Saturday, March 17, 2012

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!

Posted by பால கணேஷ் Saturday, March 17, 2012

கோடீஸ்வரன் நிகழ்ச்சி அரங்கு, ஒளிவெள்ளம் இல்லாமல் மேடை இருண்டு கிடக்க, பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு. “யார் வந்து நிகழ்ச்சியை நடத்தப் போறாங்கன்னே தெரியலையே... சேனல் காரங்க அறிவிக்காம இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டாங்களே...” என்று முணுமுணுவென பேச்சுக்கள். 

இப்போது மேடையில் தொகுப்பாளினி ஒருவர் வர, அவர் மீது ஒளிவட்டம் விழுகிறது, “நம்ம நிகழ்ச்சியை நடத்த வந்திருக்கறது யார்ன்னு நீங்க நினைச்சே பாத்திருக்க மாட்டிங்க. வானத்துல ஒரு நெலவு, தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இருளில் ஒரு உருவம் நடந்து வந்து ஒற்றை விரலை உயர்த்த. உருவத்தின் மேல் ஒளிவெள்ளம் பாய... அட, நம்ம சூப்பர்ஸ்டார் கஜினிகாந்த்!

“நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டேன்...” என்றபடி தொகுப்பாளர் சேரில் அமரும் அவர் மவுஸைத் தூக்கி வீசி கேட்ச் பிடிக்க, தயாரிப்பாளர் அலறியடித்து ஓடி வருகிறார். “சார்... புரோகிராமை ஸ்டார்ட் பண்ணுங்க...”

போட்டியாளர் வந்து எதிர் இருக்கையில் அமர, கஜினி, “உங்க பேர் என்ன?” என்க, அவர், “செல்லப்பா சார்...” என்கிறார். கஜினி, “மிஸ்டர் செல்லப்பா,. ‘செல்’லைக் கண்டுபிடிச்சது யாரு.. இதான் உங்களுக்கு கேள்வி, இதுக்கு நாலு ஆப்ஷன்ஸ் இருக்கு...” என எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேச, அவர் மிரண்டு, “ஸார், கேள்வி புரியலை, திரும்பச் சொல்லுங்க... என்கிறார்.

கஜினி, “என்னைப் பத்தி தெரியுமில்ல... நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. நீங்க போகலாம். நெக்ஸ்ட்....” என்று திரும்புகிறார். அடுத்து ஒரு பெண் வந்து அமர, “உங்க பேர் என்ன?” என்கிறார் கஜினி. “பயலலிதா” என்று அந்தப் பெண் சொல்ல, “நோ... நோ... உங்ககிட்ட நான் கேள்வி கேக்க மாட்டேன். தமிழக மக்கள்தான் கேக்கணும். யூகோ... நெக்ஸ்ட்...” என்று அலறுகிறார் கஜினி. 

அடுத்த நபர் வர, அவரிடம், “உங்க பேர்?” என்று கஜினி கேட்க, ”குருணாநிதி” என்கிறார் அவர். “ஐயோ... நான் இமயமலை ப்ளைட்டை பிடிக்கணும். எஸ்கேப்...” என்று அடுத்த செகண்டில் காணாமல் போகிறார் கஜினி.

ப்போது மீண்டும் தொகுப்பாளினி வந்து, ”அவர் போயிட்டதால இப்ப நிகழ்ச்சியைத் தொடர வர்றவர் பேரை நான் சொல்ல வேண்டியதில்லை. ‘கலகநாயகன்’னு சொன்னாலே போதும்...” என்க, கூட்டம் “விமலஹாசன்” என்று கத்துகிறது, சிரித்த முகமாய் கையாட்டியபடி வந்து இருக்கையில் அமர்கிறார்  விமலஹாசன் . போட்டியாளரிடம், “உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கப் போறேன். வினான்னும் சொல்லலாம், கொஸ்டின்னும் சொல்லலாம். சரி, கேள்வின்னே வெச்சுப்போமே...” என்க, போட்டியாளர் ‘ஙே‘ என விழிக்கிறார்.

