Wednesday, January 25, 2012

என் கிறுக்கல்கள்!

Posted by பால கணேஷ் Wednesday, January 25, 2012
அன்று

வெறிகொண்ட கூட்டம் ஒன்று
    குரல் உயர்த்திக் கூச்சலிட்டது!
நெறிதவறி நடக்கிறது அரசாட்சி
    மன்னர் இறந்தால் அவர்மகன்
பிறவியினால் தகுதி வருமோ?
    ஒழித்திட வேண்டும் இம்முறையை
பிறையென வளர்ந்து வாழ்ந்திட
    வேண்டும் ‌எமக்கு மக்களாட்சி!


இன்று

வெறிகொண்ட கூட்டம் ஒன்று
    குரல் உயர்த்திக் கூச்சலிடுகிறது!
நற்குணமிக்க தலைவா! வாழிநீயென்று
    அருகினில் தலைவரின் புதல்வன்
கூட்டத்தைப் பார்த்துக் கையசைக்க,
    அன்னாரையும் வா‌‌ழி‌யெனக் கூவுது கூட்டம்!

அக்காலத் தமிழினம் தன்னையுணர்ந்து
    எழுச்சி பெற்று போரிட்டது
மக்களாட்சி பெற்று மாண்புற வேண்டுமென்று!
    காலப்போக்கில் உணர்ச்சிகள் மறைய
இக்காலத் தமிழினம் தன்னையுணராமல்
    மன்னராட்சியிலேயே மூழ்கி வாழ்கிறது!
எக்காளமிடுகிறது இதுவே நல்லாட்சியென...
    மன்னர் பரம்பரையோ இன்றளவும்
‌ஒய்யாரப் பவனிவருகிறது அப்பாவிகளின் தோள்களிலே!

மேலே உள்ள கவிதை(ன்னு நினைச்சு நான் கொடுத்திருக்கிற)யைப் படிச்சுட்டு குட்டணும்னு நினைக்கறவங்கல்லாம் தாராளமாக் குட்டுங்க. ஏன்னா... நம்ம வாசகர்கள்ல நிறையப் பேர் கவிதை ‌எழுதறவங்கதான்! தட்டிக் கொடுக்கற அளவுக்கு இருக்குன்னு நினைச்சு பாராட்டினீங்கன்னா... இப்படி கவிதை எழுத முயற்சிக்கலாம்னு எனக்கு தைரியம் ஊட்டிய புலவர் திரு.ச.இராமாநுசத்தைச் சேரட்டும் அவையனைத்தும்!

அப்புறம்... கவிதைன்னு ட்ரை பண்ணிட்டு, காதல் பத்தி எழுதலைன்னா கவிஞர்கள் ஜாதில சேத்துக்காம ஜாதிப் பிரஷ்டம் பண்ணிடுவாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால... இன்னொண்ணு கீழே... (சோதனை இன்னும் விடலையான்னு யாரோ முணுமுணுக்கறது கேக்குது)

 
தேவதைகள் இமைப்பதில்லை!

இமைககாது என் முகத்தையே
பார்ப்பதேனடா என் உளம்கவர் கள்வா
என்றாள் என் தேவதை!

ஆலயத்தின் சிற்பக்கூடத்திற்கு
உன்னுடன் நான் செல்ல
உயிர்ச்சிலையைக் கண்டு
கற்சிலைகள் முகம் திருப்பிக் கொண்டனவே...
உன் விழிகள் இமைக்கின்றனவா
என்பதையே உன்னித்தேன் என்றேன்!

கலகலவென்று நகைத்து
என்னைப் பார்த்து ஒற்றைக்
கண் சிமிட்டினாள் என் தேவதை!

பின்குறிப்பு : சனிக்கிழமையுடன் என் அஞ்ஞாத வாசம் முடிகிறது. ஞாயிறு முதல் அனைவரின் தளங்களுக்கும் வழக்கம் போல் என் வருகை இருக்கும்.

65 comments:

  1. @ r.v.saravanan said...

    முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி சரவணன்! (பாராட்டறீங்களா, திட்டறீங்களான்னுதான் புரியல)

    ReplyDelete
  2. முணுமுணுத்தது நானே தான் ! சரி ,
    தேவதை பற்றி சரிதா [பேய்] இடம்
    சொல்லி ஆகி விட்டதா ? இல்லை பயம்
    என்றால் சொல்லுங்கள் , நான் அந்த
    வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறேன்.
    சும்மா சொன்னேன் கவிஞ்சரே .... இரண்டு கவிதைகளும்
    அருமை. இதில் என்னை மிகவும் கவர்ந்தது
    தேவதையின் அழகு படம் & கருத்து !

    ReplyDelete
  3. என்று மாறும் இந்த நிலை?

    ReplyDelete
  4. சார் அப்போது அவசரத்தில் இருந்ததால் ஒன்றும் கமெண்ட் எழுத முடியவில்லை

    ReplyDelete
  5. தேவதைகள் இமைப்பதில்லை கவிதை ரசித்தேன் சார் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து வர காத்திருக்கிறோம்

    ReplyDelete
  6. @ ஸ்ரவாணி said...

    பின்ன... அசல் கவிஞராயிற்றே நீங்கள் ஸ்ரவாணி! நடை பழகும் குழந்தையைக் கண்டு முணுமுணுக்காமலா? என் அன்புப் பிசாசின் பார்வையில் படாமல் எதுவும் நான் வெளியிடுவதில்லை! தட்டிக் கொடுத்த தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  7. @ ரசிகன் said...

    மாற்றம் ஒன்றே மாறாதது ரசிகன்! அந்த மாற்றம் வரும் வரை நாம் ஆதங்களை மட்டும் பரிமாறிக் கொள்ள முடியும். இல்லையா? நீங்கள் தொடர்ந்து வருகை புரிவதற்கும், என் படைப்புகள் அனைத்தையும் படித்துக் கருத்திடுவதற்கும்... சம்பிரதாயமாக நன்றி நவின்றால் போதாது. அதைவிடச் சிறந்தது எதுவும் தற்சமயம் என்னிடமில்லாததால்... இதயம் நிறை நன்றியை சமர்ப்பிக்கிறேன்!

    ReplyDelete
  8. @ r.v.saravanan said...

    அதனாலென்ன சரவணன்? பரவாயில்லை. நீங்கள் ரசித்த விஷயத்தைச் சொன்னதில் மிக்க மகிழ்‌ச்சி மற்றும் என் அன்பு நிறைந்த நன்றி!

    ReplyDelete
  9. நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. கவிதையும் நல்லா எழுதுரீங்க கணேஷ். ரெண்டு கவிதையுமே நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அருமையான இரு கவிதைகள். மக்களாட்சியின் நிலை குறித்து நீங்கள் எழுதியுள்ள கவிதை மிக அருமையாக உள்ளது. கண்டிப்பாக நீங்கள் தொடர்ந்து கவிதை புனைய வேண்டும்.
    வாழ்த்துக்கள் கணேஷ் சார்.

    ReplyDelete
  12. @ Chitra said...

    நான் மதிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு அசுர பலம்! மனமார்ந்த நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  13. @ Lakshmi said...

    கன்னன் முயற்சியாச்சே... (கன்னி முயற்சிக்கு எதிர்பால்! ஹி... ஹி...) என்ன சொல்வாங்களோன்னு பயந்துட்டேதான் போட்டேன். நீங்க பாராட்டறது ரொம்ப தெம்பாயிருக்கு. மிக்க நன்றிம்மா!

    ReplyDelete
  14. @ புவனேஸ்வரி ராமநாதன் said...

    என் தன்னம்பிக்கையை வளர்க்கும் வார்த்தைகளைச் சொன்ன தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் மேடம்!

    ReplyDelete
  15. நான் முதலாவதாக எழுதிய கவிதையைவிட
    இது நூறு மடங்கு சிறப்பாக உள்ளது
    புதுக் கவிதை மிக அருமை
    இலக்கண்க கவிதையின் கரு மிக மிக அருமை
    சீர் குறித்து மட்டும் லேசாக கவனம் செலுத்தினால்
    பதிவுலகின் சிறந்த கவிஞர் நீங்கள்தான்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. கவிதை வராது வராது
    அப்படின்னு சொல்லிட்டு
    பின்னி பெடலெடுத்து இருக்கீங்க...

    பொய்யாக சொல்லவில்லவில்லை நண்பரே..
    இது உண்மையான உண்மை.
    கவிதை இரண்டும்
    அழகோ அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. மன்னிக்கவும் கணேஷ் சார் !

    நான் சரிதா என்பது கற்பனை பெயர் அல்லது

    கற்பனை கதாபாத்திரம் என்று

    எண்ணி இருந்தேன். தங்கள் அன்புமனைவிக்கு

    என் அன்பு வணக்கங்கள் .

    ReplyDelete
  18. கவிதை...இது கவிதை.புலவர் ஐயாவின் ஜாடை அப்பிடியே இருக்கு.எடுத்துக்கொண்ட கரு அருமை!

    காதல் கவிதை...மூச்...!

    ReplyDelete
  19. @ Ramani said...

    சீர் மற்றும் தளை தட்டுதல் ஆகிய விஷயங்களில் இனி மேலும் கவனம் செலுத்துகிறேன். தங்களைப் போன்றோரின் கருத்துக்கள்தானே என்னைத் திருத்திக் கொள்ள உரைகல்! உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  20. @ மகேந்திரன் said...

    மகேன்! நிஜமாவே இது ரெண்டும்தான் லைஃப்ல முதன் முதலா நான் எழுதற கவிதைகள். இனி இன்னும் நல்ல படைப்புகள் தர முயற்சிக்கிறேன். அதற்கு தங்களின் பாராட்டுக்கள் வைட்டமின் மாத்திரைகள்! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  21. @ ஸ்ரவாணி said...

    என்ன ஃப்ரண்ட், மன்னிப்புல்லாம் கேட்டுட்டு? இதுல தப்பொன்றும் இல்லை. வருந்த வேண்டாம்.

    ReplyDelete
  22. @ ஹேமா said...

    கரெக்ட்தான். இனி செய்யும் முயற்சிகள்ல ஏதாவது தனித்துவம் காட்ட முடியுமான்னு முயல்கிறேன். தங்களின் உற்சாகமளித்த பாராட்டுக்கு என் இதயம் கனிந்த நன்றி தோழி!

    ReplyDelete
  23. //தட்டிக் கொடுக்கற அளவுக்கு இருக்குன்னு நினைச்சு பாராட்டினீங்கன்னா... இப்படி கவிதை எழுத முயற்சிக்கலாம்னு ///
    <<<


    முயற்சியே தூள் கிளப்புகிறதே கணேஷ் ! அருமை.

    காதல்கவிதை கலக்கல்! காதல்மாசம் வரப்போவதை ஒட்டி இப்போதே கவிதை எழுதியாச்சா?:) பாராட்டுக்கள்!

    ReplyDelete
  24. @ ஷைலஜா said...

    என்னோட முதல் முயற்சியை நீங்க தட்டிக் கொடுத்துப் பாராட்டினது மனசுக்கு தெம்பாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு. என் இதய நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  25. மி்ன்னல் வரிகள்-அழகு
    மின்னும் வரிகள்
    கன்னல் மொழியில்-மரபுக்
    கவிதை வழியில்
    சொன்னீர் இன்றே-நல்
    சுவைபட நன்றே
    மன்னரே ஆவீர்-கவிதை
    மலர்களால் நீவீர்

    முயன்றால் வருமென-நான்
    மொழிந்தேன்! தருமென
    வியந்தேன் இன்றே-கவி
    வித்தக நன்றே!
    நய(ம்)ந்தேன் இரண்டும்-இனிமை
    நல்கிட திரண்டும்
    அயர்ந்திட வேண்டாம்-கவிதை
    அளித்திட ஈண்டாம்

    தம்பீ!
    இரவு வீடு வர தாமதம்! தற்போதுதான்
    பார்த்தேன்!எதுகையும் மோனையும் சிறப்பே!
    முன்பே ஒன்று எழுதினேன் தட்டும் போது
    மறைந்தி விட்டது.
    இது மற்றொன்று!
    சா இராமாநுசம்

    ReplyDelete
  26. தாமதமான வருகைக்கு மன்னிக்க..தங்களின் கவிதை எப்போது பதிவாக வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்..ம்..வந்துவிட்டது.முதல் கவிதை மரபு சார்ந்ததாகவும் காதல் கவிதை புதுக் கவிதை பாணியிலும் கொடுத்திருக்கிறீர்கள்..முதல் முயற்சியில் இரண்டையும் கொடுத்தது சிறப்பு.
    இரண்டும் முடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
    உங்களால் கவிதை எழுத முடியும் என்று உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வருவதற்கு முன்னதாகவே உங்கள் மீது உங்களது தூரிகைக்கு நம்பிக்கை வந்துவிட்டது .இத்தனை நாள் ஆகிவிட்டது அதை நீங்கள் தெரிந்துகொள்ள..கவிதைக்கான அனைத்தும் மேற்கண்டவைகளில் இருக்கிறது..ரசிக்க வைப்பதுதானே கவிதை ..அதுதான் தங்களுக்கு கை வந்த கலையாச்சே..தொடர்ந்து க'விதை'களைத் தூவுங்க..மகிழ்ச்சி.

    ReplyDelete
  27. பாஸ் உண்மையிலே கவிதை அருமையாக இருக்கு.

    ReplyDelete
  28. முதல் கவிதை சாடல் செம சாட்டையடி....!!!!

    ReplyDelete
  29. இரண்டாவது கவிதை காதல்ரசம்....!!! தொடருங்கள் வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  30. புலவரே பாராட்டிய பிறகு நான் என்ன சொல்ல?
    கருத்துக்களும் கவிதைகளும் அருமை.

    ReplyDelete
  31. கணேஸ்...இப்போதும் உங்கள் கவிதைகளை வாசித்தேன்.முதன் முதலாக எழுதியதாகத் தெரியவில்லை.அதுவும் முதல் கவிதை மனதில் இனிக்கிறது.இன்னும் இன்னும் முயற்சி செய்யுங்கள் தோழரே.அழகாகும் உங்கள் கவிதைகள் !

    ReplyDelete
  32. @ புலவர் சா இராமாநுசம் said...

    என் முதல் முயற்சிக்கு முழுக் காரணமான நீங்கள் பாராட்டியிருப்பது மனத்திருப்தியை அளிப்பதுடன், இன்னும் முயன்று குறைகள் இல்லாமல் நற்கவிதைகள் வழங்க வேண்டுமென்ற உத்வேகத்தையும் எழுப்பியுள்ளது ஐயா. தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி மலர்களை சமர்ப்பிக்கிறேன்!

    ReplyDelete
  33. @ ஸ்ரீராம். said...

    நன்றாய் இருக்கிறதென்று பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  34. @ மதுமதி said...

    ஆமாம் கவிஞரே... எனக்குள் இது விஷயத்தில் தைரியம் ஏற்பட மிகவும் தாமதம்தான் ஆகிவிட்டது. என்னாலும் இப்படி எழுத முடியுமென்று புலவரைத் தவிர தாங்களும் முன்பே ஊக்கமளித்ததை நான் என்றும் மறவேன். உங்கள் வாக்கின்படி இதனினும் சிறந்த நல்ல க‘விதை’களைத் தூவுவதற்கு அவசியம் முயல்வேன். என் இதயம் கனிந்த நன்றிகள் தங்களுக்கு!

    ReplyDelete
  35. @ K.s.s.Rajh said...

    மனம் விட்டுப் பாராட்டிய நண்பர் ராஜ்க்கு என் மனமார்‌ந்த நன்றி!

    ReplyDelete
  36. @ MANO நாஞ்சில் மனோ said...

    இரண்டு படைப்பையும் ரசித்துக் கருத்திட்ட நண்பரே... உங்களுக்கு மனமகிழ்வுடன் என் இதயம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

    ReplyDelete
  37. @ வே.நடனசபாபதி said...

    ஊக்க மருந்தினைக் குறைவின்றி அளித்தீர்கள் நண்பரே... தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  38. @ ஹேமா said...

    என் மேல் எப்போதும் அக்கறை கொண்டவரல்லவா தாங்கள். நீங்கள் கூறியபடி தொடர்ந்து எழுத எழுதத்தான் குறைகள் நீங்கி படைப்புகள் பளிச்சிடும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இன்னும் நல்ல படைப்புகள் தரவேண்டுமென்ற உத்வேகம் இப்போது என்னுள் ஏற்படுத்தி விட்டீர்கள் தோழி! சம்பிரதாயமாக நன்றி நவிலத்தான் இப்போது என்னால் இயல்கிறது. மகிழ்வுடன் என் இதய நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  39. காதல் கவிதை கலக்கல்...Buy One ...Get one free...Double delight கணேஷ் சார்...

    ReplyDelete
  40. @ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  41. @ ரெவெரி said...

    கவிதைகளை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி ஸார்!

    ReplyDelete
  42. புது முயற்சி ரொம்பவே நல்லாஇருக்கு!

    ReplyDelete
  43. நல்லா இருக்கு சார்! நன்றி!

    ReplyDelete
  44. உண்மையிலேயே சிறப்பான கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  45. இரண்டு கவிதைகளுமே அருமை.


    //மன்னர் பரம்பரையோ இன்றளவும்
    ‌ஒய்யாரப் பவனிவருகிறது அப்பாவிகளின் தோள்களிலே!//

    இந்த வரிகள் சிறப்பாக இருக்கு.

    ReplyDelete
  46. @ ஸாதிகா said...

    கவிதைன்னு எடுத்துக்கிட்டா, தமிழ் வளமும் சரி, கருத்தாழமும் சரி... ரெண்டலயுமே நான் அண்ணாந்து மலைப்பாப் பாக்கற உயரத்துல இருக்கற நீங்க, நல்லா இருக்குன்னு சொன்னதை, குழந்தையின் கிறுக்கலைப் பாத்து சந்தோஷப்படற அம்மாவோட கருத்தா எடுத்துக்கிட்டு மகிழ்ச்சியோட நன்றி தெரிவிச்சுக்கறேன்!

    ReplyDelete
  47. @ திண்டுக்கல் தனபாலன் said...

    தங்களின் தொடர்ந்த வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  48. @ சென்னை பித்தன் said...

    தெம்பூட்டும் தங்களின் விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன். அவசியம் அவ்வப்போது தொடர்கிறேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  49. @ RAMVI said...

    ரசித்த வரிகளைக் குறிப்பிட்டு பாராட்டிய தங்களின் அன்புக்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கின்றேன்!

    ReplyDelete
  50. சகோதரா இடுகை ஜிலு ஜிலு குளு குளு வென்று இருக்கிறது. குறை சொல்ல ஏதுமே இல்லை. பாஸ் மாக்ஸ் தான் நன்றாக உள்ளது. வளருங்கள் வாழ்க!..பயிற்சி! முயற்சி! வேறொன்றுமே தேவையில்லை. (மன்னிக்க வேணும் 50பேருக்கும் மேலாகத்தான் வருகிறேன் என்று.)
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi

    ReplyDelete
  51. @ அப்பாதுரை said...

    ஹாஹ்ஹா... கவிதைகள் சின்னதாக் கொடுத்ததால தப்பிச்சிங்க இல்ல... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்!

    ReplyDelete
  52. @ kavithai (kovaikkavi) said...

    எப்போ வந்தா என்னங்க வேதா? பிடிச்சிருக்குன்னு சொன்னதுல மகிழ்ச்சியும், பயிற்சி + முயற்சியை இன்னும் தீவிரப்படுத்துவேன்னு உறுதியும் சொல்லி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  53. நீங்க ரமணி கவிதைக்குப் பின்னூட்டம் போட்டதைப் படிச்சப்பவே நினைச்சேன்.. என்னடா இப்படி பயமுறுத்துறாரேனு.. விடாதீங்க.. பிடிச்சிட்டீங்கள்ள..ஒரு வழி பண்ணிடுங்க.

    அந்தப் படம் ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  54. @ அப்பாதுரை said...

    ம்... நீங்க ஒருத்தர்தான் நான் பின்னூட்டத்துல அப்படிச் சொன்னதை நினைவு வெச்சிருந்து சொல்லிருக்கீங்க... படத்தை ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ஸார்! என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  55. இரண்டு கவிதைகளும்அருமை நண்பரே! இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  56. கவிதைகள் சுமார் தான்.

    ReplyDelete
  57. @ Abdul Basith said...

    மிக்க நன்றி நண்பரே! கண்டிப்பாய் இன்னும் சிறப்பாய்த் தர முயல்கிறேன்!

    ReplyDelete
  58. @ சமுத்ரா said...

    முதல்முதலா முயற்சி பண்றேன்ல... சமுத்ரா ஸாரே பாராட்டற மாதிரி ஒரு கவிதை எழுதிக் காட்டணும்னு உத்வேகத்தை ஏற்படுத்திட்டீங்க. மிகமிக நன்றி ஸார்!

    ReplyDelete
  59. பல் நாட்களுக்கு பின் வருகிறேன்.டெம்ப்ளேட் நல்லாருக்கு சார்.கவிதைகள் நல்லாருக்கு.கவிதைகளை குறை சொல்லுமளவிற்கு எனக்கு எழுத்து ஞானம் கிடையாது.

    ReplyDelete
  60. @ thirumathi bs sridhar said...

    நானே கவிதைகளை இப்பத்தானே முயற்சிக்கிறேன். நீங்க ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! மிக்க நன்றி!

    ReplyDelete
  61. நல்லா இருக்கே...கவிதைகள். கண் சிமிட்டிய உங்கள் தேவதையும், மன்னராட்சியின் போர்வையில் மக்களாட்சியும் கலக்கல். எழுதுங்க நிறைய...

    ReplyDelete
  62. @ Shakthiprabha said...

    நான் மிக மதிக்கும் தங்களின் பாராட்டு எனக்கு உற்சாகமாகச் செயல்பட கிரியா ஊக்கிதான். என் இதயம் கனிந்த நன்றி தங்களுக்கு!

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube