வு மிகவும் பிரபலம். நிறைய படித்திருக்கிறேன்.... :)