Wednesday, March 14, 2012

நடை வண்டிகள் - 8

Posted by பால கணேஷ் Wednesday, March 14, 2012

சுபாவும் நானும் - 5

‘‘காலையில வீட்டுக்கு வந்துட்டுப் போங்க’’ என்று பாலா ஸார் அழைத்திருந்ததால் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். (அழைக்கா விட்டாலும் போவதுண்டு) அவர் சொன்னார். ‘‘நாங்க புதுசா ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். முதல் புத்தகமா ‘மகாபலிபுரம்- உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி’ங்கற புத்தகத்தைப் பண்ணலாம்னு இருக்கோம். லேஅவுட் நீங்க பண்ணணும். எங்களின் நண்பர் ஸ்ரீனிவாஸ் எழுதியிருக்கார். இதை தமிழ்ல டைப்படிச்சுக் கொண்டு வாங்க...’’ என்றார். ஸ்ரீனிவாஸ் அவர்கள் அதைத் தமிழில்தான் எழுதியிருந்தார். ஆனால் ஆங்கிலத் தமிழ். உதா: Ange irunthu parthal sirpangal azhagaga therinthana. இப்படி தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்து அவர் தந்திருந்ததை தமிழிலேயே நான் டைப் செய்ய வேண்டியிருந்தது.

நான் டைப் செய்து முடித்த பின்னர், சுபா அதைச் சீர்திருத்தி ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தபின் வடிவமைப்பில் இறங்கினோம். ஓவியர் ஜெ.பிரபாகர் (‌ஜெ.பி. என்று விகடனில் பல ஓவியங்கள் பார்த்திருப்பீர்கள்) வரைந்து கொடுத்திருந்த படங்களைப் பார்த்ததும் கற்சிலைகளுக்கு பேப்பரில் இவ்வளவு உயிர்தர முடியுமா என்று பிரமித்துப் போனேன்.

 ஒரு கைடின் பார்வையில் மகாபலிபுரத்துக்கு உங்கள் கையைப் பிடித்து கூட்டிச் சென்று ஒவ்வொரு சிற்பங்களையும் விளக்குவது போல வர்ணனைகளும், படங்களும், மேப்புமாக நன்றாக அமைந்திருந்தது புத்தகம். ‌மிக நிதானமாக நேரம் எடுத்து வடிமைக்கப்பட்டாலும்கூட புத்தகம் நன்றாக வந்திருக்கிறதென்ற திருப்தி எனக்கும் சுபாவுக்கும் இருந்தது. ‘தங்கத்தாமரை பதிப்பகம்’ என்பது சுபாவின் பதிப்பகத்தின் பெயர். மகாபலிபுரம் புத்தகம் இதுவரை மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. அது மட்டுமின்றி, ஆங்கிலம், ஹிந்தி, ப்ரென்ச் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாகி அவையும் டூரிஸ்டுகளால் விரும்பி வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த ‘மகாபலிபுரம்- உங்களுடன் வரும் ஒரு வழிகாட்டி’ நூலுக்கு மிகச் சிறப்பான விமர்சனத்தை ‘திண்ணை’ இணைய இதழில் வழங்கியிருந்தார் என் மதிப்புக்குரிய எழுத்தாளர்/கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். இங்கு ‘க்ளிக்’ செய்து படிக்கலாம். (தேனுக்கா நம்ம தம்பியாச்சேன்னு அன்போட சில வரிகள் என்னைப் பற்றியும் எழுதியிருப்பார். அவற்றை ஒதுக்கிவிட்டுப் படிக்கவும்)


அதன்பின் சுபாவின் ‘செல்வா கதைகள்’ தொகுப்பு வெளியானது. கடுகு ஸார் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் புத்தகத்தை இரண்டு பெரும் தொகுதிகளாக தன் ‘நந்தினி பதிப்பகம்’ மூலம் வெளியிட்டிருந்தார். அதை தங்கத்தாமரை பதிப்பகத்தின் நான்காவது புத்தகமாக அழகிய அச்சமைப்பில் சுபா வெளியிட்டிருந்தார்கள். புத்தகக் கண்காட்சியில் அதை வாங்கிப் படித்த மெகா ரைட்டர் சுஜாதா ‘புத்தகக் கண்காட்சியில் எனக்குக் கிடைத்த ரத்தினம் இது’ என்று தன் கேள்வி பதில் பகுதியில் எழுதியிருந்தார். விளைவாக... நிறைய விசாரணைகள் நேரிலும் போனிலும் சுபாவிற்கு வந்தன. வாத்தியார் வாத்தியார்தான்!

அதன்பின் ‘என் நாடு என் மக்கள் உன் ரத்தம்’ என்று காஷ்மீர் பற்றிய புத்தகம், அனுராதா ரமணன் எழுதிய ‘அன்புடன் அந்தரங்கம்’, ‘சிரிக்கப் பழகு’, ‘பெண்ணால் முடியும்’, காஷ்யபன் எழுதிய ‘திருமணப் பேறு அருளும் திருப்பாவை’ -இப்படிப் பல புத்தகங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. ஒரு வடிவமைப்பாளனாக எனக்கு மிகத் திருப்தி தந்த பணி அது. சுபாவுடன் ‌வேலை செய்வது இன்னும் சுலபம். நான் ஒரு ஐடியாவுடன் துவங்கினால் அவர்கள் இருவரிடமிருந்தும் பல ஐடியாக்கள் துணைக்கு வரும். ஆக, நான் வடிவமைத்தேன் என்று சொல்வதைவிட நாங்கள் வடிவமைத்தோம் என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும். ‘கோ’ படத்தின் பின்னால் சுபா திரைப்படத் துறையில் மிகமிக பிஸியாக இருப்பதால் தற்சமயம் ‘தங்கத்தாமரை’ அமைதியாக இருக்கிறது.

நான் முதன்முதலாக இருசக்கர வாகனம் வாங்கிய போது, வாகனத்தை எப்படி விபத்தின்றி கையாள்வது என்று பல அறிவுரைகளை ஒரு மூத்த சகோதரன் போல் எனக்குச் சொன்னார் பாலா. இரவு மிக தாமதமாக சுபாவின் வீட்டிலிருந்து நான் புறப்பட, பைக்கில் சுரேஷ் என்னை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்ய, நகரத் தொடங்கிய பஸ்ஸில் நான் ஓடிச் சென்று தாவி ஏறிய போது அதைக் கண்டு பதறி, போன் செய்து உரிமையுடன் கோபமாய்த் திட்டி என்னைக் கண்டித்தவர் சுரேஷ். இப்படி சுபா எனக்கு நண்பர்களாக மட்டுமின்றி வழிகாட்டிகளாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். 

திருமதி. ஜெயந்தி சுரேஷ் என்னை தன் தம்பியைப் போல நடத்துவார்கள். பேசுவதிலும், பழகுவதிலும் அந்த வாஞ்சையை நான் உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். திருமதி யசோதா பாலகிருஷ்ணன், நான் வீட்டிற்குள் நுழைந்தால் எதுவும் கேட்காமலேயே  (அருமையான, அவர்களின் கைவண்ணத்தில் ஸ்பெஷலான) காபி தயாரித்து எடுத்து வந்து விடுவார்கள். அப்படி ஒரு அன்பை நான் உணர்ந்திருக்கிறேன். (பல சமயங்களில் சுபா இல்லாவிட்டாலும் போய் காபி மட்டும் குடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்றால் பாருங்கள்...) முதலில் மகள், பிறகு மகன் என்று சுரேஷ், பாலா இருவருக்கும் இரண்டிரண்டு வாரிசுகள். தத்தம் புதல்விகளுக்கு சுபா நிறைவாய் திருமணம் செய்துவிட, மகன்கள் படிப்பை முடிக்கும் நி‌லையில் இருககிறார்கள்.

திரைப்படத் துறையில் பிஸியாகி விட்டதால் சுபாவின் பத்திரிகைப் பணி குறைந்து விட்டதாக எண்ணியிருப்பீர்கள். அதுதான் இல்லை... ‘காஷ்யபன்’ என்ற பெயரில் ஆன்மீகம் எழுதி வரும் சுபா, இன்னும் பல பெயர்களில் பல பத்திரிகைகளில் எழுதியபடிதான் இருக்கிறார்கள். அந்தப் பெயர்களை வெளியிட எனக்கு அனுமதியில்லை! நமது நண்பர்களில் முப்பது வயது கடந்தவர்கள் கல்கியில் ‘ஜெயமன்மதன்’ என்ற பெயரில் விதவிதமான சினிமா விமர்சனங்களை பல ஆண்டுகள் முன்பு படித்திருக்கக் கூடும். அந்தப் பெயரில் எழுதியதும் சுபாதான்.

பழகப் பழக சுவை குன்றாமல் அதிகரித்து வருவதே சிறந்த நட்பின் இலக்கணம். எனக்கு சுபாவுடனான நட்பு அன்று முதல் இன்று வரை அப்படித்தான் இருந்து வருகிறது. மிக அகமகிழ்வுடன் எதையும் பகிர்ந்து கொள்ளும் இந்த நட்பு என்றென்றும் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடன் ‘சுபாவும் நானும்’ என்ற பகுதியை நிறைவு செய்கிறேன்.

நடைவண்டி இனி ‘P.K.P.யும் நானும்’ என்ற
புதிய பகுதியில் பயணத்தைத் தொடரும்!




61 comments:

  1. அடடா... அதற்குள் முடிந்துவிட்டதே எனத் தோன்றும் அளவிற்கு இருந்தது சுபா பற்றிய குறிப்புகள்...

    அடுத்ததாய் பி.கே.பி. உடனான அனுபவங்கள் தொடர்கிறேதே எனச் சந்தோஷம்....

    ReplyDelete
    Replies
    1. ‘அதற்குள் முடிந்து விட்டதே’ என்ற எண்ணம் தோன்றியது பற்றி நான் மிக மகிழ்வு கொள்கிறேன் நண்பரே... அடுத்த பகுதியையும் சுவாரஸ்யமாகத் தர முயல்கிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. மனசுக்கு நிறைவாக எழுதி இருக்கீங்க. அடுத்து பட்டுக்கோட்டை பிரபாகரா? பலே கணேஷ்!

    ReplyDelete
    Replies
    1. ‘மனதுக்கு நிறைவாக’ங்கற உங்கள் வார்த்தையில் மனம் நிறைய மகிழ்வுடன் தங்களுக்கு என் நன்றி!

      Delete
  3. Nice. Continue ur experience with PKP

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து நறகருத்திட்டமைக்கு என் இதய நன்றி நண்பரே!

      Delete
  4. சார் நடை வண்டி ஓட்ட வேண்டியதுதான் ஆனா நாலு அஞ்சு வாரத்தோட முடிக்காம கொறஞ்சது பத்து
    வாரமாவது எழுதுங்கள். உங்க எழுத்து ஸ்டைல் நல்லா இருக்கு, முயற்சி பண்ணுங்களேன்
    அன்புடன் பிரபு

    ReplyDelete
    Replies
    1. ‘இன்னும் எவ்வளவு நாளைக்குடா இவன் ஜல்லியடிப்பான்’னு யாராவது நினைச்சுடுவாங்களோன்ற பயத்துலதான் பிரபு சீக்கிரம் முடிச்சுட்டிருக்கேன். எழுத்து ஸ்டைல் நல்லாருக்குன்னு வேற சொல்லிட்டிங்க... இனி கொஞ்சம் விரிவாவே போறேன். சரியா? எனக்கு எனர்ஜி டானிக் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி பிரபு!

      Delete
  5. நிறைந்த அனுபவங்கள் தான். அதிஷ்டசாலி நீங்கள். மேலும் பயணம் தொடரட்டும் இனிமையாக வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்து, இனிய பயணத்துக்கு வாழ்த்தும் உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  6. நான் கண்ட கணேஷ் மிகவும் குறைவு
    காணாத கணேஷ் மிகமிக அதிகம் விலைவில் அனைத்தும் அறிய ஆவல்
    நடையின் சுவை நல்ல எழுத்தாளருக்கு எடுத்துக்காட்டு!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் முழுமையாகத் தெரிந்து கொள்வீர்கள் ஐயா. நடையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு நிறைந்த மனதுடன் என் நன்றி!

      Delete
  7. புத்தகங்களைப் பற்றிச் சொல்லி வரும்போது நைஸாக அதனதன் விலையையும் பிராக்கெட்டிலாவது சொல்லி வந்திருக்கக் கூடாதோ...(ஏன் புத்தி...!) எதை எப்போது வாங்குவது என்று முடிவு செய்யச் சுலபமாக இருந்திருக்குமே...! குறிப்பாக கடுகு சார் புத்தகம். அப்புறம் மாமல்லபுரம் புத்தகம்...

    ReplyDelete
    Replies
    1. த.தாமரை பதிப்பக வெளியீடுகள் நியாயமான விலையில்தான் இருக்கும். உங்களுக்காக ஒரு அவசர லிஸ்ட் இதோ: மகாபலிபுரம்: ரூ.70 (126 பக்.), பெண்ணால் முடியும்: ரூ.75 (224), மன ஊஞ்சல் : ரூ.65 (176), ராணுவ செல்வாவும் சென்னை முருகேசனும் : ரூ.65 (200), மற்றொரு ரகசியம் : 75 (208), புகழ்பெற்ற இந்தியக் கோயில்கள்: 65 (128), என்நாடு, என்மக்கள், உன்ரத்தம்: ரூ.60 (120), உலகின் உன்னத நகரங்கள் : ரூ.65 (128), சிரிக்கப் பழகு : ரூ.65 (176). ஓ.கே.வா ஸார்... தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
    2. சந்தோஷம் கணேஷ்....விலை வாங்கக் கூடிய நிலையில் இருப்பது சந்தோஷத்தைத் தருகிறது. கடுகு சார் புத்தக விலை சொல்லவில்லை நீங்கள். புத்தகங்கள் எங்கு கிடைக்கும், பதிப்பகம் எங்கிருக்கிறது என்றும் சொல்லவும். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

      Delete
    3. ஸாரி... மறந்துட்‌டேன். நாலாயிரம் இரண்டு தொகுதிகள் தலா 400 பக்கங்கள் கொண்டவை: 225 ரூபாய் மட்டுமே. பதிப்பக விலாசம்: தங்கத் தாமரை பதிப்பகம், 37, ‘ஆத்மா ஹவுஸ்’ கனால் பாங்க் ரோடு, அடையாறு, சென்னை - 600 020. தொந்தரவென்ன இதில்... மகிழ்வுதான் நண்பரே!

      Delete
  8. படித்துப் பார்த்தேன். நல்ல முயற்சியைத்தான் செய்திருக்கிறீர்கள் அருள் ஸார். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. அதற்குள் முடிந்து விட்டதா?:(

    அடுத்து பட்டுக்கோட்டை பிரபாகருடனான நப்ட்பைப்பற்றியா:)

    ReplyDelete
    Replies
    1. அதற்குள் முடிந்து வி்ட்டதா என்ற எண்ணம் தங்கைக்குள் எழுந்தது சுவாரஸ்யமாக தொடர்ந்திருக்கிறேன் என்பதைக் காட்டுவதால் மிக்க மகிழ்வு. பட்டுக்கோட்டை பிரபாகரிடம் நான் கற்றவையும் பெற்றவையும் பற்றிச் சொல்ல இருக்கிறேன். உங்களது தொடர்ந்த ஆதரவுக்கு என் இதய நன்றி!

      Delete
  10. சுபா என்பவரை நான் அறியேன் எனினும் தாங்கள் நேரில் பார்ப்பதற்கு ஈடாய் பதிந்துள்ளீர்கள். மிக அருமையான மொழி நடை

    ReplyDelete
    Replies
    1. இருவர் சேர்ந்து ஒருவராக எழுதும் சுபா என்கிற எழுத்தாளரை நீங்கள் அறியாவிட்டால் என்ன..? இப்போது படித்துப் பாராட்டியதற்கு என் இதயம் நிறை நன்றிகள் தங்கையே...

      Delete
  11. உங்கள் பதிவுகளை படித்துவிட்டு எனக்கு பின்னுட்டம் போட இப்போது மிக தயக்கமாக இருக்கிறது காரணம் மீண்டும் மீண்டும் பதிவுகள் தரமாக உள்ளது எழுத்து நடை மிக நன்றாக தென்றலை போல தழுவி செல்கிறது என்று சொன்னதயே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டி இருக்கிறது. நீங்கள் எப்பொழுதும் இப்படிதான் நன்றாக எழுதுவீர்களா?

    என்னை போல உள்ளவர்கள் பின்னுட்டத்தை மாற்றி எழுத ஒரு பதிவாவது தப்பி தப்ப எழுதுங்களேன்.

    உங்கள் நடைவண்டி அருமையாக இருந்தது அதுபோல பிகேபி ஒரு சொகுசான எக்ஸ்பிரஸ் வண்டி போல செல்லும் எனபதில் சந்தேகம் இல்லை.

    உங்களுக்கும் உங்கள் எழுத்துக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கிறது கணேஷ் சார் அத்துடன் எனது வாழ்த்துக்களும் எப்போதும் உங்களை தொடரும்..வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. அடுத்தடுத்த பதிவுகளில் எங்கேனும் தவறு நிகழ்ந்தால் தலையில் குட்டுங்கள். (அதுமாதிரி குட்டுக்கள் பட்டதுண்டு நான்) தொடரும் உங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனநெகிழ்வுடன் என் இதய நன்றி.

      Delete
  12. அருமை, அருமை. புத்தக விலைகள் நானும் கேட்க நினைத்தேன். ஸ்ரீராம் கேட்டு, நீங்களும் பதில் கூறிவிட்டீர்கள். பி கே பி பற்றி படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவலை அதிகம் காக்க வைக்காமல் உடன் தொடர்ந்து விடுகிறேன். மிக்க நன்றி ஸார்.

      Delete
  13. கணேஷ் உங்க அனுபவங்கள் மிக சுவார்சியமா இருக்கு அதை சுவைபட எங்க கூடல்லாம்பகிர்ந்து கொள்வது எங்களுக்கெல்லாம் போனஸ்தான். எங்களுக்கும் நல்ல வாசிப்பு அனுபவம் கிடைக்குதில்லியா. அடுத்து பி கெ பி யா ஜமாய்ங்க.காத்துகிட்டே இருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிம்மா.

      Delete
  14. தேனுக்கா நம்ம தம்பியாச்சேன்னு அன்போட சில வரிகள் என்னைப் பற்றியும் எழுதியிருப்பார்
    >>>
    கணேஷ் அப்படி எழுதச் சொல்லி என்னை மிரட்டினாரும்மான்னு தேன் அக்கா என்கிட்ட சொன்னாங்களே.

    ReplyDelete
    Replies
    1. சேச்சே... மிரட்டறதெல்லாம் தங்கைகளைத்தான். அக்காவை மிரடடினா நறுக்குன்னு தலையில குட்டிருவாங்க... ஹி... ஹி...

      Delete
  15. பிகேபி சார் பற்றி அடுத்த தொடரா?! ஐ ஜாலி எனக்கு அவர் கதைன்ன ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பி.கே.பின்ற எழுத்தாளரை உனக்குப் பிடிச்சிருக்கும். ஆனா பி.கே.பின்ற மனிதரைப் பத்தி என் மூலம் படிக்கறப்ப இன்னும் பிடிச்சுப் போகும் பாரும்மா...

      Delete
  16. அழகானதோர் பயணம் உடனே முடிந்ததால் ஒரு வருத்தம்.அருமை பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உடனே முடிந்தது வருத்தம் என்று நீங்கள் சொன்னது எனக்கு மிகப் பெரிய பாராட்டு. மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  17. இப்படி சுபா எனக்கு நண்பர்களாக மட்டுமின்றி வழிகாட்டிகளாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். பழகப் பழக சுவை குன்றாமல் அதிகரித்து வருவதே சிறந்த நட்பின் இலக்கணம். சிறந்த நட்பு .
    தொடருங்கள் காத்திருக்கிறோம் வசந்தத்திற்க்காக .

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கிறோம் என்ற சொல்லின் மூலம் எனக்கு உற்சாகத்தை ஊட்டிய தென்றலுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  18. // நான் வடிவமைத்தேன் என்று சொல்வதைவிட நாங்கள் வடிவமைத்தோம் என்று சொல்வது சாலப் பொருத்தமாக இருக்கும்.//

    தன்னடக்கக்தொடு சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சுபா அவர்களோடு நீங்கள் கொண்ட நட்பு இன்று நேற்றுவந்ததல்ல,காலம் காலமாக தொடர்கிறது என நினைக்கிறேன்.ஏனெனில் எல்லா விமர்சகர்களுக்கு/புத்தகப்பிரியர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு அல்லவா உங்களுக்கு கிடைத்திருக்கிறது.இந்த நட்பு நிச்சயம் என்றும் தொடரும். சுபா அவர்களைப்பற்றி தெரியாத செய்திகளைத் தந்தமைக்கு நன்றி.
    இனி PKP பற்றி உங்கள் மூலம் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தன்னடக்கமல்ல... முற்றிலும் உண்மைதான் அது. இந்த நீண்ட கால நட்பு என் பாக்கியம் என்றே கருதுகிறேன். தங்களின் தொடர் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  19. சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது. சட்டென நின்று விட்டதே....
    அடுத்த பகுதியில் பி.கே.பி அவர்களுடனான விஷயங்கள் வருகிறது என்பதில் சந்தோஷம் சார்.
    புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரும் அவரின் எழுத்து நடையும் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் தங்களை போன்றவர்களால் தான் நாங்கள் அந்த நல்ல மனிதர்களின் குணாதிசியங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி. நான் பழகிய எழுத்தாளர்கள் என்னை செப்பனிட்ட விதத்தையும், அவர்களின் சிறப்பு குணங்களையும் தெரிவிக்கத்‌தான் எழுதுகிறேன். புரிதலுடன் கூடிய தங்களின் தொடர்தலுக்கு மனமகிழ்வுடன் என் இதய நன்றி!

      Delete
  20. ஒரு நல்ல நட்பின் உன்னதத்தை எடுத்துச்சொல்லும் அருமையான பதிவு.இந்நட்பு என்றென்றும் தொடரும் என்பது நிச்சயம்,வாழ்த்துகள் கணேஷ்!
    பிரபாகருடனான அனுபவப் பகிர்வுக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்களினால் மிக மகிழ்ந்தேன். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. சட்டென நின்று விட்டதே என வருத்தம்...பிகேபி அனுபவங்கள் தொடர்கிறேதே என சந்தோஷம்...

    இப்படியே இரண்டையும் மாற்றி மாற்றி கொடுத்து கொல்கிறீர்களே கணேஷ் சார்..-:)

    இந்த பதிவும் டாஸ்போர்டில் வரவில்லை...Follow by email Gadget வையுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ரசித்துக் கருத்திடும் உங்களின் அன்புக்கு மனமகிழ்வுடன் என் இதய நன்றி! (நீங்கள் கேட்டபடி Foillow by email எப்படி வெக்கறதன்னு நண்பர்கிட்ட விசாரிச்சு, இப்ப சேத்துட்டேன்)

      Delete
  22. 'சுபாவும் நானும்' எல்லா பதிவுகளையும் படித்தேன். நான் விரும்பி படிக்கும் எழுதாளர்களில் இவர்களும் அடக்கம். இவர்கள் இருவரும் சேர்ந்து எப்படி ஒரு கதையை எழுத முடியும் என்று இவர்கள் கதைகளை படிக்கும்போதெல்லாம் வியந்து கொண்டே படிப்பேன். பல வருடங்கள் கடந்த பிறகு இப்போது உங்கள் பதிவின் மூலம் அது எப்படி என்று தெரிந்து கொண்டேன். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். எழுத்தாளர்கள் பலருடன் உங்களுக்கு நிறைய அருமையான, அழகான அனுபவங்கள். எனக்கு கொஞ்சம் ( கொஞ்சம்தான்) பொறாமையாக இருக்கிறது. :)

    அடுத்து பட்டுக்கோட்டை பிரபாகரா! இவர் பெயரை சொன்னாலே பரத், சுசீலாதான் சட்டென்று நினைவுக்கு வருவார்கள். இவர் கதைகளையும் நிறைய படித்திருக்கிறேன். அடுத்து இவரை பற்றிய உங்கள் பதிவை ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அனுபவத் தொடரை நீங்கள் முழுமையாகப் படித்து மகிழ்ந்து பாராட்டியதில் மிக்க மகிழ்கிறேன். பி.கே.பி.யுடனான அனுபவங்களும் சிறப்பானவையாக இருக்கும். தங்களின் ஆவலான காத்திருப்புக்கு மனமகிழ்வுடன் கூடிய என் இதய நன்றி!

      Delete
  23. சகோதரா வந்தேன். தாங்கள் எனக்கு வாழ்த்தியதற்கு நன்றி. இனி புதன் கிழமை வருவேன் இனிய நாட்கள் அமையட்டும்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்று. நீங்கள் எப்போது வரினும் மகிழ்வே. வாழ்த்துக்கள்.

      Delete
  24. பழகப் பழக சுவை குன்றாமல் அதிகரித்து வருவதே சிறந்த நட்பின் இலக்கணம்.

    வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. எனனை வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  25. சிறந்த உண்மையான,மேன்மையான,அறிவான,அன்பான நட்புக் கிடைப்பதும் ஒரு அதிஷ்டம்தான் ஃப்ரெண்ட்.எங்களுக்கு நீங்கள் கிடைத்ததுபோல.உங்கள் மென்மையான,நேர்மையான,உறுதியான வாழ்வுக்கு,சேர்ந்த நட்புக்களும் ஒரு காரணம் !

    ReplyDelete
    Replies
    1. நல்ல நட்புகள் என்றும் மகிழ்வினைத் தரவல்லவை. நாமனைவரும் நட்புச் சங்கலியால் இணைக்கப்பட்டிருப்பது பல கவலைகளுக்கிடையிலும் மகிழ்வு தரும் விஷயம். நல்ல கருத்திட்ட நட்புக்கு மனநெகிழ்வுடன் நன்றி.

      Delete
  26. சுபா அவர்களுடனான அனுபவங்கள் சுவராசியம் நிறைந்திருந்தது... பி.கே.பி.யுடனான அனுபவங்களுக்காக... காத்திருக்கிறோம்... (இன்னும் யாரெல்லாம் இருக்காங்க...)

    ReplyDelete
    Replies
    1. பி.கே.பி.க்குப் பிறகு இன்னும் இருவரைப் பற்றிச் சொல்ல வேண்டி இருக்கிறது அன்பு. சுவாரசியம் எனப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  27. வணக்கம்! நடை வண்டியை நீங்கள் தள்ளிச் சென்றீர்களா அல்லது அது உங்களை இழுத்துச் சென்றதா என்று தெரியாத அளவுக்கு அருமையான நடை.

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான வார்த்தைகளால் பாராட்டியிருக்கிறீர்கள் தமிழ் இளங்கோ! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  28. வணக்கம் நண்பரே,
    நீண்ட தாமதம் ஆகிவிட்டது.

    ஆஹா..
    சுபாவின் அத்தியாயம் சுபமாக முடிவுற்றதா...
    அடுத்து பி.கே.பி யா ???
    ஆனாலும் உங்களை பார்த்தா
    எனக்கு பொறாமையா இருக்குது நண்பரே...
    நெஞ்சில் பெயர்களை பதித்து
    அவர்களின் எழுத்துக்களை வரங்களாக
    படித்தவர்களின் பக்கத்தில் நீங்கள்
    இருந்திருக்கிறீர்கள் என்று நினைக்கும் பொழுது..

    ஆனால் அந்த சுவைகளை நீங்கள் சொல்லக் கேட்கவாவது
    எங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறதே...

    அடுத்த தொடர் பயணத்தை
    காம்போதியுடன் எதிர்கொள்கிறேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ம்... நல்ல நட்புகள் அமைவது வரம்தான். அதை பகிர்வதிலும் மகிழ்வுதான். கயிலைநாதனைக் கவர்ந்த காம்போதியுடன் தங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மனநிறைவுடன் தங்களுக்கு என் இதய நன்றி நண்பா!

      Delete
  29. கணேஷ்...உங்களை சார் என்று தான் கூப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன்...மலைப்பாய் இருக்கிறது நீங்கள் செய்த சிறு பெரும் சாதனைகள் எல்லாம்.....வாழ்த்துக்கள் சார்... ரொம்பவும் மகிழ்ச்சி.....தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க என் ஃப்ரெண்ட்! டேய்ன்னு வேணாலும் கூப்பிடுங்க. சார் ‌எல்லாம் வேண்டாம். சில பிரபலங்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்த ஒரு சாமானியன் நான். அவ்வளவே... உங்களின் தொடர் ஆதரவிற்கு என் நன்றி!

      Delete
  30. // (தேனுக்கா நம்ம தம்பியாச்சேன்னு அன்போட சில வரிகள் என்னைப் பற்றியு // ஒதுக்கிவிடாமல் படிக்கச் செய்வதற்க்கான உத்தி என்பதியோ யாரிடமும் சொல்ல மாட்டேன்.

    நிறைவை இருந்தது. உமது நட்பு சிறக்க வாழ்த்துக்கள். ஒரு பெரிய மனிதரின் வலைப் பூவை படிக்றேன் என்று நினைக்கும் பொது பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளது

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube