Monday, March 19, 2012

மொறு மொறு மிக்ஸர் - 4

Posted by பால கணேஷ் Monday, March 19, 2012
ம்முறை மிகவும் சுலபமான இரண்டு புதிர்க் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். பதிவின் முடிவில் விடையை வெளியிடப் போவதில்லை. விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். ஆமோதித்து தோளில் தட்டிக் கொடுக்கிறேன். இல்லையெனில், என் தோளில் நானே தட்டிக் கொண்டு, அடுத்த மிக்ஸரில் விடை தருகிறேன். சரியா?

1) சிவப்பு மாளிகை, வெள்ளை மாளிகை, நீல மாளிகை என்று மூன்று மாளிகைகள் இருக்கின்றன. சிவப்பு மாளிகை நடுவிலிருக்கும் மாளிகைக்கு இடது புறத்தில் இருக்கிறது. நீல மாளிகை நடுவிலிருக்கும் மாளிகைக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. எனில்... வெள்ளை மாளிகை எங்கே இருக்கிறது?

2) இரண்டு பெண்கள் எதிரெதிராக அமர்ந்து செஸ் விளையாடுகிறார்கள். ஐந்து கேம்கள் விளையாடப்படுகின்றன. இரண்டு பெண்களுமே ஐந்து கேம்களிலும் ஜெயித்திருக்கிறார்கள். எந்த கேமும் ’டை’ ஆகவில்லை. இது எப்படி சாத்தியம்?

======================================================
                                 சைனீஸ் ஹோட்டலா...? வேண்டாம்!

சுபாவின் சிறுகதைகளை கரூரில் இருந்த என் நண்பன் ஸ்ரீதரனோடு சேர்ந்து டைப் செய்ததாக ‘நடை வண்டிகள்’ தொடரில் குறிப்பிட்டிருந்‌தேனல்லவா? ஒருமுறை திருப்பூரிலிருந்து கரூர் சென்று மூன்று நாள் தங்கிய போது அவனிடம், ‘‘ரெண்டு நாளா டைப் பண்ணிட்டே இருந்துட்டோம். இன்னிக்கு நைட் ஏதாவது படம் போலாமாடா?’’ என்று கேட்டேன். அவன், ‘‘இன்னிக்கு நைட் ஹோட்டல்ல டிபன் சாப்ட்டுட்டு படம் பாக்கப் போகலாம் கணேஷ். அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்.’’ என்றான்.

மாலை எட்டு மணி வரை டைப்பிங் செய்து விட்டு சாப்பிடக் கிளம்பினோம். ‘‘ஏதாவது நல்ல ஹோட்டலாப் பாத்துக் கூட்டிட்டுப் போடா’’ என்றேன். அவனுடைய டூ வீலரில் கொஞ்ச தூரம் சென்றதும் கை காட்டினான் அவன், ‘‘கணேஷ், அதான் நாம போகப் போற ஹோட்டல்’’ என்று. பார்த்தேன். தூரத்தில் உயரமான பில்டிங்கின் டாப்பில் ‘ஹோட்டல் நான் ஹினி’ என்று நியான்ஸைன் எரிந்து கொண்டிருந்தது. ‘‘அடேய் பாவி! நான் சுத்த சைவமாச்சுதே! பேரைப் பாத்தாலே சைனீஸ் ஹோட்டல் போலருக்கேடா... ஏண்டா, வேற ஹோட்டலே உனக்குக் கிடைக்கலையா?’’ என்றேன்.

அவன் குழப்பமடைந்தவனாக, ‘‘என்ன சொல்றீங்க கணேஷ்? சுத்த சைவ ஹோட்டலுக்குத் தானே போய்க்கிட்டிருக்கோம்?’’ என்றான். இந்தப் பேச்சுக்கள் நடக்கும் நேரத்திலேயே வாகனம் ஹோட்டலை நெருங்கி விட... இப்போது ஹோட்டலின் போர்டைப் பார்த்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அடக் கடவுளே...! அவர்கள் வைத்திருந்த நியான்ஸைனில் ஒரு டியூப்லைட் எரியாததால் 'HOTEL NANDHINI' என்பது எனக்கு 'HOTEL NAN  HINI' ஆகத் தெரிந்து மிரட்டி இருக்கிறது! ஹி... ஹி...!

==================================================

                               உண்மையான சத்தியாக்கிரகம்!

ஜெனரல் ஸ்மட்ஸ்ஸுடைய காரியதரிசிகளில் ஒருவர் தமாஷாக என்னிடம், ‘‘ஆங்கிலேய வேலைநிறுத்தக்காரர்களைப் போல் நீங்களும் இம்சை முறைகளைக் கையாளக் கூடாதா என்று நான் அடிக்கடி விரும்புவதுண்டு. அப்போது உங்களை அடியோடு தொலைத்து விடுவதற்கான வழி எங்களுக்குப் புலனாகும். ஆனால் நீங்கள் எதிரியைக்கூட துன்புறுத்த மாட்டீர்கள். துன்பத்தை அனுபவித்தே வெற்றி பெற விரும்புகிறவர்கள் நீங்கள். நீங்களாக வகுத்துக் கொண்ட வீரம், மரியாதை இவற்றின் வரம்புகளை ஒருபோதும் நீங்கள் மீறிச் செல்வதில்லை. அதுதான் எங்களை முழுவதும் உதவியற்ற நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது’’ என்று சொன்னார்.

-‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’  -மகாத்மா காந்தி.

==================================================

ஆ.வி. இதழ் 1960ம் ஆண்டு தீபாவளி மலருக்கு வெளியிட்டிருந்த விளம்பரம் இது. அப்பவே அவங்க தீபாவளி மலருக்கு டிமாண்ட்தான் போலருக்கு... இவ்வளவு கண்டிஷன் போட்ருக்காங்க பாருங்க. விலை 5 ரூபாய் தான்! அவ்வ்வ்வ்வ!

==================================================

                                   மைலாப்பூரில் விவசாயம்!

துரை கோரிப்பாளையத்திலிருந்து நான் சென்னை வந்தபோது என் ஊரிலிருந்து ஒரேயடியாக மாறுபட்ட இடத்திற்கு வந்துவிட்டதாக எண்ணவில்லை. சென்னை அப்போதே வளர்ந்த நகரம்தான். என்றாலும் இப்போது இருப்பதைப் போன்ற நெரிசல் இல்லை. 70களில் நான் இங்கு வந்திருந்தபோது மந்தைவெளி செயிண்ட் மேரீஸ் தாண்டி ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் விவசாயம்கூட நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்காங்கே வீடுகள் இருந்தன. கபாலி தியேட்டர் பக்கம் வாய்க்கால்களில் எல்லாம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. மைலாப்பூரில் பல இடங்களில் விவசாயம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

நான் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் மாணவர்களுக்கு மாடலாக அங்கே பக்கத்துச் சேரியிலிருந்த மக்கள்தான் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள். தற்போத உள்ள லஸ் ரயில்வே ஸ்டேஷன் இருக்கும் இடத்துக்குப் பக்கத்திலிருந்த ஓடை வழியாக மகாபலிபுரத்துக்கு வைக்கோல் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன்.

-ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் அனுபவங்கள் இவை. ‘சென்னை நம்ம சென்னை’ ஏப்ரல்’11 இதழிலிருந்து.
==================================================

                          முறியடிக்க முடியாத சாதனை!

கிரிக்கெட் சரித்திரத்தில் சாதனைகள் படைக்கப்படும். பின் அவை முறியடிக்கப்படும். ஆனால் இரண்டு இந்தியர்களின் சாதனைகளை இனி எவரும் முறியடிக்க முடியாது. அனில் கும்ப்ளே ஒரு முறை மேற்கிந்தியத் தீவின் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இனி எவரும் பத்து விக்கெட் வீழ்த்தினாலும் கும்ளேவின் சாதனை சமன் ஆகுமே தவிர, 11 விக்கெட் வீழ்த்தி வெல்ல முடியாது இல்லையா? அதேபோல சுனில் கவாஸ்கர் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 60 ஓவர்கள் (அப்போது 60 ஓவர்கள்) நாட் அவுட்டாக நின்று 176 பந்துகளை சந்தித்து எடுத்த ரன்கள் : 36! இனி எவரும் இதை முறியடித்து விட முடியுமா, என்ன? ஹி... ஹி....

==================================================

                              அதிகமாக ஒரு ரூபாய் தரணும்!

த்மினி புரொடக்ஷன்ஸ் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள். கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. ‘‘அந்த கேரக்டருககு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா இருக்கும்’’ என்று சொன்னார் சிவாஜி. ப.நீலகண்டன் ‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார்.

‘‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல பிரமாதமான ஆக்டர். (சந்திரபாபு யாரையும் ‘சார்’ சொல்ல மாட்டார். ‘மிஸ்டர்’ போட்டுப் பேசுவது அவர் வழக்கம்) என் திறமையைப் புரிஞ்சுக்கிட்டிருக்கார்.அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார். சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’’ என்றார் சந்திரபாபு அலட்சியமாக. இதைக் கேட்ட ப.நீலகண்டனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சிவாஜியிடம் வந்து நடந்ததைச் ‌சொன்னார் அவர்.

அதற்கு சிவாஜி, ‘‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில சீன்களில் அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பாத்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூஸுத்தனமா பேசுவான். விடுங்க...’’ என்றார்.

-‘கண்ணீரும் புன்னகையும்’ நூலில் முகில்.

==================================================

                                 சில சாக்லெட் தகவல்கள்!

* ஜோசப் ஸ்டார்ஸ் ஃபிரை என்பவர் 1849ம் ஆண்டில் முதன்முதலாக சாப்பிடக் கூடிய சாக்லெட்டை உருவாக்கினார்.

* 1876ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் டேனியல் பீட்டர் எட்டாண்டு பரிசோதனைக்குப் பின்னர் மில்க் சாக்லெட்டைக் கண்டுபிடித்தார்.

* ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ திரைப்படத்தின் ஷவர் குளியல் காட்சியில் உண்மையில் பயன்படுத்தப்பட்டது சாக்லெட் சாறுதான்!

==================================================

1980களில் ‘சாவி’யில் வந்த நகைச்சுவைத் துணுக்கு!

89 comments:

  1. சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. திரட்டிகளில் பதிவை இணைத்துவிட்டு மீண்டும் பார்த்தால் உற்சாகம் தரும் உங்களின் கருத்து. மிக மகிழ்வடைந்து உங்களுக்கு என் இதய நன்றியை உரித்தாக்குகிறேன்!

      Delete
  2. கர கர மொறுமொறு மிக்சர்.... :) சுவையான தகவல்கள்....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய நண்பருககு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. சிவப்பு மாளிகை, வெள்ளை மாளிகை, நீல மாளிகை என்று மூன்று மாளிகைகள் இருக்கின்றன. சிவப்பு மாளிகை நடுவிலிருக்கும் மாளிகைக்கு இடது புறத்தில் இருக்கிறது. நீல மாளிகை நடுவிலிருக்கும் மாளிகைக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. எனில்... வெள்ளை மாளிகை எங்கே இருக்கிறது?
    >>>>
    எனக்கு வெள்ளை கலர் பிடிக்காது. அதனால் அந்த வீடு எங்கிருந்தால் எனக்கென்ன அண்ணா?

    ReplyDelete
    Replies
    1. ‘கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு’ன்னு பாடற பார்ட்டியாம்மா நீ?

      Delete
  4. இரண்டு பெண்கள் எதிரெதிராக அமர்ந்து செஸ் விளையாடுகிறார்கள். ஐந்து கேம்கள் விளையாடப்படுகின்றன. இரண்டு பெண்களுமே ஐந்து கேம்களிலும் ஜெயித்திருக்கிறார்கள். எந்த கேமும் ’டை’ ஆகவில்லை. இது எப்படி சாத்தியம்
    >>>
    அவங்க கம்ப்யூட்டர்ல விளையாடிக்கிட்டு இருக்காங்கதானே அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இல்லைம்மா... சரியான விடைய கீழ கெளதமன் ஸார் குடுத்துட்டாரு பாரு. நன்றிம்மா!

      Delete
  5. வெள்ளை மாளிகை வாஷிங்க்டனில் உள்ளது.
    இரண்டு பெண்கள் ஒரு புறத்திலும், வேறு இரண்டு பெண்கள் அவர்களுக்கு எதிரிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
    மிக்சரின் மற்ற பகுதிகளும் சுவையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பாஸ்! நீங்கதான் உஸ்தாத்! ஐ ஸ்வே... சரியான விடையை அழுத்தமா சொல்லிட்டிங்களே... என் ‌ரெண்டு கையாலயும் உங்க ரெண்டு தோள்களிலும் அழுத்தமாத் தட்டிக் கொடுத்து பாராட்டறதோட, என் மனமார்ந்த நன்றியையும் தெரிவிச்சுக்கறேன்!

      Delete
  6. அவசரத்துல சரியா படிக்காம பல்ப் வாங்குன அனுபவம் எனக்கும் நிறைய உண்டுண்ணா. சந்திரபாபு ஒரு ரூபாய் கேட்ட விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியுமே.

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... அவசரப்பட்டு பல்பு வாங்கற ஆட்கள் எங்கயும் உண்டு போல! தெரியாதவங்களுக்கு புதுசா இருக்கட்டுமேன்னுதான் சந்திரபாபு மேட்டரையும் உள்ள சேத்தேன். உற்சாகமாய் ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு மனமகிழ்வுடன் நன்றி!

      Delete
  7. சுவாரஸ்யமான அசத்தலான தகவல்கள்...

    அனைத்து அருமை..

    கடைசி நகைச்சு துணுக்கு அசத்தல்..

    ReplyDelete
    Replies
    1. பாத்து நாளாச்சு நண்பா! நலம்தானே? பழைய சாவி இதழ்ல வந்த அந்தத் துணுக்கு இப்பவும் என்னைச் சிரிக்க வெக்கிற ஒண்ணுதான். எல்லாப் பகுதிகளையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  8. மிக அருமையான கலவை சார். எல்லாவற்றையும் ரசித்து படித்தேன். அப்புறம் ஒரு சின்ன திருத்தம் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது பாகிஸ்தானுக்கு எதிராக.

    ReplyDelete
    Replies
    1. அடடா... கிரிக்கெட்ங்கற பேட்டையில மழைக்கு ஒதுங்கறவன்தானே நான்! அதனால தெரியாம எழுதிட்டேன். திருத்தினதுக்கும், மிக்ஸரை ரசிச்சதுக்கும் என் மனமார்ந்த நன்றி!

      Delete
  9. மிகஸர் நல்ல காரசாரமாக கரகரப்பாக ருசியாக உள்ளது. கடைசியாக சாவியில் வந்த நகைச்சுவையும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நீங்கள் ரசித்தேன் என்று சொல்லியிருப்பது எனக்கு மிகமிகத் தெம்பூட்டும் விஷயம் ஸார்! மிகுந்த மனமகிழ்வுடன் தங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

      Delete
  10. சுவையான, சுவாரஸ்யமான பதிவு. பாலா குறிப்பிட்டிருப்பது போல கும்ப்ளே பத்து விக்கெட் எடுத்தது பாகிஸ்தானுக்கு எதிராக, டெல்லி டெஸ்ட் மேட்ச்சில்! புதிருக்கு விடைகள் - ஒண்ணும் அவசரமில்லை.... அடுத்த பதிவு பார்த்தே தெரிந்து கொள்கிறேன்.... ஹி....ஹி....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸார். கிரிக்கெட் மாதிரி விஷயத்துல இனி நுனிப்புல் மேய மாட்டேன். தீர விசாரிச்சுட்டே போடறேன். சரியா? விடைகளை கே.ஜி. ஸார்தான் புட்டு வெச்சுட்டாரே... தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  11. ரசிக்கவைத்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களை ரசிக்க வைத்த பதிவாக இது அமைந்ததில் மனமகிழ்வு கொண்டு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

      Delete
  12. மளிகைனு அவசரத்துல படிச்சுட்டு பிறகு தான் கவனிச்சேன்..

    மொறு மொறு தான். சந்தேகமேயில்லை. 60ல் ஐந்து ரூபாய் பெரிய தொகை என்றே தோன்றுகிறது. அப்பொழுதெல்லாம் வாராந்தர விகடன் எத்தனை காசு? நாலணா இருக்குமா? எழுபதுகளில் பத்து பைசாவுக்கு ரெண்டு இட்லி சட்னி சாம்பாருடன் சாப்பிட்ட நினைவிருக்கிறது. அஞ்சு ரூபாய் அப்போதும் பெரிய தொகை!

    ReplyDelete
    Replies
    1. மாளிகை... ஹா... ஹா... நல்லாப் படிச்சீங்க ஸார். எனக்கு இப்போ நினைச்சா பெருமூச்சு வருதே தவிர, அப்போதைய விகடனின் விலையே நீங்க சொன்ன மாதிரி 20பைசாவோ நாலணாவோ தான். மிக்ஸர் மொறுமொறுன்னு தட்டிக் கொடுத்ததுல சந்தோஷத்தோட என் நன்றி!

      Delete
  13. ஜோக்,நகைச்சுவை அனுபவம்,அரிய தகவல் என சூப்பர் மிக்சர்தான்!

    ReplyDelete
    Replies
    1. மிக்ஸரின் சுவையை ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. முறிக்க முடியாத சாதனை முறிக்க முடியாது தான் ஹா ஹா அருமை

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் ஸார்! இதை ரசித்துப் படித்து பாராட்டியதற்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  16. மொறு மொறு மிக்ஸர் சூப்பர் ....ரசிக்கும் படி தந்த விதம் அருமை .

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட தோழிக்கு என் இதய நன்றி!

      Delete
  17. கரூர் நந்தினி ஹோட்டல் ...எனது ஊர் ஹோட்டல்...தற்போது அது இல்லை....மலரும் நினைவுகள்.....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா நண்பரே? நான் அங்க போனது சாப்பிட்டது எல்லாம் 97 இல்ல 98ன்னு நினைக்கிறேன். இப்ப இல்லைன்றது வருத்தம்தான். மலரும் நினைவுகளை இப்பதிவு தூண்டியதி்ல் மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  18. Answers munnadiye sollittangale!

    Mixture super!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... இன்னும் கஷ்டமான புதிரைச் சொல்ல நான்தான் நிறைய யோசிக்கணும்னு நினைக்கிறேன். மிக்ஸர் சூப்பர் என்று பாராட்டிய தங்ளுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. காரம் சுவை மணம் கலந்த மிக்சர்
    அருமை

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. புலவரையாவை மிக்ஸர் ரசிக்க வைத்ததில் அகமகிழ்வு கொண்டு என் மனமார்ந்த நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்!

      Delete
  20. மிக்ஸர் மொறு மொறு...ரசித்து படித்தேன்...சாரி சுவைத்தேன் கணேஷ் சார்...

    ReplyDelete
    Replies
    1. டேஸ்டி மிக்ஸரைச் சுவைத்து, தட்டிக் கொடுத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  21. மொறு மொறு மிக்சர் ... நீங்க நல்ல துரு துரு, சுறு சுறு!
    http://kbjana.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜனா ஸார், உங்களோட பாராட்டு தெம்பளிக்கிறது. தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  22. கடுமையான பணி நெருக்கடி காரணமாக கடந்த பத்து நாட்களாக வலைப்பக்கம் வர முடியவில்லை. பதிவுகளும் இடவில்லை. இரவு வெகு நேரம் கழித்தே வீடு வர முடிந்தது. அதிகாலையில் எழுந்து ஓட வேண்டியதாகிவிட்டது. அதனால்தான் தங்களைப் போன்ற அருமையான பதிவர்களின் பதிவுகை தவறவிட வேண்டியதாகி விட்டது. தங்களது பழைய ஒரு வார இடுகைகளை இப்போதே படித்து விடுகிறேன்.

    அப்புறம்... இன்றைய மொறு மொறு மிக்சர் அருமை. கவாஸ்கரின் சாதனையை யாருமே முடிக்க முடியாதுதான் சார். அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிலசமயம் சூழ்நிலைகள் இப்படி படிக்க இயலாமல் ஆக்கிவிடும் துரை. எனக்கும் முன்பொருமுறை இப்படியான நிலை ஏற்பட்டது. அதனாலென்ன... சேர்த்துவைத்து படித்தால் போயிற்று. கவாஸ்கரின் சாதனை வினோதமானது இல்லையா? ‘ஒரு நாள் போட்டியில் அடித்து ஆட வேண்டுமென்று எனக்கு யாரும் சொல்லவில்லை’ என்றார் கவாஸ்கர் பின்னர். ஹா... ஹா... ரசித்துப் பாராட்டிதற்கு நன்றி துரை!

      Delete
  23. ரசித்து வாசித்தேன் ஃப்ரெண்ட்.கொஞ்சம் ரிலாக்ஸ் எனக்கு.இன்னும் 2-3 நாட்கள் போகணும் !

    ReplyDelete
    Replies
    1. வார்த்தைகளால் விவரிக்க இயலாத மனப்பளு உங்களுக்குள்ள இருக்கறது நல்லாவே தெரியும் ஃப்ரெண்ட்! தூரத்துல இருக்கற நான் இந்த மாதிரி சின்னச் சின்ன பதிவுகளால உங்களை கொஞ்ஞ்ஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க வைக்க முடியுதுன்னா அதைவிடப் பெரிய சந்தோஷம் என்ன இருக்கு? நன்றி!

      Delete
  24. வணக்கம்! மிக்சர் நல்ல மொறு மொறுதான். பழைய ஆனந்த விகடன் தீபாவளி மலர்களை மறக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. நிறைய தீபாவளி மலர்கள் வைத்திருந்தோம் வீட்டில். பல தொலைந்து விட்டதில் எனக்குச் சற்று வருத்தம்தான். நன்றி ஸார்!

      Delete
  25. சுவையான தகவல்கள். பல இதுவரை அறிந்திராதவை. சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்ததில் நடிகர் திலகத்தின் பெருந்தன்மை தெரிகிறது. ரசனையானத் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நடிகர் திலகத்தின் பெருந்தன்மை என்பதை விடவும், திறமையைக் கணிக்கும் திறன் என்பது சாலப் பொருந்தும் என நினைக்கிறேன். ரசனையான தகவல்கள் என்ற பாராட்டை வழங்கியதில் மிகவும் மனமகிழ்ந்து நன்றி நவில்கிறேன்!

      Delete
  26. மொறு மொறு மிக்ஸர் செம ருசி
    திரட்டித் தந்துதுள்ள தகவல்கள் புதியவை அருமையானவை
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இந்த மிக்ஸரின் சுவை பிடித்திருந்ததில் மிக்க மகிழ்வுடன் என் இதய நன்றி!

      Delete
  27. மொறுமொறு உங்க பதிவுகளில் கொஞ்சம் கூடுதலான விறுவிறுப்பு..எனக்குப்பிடிச்ச பதிவு கணேஷ்

    ReplyDelete
    Replies
    1. கூடுதல் விறுவிறுப்பாக்கா... இது குறையாம பாத்துக்க இன்னும் மென்க்கெடுவேன் நான். உற்சாகம் தந்த கருத்துக்கு உள்ள்ன்புடன் என் நன்றி.

      Delete
  28. அருமையான தொகுப்பு............... அந்த மேட்ஸ் போக்ஸ் மாட்டர் றொம்ப காமெடி

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய எஸ்தருக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  29. உண்மையில் அருமையான மொறு மொறு மிக்சர்தான்.

    சைனீஸ் ஹோட்டால் படித்ததும் சிரிப்பு வந்தது.இப்படி எழுத்து மிஸ்ஸாகியதால் எனக்குள்ளும் பல குழப்பங்கள் ஏற்பட்டதுண்டு.


    மைலாப்பூரில் விவசாயமா?நம்பவே முடியவில்லை.!

    சாவியில் வந்த நகைச்சுவை துணுக்கு ஏ ஒன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி எழுத்துக் குழப்பங்கள் ஏற்பட்டதை எங்களோடயும் பகிர்ந்துக்கங்களேன். மைலாப்பூர்ல விவசாயம் கட்டுரையப் படிச்சப்ப எனக்கே ஆச்சரியமா தான் இருந்தது. அதான் பகிர்ந்தேன். நகைச்சுவைத் துணுக்கை ரசித்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  30. மிக்ஸர் மிக நல்ல காரசாரமாக ருசியாக உள்ளது. உங்கள் வலைத்தளம் வந்து இந்த பதிவை படித்தவுடன் சிறிது குழப்பம் நான் வந்தது உங்கள் தளமா அல்லது விகடனில் வரும் பொக்கிஷம் பகுதியா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது

    செய்திகளும் நகைச்சுவையும் அதை தந்த விதமும் மிக அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  31. மிக்ஸர் ருசியாக உள்ளது. Flash back ஐக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அனுபவஸ்தரான நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இனி ப்ளாஷ்பேக் இட்ம்பெறாமல் செய்துவிடலாம். ருசியாக உள்ளது என்று பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  32. அருமையான மொறு மொறு சூப்பர் மிக்சர்தான்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய நண்பர் ரிஷபனுக்கு மனமார்ந்த நன்றி!

      Delete
  33. மொறு மொறு மிக்சர் பிரமாதமா இருந்தது சார்.
    சந்திரபாபு விஷயம், நகைச்சுவை துணுக்கு, சென்னை பற்றிய தகவல் என சூப்பர் சார்.....

    ReplyDelete
    Replies
    1. எல்லா அம்சங்களையும் ரசிச்சிருக்கீங்க. உங்களின் பாராட்டுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  34. இன்னைக்கு தான் உங்க பிளாக் பக்கம் வர முடிந்தது...

    நன்றாக வித்தியாசமான தொகுப்புகள்...படித்து மிக ரசித்தேன் கணேஷ்.

    ஜோக்குகள் சிரிக்கவைத்ததுடன் நிறைய யோசிக்க வைத்தது.
    காரம், மணம்,சுவை அனைத்தும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. நான் மிக மதிக்கும் நீங்கள் என் தளத்திற்கு வருகை புரிந்ததில் மிகுந்த மனமகிழ்வு எனக்கு. நீங்கள் ரசித்துப் பாராட்டியதில் பூரிப்புடன் என் இதயம் நிறைந்த நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்!

      Delete
  35. வழக்கம் போல தாமதம் நண்பரே...
    சுடச்சுட மிக்சர் சாப்பிட முடியாம போச்சே...

    நடிப்பில் ஒரு புதிய பரிமாணம் காட்டிய நடிகர்
    சந்திரபாபு எங்க ஊர்க்காரர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு
    பெருமிதம்...

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் பிடித்த, அபாரத் திறமைசாலியான சந்திரபாபு உங்க ஊர்க்காரரா? மகிழ்ச்சி! தங்கள் வருகையால் மனமகிழ்வுடன் தங்களுக்கு என் நன்றி!

      Delete
  36. மிக்ஸர் சூப்பர் சார். இதுபோல ஸ்பெஷல் மிக்ஸர்.பாம்பே மிக்ஸர் என நிறைய வைரட்டி மிக்ஸர்களை எதிர்பாரர்க்கின்றேன் கணேஷ் சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
    Replies
    1. உஙகளின் விருப்பப்படி நல்ல மிக்ஸர்களை மேலும் தர முயல்கிறேன். நன்றி நண்பரே...

      Delete
  37. அன்பின் சகோதரா மிக்சர் மிக மிக சுவை. ஆனால் ரெம்ப அதிகம். நான் அளவோடு தான் உள்ளெடுப்பது. எனக்கு அதிகம் சாப்பிட முடியாது. அளவோடு எடுத்தேன் மிகுதியை பின்னர் பார்க்கலாம். வாழ்த்துகள். வெள்ளிக்குப் பிறகு இன்று தான் கணனி திறந்தேன். சந்திப்போம்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  38. அளவோடு படித்தாலும் சரி... படித்தவரை ரசித்தால் சரியே. வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  39. சில கருத்துக்கள்,திரு.கணேஷ்...
    <<70களில் நான் இங்கு வந்திருந்தபோது மந்தைவெளி செயிண்ட் மேரீஸ் தாண்டி ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் விவசாயம்கூட நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்காங்கே வீடுகள் இருந்தன. கபாலி தியேட்டர் பக்கம் வாய்க்கால்களில் எல்லாம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. மைலாப்பூரில் பல இடங்களில் விவசாயம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.>>
    நானும் சென்னைவாசிதான்..வருடம் தவறு என நினைக்கிறேன்..இந்த காலகட்டத்தில் மைலாப்பூரில் விவசாயம் சம்பந்தப்பட்ட ஒரே விஷயம்.காமதேனுவில் விவசாயி படம் ஓடியதுதான்!Pl.check

    விகடன் மலர் விலை ரூ5/ மட்டுமே
    இதுவும் மிக குறைந்த விலை என பலர் நினைக்கலாம்..ஆனால் உண்மை அதுவல்ல!1960 ஆம் வருடம் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 12 அதாவது இந்த மலர் விலை சுமார் அரை கிராம.எனவே இப்போ அதன் மதிப்பு சுமார் ரூ.1200 இட்லி கணக்கு பார்த்தாலும் 1960 இல் ரூபாய்க்கு இருபது இட்லி அல்லது மலரின் விலை 100 இட்லிகள்.
    இப்போ அதன் மதிப்பு ரூ.700/
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நான படித்த கட்டுரையில் டிராட்ஸ்கி மருது அப்படித்தான் சொல்லியிருந்தார். ஒருவேளை அவர்கள எழுத்துப் பிழையுடன் கம்போஸ் செய்திருந்தார்களோ என்னவோ... அந்நாளில் பணத்தின் மதிப்பு அதிகம் என்பதை அறிவேன். என்றாலும் இவ்வளவு விரிவாக எனக்குத் தெரியாதென்பது உண்மை. நீங்கள் அறியத் தந்ததில் ஏற்பட்டது பிரமிப்பு. தங்களின் நற்கருத்துக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  40. HEY நிஜமாவே..வெள்ளைமாளிகை...செஸ் ரெண்டுக்கும் நான் சரியாக விடை யோசிச்சு கீழே பார்த்தா....'ஷக்தி நீ க்ரேட்' ன்னு நானே தோளில் தட்டிக்கொண்டுவிட்டேன் ஹிஹிஹி :)))

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்போது கை குலுக்கி உங்களைப் பாராட்டி மகிழ்கிறேன்!

      Delete
  41. //தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ -மகாத்மா காந்தி.
    //

    ஆஹா!!!! உயர்ந்த தத்துவமே இருக்கு இதில...

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்! உள்ளீடாக இருக்கிறது- வெள்ளைக்காரன் காந்தியைப் பார்த்து மிரண்டதன் காரணம்.

      Delete
  42. //இனி எவரும் பத்து விக்கெட் வீழ்த்தினாலும் கும்ளேவின் சாதனை சமன் ஆகுமே தவிர, 11 விக்கெட் வீழ்த்தி வெல்ல முடியாது இல்லையா? அதேபோல சுனில் கவாஸ்கர் முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 60 ஓவர்கள் (அப்போது 60 ஓவர்கள்) நாட் அவுட்டாக நின்று 176 பந்துகளை சந்தித்து எடுத்த ரன்கள் : 36! இனி எவரும் இதை முறியடித்து விட முடியுமா, என்ன? ஹி... ஹி....

    //

    :) சுவையான தகவல் ...lol.

    ReplyDelete
    Replies
    1. நான் என்னங்க பண்ணறது? சுவாரஸ்யமா ஏதாவது தகவல் தரலாம்னு வந்தாலும் லொள்ளு கூடவே வந்துடுது. ஹி... ஹி...

      Delete
  43. நீங்கள் குறிப்பிட்டு எழுதிய சிவாஜி அவர்களின் "சபாஷ்மீனா" படத்தையொட்டிய தவகலை

    http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Current-Discussions/page241

    இந்த தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்....நன்றி....

    ReplyDelete
    Replies
    1. இப்போது முயன்றதில் தளம் திறக்கவில்லை. மீண்டும் முயன்று அவசியம் படித்து விடுகிறேன். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  44. இரண்டாவது புதிருக்கு முதல் முறை படித்தபோதே விடை தெரிந்தது. ஆனால் நான் எப்பவும் போல இல்லாம இன்னும் தாமதமாக கருத்து சொல்ல வந்திருக்கிறேன். :)
    எல்லாமே கலக்கல். சைனீஸ் ஹோட்டல் நல்ல நகைசுவை! :)
    சபாஷ் மீனாவில் சந்திரபாபு செம கலக்கல் நடிப்பு. இதில் இவர் டபுள் ஆக்க்ஷன் இல்லையா. செம ஸ்டைலாக ரிக்ஷா ஓட்டுவார். மிகவும் ரசித்து பார்த்த படம்.
    பதிவுல ஒரே ஒரு வருத்தம்தான். என்னோட favorite கவாஸ்கரை ஒரு ஓட்டு ஓட்டிடீங்களே. :(

    ReplyDelete
    Replies
    1. சந்திரபாபு டபுள் ஆக்ட்ங்கறதைவிட அவர் பேசற அக்மார்க் சென்னைத் தமிழ் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் குரு. நகைச்சுவையை ரசித்ததற்கு என் நன்றிகள். கவாஸ்கர் எனக்கும பிடிக்கும். ஆனால் அந்த வினோத சாதனையைச் சொல்லாமல் இருக்கவும் முடியலை. மன்னிச்சூ. நகைச்சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube