Sunday, March 25, 2012

சுஜாதா! பதில்களிலும் ராஜா!

Posted by பால கணேஷ் Sunday, March 25, 2012
சுஜாதாவை நினைக்கும் போதெல்லாம் பிரமிப்புதான் எழும். எல்லா சப்ஜெக்ட்டையும் கையாண்ட இந்த ஆல்ரவுண்டர் ஒரு தீர்க்கதரிசியும் கூட. எம்.எல்.ஏ. கடத்தல் என்கிற விஷயத்தை இவர் ‘பதவிக்காக’ நாவலில் எழுதினார். பின்னாட்களில் நிஜமாகவே தமிழக அரசியலில் அந்தக் கூத்து அரங்கேறியது. மேட்ச் பிக்ஸிங் என்கிற விஷயத்தை ‘கறுப்புக் குதிரை’ கதையில் இவர் எழுதிய சில காலத்தின் பின் பல கிரிக்கெட் பிரபலங்கள் இதில் சிக்கியிருந்தது வெளிப்பட்டு சீரழிந்தார்கள். தவிர, தன் கற்றதும் பெற்றதும் பகுதியில் ‘‘இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழில் தொடர்கதைகளும், சிறுகதைகளும் வழக்கொழிந்து போகும். Non-fiction தான் ஆட்சி செய்யும்’’ என்று எழுதினார்.இன்றைய தேதியில் அப்படியே!

சுஜாதா குமுதம் இதழின் ஆசிரியராக இருந்த போது எழுதிய கேள்வி பதில் பகுதியும் பிரபலம். வேறு வேறு இதழ்களில் அவர் எழுதிய கேள்வி-பதில் பகுதிகள் புத்தகங்களாக வந்துள்ளன. சுஜாதா ‘அம்பலம்’ இணைய இதழில் சில காலம் ஆசிரியராக இருந்தார்.இணைய வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது. நிறையப் பேர் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர் அளித்த நறுக்-சுருக் பதில்களிலிருந்து எனக்குப் பிடித்தவைகளை ‘அம்பலம் இணைய இதழ் தொகுப்பு’ நூலிலிருந்து தேர்ந்தெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


* மீண்டும் எல்லோரும் கூட்டுக் குடும்ப முறையை விரும்புவது போல் தோன்றுகிறதே?
= யார் சொன்னது? மெகா தொடர்களை நம்பாதீர்கள். எல்லாமே பொய். கூட்டுக் குடும்ப அமைப்பை ஃப்ளாட்டுக்கள் வந்தபோதே தாரை வார்த்து விட்டோம்!

* உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
= நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!

* இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து ஜாதி, மதங்கள் இருக்குமா?
= ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி மதங்கள் வேறு வேஷத்தில் இருக்கும்!

* திடீரென்று ஒரு நாள் இப்போதிருக்கும் இமெயில் கம்பெனிகள் எல்லாம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?
= சம்பிரதாய மெயிலுக்குத் திரும்புவோம். அவர்களும் வேலையை நிறுத்தினால் ஷெர்ஷா காலத்து குதிரை தபாலுக்குச் செல்வோம்!

* கவிதை எழுத பெண்கள் அவசியமா?
= இல்லை. எழுதாமலிருக்க!

* ஒரு வெற்றிகரமான சினிமா எடுக்க என்ன ஃபார்முலா என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?
= ‌தெரிந்து கொண்டேன்- ஃபார்முலா எதுவும் இல்லை என்பதை!

* ஹைக்கூ முதல் ‘யாப்பு’ வரை தெரிந்த நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை?
= ரசிப்பது, படைப்பது - இரண்டும் ‌வெவ்வேறு விஷயங்கள். நல்ல சமையலை எல்லோரும் ரசிக்கலாம்!

* பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?
= எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!

* நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்கள் அறிவுரை என்ன?
= ‌இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்!

* உலகில் மிகவும் அத்தியாவசியமான மொழி ஆங்கிலம் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
= அந்தப் பட்டியலில் மெளனம், பார்வை, கணினி மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

* வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?
= நழுவிப் போனதும் தெரிந்து விடும்!

* யார் அழகு? ஆண்களா? பெண்களா?
= ஆண்களக்கு பெண்கள். பெண்களுக்கு பெண்கள். முக்கியமாக கண்ணாடியில் தெரியும் பெண்!

* எந்த மொழியிலும் இல்லாத சில சொற்கள் தமிழில் புகுந்து வருவது தமிழுக்கு பின்னாளில் பிரச்சனையாகாதா? (உதாரணம்: அசால்ட்)
= உடான்ஸ் கதைகளையெல்லாம் நம்பாதீர்கள். இவ்விஷயத்தில் அசால்டா இருந்தா தப்பில்லை. மனதில் உள்ளதை தெளிவாக கடத்தினால் போதும்!

* ஆண்கள், பெண்கள் - பொய் பேசுவதில் யார் கில்லாடி?
= பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதை சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள்.

* வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பதால் பலன் கிடைக்குமா?
= கிடைக்கும்- விரத சாமான்கள் விற்பவருக்கு!

* கவிஞர்களுக்கு மட்டும் எப்படி கற்பனைகள் விதவிதமாய் வருகின்றன? எவ்வளவு யோசித்தாலும் எனக்கு எந்தக் கற்பனையும் வரமாட்டேன் என்கிறதே, இதை எப்படி வளர்த்துக் கொள்வது?
= கல்யாணராமன், நீங்கள் பாக்கியம் செய்தவர். கற்பனை இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலாக நிம்மதி கிடைக்கும்!

* எந்த நம்பிக்கையில் நாம் இன்னும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம்?
= வேதாளத்தை மரமிறக்கிய விக்ரமாதித்தன் கதையைப் படித்த நம்பிக்கையில்தான்!

* லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
= வழக்‌கொழியும் அபாயத்தில் உள்ள, பாதுகாக்க வேண்டிய உயிரினம்!

* வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்?
= கற்றது போதாது என்பதை!

* கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?
= கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை!

* தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?
= சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது!

* காதலுக்கும் தாடி வளர்ப்பதற்கும் என்ன தொடர்பு?
= காதலைத்தான் வளர்க்க முடியவில்லை, தாடியையாவது வளர்க்கலாமே என்கிற எண்ணம்தான்.

93 comments:

  1. வந்துட்டேன்..:)

    இந்த முறையும் நான் தான் பர்ஸ்ட்:))

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் சிஸ்! மகிழ்வுடன் வரவேற்று கை குலுக்குகிறேன்!

      Delete
  2. //* எந்த நம்பிக்கையில் நாம் இன்னும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம்?
    = வேதாளத்தை மரமிறக்கிய விக்ரமாதித்தன் கதையைப் படித்த நம்பிக்கையில்தான்!//

    பிடித்த பதில்


    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. Interesting! Thanks for sharing.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நறுக் கேள்விகள்.நச் பதில்கள்.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்! அவர் நறுக்கென்று சுருககமாகப் பதிலளித்த விதம் மிகவும் கவர்ந்ததால்தான் பகிர்ந்தேன். ரசித்தமைக்கு என் இதய நன்றி!

      Delete
  6. அத்தனையும் அசத்தல் கேள்வி பதில்கள்.
    என்னை மிகவும் கவர்ந்தவை மூன்று. அவை:-

    1. * இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து ஜாதி, மதங்கள் இருக்குமா?
    = ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி மதங்கள் வேறு வேஷத்தில் இருக்கும்!

    2.கவிஞர்களுக்கு மட்டும் எப்படி கற்பனைகள் விதவிதமாய் வருகின்றன? எவ்வளவு யோசித்தாலும் எனக்கு எந்தக் கற்பனையும் வரமாட்டேன் என்கிறதே, இதை எப்படி வளர்த்துக் கொள்வது?
    = கல்யாணராமன், நீங்கள் பாக்கியம் செய்தவர். கற்பனை இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலாக நிம்மதி கிடைக்கும்!

    3.* கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?
    = கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை!

    - குறிப்பாக வாய்விட்டு சிரிக்க வைத்த ஒன்று :-

    * லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    = வழக்‌கொழியும் அபாயத்தில் உள்ள, பாதுகாக்க வேண்டிய உயிரினம்!

    - சுஜாதா இன்று நம்மிடையே இல்லை என்கிறபோது வருத்தமாகத்தான் இருக்கிறது சார்.

    ReplyDelete
    Replies
    1. இல்லை துரை... ஒவ்வொரு படைப்புகளிலும் வாசகர்களாகிய நாம் நினைக்கும் போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். எனக்குப் பிடித்த பதில் இந்தப் பதிவில் இரண்டாவதாக இருப்பதுதான்! நன்றி துரை!

      Delete
  7. மின்னல் வரிகளில் மின்னல் பதில்கள்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  8. Replies
    1. ஆமா... அவருக்கிணை உண்டா? ரசித்தது மகிழ்ந்த தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  9. Replies
    1. ஆம்! எவ்வளவு அழகாக கச்சிதமாகச் சொல்லியிருககிறார். வியக்க வைத்ததை பகிர்ந்தேன் அனைவருடனும். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  10. ம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!


    அருமையான ரசிக்கவைக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நான் மிகமிக ரசித்த பதிலும் இந்தப் பதில்தான். நீங்கள் ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  11. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்!

      Delete
  12. ஒவ்வொரு கேள்வியும் பதிலும் அருமை .
    தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?
    = சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது!//
    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பதில் .

    ReplyDelete
    Replies
    1. ஆம் தென்றல்! சங்க இலக்கியப் பாடல்கள் ரசித்தபோது நானும் வியந்து மகிழ்ந்தேன். சமீபத்தில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் கொஞ்சம் படித்தபோது அதில் கொஞ்சி விளையாடும் தமிழ் என்னைக் கவர்ந்தது. அவரின் இந்தப் பதில் மிக அழகு. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  13. * வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்?
    = கற்றது போதாது என்பதை!


    அருமை நண்பரே..

    தங்கள் வலை வடிமைப்பு மிகவும் அழகாக உள்ளது அன்பரே..

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்ததற்கும், வலையைப் பாராட்டியதற்கும் மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி முனைவரையா!

      Delete
  14. கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை!
    இங்கே இது தான் சுஜாதா அபாரம் போங்கள்.
    உங்கள் தொகுப்பு மூலம் அவரை நினைக்க வைத்ததற்கு நன்றி கணேஷ்
    ஸ்ரீநிவாஸ் பிரபு

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதில் பிடிக்கிறது. ஆக அனைவரும் சுஜாதாவை ரசிக்கிறோம், இல்லையா பிரபு? அதனால்தான் அவர் கிரேட்! உற்சாகம் தந்த உங்கள் வருகைக்கு நன்றி!

      Delete
  15. அத்தனை கேள்வி பதில்களையும் படிக்கும்போது சுஜாதாவின் குரலில் கேட்கிற பிரமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  16. வாத்தியார் வாத்தியார் தான்.....

    ஒவ்வொரு கேள்விக்கும் நறுக் என பதில்... ரசித்தேன்.

    அம்பலம் இணைய இதழ் கேள்வி-பதில் புத்தகமாக வெளி வந்து இருக்கிறதா? விவரங்கள் சொல்லுங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்! அது 2001ல் வெளியிடப்பட்ட புத்தகம். ‘அம்பலம்’ இணைய இதழ் தொகுப்பு- என்பது தலைப்பு. 19, கண்ணதாசன் தெரு, தி.நகரிலுள்ள கலைஞன் பதிப்பகம் 100 ரூபாய் விலையில் வெளியிட்டனர். இதில் சுஜாதா எழுதிய கட்டுரைகள், கேள்வி பதில்கள், மற்றவர்களை அவர் எழுத வைத்த கதைகள், கவிதைகள் என அருமையான தொகுப்பிதழ். வாத்தி‌யாரை ரசிக்கும் உங்களுக்கு இதுவும் பிடிக்கும்தான். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  17. விகடனை கையில் எடுத்த உடனேயே மதன் கேள்வி பதில் பகுதியை படித்த பிறகுதான் மறு வேலை. அவ்வளவு பிடிக்கும். சுஜாதா கேள்வி பதில் பகுதியை இதுவரை படித்ததில்லை. இப்பொழுதான் முதலில் படிக்கறேன். பிரமாதம்! மிகவும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!:) இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் பன்முகத் திறமைகளில் இதுவும் ஒன்று. புத்தகத்தைப் பற்றிய விவரங்களை மேலே சொல்லியிருக்கேன் குரு. வாங்கிப் படித்து ரசியுங்கள். தொடர்ந்து எனக்கு உற்சாகமூட்டும் தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. எழுத்தாளர் சுஜாதாவின் பதில்கள் அவரது கதைகள் போலவே சுவாரஸ்யமானவை. அறிவியல் கதைகளை ஆரம்பித்து வைத்ததே அவர்தான்.எனக்குப்பிடித்த எழுத்தாளர் சுஜாதாவின் பதில்களை பதிவிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் சயன்ஸ் ஃபிக்ஷன் முதலில் எழுதியவர், விமானக் கடத்தல் என்ற ஒன்றைப் பற்றி அது நிகழ்வதற்கு முன்பே ‘வானமென்னும் வீதியிலே’ என்ற தலைப்பில் எழுதியவர். தொடர்கதைக்குள் தொடர்கதை என்பது போன்ற பல புதிய உத்திகளைக் கையாண்டவர். எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளரை ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
    2. இல்லை சார். சுஜாதாவுக்கு முன் நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார். 'அம்புலிக்கு அப்பால்' என்ற பெயரில் கல்கியில் அருமையான சித்திரக்கதை ஒன்று வந்தது. சுஜாதா பிரபலமாவதற்கு முன். பாமர சயன்ஸ் பிக்சன் தமிழில் முதலில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார் என்று நினைக்கிறேன். சுஜாதா தமிழில் அதிகமாகக் எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம்.

      Delete
    3. அடடா... புதுமைப்பித்தன் விஞ்ஞானம் எழுதிருக்காரா? தேடிப் பிடித்து படித்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி அப்பா ஸார்!

      Delete
  19. சுஜாத்தாவின் கேள்வி பதில் சுவார்ஸ்சியமானவை சகோ!

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் பதில்களை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!

      Delete
  20. வணக்கம்! ” சுஜாதாவை நினைக்கும் போதெல்லாம் பிரமிப்புதான் எழும். எல்லா சப்ஜெக்ட்டையும் கையாண்ட இந்த ஆல்ரவுண்டர் ........ “ – என்ற தங்கள் வார்த்தை உண்மைதான். அவர் கதைகளும், அதற்கேற்ற ஓவியர் ஜெயராஜின் படங்களும், அப்போதைய எனது வாலிப வயதும் மறக்க முடியாது. தேர்ந்தெடுத்த தங்கள் சுஜாதாவின் கேள்வி – பதில்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இப்பவும் எனக்கு சுஜாதா - ஜெ., சாண்டில்யன் - லதா இப்படி எழுத்தாளர் + ஓவியர் காம்பினேஷன்தான் கதைகளைப் படிக்கறப்ப நினைவுக்கு வரும். உங்களுக்கும் இது ரசனைக்குரியதாக இருந்திருக்குன்றதுல மகிழ்ச்சியோட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  21. மிக அருமை. ரசித்து வாசித்தேன். விகடனில் நிறைய வாசித்துள்ளேன். மிக நன்றி. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  22. நிறைய படிக்கிறதோடு நிறைவாக நிறை எழுதவும்
    செய்கிறீர்!

    பாராட்டுக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. நிறைவாக எழுதுகிறேன் என்று சொல்லி மகிழ்வினைத் தந்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  23. நல்ல தொகுப்பு. நானும் அவ்வப்போது பகிர நினைத்திருந்தேன். இந்தப் புத்தகம் மூன்று பாகங்களாகக் காசு பார்த்திருந்தார்கள்! மூன்றும் என்னிடம் உள்ளது. ரசித்துப் படிக்கும் புத்தகம்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படிக்க வைத்த புத்தகம் தான். மூன்றும் உள்ளதா? உங்கள் புத்தக வாசிப்பு பிரமிக்க வைக்கிறதே ஸ்ரீராம் ஸார்! நன்றி!

      Delete
  24. வந்துட்டேன்..:)

    இந்த முறையும் நான் தான் லாஸ்ட்:)

    ஸாதிகா போட்ட பின்னுட்டத்தை சிறிது மாற்றியுள்ளேன்,

    அக்கா பர்ஸ்ட் தம்பி லாஸ்ட்


    சுஜாதா கேள்வி பதில்கள் படித்து இருக்கிறேன், அதை மீண்டும் படிக்க வாய்பளித்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்க லாஸ்ட் இல்ல நண்பரே... தங்கச்சி உங்களுக்கப்புறம்தான் வந்திருக்காங்க... படித்து ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  25. சுஜாதா அவர்களின் கிண்டல் கேலி நிறைந்த கேள்வி, பதில்களை பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படிக்க முடிந்ததா தங்கையே! நன்று!

      Delete
  26. சுஜாதா ஒரு பல்கலைகழகம் என்பதே மறுக்க முடியாத உண்மை...!!!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரி நண்பரே! நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  27. நல்ல தேர்வு - கேள்விகளும், பதிலும்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்தி்ட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  28. எல்லா பதிலிலுமே ஒருவித நகைச்சுவை உணர்வு கலந்திருப்பது அவரின் சிறப்பு. எல்லோருக்கும் புரியும் விதமாக விஞ்ஞானத்தை கொடுத்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் சரியாக அங்கீகரிக்கப்படவில்லையோ என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நகைச்‌சுவை அவரது ப்ளஸ் எப்போதுமே! மக்களுக்குப் புரியும் விதமாக எழுதியதால்தான் விருதுகள் அவரைத் தேடி வரவில்லையோ என்ற எண்ணம் எனக்கும் உண்டு நண்பா... தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  29. //சுஜாதா! பதில்களிலும் ராஜா! //
    ஆமாம்!ஆமாம்!1ஆமாம்!!!

    ReplyDelete
    Replies
    1. சுருக்கமான வார்த்தையில் ரசித்ததை விளக்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  30. நல்ல கேள்வி....நல்ல நறுக் சுருக் பதில்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்... மிக்க நன்றி!

      Delete
  31. சுவாரஸ்யமான பதில்கள்! சுஜாதாவை வியக்கவைக்கிற‌து!

    ReplyDelete
    Replies
    1. வியக்க வைத்த, பிரமிக்க வைத்த எழுத்தாளர்தான். ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  32. ஒவ்வொரு கேள்வியும் அதற்கேற்ற நறுக்கான பதில்களும் ஒரு சிறுகதை போலவே பரிணமிக்கும் அழகு. பழைய செய்திகளையும் தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்து அனைவரும் அறியத் தரும் உங்கள் செய்கை மிகவும் பாராட்டுக்குரியது கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. மாஸ்டர்ஸ் டச் அவருடைய கேள்வி பதில்களிலும் இருக்கிறது. அதை ரசித்து்ப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  33. நல்ல தொகுப்பு சார் ! ஏற்கனவே படித்திருந்தாலும் மறுபடியும் படித்தவுடன் மகிழ்ச்சி ! நன்றி !

    ReplyDelete
    Replies
    1. படித்து, ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  34. தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?
    = சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது!
    GOOD QUESTION ANNAA...!

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் பதில்களை ரசித்த அழகுவுக்கு என் இதயம் நி்றை நன்றி!

      Delete
  35. * கவிதை எழுத பெண்கள் அவசியமா?
    = இல்லை. எழுதாமலிருக்க!

    ...கோவமாயிருக்கேன்.

    * யார் அழகு? ஆண்களா? பெண்களா?
    = ஆண்களக்கு பெண்கள். பெண்களுக்கு பெண்கள். முக்கியமாக கண்ணாடியில் தெரியும் பெண்!

    ....கிர்ர்ர்ர்ர்ர்ர்....!

    நிறையக் கேள்விகள் பதில்கள் ஏன் எங்களைக் கிண்டல் பண்ணிணமாதிரி!?

    ReplyDelete
    Replies
    1. * நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்கள் அறிவுரை என்ன? = ‌இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்!

      -இந்த பதிலைக் கவனிக்கலையா ஃப்ரெண்ட்? பெண்களைக் கலாய்த்து மெலிதான கிண்டல் கலந்து எழுதுறது அவரோட பாணி. சீரியஸா எடுத்து்க்காம விட்றுங்க... Cool Down! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  36. மிக மிக அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
    இதற்கு முன்பு படிக்காததால் மிக சுவாரஸ்யம்
    தொடர்ந்து தரலாமே
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவ்வப்போது தொகுத்துத் தருகிறேன் ஸார். மிக்க நன்றி!

      Delete
  37. சுஜாதாவின் நுண்ணிய அறிவாற்றல் அவர் எழுத்தில் தென்படும் கேள்வி பதில் சோடை போகுமா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் சுரேஷ்! சோடை போகாத கேள்வி பதிலகளை ரசித்த உங்ககளுக்கு என் இதய நன்றி!

      Delete
  38. மணி மணியான பதில்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  39. திடீரென்று ஒரு நாள் இப்போதிருக்கும் இமெயில் கம்பெனிகள் எல்லாம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்? ஆப்புதான்

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னமோ பழைய காலத்துல புறா கால்ல கட்டிப் பறக்க விட்ட மெத்தட் ரொம்பப் பிடிக்கும். அப்படி ஒண்ணு நடந்தா இதனாலயாவது எல்லாம் புறா வளக்க ஆரம்பிச்சுட மாட்டோமா என்ன...? ஹா... ஹா... நன்றி நண்பரே!

      Delete
  40. கேள்வியும் பதிலும் அருமை... சுஜாதா.. சுஜாதா தான்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி! (உங்கள் தளத்தில் கடந்த இரண்டு பதிவுகளுக்குக் கருத்திட முடியவில்லை. என்னோட ப்ரவுஸர் ஹேங்காகி வெளியே வந்துடுது. என்ன பிரச்னை?)

      Delete
  41. 'யார் அழகு' கேள்விக்கு ஆச்சரியமான non-சுஜாதா பதில்.

    ReplyDelete
  42. சுஜாதா பெண்களால் ஆண்களுக்கு (குடும்ப) தொல்லை என்ற ரீதியில் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். சமூகத்தின் மேல்தட்டு மகளிர் மேல் அவருக்கு ஒரு வெறுப்பு இருந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பல நாவல்களில் எள்ளி நகையாடியிருப்பார். நன்றி ஸார்!

      Delete
  43. என்ன கணேஷ் சார் நீங்க சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டிர்களா? அவர்தான் எப்போதாவது ஒரு படம் வெளியிடுகிறார் அது போல நீங்களும் எப்போதாவதுதான் பதிவு போடுவது என முடிவு செய்துவிட்டிர்களா?

    நான் கைகாசை செலவழித்து தினம் தினம்(கடந்த ஒரு தினங்களாக) உங்கள் வலைப்பதிவு பக்கம் வந்து பார்த்து ஏமாந்து செல்கிறேன். சீக்க்கிரம் பதிவை போடுங்கள்..

    நான் மதுரைக்காரன்..கோபக்காரன் அதனால என் கத்தியை தீட்ட ஆரம்பித்துவிட்டேன் அவ்வளவுதான் சொல்லுவேன்.

    வரட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. அருவாளைத் தூக்கிடாதீங்க நண்பா... ஒவ்வொரு மாசமும் 26லருந்து 28 வரை ‘இஷ்யூ’ முடிக்கிற நாள்ங்கறதால ஆபீஸ் விட்டு வர நைட்டு லேட்டாயிடும். அதான் பதிவு வரலை. இதோ போட்டுட்றேன்...

      Delete
    2. கணேஷ் சார் வேலைதான் பர்ஸ்ட்.....ஆளை காணுமே என்றுதான் அந்த பின்னுட்டம்


      அருவாளை திட்டுவது நாஞ்சில் "மனோ" சார்

      கத்தியை தீட்டுவது மதுரைத்தமிழன்...

      புத்தியை தீட்டுவது நீங்க...

      Delete
  44. வணக்கம் நண்பரே
    நலமா?

    அறிவியலை தன் நடையில் எளிமையாக்கியவர்.
    எழுத்துச் சித்தர் சுஜாதா அவர்களின்
    கேள்வி பதில்கள் மிக அருமை..

    சிறந்த ஒரு படைப்பாளியை இன்னும் மனம் நினைத்து
    உருகுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்று ‌சொல்வார்கள். உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்புகளில் ஒன்று சுஜாதா! ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி மகேன்!

      Delete
  45. ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  46. தன்னுடைய எல்லைகளை பிறருக்காக திறந்து விட்ட போதும் அந்த எல்லைக்குள் ஒருவராலும் வரமுடியாத தூரத்திற்குச் சென்றவர் சுஜாதா. அருமையான பகிர்வு மிக்க நன்றி

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube