பி.கே.பி.யும் நானும் - 2
காலை பத்து மணிக்கு ‘ஸ்டார் ஜெராக்ஸ்’ திறக்கும் நேரத்திற்கு சரியாக அங்கே போய் விட்டேன். கல்லூரி மாணவர்கள் நிறையப் பேர் ப்ரிண்ட் அவுட் எடுக்க வந்திருந்ததால் என்னுடைய ப்ரிண்ட் அவுட் கைக்கு வரத் தாமதமாயிற்று. பத்தரை மணிக்கு ப்ரிண்ட் அவுட்டை எடுத்துக் கொண்டு பி.கே.பி.யின் வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தபோது போன் செய்தார். ‘‘எங்கே இருக்கீங்க?’’ என்று கேட்டார். ‘‘ஆன் த வே ஸார்... அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்’’ என்று விட்டு போனை கட் செய்தேன். ஆனால் அவர் இல்லத்தை நான் சென்றடைந்தபோது மணி 10.55 ஆகிவிட்டது.
ப்ரிண்ட் அவுட்களைக் கையில் வாங்கிக் கொண்டு, ‘‘பத்தரை மணிக்கு வர்றேன்னுட்டு 10.55க்கு வந்திருக்கீங்க. ஏன் லேட்?’’ என்று சற்றே கோபமாகக் கேட்டார்.
‘‘ஸார்... ப்ரிண்ட் அவுட் எடுக்கற இடத்துல லேட் பண்ணிட்டங்க ஸார்... அதான்...’’ என்றேன்.
அவரின் கோப சதவீதம் சற்றே கூடிற்று. ‘‘சரி, லேட்டாச்சுன்னா, ஒரு ஃபோன் பண்ணி எனக்குத் தகவல் சொல்லலாமில்ல..?’’ என்றார்.
‘‘உங்க வொர்க்லதானே இருக்கேன். அதான் முடிச்சதும் நேர வந்துடப் போறமேன்னுதான் ஸார் ஃபோன் பண்ணலை’’ என்றேன் சிறுபிள்ளைத்தனமாக.
அவரின் கோபம் உச்சத்துக்குச் சென்றது. ‘‘எனக்கு பதினொரு மணிக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. உங்ககிட்ட ப்ரிண்ட் அவுட் வாங்கி வெச்சுட்டு கிளம்பணும்னு புறப்படத் துடிச்சுட்டிருக்கேன் நான். நீங்க ஃபோன் பண்ணிச் சொல்லியிருந்தா என்னோட வேலைகளை கொஞ்சம் தள்ளிப் போட்டிருப்பேன். பதினொரு மணிக்கு வர்றேன்னுட்டு நான் லேட்டாப் போனா என்னை மதிப்பாங்களா? மத்தவங்களோட நேரத்துக்கு மதிப்புக கொடுக்க கத்துக்கங்க கணேஷ்’’ என்றார் கோபமாக.

இப்டித் தாங்க திட்டினார்... |
அதுவரை பத்து மணிக்கு வர்றேன் என்றால் பத்தே காலுக்கு வந்துவி்ட்டு அதைப் பற்றி எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் ‘டேக் இட் ஈஸி’ என்கிற சராசரித் தமிழனின் மனநிலைதான் எனக்கு இருந்தது. அவர் பேசியது சுருக்கென்று தைத்தது. வலித்தது. இனி எப்போதும், எங்கேயும் சொன்ன நேரத்துக்குத் தாமதமாகப் போகக் கூடாது என்று அந்த நிமிடம் மனதிற்குள் சபதமேற்றேன். முதலில் திட்டமிடல் சற்றுக் கடினமாக இருந்தாலும் என்னால் அதை சாத்தியப்படுத்த முடிந்தது. மற்றவரின் நேரத்தை மதித்து சரியான நேரத்திற்குச் சென்று, திட்டமிட்ட நேரத்தில் வேலைகளை முடிப்பதனால் ஏற்படும் நற்பலன்களை அனுபவித்துத் தெரி்ந்து கொண்டேன். ஒரு நேரத்தைச் சொன்னால் சரியாக அந்த நேரத்திற்கு வந்து விடுவேன் என்று பின்னாளில் பி.கே.பி. அவர்களே பாராட்டியிருக்கிறார் என்னை.
இந்தச் சம்பவம் நடந்த சமயத்தில் நான் ஜி.அசோகன் அவர்களின் கம்பெனியிலிருந்து விலகி ‘கல்யாணமாலை’ இதழின் வடிவமைப்பாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘கல்யாணமாலை’ நான் சேர்ந்த போது மாத இதழாக இருந்தது, குறுகிய காலத்திலேயே மாதமிருமுறை இதழாகவும், பின்னர் வார இதழாகவும் பரிமாணம் பெற்றது. அங்கே சேர்ந்தபின் பொருளாதார ரீதியில் பற்றாக்குறையிலிருந்து சற்றே விடுபட்டிருந்தேன். ஆயினும் திருப்திகரமான நிலையில் இல்லை. இந்த விஷயத்தை பி.கே.பி. ஸார் மனதில் வைத்திருந்திருக்கிறார். ஒன்றிரண்டு மாதங்களின் பின் ஒருநாள் அவரது அலுவலகம் வரச் சொன்னார்.
திருவான்மியூரில் இருக்கும் அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன். ‘‘பூம்புகார் பதிப்பகத்துல சில புத்தக வேலைகளை வெளியிலயும் குடுத்துப் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன். உங்களுக்கு ஒரு அறிமுகக் கடிதம் தர்றேன். அங்க போய்ப் பாருங்க...’’ என்று சொல்லி கடிதம் கொடுத்தார். பெரிய பதிப்பகங்களில் சிலர், தாங்களே சொந்தமாக டிடிபி வைத்திருந்தாலும் அதிக ப்ராஜெக்ட்கள் இருக்கும் சமயங்களில் வெளிநபர்களையும் பயன்படுத்திக் கொள்வதுண்டு. நான் பூம்புகாருக்குச் சென்று அதன் மேலாளரைச் சந்தித்தேன். பி.கே.பி.யின் அறிமுகக் கடிதத்திற்கு மேல் வேறு எதுவும் தேவையிருக்கவில்லை. அப்போது கைவசமிருந்த, அவர்கள் அச்சிடவிருந்த பி.கே.பி.யின் ஏழு புத்தகங்களை எனக்குக் கொடு்த்தார்.
ஏழு புத்தகங்கள் என்றால் ஒவ்வொன்றிலும் நான்கைந்து நாவல்கள் இடம் பெறும் பெரிய தொகுதிகள் அவை. ஆகவே அதிகப் பக்கங்கள். அதிகப் பக்கங்கள் என்றால் டிசைன் செய்பவருக்கு அதிகப் பணம். அந்த வகையில் நல்லதொரு தொகை கிடைத்ததில் நான் பொருளாதார ரீதியில் ஆசுவாசமானேன். அதைத் தொடர்ந்து கோவி மணிசேகரனின் பெரிய சரித்திர நாவல்கள் இரண்டையும் பூம்புகாரில் எனக்கு டிசைன் செய்யச் சொல்லித் தந்தார்கள்.
சுபாவின் பதிப்பகத்துக்கு புத்தகங்கள் செய்தபோதும் சரி... பி.கே.பி.யின் புத்தகங்களை அவருககாகவும், பூம்புகாருக்காகவும் செய்தபோதும் சரி... எனக்கு ஒரே கல்லி்ல் மூன்று மாங்கனியை அடித்த திருப்தி. டைப்பிங் செய்யும் போது கதையைப் படித்து ரசிப்பது ஒரு கனி. டிசைனி்ங் முடித்து புத்தகத்தை ஒப்படைக்கும் போது அதற்கான பணம் கிடைப்பது இரண்டாவது கனி. புத்தகம் அச்சானதும் எனக்கு ஒரு பிரதி தந்துவிட வேண்டும் என்று நான் முன்பே வேண்டுகோள் விடுத்து விடுவதால் என் கலெக்ஷனுக்கு புத்தகங்கள் சேரும் என்பது மூன்றாவது கனி.
இப்படி செய்கிற வேலையைத் மனத்திருப்தியுடன் செய்கிற வாய்ப்பு இப்படி நான் பழகிய எழுத்தாள நண்பர்களால் கிடைத்தது. பூம்புகார் கொடுத்த புத்தகங்களை முடிக்க சில மாதங்களானது. முடித்தபின் வேறு ஏதாவது தேவை இருந்தால் அழைப்பதாக அவர்கள் சொன்னதால் சிறு இடைவெளி ஏற்பட்டது. இந்த சில மாதங்களில் அவ்வப்போது போனிலும் நேரிலும் பேசி, அவருடன் ‘டச்’சிலேயே இருந்தேன். பூம்புகாரின் புத்தகங்களை முடித்துக் கொடுத்தபின் வேறு வெளிவேலைகள் எதுவும் செய்யாமல் அலுவலக வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் மீண்டும் பி.கே.பி. அவரது அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார்.
நாங்கள் ஒரு புதிய முயற்சியில் ஈடுபடப் போவதைப் பற்றி விளக்கினார். அதில் என்னுடைய பங்கையும் விவரித்தார். அத்துடன் அங்கிருந்த அவரது உதவியாளர்களை எனக்கும், என்னை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்படி அறிமுகப்படுத்தியதில் எனக்கு இரண்டு நட்பு ரத்தினங்கள் கிடைத்தன. அவர்களைப் பற்றியும், அந்த புதிய ‘ப்ராஜெக்ட்’டைப் பற்றியும்...

-தொடர்கிறேன்
|
|
Tweet | ||
எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் படிச்சிட்டு வாரேன்
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டாக வந்த உங்களுக்கு நல்வரவு!
Delete‘‘உங்க வொர்க்லதானே இருக்கேன். அதான் முடிச்சதும் நேர வந்துடப் போறமேன்னுதான் ஸார் ஃபோன் பண்ணலை’//இந்த மனோபாவம் அநேக தமிழர்களுக்கு உள்ளதுதான்:(
ReplyDeleteமத்தவங்களோட நேரத்துக்கு மதிப்புக கொடுக்க கத்துக்கங்க // ரொம்ப சரியாக சொல்லி இருக்கின்றார்.
எனக்கு இரண்டு நட்பு ரத்தினங்கள் கிடைத்தன. அவர்களைப் பற்றியும், அந்த புதிய ‘ப்ராஜெக்ட்’டைப் பற்றியும்.// வெயிட்டிங்...
சரியான அறிவுரை எனக்குக் கிடைத்தது. அதனால் நான் பலனும் பெற்றேனல்லவா! அடுத்த பகுதிக்காய் காத்திருக்கும் தங்கைக்கு என் இதய நன்றி!
Deleteநேரம் தவறாமை பற்றி நன்றாக PKP கூறி இருக்கார். உங்களுக்கு மட்டுமல்ல பிறருக்கும் பயன்படும்
ReplyDeleteகருத்தை எடுத்துக் கொண்டால் மிகப் பயன்படும்தான். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநேரம் தவறாமை முக்கியமுங்க....
ReplyDeleteதொடர் எதிர்பார்கிறேன்.
ஆம். அதனால் கிடைக்கும் பலன்கள் மிக அதிகம்! எதிர்பார்ப்புடனிருக்கும் தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசரியாக சொல்லியிருக்கிறார் நேரம் தவறாமை பற்றி.....
ReplyDeleteஅவர் பல விஷயங்களில் எனக்கு ரோல் மாடல்! அடுத்த பகுதிகளில் விளக்கமாய் வரும் நண்பா! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஉங்களுக்கு கிடைத்த எழுத்தாளர்களின் அனுபவங்களை எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்கும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது.
ReplyDeleteநிறையத் தெரிந்து கொள்ள முடிகிறது என்று நீங்கள் சொல்வதில் மிக மகிழ்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி1
Deleteநல்ல அனுபவ தொடர் ..
ReplyDeleteஉற்சாகம் தந்த நற்கருத்துக்கு நன்றி ராஜா!
Deleteஇன்று
ReplyDeleteகதம்பம் 28-03-12
படித்துவிட்டேன்; தொடருங்கள்.
ReplyDeleteஹா... ஹா... தொடர்கிறேன் ஐயா மகிழ்வுடன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஒரே கல்லி்ல் மூன்று மாங்கனியை அடித்த திருப்தி.
ReplyDeleteமனதுக்குப் பிடித்த வேலையில் கிடைத்த திருப்தி..
தாங்கள் தொடர்ந்து இத்தொடரைப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி என்பதையும் சேர்த்துக் கொண்டு, தங்களுக்கு நன்றி நவில்கிறேன்!
Deleteநம்மில் பல பேர் இன்னும் நேரத்திற்கு வராமல் இருப்பதையே வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வருத்தமே.ஆனால் திரு பி.கே.பி.யின் அறிவுரை கேட்டு நேரம் நீங்கள் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது கேட்டு மகிழ்ச்சி.உங்களுக்கு திரு பி.கே.பி அவர்கள் மூலம் கிடைத்த அந்த இரண்டு நண்பர்கள் பற்றியும் அந்த புதிய ‘Project’ பற்றியும் அறிய காத்திருக்கிறேன்.
ReplyDeleteஎனக்காகக் காத்திருக்கும் தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Delete//ஒரே கல்லி்ல் மூன்று மாங்கனியை அடித்த திருப்தி. //
ReplyDelete"கண்ணா,ரெண்டு இல்ல,மூணு லட்டு தின்ன ஆசையா?”
நண்பர்களிடமிருந்து நல்லவற்றைக் கற்கும் வாய்ப்பும் கிடைத்தது உங்களுக்கு..
தொடரக் காத்திருக்கிறேன்.
ஹா... ஹா... மூணு லட்டுதான் ஸார்! தொடர்ந்த தங்களின் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteமூன்று கனிகளில் மூன்றாவது கனிக்கு மட்டும் பொறாமை! எத்தனை எத்தனை அனுபவங்கள் கணேஷ்....பாராட்டுகள். தொடர்கிறேன்.
ReplyDeleteநியாயமான பொறாமைதான்! அப்படியில்லாட்டா 300 ரூபாய்க்கு மேல விலையுள்ள புத்தகத்தை நான் சாதாரணமா வாங்கி கலெக்ஷன்ல சேத்துக்க முடியுமா என்ன..? பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஇப்படி செய்கிற வேலையைத் மனத்திருப்தியுடன் செய்கிற வாய்ப்பு இப்படி நான் பழகிய எழுத்தாள நண்பர்களால் கிடைத்தது.// நட்பின் அனுபவம் மகத்துவமானது பதிவாக்கிய விதம் அருமை .
ReplyDeleteபகிர்ந்து கொள்வதிலும், நீங்களெல்லாம் பாராட்டுவதிலும் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையேது தென்றல்! மிக்க நன்றி!
Deletenalla anupavangal!
ReplyDeleteஆம்! நல்ல அனுபவங்கள் நி்றையவே கிடைத்தன அவரால்! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநல்லாப் பேச்சு வாங்கினீங்களா ஃப்ரெண்ட்.நேரம் தவறுறது எனக்கும் பிடிக்காது.ஆனா அந்தப் பேச்சுத்தான் இப்ப உங்களை நேரத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மையான மனிதானாய் வச்சிருக்கு.நேரத்தைக் கடைப்பிடிப்பதை வச்சே எங்களை எடை போடுகிறார்கள் இங்கு !
ReplyDeleteவெளிநாட்டில் எல்லாம் மனிதனை மதிப்பிட நேரம் தவறாமையும் ஒரு காரணி என்பதை அறிவேன். நேரம் தவறாமையை கடைப்பிடிக்கிறது, இந்த பொது அறிவு எல்லாமே பின்னால நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள். ஒரு கட்டத்துல சுத்த மண்ணா இருந்திருக்கேன்னு நினைச்சா சிரிப்புத்தான் வருகிறது ஃப்ரெண்ட்! நன்றி!
Deletevalthukkal
ReplyDeleteநான் ரசிக்கும் எழுத்து நடை உங்களது .வாழ்க வளர்க !
ReplyDeleteவாங்க நண்பரே... என் எழுத்து நடையைப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteநல்லா பேச்சு வாங்கிட்டிங்க. அதன் பிறகாவது நேரம் தவறாமை கடைப் பிடிப்பதா? அண்ணா.
ReplyDeleteஆமாம்மா. யார்கிட்ட திட்டு வாங்கினாலும் கோபப்படாம, அதை ஆராய்ஞ்சு பாத்தா நமக்கு நல்லது கிடைக்கும்கறது நான் அனுபவத்துல உணர்ந்தது. நன்றி தங்கையே!
Deleteஒவ்வொரு அனுபவமுமே சுவாரசியமாக இருக்கு சார். உங்களிடம் புத்தக கலெக்ஷன் பிர்மாதமா இருக்கும் என்று நினைக்கிறேன்....
ReplyDeleteபுதிய இரண்டு நட்பு ரத்தினங்களை பற்றி அறிய ஆவல்.
மிகப் பெரிய கலெக்ஷன் என்றில்லா விட்டாலும், நிறைவான தொகுப்புகள் கொண்ட புத்தக அலமாரி என்னுடையது. தொடரும் தங்களின் ஆதரவுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteசொல்வது எளிது ஆனால் கடைபிடிப்பது என்பது மிக கடினம் ஆனால் திரு பி.கே.பி.யின் அறிவுரை கேட்டு நேரம் நீங்கள் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது கேட்டு மகிழ்ச்சி.
ReplyDeleteஅதுமட்டுமல்லாமல் உங்கள் அனுபவங்களை படிப்பதில் மிக மகிழ்ச்சி காரணம் அது உங்கள் சிந்தனையில் மிக தரமாக வந்து கொண்டிருப்ப்பதால். வளர்ந்த எழுத்தாளரின் முதிர்ச்சி உங்களின் எழுத்துக்களில் மிளிர்கிறது. வாழ்த்துக்கள்
ஆம் நண்பா... எதுவாயினும் கடைப்பிடிக்கும் துவக்க காலத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். கிடைக்கும் பலன்களை அறிந்தால் எல்லாமே எளிதாகி விடும். என் எழுத்து நடையை ரசிக்கும் தங்களுக்கு என் மனங்கனிந்த நன்றி!
Deleteநேரம் தவறாமை எவ்வளவு முக்கியமானது என்பதை பி.கே.பி
ReplyDeleteவிளக்கிய விதம் மிக அருமை.
உங்களுக்கு கிடைத்த இன்னும் சில முத்து ரத்தினங்கள்
பற்றி அறிந்துகொள்ள ஆவல்..
வண்டிக்காரன் பாட்டு போல இன்றைய நடைவண்டிப் பயணம்
ரசித்து பயணித்தேன்....
ஆஹா... மாட்டுவண்டியை ஓட்டியபடி பாடப்படும் அந்த எளிய ராகங்களில் மயக்கும் சக்தி அபாரமன்றோ! இப்படி ஒரு உவமையில் பாராட்டி என்னை மிகமிக மகிழச் செய்த உங்களின் கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநேரம் தவறாமை என்ற அற்புதமான விஷயத்தினை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்து உங்கள் மூலம் எங்களுக்கும் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.
ReplyDeleteசொன்னால் சொன்ன நேரத்திற்கு சென்று விட வேண்டும் என்று நானும் எப்போதும் நினைப்பவன்......
நல்ல விஷயங்களைத் தொடர்ந்து தருவதற்கு நன்றி நண்பரே...
நேரம் தவறாமை வாழ்வில் நமக்கு முக்கியமானதுதான். தொடர்ந்து எனக்கு ஆதரவு தரும் தங்களுக்கு என் மனமார்நத நன்றி!
DeletePKP உடன் நடைவண்டிப்பயணம் குதூகலம்...ஈமெயில் வந்தது பதிவிட்டு சில மணிநேரத்தில்...நன்றி கணேஷ் சார்...
ReplyDeleteஆஹா... படித்து, கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தும் தங்களுக்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்! இதயம்நிறை நன்றி ஸார்!
Deleteசுயவரலாறும் சுவைப்பட சொல்வது நன்று!
ReplyDeleteதொடரத் தொடர்வேன்!
சா இராமாநுசம்
சுவைபடச் சொல்கிறேன் என்ற வார்த்தையின் மூலம் ஊக்கம் தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!
Deleteசுவையாகப் போகின்றது நடை வண்டி தொடர்கின்றேன்! நேரம் தவறாமை முக்கியம்!
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கும், தொடர்வதிலும் மகிழ்ந்து போய் என் இதயம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்!
Deleteஆமா சார். உண்மைதான். நேரம் பொன போன்றதலலவா? வெளிநாட்டினர் நேரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 10 மணிக்கு ஃபங்சன் என்றால் சரியாக 9.50 க்கெல்லாம் போய் அமர்ந்து விடுவார்கள். 10.05-க்குப் போனாலே கேவலமாகப் பார்ப்பார்களாம். வெளிநாடு அடிக்கடி செல்லும் நண்பர் சொன்ன தகவல் இது. நம் நாட்டில்தான் இப்படி. தாமதாகப் போவதை ஒரு மரபாகவே ஆக்கி விட்டிருக்கிறார்கள் நம் மக்கள். சீக்கிரம் போனால் கேவலமாகப் பார்க்கிறார்கள். நடைவண்டி செல்லும் அழகு அருமை. கண்பட்டு விடப் போகிறது.
ReplyDeleteகரெக்ட் துரை! தாமதமாகச் சென்றால்தான் பெரிய மனிதனுக்கு அழகு என்று ஒரு மனோபாவம்கூட நம்மிடையே உண்டு. வலைச்சரப் பணிகளுக்கிடையிலும் இதைப் படித்து, நுணுக்கமான ஒரு விஷயத்தை எடுத்துக் காட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபி.கே.பி யைப் பார்த்தா ஒரு சாயலுக்கு நடிகர் சுமன் மாதிரி இருக்கே. வில்லன் ரோல் இருந்தா டிரை பண்ணச் சொல்லலாமே...! (ஹி...ஹி..!)
ReplyDeleteசினிமா வாய்ப்புகளுக்கு ட்ரை பண்ணவே வேணாம் அவர். ஒன்றிரண்டு படங்கள்ல குட்டி கேரக்டர்கள் பண்ணிருக்கார். மத்த பல வாய்ப்புகள் தேடி வந்ததையெல்லாம் மறுத்துட்டார். படைப்பாளியா இருக்கறதுதான் அவர் விருப்பம்!
Deletetha ma 9.
ReplyDeleteநல்ல விறுவிறுப்பாக செல்கிறது அனுபவத் தொட(ருங்கள்)!
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சியும், தங்களுக்கு என் மனமகிழ்வுடன் கூடிய நன்றியும்!
Deleteஒரே கல்லுல மூணு மாங்கா! ம்ம்ம்...அதிர்ஷ்டசாலி நீங்கள். உங்களுக்குதான் எத்தனை விதமான அனுபவங்கள்!
ReplyDelete// பத்து மணிக்கு வர்றேன் என்றால் பத்தே காலுக்கு வந்துவி்ட்டு அதைப் பற்றி எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் ‘டேக் இட் ஈஸி’ என்கிற சராசரித் தமிழனின் மனநிலைதான் எனக்கு இருந்தது.// நான் இப்பவும் இப்படித்தான். ரொம்பவே மோசம்.
நான் சென்னையில் இருந்தபோது அப்பொழுது வளர்ந்து கொண்டிருந்த ஒரு எழுத்தாளரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் டைபிங் செய்வது, proof பார்ப்பது போன்ற உதவிகளை செய்ய முடியுமா என்று கேட்டபோது மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். என் நெடுநாள் ஆசை நிறைவேற இருந்த நேரத்தில் நான் சென்னையை விட்டே கிளம்ப வேண்டியதாகி விட்டது. :(
அடுத்த பதவில் அந்த இரண்டு நட்பு ரத்தினங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தொடருங்கள்.
ஆஹா... உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய அந்த நல் அனுபவம் கிடைக்காமல் போனதில் சற்று வருத்தம்தான். ஆவலாய் தொடருக்காய் காத்திருப்பதாய் சொல்லியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteலேட்டா வந்திந்திட்டேன்....!மன்னிச்சி!
ReplyDeleteஎன் வலையில் பதிவுகள் ‘மின்னும்’ போதெல்லாம் நீங்க வந்து தட்டிக் கொடுக்கறீங்க. ஆனா நான் உங்க ‘வீடு’க்கு எப்பவாவதுதான் வர்றேன். யார் யாரை மன்னிக்கணும் சுரேஷ்? சொல்லுங்க... உங்களுக்கு என் இதய நன்றி!
Deleteசார் பிகேபி அவர்கள் மூலம் நீங்கள் காலம் தவறாமையை கற்றுக்கொண்டதை படித்து ரசித்தேன். தொடரட்டும் அனுபவங்கள்
ReplyDeleteபடித்து ரசித்த பாலாவுக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteஅனுபவங்கள் வாயிலாய் கற்றுக்கொள்ளும் பாடங்கள்தான் எவ்வளவு விலைமதிப்பற்றவை. நம்முடைய காலதாமதத்தால் மற்றவர்களுக்கும் இடையூறு உண்டாவதை எடுத்துச்சொல்லிய சம்பவத்தின் மூலம் பலருக்கும் அதைப்பற்றிய விழிப்பை உருவாக்கிவிட்டீர்கள். பி.கே.பி அவர்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். முக்கனிகளை ஒரே கல்லில் அடித்துச் சுவைத்த நிகழ்வும் ரசிக்கவைக்கிறது. அடுத்தப் பதிவுகளை எதிர்நோக்கி....
ReplyDeleteமின்னல் வரிகள் உட்பட பல வலைகளில் நேற்று நான் இட்டப் பின்னூட்டம் ஒன்றைக்கூட இன்று காணல. நொந்துபோயிருக்கேன் கணேஷ்.
ReplyDeleteஅந்தப் பதிவில் நான் சுட்டியிருந்தது ஒரு நல்ல பழக்கத்தை அனுபவத்தின் வாயிலாகக் கற்றுக்கொண்டதோடு, அதை மற்றவங்களுக்கும் கற்றுக்கொடுக்கும் உங்களுடைய திறந்த மனம் மற்றும் ஒரே கல்லில் கிடைத்த முக்கனிகளுக்கானப் பாராட்டு. அடுத்துத் தொடரவிருக்கும் நட்பின் அறிமுகங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
என்னோட டாஷ்போர்டல ‘சின்ன நிலாவின் சேட்டைகள்-2’ நீங்க பப்ளிஷ் பண்ணினது உடனே தெரியலைங்க கீதா! லேட்டாத்தான் டிஸ்ப்ளே ஆச்சு. இப்ப கமெண்ட் ப்ராப்ளமா? சரியாய்டும்! வெளிப்படையாக நான் எழுதி வருவதை நீங்கள் பாராட்டியது மனதிற்கு தெம்பூட்டுகிறது. தங்களுக்கு என் இதய நன்றி!
Delete// மத்தவங்களோட நேரத்துக்கு மதிப்புக கொடுக்க கத்துக்கங்க கணேஷ்’’ // அருமையான வாதம்....
ReplyDelete