“சங்க இலக்கியத்துல மழையைப் பத்தி எழுதியிருக்கற பாட்டு எதுன்னு நீங்க சொல்லணும். நாலு ஆப்ஷன் வரும்...” என  விமலஹாசன்  சொல்ல, “ஸார்... கொஞ்சம் ஈஸியான கேள்வியா கேளுங்களேன்...” என்கிறார் போட்டியாளர். “ஆ... தமிழனுக்கு தமிழைப் பத்தியே தெரியலை. தமிழனுக்கு கிடைக்க வேண்டிய பேரு, புகழ் எல்லாம் இங்கிலீஷ்காரனுக்கும் கிடைச்சுடுதே... என்ன அநியாயம்... மழையைப் பத்தி நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், கேளுங்க...” என்று ஆரம்பிக்க, போட்டியாளர் எழுந்து தலைதெறிக்க ஓடுகிறார். தயாரிப்பாளர் வந்து, “ஸார்... சின்ன கமர்ஷியல் பிரேக் விட்ருக்கோம், வாங்க, காபி குடிச்சுட்டு வரலாம்...” என்று விமலை கூட்டிப் போகிறார்.

மீண்டும் தொகுப்பாளினி வந்து, “இப்ப வர்றவருக்கு அறிமுகமே தேவையில்ல. இவரு பல முகங்கள் கொண்டவர். எந்த முகம் யாருக்குப் பிடிக்கும்னே தெரியாது...” என்க, வந்து நிற்கும் உருவத்தின் மேல் ஒளி வட்டம் விழ, அட! அது பத்திரிகையாளரும் நடிகருமான ‘கோ’.

போட்டியாளர் வந்து அமர, “உலக அரசியல்ல நிறைய கோமாளிங்க இருக்காங்க. அது மாதிரி இந்திய அரசியல்ல இருக்கற சிறந்த கோமாளி யாருன்னு நீங்க சொல்லணும். இதான் உங்களுக்கான கேள்வி. நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்க, கீழே நான்கு ஆப்ஷன்கள் தோன்றுகின்றன. பார்வையாளர், “என்ன சொல்றதுன்னே புரியலை. ஒரே குழப்பமா இருக்கு ஸார்...” என்கிறார். ”நான் ஒரு இடத்துல இருந்தா... அங்க குழப்பம் இல்லாம இருக்குமா?” என்கிறார் கோ. “தலையப் பிச்சுக்கலாம் போலருக்கு” என போட்டியாளர் சொல்ல, “அதுக்குத்தான் என்னை மாதிரி தலையை வெச்சுக்கணும்” என்று கோ தன் தலையைத் தடவ, பார்வையாளர் தலைதெறிக்க ஓடுகிறார். ‘கோ‘வின் கேள்விகள் தொடர்ந்தால் நிகழ்ச்சியே தாறுமாறாகி விடுமே என்று பயந்து அவரை அழைத்துச் செல்கிறார் தயாரிப்பாளர்.

வேறு வழியின்றி அரங்கம் மீண்டும் இருள. சத்தம் இல்லாமல் ஒரு உருவம் வந்து நிற்கிறது. ‘’முருகனுக்கு இருக்கறது ஆறுமுகம், எனக்கிருக்கறது பல முகம், எனக்குத் தேவையில்ல அறிமுகம்” என்று அந்த உருவம் பிளிற, ஒளிவட்டம் உருவத்தின் மீது விழ, அட... அது நம்ம குஜய கே.ஆர்.! 

போட்டியாளர் வந்து அமர, “தமிழ்நாட்டு அரசியல்ல ரெண்டு முதல்வர்களை எதிர்த்து நின்ன ஒரே நடிகர் யார்? நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்று சந்தடிசாக்கில் கே.ஆர் சுயவிளம்பரக் கேள்விவீச, போட்டியாளர் யோசிக்கிறார். “எம்.ஜி.ஆர். சுத்தினது கம்பு, எனக்கு பதில் சொல்ல உனக்கு வேணும் தெம்பு, உடனே பதில் சொல்லாட்டா இருக்கு வம்பு” என்று கே.ஆர். அலற, போட்டியாளர் மயங்கி விழுகிறார்.

குஜய கே.ஆர். இப்போது திரும்பிப் பார்க்க, அரங்கமே காலியாக இருக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர் மட்டும் ஒரு மூலையில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். அவரிடம் வருகிறார் கே.ஆர். “என்னாச்சு... மக்கள் எல்லாம் எங்க?” என்று கேட்கிறார்.

“நிகழ்ச்சில நீஙக வந்தவுடனேயே பாதிப் பேர் ஓடிட்டாங்க. பத்தாக்குறைக்கு போகிற போக்கில எவனோ ஒருத்தன் அடுத்ததா நிகழ்ச்சியை நடத்த வரப் போறார் பவுடர் ஸ்டார் கோனிவாசன்னு குண்டை வீசிட்டுப் போயிருக்கான், மிச்ச ஜனங்களும் தலைதெறிக்க ஓடிடுச்சு... இனி நான் எந்த நிகழ்ச்சியையும் நடத்த மாட்டேன். ஆள விடுங்கடா சாமி...” என்றவாறு திரும்பிப் பார்க்காமல் ஓட, ‘’ஏ டன்டனக்கா...” என்றபடி அவரைத் துரத்தி ஓடுகிறார் கே.ஆர்.

ளிச்சென்று முகத்தின் மேல் தண்ணீர்த் துளிகள் விழ, “மழை.... மழை...” என்றபடி கண் விழித்தேன். ’‘என்னடா ஆச்சு உனக்கு? கோடீஸ்வரன், கஜினி, விமல்ன்னு என்னென்னமோ தூக்கத்துல உளர்ற... நைட்டு டிவி பாத்துட்டு படுக்காதன்னா கேக்கறியா..?” என்று அருகில் அம்மாவின் கோப முகம் தெரிந்தது, ச்சே...! கனவில்தானா இத்தனை கூத்தும்!

56 comments:

  1. Replies
    1. முதல் வருகையாய் வந்து பாராட்டிய நண்பர் பாவா ஷெரீப் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  2. நல்ல காமடி போங்க

    கற்பனைக்கனவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய மனசாட்சிக்கு என் இதயம் கனிந்த நன்றி!

      Delete
  3. எனக்கு ரஜனி வாறார் எண்டு சொல்லேக்கையே விளங்கிட்டுது ஃப்ரெண்ட்.எப்பிடி உங்களை விளங்கி வச்சிருக்கிறன் நான் !

    ReplyDelete
    Replies
    1. நான் ரொம்ப சந்தோஷப்படுற விஷயமே இப்படி என்னை புரிஞ்சிருக்கற ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கறதுதானே... ரொம்ப சந்தோஷம் + நன்றி ஹேமா!

      Delete
  4. ஹா...ஹா...ஹா... நல்லா கலாய்ச்சிருக்கீங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஷித்! பாத்து நாளாச்சு... உங்களுக்கு இந்த கலாய்ப்பு பிடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி!

      Delete
  5. சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.
    இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

    அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!

    எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

    எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

    ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


    இதில் மிக வேதனைக்குறிய விடையம்

    இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

    சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


    இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

    சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயத்தில் எம் அனைவரின் மனமுமே பதறுகிறது; கண்ணீர் வடிக்கிறது. என்ன சொல்ல... நகைச்சுவை மூலம் தான் சற்றே மனதை ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது நண்பர்களே!

      Delete
  6. ரசித்து மனம்விட்டு சிரிக்கவைத்தமைக்கு நன்றி
    கனவுகளும் பதிவுகளும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த ரமணி ஸாருக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

      Delete
  7. Replies
    1. அழகாய் பட்டமளித்துப் பாராட்டிய நண்பர் ஸ்ரீராமுக்கு நன்றிகள் பல!

      Delete
  8. நல்ல கலாட்டா கணேஷ்.... எல்லாரும் இப்படி கோடி கோடின்னு சொல்லி அழைக்கிறாங்களே...

    மக்களை நல்லாத்தான் ஏமாத்தறாங்கப்பா!.... :)

    ReplyDelete
    Replies
    1. ஹய்யோ... வெங்கட், இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னால இருக்கற விவகாரங்களை விசாரிச்சு எழுத ஆரம்பிச்சா பல பதிவுகள் போடணும். நாம நகைச்சுவையா எடுத்துக்கிட்டு ரசிக்கலாம்! வேறென்ன செய்ய...! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  9. அண்ணனுக்கு கோட்டீஸ்வரனாகும் ஆசை வந்துட்டுது போல.

    ReplyDelete
    Replies
    1. நாம கோடீஸ்வரனாகறதுல்லாம் கனவுல தானேம்மா... ரசித்துக் கருத்திட்ட தங்கைக்கு என் இதய நன்றி!

      Delete
  10. நாம் கோடீஸ்வரன் ஆவதற்கு முன் முட்டாளாவது நிச்சயம். இப்போது வரும் நிகழ்ச்சியில் ஒரு கல்லூரிப் பெண்ணுக்கு நிமோனியாவுக்கும் லங்ஸுக்கும் சம்பந்தம் இருக்கான்னு சந்தேகம்.:(

    ReplyDelete
    Replies
    1. ஹா.... ஹா... நீங்க சொல்றது சரிதான் வல்லிம்மா. இந்த நிகழ்ச்சிகள் மக்களை நாசூக்கா முட்டாளடிச்சுட்டுத்தான் இருக்குது. தங்களின் நற்கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. சுருக்கமான வரிகளால் ரசித்ததைச் சொன்ன இருதயம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  12. Replies
    1. ஹா.... ஹா... ஹாமாங்க! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  13. Replies
    1. நீங்கள் சிரித்து மகிழ்ந்ததில் மிகுந்த மனமகிழ்வு கொண்டு, என் மனம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!

      Delete
  14. நல்ல நகைச்சுவை அசத்திட்டீங்க ...........

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவை ரசித்துப் பாராட்டியதற்கு என் இதய நன்றி சிஸ்!

      Delete
  15. நிறைய தவறவிட்டிருக்கிறேன் போல இருக்கிறது. தொடர்பு விட்டுப்போகாதிருந்தால் இன்னும் சிரித்திருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன... எப்ப வேணும்னாலும் தவறவிட்டதை சேத்துப் படிச்சுக்கலாம்தானே... சில சமயங்கள்ல நான் அப்படிப் பண்ணிருக்கேன். இது உங்களைப் புன்னகைக்க வைத்ததென்பதில் மிகவும் மகிழ்ந்து உங்களுக்கு நன்றி நவில்கிறேன்!

      Delete
  16. கோடி ரூபாய கனவுல வாங்கிங்களா...? இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. நான்தான் நிகழ்ச்சில கலந்துக்கற கனவைக் காணலையே சுரேஷ்... அதனால தப்பிச்சேன்! இருக்கறதுலயே திருப்திப்படற டைப் நான். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

      Delete
  17. நகைச்சுவைதான் என்றாலும் நடப்பதைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். சிரிப்பு வந்தாலும்,நம்மில் பலர் இன்னும் ஏமாளிகளாக இருக்கிறோமே என்ற வேதனையும் வருகிறது என்பதே உண்மை. இருப்பினும் சிரிக்கவைத்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மை. வேதனையான விஷயங்கள் பலவற்றை நகைச்சுவையாகத் தான் பார்க்க முயல்கிறேன். இதுவும் அதில் ஒரு வகையே. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  18. கனவிலும் காமெடி காட்டுகின்றீர்களே!:)

    ReplyDelete
    Replies
    1. என்னம்மா பண்ண... ஸீரியஸா எழுதலாம்னு நான் நினைச்சா காமெடியா வருது அது. காமெடியா எழுதணும்னு நினைச்சு எழுதினா அது சீரியஸான பதிவாயிடுது. ஹி... ஹி... கனவை ரசித்ததற்கு நன்றிகள் பல!

      Delete
  19. அருமை!அருமை!
    கலக்கல் நகைச்சுவை!
    வாழ்த்துக்கள்!
    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. இலங்கைத் தமிழர் நிலை துவங்கி இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் பின்னணிகள் வரை நம்மை நிறையச் சூழ்ந்திருப்‌பவை வேதனைகளே. இவற்றை நகைச்சுவையாக கையாண்டுதான் ஆறுதல் பெற வேண்டியிருக்கிறது ஐயா. ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  20. ஒரு நபர் கேள்வி கேட்க, வெவ்வேறு போட்டியாளர்கள் நகைச்சுவை (பதிவுகளில், படங்களில்) வழங்க வருவார்கள். நீங்க கேள்வி கேட்பவரை பல அவதாரங்கள் எடுக்க வைத்து, வித்தியாசமான நகைச்சுவை பதிந்துவிட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகக் கணித்துச் சொல்லியிருக்கிறீர்கள் ஸார். வேறு கோணத்தில் சொன்னால் நன்றாக இருக்குமே என்று யோசித்துத்தான் அமைத்தேன். நன்கு ரசித்து, பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. ஆஹா! கனவுல ஒரு கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் என்று ஓடியிருக்கே......அதுவும் பெரிய ஆளுங்களோட....

    பிரமாதம் சார். நகைச்சுவையும் அருமையா இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி!

      Delete
  22. நகைச்சுவையும் எழுத நல்லாவே வருது கணேஷ் உங்களுக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மனமகிழ்வுடன் என் மனமார்ந்த நன்றி!

      Delete
  23. அட அட கனவா? கனவு மெய்ப்படப்போகுது கணேஷ்!! காமெடில கலக்கல்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல நகைச்சுவையை ரசிக்கவும், படைக்கவும் தெரிந்த உங்களின் வாழ்த்து மிகமிக மனமகிழ்வு தருகிறது அக்கா! நன்றீஸ்!

      Delete
  24. “நிகழ்ச்சில நீஙக வந்தவுடனேயே பாதிப் பேர் ஓடிட்டாங்க. அப்பவே நினைச்சேன் இதுவும் போதை பதிவு போல என்று நிறையவே யோசிக்கிறிங்க வசந்தமே .

    ReplyDelete
    Replies
    1. கண்டுபிடிச்சிட்டிங்களா? நல்லது. ரசித்துப் பாராட்டியதற்கு என் இதயம் நிறை நன்றி தென்றலுக்கு!

      Delete
  25. மிக அருமை..கடைசி வரை கனவு என்பதே தெரியவில்லை.ஹிட்ச்காக் படங்களையும் விஞ்சி விட்டது.அப்படி ஒரு சஸ்பென்ஸ்..அதேபோல நீங்கள் குறித்திருக்கும் பிரபலங்கள் யார் என நான் ஓரளவு guess செய்துவிட்டேன்(மண்டையை குடைந்துகொண்டு)..
    சூப்பர்ஸ்டார் கஜினிகாந்த்=சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
    விமலஹாசன்=கமலஹாசன்
    என்ன சரியா?
    ஆனால் என்ன யோசித்தும் நடிகர் கோ,மற்றும் குஜய கே.ஆர்.என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என கண்டுபிடிக்கவே முடியவில்லை.ஏதாவது க்ளு கொடுக்க இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. இதில என்ன கஷ்டம்? கோ = துக்ளக் ‘சோ’, குஜய கே.ஆர் = டி.ராஜேந்தர். போதுங்களா? நீங்கள் ரசித்துப் படித்ததில் மிக்க மகிழ்வுடன் என் மனமார்ந்த நன்றி!

      Delete
  26. சார் செம நகைச்சுவை சார். அருமையான கற்பனை

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி பாலா!

      Delete
  27. அசத்தல் சார் ! கனவு தொடர வாழ்த்துக்கள் ?!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  28. பல இடங்களில் அடி படாமல் தாவி தாவி (விழுந்தா அடி படுமே) சிரித்தேன்.... காமெடி கைவந்த கலை ....பின்னிட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. விழுந்து விழுந்து சிரிக்காம... விழாமயே சிரிச்சீங்களா? தங்களின் நிறைவான பாராட்டிற்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube