தோழி மஞ்சுபாஷிணியுடனான சந்திப்பு நிகழ்ந்த தினத்தன்று பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கையில் வலையுலகில் பிரபலமாவது எப்படி என்பது பற்றிப் பேச்சு வந்தது. ‘‘யாரையாவது திட்டி எழுதினா சீக்கிரம் பிரபலமாய்டலாம்’’ என்று சேட்டையண்ணா சொல்ல, ‘‘ஆமா சீனு. அடேய் கணேஷான்னு ஆரம்பிச்சு ஏதாவது என்னைத் திட்டி நீ எழுதி, நான் காரசாரமா அதுக்கு பதில் தந்தா பரபரப்பு ஏற்படும். நாம சீக்கிரம் பிரபலமாயிடலாம்’’ என்றேன் நான். ‘‘அப்படியா? சரிவருமா?’’ என்றார் சீனு. நான் சொன்னேன்:
‘‘டேய் சீனு...! நான் ஸ்கூல் படிக்கிற பையனா இருந்தப்ப நடிகர் ஜெமினிகணேசனுக்கு கமலஹாசன் வளர்ப்பு மகன் மாதிரி. ரெண்டு பேருக்கும் உள்ள அட்டாச்மெண்ட் எல்லாருக்குமே தெரியும். ஆனா ‘குமுதம்’ பத்திரிகையில ஜெமினி, கமலைத் திட்டி ஒரு கடிதம் எழுத, கமல் அதுக்கு சூடா அடுத்த வாரம் பதில் தர, மறுபடி ஜெமினி எழுத, கமல் திட்ட... இப்படி நாலு வாரங்கள் வந்ததுக்கப்புறம் ரெண்டு பேருமே கட்டிப்பிடிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் குடுத்து, ‘நாங்க விளையாட்டாதான் சண்டை போட்டுக்கிட்டோம். எங்களுக்குள்ள எதுவுமில்ல’ன்னாங்க. ஆனா அந்த நாலு வாரமும் பரபரப்பு ஏற்பட்டு, பத்திரிகை நல்லா வித்திச்சு. அதுமாதிரிதான் எனக்கு நீ எவ்வளவு வேண்டியவன்னு எல்லாருக்கும் தெரிஞ்சாலும் தொடர்ந்து நாலஞ்சு லெட்டர் காரசாரமா எழுதிக்கிட்டோம்னா நிஜமாவே பதறிடுவாங்க... பரபரப்பு கிளம்பி நீ பிரபலமாகறியோ, இல்லையோ... நான் பிரபலமாய்டுவேன்’’ என்றேன். ‘‘சரி வாத்தியாரே... உடனே உங்களைத் திட்டி ஒரு பதிவு போட்டுடறேன்’’ன்னாரு சீனு.
நேத்திக்கு சீனு இதப் பத்தி பதிவு போட்ருக்காரேன்னு ஆர்வமா உள்ள போய்ப் படிச்சா... எதுவும் திட்டாம நகைச்சுவையா எழுதி நம்ம தமிழ் சினிமா ஹீரோக்கள் மாதிரி போங்கு ஆட்டம் ஆடியிருக்குது பயபுள்ள...! தமிழ் சினிமா ஹீரோக்கள் என்ன போங்கு ஆட்டம் ஆடினாங்கன்னு ஆர்வமா எழும்பற குரல் எனக்கு கேக்கறதால ரெண்டு பாரா செலவழிச்சு அதை முதல்ல சொல்லிடறேன். அப்புறம் இந்தச் சீனுப் பயலப் பத்திப் பேசலாம்.
நம்ம வாத்யார் எம்சியாரு இருககாருங்களே... ‘இதயக்கனி’ படத்துல வில்லன்க கூடாரத்துக்குள்ள ஒரு வெள்ளக்கார துரையா வேசம் போட்டுக்கிட்டு தன் பேரை ‘எம்.ஜி.ரெட்’ன்னு சொல்லிக்கிட்டு வருவாருங்க. "Hai baby, What's your name? Oh, How Sweet!" அப்டின்னு இங்கிலீசுல்லாம் பேசுவாருங்க. போட்ருககற வேசத்த கரெக்டாப் பண்ண வேணாமுங்களா...? ‘சபாஷ் வாத்யாரே’ன்னு நாம மனசுக்குள்ள நெனக்கறப்ப போடுவாரு பாருங்க ஒரு கூடை மண்ணை நம்ம நெனப்புல! ஒரு ஃபிகர் வந்து டான்ஸாட ஆரம்பிச்சதும், ‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’’னு நல்ல தமிழ்ல கணீர்க் குரல்ல பாடுவாருங்க. அதுவும் உங்கூட்டுத் தமிழ், எங்கூட்டுத் தமிழ் இல்லீங்கோ... அந்தாதித் தமிழ்ல பாடுவாரு. இந்த வில்லக் கேனையனுங்க உடனே விசயத்தப் புரிஞ்சுக்கிட்டு அவரப் போட்டுத் தள்றத விட்டுப்புட்டு, ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டு அவரு பாடறத ரசிச்சுக்கிட்டிருக்கும்க! என்னத்தச் சொல்ல...!
அவரயே தூக்கிச் சாப்ட்டு ஏப்பம் விட்டவருங்க நம்ம சூப்பரு ஸ்டாரு ரசினி! ‘படையப்பா’ங்கற படத்துல ஒரு பார்ட்டியில செந்திலும் மத்தவங்களும் கூல்ட்ரிங்க் கிளாஸ்ல பிராந்திய ஊத்திக் குடிச்சிட்டிருப்பாங்க. தண்ணியடிச்சா நம்ம படையப்பருக்குப் புடிக்காதுங்களே... அதனால! அப்ப நம்ம ரசினி வந்து செந்தில் கைல இருக்கற ட்ரிங்க்கைப் புடுஙகிக் குடிப்பாருங்க. ‘‘ஐயய்யோ... படையப்பா குடிச்சுட்டான்’’னு செந்தில் பதற, ‘‘ஏண்டா குடிச்சா என்ன? கூல்ட்ரிங் தானே?. இதையும் குடிப்பேன், இதையும் குடிப்பேன்’’னு எல்லார் கைல இருக்கறதையும் வாங்கிக் குடிச்சுப் போடுவாருங்க. ஸ்கூல் பையனுக்குக் கூட (பதிவர் இல்லீங்க, நிஜ ஸ்கூல் பையனச் சொல்றேன்) கூல்ட்ரிங்க்குக்கும், பிராந்தி கலந்த ட்ரிங்க்குக்கும் ஸ்மெல், காரம்னு ஆறு வித்தியாசம் தெரியும். நம்ம ரசினி பச்சப் புள்ள மாதிரி இல்லீங்களா... அவருக்கு எதுவுமே தெரியாம அப்புராணியாக் குடிச்சுப்புடுவாருங்க... ஆனா குடிச்சதுக்குப் பொறவு தனக்குள்ள என்ன நடக்குதுங்கறத மட்டும் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு பாடுவாரு பாருங்க... ‘‘ஓஹோஹோ கிக்கு ஏறுதே’’ன்னு...! இப்படி ஒரு அப்பாவிப் புள்ளய உலகமெல்லாம் தேடினாலும் நீங்க பாக்க முடியாதுங்கோ! அர்சூனு, விசயகாந்துன்னு மத்த ஹீரோக்களப் பத்தி சொல்ல ஆரம்பிச்சா, பல பதிவுகள் தேவைப்படுமுங்கோ!
இப்படில்லாம் ஜனங்களை ஏமாளிங்களா நினைச்சு நம்ம ஹீரோக்கள் ஆடற போங்கு ஆட்டத்தை மாதிரித் தாங்க சீனுவும் எழுதிப்புட்டாரு... சரி, திட்டறதுன்னா எப்படின்னு நம்ம சிஷ்யப்புள்ளைக்குத் தெரியல.. நாம நாலு வார்த்தை ‘நல்லதா’ திட்டிக் காமிச்சுரலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. யாரும் என்னைத் தடுக்காதீங்க...! யாரையாச்சும் திட்டறதுன்னு முடிவு பண்ணிட்டா, அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்க. ஹி... ஹி...!
எலேய் சீனு! சரியான கோட்டிக்காரப் பயபுள்ளையா இருக்கியேலேய்! இல்ல, நான் தெரியாமத்தான் கேககுறேன்... இம்புட்டு நாளா பதிவு எழுதிட்டிருக்கியே... ஏதாச்சும் உருப்படியா எழுதினதுண்டாலே நீயி? சவத்து மூதி! கதைய எழுதறேங்க... பயண அனுபத்தை எழுதறேங்க... நாட்டுக்கு ஏதாச்சும் பிரயோஜனம் உண்டாலே? எம்பூட்டு ஏழை சனங்க சோத்துக்கு வழியில்லாம தவிக்குதுங்க... அதுங்களப் பேட்டி எடுத்துப் போட்டியாலே நீயி? பொசகெட்ட பயலே! எம்பூட்டு ஓட்டல்ல புகுந்து கன்னாபின்னான்னு வெட்டறே? எதயாச்சும் பத்தி சனங்களுக்குப் பிரயோசனமா பகிர்ந்துக்கிட்டியாலே நீயி? சரி போவுது களுத...அத விடு... மூணு மூணு வார்த்தையா எழுதி, நாலு நாலு வரியா மடக்கிப் போட்டுப்புட்டு கவிதைன்னு சொல்றாய்ங்களே... அவியளப் போல ஒண்ணாவது எழுதத் துப்பு இருக்காலே உனக்கு? போக்கனங்கெட்ட பயலே! சோறு தண்ணியில்லாம, நேரங்காலம் பாக்காம புதுப்படத்த ரிலீசான நாலு மணி நேரத்துக்குள்ள விமர்சனம் பண்ணத் தெறம இருக்காலேய் உனக்கு? இதெல்லாம் இல்லாம நீயெல்லாம் பதிவரான்னே தெரியலியே லேய்! அப்புறம் என்னாத்தலேய் பிரபல பதிவராகறது?
எப்பூடிங்க...? பயபுள்ளக்கு இந்தத் திட்டு போதுமா, இல்ல இன்னும் காரம், மணம், குணம் சேத்துக்கலாமா? எலேய் சீனு...! திட்றதுன்னா எப்பூடின்னு இப்ப புரிஞ்சுட்டிருப்ப... என்னதான் கோபமா உன்னியத் திட்டினாலும் நம்ம பயலாச்சேன்னு பாசமும் இருக்கறதால ஒரு அட்வைசும் சொல்றேன், கேட்டுக்கலேய்...! உனக்கு கோபம் வந்து, (இல்லாத) மீசை துடிச்சு, பதிலுக்கு நீ திட்டறதானா என்னை மாதிரி மனுசங்க பேர்ல எழுதறவங்களைத் திட்டு... இல்ல, தெகிரியமில்லேன்னா, ‘‘வாத்யாரே நான் ஆட்டத்துக்கு வரலை’’ன்னு ஜகா வாங்கிட்டு, கோவை ஆவி, ஸ்கூல் பையன் மாதிரி உஞ்சோட்டு பசங்களத் திட்டு. அதை வுட்டுட்டு ஓவரா உணர்ச்சிவசப்பட்டு வவ்வாலு, பன்னிக்குட்டின்னு பறவை, பிராணிங்க பேர்ல எழுதற மனுசங்க யாரையும் திட்டிப்புடாத. நானாச்சும் கைப்புள்ள மாதிரி மெல்லமா வயித்துல குத்துவேன். அவிய்ங்க கோவக்கார பயபுள்ளைங்க... ஓங்கிக் குத்தினா ஒம்பது டன் வெயிட் லேய்! குத்தினாங்கன்னு வையி... உனக்கு டாங்க் பர்ஸ்ட்டாயிடும் பாத்துக்கோ...! சூதானமா நடந்துக்க...! வர்ட்டா?

|
|
Tweet | ||
ஏற்கனவே நீங்க இரண்டு பேரும் மிக உலக நாயகன் போல பிரபலம்...... இப்ப உலக மகா நாயகன் ஆகிட்டீட்ங்க... வாழ்த்துக்கள் உலக மகா பிரபலங்களே...
ReplyDeleteசீனுவுக்காக ஸ்பெஷல்(!) பதிவுல்லாம் போடறீங்க... அடுத்த ஆடா உங்களை செலக்ட் பண்ணி பிரியாணி போட்டாலும் போட்ருவான் தலைவா...! உஸாரா இருந்துக்குங்க.... வாழ்த்தினதுக்கு என் மனம் நிறைந்த நன்றி!
Deleteஇது முரட்டு ஆடு.... அதனால சினுவால என்னைப் பிடிக்க முடியாது. அவர் என்னை மிரட்டி பிடிக்க ஒரு வழிதான் இருக்கிறது. அவர் சேலை கட்டி கையில் பூரிக்கட்டையுடன் வந்தால் மட்டும் என் மனைவிதான் வருகிறார்கள் என்று பயந்து அவர் காலில் விழுந்துவிடுவேன்... அதுக்கு அப்புறம் அவர் பிரியாணி என்ன ? கோழி குருமா கூட பண்ணலாம். ஆனால் அவர் சேலை கட்டி வரமாட்டார் என்ற தைரியத்தில்தான் இதை சொல்லுகிறேன் ஹீ.ஹீ
Deleteபரமசாதுவாய் இருந்த நம் பாலகணேஷூக்குள் இப்படியொரு பயங்கர வஸ்தாதுவா? என்னால் நம்பவே முடியலையே...
ReplyDeleteஆனாலும் பிரபலமாகுற சுருக்குவழியை சூப்பரா சுட்டிக்காட்டியதற்கு நன்றி வாத்யாரே.
கடைசி பாரா வழக்கம்போல் கணேஷ் பாணி கிச்சுகிச்சு. பாராட்டுகள் கணேஷ்.
ஹி... ஹி... வஸ்தாது(?)வை எழுப்பி விட்டதே சீனு தாங்கோ! கடைசி கிச்சுகிச்சுவை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபிரபலமாக நிஜமாவே இது அருமையான குறுக்கு வழி... இந்த நாள் இனிய நாள் மாறி காலையிலேயே நல்ல சிறப்போட ஆரம்பிச்சாச்சு... அருமையா திட்றீங்க சார்...
ReplyDeleteதிட்றதை ரசிக்கற உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteஆஹா ஆரம்பிச்சிட்டீங்களா? சீனுவிக்கு கொஞ்சமாச்சும் மான ரோஷம் இருந்தா இன்னிக்கே வாத்தியார (உங்கள) திட்டி ஒரு பதிவு போடனும்... அத நாங்கள்லாம் படிச்சு பின்னூட்டம் போடணும்...
ReplyDeleteஅதாவது இந்தப்பதிவுக்கு எதிரா ஒரு கண்டனப்பதிவு எதிர்பார்க்கிறேன் சீனு...
Deleteஇப்ப சீனு பதில் போட்டாச்சு. உமக்கு திருப்தியா ஸ்கூல் பையரே? மிக்க நன்றி!
Deleteஉங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்...!
ReplyDeleteகுழந்தைகளின் படைப்பை ஒரு பகிர்வில் "அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ?" என்று வைத்தேன்... அன்று மட்டும் Page Visit 2300-க்கும் மேல்...!
சீனு இனியும் தா"மதம்" செய்யலாமா...?
டிப்ஸ் : " "இதை கவனத்தில் கொள்ளவும்... உடனடி பிரபலம்...!
மதங்களை திட்டி எழுதினால் பிரபலம் ஆயிடலாம் . தனபாலன் சார் சொன்னா சரியாத்தான். இருக்கும்.
Deleteபிரபலம் ஆகத்தான் விருப்பமே ஒழிய முதுகில் ‘டின்’ கட்டிக் கொள்ள அல்ல தனபாலன்... ஆகவே தா‘மதம்’ இன்றிச் சொல்கிறேன்... நோ ‘மதம்!’ மிக்க நன்றி!
Deleteபிரபலமாக சுருக்கு வழி கணட
ReplyDeleteமின்னல்வரிகளுக்கு பாராட்டுக்கள்..
மிக்க நன்றி தங்களுக்கு!
DeleteSir, naan ungalai konjam thittikkalaamaa?!! :-))
ReplyDeleteதாஆஆஆராளமாத் திட்டுங்கோ...! திட்ட திட்டப் பாப்புலர்! ஹி.. ஹி...! மிக்க நன்றி!
Deleteநகைச்சுவைக்கு பெயர் போனவர்கள் வரிசையில் அடுத்து அண்ணன் பால கணேஷ் அவர்கள் இடம்பெற போகிறார் அதற்க்கு என் வாத்துக்கள் ..............சீனுவை திட்டும் போது ஏற்பட்ட சிரிப்பு அலைகள் இன்னும் ஓய்ந்தபாதில்லை நல்லா திட்ட வருது உங்களுக்கு ..............தொடர்ந்து நாலு பேரை திட்டி எங்க மனசை குளிர்விக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதிட்டை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமதத்தை பற்றி எழுதாமலும் நிறைய ஹிட் வாங்கலாம்.... உதாரணமாக நான் சீனுவை வைத்து போட்ட நகைச்சுவை பதிவு மட்டும் போட்ட அன்று 2300 ஹிட்டும் அன்றைய பேஜ் வியூ மட்டும் 5000 க்கு மேல் வந்தது. . நாம் ஒரு விஷயத்தை எப்படி பிரஷண்டேஷன் பண்ணுகிறோம் என்பதை பொறுத்துதான் ஹிட் வருகிறது.....சொல்லற விஷயம் நல்லதோ கெட்டதோ அதை முடிந்த வரை நகைச்சுவையாகவும் கொஞ்சம் மாறுபட்ட விதத்திலும் வெளியிட்டா ஆட்டோமெடிக்கா ஆட்கள் உங்கள் தளத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அதுபோல யாருடைய பாணியை காப்பி அடிக்காமல் உங்களுகென்ற ஒரு பாணியை உருவாக்குங்கள் அதன் பின் பாருங்கள் உங்கள் பதிவிற்கு வரும் ஆதரவை......
ReplyDeleteசில பின்னுட்டங்களுக்காகவும் ஒட்டுகளுக்காகவும் பதிவுகள் எழுதினால் எப்போதும் ஒரே குருப்பு உங்கள் தளத்திற்கு வந்து ஆகா உங்கள் பதிவு அருமை உங்களுக்கு ஒட்டுப் போட்டிருக்கிறேன் என்று சொல்லி செல்வார்கள் அதனால் நீங்கள் தமிழ்மணத்தில் ரேங்கில் மட்டும் முண்ணணியில் இருப்பீர்கள் ஆனால் ஒட்டுப்போடாமலும் பின்னுட்டம் இடாமலும் வரும் 'சைலன்ட் ரீடர்கள்' எண்ணீக்கை அதிகரிக்காது என்பதுதான் உண்மை...
நிறைய சொல்லலாம் ஆனால் பின்னுட்டமே பதிவாகிவிடும் என்பதால் இதோடு என் சுயபுராணத்தை நிறுத்தி கொள்கிறேன்
//
Deleteசில பின்னுட்டங்களுக்காகவும் ஒட்டுகளுக்காகவும் பதிவுகள் எழுதினால் எப்போதும் ஒரே குருப்பு உங்கள் தளத்திற்கு வந்து ஆகா உங்கள் பதிவு அருமை உங்களுக்கு ஒட்டுப் போட்டிருக்கிறேன் என்று சொல்லி செல்வார்கள் அதனால் நீங்கள் தமிழ்மணத்தில் ரேங்கில் மட்டும் முண்ணணியில் இருப்பீர்கள் ஆனால் ஒட்டுப்போடாமலும் பின்னுட்டம் இடாமலும் வரும் 'சைலன்ட் ரீடர்கள்' எண்ணீக்கை அதிகரிக்காது என்பதுதான் உண்மை...//
- சரியா சொன்னிங்க . நேர நேருக்கடியில் நான் சில நாட்களாக எந்த வலைப்பக்கமும் போக முடியலை. நான் கருத்திடாததால் என் பக்கமும் நிறைய பேர் வரவில்லை.
ஓட்டும், ஒரு திரட்டியின் ரேங்கும் என்னைப் பாதிப்பதில்லை மதுரைத் தமிழா! சும்மா அனைவருக்கும் வேண்டியவனாக இருக்கும் ஒரு விஷயமே எனக்குத் திருப்தி தருவது. இது ச்சும்மாங்கறது உங்களுக்கு நல்லாவே புரியும். மிக்க நன்றி!
Delete// எப்பூடிங்க...? பயபுள்ளக்கு இந்தத் திட்டு போதுமா, இல்ல இன்னும் காரம், மணம், குணம் சேத்துக்கலாமா? //
ReplyDeleteஜெமினி – கமல் நாடகத்தை ஆரம்பத்திலேயே சொன்ன பிறகு, இதுக்கு பேரு திட்டா? படிப்பவருக்கு நல்ல நகைச்சுவை.
நகைச்சுவையும் நான் எழுதுவதன் ஒரு நோக்கம்தானே... மிக்க நன்றி!
Deleteஎகசல்ன்டுண்ணே.
ReplyDeleteஹி... ஹி... டாங்ஸு!
Deleteநானாருந்தா இன்னேரம் மூக்கைப் பிடுங்கிட்டுப் போயிருப்பேண்ணே.
ReplyDeleteசீனுக்கு மூக்கு சின்னதுங்கோ... அதுனால புடுங்கல்லாம் முடியாது! ஹி... ஹி...!
Deleteஎன்னங்க நீங்க.. நடிக்கிறேன்னு சொல்லிட்டு நடிக்கிறீங்க :) அவ்வ்வ்வ்வ்ளோ நல்லவாரா நீங்க :) எனக்கொரு டவுட்டு, இதுல யாரு ஜெமினி கணேசன், யாரு கமல்ஹாசன்? சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள்
ReplyDeleteஉங்க கேள்விக்கு கீழ சரவணன் பதில் தந்துட்டாரு சுபத்ரா... என்னை நல்லவேன்னு சொல்லிட்டீங்களே...! ஹாஆஆங்! ரொம்ப ரொம்ப டாங்ஸுங்கோ!
Deleteகாதல் மன்னன் நீங்க. காதல் இளவரசன் சீனு அப்படி தானே
ReplyDeleteரொம்பக் கரெக்ட்டுங்கோ...! டாங்ஸ்சு!
Deleteஹிஹிஹி.....
ReplyDeleteஹா... ஹா... ஹா... டாங்ஸுப்பா!
Deleteநல்லா நடிச்சீங்க போங்க...
ReplyDeleteஇதுவே பிரபலந்தேன்ன்ன்ன்ன்...:))).
வாழ்த்துக்கள் சகோதரரே!
த ம.6
ரசிச்சு வாழ்த்தின இளமதி சிஸ்டருக்கு இதயம் நிறை நன்றி!
Deleteசீனு
ReplyDeleteநல்லபையன்
மீசைஇல்லாதசின்னபுள்ளவிட்டுவிடுங்கோ
ரைட்டுப்பா... ப.ப. சொன்னா சரிதான். மிக்க நன்றி!
Deleteசும்மனாச்சியும் தான் திட்டறீங்கன்னு தெரிஞ்சே படிச்சேன்.. ச்சே அப்படியே ஆடிப் போயிட்டேன்.. திட்டு என்ன சரளமா வருது..
ReplyDeleteஹி... ஹி... வலிக்காத மாதிரி திட்றது நெல்லைல கத்துக்கிட்டதுண்ணா. வலிக்கிற மாதிரி, ரத்தம் வர்ற மாதிரி திட்றதுன்னா சென்னை திட்டு திட்டணும். இதுல ஆராய்ச்சி பண்ணிருக்கோம்ல... மிக்க நன்றி!
Deleteசார், சீனு நம்ப பய சார். நீங்களே திட்டலாமா? (நம்பீட்டேனாம்)
ReplyDeleteஅது சரி ஊஞ்சாட்டுன்னா டெரர்னு தானே அர்த்தம்??
(புரியலயாம்)
எலேய்... ஊஞ்சாட்டு இல்ல... உஞ்சோட்டு That Means... Your Set of Boys! புரிஞ்சிதா?
Deleteஸ்கூல் பையன்- இவிங்க எபிசோட் முடிஞ்சப்புறம் நாம திட்டிக்கலாம்.. சரியா
ReplyDeleteஇவிங்க எபிசோட முடிக்கவே விடக்கூடாது...
Deleteஒண்ணு கூடிட்டாங்கய்யா... ஒண்ணு கூடிட்டாங்கய்யா... மீ எஸ்கேப்!
Deleteதிட்டுங்க திட்டுங்க மல்யுத்தம் போடவில்லையா :)))
ReplyDeleteசேச்சே.. சிஷ்யன் பாவம், விட்ரலாம் மாதேவி. மிக்க நன்றி!
Deleteதிட்டுங்க எசமான் திட்டுங்க ...! நல்லா திட்டுங்க ...! என்ன இல்ல சீனுவத்தான்!
ReplyDeleteகூடவே ஸ்கூல் பையனையும் திட்டுங்க எசமான் ....! வர வர சீனுப்பயலோட சேர்ந்து ஸ்பை க்கும் லொள்ளு ஜாஸ்தியாயிடுத்து ...!
ம்ம்ம்ம்ம்.... வச்சிக்கறேன்....
Deleteஸ்.பைக்கு தனியா ஒரு விஷயம் ரெடி பண்ணிரலாம் ஜீவன். மிக்க நன்றி!
Deleteஓ.. திட்னீங்களா?
ReplyDelete(க்கும்.. இதெல்லாம் ஒரு திட்டா? உங்களையெல்லாம் சென்னைல வச்சிருந்து நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு த்தா உண்டா.. ஒரு லவடா உண்டா..?)
சரியாப் போச்சு போங்க அப்பா ஸார்...நீங்க சொன்னதுக்கும் மேல திட்டெல்லாம் எனக்குத் தெரியும். ஆனா அதெல்லாம் இங்க எழுதினா தங்கைகளும், தோழிகளும் வீசற பூரிக்கட்டைகளை யார் தாங்கிக்கறதாம்?
Deleteஆகச் சிறந்த உங்கள் பதிவை மனப்பாடம் செய்து கொண்டேன்... என்னதான் நீங்கள் வாத்தியாராக இருக்கலாம், நான் உங்கள் சிஷ்யனாக இருக்கலாம், அதற்காக பொது இடத்தில், அதுவும் பல பேர் படிக்கும் கண்ணியமான ஒரு இடத்தில் கண்ணியமான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும் என்று கூட வா உங்களுக்கு தெரியாமல் போனது, இந்த சின்ன விஷயம் கூட உங்களுக்கு தெரியாமல் போனதில் எனக்கு மிகப் பெரிய மன வருத்தம்.
ReplyDeleteசகட்டு மேனிக்கு திட்டியுள்ளீர்களே இதை படிக்கும் உங்களது ஆகச் சிறந்த வாசகர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். குரு சிஷ்யனை திட்டினால் அதற்குக் காரணம் குரு தானே அன்றி எப்படி சிஷ்யனாக முடியும். என்னை வழிநடத்துவது நீங்கள் என்றால் இப்படி ஒரு தவறான பாதையை காண்பித்துக் கொடுத்த உங்களையே அத்தனை ஏச்சு பேச்சுகளும் சேரட்டும்.
நீங்கள் பிரபலமாக ஒரு அப்பாவி சிஷ்யனை பலியாடாக்குவது எந்த விதத்தில் நியாயம் நியாம்மாறே....
நானாவது பயணக் கட்டுரையை ஒரே ஒரு பதிவோடு முடித்துக் கொள்கிறேன்... நீங்களோ ஒவ்வொரு அடி அடியாக சொல்லிச் செல்கிறீர்கள். நானாவது சிறுகதையோடு முடித்துக் கொள்கிறேன், நீங்கள் பெருங் கதையல்லவா எழுதிக் கொல்கிறீர்கள்...
எனக்கு கவிதை எழுதுவது ஒன்றும் கை வராத கலை அல்ல... நினைத்தால் நாலு வரி என்ன நாற்பது வரி கூட எழுதுவேன் படிப்தற்கு நீங்கள் தயாரா, இல்லையேல் புத்தகமாக வெளியிட ஏதேனும் பதிப்பகம் தான் தயாரா, புதுப்படம் பார்த்து விமர்சனம் எழுதி ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுங்கியவன், புளித்த பழத்தை சாப்பிட சொல்கிறீரே இது தான் வாத்தியாருக்கு அழகா...!
ஷ்ஷபப்பா முடியல... மீதிய நாளைக்கி திட்டுறேன்.. வரட்டுமா வாத்தியாரே :-)
யோவ்....கவிதைஎழுதுவதுஅவ்வளவுஎளிதா?
Deleteஇதுக்கு பதில உன் இடத்துல வந்து சொல்றேன் சீனு! பாரு... உன்னால கவியாழி காண்டாயிட்டாரு...! வார்த்தைய மடக்கி மடக்கிப் போட்டு கவிதைன்னு ஒண்ணை எழுதறது ரொம்ப ஈஸி கணையாழி ஸார்...! அதைச் செய்யாம கவியுணர்வோட, தமிழ் அழகோட எழுத முடியுமான்றதுதான் சீனுவுக்கு நான் சொன்ன சவால்! அதத் தான் தன்னால முடியும்கறான் சீனு! புரிஞ்சுதா?
Deleteபாருங்கையா நானும் பதிலுக்கு திட்டிட்டேன்... இனி நாங்களும் பிரபலம் நாங்களும் பிரபலம் நாங்களும் பிரபலம் :-)
ReplyDeleteஇத... இத... இதத்தான் எதிர்பார்த்தேன்!
Deleteஆளுக்கு ஒரு ஆக்ஸா ப்ளேடு வாங்கித்தர்றேன். நாளைக்கி நேர்ல கீறிக்கங்க.
ReplyDeleteஎன்னவொரு உதவும் மனப்பான்மை...! ரொம்ப டாங்க்ஸ் மெட்ராஸு!
Deleteஎன்னய்யா விளையாடறீங்களா? இதெல்லாம் திட்டுன்றீங்களே, வெக்கமாயில்லே? சோறு தானே திங்கறீங்க?
ReplyDeleteஹா ஹா ஹா வலிகளியே வலிகளியே வலிகளியே :-)
Deleteஇன்னுமாவலிக்கவில்லை?
Deleteநாங்க மூணு வேளையும் டிபன் சாப்பிடறவங்க அப்பா ஸார்... ஹி... ஹி...!
Deleteஅட கணேஸ் அண்ணாச்சியைத் திட்டி நானும் ஒரு பதிவு போடலாமோ என்று சிந்திக்கும் வண்ணம் ஒரு ஐடியா தந்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்:))))
ReplyDeleteவாழ்த்திய நேசனுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteம்..ம்.. இன்னும் நல்லா திட்டுங்க..
ReplyDeleteதிட்னதை ரசிச்ச உங்களுக்கு மனம் நிறைய நன்றிங்கோ!
Deleteஃபிகர் வந்து டான்ஸாட ஆரம்பிச்சதும், ‘‘எங்கேயோ பார்த்த ஞாபகம்’’னு நல்ல தமிழ்ல கணீர்க் குரல்ல பாடுவாருங்க. அதுவும் உங்கூட்டுத் தமிழ், எங்கூட்டுத் தமிழ் இல்லீங்கோ... அந்தாதித் தமிழ்ல பாடுவாரு. இந்த வில்லக் கேனையனுங்க உடனே விசயத்தப் புரிஞ்சுக்கிட்டு அவரப் போட்டுத் தள்றத விட்டுப்புட்டு, ‘ழே’ன்னு முழிச்சுக்கிட்டு அவரு பாடறத ரசிச்சுக்கிட்டிருக்கும்க! என்னத்தச் சொல்ல...!//
ReplyDeleteஅட இப்பிடியும் ஒரு ஆங்கிள் இருப்பது எனக்கு தெரியாம போச்சே ஹா ஹா ஹா ஹா...
ரசிச்சுச் சிரிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி மனோ! (இன்னும் ஸ்டாக் இருக்கு. அப்பப்ப எடுத்து வுடறேன்)
Deleteதிட்டுங்க...திட்டுங்க...திட்டிகிட்டே இருங்க...
ReplyDeleteதிட்டுங்க...திட்டப் பண்ணுங்க....!
நல்லாச் சொன்னீங்க. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteசர்ச்சை பதிவுகள் பரபரப்பானவைதான்,ஆனால் அதன் ஆயுள் மிகவும் கம்மி.
ReplyDeleteநன்றாக அறிவேன் விமலன். இது சும்மா எங்களை ரெஃப்ரெஷ் செய்து கொள்வதற்காக. மிக்க நன்றி!
Deleteகணேஷ் சார், நீங்க யாரைத் திட்டுகிறீர்கள் ? எதற்காக திட்டுகிறீர்கள் என்று ஒன்றும் புரியவில்லை. உங்கள் பதிவை நான் இரண்டு தடவை படித்து விட்டேன். ஒன்றும் புரியல எனக்கு.
ReplyDeleteநீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க ராஜி மேடம்! இதப்பததி விவரமா எடுத்துச் சொல்லி உங்களை பொல்யூட் பண்ண நான் விரும்பலை. அடுத்த பதிவில் ஒரு உருப்படியான விஷயத்தை உங்களுக்காகச் சொல்றேன். மிக்க நன்றி!
Deleteதமாசுன்னு நெனச்சேன் இது சிரியலா போயிகிட்டிருக்கு...ரசித்தேன் ...சிரித்தேன்.
ReplyDeleteஓ... உங்கள் வருகையும் ரசனையும் தனி உற்சாகம் தருகிறது கலா. என் இதயம் நிறை நன்றி!
Deleteநீங்க பாஸாகிட்டீங்க பாஸ்! ரெண்டு பேருமே பிரபலம் ஆகிட்டீங்க! என்கிட்ட ஒரு வெள்ளைக்காரி கேட்டா “ ஐ வாண்ட் டூ மீட் மிஸ்டர் கணேஷ் அண்ட் சீனு” :))))
ReplyDeleteநோஓஓஓ! மாத்திச் சொல்றீங்க! ஐ வாண்ட் டூ மீட் மிஸ்டர் கணேஷ்னு மட்டும்தானே கேட்டா? அதுசரி... என் போன் நம்பர் குடுத்தீங்கதானே? மிக்க நன்றி!
Deleteஇதையே சாட்டா வைச்சு சீனுவில இருக்கிற கடுப்பெல்லாம் கொட்டிடீங்க என்ன....... :p :p :p
ReplyDeleteசேச்சே... அவன் மேல எனக்கு கோபமோ கடுப்போ எப்பவும் வராது டினேஷ். இதெல்லாம் வரவழைச்சுக்கிட்டதாக்கும்...! மிக்க நன்றி!
Deleteகணேஷண்ணா..நீங்க எங்கேயோஓஓஓஓஓஒ போய்ட்டீங்க:)
ReplyDeleteஹி... ஹி... டாங்ஸும்மா!
Deleteபிரபல பதிவர்களாகிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! திட்டுங்க !திட்டுங்க! திட்டிக்கிட்டே இருங்க!
ReplyDeleteநம்மள பிரபலம்னு சொல்லிட்டீங்களே... மிக்க நன்றி நண்பா!
Deleteஆகா.... பிரபலமாக எப்படியெல்லாம் வழி இருக்கு! :)
ReplyDeleteபோட்டுத் தாக்குங்கப்பு.....
மிக்க நன்றி வெங்கட்!
Deleteநான் யாரப்பா திட்றது? யாராவது ரெடியா இருக்கீங்களா? நாங்களும் பிர(ரா)பலம் ஆகனும்ல
ReplyDeleteSo you have started tutoring now how to abuse in tamil language. Good job. Keep it up. Thank God that you have not used the Chennai Special Tamil Abuses (quite disappointing for Mr.Appadurai).
ReplyDelete