‘‘இன்னொரு கொலைக்காகத்தான் என்னை போலீஸ் தேடுது’’ என்று அவன் சொன்னதும் என் தொண்டை உலர்ந்து போக, பயத்துடன் அவனை ஏறிட்டேன்.
‘‘உங்க மனசுல இப்ப என்ன ஓடிட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்! எங்க இவன் நம்மளையும் போட்டுத் தள்ளிடுவானோன்னு நினைக்கறீங்க... சரியா?’’ என்று சிரித்தான் அவன். ‘ஙே’ என்று விழித்தபடி தலையசைத்தேன். ‘‘சேச்சே... இங்கருந்து நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் சரணடையற முடிவோடதான் வந்திருக்கேன் பயப்படாதீங்க ஸார்...’’ என்றான் சிரித்தபடியே.
‘‘சரி! நீங்க ராமனைக் கொன்னதை போலீஸ் கண்டுபிடிக்கலைன்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு இன்னொரு கொலை? யாரை?’’
‘‘ஒரு இடத்துல கொள்ளையடிக்கப் போனப்ப, குறுக்க வந்த ஒருத்தரைக் கொல்ல வேண்டியதாயிடுச்சு ஸார்...’’
‘‘சரிதான்! பஞ்சமாபாதகங்கள்ல எதையும் விட்டு வெக்கலையா நீங்க? ராமனோட சொத்து எல்லாத்துக்கும் அதிபதியானீங்கதானே... அப்புறம் எதுக்கு கொள்ளை, கொலை?’’
‘‘விரிவா சொல்றேன் ஸார்! ஏதோ அண்ணனைக் கொலை பண்ணிட்டேன், சொத்தை அடைஞ்சிட்டேன்னு நான் சொன்னதை சுலபமா கேட்டுக்கிட்டீங்க. ஆனா அதுக்கப்புறம் நான் பட்ட அவஸ்தை இருக்கே... ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்துல மழை பெய்யும் போது மண்ணிலருந்து ஒரு கை எழுந்து வருமே... அது மாதிரி ராமனைப் புதைச்ச இடம் வெளில தெரிஞ்சுடுமோன்னு மழை பெய்யறப்பல்லாம் பயந்துக்கிட்டே ஜன்னல் வழியா எட்டிப் பார்ப்பேன். கண்ணாடியில என் முகத்தைப் பாக்கறப்பல்லாம் ‘பாவி! ஏண்டா என்னைக் கொன்னே?’ன்னு ராமன் கேக்கற மாதிரி இருக்கும். என் முகம்தானே அவனோட முகம்? நரகம் ஸார்! சொல்லி்ப் புரிஞ்சுக்க முடியாது. நீங்க ஒரு கொலை பண்ணிப் பாத்திங்கன்னாதான் அந்த அவஸ்தை புரியும்...’’
‘‘அவ்வ்வ்வ்வ்வ...! நானும் கொலைகாரனாகணுமா? ஆள விடுங்க, கெளம்புங்க ஸார் நீங்க....’’ என்றேன் கோபமாக.
‘‘ஸாரி ஸார். அந்த Mental Agonyயை அனுபவிச்சாத்தான் புரியும்கறதுக்காகச் சொல்ல வந்தேன், இப்படி மனசாட்சி உறுத்தறப்பல்லாம் அந்த உறுத்தல் தாங்க முடியாம தண்ணியடிப்பேன். ராமனோட சொத்துக்களை வெச்சு உல்லாசமா வாழ்க்கையை அனுபவிச்சேன். ராமன் அளவுக்கு எனக்கு பிசினஸ் திறமை இல்லாததால நான் எடுத்த சில முடிவுகளால நஷ்டம் ஏற்பட்டது. நான் வேற ஏதோ லாட்டரில கிடைச்ச பணம் மாதிரி ராமனோட பணத்துல ஜாலியா வாழ்ந்ததுல சீக்கிரமே சொத்து கரைஞ்சு, கடன் கழுத்து வரைக்கும் வந்துட்டுது.
என்ன செஞ்சு கடன்லருந்து மீள்றதுன்னு புரியாம யோசிச்சுக்கிட் டிருந்தப்பதான் எதேச்சையா ஒருநாள் எங்கப்பா எழுதி வெச்ச உயிலை பீரோவுல பார்த்தேன். அதுல இங்க் கறை படிஞ்ச விரல் ரேகை உயிலோட கார்னர்ல இருந்ததைப் பார்த்தேன். அண்ணன் எப்பவோ உயிலைப் பாத்தப்ப, கைல இங்க் பட்டதைக் கவனிக்காம விட்ருக்கான் போலருக்கு. அவன் ரேகையோட அதைப் பார்த்ததும் ஐடியா கிடைச்சது. எங்கயாவது பணக்கார வீடுகள்ல முகமூடி மாட்டிட்டு கொள்ளையடிக்கலாம்னு ஒரு ஐடியா வெச்சிருந்தேன். இப்ப, குறுக்க யாராவது வந்தா கொலைகூடப் பண்ணலாம். பண்ணிட்டு அந்த உயில் பேப்பரை ஓடும்போது தவற விடற மாதிரி வேணும்னே தவறவிட்டுட்டு வந்துட்டா, விரல் ரேகையை வெச்சு போலீஸ் கம்பேர் பண்ணினாலும் டில்லிக்குப் போன தம்பி (நான்தான்) வந்து இப்படில்லாம் பண்றான்னு போலீஸை மிஸ்லீட் பணணிடலாம்.\
-இப்படி ஒரு ஐடியா கிடைச்சதும் உடனே செயல்ல இறங்கினேன். ரெண்டு மாசம் முன்னால அயனாவரத்துல ஒரு லட்சாதிபதி யோட வீட்ல கொள்ளைன்னு பேப்பர்ல படிச்சிருப்பீங்களே.. அது என் கைங்கரியம் தான்! அதுல நான் மாட்டிக்கலை. அதுக்கப்புறம் பொறுமையா ஒரு மாசம் கேப் விட்டு, நிதானமா ப்ளான் பண்ணி பல்லாவரத்துல ஒரு கோடீஸ்வரன் வீட்டுல போன மாசம் கொள்ளையடிக்கப் போனேன். அங்கதான் விதி விளையாடிடுச்சு. கொள்ளையடிச்சுட்டு கிளம்பும் போது ஒரு வேலைக்காரன் என்னைப் பாத்துட்டான். அவன் கூச்சல் போட்டதுல அந்த கோடீஸ்வரனும் வந்து ரெண்டு பேருமா என்னைப் பிடிககப் பாத்தாதங்க. போராட்டத்தல என்னோட முகமூடியை அந்தக் கோடீஸ்வரன் கழட்டிட்டான். வெறியில அவனைக் குத்திட்டேன். அதைப் பாத்ததும் பயத்துல வேலைககாரன் பிடியை விட, நான் ஓடும் போது வேணும்னே தவற விடற மாதிரி (போட்ட ப்ளான்படி) உயிலைத் தவறவிட்டுட்டு தப்பிச்சுட்டேன்.
வேலைக்காரன் அடையாளம் காட்ட, போலீஸ் என்கிட்ட வந்துச்சு. நாமதான் இப்ப சமூக அந்தஸ்துள்ள பணக்காரனாச்சுதே! இன்ஸ்பெக்டர் கிட்ட கெத்தாவே பேசினேன். ‘‘மிஸ்டர் இன்ஸ்பெக்டர்! டில்லியில எதோ வேலை கிடைச்சிருக்குன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போன என்னோட தம்பி லட்சுமணன்தான் இதைல்லாம் செஞ்சிருக்கணும். அயோக்கியன்! நானும் அவனும் இரட்டையர்கள்ங்கறதால என்மேல சந்தேகம் விழட்டும்னே இந்த வேலைக்காரன்கிட்ட முகத்தைக் காட்டிருப்பான் ராஸ்கல்!’’ என்றேன்.
‘‘கொலை நடந்த இடத்துல இந்த உயில் பத்திரத்தைத் தவறவிட்டுட்டு கொலை பண்ணினவன் ஓடியிருக்கான்...’’ என்று அதை எடுத்துக் காட்டினார்.
‘‘பீரோவுல இருந்த இதைக் காணம்னுதான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன். படவா! திருடிட்டுப் போனது அவன்தானா?’’ என்று கோபமாக இருப்பது போல நடித்தேன்.
‘‘ஸார்... உங்க கைரேகையை நான் எடுத்துக்கலாமா? போலீஸ் ஃபார்மாலிட்டிக்ககாக, ப்ளீஸ்!’’ என்றார் இன்ஸ்.
‘‘தாராளமா... போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டியது என்மாதிரி பெரிய மனுஷங்களோட கடமையில்லையா...’’ என்று கைரேகையைத் தந்தேன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு
சிரித்தது நான் அல்ல, விதி என்பது பின்னால்தான் புரிந்தது. அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் மறுபடி வீட்டுக்கு வரவும், ‘‘என்ன ஸார்... அவன் அகப்பட்டானா?’’ என்று கேட்டேன்.
‘‘அகப்பட்டது அவன் இல்ல மிஸ்டர் ராமன், நீங்கதான்! அந்த உயில்ல இருக்கற ரேகையும், உங்க ரேகையும் நூறு சதவீதம் ஒத்துப் போகுது. தம்பி பேர்ல பழி போட்டுட்டு தப்பிக்கப் பாக்கறது நீங்கதான். உங்களை அரெஸ்ட் பண்றேன்’’ என்றார்.
என் காலின் கீழ் பூமி நழுவுவதைப் போலிருந்தது. தலை ரோலர் கோஸ்டரில் போனதுபோல் சுற்றியது. ‘எப்படி இது சாத்தியம்? மைகாட்! எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் மைக்கறையுடன் உயிலை நான் தொட்டிருக்கிறேன். அதை மறந்து அண்ணனின் ரேகை என்று எண்ணியது வினையாகி இப்போது மாட்டிக் கொண்டேனே...
என் அருகில் வந்த இன்ஸ்பெக்டரை அவர் சற்றும் எதிர்பாராத வகையில் தலையில் அடித்தேன். தடுமாறிக் கீழே விழுந்தவரை, மாடிப் படியில் முட்டி மயக்கமுறச் செய்துவிட்டு தப்பினேன். ஒரே ஓட்டம்! போலீஸ் இப்போது என்னை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறது. ஓடிஓடி எனக்கும் அலுத்து விட்டது. போலீஸில் சரணடையப் போகிறேன். அதற்கு முன்னால் உங்களைப் பார்த்து இதைச் சொல்லத்தான் வந்தேன்...’’ என்றான்.
‘‘நான் ஏதோ ஹெல்ப் பண்ணனும்னீங்களே....’’
‘‘ஆமாம் ஸார்... இந்தாங்க என்னோட, அதாவது ராமனோட விஸிட்டிங் கார்ட்’’ நீட்டினான். வாங்கிக் கொண்டேன். ‘‘நான் போலீஸ்ல சரணடைஞ்சவுடனே கேஸ் நடந்தா எனக்கு ஆயுள் தண்டன கிடைக்குமோ, தூக்கு தண்டனை கிடைக்குமோ தெரியாது. ஆனா ஸ்வேதா என்னைப் பார்த்து அழுவா. என்னை - அதாவது அவ புருஷனை - காப்பாத்தணும்னு வக்கீலை வெச்சு முயற்சி பண்ணுவா- நான் அவ புருஷன் ராமன் இல்ல, லட்சுமணன்தான். ராமன் செத்துட்டான்கற விஷயத்தை நீங்க அவளை சந்திச்சு சொல்லணும். இந்த விஷயத்தை அவளோட முகத்தைப் பார்த்துச் சொல்ற துணிச்சல் எனக்கு இல்ல...’’
‘எல்லா அயோக்கியத்தனங்களையும் பண்றதுக்கு இவனுக்கு துணிச்சல் இருந்துச்சு. இதுககு இல்லாமப் போயிடுச்சாககும்’ என்று மனதில் நான் நினைத்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான். ‘‘அவகிட்ட நான் சொன்ன எல்லாத்தையும் சொல்லி, என்னை மன்னிச்சுடச் சொல்லுங்க ஸார், ப்ளீஸ்! நான் வர்றேன்...’’ என்ற அவன், நான் பேச முற்படுவதற்கு முன் சட்டென்று எழுந்து வெளியேறி விட்டான் அவன். ஸாண்ட்ரோ புறப்பட்டுச் செல்லும் ஓசை கேட்டது.
என்ன செய்வதென்று புரியாமல் பிரமை பிடித்தவன் மாதிரி ‘ஙே’ என்று விழித்தபடி சுவரைப் பார்த்து அமர்ந்திருந்தேன் நான். நீங்களே சொல்லுங்கள் சார்/மேடம்! நான் என்ன செய்ய வேண்டும்?

|
|
Tweet | ||
என்ன ஐயா முடிச்சாச்சா..ம்.. ஆச்சுன்னு சொல்றீங்களா..உங்களையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு கதையை பின்னிய விதம் அருமை..அப்புறமென்ன யோசனை.ஸ்வேதாகிட்ட போய் விசயத்தை சொல்லிடுங்க..தாமதம் ஆச்சுன்னா ராமன் மறுபடியும் வந்துடப்போறான்..போங்க போய் வண்டியக் கிளப்புங்க..
ReplyDeleteபேசாம அட ராமான்னு சொல்லிட்டு இந்த ராமாயணத்தை எல்லாம்
ReplyDeleteஸ்வேதா கிட்ட சொல்லிடறது தான் நல்லது.
பேராசை பிடித்தவன் , தான் விட்ட உயிலில் தானே மாட்டி ....
த்ரில்லிங் ஆ இருந்தது 3 பகுதிகளுமே.
வாழ்த்துக்கள்.
நீங்களே சொல்லுங்கள் சார்/மேடம்! நான் என்ன செய்ய வேண்டும்?
ReplyDeleteலட்சுமணன் சொன்னதை!
@ மதுமதி said...
ReplyDeleteஒரு வழியா முடிச்சாச்சு கவிஞரே... இந்த உத்தியை நீங்கள் ரசித்ததுல ரொம்ப சந்தோஷம். உடனே புறப்பட்டுடறேன் ஸ்வேதாவைப் பாக்க... நன்றி!
@ ஸ்ரவாணி said...
ReplyDeleteஇந்த க்ரைம் ‘ராமா’யணத்தை கண்டிப்பா போய்ச் சொல்லிடலாம். தொடர்ந்து கூடவே வந்து ஆதரிச்சு, ரசிச்சதுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் உங்களுக்கு!
@ இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசெஞ்சிடறேன்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!
இதற்குப் பெயர்தான் Transfer of Tension என்பது. வேறு வழியில்லை. ஸ்வேதாவிடம் அவன் சொன்னதை சொல்லி Tension ஐ அவருக்கு Transfer செய்துவிடுங்கள்.அவ்வளவுதான்.
ReplyDeleteமுடிவை யோசிக்க முடியாதபடி கதையை கொண்டு சென்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
@ வே.நடனசபாபதி said...
ReplyDeleteசெஞ்சிடலாம் நண்பரே... தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
அதுசரி....எங்ககிட்டவே கேள்வியா.இனிமேப்பட்டு இப்பிடிக் கதை எழுதுவீங்க....நச்சு நச்சு தலைல குட்டணும் !
ReplyDeleteஅந்த உயிலால் மாட்டியது சும்மா கடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல இவனும் மாட்டி மேலும் கொலைகள் கூடிவிட்டது.இந்த கதையை ப்ளாக்கில் எழுத சொன்னதால் எழுதிட்டீங்க,அதேபோல அந்தப் பெண்ணிடமும் உண்மைய சொல்லிடுங்க.
ReplyDelete@ ஹேமா said...
ReplyDeleteஆ... வலிக்குது ஹேமா... விட்ருங்க! இனிமேப்பட்டு இப்படிக் கதை எழுத மாட்டேன் (அடுத்த வாரம் வரைக்கும்! ஹி... ஹி...)
@ thirumathi bs sridhar said...
ReplyDeleteநாம சாமர்த்தியமா செயல்படறோம்னு நினைக்கிற எந்தக் கொலைகாரனும் மேல ஒருத்தன் இருக்கறதை மறந்துடறான் இல்லீங்களா? நீங்க சொன்னபடி செய்துடலாம்! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அந்தக்கொலைகாரன் சொன்னதை அப்படியே ஸ்வேதா கிட்ட சொல்ல வேண்டியதுதானே?
ReplyDeleteஎப்படியோ ஒரு பதிவுக்கு மூணாப் போட்டாச்சு....முடிந்தால் இதை ஒரு பத்திரிகைக்கும் அனுப்பி விடுங்கள்....! நாம அதுதான் செய்ய முடியும்....என்ன சொல்றீங்க...
ReplyDelete@ Lakshmi said...
ReplyDeleteஅப்படியே செஞ்சிரலாம்! வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்ம்மா!
@ ஸ்ரீராம். said...
ReplyDeleteவலையில் பிரசுரமானவைகளை பத்திரிகைகளில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன் ஸ்ரீராம் ஸார்! அதனால் பத்திரிகைகளுக்கென்றே தனியாகக் கதைகள் இப்போது எழுதத் துவங்கியிருக்கிறேன். ஏதாவது ஓ.கே. ஆனால் நிச்சயம் தெரிவிக்கிறேன். உங்களுக்கு என் இதய நன்றி!
அவருக்குரிய பதட்டத்தை உங்களிடம் கொட்டித் தீர்த்துவிட்டு
ReplyDeleteதப்பித் துக் கொண்டார்.நீங்கள் எங்களிடம் தள்ளிவிட்டு
தப்பிக்கப் பார்க்கிறீர்கள்.அதெல்லாம் முடியாது
எனக்கெல்லாம் எதுவுமே தெரியாது
நான் இந்தப் பதிவைப் படிக்கவே இல்லை சரியா ?
த.ம 6
லெட்சுமணன் சொன்னதைத்தான் செய்யவேண்டும்
ReplyDeleteஎன்பது என் கருத்து நண்பரே.
@ Ramani said...
ReplyDeleteசரிங்... நீங்க இந்தக் கதையப் படிக்கவே இல்லீங்! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஸார்!
@ மகேந்திரன் said...
ReplyDeleteசரி நண்பா, உங்களது வருகைக்கு்ம் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!
ஒரு பொய் பல பொய்க்கு வழி செய்யுற மாதிரி, துணிஞ்சு ஒரு தப்பு செஞ்சா, என்ன கதி ன்னு இந்தக் கதை மூலமா சொல்ல வரீங்க (செ!...நானே மாரல் கண்டு புடிச்சு சொல்லிருக்கேன்)
ReplyDeleteஎல்லாரும் சொல்ற மாதிரி சொன்னதை செய்யுங்க....
ஆனா ஒரு கேள்வி....உலகதுல இவ்ளோஓஓஒ பேர் இருக்கறச்சே "அது ஏன் உங்களைத் தேடி அந்த லக்ஷமணன் வரணம்"
நீங்களே சொல்லுங்கள் சார்/மேடம்! நான் என்ன செய்ய வேண்டும்?
ReplyDelete>>
இனி பிளாக்குல கொலை கிலைன்னு கதைலாம் எழுதக்கூடாது.
கொஞ்சம் மன்மதன் சாயல் இருந்தாலும் கதை மிக அருமை. திரில்லிங்காக இருந்தது.
ReplyDelete@ Shakthiprabha said...
ReplyDeleteஎனக்காக கஷ்டப்பட்டு (நானே எதிர்பார்க்காத) மாரல் எல்லாம் கண்டுபிடிச்சுச் சொன்ன தோழிக்கு நன்றி. அந்த ஆளுக்கு ‘நான் ஒரு ஙே’ங்கறது எப்படியோ தெரிஞ்சிருக்கணும். அதான் தேடிவந்து படுத்திட்டான்... உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.
@ ராஜி said...
ReplyDeleteதங்கச்சி சொன்னா சரிதான்... அப்படியே ஆகட்டும். நன்றிம்மா...
@ பாலா said...
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி பாலா ஸார்!
///அந்த ஆளுக்கு ‘நான் ஒரு ஙே’ங்கறது எப்படியோ தெரிஞ்சிருக்கணும்/////
ReplyDelete:))))))))
Azhagana Nadaila arumaiya sollittinga. Appuram unmaiya antha pennidam sollirunga Sir.
ReplyDeleteமூணு பகுதியையும் இப்போ தான் படிச்சேன். கிரைம்லையும் கலக்குறீங்க. கதை சொன்ன விதம் அருமை. இரட்டை பிறவி என்ற ஒற்றை முடிச்சை அழகாக பயன்படுத்தி இருக்கிறீர்கள். விரித்து எழுதினால், ஒரு நாவலுக்கு உண்டான சகல தகுதிகளும் இந்த கதைக்கு உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கணேஷ் சார்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
ReplyDeleteமுடிவை யோசிக்க முடியாதபடி கதையை கொண்டு சென்று இருக்கிறீர்கள் கணேஷ் சார்..
வாழ்த்துக்கள்...
Good!!!
ReplyDeleteஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
@ துரைடேனியல் said...
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி துரை!
@ ரசிகன் said...
ReplyDeleteபொறுமையாய் மூன்று பகுதிகளையும் சேர்த்துப் படித்ததற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்! முழு நாவலுக்குண்டான கரு இதில் ஒளிந்திருக்கிறது என்று சொல்லி, நாவலுக்கான முயற்சியை நான் செய்ய ஊக்கப்படுத்திய உங்களுக்கு என் இதய நன்றி!
@ ரெவெரி said...
ReplyDeleteஆமாங்க.. கொஞ்சம் இடைவெளி ஆயிட்டுல்ல? உங்களுக்கு என் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இனி அடிக்கடி சந்திப்போம். உங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி!
@ Chitra said...
ReplyDeleteஉங்களது பாராட்டுக்கு நன்றியும், உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களும்!
பாவம் சார் உங்க நெலம.
ReplyDeleteகதை சுவாரஸ்யமா இருந்தது.
க்ரைம் நாவல்... ம்..குட்
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மனசாட்சியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@ சத்ரியன் said...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதர்.
@ மனசாட்சி said...
ReplyDeleteமனசாட்சியின் வருகை மகிழச் செய்தது. உங்களுக்கும் என் இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஆகா!ரொம்ப சிக்கலான் விஷயம்.எங்க கிட்ட தள்ளிட்டுத் தப்பப் பாக்கறீங்களா?
ReplyDeleteநன்று.
@ சென்னை பித்தன் said...
ReplyDeleteஉங்களின் வருகைக்கும், நீங்கள் ரசித்துப் பாராட்டியதற்கும் என் இதயபூர்வமான நன்றி நண்பரே..!
கொஞ்சம் கேஷா பழைய நோட்டா சம்திங் தள்ளச் சொல்லுங்க முதலில்.. அப்புறம் அவங்க வீட்டுக்குச் சொல்லப்போய் வேறே ஏதாவது லொள்ளு வந்திச்சுனு வைங்க..
ReplyDelete@ அப்பாதுரை said...
ReplyDeleteஆஹா... சூப்பர் ஐடியா இதுதான். உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி!
பயங்கரமா இருக்கு சார் பயமா வேறு இருக்கு.
ReplyDeleteதொடர்க நடை.வாழ்த்துகள்
@ dhanasekaran .S said...
ReplyDeleteபுது வரவான தனசேகரனுக்கு என்னுடைய நல்வரவு. உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!
//நீங்க ஒரு கொலை பண்ணிப் பாத்திங்கன்னாதான் அந்த அவஸ்தை புரியும்...’’// அருமையான ஹாஸ்யம்
ReplyDeleteகெட்ட கனவா நினைத்து மறந்து விட வேண்டும். இல்லாட்ட வாங்க காலார பொய் சிங்கள் டீ குடிச்சிட்டு வருவோம்.
ராமன் பரலோகம் போயாச்சு.. லட்சுமணன் ராமன் பேருல ஜெயிலுக்கு போயாச்சு.. ராமன் மாதிரி ஒரு பேஸ் மாஸ்க் போட்டுட்டு ஜெயில்ல இருக்கிறது லட்சுமணன் தான்னு சொல்லி ஸ்வேதாவுக்கு ஒரு வாழ்க்கை குடுங்க ஸார்.. (ஐயோ அம்மா, சரிதாக்கா வீசுன பூரிக்கட்டை மண்டைய ஓடைச்சிடுச்சே.. பாவம் சார் நீங்க.. :) )
ReplyDelete